Sunday, July 7, 2013

அமைச்சரவையிலுள்ள மடையர்களால் இந்தியா எங்களுக்கு எதிராக எழுந்துள்ளது! - ஹேமகுமார

புத்தகயாவின் தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டியது அரசாங்கமே!

திருமிகு அநகாரிக தர்மபால பாதுகாத்த புத்தகயாவை மீண்டுமொரு முறை நாங்கள் இழப்பதற்கு தற்போதை மடைமையில் மூழ்கும், மூர்க்கத்தனமுடைய, அரசு காரணமாக இருக்கின்றது என மவ்பிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிடுகிறார். அமைச்சரவையில் இருக்கும் மடச்சாம்பிராணி அமைச்சர்களின் செயற் பாடுகளினால் எங்களுக்கு மிகஅருகில் உள்ள சகோதர நாடாகிய இந்தியா எங்களுக்கு எதிராக மாறக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறான மிக மோசமான ஒரு நிலைக்கு எமது நாடு தள்ளப்படுவதற்கு, பௌத்தர்களின் தலையாய புத்தகயா இன்று பயங்கரவாதிகளால் அழிவுக்குள்ளாவதற்கு தற்போதைய அரசாங்கமே காரணமாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா அன்றுதொட்டு இன்றுவரை எங்கள் நாடு துன்பியலில் சிக்குண்ட நேரங்களில் எல்லாம் எமக்கு உதவி உபகாரம் செய்தது. என்றாலும் இன்று, இந்தியா எங்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் யார் என்பது பொதுமக்களுக்கு நன்கு தெரியும் என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

இன்று (07) கொழும்பில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு அமைப்பின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியாலளர் சந்திப்பிலேயே ஹேமகுமார நாணயக்கார மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க விரும்புகின்றேன்! (கோட்டாபய விசேட செவ்வி)

""பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, டெய்லிமிரருக்கு வழங்கிய விசேட செவ்வியின் பல முக்கிய தகவல்களின் முழு விபரமும் உள்ளே இணைக்கப் பட்டுள்ளது"".

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க விரும்புகின்றேன். அதுதான் முன்னேற்றத்திற்கு வழி. அதிகார பரவலாக்கலுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அது பயனுள்ளதாகவும் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதைவிடுத்து, இனவாரியாக பிரதேசங்களை பிரித்துப் பார்க்கக் கூடாது' என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்களின் செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியாவுடன் பேசக்கூடாது. இது நமது பிரச்சினை. இராஜதந்திர உறவுகளையும் நமது பிரச்சினையையும் கலக்கக்கூடாது. இந்தியாவும் இலங்கையும் இரு வேறு நாடுகள். நமது பிரச்சினை நம் நாட்டுக்கு மட்டுமே உரியது. நாமே அதற்கு தீர்வு காண வேண்டும். நாம் இருக்கப்போவது சிறிய காலமே. நமது எதிர்கால சந்ததிக்கு அமைதியான சுதந்திர நாட்டைத்தான் நாம் அமைத்துக் கொடுக்க வேண்டும். வேறு எந்த நாட்டின் வற்புறுத்தலுக்கும் அடிபணியக் கூடாது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெய்லிமிரருக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்களின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி செவ்வியின் முழு விபரம்

கேள்வி: ஓர் அரசியல் பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வருகிறீர்கள். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தனா, ஆர்.பிரேமதாசா மற்றும் சந்திரிகா பண்டாநாயக்க இவர்களை பற்றி உங்கள் கருத்து

பதில்:ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் பிரேமதாசா ஆகியோரது காலத்தில் நான் இராணுவத்தில் இருந்தேன். அப்பொழுது என்னுடைய முழு கவனமும் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவே இருந்தது. என்னுடைய பார்வையில், அன்றிருந்த நிலைமையின் உண்மை நிலையை ஜே.ஆர்.ஜயவர்தனா, பிரேமதாச இருவருமே தெரிந்துகொண்டிருக்கவில்லை. அவர்களுடைய காலத்தில் இதுபோன்ற நிலமையை அனுபவித்தவர்கள் அல்லர். ஆனால் தலைமைத்துவம் என்பது எந்த சிக்கலையும் எதிர்கொள்வது என்பதேயாகும். தேசிய பாதுகாப்பை நன்குணர்ந்து, சரியான முடிவுகளை அவர்கள் எடுக்கவில்லை.

நான் பொருளாதாரம் பற்றி பேசவில்லை. ஆனால் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி ஜயவர்த்தன சரியான முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை. இந்தியாதான் போராளி குழுக்களை வளர்த்து விட்டது. பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கியது. இந்திய புலனாய்வு அமைப்பான 'றோ' - புலிகளின் தலைவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்கியது. இதற்குக் காரணம் ஜானாதிபதி ஜயவர்தனாவுடன் இந்தியா நட்புறவு இல்லாதது தான். இந்திரா காந்தியுடன் அவருக்கு நெருக்கம் கிடையாது. அதன் விளைவுதான் போராளிகளின் வளர்ச்சி, விடுதலைப் புலிகள் மிகப்பெரிய இயக்கமாக உருவாக அவர்தான் காரணம். அவருடைய ஆலோசகர்கள் யாருக்குமே பின்விளைவுகளைப் பற்றிய அறிவு, யோசனை இல்லாமல் போய்விட்டது. இவரது தறுக்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

உதாரணமாக குட்டிமணி, பிரபாகரன் ஆகியோரை இந்தியா கைது செய்து, இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தியவுடன், இலங்கை அரசு கீழ்மட்ட அதிகாரிகள் இருவரையே இந்தியாவுக்கு அனுப்பியது. இதனால் இந்தியா எந்த அக்கறையும் காட்டவில்லை. இங்கிருந்து சென்ற அதிகாரிகளை அவர்கள் உரியமுறையில் நடத்தவில்லை. கைதானவர்களை பார்ப்பதற்கும் அனுமதிக்கவில்லை. அவர்களின் புகைப்படத்தினை மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். அதன்பின்னர் குட்டிமணி, பிரபாகரன் இருவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனாலும் விடுதலைப் புலிகள் அந்த நேரத்தில் பெரிய வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. 1983ஆம் ஆண்டு கலவரத்திற்கு பின்னரே அவர்கள் பலம் பொருந்திய இயக்கமாக வளர்ந்தார்கள். புலிகளின் தலைவர்களை கைதுசெய்த இந்தியாவுடன் உயர்மட்ட அதிகாரிகள் அல்லது அமைச்சர்களை தொடர்புகொள்ள வைத்திருந்தால் இன்று இந்த யுத்தத்திற்கு வரலாறே இல்லாமல் அப்போதே அடியோடு அழிந்திருக்கும்.

இருந்தபோதிலும் இந்த உண்மையையும் ஏற்றுத்தான் ஆக வேண்ணும். 80 ஆம் ஆண்டு பகுதியில் வடக்கிலுள்ள தீவிரவாதத்தினை இல்லாதொழிப்பதற்காக ஜெனரல் திஸ்ஸ வீரதுங்கவை கட்டளை அதிகாரியாக ஜனாதிபதி ஜயவர்த்தன நியமித்தார். இது வரவேற்கத்தக்கது. ஆனாலும், அடுத்தபடியான நகர்வுகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விடயம். ஜெனரல் திஸ்ஸ வீரதுங்கவின் பல ஆலோசனைகளை அரசு நிராகரித்தது. இது பெரிய வரலாற்று துரோகம்.

1983ஆம் ஆண்டு கலவரத்திற்கு ஜயவர்தனாவே காரணமானவராவர். அவர் மூன்று நாட்கள் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்தார். அதன் பின்னர் செய்த பெரிய தவறு கொழும்பிலிருந்த தமிழர்களை கப்பலேற்றி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்ததுதான். இயக்கத்திற்கு ஆட்கள் இல்லாமல் தவித்து கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. தங்களை நன்றாக பலப்படுத்திக்கொண்டார்கள். யாழ்ப்பாண நூலக எரிப்பு, அபிவிருத்தி சபை தேர்தல் தில்லுமுல்லு இவை அவர்களுக்கு இன்னும் சாதகமாக போயிற்று. அவர்கள் விட்ட தவறினால் ஏற்பட்ட பின்விளைவுகள் மிகவும் பாரதூரமானவையாக அமைந்தன.

அன்றைய தலைவர்களின் தூரநோக்கு இன்மையால்தான் இந்திய பாதுகாப்பு படை இலங்கைக்குள் கால் வைக்கவேண்டி ஏற்பட்டது. அதன்பின்னர் நடந்தவை மிகவும் கசப்பான அனுபவங்கள்.

கேள்வி: இந்திய அமைதி காக்கும் படையைப் பற்றி...?

பதில்: இலங்கை அரசின் தவறினாலேயே இந்திய அமைதி காக்கும் படை இங்கு வந்தது. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் நண்பர்களாகத் தான் அவர்கள் இருந்தார்கள். ஆனால், பிரபாகரன், இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி ஆயுதங்களை கையளிக்க விரும்பவில்லை. அத்துடன், 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஏற்பட்ட மாகாண சபையை ஏற்கவில்லை.

இதனால் இந்திய அமைதிப்படைக்கு எதிராக பிரபாகரனுக்கு யுத்தம் புரிய நேரிட்டது. இழப்புகளை முதலில் சந்தித்தாலும், மிகுந்த அனுபவம், ஆற்றலுமிக்க இந்திய படை பிரபாகரனை இலகுவாக எதிர்கொண்டார்கள். இந்த நேரத்தில் தான் ஜனாதிபதி பிரேமதாச விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆயுதங்களும் பணமும் கொடுத்தார்.

இந்தியப் படைகள் வெளியேறாமல் அவர்களை வைத்திருந்து புலிகளை எதிர்த்திருந்தால் இன்றைக்கு நிலைமையே வேறு. இதுதான் பிரேமதாச செய்த பெரிய தவறாகும். இதைத்தொடந்து புலிகள் எமது இராணுவத்திற்கு எதிராக இரண்டாவது ஈழபோரை ஆரம்பித்தனர். இந்த இரு ஜனாதிபதிகளும் விட்ட தவறுகளே 30 ஆண்டு யுத்தத்திற்கு வழிகோலியது.

நான் பாதுகாப்பு செயலாளராக பதவி ஏற்ற காலத்தில் இந்த நாட்டில் இரண்டு அரசுகள் இருந்தன. ஒன்று மக்கள் தெரிவு செய்தது. மற்றது பிரபாரனுடையது. வடக்கிலும் கிழக்கிலும் அவரது ஆட்சி, காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள், அஞ்சலகம் என்று ஒரு தேசத்திற்கான கட்டுக்கோப்பை உண்டாக்கி நடத்தினார்கள்.

எமது இராணுவமோ, பொலிஸோ அங்கு போகமுடியாது. அங்கிருந்த எமது அரச ஊழியர்கள் எங்களிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு அவர்கள் சொன்னதை கேட்டுத்தான் நடந்தார்கள். தேசிய பாதுகாப்பு கோணத்தில் பார்க்கும் போது இந்த இரு தலைவர்களுமே பெரிய தவறை இழைத்ததினால் நாடு பிளவுப்பட்டிருக்கிறது.

ஜெயவர்தனா ஆட்சியை பாரமெடுக்கும் போது நாடு மிகவும் அமைதியான நாடாக இருந்தது. படிப்படியாக ஆட்சித் தலைவர்கள் விட்ட பாரதூரமான தவறுகளினால் இந்த நிலை உண்டானது.

கேள்வி: உங்கள் சகோதரரும் அவருக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்களும் புலிகள் தோன்ற காரணமாக இருந்த தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள் பற்றி நன்றாக அறிந்தவர்கள். அதை தீர்த்து வைப்பது அவசியம் என்று நீங்கள் கருதவில்லையா?

பதில்: இது அரசியல் பிரச்சினையே அல்ல. முன்னேற்றமடைந்த நாடுகள் பலவற்றிலும் இருக்கும் சிறுபான்மையினருக்கு சில கஷ்டங்கள் உண்டு. அதை தெரிந்து கொண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் வழி வகைகளையே செய்யவேண்டும். இதை அரசியல் பிரச்சினையாக பார்க்கக்கூடாது. ஏன், பெரும்பான்மையினருக்கு கூட இப்படிப்பட்ட கஷ்டங்கள் உண்டு. நாம் சுதந்திரம் பெற்றபோது, பெரும்பான்மை மக்களும் சிக்கலான கஷ்டங்களை அனுபவித்தார்கள். அரசு அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்தது.

வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றிலும் இப்படிப்பட்ட சிறுபான்மை பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தகுந்த முறையில் தீர்த்து வைக்கவேண்டும். இதற்கு சிங்கப்பூர் நல்ல உதாரணமாகும். அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலனுக்காக இந்த பிரச்சினைகளில் தலையிட்டு குழப்புகின்றனர்.

தமிழர்களுக்கு என்று ஒரு பகுதியும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு பகுதியும் சில அதிகாரகங்களுடன் தருவது என்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல. வடக்கில் தமிழர்கள் மட்டுமே நிலம் வாங்க முடியும் என்று சொல்வது தவறு. இன்று கொழும்பில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுக்கு வடக்கில் நிலம் வாங்க முடியாது. ஆனால் தமிழர்களுக்கு இங்கு நிலம் வாங்கலாம். எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் என்ற நிலை உள்ளது.

இலங்கையர்கள் அனைவரும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வாழும் உரிமை இருக்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதை செய்வதற்கு நல்ல சூழ்நிலை இப்போது உள்ளது. கடந்த 30 வருடங்களாக இந்த வாய்ப்புக்களை நாம் தவறவிட்டு விட்டோம். மற்ற நாடுகள் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கும்போது யுத்தம் செய்து கொண்டிருந்ததால் நமது முன்னேற்றம் மோசமான முறையில் பாழடைந்தது. ஒருநாளில் 22 விமானங்களை இழப்பதென்றால் எப்படிப்பட்ட நஷ்டம்? வெளிநாட்டு பயணிகள் வருகை, மீன்பிடிதொழில் என்று அனைத்திலும் நாம் நஷ்டமடைந்தோம். முதலீட்டாளர்கள் இங்கு வரவே அஞ்சினார்கள்.

இப்போது நாட்டில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவுகின்றது. இழந்தவற்றை கட்டியெழுப்ப நல்ல தருணம். தமிழர்களையோ முஸ்லிம்களையோ நாம் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கவில்லை. இப்போது யார் கொழும்பில் பெரிய வர்த்தகர்களாக இருக்கிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களும்தான் மற்றவர்களுடன் சேர்ந்து முன்னிலையில் இருக்கின்றார்கள்.

ஒரு முஸ்லிமையோ, தமிழரையோ பல்கலைக்கழகம் செல்லாமல் தடுத்திருக்கிறோமா? வைத்தியத்துறையிலோ நீதித்துறையிலோ பொறியியல் கல்வித்துறைகளிலோ எவ்வளவு சிறுபான்மை சமூகத்தினர் முன்னிலை வகிக்கின்றார்கள். திறமை விருப்பம் இருந்தால் எவருக்கும் முன்னேற வாய்ப்பு உண்டு.

சிறுபான்மையினர் எல்லா இடங்களிலும் தடையின்றி பரந்து வாழக்கின்றனர். அப்படியிருக்கும்போது, தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு என்று தனித்தனி பகுதிகள் கேட்பது எந்த வகையில் நியாயம்?

கேள்வி:- ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையினராக தமிழர்கள் இருக்கும்போது, தங்களை தாங்களே சுயாதீனமாக ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்து தவறா?

பதில்: அங்குதான் பிரச்சினையே இருக்கின்றது. இதற்கு காரணம் புலிகள் சிங்கள சமூகத்தினரை அங்கு இருக்க அனுமதிக்கவில்லை. அடித்து துரத்தினார்கள். 30 வருடங்களாக சிங்களவர்கள் அங்கு இருக்கவில்லை. அதனால் அவர்களது எண்ணிக்கையும் வளராமல் தடை செய்யப்பட்டது.

சகஜ நிலைமை இருந்திருந்தால் கூடிய எண்ணிக்கையான சிங்களவர்கள் அங்கு இருந்திருப்பார்கள். நான் யாழப்பாணத்தில் இரண்டாவது லெப்டினனாக கடமை புரிந்தபோது அதிக அளவில் அங்கு சிங்களவர்கள் வாழ்ந்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் சிங்கள மக்கள் பலர் வாழ்ந்தனர்.

இப்போது எங்கே அவர்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? புலிகள் அவர்களை விரட்டி விட்டார்கள். அவர்களது எண்ணிக்கை குறைந்தது மட்டுமன்றி மீண்டும் வரவேயில்லை. இது எந்தளவு நியாயம்? உதாரணமாக திருகோணமலையை எடுத்துக்கொள்ளுங்கள். 80ஆம் ஆண்டுக்கு முன்னர் திருகோணமலையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அங்கு சிங்கள மக்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். இந்த நிலைமை யாரால் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் தந்திரத்தினால்தான் இந்நிலைமை ஏற்பட்டது. யுத்த சூழ்நிலை மட்டும் ஏற்படவில்லை என்றால் 78 வீதமாக இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினர் வடக்கிலும் கிழக்கிலும் அதே விகிதாசாரத்திலேயே இருந்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு வட, கிழக்கு நிலபரப்பில் தமிழர்கள் மட்டும் 98 வீதமாக இருப்பது என்ன நியாயம்?

கேள்வி: அப்படியானால் அதிகார பரவலாக்கலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

பதில்:- இல்லை. நான் மேலே கூறிய காரணங்களே போதும். நிர்வாக நோக்கங்களுக்காக அதிகார பரவலாக்களை முன்னெடுக்கலாமே தவிர தேசிய பிரச்சினைக்கு அது தீர்வாகும் என எவராவது நம்பினால் அதனை நான் எதிர்க்கிறேன். உதாரணமாக பொலிஸ் அதிகாரத்தினை எடுத்துக்கொள்ளுங்கள். பொலிஸ் அதிகாரம் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றால் கிழக்கில் அது சாத்தியப்பட்டிருக்கிறதா?

கிழக்கில் தமிழர்கள் எப்போதும் முதலமைச்சராகியிருக்க முடியாது. ஜனாதிபதி விரும்பியதால் மட்டுமே கிழக்கில் பிள்ளையான் முதலமைச்சராக வரமுடிந்தது. அதனை முஸ்லிம்கள் அமைச்சர்கள் பலர் எதிர்த்தார்கள். இந்நிலையில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரின் கீழ் தமிழர்களுக்கு இதே பிரச்சினை இருக்காது என்று எப்படி சொல்ல முடியும்?

இந்த வாதம் எதற்கு என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதிகாரப் பகிர்வின் மூலம் சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைக்கும் என்றால், மத்திய மாகாணத்தில் சிங்க முதலமைச்சரின் கீழுள்ள தமிழர்களுக்கு எப்படி தீர்வு கிடைக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதேபோல்தான் ஊவா, சப்ரகமுவா மாகணங்களிலுள்ள தமிழர்களுக்கும் தீர்வுகள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா? இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழர்களின் எண்ணிக்கை கிளிநொச்சியிலுள்ள தமிழர்களின் எண்ணிக்கையிலும் உயர்வாகும். அவர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? இதிலிருந்து நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும், பொலிஸ், காணி அதிகாரங்கள் கிடைத்தால்தான் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பது உண்மையல்ல என்பதை.

கேள்வி: இந்தியாவுடன் இருந்த முரண்பாடுதான் விடுதலைப் புலிகள் தோன்ற காரணமாக இருந்தது என்று கூறினீர்கள். அப்படியானால் இந்தியாவினால் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்த சட்டத்தை ஒழித்தால் இந்தியாவுடன் பிரச்சினை உண்டாகாதா?

பதில்: அதனால்தான் இந்தியாவுடன் பேசக்கூடாது என்று சொன்னேன். இது நமது பிரச்சினை. இராஜதந்திர உறவுகள் வேறு. இரண்டையும் கலக்கக்கூடாது. இந்தியாவும் இலங்கையும் இரு வேறு நாடுகள். நமது பிரச்சினை நம் நாட்டுக்கு மட்டுமே உரியது. நாமே தீர்வு காண வேண்டும். இராஜதந்திர உறவுகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற பல நாடுகளுடனும் நமக்கு இருக்கிறது. அதனை சரியாக நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்தியாவும் இலங்கையும் இருவேறு நாடுகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இப்பிரச்சினை இந்தியாவின் கீழுள்ள நாடாகவோ அல்லது அதன் பிரதேசமாகவோ இருந்தால் நாம் செய்வது தவறாக இருக்கலாம். ஆனால் இருவேறு நாடுகளுக்கிடையில் எவரும் தலையிட முடியாது. எமது பிரச்சினைக்கு தீர்வை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். புதிய இந்திய உயர்ஸ்தானிகருடனும் இன்னும் பல உயரதிகாரிகளுடனும் இவ்விடயம் தொடர்பாக நான் கலந்துரையாடினேன். அவர்கள் எவரும் 13ஆம் திருத்தச் சட்டத்தினால் தமக்குள் பிரச்சினை வரும் என்று கூறவில்லை. அவர்கள் இவ்விடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள்.

நாம் இருக்கப்போவது சிறிய காலமே. நமது எதிர்கால சந்ததிக்கு அமைதியான சுதந்திர நாட்டைத்தான் நாம் அமைத்துக் கொடுக்க வேண்டும். வேறு எந்த நாட்டின் வற்புறுத்தலுக்கும் அடிபணியக் கூடாது. முன்னர் செய்த தவறுகளால்தான் ஏனைய நாடுகள் எமது பிரச்சினைக்குள் தலை போடுகிறார்கள். அதே தவறினை நாமும் செய்யக்கூடாது.

கேள்வி: 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?

பதில்: ஆம். அதுதான் முன்னேற்றத்திற்கு வழி. அதிகார பரவாக்கலுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அது பயனுள்ளதாகவும் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இனவாரியாக பிரதேசங்களை பிரித்து பார்க்கக் கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு.

கேள்வி: 2009இற்கு பின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் இன ரீதியான முறுகல்கள் ஏன் இப்போது தோன்றுகின்றன?

பதில்: இதை நான் சிறுபான்மையினரின் செயற்பாடாகவே பார்க்கிறேன். பெரும்பான்மை சமூகம் 78 சதவீதமாக இருக்கும்போது 8 அல்லது 10 சதவீதமான சிறுபான்மையினர் சிறுசிறு பிரச்சினைகளை தூக்கிப்பிடிப்பதால் பெரும்பான்மையினரிடையே சந்தேகம் ஏற்பட காரணமாகிறது. அதனால் பெரும்பான்மை சமூகத்தால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் சமாதானம் குலைய காரணமாகின்றன. இங்குதான் இனப்பிரச்சினை தலை தூக்குகின்றது. இந்த பிரச்சினைகளை தமிழ், முஸ்லிம், சிங்கள பிரச்சினைகளாக பார்க்கக் கூடாது. பொதுவான பிரச்சினையாக பார்க்க வேண்டும். அப்படி பார்ப்பார்களேயானால் சுமூகமாக பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்.

அண்மையில் ஒரு பத்திரிகையில் பார்த்தேன், கல்முனையிலுள்ள தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளில் சிலவற்றை பொதுபல சேனா தீர்த்து வைக்க வேண்டுமென கேட்டிருக்கிறார்கள். அந்த தமிழ் மக்கள் - முஸ்லிம் மக்களுடன் வாழ்பவர்கள். இதனை சற்று உற்றுப் பாருங்கள். இந்தப் பிரச்சினைக்கு முடிவு எப்படி இருக்கும்? இந்த யதார்த்த நிலையினை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டும்.

கேள்வி: அப்படியானால் இது போன்ற தீவிரவாதப் போக்குடைய அமைப்புக்களையோ அல்லது குழுக்களையோ நீங்கள் எதிர்க்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக. அதுதான் புத்தரின் நடுநிலைமை போதனை. எத்தகைய தீவிரவாதமும் எனக்கு உடன்பாடானதல்ல.

கேள்வி: ஆனால், நீங்கள்தான் அப்படியான குழுக்களுக்கு ஆதரவு வழங்குவதாக சொல்லப்படுகின்றதே?

பதில்: இப்படித்தான் அரசியல்வாதிகள் இலாபம் காண முயல்கின்றார்கள். சேறு பூசுவது என்பது இதுதான். இதே குழுக்களோடு நான் சம்பந்தப்பட்டது உண்மை. அதனால்தான் பல பிரச்சினைகளை என்னால் தவிர்க்க முடிந்தது. பொதுபல சேனாவை ஜம்மியத்துல் உலமாவுடன் பேச வைத்தேன். அதனால் நிறைய விடயங்கள் பேசி தீர்த்துக்கொள்ளப்பட்டன. மோதலும் தவிர்க்கப்பட்டது. இல்லாவிடில் பெரிய குழப்பங்களுக்கு இது வழிவகுத்திருக்கும்.

நாட்டினுடைய பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. அதனால் எந்த குழுக்களை வேண்டுமானாலும் அழைத்து பேச முடியும். பல புத்த பிக்குமார்களை நான் நன்கு அறிவேன். ஆனால் அரசியல்வாதிகள் இதனாலேயே நான் இந்த முறுகல் நிலைக்கு காரணம் என்று பொய்யான பிரசாரம் செய்கிறார்கள்.

பொதுபல சேனாவின் மத குருமார்களை எனக்கு மட்டுமல்ல ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் உட்பட பல அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும். குழுக்களோடு சம்பந்தப்பட்டவர்களை தெரிந்து வைத்திருப்பதால் அவர்களை நாங்கள்தான் இயக்குகிறோம் என்று அர்த்தப்படுத்த முடியாது. பிரச்சினை என்று வந்தால் அது எந்த அமைப்பானாலும் அழைத்து பேசி தீர்க்க முயற்சிப்பேன். இவர்கள் தீவிரவாத அமைப்புக்களல்ல. ஆகையினால் அவர்களுக்குள்ள பிரச்சினைகளை பேசித் தீர்க்க முயற்சிப்பது எனது கடமை.

இதனை அரசியல் லாபத்திற்காக பார்க்காமல் யதார்த்த ரீதியில் பார்க்க வேண்டும். நான் ஒரு சிங்கள பௌத்தன். எனக்கு எந்த விகாரைக்கும் செல்ல முடியும், எந்த பௌத்த மத குருவினையும் சந்திக்க முடியும். இதனை அரசியலாக்க வேண்டாம்.

கேள்வி: ஆனால், இந்த குழுக்களினால் கலவர சம்பவங்கள் நடைபெற்றபோது சட்ட ஒழுங்குகள் பாதுகாக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகின்றதே?

பதில்: இல்லை. அது தவறு. என்னால் நிறைய விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. நான் பொதுபல சேனாவிற்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் எல்லா சம்பவங்களிலும் அவர்கள் தொடர்புபட்டிருக்கவில்லை. அவர்களுடைய பெயரை சிலர் பாவித்துக்கொண்டார்கள். ஏராளமான பிரச்சினைகளில் பொலிஸ் தலையிட்டு தீர்த்து வைத்திருக்கிறது. சில சம்பவங்களில் முழு இரவையும் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நான் செலவிட்டிருக்கிறேன். ஆகையினால் பிரச்சினைகளின் முழு வடிவத்தினையும் அலசி ஆராய்ந்துவிட்டு இறுதித் தீர்மானத்திற்கு வருவதே சிறந்தது.

கேள்வி: எந்தக் குழுவினாலும் வன்முறை தோன்றாதிருக்கும் என உங்களால் உறுதி கூற முடியுமா?

பதில்: நிச்சயமாக முடியும். பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையுமே எமது முன்னுரிமை. அதனை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். ஜனாதிபதியும் இதனை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

இது ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சிந்திக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அனைவரும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும் என நினைக்க முடியாது. அதனை எவராலும் தடுத்து நிறுத்தவும் முடியாது. ஆகையினால் எந்த பிரச்சினையானாலும் பேசித் தீர்ப்பதே சிறந்தது.

கேள்வி: பிரதி பொலிஸ் மா அதிபர் கைதுக்குப் பின் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்தும் உங்கள் பார்வையின் கீழேயே நடந்தன என்று குற்றம் சாட்டப்படுகின்றதே. மீண்டும் அது மாதிரி நடக்காதிருக்க நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?

பதில்: இத்தகைய சம்பவங்கள் இலங்கையில் மட்டுமே நடைபெறுவதில்லை. உலகத்தின் எல்லா இடங்களிலும் இப்படியான சம்பவங்கள் நிகழ்கின்றன. மேலும், முன்னரே இப்படிப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவற்றிற்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதைத்தான் நீங்கள் உணர வேண்டும். நான் குற்றச்செயல்களுக்கு துணை போவதில்லை. ஒழுக்கமும் கட்டுப்பாடும் உடைய பொலிஸ் சேவையே முக்கியமானது.

கேள்வி: இந்த சம்பவங்களை வைத்து, சட்டவிரோத தண்டனை சம்பவங்களின் பின் புலமாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனரே?

பதில்: இது புதிதல்ல. அரசியல்வாதிகளுக்கு மற்றவர்கள் மீது சேறு பூசுவதே வழக்கமாகிவிட்டது. ஏன், நான் கொழும்பில் நிலம் வாங்கி போட்டிருக்கின்றேன் என்றும் குற்றம் சாட்டினார்களே. யுத்தம் உச்சக்கட்டத்தில் இருந்த போது, காணாமல் போனவர்கள் வெள்ளைவானில் கடத்தப்பட்டார்கள் என்று பலவித பொய்களையும் சொன்னார்கள். இப்போது அது முடியாது. அதனால் இதை கையில் எடுத்திருக்கின்றார்கள்.

என்னுடைய நோக்கமும், செயல்பாடும் குற்றச்செயல்களைத் தடுப்பதேயாகும். அதனால் கடுமையான வழிமுறைகளை நான் கையாண்டிருக்கலாம். நாட்டினதும், மக்களினதும் நன்மைக்காகவே அப்படி செய்வேன். தீவிரமான குற்றவாளிகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த சம்பவங்கள் எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்த ஏழு ஆண்டு காலத்திற்கு முன்பிருந்தே நடைபெற்று வருகின்றன. ரணில் விக்ரமசிங்க வெளியிடும் அறிக்கைகளையிட்டு நான் ஆச்சரியப்படுகின்றேன். அவருடைய கடந்த காலம் எப்படிப்பட்டது? பட்டலந்த எப்படி நிகழ்ந்தது? மக்களுக்கு உண்மை தெரியும்.

கேள்வி: உங்கள் மீது மாத்தளை மனித புதைகுழி சம்பந்தமாகவும் குற்றம் சொல்கிறார்களே?

பதில்: அது பற்றி ஒளிவு மறைவில்லாத பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணை அவசியம். இதுபற்றி, விசாரணையொன்று நடைபெற்றுக்கொண்டிருப்பதால். நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: உங்களுடைய கைதொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக நீங்கள் கூறிய குற்றச்சாட்டைபற்றி?

பதில்: அப்படிப்பட்ட தொழில்நுட்பம் உடையவர்களால் மட்டும் அதை செய்யமுடியும். நான் தொலைபேசியை உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும் கேட்கும் ஒலியில் மாறுபாடும் வித்தியாசங்களை கவனித்திருக்கின்றேன். சில வேளைகளில் அலைவரிசையில் தடங்கல் ஏற்படும். இந்த தொழில்நுட்பம் சில தூதராலயங்களுக்கும், உயர்ஸ்தானீகராலயங்களுக்கும் தெரியும் என்று நம்புகின்றேன்.

கேள்வி: இறுதியாக, உங்களுடைய உளவுப்பிரிவு எதிர்க்கட்சிகளினதும், ஊடகவியலாளர்களினதும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றதே?

பதில்: இலங்கையில் அப்படி நடக்கவில்லை என்று என்னால் திட்டவட்டமாக கூறமுடியும். மக்களின் சமூக உரிமைகளை மீறும் எந்த செயல்களிலும் நாங்கள் நாங்கள் ஈடுபடுவதில்லை என்றார்

Read more...

மாவைக்காக மாழப்போகும் தம்பி நிஷந்தனுக்கு தெரியுமோ மாவையின் மறுமுகம்? எஸ் எஸ் கணேந்திரன்

சேனாதி ஆயுதம் தூக்காத அரசியல் வாதி? கூட்டணிக்குள் யாருக்குமே தெரியாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்த ஒரேஒருவர் சேனாதிதான் இதுவெல்லாம் உங்களுக்கு தெரியாது.

எதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் செயலாளர் எனப்படும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரால் அரசியலில் அறிமுகமான சோமசுந்தரம் சேனாதிராசாவை நன்கு புரிந்திருக்க முடியாத நிஷாந்தன் பதவி மோகம் கொண்ட மாவைக்காக மாண்டுபோக நினைப்பது நகைப்புக்குரியது.

என்னால் நன்கு தெரியப்பட்ட விடயமும் அண்மையில் திரு.ஆனந்தசங்கரி அவர்கள் மாவைக்கு எழுதிய ஒரு மடலில் வந்தசெய்திகளையும் நிஷாந்தன் பார்க்கத்தவறிவிட்டார்போல் உள்ளது. ஆரம்ப காலங்களில் தந்தை செல்வாவுடன் சில காலம் இருந்த சேனாதிராசா தந்தையின் மரணத்தின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊதியம் பெற்று அரசியல் செய்த ஒரே ஒரு கொள்கைவாதி.

எத்தனையோ உயிர்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலங்களில் தனது குடும்பத்தை இந்தியாவில் பாதுகாப்பாக வைத்துவிட்டு கொழும்பில் கூட்டணியின் அலுவலகத்தில் இலவசமாகத்தங்கியிருந்துகொண்டு அவர் போட்ட ஆட்டங்கள் நிஷாந்தனுக்குத் தெரியாது.
அமிர்தலிங்கம் இறந்தவுடன் அவர் வகித்த பாராளுமண்ற ஆசனமும் கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியும் தனக்கே வேண்டும் என தனது தகுதியே தெரியாத மாவை போட்ட சண்டித்தனம் ஏராளம். பின்னர திரு.ஆனந்தசங்கரியின் சிபாரிசில் பாராளுமண்றம் அனுப்பப்பட்டவர்தான் இந்த மாவை சேனாதிராசா.

பாராளுமண்றம் செண்றதும் அவர் செய்த முதல் மக்கள் சேவை தனது சொந்த சகோதரியை தனது பிரத்தியேக செயலாளர் எனக்கூறி வெளிநாட்டில் செட்டில் பண்ணையதுதான். இவர் எப்படிப்பட்ட மக்கள் சேவகன்?

பாராளுமண்றம் கலைக்கப்பட்டதும் மாவிட்டபுரத்தை சேர்ந்த சேனாதிக்கு அம்பாறையில் என்ன அக்கறை வந்ததோ தெரியவில்லை தேர்தலும் கேட்டார் தோற்றும் போனார். அத்தோடு விட்டபாடில்லை அம்பாறையில் இருந்து சில அடியாட்களை அழைத்துக் கொண்டு கொழும்புக்கு வந்த சேனாதி கூட்டணியின் போனஸ் ஆசனத்தை தனக்கே தரவேண்டும் என்று அட்டகாசம் காட்டினார். இந்த சேனாதியை தூர நோக்கு கொண்ட கொள்கைவாதி எண்கிண்றார் தம்பி நிஷாந்தன்.

கூட்டணியினரால் வடக்கில் இயங்க முடியாத காலத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் தம்பி நிஸாந்தன் உறுப்பினராக இருந்த யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளராக போட்டியிட சேனாதிக்கு சந்தர்ப்பம் வழ்கங்கப்பட்ட போது கூட்டணியின் செல்வாக்கை எடைபோட்டுப்பார்க்கக்கூட முடியாத ஆயுதம் தூக்காத ( ஆனால் தூக்கிய )அகிம்சைவாதி சேனாதி தான் தோற்றுப்போனால் தனது பதவி மோகத்திற்கு ஆப்புவைக்கப்படும் என்பதையும் புரிந்து தனது உயிருக்கும் பயந்து தான் போட்டியிடவில்லை எனத்தெரிவித்திருந்தார்.

தேர்தலும் நடந்தது தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்ட யாழ் மாநகரசபையினையும் வலி வடக்கு பிரதேச சபையையும் கூட்டணியே கைப்பற்றியது. சரோஜினி அக்கா முதல்வரானார் மூன்று மாதங்களிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த ஈனச்செயலை கண்டிக்கத்தவறியது மட்டுமல்ல அவரது இறுத்திச்சடங்குகளிலும் கலந்துகொள்ளாது இந்தியாவிலேயே இருந்தார். ஆனால் கலாநிதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டதும் வேட்டி கட்டித்திரிந்த சேனதி இளநீல சவாரி சூட்டுடன் சுடலைக்கு இந்தியாவில் இருந்தே பறந்துவந்தார் அரசியல் அனுபவம் செயல்திறன் கொண்ட சேனதி. ஏனெண்று நிஷாந்தனுக்குப் புரியுமோ?

ஆனால் எனக்குப் புரிந்தது. அண்று நானும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாநகரசபை உறுப்பினராகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் செயற்பட்ட காலமது. திரு.நீலனின் இறுதிச்சடங்கு முடிவுற்று அலுவலகம் திரும்பியதும் திரு. ஆனந்தசங்கரியிடம் நீலனின் பாராளுமண்ற வெற்றிடத்தை கடைசி வரை சேனாதிக்கு கொடுக்கக்கூடாது என பல கட்சி உறுப்பினர்கள் முன்வைத்தனர் அதில் நானும் ஒருவன். அந்த வெற்றிடத்திற்கு கட்சியின் சிரேஸ்ட்ட உறுப்பினர்களாகவிருந்த தலைவர் திரு.சிவசிதம்பரம் அல்லது திரு.ஆனந்தசங்கரி இருவரில் ஒருவரே நியமிக்கபடவேண்டும் என பலரும் விரும்பினர். ஆனாலும் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் உயிரிளப்பால் பாராளுமண்றம் நுளைந்த சேனாதிக்கு பாராளுமண்ற உறுப்பினர் ஊதியம் பெற சில மாதங்கள் தேவைப்பட்ட நிலையில் திரு.ஆனந்தசங்கரி அவர்கள் தானாக மனம்விரும்பி சேனாதியை பாராளுமண்றம் அனுப்பினார் பாவம் இதுவும் தம்பி நிஷாந்தனுக்குத் தெரியாது.

அன்று நாங்கள் மாநகரசபையை நிர்வகித்த்போது யாழ் மாநகரசபைக்கு போதிய நிதிகள் ஒதுக்கப்படாமல் ஈ பி டி பியினர் நிர்வகித்த சபைகளுக்கே அரசினால் நிதிகள் ஒதுக்கப்பட்ட வேளையில் அந்த அநீதிக்கு எதிராகா ரவிராஜ் தலைமையில் நான் உட்பட அரவிந்தன் முகுந்தன் ஆகியோர் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் முன்னால் உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டோம் அதனை அறிந்த அமைச்சரும் தற்போதைய ஆளுனருமான திரு.அளவி மௌலானா பாராளுமண்ற உறுப்பினராக இருந்த சம்பந்தனிடமும் சேனாதியிடமும் பாராளுமண்றத்தில் வைத்தே தனது எதிர்ப்பைத்தெரிவிக்க அரசாங்கத்தை பகைக்க விரும்பாத சம்பந்தனும் சேனாதியும் இந்த உண்ணாவிரதம் பற்றி கட்சிக்கு அறிவிக்கவும் இல்லை தமக்கு இதில் ஏற்பும் இல்லை என கூறிவிட்டு தங்களை நல்லவர்களாக காட்டிவிட்டு அமைச்சுக்கு முன்னால் ஓடி வந்த சேனாதி எம்மோடு சில நிமிடங்கள் தெருவில் அமர்ந்திருந்துவிட்டு எங்களுக்கு பழரசம்தந்து எங்களையும் திருப்திப்படுத்தினார் இந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதி.

பாராளுமண்றத்தில் இருந்துகொண்டு மக்களுக்கு சேவையாற்ற திறனற்ற சேனாதிக்கும் கூட்டமைப்பிற்கும் முலமைச்சர் பதவிஒண்றுதான் மிச்சம்.

கூரைமீது ஏறி கோழி பிடிக்கத்தெரியாத கூட்டம் வானம் ஏறி வைகுந்தம் காட்டப்போகுதாம்.
தம்பி நிஷாந்தன் இப்படியாப்பட்ட சுயநலம் சந்தர்ப்பவாதம் பதவிமோகம் கொண்டவர்களுக்காக வாழ வேண்டிய உங்கள் வாழ்க்க்கையை தீயிற்கு இரையாக்காதீர்கள்.

Read more...

இரவில் விபத்தை தவிர்க்க உதவும் 'ஆடியின்' புதிய கார் ஹெட்லைட் செயல்படும் விதம்!

2014 மாடல் ஆடி ஏ8 செடான் காரில் மேட்ரிக்ஸ் என்ற ஒருங்கிணைந்த வசதிகள் கொண்ட புதிய ஹெட்லைட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கார் மார்க்கெட்டில் இது புதிய தொழில்நுட்பமாக இருக்கும். பாதுகாப்பு வசதிகள் கொண்ட மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட் நிச்சயம் விபத்துக்களை தவிர்க்க உதவும் என கருதப்படுகிறது. இந்த ஹெட்லைட்டின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை காணலாம்.

இந்த ஹெட்லைட்டில் 'ஹை பீம்' ஒளிக்கற்றைகளை பாய்ச்சும் வல்லமை கொண்ட 25 எல்இடி விளக்குகள் இருக்கும். ஒவ்வொரு ரிஃப்லெக்டருக்கும் 5 எல்இடி வீதம் பொருத்தப்பட்டிருக்கும். தானியங்கி முறையில் வெளியில் இருக்கும் வெளிச்சத்திற்கு தகுந்தாற்போல் ஒளிரும் வசதி கொண்டது.

இந்த ஹெட்லைட் அதிக பிரகாசமான ஒளி வெள்ளத்தை சாலையில் பாய்ச்சும். பகல் நேரத்தில் இந்த ஹெட்லைட் பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் சேர்ந்து காருக்கு மேலும் கவர்ச்சியான தோற்றத்தை தரும் என்றும் ஆடி கூறியிருக்கிறது.

இந்த ஹெட்லைட்டுடன் கேமரா ஒன்றும் இணைந்து செயல்படும். இதன்மூலம், எதிரில் வரும் வாகனங்கள், பாதசாரிகள் குறித்து கேமரா மூலம் அறிந்து கட்டுப்பாட்டு கருவி மூலம் ஹெட்லைட் இயக்கப்படும். எதிரில் வாகனம் வரும் பகுதியில் அதிக ஒளியை பாய்ச்சாமல், ஒளியை குறைத்துவிடும். இதன்மூலம், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கூச்சம் ஏற்படாது என்பது இதன் விசேஷம். அந்த வாகனம் அல்லது பைக் ஓட்டிகள் சென்றவுடன் மீண்டும் ஹை பீம் இயல்பு நிலையில் ஒளியை பாய்ச்சும். இதனால், விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

அடுத்ததாக, எதிரில் பாதசாரிகள் அல்லது விலங்குகள் பாதையை கடப்பது தெரிந்தால், சம்பந்தப்பட்ட பொருட்களின் மீது குறிப்பிட்டு மூன்று முறை அதிக ஒளியை பாய்ச்சும். மேலும், அபாயகரமான தூரத்தில் இருந்தால் ஒலி எழுப்பி டிரைவரை எச்சரிக்கும். ஒருங்கிணைந்த வசதிகள் கொண்ட இந்த ஹெட்லைட் முதலில் 2014 ஏ8 செடான் காரில் வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பிற கார் மாடல்களிலும் இந்த ஹெட்லைட்டுடன் அறிமுகப்படுத்த ஆடி திட்டமிட்டுள்ளது.

Read more...

எல்.ரி.ரி.ஈ னருக்கு உதவிய இலங்கையருக்கு அமெரிக்க நீதிமன்றம் 15 வருட சிறை விதித்தது!

எல்.ரி.ரி.ஈ னருக்கு, கனேடிய இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பக் கருவிகளைத் பெற்றுக் கொடுத்தமை தொடர்பான குற்றத்தை ஒப்புக் கொண்ட சுரேஷ் ஸ்கந்தராஜா என்பவருக்கு அமெரிக்க நியுயோர்க் நீதிமன்றம் ஒன்று 15 வருட காலச் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

இது தொடர்பில் கனடாவின் "நெஷனல் போஸ்ட்" வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த நபர் எல்.ரி.ரி.ஈ னருக்கு விமானங்களுக்கான உதிரிப்பாகங்கள், சப்மெரின் மற்றும் கனேடிய நவீன தொழில் நுட்பக் கருவிகள் போன்றனவற்றைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கில் ஆறு பேர் சந்தேக நபர்களாக அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஒருவரே சுரேஷ் ஸ்கந்தராஜா என்பவராவார். இவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதனையடுத்தே இவருக்கு நியுயோர்க் நீதிமன்றம் ஒன்று 15 வருடச் சிறைத் தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

பெண்களை ஏமாற்றி வந்த நபருக்கு பொதுமக்கள் தகுந்த பாடம் கொடுத்தனர் யாழ் வட்டுக்கோட்டையில் சம்பவம்!

வட்டுக்கோட்டைப் பகுதியில் அரசாங்க வேலைவாய்ப்பு க்களை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி வந்த நபர் ஒருவர், இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மேற்படி நபர், வட்டுக்கோட்டை அராலி சித்தன்கேணிப் பகுதியில் கீழ் படித்துவிட்டு வேலையற்று இருக்கும் யுவதிகளின் வீடுகளுக்குச் சென்று, தான் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவர் எனவும், அரசாங்க வேலை வாய்ப்புகளை தன்னால் பெற்றுத் தரமுடியும் என்றும் கூறி யுவதிகளை ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்று உடனடியாக வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளம் யுவதி ஒருவரை தான் வந்த முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்ற நபர், குறித்த யுவதியை மாதகல் உட்பட பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டு இறுதியாக சித்தன்கேணி சந்தியில் இறக்கிவிட்டு மேற்படி நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை காலை வேறொரு முச்சக்கர வண்டியில் வந்த குறித்த நபர் வேலை பெற்றுத் தருவதாக கூறி மற்றுமொரு பெண்ணை அழைத்துச்செல்ல முயன்ற வேளையில், மேற்படி நபரின் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே கதை பரவிய நிலையில் குறித்த நபரை மடக்கி பிடித்து வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தென்மராட்சி மிசாலை பகுதியை சேர்ந்த குறித்த நபர் தற்போது அவர் யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது த.தே.கூ.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையே கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு கட்சிக்கும் தலா மூவர்வீதம் பதினைந்துபேரை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பதென்று முன்னர் இணக்கம் காணப்பட்டிருந்தது. அந்த விடயத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு கட்சிக்கும் தலா நால்வர்வீதம் இருபது பேரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒருங்கிணைப்புக்குழுவில் உள்ளடக்கப்பட்டு அந்த ஒருங்கிணைப்புக்குழுவின் எண்ணிக்கையை மொத்தம் இருபத்தொருபேராக அதிகிரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டதுடன், இந்த ஒருங்கிணைப்புக் குழுவானது எதிர்வரும் 11ஆம் திகதி சந்திப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில், தமிழரசுக் கட்சி சார்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சங்கையா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், என். சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், புளொட் சார்பில் சிவநேசன் (பவன்) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Read more...

நவம்பரிலிருந்து மும்மொழியிலும் தேசிய அடையாள அட்டை! புதிய திட்டத்திற்கிணங்க தொழில் பற்றிய விபரம் உள்ளடக்கப்டமாட்டாது!

ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் நவம்பர் மாதத்தி லிருந்து தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழி யிலும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கவிருப்ப தாகவும் இவ்வாறு வழங்கப்படும் அடையாள அட்டையில் ஒருவருடைய பெயர் மாத்திரம் பதிவு செய்யப்படுவதுடன், அவர் செய்யும் தொழில் பற்றிய விபரம் சேர்க்கப்பட மாட்டாதென்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார்.

தற்போதைய நவீன இயந்திரங்களின் உதவியுடன் அடையாள அட்டைகளை ஒரு மணித்தியாலயத்திற்குள் தங்களால் வெளியிட முடியுமென்றும், ஒருவருக்கு இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருப்பதற்கோ ஒரே இலக்கத்தில் இரண்டு அடையாள அட்டைகள் வழங்கப்படுவதையோ முற்றாக தடை செய்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கைவிரல் அடையாளமும் அடையாள அட்டையில் சேர்த்துக் கொள்ளப்படு வதனால், ஒருவர் எங்காவது குற்றம் புரிந்திருந்தால் அவரை இலகுவில் இனங்காண்பதற்கு உதவியாக இருக்குமென்றும், ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Read more...

91 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற அதிபர் பதவி நீக்கம்! பெற்றோர் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் ???

புதிதாக பாடசாலைக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வ தற்காக 91 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்ட அதிபர் ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவரை பதவியி லிருந்து நீக்கியுள்ளோம் என என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எனினும் குறித்த அதிபரை குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் அரச சேவை ஆணைக்குழுவின் தீர்மானித்துக்கு அமை யவே நாம் பதவியிலிருந்து நீக்கியுள்ளோம், ஆனால் குறித்த அதிபரை பதவி நீக்கியதற்கு எதிராக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பெற்றோர் ஏன் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் எனவும், இது எந்த வகையில் நியாயமாகும்? எனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பினார்.

காலி பத்தேக கிறிஸ்து தேவ மகளிர் கல்லூரியின் 125 ஆவது வருட நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அடுத்த தவணைக்காக பாடசா லைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பதாக சகல அதிபர்கள் மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாடளாவிய ரீதியில் அதிபர்கள் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடனேயே தீர்வு காண முடியும் எனத் தெரிவித்த அமைச்சர், குற்றமிழைத்த அதிபர்களை வேலை நீக்கம் செய்தால் அதற் கெதிராகவும் வீதியில் இறங்க ஒரு சாரார் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகளுக்கான "மஹிந்தோதய வித்யாகார" திட்டத்துக்காக அரசாங்கம் 4000 கோடி ரூபாவை செலவிடவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், கல்வித்துறையின் ஒரு திட்டத்துக்காக இந்தளவு அதிக நிதியை செலவிடும் அரசாங்கம் இதுவெனவும், வரலாற்றில் முன்னொரு போதும் இது போன்று நிகழ்ந்ததில்லை எனவும், கல்வித்துறை மேம்பாட்டில் மிகுந்த அக்கறையுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்படுகின்றார் எனவும், அவர் தெரிவித்தார்.

Read more...

Saturday, July 6, 2013

எட்வார்ட் ஸ்னோவ்டென்: ஒரு நுழைவு அனுமதியில்லாத உலகம். Bill Van Auken

தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (NSA) ஒப்பந்தக்காரர் எட்வார்ட் ஸ்னோவ்டென், அமெரிக்க மக்களுக்கும் உலகிற்கும் மில்லியன் கணக்கானவர்களை இலக்கு வைத்த, இரகசியமானதும் அரசியலமைப்பை மீறியதுமான அமெரிக்க ஒற்றுத் திட்டங்களை தைரியமாக அம்பலப்படுத்தியவராவார். இப்பொழுது அவர் ஒரு அரசாங்கம் கூட அவருக்கு தஞ்சத்திற்கான ஜனநாயக உரிமையை வழங்க தயாராக இல்லாத நிலையைத்தான் காண்கிறார்.

அனைவருக்கும் பொருந்தும் மனித உரிமைகள் பிரகடனம் கூறுகிறது: “துன்புறுத்துதலில் இருந்து தப்பித்து மற்ற நாடுகளில் தஞ்சத்தை நாடவும் பெற்றுக்கொள்வதற்குமான உரிமை அனைவருக்கும் உண்டு.” இந்த பல நூற்றாண்டுக்கால உரிமை பல சர்வதேச உடன்படிக்கைளில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமின்றி இந்த உரிமைக்கான தகுதி ஸ்னோவ்டெனுக்கு உண்டு. அமெரிக்க அரசாங்கத்தின் அமெரிக்க மக்கள் மற்றும் உலகிற்கு எதிரான திட்டமிட்ட ஒற்றுக்கேட்டல் என்னும் உண்மைக் குற்றங்கள அம்பலப்படுத்திய “குற்றத்திற்காக” அவர் இரண்டு ஒற்றுக்கேட்டல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார். ஒருவேளை இவை மரண தண்டனையைக் கூட வழங்கும்.

செய்தி ஊடகம் மற்றும் அரசாங்கத்தின் அவரை தேசத் துரோகி, ஒற்றர் என்று முத்திரைகுத்தி இழிவுபடுத்திய பிரச்சாரத்தால் அவருக்கு அமெரிக்காவில் ஒரு நியாயமான விசாரணை என்பது இயலாததாகிவிட்டது. அவர் ஒப்படைக்கப்பட வேண்டும் என கோரும் அரசாங்கம், அரசாங்கத்திற்கு விரோதி எனக்கருதும் எவரையும் கூட்டாக மரணதண்டனைக்கு உட்படுத்தலாம் என்ற அதிகாரத்தையும் தானே எடுத்துக் கொண்டுள்ளது. இந்த “உரிமையை” குறைந்தப்பட்சம் நான்கு அமெரிக்க மக்களுக்கு எதிராக ஆளில்லா விமான டிரோன் தாக்குதல்களை இயக்கி கொன்றதின் மூலமும் செயல்படுத்தியுள்ளது. செய்தி ஊடகத்தைப் பொறுத்தவரை, ஸ்னோவ்டெனின் “குற்றங்கள்” எனப்படுபவற்றில் கவனத்தை காட்டுவதன் மூலம் அது முழு உள்நாட்டு, சர்வதேச ஒற்றுக்கேட்டலை வெளிப்படுத்தியதை வேண்டுமென்றே மறைத்துவிட்டது.

கடந்த 11நாட்களாக ஸ்னோவ்டென் மாஸ்கோ ஷெரிமெட்யேவோ விமான நிலையத்தில் விமானங்கள் மாற்றிச்செல்லும் பகுதியில் அகப்பட்டுள்ளார். ரஷ்யாவிற்குள்ளும் அனுமதிக்கப்படவில்லை, வேறு எந்த நாட்டிற்கும் செல்லவும் முடியவில்லை. அவருக்குத் தஞ்சம் கொடுக்கும் சாத்தியமுடையை நாடுகளுக்கு எதிராக ஒபாமா நிர்வாகம் ஒரு சர்வதேச அச்சுறுத்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் செயல்களைக் கண்டித்த ஸ்னோவ்டென் பின்வருமாறு கூறினார்: “இறுதியில் ஒபாமா நிர்வாகம் என்னைப் போன்ற, பிராட்லி மானிங் அல்லது தோமஸ் ட்ரேக் போன்ற தகவல்களை வெளியிடுவோரை கண்டு அஞ்சவில்லை, நாங்கள் நாடற்றவர்களாக, சிறைபிடிக்கப்பட்டு, சக்தியற்று உள்ளோம். இல்லை, ஒபாமா நிர்வாகம் உங்களைக் கண்டுதான் அஞ்சுகிறது. ஒரு அறிவார்ந்த, சீற்றம் மிகுந்த பொதுமக்கள் உறுதியளிப்பட்டுள்ள அரசியலமைப்பின் வழியிலான அரசாங்கத்தை நடத்த வேண்டும் எனக் கோருகின்றது—அது அப்படித்தான் இருக்க வேண்டும்.” இத்தகைய அச்சம் ஒன்றும் ஒபாமா நிர்வாகத்திற்கு தனித்துவமானதல்ல.

ஸ்னோவ்டெனின் செயல்கள் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடைய ஆதரவையும் நன்றியையும் பெற்றிருக்கையில், அவர்களை ஆளும் அரசாங்கங்கள் அப்படி நினைக்கவில்லை. அவை அனைத்தும் வாஷிங்டனின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து நடக்கின்றன. அமெரிக்க அரசாங்கத்தை போலவே, தொடர்ச்சியாக விரிவடையும் சமூக சமத்துவமின்மை சூழலில் அவை செல்வம் படைத்த ஆளும் வர்க்கங்களை பாதுகாக்கின்றன. வாஷிங்டனைப் போலவே அவையும் தங்கள் மக்களுக்கு எதிரான அவற்றின் சதித்திட்டங்கள் அம்பலபமாகும் என அஞ்சுகின்றன.

திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஸ்னோவ்டென் ரஷ்யாவில் அவர் “நம் அமெரிக்க பங்காளிகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்தை தவிர்த்தால்” இங்கு அனுமதிக்கப்பட முடியும் என அறிவித்தார். முன்னாள் KGB முகவர், அமெரிக்க அரசாங்கத்தை விவரிக்கத் தன்னிடம் இருந்து வெளிப்பட்ட சொற்கள் “வினோதமாக.... என்னுடைய உதடுகளில் இருந்து வந்தவை இருந்தன” என்பதை ஒப்புக் கொண்டார்.

மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே எத்தகைய பூகோள அரசியல் மோதல்கள் இருந்தாலும், இரு அரசாங்கங்களும் பேராசை பிடித்த முதலாளித்துவ தட்டினையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றதுடன், தத்தமது நாட்டு உழைக்கும் மக்களிடையே அராங்கத்தின் குற்றங்கள் அம்பலப்படுத்தப்படுவது குறித்த அச்சத்தில் ஐக்கியப்பட்டுத்தான் நிற்கின்றன.

புட்டினுடைய “சலுகையை” ஸ்னோடன் விரைவில் நிராகரித்தார். இது அவரை கிரெம்ளின் நிதியதன்னலக்குழுவின் அரசியல் கைதியாகச்செய்திருக்கும். அருடைய தஞ்ச விண்ணப்பத்தையும் அவர் திரும்ப பெற்றுக்கொண்டார். இவருடைய செயல் அமெரிக்க அரசாங்கத்தின் சட்டவிரோத செயற்பாடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் அவருடைய உறுதியை தெளிவாக்கின. அதேநேரத்தில் அவருக்கு எதிரான ஒற்றுக்கேட்டல் குற்றச்சாட்டுக்களில் இருக்கும் மோசடித்தனத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

தஞ்சம் நாடி 20 நாடுகளுக்கு ஸ்னோவ்டென் மனுக்களை அளித்திருந்தார்; அவற்றுள் பலவும் அவருடைய வேண்டுகோளை தொழில்நுட்பக் காரணம் காட்டி நிராகரித்துவிட்டன. மற்றவை டில்மா ரௌவ்செப்பின் பிரேசில் தொழிலாளர் கட்சியின் நிர்வாகம் போன்று அவை அதைப் பரிசீலினைகூடச் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளன. போலந்து அரசாங்கம் அப்பட்டமாக அதன் தஞ்சக் கொள்கையில் ஜனநாயக உரிமை கொடுப்பது “தேசிய நலன்களுக்கு” உதவும் என இருக்க வேண்டும் என உள்ளது எனக்கூறியுள்ளது. அக்கொள்கை எத்தகைய பொலிஸ் அரச சர்வாதிகாரத்தாலும் தழுவிக்கொள்ளப்படலாம்.

சிலவேளை மிக அசாதாரண எதிர்கொள்ளல் மேற்கு ஐரோப்பிய அரசாங்கங்களுடையதாக இருந்தது. இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அமெரிக்க ஒற்றுக்கேட்டல் பற்றிய வெளிப்பாடுகளை சீற்றத்துடனும், ஓர்வெலிய முறையில் உள்ளது எனவும் கண்டித்துள்ளன. மேலும் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை கைவிடுவதாக அச்சுறுத்தியுள்ளன. ஆயினும் எந்த நாடும் இக்குற்றங்களை அம்பலப்படுத்திய தனிநபரான ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் வழங்கத்தயாராக இல்லை.

அவை ஸ்னோவ்டெனை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பத் தயாராக உள்ளன. அங்கு அவர் இதே அரசாங்கங்கள் கண்டித்துள்ள குற்றங்களை செயல்படுத்தியுள்ள அரசாங்கத்தின் ஒரு இட்டுக்கட்டிய வழக்கை சந்திக்க வேண்டும். ஸ்னோவ்டெனுடைய தஞ்ச உரிமையை நிராகரிப்பதில் முக்கிய கருத்து, அவரிடத்தில் இருக்கும் இரகசியத் தகவல்கள் இதேபோன்ற குற்றங்களின் தத்தம் நாட்டு அரசாங்கமும் ஈடுபட்டுள்ளது குறித்த கவலை ஆகும்.

ஸ்னோவ்டென் இலத்தின் அமெரிக்க “இடது” எனப்படும் அரசாங்கங்களிடமும் தஞ்சம் நாடியுள்ளார். ஆனால் அவை எதுவும் அவருக்குக் கொடுக்கவில்லை. அவற்றின் தலைவர்கள் தங்கள் மக்களிடையே அவர் கொண்டுள்ள வெகுஜன ஆதரவிற்கு அழைப்புவிடுவதன் மூலம் அவருடைய தைரியத்தை பாராட்டியுள்ளனர். ஆனால் அவர் காட்டிய தைரியத்தில் நூறில் ஒரு பகுதியைக்கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து வரும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவர்கள் காட்டத் தயாராக இல்லை.

ஈக்வடோரின் ஜனாதிபதி ராபேல் கோரியா, ஸ்னோவ்டெனுக்குத் தஞ்சம் அளிக்கத் தயார் என்னும் தன் அரசாங்கத்தின் ஆரம்ப விருப்பத்தைக் காட்டியபின், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பிடெனிடம் இருந்து கடந்த வாரம் வந்த தனிப்பட்ட தொலைபேசி அழைப்பை ஏற்று, தன்னுடைய குரலை விரைவில் மாற்றிக் கொண்டார்.

லண்டனின் ஈக்வடோரிய தூதரகத்தின் முடிவான ஸ்னோவ்டெனுக்குப் பாதுகாப்பு அனுமதி ஒன்றை ஹாங்காங்கை விட்டு செல்வதற்கு அளித்ததை ஒரு “தவறு” என குறிப்பிட்டு, இதற்கு “பின்விளைவுகள்” இருக்கும் என்றார் அவர். தன்னுடைய அரசாங்கம், தஞ்சக் கோரிக்கையை முன்னாள் NSA ஒப்பந்தக்காரர் ஈக்வடோர் வந்தால் ஒழிய பரிசீலிக்கப்பட மாட்டாது என்றார். இது இயலாதது, ஏனெனில் அவருடைய அமெரிக்க கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுவிட்டதுடன், ஈக்வடோரிய அனுமதி தள்ளுபடியாகிவிட்டதுடன், வேறு எந்த பயண ஆவணங்களும் அவரிடத்தில் இல்லை.

ஸ்னோவ்டென் “உண்மையிலேயே வட அமெரிக்க சட்டங்களை மீறியிருக்கலாம்” என்று கூறி, “பிற நாடுகள், அவற்றின் சட்டங்களுக்குத் தான் பெரும் மதிப்பு கொடுப்பதாக” கொரேயா அறிவித்தார். பின் அவர் கூறினார்: “சட்டத்தை மீறும் எவரும் தன் பொறுப்பை உணர வேண்டும்.”

பின்னர் வெனிசூலாவின் ஜனாதிபதி நிக்கோலாஸ் மடூரோ மற்றும் பொலிவியாவின் ஏவோ மோராலேஸும் உள்ளனர். இவர்கள் இருவரும் இந்த வாரம் எரிவாயு உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டத்திற்காக மாஸ்கோவில் இருந்தனர். ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் அளிக்கும் வாய்ப்பு உள்ளது என இருவரும் கூறினாலும், இருவரில் ஒருவர் ஸ்னோவ்டெனை தங்கள் ஜனாதிபதி விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்றாலும், அவர்களில் ஒருவர் கூட அப்படிச் செய்யவில்லை.

வாஷிங்டனுடன் உறவுகளை “சீராக்கும் கொள்கையை” ஆரம்பித்துள்ள, வெனிசூலாவின் பில்லியனர்களுக்கு இணங்க நடக்க விரும்பும் மடூரோ, ஸ்னோவ்டென் “சர்வதேச பாதுகாப்பை” பெற வேண்டும் என்ற கருத்தைக் கூறினார்; ஆனால் அவருடைய அரசாங்கம் தஞ்சக் கோரிக்கையை பெற்றுள்ளது என்பதை மறுத்தார். விக்கிலீக்ஸோ அத்தகைய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது. ஸ்னோவ்டென் குறித்து இத்தகைய வெற்றுத்தன அறிக்கைகளைத்தான் மோரேல்ஸும் தெரிவித்தார். அரசியல் தஞ்சம் கோரும் கோரிக்கையை பெறவில்லை என்றும் கூறினார்.

எந்த அரசாங்கமும் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு அரசியல் தஞ்சம் கோரும் உரிமையை கொடுப்பதில் அக்கறை இல்லாத நிலையில், இக்கோரிக்கை உலகம் முழுவதும் நடைமுறையில் நிராகரிக்கப்படுகின்ற நிலையில், அவருடைய பாதுகாப்பு அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் எடுக்கப்பட வேண்டும். இதில் ஒவ்வொரு நாட்டிலும் அவருக்கு இப்பொழுது தஞ்சம் அளிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் உள்ளடங்கியிருக்க வேண்டும்.

ஸ்னோவ்டெனினதும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அதன் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக இலக்கு வைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ், இராணுவத்தினர் பிராட்லி மானிங் ஆகியோரின் பாதுகாப்பு, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கானதும் போர், சமூக சமத்துவமின்மை மற்றும் பொலிஸ்-அரச சர்வாதிகாரம் ஆகியவற்றின் மூலகாரணமான முதலாளித்துவ இலாபமுறைக்கு எதிரான உலகந்தழுவிய எதிர்ப்பின் ஆரம்பகட்டமாக இருக்கவேண்டும்.

Read more...

வட மாகாண சபைத் தேர்தல் அபேட்சகர்களாக கே.பி - தமிழினி இல்லை.... தயா மாஸ்டர் மட்டுமே!!

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் ஆயுத மற்றும் அரசியல் பிரிவில் அங்கம் வகித்த முக்கிய தலைவர்களை வட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்க சார்பில் அபேட்சகர்களாக நியமிக்கப் போவதில்லை என நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரனின் மறைவின் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் தலைவராகத்தெரிவுசெய்யப்பட்ட குமரன் பத்மநாதன் எனும் கே.பி, அரசியல் பிரிவின் தலைவி தமிழினி, முக்கிய ஆயுதப் பிரிவுகளின் தலைமைத்துவப் பதவி வகித்த கர்னல் நகுலன், கர்னல் ராம் ஆகியோரையும் அரசாங்க தரப்பில் அபேட்சகர்களாக நியமிக்க அரசாங்கம் எண்ணியிருப்பதாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்திகள் குறிப்பிட்டன.

ஆயினும் அவ்வாறு பெயர் குறிப்பிட்ட எவரையும் அரசாங்கம் தமது கட்சி சார்பில் அபேட்சகர்களாக நியமிக்கப் போவதில்லை என அரச தரப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். அரச பாதுகாப்பில் உள்ள இன்னும் சில எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் மேலும் புனருத்தாபனம் பெற வேண்டியுள்ளதாகவும், அவர்களில் சிலரை அரசியல் சார் விடயங்களில் ஈடுபடுத்துவதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லும் எனவும் அரச தரப்பிலுள்ள அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இதுபற்றி எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் ஊடகமொன்று வினவியபோது அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ‘நான் தேர்தலுக்கு ஒரு பகுதியினரை இணைத்துக் கொண்டு அரசாங்கம் சார்பாக போட்டியிட இருக்கின்ற போதும், எந்தவொரு புலி தலைவர்களும் இதில் இடம்பெறப் போவதில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது புனருத்தாபனம் பெற்று வெளியேறியுள்ள புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவி தமிழினி, பெரும்பாலும் தயா மாஸ்டரின் வெற்றிக்காக யாழில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார் எனவும் செய்திகள் கசிகின்றன.

அவ்வாறே, கே.பியும் அரசாங்கத்தின் வெற்றிக்காக தம்மாலான பங்களிப்புக்களை யாழில் ஆற்றவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.



(கலைமகன் பைரூஸ்)

Read more...

22 வயது பருவ மங்கையை மணமுடித்த 92 வயதுக் கிழவன்! (படங்கள் இணைப்பு)

ஈராக்கில் 92 வயது முதியவர் ஒருவர், தன்னை விட 70 வயது குறைவான இளம் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஈராக்கின் பாக்தாத் அருகே உள்ள சமாராவை ஒட்டியுள்ள குப்பான் கிராமத்தை சேர்ந்தவர் முசாலி முகம்மது அல்-முஜ்மாயி.

தற்போது 92 வயதை கடந்த முகம்மது, பூர்வீகமாகவிவசாய தொழில் செய்து வந்தார். இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி 58வது வயதில் காலமானார். இவருக்கு மொத்தம் 16 பிள்ளைகள். இதற்கிடையே தன்னை விட 70 வயது குறைவான இளம்பெண் ஒருவரை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவருடன் இவரது பேரன்கள் இருவருக்கும் நேற்று ஒரே மேடையில் திருமணம் நடந்ததுதான். சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த திருமண விழாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுதல் என்ற அனைத்து கேளிக்கை அம்சங்களுடனும் ஆடம்பரமாக அரங்கேறியது.

Read more...

தமிழர் கூட்டணியுடன் இணைந்து முதலமைச்சு பதவியை பெற்றிருக்க முடியும் ஆனால் அப்பதவி நிரந்தரமாக இருந்திருக்காது!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் சமூகத்தின் பாது காப்புக்காகவே அரசுடன் இணைந்து அரசியல் செய்கின்றது எனவும், அரசுடன் இணைந்து அரசியல் செய்வது எதிர்க் கட்சியில் இணைந்து அரசியல் செய்வதைவிடவும் சிரம மான காரியமாகும், என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரி வித்தார்.

கண்டி மடவளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர், இன்று பேரினவாதிகள் சிலரால் முஸ்லிம்கள் மீது பல்வேறு அழுத்தங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன எனவும், அதனை தந்திரோபாயமாகத்தான் அனுகவேண்டியுள்ளது எனவும், இதற்காக நான் அரசை விட்டு வெளியேவர முடியாது. அப்படி வெளியேறினால் அது பேரினவாதத்திற்கு உடந்தையாகிவிடும் எனவும், நான் கட்சியின் தலைவன் என்ற வகையில் கட்சியைப் பாதுகாப்பதுடன் உணர்வுபூர்வமாக சமூகம் தொடர்பான பிரச்சினைகளை அனுகவேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தமிழர் கூட்டணியுடன் இணைந்து முதலமைச்சு பதவியை பெற்றிருக்க முடியும். ஆனால் நான் அப்படிச் செய்திருந்தால் அப்பதவியின் ஆயுள் மிகக் குறுகி இருக்கும் எனவும், அத்துடன் கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களைப் பாதுகாப்பது பாரிய சவாலாக மாறி இருக்கும் எனவும், பேரினவாத செயற்பாடுகள் எதுவும் தற்செயல் நிகழ்வல்ல. அவை அனைத்தும் திட்டமிட்ட செயற்பாடாகும் என அவர் தெரிவித்தார்.

எனவே முஸ்லிம் சமூகத்திற்காகத்தான் நான் அரசுடன் இணைய வேண்டிவந்தது. அதேநேரம் கட்சியையும் பாதுகாக்கவேண்டி இருந்தது எனவும், வேண்டாத சம்சாரத்தை கைவிடலாம். பின்னர் எந்தப் பிள்ளை எந்தப் பக்கம் தாவும் என்பது தெரியாது எனவும், பேரினவாதத்தின் ஊடாக சிங்கள மக்களை ஓரணியில் திரட்டும் இக்கால செயற்பாட்டின் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து முற்றாக விலகி இருக்கமுடியாது என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

Read more...

ஒரு வார காலத்திற்குள் வடமாகாண சபை தேர்தல் திகதி அறிவிக்கப்படும்- மஹிந்த தேசப்பிரிய

வடமாகாண சபை தேர்தலுக்கான அங்கீகாரத்தை மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருக்கின்ற நிலையிலேயே தேர்தல் திகதி இன்னும் ஒரு வார காலத்திற்குள் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் நியாயபூர்வமாகவும், அதே நேரம் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்று நடைபெற வேண்டுமானால் அங்கு நிலைகொண்டுள்ள படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Read more...

ஐ.நா.சபை இளைஞர் விவகார தூதுவர் அஹமது அல் ஹெந்தாவி அமைச்சர் டலஸ் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களின் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான தூதுவர், அஹமது அல் ஹெந்தாவிற்கும், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும விற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று (05.7.2013) வெள்ளிக்கிழமை கொழும்பு நாராஹேன் பிட்டியில் அமைந்துள்ள இளைஞர் விவகாரமற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு சமாந்தரமாக, நவம்பர் 10ஆம் திகதி முதல் 14 திகதிவரை ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள சர்வதேச பொதுநலவாய இளைஞர் தலைமைத்துவ மாநாடு குறித்து கருத்து பரிமாரிக் கொள்வதே சந்திப்பின் பிரதான நோக்கமாக காணப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் 5ஆண்டு வேலைத் திட்டத்தில் உள்ள பிரதான நோக்கங்களான மகளிர் மற்றும் இளைஞர்களின் அபிவிருத்திக்காக செயல்படவுள்ள வேலைத் திட்டங்கள் குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும இங்கு கருத்தை வெளியிட்டுள்ளதோடு, இவ்வேலைத் திட்டங்களுக்காக ஒத்துழைப்பை வழங்கும் பிரதானநாடாக இலங்கைக்யும் இருக்கிறத என அஹமதுஹெந்தாவி தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு சமாந்தரமாக நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் தலைமைத்துவ மாநாட்டின் முழுமையான ஏற்பாடுகள், மற்றும் ஒத்துழைப்புகள் வழங்கும் நாடான இலங்கை, தற்போது பெற்றுக் கொடுக்கும் உதவிகள் குறித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்த அல் ஹெந்தாவி இதனை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்னுக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரை சந்திப்பை தொடர்ந்து அஹமது அல் ஹெந்தவி வெளிவிவகாரஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் சகல நாடுகளினதும் இலங்கைக்கான தூதுவர்களையும் சந்தித்தார்.

பொதுநலவாய இளைஞர் தலைமைத்துவ மாநாட்டை பற்றியும், ஐக்கிய நாடுகளின் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஒத்துழைப்பை பற்றியும், இதன் போது தனது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்

இளைஞர் விவகாரமற்றும் திறன்கள் அபிவிருத்திஅமைச்சின் செயலாளர் கே.ஏ.திலக்கரத்தின, சர்வதேச இளைஞர் விவகாரங்களுக்கான இலங்கைவதிவிட தூதுவர் ரிசாஹொசைனி ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Read more...

காதல் தகராறால் கொலை! இலங்கை தமிழர் இந்தியாவில் கைது!

திண்டுக்கல்லை சேர்ந்த செல்லபாண்டியனின் கொலை தொடர்பில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைதுசெய்யப் பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவன் காதல் தகராறால் கொலை செய்யப்பட்டுள்ள தாகவும், இக்கொலையுடன் தொடர்புடைய இலங்கை தமிழ் இளைஞனொருவர், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது, திண்டுக்கல்லை சேர்ந்தவர் பழனியப்பனின் மகன் செல்லபாண்டியன், (22 வயது)இவர், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பல்கழைக்கழகத்தில் மூன்றாமாண்டு படித்தார். நேற்று முன்தினம் மர்மமான முறையில், ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் முகாம் அருகே உள்ள கிணற்றில், இறந்து கிடந்தார். மலையம்பாளையம் பொலிஸார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்தனர்.

பொலிஸ் விசாரணையில், ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் விஜயன் மகன் கஜேந்திரன், 23. முகாமில் உள்ள, இவரது முறைப்பெண்ணை, செல்லபாண்டியன் காதலித்து வந்தார். இதனால், ஏற்பட்ட பிரச்னையில் செல்லப்பாண்டியனை, கஜேந்திரன் கொலை செய்து, கிணற்றில் வீசியது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த கஜேந்திரனை, மலையம்பாளையம் பொலிஸார் நேற்று கைது செய்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

லேக்ஹவுஸ் நிறுவனம் விஜேதாஸ ராஜபக்ஸவுக்கு 50 கோடி ரூபா இழப்பீடாக வழங்க வேண்டும் - நீதிமன்றம் மீள் உறுதி

ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஸவுக்கு சிலுமின பத்திரிகையில் பிரசுரமான செய்தியொன்றினால் அபகீர்த்தி ஏற்பட்டதாக தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கில் விஜேதாஸ ராஜபக்ஸவுக்கு அபகீர்த்தி ஏற்பட்டமைக்கு 50 கோடி ரூபா இழப்பீடு செலுத்துமாறு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு வழங்கிய உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று மீண்டும் உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, லேக்ஹவுஸ் நிறுவனம் சார்பாக எந்தவொரு அதிகாரியும் நீதிமன்றில் பிரசன்னமாகாத நிலையில் நீதவான் இழப்பீடு செலுத்த வேண்டுமென தீர்ப்பு வழங்கியிருந்தார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணை இடம்பெற்ற தினத்தில் தமது அதிகாரிகளால் நீதிமன்றில் பிரசன்னமாக முடியாமல் போனதால் தீர்ப்பினை மீள்பரிசீலனை செய்யுமாறும், ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உத்தரவை இடைநிறுத்துமாறும், லேக்ஹவுஸ் நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தது

ஆயினும் லேக்ஹவுஸ் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை நேற்று மீண்டும் உறுதிசெய்துள்ளார்

விஜேதாஸ ராஜபக்ஸ பிரதம நீதியரசர் ஆவதற்கான கனவுடன் வாழ்வதாக சிலுமின பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த கட்டுரையொன்றில் தமக்கு அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து 50 கோடி ரூபா இழப்பீடு கோரி ஜனாதிபதி சடட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஸ இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

கல்லறையிலிருந்த சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து பாலியல் துஷ்பிரயோகம்!

கல்லறையிலிருந்த சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது சிறுமியொருவரின் சடலம் புதைக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே கல்லறை யிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு இனந்தெரியாத நபர் களால் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகப்படுத்தப் பட்டுள்ளார்.

ஆறாம் வகுப்பில் கல்வி கற்கும் குறிப்பிட்ட சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை குஜ்ரன்வலா மாவட்டத்தில் கிலா டெடார் சிங் எனும் இடத்திலுள்ள தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது மின்சாரத்தால் தாக்குண்டு உயிரிழந்துள்ளார்.

அன்றைய தினம் மாலை சிறுமியின் உடலை நல்லடக்கம் செய்த அவரது உறவினர்கள், மறுநாள் அவரது கல்லறைக்கு விஜயம் செய்த போது சிறுமியின் சடலம் கல்லறைக்கு அருகில் அலங்கோலமான நிலையில் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து பிரதேசவாசிகள் சிறுமியின் சடலத்திற்கு நிந்தனை செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதிகளில் மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித் துள்ளதுடன் அத்துடன் மயானத்தில் புதைகுழி தோண்டுபவர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Read more...

ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் தனது 25 வருட ஊடக சேவையை இவ்வருடம் பூர்த்தி செய்கிறார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பி.எம்.எம். ஏ.காதர் அவர்களின் ஊடக சேவையைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு வியாழக்கிழமை (04.07.2013) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

அதிபர் ஏ.ஆர்.எம்.தௌபீக் பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஷர்ரப்,பாடசாலை அபிவிருத்தி சபையின் செயலாளர் என்.எம்.எம்.இஸ்மாயீல்,பழைய மாணவர் சங்கச் செயலாளரும், கல்முனை மாநகர சபையின் ஆணையாருமான ஜே.லியாகத் அலி ஆகியோர் இந்த கௌரவிப்பு நிகழ்வில் இணைந்து கொண்டார்கள்.

25 வருட ஊடக சேவையை இவ்வருடம் பூர்த்தி செய்யும் சஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் இதுவரை 300க்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், 200க்கு மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கையில் வெளியாகின்ற அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும், பல இணையத்தளங்களுக்கும் ஊடகவியலாளராகப் பணியாற்றுகின்றமை குறிப்பிடத் தக்கது.



Read more...

உம்மாவைக் கைவிடலாமா? முஸ்லிம் கட்சிகளிடம் வினா தொடுக்கிறார் எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்ட பின்னர் சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து அவை அரசியல் நடாத்திக் கொண்டிருக்கின்றன.

இக்கட்சிகளில் உள்ள நமது சகோதரர்கள் சகோதர முஸ்லிம் கட்சிகளைத் தவிர ஏனைய கட்சிகளுடன், பிறநாட்டுத் தூதுவர்களுடன், பிற அரசியல்வாதிகளுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தன்னளவிலான முயற்சி என்பதை இந்நடவடிக்கை கள் காட்டுகின்றனவே தவிர, அனைவரதும் நோக்கு சமூக நன்மை சார்ந்ததாகவே இருக்கிறது.

இன்று சமூகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை மனதில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியன ஒரு பொதுச் சந்திப்பை நடாத்த வேண்டுமென மேற்படி கட்சிகளின் தலைவர்களிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன்.

முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்து பெரும்பான்மை முஸ்லிம் பொதுஜனம் மிக அதிருப்திக்குள்ளாகியிருக்கிறது. இதை நமது அரசியல் தலைவர்கள் எந்த அளவில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு கட்சி அல்லது அரசியல்வாதியின் அரசியல் செயற்பாடுகளை அக்கட்சி அல்லது அரசியல்வாதி எதை எப்படிச் செய்தாலும் ஆதரிப்பவர்கள் வெகுசிலரேயாவார். கட்சி அல்லது அரசியல்வாதி கூட்டம் போட்டால் முன்னணியில் நிற்போரும் அவர்களேயாவர். ஆனால் அவர்களது வாக்குகள் மட்டும் கட்சிக்கும் அரசியல்வாதிக்கும் போதுமானவையல்ல.

எப்போதும் நிதானமாகச் சிந்திக்கும் பொது ஜனம் தூரத்தில் நின்று அல்லது விலகி நின்று இவற்றை அவதானித்து விட்டு ஒரு முடிவுக்கு வரும். அந்தப் பொது ஜனத்தின் வாக்குகளே வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கின்றன.

ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் வெவ்வேறு கட்சிகளைச் சோர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளாள் மீது வசை பாடுவதை, குற்றம் சுமத்துவதை நான் குறிப்பிடும் இந்தப் பொது ஜனம் விரும்புவதேயில்லை. அடிப்படையில் “நாம் முஸ்லிம்கள். நமது தனிப்பட்ட அரசியல் நலன்களை முன்னிட்டு சமூகத்தின் பெயரால் பொதுத் தளத்தில் மோதிக் கொள்ளக் கூடாது” என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது.

இந்தப் பொதுஜனம் இன்றைய சூழ்நிலையில் தன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதை இன்னமும் புரியாமல் நமது அரசியல் தலைமைகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனவோ என்ற ஒரு சந்தேகம் எழுகிறது. ஆனால் அதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.

அடுத்த தேர்தலில் அதன் விளைவுகள் என்ன என்பதை நாம் மிகத் தெளிவாகக் கண்டு கொள்ள முடியும்.

அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமானால் முஸ்லிம் பொது ஜனத்தின் மனக்குமுறலைத் தணிக்கும் வகையில் நமது முஸ்லிம் கட்சிகள் ஒரு மேசையில் அமர்ந்து பேச வேண்டும். கட்சிகள் தனியே இருக்கட்டும். ஆனால் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைப் பொறுத்த வரை எல்லோரும் ஒரே கருத்துடன்தான் இருக்கிறோம் என்பதும் உண்மை.

ஒரு தாய்க் கட்சியிலிருந்து நீங்கள் பிரிந்து சென்றிருந்தீர்கள். பிரிந்தபடியே இருங்கள். ஆனால் அரசியலை இப்போதைக்கு ஒன்று சேர்ந்து நடத்துங்கள். அதைத்தான் இன்று முஸ்லிம் பொது ஜனம் விரும்புகிறது. இந்தச் சந்திப்பை ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது நடத்துங்கள்.

சமூகத்தின் பெயரால் நீங்கள் ஒன்று சேரவில்லை என்றால் வழமையாகத் தேர்தல் காலங்களில் பயன்படுத்தப்படும் எல்லாச் சூக்குமங்களும் பலற்றுப் போகும் நிலையையே நான் பார்க்கிறேன்.

மற்றைய கட்சிகளுடன் பிரச்சிகைளைக் கலந்துரையாடும் உங்களுக்கு ஒரே தாயின் பிள்ளைகளான உங்கள் சகோதரர்களுடன் உட்கார்ந்து பேசுவதில் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.

மாறாக அது நன்மையையே கொண்டு வந்து தரும் சகோதரர்கள் தனித்தனி வீடுகளில் வாழலாம். ஆனால் “உம்மா”வைக் கைவிடலாமா?

Read more...

சந்திரிக்கா மெடத்துடன் சேர்ந்து அரசியல் நடாத்துவேன்....! நான் நினைப்பதையே‘மெடமும் நினைக்கிறார்! – பொன்சேக்கா

தங்கள் அரசியல் எதிர்பார்க்கைகள் போன்றே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமரத்துங்கவினதும் அரசியல் எதிர்பார்க்கைகள் உள்ளன. அதனால் அவருடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணப்பாடு உள்ளது என முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக்க் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.

தற்போது அதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது அவர் தெரிவித்திருக்கிறார்.

சந்திரிக்கா மெடத்தின் ஆட்கள் எங்களுடன் இதுபற்றிக் கதைத்தார்கள். நாங்கள் சந்திரிக்கா அம்மையாருடன் சேர்ந்து அரசியல் செய்வதற்குப் பின்வாங்குவதில்லை. ஏன் என்றால் சந்திரிக்காவின் அரசியல் காலத்துக் குறிக்கோள்களில் பெரும்பாலானவை எங்கள் கட்சியின் குறிக்கோளுடன் ஒத்துநிற்கின்றன. நாட்டை அழிப்பவர்கள் யாவர், எங்களைப் பீடித்துள்ள புற்றுநோய் ஏது என்பதை நாங்கள் எல்லோரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம். சந்திரிக்கா அம்மையாரும் நாங்கள் சிந்திப்பது போலவே சிந்திக்கின்றார். அதனால் நாங்கள் எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்து பணிபுரிவோம்...’ என்றும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

கட்டார் நாட்டைச் சேர்ந்தவரின் கடனட்டையிலிருந்து 3 கோடிக்கும் மேற்பட்ட பணத்தை திருடிய இலங்கையர்! பொலிஸார் வலை விரிப்பு

கட்டார் நாட்டைச் சேர்ந்த எஸ். எச். சுல்தான் ஜெஸ்மின் அல்ஹானி என்பவருக்கு விநியோகிக்கப்பட்ட கடனட்டை யொன்றிலுள்ள தரவுகளை பயன்படுத்தி மூன்று கோடியே 28 லட்சத்து 71,000 ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இலங்கையிலுள்ள ஹட்டன் நஷனல் வங்கியின் ஏ. ரி. எம். இயந்திரங்களினூடாக இவர் இந்த பண மோச டியை செய்து வந்துள்ளார். இலங்கையிலுள்ள ஏ. ரி. எம். இயந்திரங்கள் மூலம் பணம் பெறும் இலங்கையரின் புகைப்படத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

படங்களில் காணப்படுபவர்கள் தொடரில் தகவல் தெரிந்திருப்பின் உடனடியாக 011-2422176 அல்லது 011- 2326670 அல்லது 011232041-145 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறியத் தருமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Read more...

நல்ல ஆரோக்கியமான குழந்தை வேண்டுமா?

ஒரு பெண் முழுமை பெறுவது தாயானப் பின் தான். உங்களுக்குள் ஒரு உயிர் வாழும் போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் கர்ப்பக்காலம் மிகவும் சந்தோஷமாகவும் மறக்க முடியாதவையாகவும் இருக்கும்.

மேலும் பிறக்க போகும் தன் குழந்தை சிறந்த குழந்தையாக விளங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். ஏனெனில் சிறிய தவறு கூட, கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். எனவே பிறக்க போகும் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு பிறக்க சில சிறந்த வழிகளைக் பார்க்கலாம்.

• குழந்தையின் சந்தோஷம், தாயின் சந்தோஷத்தோடு நேரடி தொடர்பில் உள்ளது. அதனால் எப்பொழுதும் தாயானவள் சந்தோஷமாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தை வளத்தோடு இருக்கும்.

• மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுத்து மன அழுத்தம் தரும் விஷயங்களிடம் இருந்து தள்ளி இருக்கவும்.

• மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

• கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.

• தண்ணீர் முக்கியமான மற்றொரு ஊட்டச்சத்து. அதனுடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தோடு இருக்கவும்.

• கர்ப்ப காலத்தில் பல மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் நீங்களாகவே எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது. எப்போதும் ஒரு மருந்தை உட்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

• நடை போன்ற மெல்லிய உடற்பயிற்சி, குழந்தைக்கு நன்மையை விளைவிக்கும். ஆனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

Read more...

செயற்கை கல்லீரலை உருவாக்கிய ஜப்பானிய விஞ்ஞானிகள்!

ஜப்பானின் யோகோஹாமா பல்கலைகழக விஞ்ஞானிகள் டாகானோரி டகேபே, ஹிதேகி டானிகுச்சி ஆகியோர் இணைந்தே உலகில் முதன்முறையாக செயற்கையான முறையில் மூல உயிரணுவிலிருந்து கல்லீரலை உருவாக்கி சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இவர்கள் மூல உயிரணுவிலிருந்து வெற்றிகரமாக கல்லீரலை உருவாக்கியுள்ளனர்.

மனிதனின் உடலிலிருந்து எடுக்கப்படும் உயிரணுக்கள், பல்வேறு உடல் உறுப்புகளாக வளரக் கூடிய ஆற்றல் உள்ளது. எனவே இதை தகுந்த முறையில் தூண்டிவிடுவதன் மூலம், நமக்கு தேவைப்படும் உறுப்பை வளர்த்தெடுக்க முடியும்.

அதிலும் பெரும்பாலும் மூளைச்சாவு அடைந்தோரின் முக்கிய உடல் பாகங்கள் நல்ல நிலையில் இருந்தால், அவை தானமாகப் பெறப்பட்டு பிறருக்குப் பொருத்தப்படுவதுடன் இதே முறையில் கல்லீரலை தானமாகப் பெற நோயாளிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அத்துடன் ஒரே பிரிவை சேர்ந்த ரத்தம் மற்றும் திசு வகை உள்ளவர்களிடமிருந்து கல்லீரலை தானமாகப் பெற்று பொருத்தினாலும், சில சமயங்களில் ஒவ்வாமை ஏற்பட்டு நோயாளிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் உயிரணுவிலிருந்து கல்லீரலை செயற்கை முறையில் வளர்த்தெடுத்து, அதை அவருக்குப் பொருத்துவதால் எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Friday, July 5, 2013

தேர்தலுக்கு முன் யாழ்தேவியை கிளிநொச்சியில் எதிர்பார்க்கலாம்!

யாழ்தேவி தொடருந்து எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன் கிளிநொச்சி வரை தனது பயணத்தை மேற்கொள்ளும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த வருட இறுதிக்குள் யாழ்தேவி தொடருந்து தனது சேவைகளை யாழ்ப்பாணம் வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வட பகுதிக்கான தொடருந்து பாதையை அமைக்கும், பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த விடயம் பேசப்பட்டுள்ளது.

இந்த தொடருந்து பாதை நிர்மாணிக்கப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு மற்றும் வடக்கு இடையிலான உறவுகள் மேன்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் இதன் போது கூறியுள்ளார்

Read more...

யாழில் நன்னீரின் அளவு குறைந்து செல்வதை தடுப்பது எப்படி?

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 30 சதவீதமான நீரானது உப்புநீராக மாறியுள்ளது. இந்நிலையில், 4500 ஹெக்ரேயருக்கும் மேற்பட்ட விவசாய நிலமானது தற்போது உவர்த்தன்மையாக மாறியுள்ளதால் இந்நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாடானது 1000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இங்கு ஆறுகள் காணப்படாததால் ஆண்டுதோறும் கிடைக்கும் சராசரி 1270 மி.மீற்றர் மழைவீழ்ச்சியிலேயே யாழ்ப்பாணக் குடாநாடு தங்கியுள்ளது. இந்த மழைவீழ்ச்சியானது ஒக்ரோபர் தொடக்கம் டிசம்பர் வரையான காலப்பகுதியில் வடகீழ் பருவப்பெயர்ச்சியிலிருந்து பெறப்படும் 87 சதவீத மழைநீராகும்.

கடந்த காலத்தில், யாழ்குடாநாட்டில் வீட்டுத் தேவைகளுக்கான நீரானது கிணறுகளிலிருந்தும், விவசாயத்திற்கான நீரானது துலாமிதித்தல் மூலமும் பெறப்பட்டது. ஆனால் 1950 ஆம் ஆண்டுகளிலிருந்து கிணற்று நீரானது நீர்ப்பம்பிகள் மூலம் இறைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் 100,000 வரையான கிணறுகள் காணப்படுகின்றன.

கடல் மட்டத்திலிருந்து உருவாகும் நீரூற்றானது சுண்ணாம்பு அடுக்குப் பாறைகளின் ஊடாக சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தக் கூடிய நன்னீராக மாற்றப்படும் போது, இவ்வாறு நீர்ப்பம்பிகள் ஊடாக மேலதிக நீர் வெளிப்பாய்ச்சப்படுவதால் யாழ்குடாநாட்டு நீர் உப்புநீராக மாறும் ஆபத்து தென்படுகிறது.

தற்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் 30 சதவீதமான நீரானது உப்புநீராக மாறியுள்ளது. இந்நிலையில், 4500 ஹெக்ரேயருக்கும் மேற்பட்ட விவசாய நிலமானது தற்போது உவர்த்தன்மையாக மாறியுள்ளதாகவும், இதனால் இந்நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய வல்லுனர்களின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி கடல்நீரேரி, உப்பாறு கடல்நீரேரி ஆகிய இரு கடல்நீரேரிகள் காணப்படுகின்றன. இவை முறையே 77 மற்றும் 26 சதுரகிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்தக் கடல்நீரேரிகளில் தேங்கும் நீரானது கடலுக்கு வழிந்தோடுவதுடன், உவர்நீராகவும் காணப்பட்டன. ஆனால், வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை பெய்யும் போது கிடைக்கும் மழைநீர் இந்த இரு நீரேரிகளிலும் தேக்கி வைக்கப்படுகின்றன. இவ்விரு கடல்நீரேரிகளிலும் தேக்கி வைக்கப்படும் நீரானது யாழ் குடாநாடு பெறும் மழைநீரின் 50 சதவீதமாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப் பெறும் நன்னீரின் அளவை அதிகரிக்க வேண்டுமானால், நாங்கள் வேறு வழிகளை ஆராயவேண்டிய தேவையுள்ளது. குடாநாட்டின் தெற்கே உள்ள ஆனையிறவு கடல்நீரேரியானது 77 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையுடையது. இது வன்னிப் பெருநிலப்பரப்பின் 940 சதுரகிலோமீற்றர் பரப்புக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது. பிரதானமாக கனகராயன் ஆறு மற்றும் ஏனைய மூன்று சிறிய ஆறுகளிலிருந்து நீரைப் பெறுகிறது. வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் இந்த ஆறுகளுக்கு கிடைக்கப்பெறும் மேலதிக மழைநீரானது ஆனையிறவுக் கடல்நீரேரியைச் சென்றடைந்து, பின்னர் இந்நன்னீரானது ஆனையிறவுக் கடல்நீரேரியின் கிழக்குப் புறத்தேயுள்ள சுண்டிக்குளம் மற்றும் மேற்கு முனையிலுள்ள ஆனையிறவுப் பாலம் ஆகியவற்றின் ஊடாக கடலை அடைவதால், நன்னீரானது விரயமாக்கப்படுகிறது.

1960ஆம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தில், ஆனையிறவுக் கடல்நீரேரியிலிருந்து விரயமாகும் பருவப்பெயர்ச்சி மூலம் கிடைக்கப் பெறும் நன்னீரானது யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக 1960ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரங்கள்

• ஆனையிறவு கடல்நீரேரிக்கு மேற்கு முனையில் உள்ள ஆனையிறவு படகுத்துறையில் காணப்பட்ட வீதிகள் மற்றும் தொடருந்துப் பாலங்கள் என்பவற்றின் ஊடாக நன்னீர் வெளியேறி கடலுக்குள் செல்வதைத் தடுப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தியாக்கப்பட்டது.

• இதேபோன்று ஆனையிறவின் கிழக்கு முனையில் உள்ள சுண்டிக்குளத்தில் அணை ஒன்று கட்டப்பட்டு நன்னீர் கடலுக்குள் வெளியேறுவது தடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட்டு ஆனையிறவு கடல்நீரேரியில் சில ஆண்டுகள் நன்னீர் தேக்கி வைக்கப்பட்டது. ஆனால் கெட்டவாய்ப்பாக, இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்குகள் காரணமாக அணைக்கட்டு உடைக்கப்பட்டு, நன்னீர் கடலுடன் கலக்க நேரிட்டது.

• ஆனையிறவு கடல்நீரேரியிலிருந்து நன்னீரை தென் முனையிலுள்ள வடமராட்சி கடல்நீரேரிக்கு கொண்டு செல்வதற்காக ஆனையிறவின் வடமுனையிலிருந்து ‘முள்ளியான் தொடர் கால்வாய்’ என்கின்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இது 12 மீற்றர் அகலமும் 4 கி.மீற்றர் நீளமும் உடையதாகும். இந்தக் கால்வாய் அமைக்கும் திட்டத்தின் 80 சதவீதம் பூர்த்தியாக்கப்பட்ட நிலையில், இதற்கான நிதி கிடைக்காததால் இத்திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

• தொண்டமனாறு ஆற்றின் நீர்க் கொள்ளளவை அதிகரித்து அதன் ஊடாக வடமராட்சி கடல்நீரேரி நன்னீரைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு சில ஆண்டுகளின் பின்னர், மரத்தால் செய்யப்பட்ட அணைக்கட்டு உடைந்ததால், நன்னீர் கடலுடன் கலக்க வேண்டியேற்பட்டது.

• அரியாலைக் கடலுடன் கலக்கும் உப்பாறு கடல்நீரேரியில் வான்கதவுகளை உருவாக்குவதற்கான திட்டம் வரையப்பட்டது. இதன் மூலம், உப்பாறு கடல்நீரேரியில் நன்னீர் நீரேரி ஒன்றை உருவாக்க முடியும் எனக்கருதப்பட்டது. இந்நிலையில் வான்கதவுகள் உருவாக்கப்பட்ட போதிலும் இவற்றின் பலகைகள் அழிவடைந்ததால் உப்பாறு கடல்நீரேரியில் தேக்கி வைக்கப்பட்ட நன்னீர் மீண்டும் கடலுக்குள் கலந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணத் திட்டத்தை மேற்கொள்வதற்கு 1960களில் மேற்கூறப்பட்ட திட்டங்கள் பகுதியளவில் அமுல்படுத்தப்பட்டதை அறியமுடிகிறது. ஆனால் இத்திட்டத்தின் முக்கிய பகுதியான, ஆனையிறவுக் கடல்நீரேரியிலிருந்து வடமராட்சி நீரேரிக்கு நன்னீரை வழங்கக் கூடிய ‘முள்ளியான் தொடர் கால்வாய்த்’ திட்டம் முழுமையாகப் பூர்த்தியாக்கப்படவில்லை. குறுகிய ஆண்டுகள் மட்டும் வடமராட்சி மற்றும் உப்பாறு நீரேரிகள் நன்னீரைத் தேக்கிவைத்திருந்தன. இதன் மூலம் யாழ்குடாநாடு பல்வேறு நலன்களைப் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் பல உவர் நீர்க் கிணறுகளிலிருந்து நன்னீரைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

யாழ்ப்பாணத் திட்டத்தைப் பூர்த்தியாக்குவதன் மூலம், 13,000 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் யாழ்ப்பாண விவசாயிகள் நெல் பயிரிட்டிருக்க முடியும். தற்போது இந்தப் பகுதியில் காணப்படும் உவர்மண் மற்றும் ஏனைய காரணங்களால் 8000 ஹெக்ரேயரில் மட்டும் நெல் பயிரிடப்படுகிறது. வன்னிப் பெருநிலப்பரப்பில் நீர்ப்பாசனக் கால்வாய்கள் ஊடாக நீரைப் பெற்று அறுவடை செய்வதைப் போலல்லாது, யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேற்கொள்ளப்படும் நெற்பயிர்ச் செய்கையானது முற்றிலும் மழைநீரை நம்பியே மேற்கொள்ளப்படுகிறது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் ஒரு ஏக்கர் பெறும் மழைநீரின் மூன்றின் ஒரு பகுதியை மட்டுமே யாழ்ப்பாணத்தில் ஒரு ஏக்கர் நிலம் பெறும் மழைநீராகும். வடமராட்சி மற்றும் உப்பாறு கடல்நீரேரிகள் நன்னீர் தேக்கி வைக்கும் நீரேரிகளாக மாற்றப்பட்டால், கிணறுகளின் நீர் மட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் மழைநீரில் தங்கியிராது யாழ்ப்பாண விவசாயிகள் நிலக்கீழ் நீரைப் பயன்படுத்தி நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியும்.

வடமராட்சி மற்றும் உப்பாறு கடல்நீரேரிகளை அண்டியுள்ள 4400 ஹெக்ரேயர் நிலப்பரப்பானது உவர்த்தன்மையாகக் காணப்படுவதால் தற்போது இங்கு பயிர் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. இவ்வாறு நன்னீரைத் தேக்கி வைப்பதன் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் 30 சதவீதமான நீர்மட்டம் அதிகரிக்கும். இந்த நீரானது வீட்டுத் தேவைகளுக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் பயன்படுத்துவதற்கான சாதகம் காணப்படும்.

சுண்டிக்குளம் படகுத்துறை மற்றும் முள்ளியான் தொடர் கால்வாய் என்பனவற்றின் பணிகள் பூர்த்தியாக்கப்படுவது தொடர்பாக அரசாங்கம் இன்னமும் எவ்வித அறிவிப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. யாழ்ப்பாண-கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரணைமடுக்குளத்திலிருந்து நீரைப் பெற்று யாழ்ப்பாணத்திற்கு வழங்குவதே இத்திட்டமாகும். இரணைமடுவிலிருந்து நீரைப் பெற்று யாழ்ப்பாணத்திற்கு வழங்குவதால் இரணைமடு நீரை நம்பியிருக்கும் விவசாயிகள் பாதிப்படைவர். இதனால் 10 மில்லியன் டொலர்கள் செலவில் இரணைமடு அணைக்கட்டை இரண்டு அடி உயரம் வரை உயர்த்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2009 மற்றும் 2012 போன்று தாழ்வான மழைவீழ்ச்சி பெறப்படும் போது, இரணைமடுக் குளத்தின் கொள்ளளவானது வழமையை விடக் குறைவாகக் காணப்படும்.

இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டை இரண்டு அடியால் உயர்த்தி யாழ்ப்பாணத்திற்கு நீரை வழங்குவதற்கு 10 மில்லியன் டொலர்களை செலவிடுவதை விட, முன்னர் குறிப்பிட்ட யாழ்ப்பாணத் திட்டத்தை முழுமையாகப் பூர்த்தி செய்வது நலன் பயக்கும்.

-The Sunday Leader-

Read more...

கிழக்கு மாகாண கல்விதினைக்களத்தின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண கல்விதினைக்களம் ஏற்பாடு செய்த மீலாதுன் நபி விழா வைபவம் வெள்ளிகிழமை இன்று கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி சேர் ராசீக் பரீட் மண்டபத்தில் நடை பெற்றது.

மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணாமலை , மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள 17 வலயக் கல்வி அலுவலக மாணவர்கள் கலந்து கொண்டனர் .

காத்தான்குடி ஜாமிஉல் பலாஹ் அரபுக்கலாசாலையின் பீடாதிபதி மௌலானா மௌலவி அப்துல்லா ஹசரத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மூன்று மாவட்டத்திலும் உள்ள வளைய கல்விப்பணிப்பாளர்கள், பிரதி கல்விப் பணிப்பாளர்கள், உதவி கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இங்கு இடம் பெற்றதோடு போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு சின்னம் மற்றும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது .

நடை பெற்ற தமிழ் கட்டுரை போட்டியில் சம்மாந்துறை கோரக்கல் தமிழ் மகா விதியாலய மாணவி செல்வி செரோமி ஸ்ரேக்ஸ் முதலிடம் பெற்று பரிசு பெற்றுள்ளார். இஸ்லாமியர்களின் மீலாதுன் நபி விழாவில் இந்து சமய மாணவி வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியதாகும் .


தகவலும் படமும் -யு.எம்.இஸ்ஹாக்


Read more...

யாழ்.ஹாட்லிக் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீடு

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீட்டு நிகழ்வு நேற்று(04.07.2013) காலை 9.00 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தபால்மா அதிபர் கலந்து கொண்டு நினைவு முத்திரையை வெளியிட்டு வைத்தார்.

இந்த முத்திரை வெளியீட்டுக்குரிய அனுசரணையை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவனும் சட்டத்தரணியுமாகிய திரு. நா. விஷ்ணுகாந்தன் வழங்கினார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com