Tuesday, July 9, 2013

சம்மாந்துறையில் 'ஸ்ரெப்ளர்' சத்திர சிகிச்சை வெற்றி! (படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தன்னியக்க ஸ்டெப்ளர் மெசின் பயன்படுத்தப்பட்டு இன்று (09) நோயாளி ஒருவருக்கு செய்யப்பட்ட சத்திரசிகிச்சை பூரண வெற்றியளித்துள்ளதாக சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் ஏ. டபிள்யு .எம். சமீம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான சத்திர சிகிச்சை கிழக்கு மாகாணத்தில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும் மேலைத்தேய நாடுகளில் குறிப்பாக சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலைகளே இவ்வாறான சத்திர சிகிச்சைகளை செய்கின்றன . எனினும், பிரபலமான எமது நாட்டு வைத்தியசாலைகளில் தற்போது இவ்வாறான சத்திர ச்கிச்சைகள் செய்யப்படுகின்றன.

ஆனால் வளப்பற்றாக்குறையுடன் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் எம்மால் செய்யப்பட்ட இவ்வாறான சத்திர சிகிச்சை பெரும் பிரயத்தனமான நடவடிக்கையாகும். குறிப்பாக மூல நோய் உள்ளவர்களுக்கு அறுவை செய்யாமல் தன்னியக்க ஸ்டெப்ளர் மெசின் பயன்படுத்தப்பட்டு செய்வதனால் வலியோ அல்லது இதன் பின்னர் மீண்டும் மூல நோய் ஏற்படுவதற்க்கு வாய்ப்போ இல்லை என அவர் தெரிவித்தார்.

இச்சத்திர சிகிச்சைக்கு முழுமையாக மயக்கவோ கூடுதலான நேரமோ தேவைப்படாது எனவும் தெரிவித்த சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமீம், இதன் நம்பகத் தன்மையை வெளிப்படுத்த சத்திர சிகிச்சை செய்த இடத்துக்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கினார்

வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்தியர் வை. டி .எம். அஸீஸ் விசேடமாக இச்சத்திர சிகிச்சையை பார்வையிட்டார். இதே நேரம் மேலும் ஒரு வருக்கு சிறு நீராக அறுவை சிகிச்சையும் அங்கு இடம் பெற்றது .சிறு நீரகத்தில் இருந்து மூன்று கற்கள் வெட்டி அகற்றப்பட்டன.

இவ்வாறான சத்திர சிகிச்சைகள் செய்வதென்றால் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களையும் ,வைத்தியசாலைகளையும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில்தான் பெற முடியும் எனினும் எந்த வசதியும் இல்லாத சம்மாந்துறை வைத்திய சாலையில் இவ்வாறான பாரிய அறுவைச் சிகிச்சைகளை வழங்கும் வைத்தியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இப்பிரதேச அரசியல்வாதிகளும் மக்களும் இதுபோன்ற வைத்திய சாலைக்கு உதவ முன்வர வேண்டும்.

(இஸ்ஹாக் -கல்முனை)


Read more...

‘வாஸ் எனது மகனைக் கொன்றான்’ நீதிமன்ற முன்றலில் வாஸ் முன் ஒப்பாரிவைக்கிறாள் ஒரு தாய்!

எனது மகன் பாதாள உலக்க் கோஷ்டியினருடன் சம்பந்தமுடையவன் எனக் கூறி, அவனைக் கைதுசெய்து அவனைக் கொன்றாய்...! என்று இன்று (09) கொழும்பு புதுக்கடை நீதிமன்ற முன்றலில் தாயொருத்தி வைத்த ஒப்பாரியானது நீதிமன்ற முன்றலில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

கொழும்பு வடக்கிற்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தன இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு மீண்டும் காவற் சிறைக்கு அழைத்துச் செல்ல முற்படும்போது அவ்விடத்திற்கு வந்த தாயொருத்தியினால் இவ்வாறு ஒப்பாரி வைக்கப்பட்டு வாஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

(கேஎப்)

Read more...

சிறுபான்மையினருக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் நிகழக்கூடாது! - சிராஸ் மீரா ஸாஹிப்

சிறுபான்மை இனத்தவரின் நலன் கருதி உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் இடம் பெறக்கூடாது என அரசாங்கத்தை கோருகின்ற பிரேரணையொன்று கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் இன்றைய (09) சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்பட்டது.

ஜேஆர்- ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தின்மூலம் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதே 13வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டம் ஆகும். இதில் கைவைப்பது என்பது சிறுபான்மை இன மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகும். ஆகவே இந்த 13வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதில் எடுக்கும் நடவடிக்கையினை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி இந்த பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இப்பிரேரணை மீதான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் மாத்திரம் எதிர்த்து வாக்களித்தார். ஏனைய மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்து இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

(கேஎப்)

Read more...

தலைப்பிறை தென்பட்டது; நாளை முதல் ரமழான் நோன்பு ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசத்தில் தென்பட்டுள்ளதால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை அதிகாலை நோன்பு நோற்கலாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது.

ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மத்ரஸதுல் ஹமீதிய்ய மண்டபத்தில் இன்று(09.07.2013) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயமுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள், தைக்காக்கள் மற்றும் சாவியக்களின் பிரதிநிதிகள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read more...

தண்ணீரில் குதித்தால் நீந்தலாம் என்பதை குளிரூட்டிய அறையில் இருந்து சிந்திக்க கூடாது நீரில் குதித்து பார்க்க வேண்டும்-ஜனாதிபதி

நாட்டு மக்களின் நன்மை கருதி எத்தகைய தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் அவை குளிரூட்டிய அறைகளுக்குள்ளிருந்து எடுக்காமல் மக்கள் மத்திக்குச் சென்று அவர்களின் கருத்துக்களைப் பெற்று எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் எடுக்கப்படும் திட்டங்கள் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தடையில்லாத விதத்தில் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மீளாய்வுக் கூட்டம் நேற்று(08.09.2013) திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அது மட்டுமல்லாது மக்கள் சேவையில் ஈடுபடும் போது அரச நிறுவனங்கள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பே. எனினும் பெருமளவு அரச நிறுவனங்களின் சேவைகள் மிகவும் சிறந்ததென எம்மால் அறிய முடிகிறது.

ஒரு சில அரச நிறுவனங்களே மக்களுக்கான சேவையை வழங்குவதில் காலந்தாழ்த்துவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.அரச அதிகாரிகள் மத்தியில் சிந்தனை மாற்றம் அவசியம். அத்துடன் தாம் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் பயிற்சிகளும் முக்கியமாகும்.

பிரஜைகளுக்கு சேவை செய்யும் பிரகடனங்கள் நடைமுறையில் இருந்தாலும் மக்களை அசெளகரியங்களுக்கு உற்படுத்தும் அரச அதிகாரிகளும் உள்ளனர். அவர்கள் தமக்கான பிரகடனத்தை உணர்ந்து செயற்பட அவர்களுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டமொன்றை பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.

சாதாரண மக்களின் பிரச்சினைகள் கிராம சேவகர் ஒருவரினால் தீர்க்க முடியாவிட்டால் பிரதேச செயலாளர் மூலமோ அல்லது அதற்கு மேல் சென்று மாவட்டச் செயலாளர்கள் மூலமோ அதனை தீர்ப்பதற்கான வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தினால் 50, 000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்பட்டுள்ளன. எனினும் பொருத்தமானவர்கள் பொருத்தமில்லாத பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விஞ்ஞானம், கணிதம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களை எங்கோ ஒரு பிரதேச காரியாலயத்தில் பத்திரங்களுக்கு கையொப்பமிடும் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை நாட்டில் விஞ்ஞான கணித பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. பொருத்தமான பதவிகளுக்கு இத்தகையோர் நியமிக்கப்பட்டால் வெற்றிடங்களையும் ஆசிரியர்கள் குறைபாட்டையும் தடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர் இவற்றை நடைமுறைப்படுவதில் ஏதும் சட்ட சிக்கல்கள் இருப்பின் அதுவிடயத்தில் கவனமெடுத்து உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

ஆசிரியர் சேவையும் அரச சேவையே. அரச சேவை தொடர்பான கொள்கைகள் நிறைவேற்றப்படும் போது இணக்கப்பாட்டுடன் செயற்படுவது மிகவும் முக்கியமாகும். இத்தகைய பிரச்சினைகளுக்குக் கல்வியமைச்சரின் அனுமதியுடன் அமைச்சரவை மூலம் தீர்வு காண முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அது மட்டுமல்லாது தொழில் நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறை உள்ளதால் செயற்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய முடியாதுள்ளமை தொடர்பில் சில மாவட்டச் செயலாளர்க ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்த அவர்கள் இத்தகைய பிரச்சினைகளால் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தடைப் படுகின்றன எனக்குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி இதற்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் எனக்குறிப்பிட்டதுடன் பல்கலைக்கழக அனுமதிகிடைக்காத சிறந்த சித்திபெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சியை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Read more...

புதிய 4 தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நியமனக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

புதிய 4 தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும், இராஜதந்திர சேவையை ஆரம்பிக்கும் வகையில் ஜனாதிபதியிடம் நியமனக்கடிதங்களை கையளித்தனர். நியமனக்கடிதங் களை கையளிக்கும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இலங்கைக்கான புதிய டிவ்னீசிய தூதுவராக டரேக் அசூஸ்சும், இலங்கைக்கான மொரோபோ தூதுவராக லேபி ரெபோவும், சிங்கப்பூர் உயர்ஸ்தானிகராக கத்ராலும், இலங்கைக்கான புதிய மலாவி உயர்ஸ்தானிகராக கலாநிதி பேக்ஸ் லிகோயாவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தங்களது நியமனக் கடிததத்தை கையளித்தனர்.

அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

Read more...

13 வது அரசியலமைப்பில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து மேனனுக்கு தெளிவுபடுத்தினார் ஜனாதிபதி!

13 வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பான இண க்கப்பாட்டை எட்டுவதற்கு சிறந்த இடம் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவாகுமென ஜனாதிபதி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்க மேனன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதால் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி மேனனிடம் தெளிவுப்படுத்தியதுடன், முன்னெடுக்கப்படும் திட்டம் நாட்டின் சகல தரப்பினருக்கும் பொருந்தக்கூடிய மற்றும் இணங்க கூடிய ஒன்றாக அமைய வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பாகவும், ஜனாதிபதி வலியுறுத்தினார். 13 வது அரசிய லமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பான இணக்கப்பாட்டிற்கு வருவது அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமென ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் கலந்து கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை தூண்டுமாறு இந்தியாவி;டம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி எவ்வாறான தடைகள் வந்த போதிலும் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுமென தெரிவித்தார்.

அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இதே நேரம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சந்தித்தார். சிவசங்கர் மேனன் நேற்று இலங்கைக்கு வருகை தந்தார்.

Read more...

பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்.

கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாமை படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது புதல்வரையும் கைது செய்வதற்கான விசார ணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாமின் படுகொலை தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் புதல்வர் ரவீந்து குணவர்தனவை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இரகசிய பொலிஸார் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போது, சந்தேக நபரான ரவீந்து குணவர்தனவை கைது செய்வதற்கு 3 தடவைகள் அவரது வீட்டுக்கு சென்ற போதிலும், அவரது தாயார் தமது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

வாஸ் குணவர்தன பேரில் ஆஜரான சட்டத்தரணி அங்கு கருத்து தெரிவிக்கையில், ரவீந்து குணவர்தன விசாரணைக்கு தேவைப்பட்டால் அவரை உரிய முறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தாம் தயார் என தெரிவித்தார். இந்த விசாரணை பயங்கரவாத தடுப்பு சட்டம் உட்பட குற்றவியல் ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் நடத்தப்படுவது சர்ச்சைக்குரியதாகுமென சட்டத்தரணி அங்கு தெரிவித்தார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அதுவரை சந்தேக நபரான பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சஹாப்தீன் உத்தரவிட்டார்.

அத்துடன் அன்றைய தினத்தில் எந்த சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று நீதிமன்றத்தை அறிவுறுத்துமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதே நேரம் வாஸ் குணவர்தனவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்காக அழைத்து சென்ற போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் காரணமாக நீதிமன்ற வளவில் அமைதியின்மை ஏற்பட்டது.

தனது புதல்வரின் புகைப்படம் ஒன்றை எடுத்து வந்த பெண்னொருவர் வாஸ் குணவர்தனவிடம் சமர்ப்பித்து தனது புதல்வரின் படுகொலைக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு குரல் எழுப்பினார். அந்த சந்தர்ப்பத்தில் வாஸ் குணவர்தனவின் ஆதரவாளர்கள் குறித்த பெண்ணை துரத்துவதற்கு முயற்சித்த போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

Read more...

தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாய வலையில் சிக்கவேண்டாம் - பி.எச்.பியசேன

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டை பிழையான வழியில் இட்டுச் சென்று தமது சுயநலத்திற்காகவும், பதவிகளுக் காகவும், தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்துள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி குழுக்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாய வலையில் சிக்காமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றும் நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Read more...

சுவிஸில் இடம்பெற்ற “புளொட்” அமைப்பின் 24வது வீரமக்கள் தினம்! - (படங்கள் இணைப்பு)

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (06.07) 24வது வீர மக்கள் தின நினைவு சுவிஸ் சூரிச் மாநிலத்தில் விமரிசையாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பொது மக்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வானது ஈபிஆர்எல்எப் (நாபா) சுவிஸ் கிளைத் தோழர்களான செந்தா, பாஸ்கரன், புளொட் ஜேர்மன் கிளைத் தோழர் யூட் புளொட் சுவிஸ் கிளைத் தோழர்களான சித்தா, கந்தசாமி ஆகியோரின் நினைவுச்சுடர் விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

தமிழீழக் கல்விக் கழகத்தினரால் வருடாந்தம் நாடத்தப்பட்டு வந்த சகல கலை நிகழ்சிகள் , போட்டிப் பரீட்சைகளில் சளைக்காது கலந்து சிறப்பித்து வந்தவர்களான, அண்மையில் இலங்கைக்கு விடுமுறையில் சென்றிருந்த போது அங்கு கோர விபத்தொன்றுக்கு உள்ளாகி மரணத்தை தழுவிக் கொண்ட செல்வி ஜனனி ஜவீன், செல்வன் ஜனன் ஜவீன் ஆகியோருக்கு சிறப்பஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவுச் சுடரினை புளொட் சுவிஸ் கிளைத் தோழர்களான ரஞ்சன் மற்றும் மனோ ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து பொது மக்கள் மற்றும் கழகத் தோழர்கள் ஆதரவாளர்களின் மலர் அஞ்சலி மற்றும் அக வணக்கத்துடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இலங்கையில் விபத்தில் மரணித்த செல்வி ஜனனி, செல்வன் ஜனன் ஆகியோருக்கான நினைவுரையை திருமதி. தவச்செல்வி கருணாகரன் வழங்கினார்.

முதலாவது அரங்க நிகழ்வாக புளொட் சுவிஸ் கிளைத் தோழர் ரஞ்சனால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இவர் தனது உரையில், “நாம் இங்கு எமது விடுதலைப் போராட்டத்தில் இழந்தவர்களை நினைவு கூர கூடியிருக்கின்ற போது, எம்மால் ஈடு செய்ய முடியாததும், இடைவெளியை நிரப்ப முடியாததுமான அண்மையில் இடம்பெற்ற ஒர் இழப்பின் துயரிலிருந்து மீளாதவர்களாகவே நிகழ்வினை நடாத்துகின்றோம். தமிழீழ கல்விக்கழகத்தின் சகல நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்து வந்த செல்வி ஜனனி ஜவீன் மற்றும் ஜனன் ஜவீன் ஆகியோரின் ஆத்ம சாந்திக்காக இங்கு மீண்டுமொருமுறை பிரார்த்திக்கின்றேன்” என்றார்.

கலை நிகழ்சிகளின் வரிசையில் வினோத உடை, வயலின் இசை, வாய்ப்பாட்டு, பின்னணி இசைக்கு ஆடுதல், மற்றும் தனி நடனம், குழு நடனம் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெற்றது. நாட்டிய நடன நிகழ்வுகளை நடன ஆசிரியை திருமதி குகராஜசர்மா ஜெயவாணி அவர்கள் நெறியாள்கை செய்து தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப். (நாபா) சுவிஸ் கிளைத் தோழர் பெர்னாண்டோ, புளொட் ஜேர்மன் கிளைத் தோழர் அப்பன், புளொட் சுவிஸ் கிளைத் தோழர் சுவிஸ்ரஞ்சன், திரு.இரட்ணகுமார் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட உரைகளில் தமிழீழ விடுதலைப் போராட்ட வராலாறுகள் நினைவு கூரப்பட்டு அங்கு இடம்பெற்ற தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டதுடன் சமகால அரசியல் நிலவரம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முன்னேற்றப் பாதையில் செல்ல மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் விரிவாக பேசப்பட்டது. மேலும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அவர்களின் சுவிஸ் வீர மக்கள் தின உரையை புளொட் சுவிஸ் கிளைத் தோழர் மனோ அவர்களால் வாசிக்கப்பட்டது.

நிகழ்வுகளின் நிறைவாக தமிழீழ கல்விக் கழகத்தினால் கடந்த மாதம் நடைபெற்ற சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான பரீட்சைப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.

மேற்படி பரிசில்களை திரு.பற்றிக், திருமதி.புனிதமலர் இரட்ணகுமார், திருமதி.ஸ்ரீதேவி ரஞ்சன், திருமதி.குகராஜசர்மா ஜெயவாணி, ஈ.பி.ஆர்.எல்.எப். (நாபா) சுவிஸ் கிளைத் தோழர் செந்தா, தோழர் பெர்னாண்டோ, புளொட் ஜேர்மன் கிளைத் தோழர் யூட், புளொட் சுவிஸ் கிளைத் தோழர் மனோ ஆகியோரினால் வழங்கப்பட்டது. இப்பரிசளிப்பு நிகழ்வு ஒழுங்குக்கு இவர்களுடன் திருமதி.நந்தினி சிவானந்தசோதி, திருமதி.சந்திரா அரிராஜசிங்கம், திருமதி.சுகந்தி சசிதரன் ஆகியோரும் உதவி நல்கினர்.

மேற்படி மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்புடன் குறிப்பாக நடன ஆசிரியை திருமதி. குகராஜசர்மா ஜெயவாணி உட்பட கலை நிகழ்ச்சிகளை வழங்கியோருக்குமான பரிசில்களும், ஒலி, ஒளிப் பதிவில் உதவி புரிந்த செல்வன். மகேஸ்வரன் யாபேஸ், தோழர் வரதன் ஆகியோரும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியாக புளொட் சுவிஸ் கிளைத் தோழர் ரஞ்சன் அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. சுவிஸ் கிளைத் தோழர் சிவா அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார்.

நிகழ்விற்கு ஒத்தாசை வழங்கிய அனைவருக்கும் தோழமையுடனான நன்றிகள்..

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
சுவிஸ் கிளை.

–தகவல் புகைப்படங்கள் புளொட் சுவிஸ் கிளை.


dsc01064c

dsc01064l





DSC01068
DSC01071





DSC01074b


DSC01075a


DSC01076

DSC01078

DSC01080



DSC01080d
DSC01081









DSCF8451

DSCF8453








dscf8461a





dscf8468










DSCF8489

Read more...

இலண்டனில் பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இலங்கை வைத்தியர் பணிநீக்கம்.

இலண்டனில் பொது இடங்களில் வைத்து பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை ஐபோனில் படமெடுத்ததாகக் கூறப்படும், இலங்கை வைத்தியரொருவர் தொடர்பான வழக்கு மருத்துவ நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

32 வயதான திலங்க கசுன் இதமல்கொட என்ற குறித்த வைத்தியர் லண்டனில் உள்ள டிரபல்கார் சதுக்கத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பெண் பொலிஸ் ஒருவரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது இவரது ஐபோனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பெண் பொலிஸையும் குறித்த வைத்தியர் படமெடுத்துள்ளமையும், பல்வேறு இடங்களில் வைத்து இதே போன்று பெண்களை லாவகமாக சந்தேகம் வராத வண்ணம் படமெடுத்துள்ளமையும், தெரியவந்துள்ளது.

இதன்போது தன்னை கைதுசெய்ய வேண்டாம் என்றும் மன்னித்து விட்டு விடும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார். சிரேஷ்ட வைத்தியரான இவர் முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவர் எனவும் தற்போது இருதயம் தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கொழும்பில் அமைந்துள்ள தனியார் ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்ற இவர், கடந்த 2005 ஆம் ஆண்டு அபெர்டீன் பல்கலைக்கழகத்தில் இவர் பட்டம் பெற்றுள்ளார். பிரித்தானிய மருத்துவ கழகம் இவ்வழக்கு தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும், அவர் தற்காலிகமாக பணியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

மருதமுனை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனை அறைகள் திறந்து வைப்பு! (படங்கள் இணைப்பு)

கொழும்பில் இயங்கும் முஸ்லிம் பெண்கள் சமூகசேவை முன்னணி அமைப்பினால் மருதமுனை வைத்தியசாலையில் 8 1/2 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய பரிசோதனைக்காக 4 அறைகளையும் நேற்று முன்தினம் (07) திறந்து வைத்தனர்.

திருமதி. ஜின்னாஹ் சரிபுத்தின், முன்ணனியின் தலைவி கதுருநிசா நசீர், சங்காணி ஆகியோர் இணைந்து வைத்தியசாலையை திறந்து வைத்தார்கள்.

(கேஎப்)


Read more...

கிராம உத்தியோகத்தர்கள் பிறரின் கையை எதிர்பார்த்தால், அரசாங்கத்தின் கை கிராம உத்தியோகத்தர்கள் மீது ஓங்கும்...!

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகள் அன்றி அதற்கு அப்பால் கிராம உத்தியோகத்தர்கள் எந்தவொரு நிறுவனத்தினாலும் தனிநபரினாலும் அமைப்பினாலும் பரிசில்களோ கையூட்டுக்களோ பெற்றுக் கொள்ளக்கூடாது என அரச நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கேற்ற சுற்றுநிரூபம் அனைத்து கிராமசேவகர் களுக்கும் காலக் கிரமத்தில் அனுப்பிவைக்கப் படவுள்ளதாகவும், அவ்வாறு ஏதேனும் பொருள்களை பொதுமக்களிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பதவியின் கௌரவத்தைக் காத்து, அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு, அரசியலில் பக்க சார்பின்றி, இன மத வேறுபாடு காட்டாமல் ஒருதலைப் பட்சமின்றி தனது கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றுவதற்காக மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அரச நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அனைத்து கிராம சேவகர்களிடமும் கேட்டுள்ளது.

(கேஎப்)

Read more...

இறைச்சிக் கடைகள் மட்டும் ஏன்...? அனைத்து வித தீய நடவடிக்கைகளும் நீக்கப்பட வேண்டும் – சிரேட்ட பிக்குகள்

கண்டி வரலாற்றுப் புகழ்மிக்க நகரிலிருக்கின்ற அனைத்து இறைச்சிக் கடைகளும் அகற்றப்படுவதற்காக புத்த பிக்குகள், அறிஞர்கள், மற்றும் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தோர் ஒன்றிணைந்து, கண்டி நகரின் பொது வியாபார நிலையத்தின் முன்பாக கையொப்பமிட்ட மனுவினை சிரேட்ட பிக்குகளிடம் கையளிப்பதற்காகச் சென்ற வேளை, ‘இறைச்சிக் கடைகள் மட்டுமன்றி விபச்சாரவிடுதிகள், சூதாடுமிடங்கள், திரட்டுத்தனமான காரியங்களில் இயங்கும் கடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்’ என அவர்களிடம் சிரேட்ட பிக்குகள் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுவதற்காக பௌத்தர்கள் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். மத்திய மாகாண சிரேட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு இவற்றை நீக்க வேண்டிய எண்ணம் இருந்தாலும் கூட சிற்சில தலையீடுகள் காரணமாக அவரால் அதனை நிறைவேற்றவியலாத துர்ப்பாக்கிய நிலையில் அவர் உள்ளார்.’ என்றும் சிரேட்ட பிக்குகள் குறிப்பிட்டுள்ளனர்.

(கேஎப்)

Read more...

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் முடிச்சுகளை கட்டிக் கொண்டு நாட்டை விட்டு வெளிறேவும்!

"புத்தகாயாவை பாதுகாக்க தெரியாத இந்தியா, இலங் கைக்கு பாதுகாப்பை கற்றுத்தர வேண்டியதில்லை!

தனது நாட்டை பாதுகாக்க தெரியாத இந்தியா இலங்கைக்கு பாதுகாப்பை கற்றுத் தர வேண்டிததில்லை எனவும், புத்தகாயாவை பாதுகாக்க முடியாத இந்தியாவின் பாது காப்பு ஆலோசகர் இலங்கையிலிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொது பலசேனாவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் புத்தகாயா விகாரை மீதான குண்டுத் தாக்குதலின் பின்னணியில் முஜாஹிதீன் என்ற முஸ்லிம் அடிப்படைவாத இயக்கமே உள்ளது எனவும், 2008ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் முஜாஹிதீன் என்ற முஸ்லிம் பயங்கரவாத இயக்கம் இயங்குவதை இந்திய உளவுப் பிரிவினர் கண்டுபிடித்து 2010இல் அவ்வியக்கத்தை தடை செய்தனர் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் 2012ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் டில்லியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியபோது தங்களுக்கு புத்தகாயா விகாரை மீது தாக்குதல் நடத்த பணமும் வெடி பொருட்களும் கிடைத்தன என வாக்கு மூலம் வழங்கியிருந்தனர். இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் உளவுப் பிரிவினர் பீகார் மாநிலத்திற்கு அறிவித்தனர். ஆனால், பீகார் மாநில ஆட்சியாளர்களோ, இந்திய மத்திய அரசாங்கமோ புத்தகாயா விகாரைக்கு போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை. இதன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

புத்தகாயாவுக்கு பாதுகாப்பை வழங்க முடியாத இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எமக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்க இங்கு வந்திருப்பது வேடிக்கையாகும். எனவே, அவர் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு உடனடியாக இந்தியாவுக்கு போக வேண்டும் எனவும், இலங்கை அரசாங்கத்திற்கு எமது பாதுகாப்பை பலப்படுத்தும் அனுபவம் இருக்கின்றது எனவும், இந்தியாவின் ஆலோசனைகள் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

மாகாண சபை முறைமையை எங்கள் மீது திணிக்கும் இந்தியா இன்று பீகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்புடன் பாடம் கற்க வேண்டும். அதாவது இந்திய மத்திய அரசின் உளவுப் பிரிவினர் புத்தகாயாவின் ஆபத்து தொடர்பில் அறிவுறுத்தியும் பீகார் மாநில ஆட்சியாளர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

எனவே எம்மீது மாகாண சபை முறைமையை திணிப்பதை இந்தியா கைவிட வேண்டும் எனவும் இதனை இலங்கையின் ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும், அதற்கமைய தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் முஜாஹிதீன், வஹாபிசம், தஜ்வீத் ஜமாஅத் போன்ற முஸ்லிம் அடிப்படை வாதத்தை ஒழிப்பதற்காக உலகிலுள்ள பௌத்தர்கள் அனைவரும் ஓரணியில் திரளும் காலம் வந்துவிட்டது என்றார்.

Read more...

மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை

இலங்கை மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையில் இடம்பெற்ற முக்கிய போட்டியில் இலங்கை அணி டக்கேவர்த் லூயிஸ் முறையில் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிறன்று இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான போட்டி ட்ரினிடாட்டில் நடைபெற்றது.

இந்நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் மஹேல ஜயவர்தனவும், உபுல் தரங்கவும் தலா 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் இலங்கை அணியினர் 19 ஆவது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்கள் எடுத்திருந்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. இதில் சங்கக்கார மிகச்சிறப்பாக விளையாடி 90 ஓட்டங்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மழையின் காரணமாக தொடர்ந்து இரண்டு நாட்கள் நீடித்த இந்த ஆட்டம் 41 ஓவராக குறைக்கப்பட்டது. இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 219 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 41 ஓவர்களில் 220 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் சார்லஸ் இருவரும் தலா 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிராவோ 70 ஓட்டங்களுடனும் சிம்மன்ஸ் 67 ஓட்டங்களுடனும் எடுத்து சிறப்பாக விளையாடினர். பின்னர் விளையாடிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 41 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. இதனையடுத்து டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. மிகச்சிறப்பாக விளையாடி 90 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்த சங்கக்கார ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை சந்திக்கிறது. இப் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகும்.

Read more...

நீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா?

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று காலா காலமாக சொல்லப்பட்டு வருகின்றது. ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவு களும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.

அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று 'பஞ்சாங்க சாஸ்திரம்' சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.

நற்பலன் தரும் கனவுகள்

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.

வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.

திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.

ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.

தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.

இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.

திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.

தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.

கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.

ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.

மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.

மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.

வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.

மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும். தீய பலன் தரும் கனவுகள் பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.

தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.

எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.

எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.

இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.

பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.

புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.

குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.

நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.

ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.

நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.

முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.

முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.

சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.

பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.

காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com