Thursday, July 11, 2013

IP Address என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங்காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கிறது.

அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது. இதனை ஆங்கிலத்தில் Uniqueness எனப்படுகிறது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும்,

இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.

ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும்.

ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ள இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.

பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும்.

இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்.

Read more...

கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வராமல் இருந்ததற்கு சம்பந்தன்தான் காரணம் - பிள்ளையான்

"கிழக்கு மாகாண சபையை பழிதீர்ப்பதற்காகவே சம்பந்தன் தனது கோட்பாட்டையும் மறந்து செயற் பட்டார்".

18 வருடங்களின் பின்னர் துளிர்விட்டு வளர்ந்த கிழக்கு மாகாண சபையை வதங்க வைத்த பெருமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பையே சாரும் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திலுள்ள கரடியனாறு மகா வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்; பிரகாரம் அமையப்பெற்ற வட கிழக்கு மாகாண சபை துரதிஸ்டவசமாக 1989இல் கலைந்து விட்டது. அதன் பின்னர் சுமார் 18 வருடங்களின் பின்னர் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலுடன் கிழக்கு மாகாண சபை மீண்டும் மக்களுக்காய் மலர ஆரம்பித்தது.

அப்போது நான் முதலமைச்சராக பதவி ஏற்று சுமார் 4 வருடங்கள் மிகவும் அமைதியானதும் ஜனநாயகம் நிறைந்ததுமான ஓர் ஆட்சியை நடாத்தி வந்தேன். அவ்வாறு பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே அனைத்தையும் இழந்து தவிர்த்த எம் மாகாண மக்களுக்கு இயன்றளவு சேவையாற்ற உதயமான கிழக்கு மாகாண சபையை இல்லாதொழிக்க பல வகையிலும் பலர் முயன்றார்கள்.

அதில் விசேடமானவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இவர்கள்தான் துளிர் விட்டு வளர்ந்து வந்த கிழக்கு மாகாண சபையை வாட்டி வதங்க வைத்தவர்கள். நான் முதலைமைச்சராக இருந்த காலத்திலே சிறுபான்மை சமூகங்களை பாதிக்கின்ற வiயிலே அமையப்பெற்ற எந்தவொரு சட்ட மூலங்களையும் ஆதரிக்கவில்லை. கிழக்கு மாகாண சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட அனைத்து சட்டமூலங்களையும் திருப்பி அனுப்பினோம். வெறுமனே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரம் சொல்வார்கள் எந்த பயனுமற்றதாக கிழக்கு மாகாண சபை இயங்குகின்றது எனச் சொல்வார்கள்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு தெரியும் கிழக்கு மாகாண சபை மக்களுக்காக சேவையாற்றியதா? இல்லையா? என்று. அப்படி இருந்தும் கிழக்கு மாகாண சபை கலைந்தவுடன் பழிதீர்ப்பதற்காக தங்களது கோட்பாட்டையும் மறந்து அதாவது இணைந்த வட கிழக்கு என்கின்ற அவர்களது தாரக மந்திரத்தையும் மறந்து என்னை மீண்டும் முதலமைச்சராகக் கூடாது என்பதற்காகவே வடக்கிலிருந்து கங்கணங் கட்டிக் கொண்டு இங்கு வந்து எமது மக்களைக் குழப்பி வாக்குளைச் சூறையாடினார்கள்.

பாவம் எமது தமிழ் மக்கள் அவர்களது வீண்பேசு;சக்கு விலைபோய்விட்டார்கள். ஆனால் அதன் விளைவை தற்போது அவர்கள் உணர்கிறார்கள். கிழக்கிற்கான முதலமைச்சர் யார் என்கின்ற பிரச்சினை எழுந்தபொழுது அதற்கு முற்றுப் புள்ளி வைத்தவர்களும் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான். மீண்டும் முதலமைச்சர் பதவி ஒரு தமிழனுக்கு அதுவும் எனக்கு கிடைத்துவிடும் என்பதற்காக தாங்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி தர தயாராக இருக்கின்றோம் என இரா சம்பந்தன் அறிக்கை விட்டார்.

இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்க இருந்த முதலமைச்சர் பதவி எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு கிடைத்தது. இது தொடர்பில் எனக்கு கவலை இல்லை என்ற போதிலும் தற்போது கிழக்கு மாகாண சபையின் இயங்கு நிலையினை பார்க்கின்றபோது மிகவும் வேதனையளிக்கின்றது.

தற்போதைய கிழக்கு மாகாண சபையின் இயங்கு நிலைக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான். அவர்கள் அப்போது அந்த அறிக்கையினை விடாமல் இருந்திருந்தால் மீண்டும் மாகாணத்தை ஆட்சி செய்து பலமான ஓர் மாகாண சபையாக கிழக்கு மாகாண சபையை மாற்றி இருக்க முடியும்.

அண்மையில் கூட எமது கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திலே ஒரு தீர்மானத்தினை எடுத்திருந்தோம். அதாவது 13ஆவது திருத்தச் சட்டத்தினை பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும் நாம் ஆதரிக்க மாட்டோம். இதேவேளை 13ஆவது திருத்த சட்டத்தினை பாதுகாக்க செயற்படுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கைகோர்த்து செயற்படத் தயார் எனவும் குறிப்பிட்டிருந்தோம் என பிள்ளையான் தெரிவித்தார்.

Read more...

குளித்துக்கொண்டிருந்த தாதியை படம்பிடித்து மாட்டிக்கொண்ட சுகாதாரபிரிவு உதவியாளர் கைது!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரவுநேர கடமை யிலிருந்த தாதி தனது கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 9 மணியளவில் ஓய்வறையில் குளித்துக் கொண்டிருந்த போது, தனது கையடக்கதொலைபேசியின் ஊடாக தாதி குளித்துக்கொண்டிருந்ததை படம்பிடித்த, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுகாதாரபிரிவு உதவியாளரை, எதிர்வரும் 24 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட் டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு தேசிய வைத்திய சாலையில் இரவு கடமையிலிருந்த தாதி கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 9 மணியளவில் தாதி ஓய்வறையில் குளித்துக்கொண்டிருந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்தஅறையிலுள்ள உயரமான யன்னலின் ஊடாக கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி யாரோ தான் குளித்துக்கொண்டிருப் பதனை படம் பிடிப்பதை அல்லது வீடியோ ஒளிப்பதிவு செய்வதனை அவதானித்துள்ளார்.

கூச்சல் குழப்பமிடாத தாதி, திடீரென பாய்ந்து கையடக்க தொலைபேசியையை அபகரித்துவிட்டார். இதனையடுத்து அதுதொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் குறித்த கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து மாளிகாகந்த மேலதிக நீதவான் ரஷந்த கொடவெல முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போது சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலநறுவையைச்சேர்ந்த ஜோசப் யூப் ரொசான் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

...............................

Read more...

வியக்க வைக்கும் வினோதங்கள்!

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.

தயிராக மற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப்பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.

சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாக மாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.

ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்துவிடுவார்கள்.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

'லங்கா வீரன் சுத்ரா ' என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

குளிர் காலத்தில் குயில் கூவாது.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார். அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர். அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும். கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்து விடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

சீல் வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

Read more...

நடிகர் ஷாரூக்கானுக்கு வாடகைத்தாய் மூலம் ஆண் குழந்தை! குழந்தைக்கு அப்ராம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு வாடகைத்தாய் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்ராம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கானுக்கு அண்மையில் வாடகை தாய் மூலம் குழந்தை பிற ந்தது. மும்பையில் உள்ள மருத்துவமனையில் செயற்கை முறையில் கருத்தரித்த வாடகை தாய் குறிப்பிட்ட காலத்திற்கு 2 மாதத்துக்கு முன்பே குழந்தையை பெற்றார்.

குறைப் பிரசவம் என்பதால் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இக்குழந்தையை ஷாருக்கான் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்.

இதுதொடர்பாக தெரிவித்த ஷாரூக், எனக்கு புதிதாக பிறந்த குழந்தை பற்றி பல்வேறு விதமான பேச்சுகள் உலா வருகின்றன. பல மாதங்கள் குறை பிரசவத்தில் இருந்த குழந்தை தற்போது எங்களது வீட்டிற்கு வந்துள்ளான். நான், என் மனைவி கவுரி மற்றும் குடும்பத்தினர் அந்த குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறோம்.

குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது பாலின சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இது உண்மை அல்ல. குழந்தை ஆணா? பெண்ணா? என்று சோதனை செய்து பார்க்கவில்லை. குழந்தை பிறந்த பின்புதான் அது ஆண் குழந்தை என்று தெரிந்து கொண்டோம். வீட்டுக்கு வந்த பின்பு குழந்தைக்கு 'அப்ராம்' என்று பெயர் சூட்டியுள்ளோம் என கூறியுள்ளார்.

Read more...

அனைத்து தாதி பயிற்சி கல்லூரிகளும் எதிர்வரும் நவம்பரிற்கு முன்னர் புனரமைக்கப்படும் -மைத்திரிபால

நாட்டிலுள்ள அனைத்து தாதி பயிற்சி கல்லூரிகளும் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் புனரமைக்கப் படவுள்ளன என, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆயிரத்து 25 பேரை ஒரே தடவையில் தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்து வதற்காக நாட்டிலுள்ள அனைத்து தாதியர் பயிற்சி கல்லூரிகளும் புனரமைக்கப்படவுள்ளன.

தாதியர் பயிற்சி கல்லூரிகளை நிர்வகிப்பதற்காக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் இருவரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்கவிற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் பிரதேச பொறியியலாளர்கன் மூலம் மாதாந்தம் தாதி பயிற்சி கல்லூரிகளை கண்காணித்து அவற்றில் நிலவும் குறைபாடுகள் தொடர்பான அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு அமைச்சர் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

இதே வேளை தாதிச்சேவையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயும் பேச்சுவார்த்தை ஒன்று அமைச்சருக்கும் அரச ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கும் இடையில் இடம்பெற்றது.

தாதியர் சேவையில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை வழங்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித்த மஹிபால ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read more...

என்.ஜி.ஓ. களின் மற்றுமொரு சூழ்ச்சி அம்பலம்! டொலர்களுக்கு விலை போகும் தொழிற்சங்கங்கள்

தொழிற்சங்கங்களுடாக அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சி களை முன்னெடுப்பதற்கு அரச சார்ப்பற்ற அமைப்புகள் மேற்கொள்ளும் சூழ்ச்சி தொடர்பாக தகவல்கள் அம்பல மாகியுள்ளது எனவும், அமைச்சுகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த சூழ்ச்சியை முன்னெடுப்பதற்கு, பல்லாயிரம் டொலர் ஒதுக்கப்படுவதாக, தகவல்கள் கிடைத்துள்ளதாக தாயக அலைவரிசை தெரிவிக்கின்றது.

நாட்டுக்கு எதிரான புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு ஏற்ப, எதிர்க்கட்சியின் சில கட்சிகளை பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிரான பாரிய சூழ்ச்சிகளை முன்னெ டுக்கும் வெளிநாட்டு அரச சார்ப்பற்ற அமைப்புகள், இந்த சூழ்ச்சியின் பின்னணியில் இருப்பதாக, தெரியவந்துள்ளது.

அரச விரோத தொழிற்சங்கங்கள் இதனுடன் தொடர்புபட்டுள்ளன. அடிப்படை இலக்குகளுள் சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மின்சாரம் போன்ற அமைச்சுகளை இலக்காக கொண்டு, இந்த தொழிற்சங்க சூழ்ச்சிகள் முன் னெடுக்கப்படுகின்றன.

இதுவரை சுகாதார துறையுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களின் சூழ்ச்சியின் ஆரம்பகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் அம்பலமா கியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார துறையில் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கி இந்த தொழிற்சங் கங்களுடாக அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும், இந்த தொழிற்சங்கங்களின் தலை மையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு துணை நிற்கும் ஒருவருக்கு, மாதாந்தம் பல்லாயிரம் டொலர் வழங்கப்படுவதாகவும், தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இந்த சூழ்ச்சிகளின் பின்னணியில் ஜேர்மனியிலிருந்து செயற்படும் பிரட்ரிக் நஓமான் மன்றமும், பாரிய தூண்டுதல்களை முன்னெடுத்து வருகின்றது. அண்மையில் சேலைன் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, சுகாதார துறைக்கு எதிராக தொழிற்சங்க சூழ்ச்சிகளை, அரச சார்ப்பற்ற அமைப்பு ஒன்று முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலர்களினால் போசிக்கப்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் முக்கிய புள்ளியாக செயற்படும் ஒரு நபர் பின்னணியில் உள்ளார் எனவும் சுகாதாரத்துறை உட்பட ஏனைய துறைகளுடன் தொடர்புடைய தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு பயிற்சிப்பாசறைகளை நடாத்தும் போர்வையில், அரசாங்கத்திற்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும் புலம்பெயர் தமிழர்கள் சூழ்ச்சிகளை முன்னெடுக்கின்றன.

கடந்த காலங்களில் அரசிற்கு எதிரான அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தினோம் எனவும், அச்சுறுத்தல்கள் நிறை வடையாத போதிலும், தாயகத்தின் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில், தொழிற்சங்கங்களுடாக நாட்டுக்கு எதிராக என்.ஜி.ஓ. களால் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளை நாம் தொடர்ந்தும் அம்பலப்படுத்துவோம் என தாயக அலைவரிசை மேலும் தெரிவித்துள்ளது

Read more...

Wednesday, July 10, 2013

ரஸ்யாவின் மிதக்கும் அணு சக்தி நிலையம்

உலக நாடுகள் அதிகரித்து வரும் சக்தி தேவையை ஈடுசெய்யும் பொருட்டு, அணுச் சக்தியை பெரிதும் நம்பத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது பல நாடுகள் இதனைக் கைவிட்டுள்ள போதிலும் சில நாடுகள் இன்றும் அணு சக்தியில் தங்கியுள்ளது.

குறி்ப்பாக சொன்னால் நமது அண்டை நாடான இந்தியாவை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்நிலையில் ரஸ்யா மிதக்கும் அனுச்சக்தி நிலையமொன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளதுடன், இதற்கென தயாரிக்கப்பட்டு வரும் பிரமாண்ட கப்பலொன்றிலேயே மேற்படி அணு சக்தி நிலையம் உருவாக்கப்பட்டு வருகின்றது.

இந்தப்புதிய கப்பல் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ரஸ்யாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான ‘பால்டிக் பிளான்டினால்’ நிர்மாணிக்கப்படும் அணு சக்தி நிலையத்துடனான முதல் கப்பல் அகாடிமிக் லொமோனோசோவ் எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இது அந்நாட்டின் பின் தங்கிய பகுதிகளுக்கு சக்தி, குடி நீர் போன்ற வசதிகளை வழங்கும் பொருட்டே இதனை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கப்பலின் நிறை 21,500 டொன்கள் எனவும் 69 பணியாளர்கள் அதில் சேவையில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றதுடன், இக்கப்பலானது பெரிய தொழில்துறை நிறுவனங்களுக்கும், கடற்கரையிலிருந்து சிறு தொலைவில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கும் சக்தி வழங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Read more...

நுவரெலியா சீதைக் கோவில் மாதிரி அலங்காரம் தயார்

இலங்கையை ஆண்ட மன்னன் ராவணன் சீதையை சிறை எடுத்து அங்குள்ள அசோகவனத்தில் சிறை வைத்ததாக ராமாயண காவியத்தில் உள்ளது. எனவே, இலங்கையில் சீதைக்கு கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டதுடன் அதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில அரசு செய்துள்ளது.

இக்கோவிலை கட்ட இலங்கையில் உள்ள நகரங்களில் 50 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் இறுதியில் நுவரலியா அருகேயுள்ள திவுரும்பொல என்ற இடத்தில் சீதைக்கு கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராவணனை வதம் செய்த பின் சீதையை ராமபிரான் மீட்டார். பின்னர் சீதையை அக்னி பிரவேசம் செய்ய வைத்தார். அந்த இடத்தில் தான் தற்போது கோவில் கட்டப்படுகிறது. இதற்காக இந்திய ரூ.2 கோடி செலவில் இக்கோவில் தென்னிந்திய கட்டிட கலை நுட்பத்தில் கட்டப்பட உள்ளது.

அதற்கான அலங்காரத்தை பெங்களூரைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் இதை வடிவமைத்துள்ளார் எனினும் அலங்காரத்தை வடிவமைத்தவரது பெயரை வெளியிட வில்லை என்பதுடன் இலங்கை மற்றும் மத்திய பிரதேச அரசுகளிடையே சுற்றுலா துறையை மேம்படுத்த இக்கோவில் கட்டப்படுகிறது.

இதற்கிடையே இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவதற்கு இலங்கையின் வரலாற்று நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ராவண பாலயா என்ற சிங்கள புத்தமத அமைப்போ சீதையின் கோவில் முன்பு ராவணன் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

Read more...

பயனுள்ள உங்க வீட்டு இயற்கை வைத்திய குறிப்புகள்

உங்கள் அனைவருக்கும் வீடுகளில் இருக்கும் போது உங்களுக்கு சிறிய நோய்கள் வரலாம் அப்படி வீடுகளில் இருக்கும் போது உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக வீட்டில் இருந்தபடி என்ன இயற்கை வைத்தியம் செய்யலாம்.

* துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

* 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

* காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

* தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

* அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

* கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

* காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

Read more...

வாஸின் மகன் ரவிந்து கைது செய்யப்பட்டார்.........!

கடத்திச் செல்லப்பட்டு தொம்பே பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி முஸ்லிம் கோடீஸ்வர வர்த்தகர் முஹமட் ஸியாமின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனான ரவீந்து குணவர்தன இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோதே ரவிந்து குணவர் த்தனவை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

முஹமட் ஸியாமின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலே இவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

(கேஎப்)

Read more...

ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் யாருமில்லை... இலங்கைக்கு வருவதெல்லாம் ஆற்றுக் கபரகொயாக்கள் போன்றவர்கள்!

‘ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் யாரும் இலங்கைக்கு வருவதில்லை. இலங்கைக்கு ஆற்றுக் கபரகொயாக்கள் போன்ற தலைவர்களே இன்று வருகின்றார்கள்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க மாத்தளையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு புகழ்மிக்க, சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்த நாடும் அழைப்பு விடுப்பதில்லை. என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை தேர்தல் தொகுதியில் தொகுதியைப் பலப்படுத்துவதற்கான கூட்டத்தில் உரையாற்றும்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிகாரே இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

‘அரசாங்கத்திற்கு இப்போது உதவி தேவைப்பட்டுள்ளதால் அவர்கள் உதவி தேடிக்கொண்டு ஆபிரிக்காக் கண்டத்திலுள்ள நாடுகளுக்குச் செல்கிறார்கள். ஜனாதிபதி உள்ளிட்ட அரசு தங்களுக்குப் புள்ளிகளைக் கூட்டிக் கொள்வதற்காக அந்நாட்டுக்கு எம் நாட்டு மக்களின் வரிகளை உதவியாகக் கொடுத்துள்ளனர். இவ்வாறான நகைப்பிற்குரிய விடயம் வரலாற்றில் ஒருபோதும் நடைபெறவில்லை.

இவ்வாறு வழங்கி எமது நாட்டு மக்களை அடகுவைத்து அரசாங்கம் பல்வேறு நாடுகளிலிருந்து தூக்கமுடியாத வட்டிக்குக் கடன் வாங்குகின்றதென்பதை மறக்க வேண்டாம். இருண்ட யுகத்தில் இருக்கின்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவைக்கின்ற முதல் கட்ட நடவடிக்கை மத்திய மாகாண சபைத் தேர்தலிலிலிருந்து ஆரம்பமாகப் போகின்றது.’ என்றும் ஐதேக செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

மாமாஸ்மியின் படுகொலையை தொடர்ந்து கடத்தல்காரர்கள் குழப்பம்! காட்டிக்கொடுப்புக்கள் அதிகரிப்பு.

பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மாமாஸ்மியின் படுகொலையை தொடர்ந்து, மாளிகாவத்த பகுதியில் உள்ள ஹெரோயின் கடத்தல்காரர்கள் குழப்ப மடைந்துள்ளதுடன், ஒருவரையொருவர் காட்டிக்கொடுக் கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மாளிகாவத்த பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை, ஒரு தொகை ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர். மாளிகாவத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் மோசடி தடுப்பு பிரிவு கிரேண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, ஒரு தொகை போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மேலும் ஒரு தொகை போதைப் பொருளுடன் பெண்ணொருவரும், மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்த மூன்று சந்தேக நபர்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மாளிகாவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ரொஹான் பெரேரா தலைமையில் மோசடி தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுகத் சந்தன உட்பட அதிகாரிகள், இம்முற்றுகையை மேற்கொண்டனர்.

Read more...

பயங்கரவாதத்தால், பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதியினால் நாளை நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

பயங்கரவாதம் காரணமாக, பாதிக்கப்பட்ட வடபகுதி மக்க ளுக்கு ஜனாதிபதியினால் நாளை நட்டஈடு வழங்கப்பட வுள்ளது.

பயங்கரவாத வன்முறைகள் மற்றும் அதனை அண்டிய செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த, மற்றும் காயம டைந்து சொத்துகளை இழந்த வட மாகாண மக்களுக்கு ஜனாதிபதியினால், நாளை அலரி மாளிகையில் நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

முதல் கட்டமாக, ஆயிரத்து 200 பேருக்கு நட்டஈடு வழங்கப்படும். இதற்கென 85 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கும் துரித கதியில் நட்டஈடு வழங்கப்படும் எனவும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, அரசாங்கம் 2013ம் ஆண்டில் ஒதுக்கிய நிதியின் கீழ் புனர்வாழ்வு அதிகார சபை, இத்திட்டத்தை முன்னெடுக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

சம்பந்தன் ஜயா சமாதான வழியையோ அல்லது நந்திக்கடல் வழியையோ தேர்ந்தெடுக்கலாம் -சம்பிக்க

"முஸ்லிம்களை எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்து துரத்தி அடித்த போது முதுகெலும்புள்ள ஹக்கீம் எங்கி ருந்தார்"

இனவாதத்தை தூண்டி அரசியல் செய்யும் சம்பந்தன் ஜயா, சிங்கள இனத்துடன் பயணம் செய்ய சமாதானப் பாதையையோ, அல்லது பிரபாகரன் சென்ற நந்திக்கடல் பாதையையோ, தேர்ந்தெடுக்க முடியுமென்று அமைச்சர் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதே போல் மக்கள் முன் வீரனாக துடிக்கும் அமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும் தேர்ந்தெடுக்க இரண்டு வழிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜாத்திக்க ஹெல உறுமயவின் குருநாகல் மாவட்ட சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

வடமேல் மற்றும் மத்திய மாகாண தேர்தல்களுக்கு எதிர்ப்பு தெரிக்காமல் வடமாகாண தேர்தலுக்கு மாத்திரம் எதிர்ப்பு தெரிவிப்பதன் மர்மம் என்னவென சிலர் எம்மிடம் கேட்கின்றனர். எமக்கு வடக்கு பற்றியே பிரச்சினை இருக்கின்றது எனவும், சம்பந்தனின் இனவாதமே எமக்குப்பிரச்சினை எனவும், அவரது அரசியல் பற்றியே எமக்குப் பிரச்சினை இருக்கின்றது என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் எம்மால் ஒரு விடயத்தை கூற முடியும். சம்மந்தன் ஜயாவுக்கு இரண்டு பாதைகள் உண்டு எனவும், தமிழ்தேசிய கூட்டமைப்பிலுள்ள இனவாதிகளுக்கு செல்வதற்கு இரண்டு பாதைகள் உண்டு எனவும், தமிழ் மக்களின் வரியை கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஏ 9 வீதியில் குருநாகல் வந்து மீன் மரக்கறிகளை விற்று சீவிக்கலாம். அதில் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. இல்லையேல் பிரபாகரன் சென்ற பரந்தன் புதுமாத்தளன் வரையுள்ள நந்திக்கடல் பாதையில் செல்லலாம். எதில் வேண்டுமானாலும் செல்வதற்கு நாம் தயாராக உள்ளோம்.

அத்துடன் இன்று இதில் ஹக்கீமும் இணைந்துள்ளார். தாம் ஒரு உறுதியான இனம் என்றும் எந்த ஒரு சக்திக்கும் அடி பணியமாட்டோம் என்றும் கூறுகின்றார். முதுகெலும்புள்ள ஒரு கட்சி என்றும் கூறுகின்றார்.

பிரபாகரன முஸ்லிம்களை கொலை செய்து துரத்தி அடித்த போது முதுகெலும்புள்ள ஹக்கீம் எங்கிருந்தார் என்றும் அமைச்சர் சம்பிக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிராசகுலம் பள்ளிவாசலை எல்.ரீ.ரீ.ஈ கைப்பற்றி அங்கு முகாம் அமைக்கும் பேர்து முதுகெலும்புள்ள ஹக்கீம் எங்கிருந்தார். அன்று ஒரு முஸ்லிம் கிராமத்திற்கு எம்முடன் செல்ல ஒரு அரசியல்வாதியாவது வந்தாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more...

யால வனப்பூங்காவில் கஞ்ஜா வளர்ப்பு! பொலிஸாரினால் முற்றுகை!

யால வனப்பூங்காவில் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த கஞ்ஜா செய்கை பொலிஸாரினால் முற்றுகையிடப் பட்டுள்ளது. யால வனப்பூங்கா 4 ஆம் வலயத்தின் மஹகந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கஞ்ஜா சேனையொன்று தொடர்பான தகவல்கள் புத்தள பொலிஸாருக்கு கிடைத்ததையடுத்து இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப் பட்டது.

பொலிஸாரினால் கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 330 கிலோ கிராம் கஞ்ஜா, உட்பட உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டதுடன், 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திஸ்ஸமகாராம நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர் எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கதிர்காம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

வீட்டு பணிப்பெண்களுக்கான ஆகக்குறைந்த கொடுப்பனவு 900 ரியாலாக ஆக அதிகரிப்பு

வீட்டு பணிப்பெண்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட 750 சவுதி கொடுப்பனவு தொள்ளாயிரம் சவுதி ரியாலாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும், இத்திட்டத்திற்கு அப்பால், பணிப்பெண்களுக்கு இலவச விமான சீட்டுக்கள், உணவு, இருப்பிட வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென, வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதுவரை வீட்டுப்பணிப் பெண்களாக அழைக்கப்பட்டு வந்த பதவியை தற்போது வீட்டு பராமரிப்பாளர்கள் என மாற்றுவதற்கு அமைச்சர் டிலான் பெரேரா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு பதவியின் பெயர் மாற்றப்பட்டுள்ளதால் பணிப்பெண்களுக்கு சமூகத்தின் மத்தியில் மதிப்பு ஏற்படுமெனவும் அவர்களது ஊதியமும் அதிகரிக்குமென அமைச்சர் தெரிவித்தார்.

முதல் கட்டத்தில் சவுதி அரேபியாவில் பணியாற்றும் பெண்களின் பதவிகளே இவ்வாறு மாற்றப்படவுள்ளன. அடுத்த மாதம் முதல் ஏனைய நாட்டு பணிப் பெண்களின் பதவிகளின் பெயர்களும் மாற்றப்படவுள்ளன.

Read more...

பிக்குகளின் போர்வையிலிலேயே பயங்கரவாதிகள் விகாரைக்குள் நுழைந்தனர்!

புத்தகயா மகா போதி தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 6 சந்தேக நபர்களை தேடி பொலிஸார் விசார ணைகளை ஆரம்பித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

புத்தகயா மகா போதி விகாரை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மகாராஸ்டி மற்றும் ஆந்திர பிரதேச மக்கள் விசாரணைக்கு உதவி வருகின்றனர். கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் 6 சந்தேக நபர்கள் பிக்குகளின் போர்வையில் விகாரைக்குள் பிரவேசித்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அணிந்து வந்த 3 காவி உடைகள் அவர்கள் பயன்படுத்திய சிம்காட் மற்றும் பயணப்பையொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தகயாவில் பொருத்தப்பட்டிருந்த 22 பாதுகாப்பு கமராக்களில் 16 கமராக்களில் இச்சந்தேக நபர்களின் காட்சிகள் பதிவாகியுள்ளன. குறித்த கையடக்க தொலை பேசியிலிருந்து புதுடில்லிக்கும் மும்மைக்கும் தொடர்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

புத்தகயாவிலுள்ள புத்தர் சிலையை தகர்த்துவதற்காக அச்சிலையின் அருகில் பொருத்தப்பட்ட குண்டு அதிலுள்ள கடிகாரம் சரியாக இயங்காததன் காரணமாக வெடிக்கவில்லை. வெடித்த குண்டுகள் ஏற்படுத்திய அதிர்வுகளினால் இக்குண்டில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரம் செயலிழந்தது. விகாரைகளில் 13 குண்டுகள் பொருத்தப்பட்டிருந்ததுடன் வெடிக்காத ஏனைய குண்டுகளை இந்திய பாதுகாப்பு தரப்பினர் செயலிழக்க செய்தனர்.

தற்போது புத்தகயா பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் 50 நாடுகளை சேர்ந்த பிக்குகள் பங்குபற்றிய விசேட வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றன.

இந்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்திற்கு விஜயம் செய்தனர். அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்த தீர்மானித்திருந்தனர். தற்போது புத்தகயா வளவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புத்தகயா வளாகத்தில் 3 கட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக புத்தகயா விகாரையின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான டி.பாலமுருகன் இந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இன்று பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதோடு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புனித பூமி பிரதேசத்திற்கு கையடக்க தொலைபேசிகள், கமரக்கள், பயணப்பைகள் என்பன வற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிக்குகளுக்கு விசேட அடையாள அட்டைகளும் வழங்கப்படவுள்ளதுடன் விகாரையின் பின்பகுதியில் பாதுகாப்பு சுவர் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நீதிபதி பாலமுருகன் இந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

Read more...

கார்ட்டூன் திரைப்படங்கள் மூலம் சிறுவர்கள் மனதளவில் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்!

வெளிநாட்டு கார்ட்டூன் திரைப்படங்கள் மூலம் சிறுவர்கள் மனதளவில் அழுத்தங்களுக்கு உட்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

களனி பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டு ள்ளது.

வெளிநாட்டு கார்ட்டூன் திரைப்படங்களின் ஊடாக மேற்குலக நாடுகளின் முத லாளித்துவ சிந்தனை இலங்கை சிறுவர்கள் மத்தியிலும் ஊடுறுவதாக களனி பல் கலைக்கழகத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

வர்த்தக அனுகூலங்களை மாத்திரம் கருத்திற்கொள்ளாது சமூக பொறுப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஊட கங்களும் கார்ட்டூன் திரைப்படங்களை ஒளிபரப்பும் போது பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை தற்போது வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் சிறுவர் கார்ட்டூன்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலங்கள் இதுவரை அமுல்படுத்தப் படவில்லையென தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனால் புதிய சட்டமூலங்களை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்துள்ளார்.

Read more...

எனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழும் ஆசையில் எனது மனைவியை கொலைசெய்தேன் - கணவன்

சாத்தான்குளம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை சம்பவத்தில் மனைவியை காரில் கொண்டு போய் கொலை செய்த சுதாகர், வேறொரு பெண்ணுடன் தனக்கு காதல் இருந்ததால், அவருடன் சேர்ந்து வாழும் ஆசையில் மனைவியைக் கொலை செய்ததாக பொலீஸில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அடிக்கடி செல்போன் பேசியதையும், சிகரெட் பழக்கத்தை தட்டிக் கேட்டதாலும் மனைவியைக் கொலை செய்தேன் என்று கார் கொலைக் கணவன் நெற்று கூறியதையடுத்து இன்று உண்மை விவரம் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 33). இவர் கட்டிட காண்டிராக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து சாமியார்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவமுருகன் மகள் சூர்யா (30) என்பவருக்கும் 35 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சூர்யா கொலை செய்யப்பட்டார். இதையட்டி சுதாகர் கைது ஆனார்.

நானும், தூரத்து உறவுக்கார பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். அவர் சென்னையில் எம்.எஸ்சி., படித்து வருகிறார். எனவே அவரை திருமணம் செய்வதற்காக எனது குடும்பத்தினருடன் சென்று பெண் கேட்டோம். அப்போது நான் பிளஸ் படித்து இருப்பதாகவும், அந்த பெண் எம்.எஸ்சி., படித்து வருவதாகவும் கூறி அவருடைய பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்து விட்டனர். இதனால் நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம்.

காதலியை மறக்க முடியாததால் எனக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. எப்போதும் சிகரெட் பிடித்து கொண்டே இருந்தேன். எனக்கு 33 வயது ஆகி விட்டதால் என்னுடைய பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைக்க பல்வேறு இடங்களில் பெண் பார்த்து கொண்டிருந்தனர். நான் பலமுறை திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் தட்டிக்கழித்து வந்தேன்.

என்னுடைய மனைவி சூர்யா என்னை மதிக்காமல் எப்போதும் எதிர்த்து பேசுவார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, எங்கள் குடும்பத்தில் அனைவரையும் அப்படித்தான் பேசுவேன், உன்னையும் அப்படித்தான் பேசுவேன் என்று கூறினார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

எனக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. எப்போதும் அவர்களிடம் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பேன். இதனால் நான் எப்போது செல்போனில் பேசினாலும் சூர்யா என்னிடம் தகராறு செய்வார். செல்போனில் உள்ள எண்களைப் பார்த்து, இந்த எண்கள் யாருடையது? என்று கேட்டு நச்சரிப்பார். எனவே செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்து விடுவேன்.

இந்த சம்பவங்களால் மனைவி மீது எனக்கு வெறுப்பு அதிகமானது. தினமும் நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பிறகுதான் வீட்டுக்கு வருவேன். அவளை கொலை செய்து விட்டால் காதலியை திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். எனவே இதற்காக திட்டமிட்டு நண்பரின் காரை வாங்கிக்கொண்டு, மனைவியை அழைத்துக்கொண்டு நாகர்கோவில் அருகே உள்ள சாமிதோப்பு கோவிலுக்கு சென்றேன். அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் இரவில் தட்டார்மடம் அருகே உள்ள படுக்கப்பத்து மின்வாரிய அலுவலகம் அருகே வந்ததும் காரை நிறுத்தினேன். பின்னர் சூர்யாவின் கழுத்தில் கத்தியால் குத்தினேன். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் கத்தியை சுமார் 10 மீட்டர் தொலை வில் வீசி எறிந்தேன்.

சூர்யா விபத்தில் இறந்ததாக அனைவரும் கருத வேண்டும் என்று நினைத்து காரை மின் கம்பத்தில் மோதினேன். சூர்யா கொலை செய்யப்பட்டார் என்பது தெரிந்ததும் பொலீசார் என்னை கைது செய்தனர்.

இவ்வாறு சுதாகர் பொலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.

Read more...

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு கைதியான பேரறிவாளனின் கோரிக்கை நிராகரிப்பு!

பேரறிவாளன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான கார ணத்தை அவருக்கு தெரிவிக்க மத்திய தகவல் ஆணையம் மறுத்துவிட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை நீண்ட நாட்களுக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து எந்த நேரத்திலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிர் பிரியும் நிலை இருப்பதால், தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புவதாக வேலூர் சிறையிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மத்திய தகவல் ஆணையத்திற்கு பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை கடந்த மாதம் 26 ஆம் தேதி மத்திய தகவல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதுதொடர்பாக ஆணையத்தின் தலைவர் சுஷ்மா சிங் பிறப்பித்துள்ள உத்தரவில் கருணை விவகாரங்களில் அதிகாரிகளின் குறிப்புகள், மாநில அரசுகளின் பரிந்துரைகள், பாதிக்கப்பட்டவர்களின் மனு விவரங்கள் போன்றவற்றை கொண்டே குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு விளக்கம் அளிப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே மனுத்தாரரின் கோரிக்கையை ஏற்பதா வேண்டாமா என்பதை குடியரசுத் தலைவர் முடிவு செய்வதாகவும் கூறப்பட் டுள்ளது.

இவை அனைத்து அரசியல் சாசனத்தின் 74வது பிரிவுக்கு கீழ் பாதுகாக்கப் பட்டுள்ளதால் அவற்றை தகவல் ஆணைய விதிகளின் அடிப்படையில் வெளியிட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ள ஆணையம், தகவல் ஆணைய விதிகளும் அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டதே என்று விளக்கம் அளித்துள்ளது.

Read more...

ஸ்னோவ்டென் மீது கைவைக்காதே! Bill Van Auken

ஒபாமா நிர்வாகமும் அமெரிக்க இராணுவ, உளவுத்துறைக் கருவியும் எட்வார்ட் ஸ்னோவ்டெனை கைப்பற்ற உலகம் முழுவதும் ஆக்கிரோஷமான வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், சந்தேகத்திற்கு இடமின்றி வாஷிங்டனிடம் இருந்து வந்துள்ள தீவிர அழுத்தத்தை ஒட்டி, ரஷ்ய அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களாக அவர் பொறியில் அகப்பட்டது போல் இருக்கும் மாஸ்கோ சர்வதே விமான நிலையத்தில் இருந்து முன்னாள் தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஒப்பந்தக்காரர் வெளியேறவேண்டும் என்னும் அப்பட்டமான சமிக்ஞைகளை அனுப்புகின்றனர்.

ஸ்னோவ்டெனுடைய உயிர் உடனடி ஆபத்தில் உள்ளது. அமெரிக்க குடிமக்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் இருக்கும் மக்கள் மற்றும் அரசாங்கங்கள்மீதும், மேற்கு ஐரோப்பாவில் இருந்து பிரேசில் வரை அமெரிக்க நடத்திவரும் மாபெரும் அரசியலமைப்பு விரோத, சட்டவிரோத ஒற்றாடல்களை ஸ்னோவ்டென் அம்ப்பலப்படுத்தியதை அடுத்து வாஷிங்டனுடைய பழிவாங்கும் தன்மை கொண்ட சர்வதேச வேட்டையாடல் நடவடிக்கை தீவிரமாகிவிட்டது.

ஒபாமா நிர்வாகத்தின் சர்வதேச மிரட்டலும் காடைத்தனமும் மட்டுமே எட்வார்ட் ஸ்னோவ்டென் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நிபந்தனையற்ற தஞ்சம் கோரும் உரிமையை நாடுவதை மேலும் நம்பகத்தன்மை உடையதாகச் செய்கிறது.

அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை அமைப்பின் கட்டாயத்தின் பேரில் செயல்படும் பல ஐரோப்பிய சக்திகள், கடந்த வாரம் பொலிவியாவின் ஜனாதிபதி ஏவோ மோராலேஸுடைய விமானத்தை பலவந்தமாக தரையிறக்கியதில் முழுமையாக தெளிவாக்கியுள்ளது. போருக்கே வழிவகுக்கக் கூடிய இந்த அசாதாரண நடவடிக்கைக்கு கூறப்பட்ட காரணம், ஸ்னோவ்டென் விமானத்தில் இருக்கிறார் எனச் சந்தேகிக்கப்பட்டதுதான்.

இத்தகைய சந்தேகங்கள் உண்மையிலேயே இருந்தனவா அல்லது வாஷிங்டன் மோராலேஸை உதாரணமாக ஆக்க விரும்பியதா என்பது தெளிவில்லை, ஆனால் ஸ்னோவ்டென் தஞ்சத்திற்கு தகுதி பெற்றவர் என்று மோராலேஸ் கூறியதற்கும், பொலிவியா அதை கொடுக்க தயாராக உள்ளது என்று கூறியதற்கும், இதையொட்டி அத்தகைய நடவடிக்கையை எடுக்க நினைக்கும் எந்த அரசாங்கத் தலைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒன்று மட்டும் உறுதி, நடு வானில் குறைந்த எரிபொருளுடன் இருந்த பொலிவிய ஜனாதிபதியின் பயணத்திட்டத்தை இடருக்கு உட்படுத்தி அவருடைய உயிரையும் பணயம் வைக்க அமெரிக்க அரசாங்கம் தயார் என்றால், தன்மீதான அம்பலப்படுத்தலை நிறுத்த ஸ்னோவ்டெனை கொலை செய்ய அது தயார் என்பது இன்னும் வெளிப்படையாகிறது.

அமெரிக்க அரசியல் நடைமுறை மோராலேஸுக்கு எதிராக காட்டப்பட்ட சீற்றத்தை தொடர்ந்து, ஸ்னோவ்டென் விவகாரத்தில் மற்ற அரசாங்கங்களையும் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தியுள்ளது.

ஸ்னோவ்டென் மீதான அடக்குமுறையில் ஒற்றைமையாக, இரு கட்சிகளின் முன்னணி உறுப்பினர்களும் இப்பிராந்தியத்தில் நீண்ட குற்றம் சார்ந்த ஏகாதிபத்திய ஆக்கிரோஷ செயற்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில், ஞாயிறு தொலைக்காட்சி செய்திப் பேட்டிகள், இலத்தீன் அமெரிக்க திசைப் பக்கம் ஒரு பெரிய தடியை அசைக்க பயன்படுத்தப்படுகிறது.

காங்கிரஸ் உறுப்பினரும், குடியரசுக் கட்சியின் மன்ற புலனாய்வு குழுவின் தலைவருமான மைக் ரோஜேர்ஸ் அறிவித்தார்: “இது தீவிர விவகாரம் ஆகும். அமெரிக்காவுடன் சில வர்த்தக நலன்களைக் கொண்டுள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகள் கவனிக்கப்பட வேண்டும்; நாம் இத்தகைய நடவடிக்கையை ஏற்க மாட்டோம் என்னும் தெளிவான தகவல் அவற்றிற்கு அனுப்பப்பட வேண்டும்”.

இதேபோல், செனட் வெளியுறவுக் குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவர் செனட்டர் ரோபர்ட் மெனென்டெஸ், எந்த நாடாவது ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் கொடுத்தால், அது “அவற்றை அமெரிக்காவிற்கு எதிராக நேரடியாக நிறுத்தும், அவை அதை அறியவேண்டும்” என்றார்.

அமெரிக்க அரசாங்கத்தின் காடைத்தனம் ஸ்னோவ்டெனுடைய கொள்கை வழிப்பட்ட செயல்களில் இருந்து தீவிரமாக வேறுபட்டுள்ளது. கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட பேட்டியின் இரண்டாம் பகுதியை வெளியிட்ட கார்டியன் செய்தித்தாள் முன்னாள் NSA ஒப்பந்தக்காரர் தன்னுடைய செயல்களை தன் அரசியல் வளர்ச்சி என்னும் நிலைப்பாட்டில் இருந்து விளக்கினார், அமெரிக்காவின் கூற்றான “ஒடுக்கப்பட்ட வெளிநாட்டு மக்களை விடுவிக்க தான் செயல்படுகிறது” என்னும் “பெருந்தன்மைச் செயலை” நம்பியதில் இருந்து, “உலக முழு உணர்வின் மனத்தில் ஒரு கருத்தைத் தோற்றுவிக்க உண்மையில் நாம் மக்களை தவறாக வழிநடத்துகிறோம்...” என்பதை உணர்ந்த வரை இந்த வளர்ச்சி அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் சார்பில்தான் ஸ்னோவ்டென் பேசினார்: “நான் பேசும், செய்யும், ஒவ்வொன்றும், நான் பேசுபவர்கள் அனைவரும், என்னுடைய படைப்பாற்றல் அல்லது நேசம் அல்லது நட்பு அனைத்தும் பதிவு ஆகிறது. அவ்வாறான ஒன்றை கட்டமைக்க நான் விரும்பவல்லை, அத்தகைய உலகத்தில் வாழவும் விரும்பவில்லை.”

"அரசாங்கத்தின் எல்லை தாண்டிச்செல்லும்” செயல்களை “எமது தலைமை” திருத்தும் என நான் காத்திருந்தேன், ஆனால் “அது ஏற்படவில்லை, உண்மையில் முந்தைய அரசாங்கங்களின் எல்லைதாண்டிச் செல்லும் செயல்கள் அதிகமாக்கப்பட்டுவிட்டன, மோசமான ஊடுருவல் ஏற்பட்டுள்ளது, உண்மையில் இதை யாரும் நிறுத்தவும் இல்லை” என்று அவர் மேலும் விளக்கினார்.

இங்கு ஒற்றை தனிநபரின் சிந்தனைகள் மட்டும் வெளிப்படவில்லை, மாறாக ஒரு தலைமுறையின் அனுபவங்கள் முழுவதும் வெளிப்பட்டுள்ளன—இத்தலைமுறை வாஷிங்டனுடைய “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்னும் பின்னணியில் அரசியலில் வயதிற்கு வந்து, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது ஆக்கிரமிப்புப் போர்கள் தொடக்கப்பட்டதை கண்டது; அவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மில்லியன் கணக்கானவர்கள் ஆகும். இதைத்தவிர வெள்ளை மாளிகையில் இருந்து சித்திரவதை, குற்றம் ஆகியவற்றிற்கும் ஊக்கம் அளிக்கப்பட்டதையும் கண்டது.

புஷ் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தீவிரமாயின, இவர் நம்பிக்கை மற்றும் மாற்றத்தை கொண்டுவரப்போகிறவர் எனக் கருதப்பட்டார்; ஆனால் அவர், உலகளாவிய ட்ரோன் படுகொலைத் திட்டம், பரந்த அளவு சட்டவிரோத ஒற்று விரிவாக்கம், லிபியாவிலும் சிரியாவிலும் புதிய ஆக்கிரமிப்புப் போர்கள் ஆகியவற்றை மேற்பார்வையிடுகிறார்.

இவற்றின் விளைவு மில்லியன் கணக்கான இளைஞர்கள் இரு பெருவணிகக் கட்சிகளுடனும் வெறுப்படைந்துள்ளதோடு, மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களான உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராக ஒரு நிதியத் தன்னலக்குழுவின் நலன்களை பாதுகாக்க அர்ப்பணித்த அமெரிக்க அரசியல், பொருளாதார நடைமுறைக்கும் தீவிர விரோதப் போக்கை காட்டுகின்றனர்.

ஆளும் நடைமுறைக்குள் உள்ள, ஸ்னோவ்டெனுக்கு எதிரான வேட்டையாடலில் காட்டப்படும் வெறித்தன்மையும், பழிவாங்கும் தன்மையும், ஸ்னோவ்டெனுக்கு எதிராக என்று மட்டும் இல்லாமல், இன்னும் ஏராளமான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என்று அவருடைய கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்ளுபவர்களுக்கு எதிராகவும் உள்ள ஆழ்ந்த அச்சத்தை பிரதிபலிக்கிறது.

மக்களின் இந்த பரந்த தட்டிற்குள்தான், ஸ்னோவ்டென் சக்தி வாய்ந்த ஆதரவைக் கொண்டுள்ளார், அங்குதான் அவருக்கு உண்மையான பாதுகாப்பும் உள்ளது. இதை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வளைந்து கொடுத்து தங்கள் வசதிகளை காக்கும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவ தேசியவாத அரசாங்கங்களின் கைகளில் விட்டுவிட முடியாது, அவை தங்கள் ஆளும் வர்க்கங்களின் நலன்களை அதிகப்படுத்தத்தான் முயலும். அதேபோல் மாஸ்கோவில் இருக்கும் விளாடிமிர் புட்டினின் ஊழல் மலிந்த ஆட்சியும் தன்னைத்தான் காத்துக் கொள்ள முயலும்.

அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கான உண்மையான தளம் ஆகும். இது மட்டுமே, பரந்த சமூக சமத்துவமின்மை, பொருளாதார சுரண்டல் மற்றும் அரசியல் ஒடுக்குமுறை ஆகியவற்றால் குணாம்சப்படுத்தப்படும் ஒரு அமைப்பு முறையை பாதுகாக்க, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் ஆளும் செல்வம் கொழித்த தட்டுக்கள் தழுவியுள்ள பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கு ஒரு தாக்குப்பிடிக்கக்கூடிய எதிர்ப்பை முன்னெடுக்க கூடியது.

“ஸ்னோவ்டென் மீது கை வைக்காதே” என்ற கோரிக்கையை சூழ அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பணியிடங்கள், பள்ளிகள், நகர்ப்புறப்பகுதிகளில் வெகுஜன ஆதரவு அணிதிரட்டப்பட வேண்டும். ஸ்னோவ்டெனுடைய பாதுகாப்பு, இவரைப் போலவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அரச துன்புறுத்தலை எதிர்கொள்ளும் இராணுவ சிப்பாய் பிராட்லி மானிங் மற்றும் ஜூலியன் அசாஞ்ச் ஆகியோருடன் இணைக்கப்பட வேண்டும். இந்த இயக்கம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு மற்றும் போர், சர்வாதிகார அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தின் முன்னணியாக இருக்க வேண்டும்.

Read more...

கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட கப்பல் மூழ்கியது? இலங்கையர்களின் நிலை உறுதிப்படுத்தமுடியவில்லை!

சோமாலியக் கடற்கொள்ளையர்களால், 2010 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட மலேஷிய சரக்குக் கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் கடலில் மூழ்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கப்பலின் மாலுமிகள் மற்றும் பணியாளர்களில் சில இலங்கையர்களும் இருந்தனர்.

இவர்களில் பலர் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. ஆனால் இது குறித்து அதிகார பூர்வமாக உறுதிப் படுத்தமுடியவில்லை.

இவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த சோமாலியக் கடற் கொள்ளைக்காரர்கள் இவர்களை விடுவிக்க பணயத்தொகைக் கேட்டு பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் இந்த செய்தி கிடைத்த பின்னர், ஐரோப்பிய கடற்படையினர், தாங்கள் கடற்பகுதியில் தேடியபோது, எந்த உடலும் கிடைக்க வில்லை என்று கூறியுள்ளனர்.

ஆனாலும், தொடர்ந்து இந்த கப்பலைக் கைப்பற்றிய கடற்கொள்ளையர்களுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும், இது குறித்த தகவல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Read more...

கடத்தல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு இன்டர்போல் இலங்கைக்கு வருகை!

கென்யாவில் இருந்து இலங்கை ஊடாக துபாய்க்கு கொண்டு செல்லப்படவிருந்த தந்தங்கள் அடங்கிய கொள்கலன் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக் கப்பட்டிருந்த நிலையில், குறித்த தந்தங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு இன்டர்போல் உத்தியோ கத்தர்கள் மூவர் இலங்கை வந்துள்ளனர்.

இவர்கள் கைப்பற்றப்பட்ட தந்தங்களின் DNA மாதிரிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், யானைத் தந்தங்கள் எந்த நாட்டிற்குக் கடத்தப் படுகின்றன என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை குறித்த அதிகாரிகள் மூவரும் ஆரம்பித்துள்ளனர் எனவும், சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

Read more...

நேற்றைய போட்டியில் இந்தியா வெற்றி! இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதவுள்ளன

நேற்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேத் லுவிஸ் அடிப்ப டையில் 81 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைத் தட்டிக்கொண்டுள்ளது.

மழை காரணமாக 29 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத் தப்பட்டதை அடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 விக்கட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது. போர்ட் ஒஃப் ஸ்பெய்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

26 ஓவர்களுக்கு 178 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை, துடுப்பாட்டத்தில் பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. 24.4 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றது. இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கட்களைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக புவனேஸ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டார். இதன் பிரகாரம், நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடவுள்ளன.

Read more...

மகள் ஜேர்மனியில் பெற்றோர் முதியோர் இல்லத்தில்

பெற்று வளர்த்த ஒரே ஒரு மகள் ஜேர்மன் நாட்டில் வாழ்ந்து வரும்போது அவரது பெற்றோர்கள் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைக்கப்பட்டு தங்கியுள்ளனர்.

சாவகச்சேரி, நுணாவில் மேற்கைச் சேர்ந்தவர்களான பொன்னம்பலம் வீரசிங்கம் (வயது - 80), அவரது மனைவி வீரசிங்கம் ராஜேஸ்வரி (வயது - 60) உடையவர்களது ஒரே ஒரு மகள் கணவன் மற்றும் 2 பிள்ளைகளுடன் ஜேர்மனியில் வாழ்ந்து வந்து வருவதுடன் அங்கிருந்து பெற்றோருக்கு பணம் அனுப்பி உறவினர்கள் மூலம் தனது பெற்றோரைப் பராமரித்து வந்த நிலையில் இவரது கணவன் திடீரென இறந்து போனார். இதனால் இவரது குடும்பத்தில் நெருக்கடி தோன்றியதனால் மகள் பெற்றோருக்கு பணம் அனுப்புவது தடைப்பட்டது.

நுணாவில் சந்திக்கு அண்மையில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மிகவும் கஷ்டமான சூழலில் வாழவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தவர்களின் நிலையை அறிந்த அப்பகுதி கிராம அலுவலரும் சமூகசேவை உத்தியோகத்தரும் இணைந்து இவர்களை கைதடி முதியோர் இல்லத்திற்கு நேற்று கொண்டுவந்து சேர்த்துள்ளதுடன் இது பற்றி ஜேர்மனில் உள்ள மகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

புத்தகயாவை தொடர்ந்து எமது அடுத்து இலக்கு மும்பை நகரம் - முஜாஹிதீன் அமைப்பு

புத்தகயா புனித தளத்தையடுத்து தமது அடுத்த தாக்குதல் இலக்கு மும்பை நகரமாகுமென இந்திய முஜாஹிதீன் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக குறித்த செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

புத்தகயா மீதான தாக்குதலையும் தாம் பொறுப்பேற்பதாக முஜாஹிதீன் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தமது அடுத்த தாக்குதலுக்கு இன்னும் 7 தினங்கள் மாத்திரமே இருப்பதாகவும் முடியுமாயின் அதை தடுக்குமாறு இந்திய பாதுகாப்பு தரப்பினருக்கு முஜாஹிதீன் அமைப்பு சவால் விடுத்துள்ளது.

இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பாது காப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை புத்தகயா மீதான தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளும் முன்னெ டுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய 4 பேர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் 20 வயதையுடைய இளைஞர்கள் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தாக்குதலுக்குள்ளான புத்தகயா மகா போதி விகாரைக்கு விஜயம் செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தீர்மானித்துள்ளார். அவருடன் இந்திய உட்துறை அமைச்சர் சுசில் குமார் ஷின்டேயும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

கொக்குவில் கொள்ளை சம்பவம் தொடர்பாக நால்வர் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், 40 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய தங்காபரணங்களை கொள்ளை யிட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பில், நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர்.

சந்தேகநபர்களில் இருவர், களவாடப்பட்ட தங்காபர ணங்களை வங்கியொன்றில் அடகு வைக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதானவர்கள் இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவுள்ளனர் எனவும், கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசார ணைகளை மேற்கொண்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

ஞானஸார! நீங்கள் முஸ்லிம் பெண்களின் ஆடை களைவதற்கு முன்னர் வெள்ளையருக்கு ஆடை அணிவியுங்கள்...!! - ஸமன்மலீ

இந்நாட்டு மதங்களின் இனங்களின் அடையாளங்கள் என்ன என்பது அறியாமல் பொதுபல சேனா இயக்கம் முஸ்லிம் பெண்களின் நிகாபை தடைசெய்யுமாறு குறிப்பிடுவதானது தனது இனத்தை மத்த்தை உயர்ந்த்து எனக் காட்டுவதற்கும் னைய மதங்களை இனங்களை இழிந்துரைப்பதற்குமேயாகும் என பெண்கள் உரிமைகளுக்கான அமைப்பின் செயலாளர் ஸமன்மலீ குணசிங்க குறிப்பிட்டார்.

இலங்கைக்கு உல்லாசப் பயணம் வருகைதருகின்ற பெண்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டிய இன்றைய நிலையில் கலகொடஅத்தே ஞானஸார தேர்ர் முஸ்லிம் பெண்களின் நிகாபை தடை செய்யுமாறு கோருவது மனித உரிமைகளை மட்டுமன்றி பெண்களின் உரிமைகளையும் மீறும் செயலாகும் என பெண்களின் உரிமைகளுக்கான அமைப்பு குறிப்பிடுகிறது.

மாற்று மத்த்தவர்களின் கலாச்சார மற்றும் அடையாளங்களுக்கு கைவைக்கும் இழிந்த செயலை விட்டும் ஞானஸார்ர் மீள வேண்டும் என்றும் குறிப்பிடுகின்ற அந்த அமைப்பானது மேலும்,

‘ஞானஸாரர் இந்த யோசனையை நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டு செய்வதாயின் அவர் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், நாட்டில் தற்போது பரவியிருக்கின்ற விபச்சார விடுதிகளை, போதைவஸ்து கடத்தல் மற்றும் சில அரசியலாளர்கள் செய்கின்ற அடாவடித்தனங்களுக்கு எதிராகக் போர்க்கொடி தூக்குவதே. முஸ்லிம் மாதரின் உடையினால் யாருக்கும் எத்தீங்கும் இல்லாத நிலையில் அவர்களின் ஆடையில் கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை. தற்போது நமது நாட்டுக்கு வருகைதருகின்ற பெண்கள் என்ன அசிங்கமாக வருகின்றார்கள்...? அரை நிர்வாணமாக அல்லவா நிற்கிறார்கள்? முஸ்லிம் பெண்கள் தங்களது விருப்பின்பேரில் நிகாபை நீக்கினாலும் அதில்கூட யாரும் தலையிட முடியாது. சில முஸ்லிம் நாடுகள் பெண்கள் தங்கள் அங்கங்களை முழுமையாக மறைக்காதவிடத்து அவர்களைக் கொலை செய்துள்ளன. தற்போது இலங்கையில் அதற்கு மாற்றமாக ஆடையின் ஒரு பகுதி அதிகமாக இருப்பதாக்க் கூறி அதனைத் தடை செய்ய முயல்கிறது.

இது அநீதியான செயற்பாடாகும். இங்கு முக்கிய தேவை என்னவென்றால் பெண்களின் ஆடையைக் களைவதல்ல. அவர்களுக்கு ஆடை அணிவிப்பதாகும். எனவே நாங்கள் ஞானஸார்ரிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தீமைகளுக்கு எதிராக எழுந்து நில்லுங்கள்.. மாறாக, முஸ்லிம் பெண்களின் உரிமைகளில் தலை யிட வேண்டாம்.’ எனவும் குறிப்பிட்டுள்ளது.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

யாழில் கப்பம் கோரல், கொள்ளை, கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி மாநகர சபை உறுப்பினர் கைது!

யாழில் அண்மைக்காலமாக நடைபெற்றுவந்த கப்பங்கோரல் மற்றும் கொள்ளை,கடத்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் மற்றும் அவருடைய தம்பி, நன்பர்கள் என நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் பல லட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளையும் கப்பமாக அறவிட்டதுடன் அவற்றை தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.

இது மட்டுமல்லாது உதவி செய்வதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையையும் தர்சிங் விஜயகாந் நாசம் செய்துள்ள குற்றஞ்சாட்டின் படியே கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் தொடர்ந்து விசாணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இது தொடர்பாக யாழ் மாநகர முதல்வரை தொடர்பு கொண்டு கேட்டபோது கோப்பாய் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விஜயகாந் மேலதிக விசாரணைக்கு என பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியதுடன் அழைத்துச்செல்லப்பட்டமைக்கான காரணம் ஏதும் தெரியாது என குறிப்பிட்டார்.

Read more...

எல்.ரி.ரி.ஈ யினரின் தனிநாட்டுக் கோரிக்கை சாத்தியப் படப்போவதில்லை! அது அழிந்து விட்டது - முன்னாள் எல்.ரி.ரி.ஈ

எல்.ரி.ரி.ஈ யினரின் தனிநாட்டுக் கோரிக்கை எப்போதும் சாத்தியப் படப்போவதில்லை எனவும் அது அழிந்து விட்ட தென்றும், இணங்கிய அரசியல் நடத்தப் போவதாக எல்.ரி.ரி.ஈ யினரின் முன்னாள் ஊடக பேச்சாளரும் வட மாகாணத்துக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதல மைச்சர் வேட்பாளருமாகிய தயா மாஸ்டர் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக வியளாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு பங்களிப்பு செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு உள்ளது எனவும், இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இணங்கி தீர்வு காண முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, 'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்லில் வெற்றி பெற்றால், இணங்கிய அரசியலில் ஈடுபட போவதாகவும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, முன்னாள் போராளிகளின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுவதுடன், போராளிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்பதையே வலியுறுத்தியுள்ளதாகவும்' அவர் கூறினார்.

Read more...

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் மனுவை விசாரிக்க முடியாது –நீதவான்

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் நீதிமன்றத்தால் மனுவை விசாரிக்க முடியாது என, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித் துள்ளார். ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாத, பிரித் தானிய பிரஜையின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு கோரி பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் தாக்கல் செய்ய ப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, கொழும்பு கோட்டை நீதவான், மேற்கண்டவாறு தெரிவி த்தார்.

பிரித்தானிய பிரஜையான ஹெலன் ஜோன் 17202 ரூபாவிற்கான கட்டணத்தை செலுத்தாது ஹோட்டலிலிருந்து வெளியேறிவிட்டதாக, கொழும்பு கிரேன் ஒரியன்டல் ஹோட்டல் முகாமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த மனு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த மனுவை நிராகரித்த நீதவான், உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் வழக்கை விசாரிக்க முடியாது என்றும், கடவுச்சீட்டை கேட்டு கடவுச்சிட்டு உரிமையாளர் மாத்திரமே மனுத்தாக்கல் செய்யவேண்டுவும் எனவும், உயர்ஸ்தானிகராலயம் அல்ல என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

Read more...

Tuesday, July 9, 2013

13 வதும் தெற்கின் இடதுசாரி ஜனநாயக சத்திகளும் - சுகு-ஸ்ரீதரன்

13 வது திருத்த சட்டத்தின் காணி ,பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் இனவாத பிரச்சாரங்களுக்கெதிராக இடதுசாரிகளும் தெற்கின் ஜனநாயக சத்திகளும் உறுதியாக குரல் கொடுப்பது சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான நல்ல தருணமாகும். திட்டவட்டமாக நறுக்கு தெறித்தாற்போல் விடயங்களைச் சொல்வது தமிழர் தரப்பில் அரிதாகவே காணப்படுகிறது.

13 வதைப்பற்றிப் பகிரங்கமாகப் பேசுவதில் தமிழர்தரப்பில் ஒரு தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசியல் யாப்பில் அங்கமாகி விட்ட 13 வதை இல்லாதொழிப்பதற்கான போராட்டம் பேரினவாதிகளால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தாலும் தமிழர் தரப்பில் 13 வதற்கு ஆதரவான உறுதியான குரல் வெளிப்படுத்தப்படவில்லை.

இப்போது அதற்கு சாவுமணி அடிப்பதற்கான முயற்சிகளுக்கெதிராக இடதுசாரிகளும் ஜனநாயக சத்திகளும் உறுதியான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.

தமது அமைச்சரவை பதவி போனாலும் பரவாயில்லை என்றளவிற்கு வாசு, ரஜீத , டிலான் போன்றவர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

டியூ ,திஸ்ஸ, வாசு , டிலான், ரஜித போன்றவர்கள் உட்பட பலர் தமது ஆட்சேபனையை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் முஸ்லீம் ஜனநாயக சத்திகள் இவர்களுடன் இணைந்து செயற்படவேண்டிய தருணம் இதுவாகும்.

இந்த சக்திகள் தனிமைப்படுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.

13 வதில் பொலிஸ் காணி அதிகாரங்களை நீக்கும் திருத்தம் செய்யக் கூடாது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் கிட்டாது என இவர்கள் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.

இது எல்லாம் எமக்குத் தேவையில்லை. உலகம் எமக்கு இன்னொரு கொசோவாவை பெற்றுத் தரும் என்ற குரல்கள் எல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்லும் மோசடியாகும்.

நாங்கள் ஏதோ ஒரு இடத்தில் இருந்து தான் ஆரம்பிக்க முடியும். உண்மையான அர்த்தத்தில் இலங்கையை பல்லினங்களின் நாடாக மேம் படுத்துவதற்கு ஏதாவதொரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். அது 13 வதாகத்தான் இருக்கிறது.

இதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டு யதார்த்தமில்லாத சூனியத்திலிருந்து விடயங்களைத் தொடங்க முடியாது. கனவு காண்பது நல்லதுதான். ஆனால் மக்களின் இருப்பு பாதுகாப்பு என்பவற்றிற்கு உத்தரவாதமில்லாத கனவுகளால் பிரயோசனமில்லை.

உசுப்பேத்தும் கவர்ச்சிகரமான சொற்சிலம்பங்களை விட யதார்த்தமான அணுகுமுறைகளே இன்று தேவைப்படுகின்றன. பொறுமையும், தூரநோக்கும் கொண்ட அணுகுமுறை இன்று தமிழர் தரப்பில் தேவைப்படுகிறது.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதே எமது 30 வருடஅனுபவமாக இருக்கிறது. எனவே நிதானம் தேவை.

தமிழ் முஸ்லீம் மலையக சமூகங்களும் தெற்கின் இடதுசாரி ஜனநாயக சத்திகளும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் சேர்ந்து செயற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தை இழந்து விடக் கூடாது. குறிப்பாக தமிழ்த்தலைமைகள் இந்த இடதுசாரி ஜனநாயக சத்திகளுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்னெடுப்பை மேற்கொள்ளவேண்டும் என்று அரசுக்குள்ளேயும் வெளியேயும் அவர்கள் தனித்து குரல் கொடுக்கிறார்கள்.

அவர்களுடன் எம்மையும் இணைத்து கொள்ள வேண்டும் .

இலங்கையில் பிர்ச்சனை தீரவேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் அதனைத்தான் செய்வார்கள். ஆனால் மக்களின் பிரச்சனைகளில் மானசீகமான அக்கறை இல்லாதவர்கள் உசுப்பேத்தி தேர்தல்களில் வெற்றி பெறுவதிலேயே குறியாக இருப்பார்கள்.

இந்த உசுப்பேத்தும் அரசியல் எத்தகைய விபரீதங்ளை ஏற்படுத்தியிருக்கிறது என்று நாம் ஆற அமர இருந்து சிந்தித்தால் புரியும்.

தற்போது பேரினவாதிகளும் தங்கள் பங்கிற்கு பொதுப்பலசேனா, தேசிய சுதந்திரமுன்னணி, சிஹலஉறுமய என வெவ்வேறு பெயர்களில் புற்றீசல்கள் போல் சிறுபான்மைச் சமூகங்களுக்கெதிரான குரோதத்தையும் விரோதத்தையும் வளர்த்து வருகிறார்கள்.

பேரழிவுகளுக்கான குணம் குறிகளை இது கொண்டிருக்கிறது. இந்த விபரீத பாசிச அரசியல் தான் இந்த நாட்டை குட்டிச்சுவராக்கியது என்பதற்கு பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. “வினாசகாலே விபரீத புத்தி” என்பார்கள். என்னவோ சமூகம் முழுவதும் இந்த இந்த விபரீத சிந்தனை ஆதிக்கம் செலுத்துகிறது. புத்தபகவான், காந்தியடிகளின் அன்பு கருணை என்பன நலிவடைந்து போயிருக்கின்றன.

இந்தியாவின் செழுமைமிகு சுதந்திர இயக்கத்தின் கருவூலங்கள் உலகளாவிய அளவில் நிற -இனவாதங்களுக்கு எதிரான சத்தியாக வியாபித்திருக்கிறது. 18 மைல் தூரத்தில் உள்ள இலங்கையில் அது நலிவடைந்து சிதைந்து போயிருக்கிறது. இன சமூகங்கள் சமத்துவமாக நோக்கப்படுவதற்கு இலங்கை நெடுந்தூரம் இன்னும் பயணிக்க வேண்டியிருக்கிறது.

அச்சமற்ற சுதந்திரமான வாழ்வொன்று இங்கு ஸ்தாபிக்கப் படவேண்டியிருக்கிறது. அது இலங்கையின் சகல சமூகங்களுக்கும் அவசியப்படுகிறது. சுதந்திர மனிதர்களாக சக சுதந்திர மனிதனுடன் உறவாடுவதே இங்கு முக்கியமானதாகும்.

கீழ்மைப்படு;த்துதல், ஒவ்வொரு திருப்பு முனையிலும் இரண்டாந்தரப் பிரசை என்ற முத்திரை இங்கு பிரச்சனை. நீங்கள் இராணுவ ,பொலிஸ் உளவுத்துறை கண்காணிப்பின் கீழ் இரண்டாந்தரப் பிரசைகளாக மன அமைதி அடையுங்கள் என்பதுதான் ஒரேநாடு ஒரே தேசம் என்ற வார்த்தை அலங்காரத்தின் அகங்காரமாக இருக்கிறது.

இது மாறவேண்டும் . யாமார்க்கும் குடியல்லோம் என்ற நிலை அமரத்துவமானதாகும்.

மனித குலத்தின் மீது நிறம் ,இனம், மதம், சாதியின் பெயரால் இருக்கும் தழைகள் அறுபட வேண்டும். எல்லாவற்றிற்கும் அப்பால் வர்க்க சமூகம் அழிந்த அமரத்துவ நிலையை மார்க்சியம் வலியுறுத்துகிறது. இன சமூகங்கிளிடையே சத்துவம் என்பது மனித குலத்தின் இலட்சிய சமத்துவத்தின் ஒரு பகுதியே. இந்த பிரகாசமான எண்ணங்களை மறுப்பவர்களுக்கும் சார்பானவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளே இலங்கையில் இன்று நிலவிக் கொண்டிருப்பது

இலங்கையின் அரசாங்க முறைமையில் கண்ணியமான சுயமரியாதையுள்ள பங்காளர்களாக தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் இணைத்துக் கொள்ளப்படவேண்டும்.அதற்கு இப்போதிருக்கும் அதிகாரப் பரவலாக்கல் கட்டமைப்பு பலப்படுத்தப் படவேண்டும்.

அதனை பலவீனமக்கும் முயற்சிகள் முழு வீச்சுடன் எதிர்க்கப்படவேண்டும். தோற்கடிக்கப்படவேண்டும். உள்நாட்டு முயற்சிகளுடனும் அண்டைநாட்டு மற்றும் சர்வதேசஅனுசரணையுடனும் அது தோற்கடிக்கப்படவேண்டும்.

அனைத்து இன மக்களும் கண்ணியமாக வாழ்வதற்கான நுழை வாயில் அது.

சுகு-ஸ்ரீதரன்
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com