Thursday, July 4, 2013

அமெரிக்கா விடுத்த அறிக்கையில் சில விடயங்களை நீக்க வேண்டும்! இலங்கை வெளிவிவகார அமைச்சு.

இலங்கை வரும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு அமெரிக்கா வினால் விடுக்கப்பட்டிருக்கும் பயண எச்சரிக்கையில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக் கூடியதாகவுள்ள சில விடயங்கள் நீக்கப்பட அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சு அமெரிக்க அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்காவின் அரசியல் விவகாரங் களுக்குப் பொறுப்பான அதிகாரிக்கும் வெளிவிவகார அமைச்சின் மேலைத்தேய நாடுகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் தலைமையிலான அதிகாரி களுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இலங்கை அரசாங்கம் சார்பில் அமெ ரிக்காவிடம் மேற்கண்டவாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதென அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம கூறினார்.

அத்துடன் நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தக் கூடியவறான குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பிலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டி ருப்பதாகவும் அவர் கூறினார். அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங் களுக்குப் பொறுப்பான மேற்படி அதிகாரியுடனான சந்திப்பின்போது அமெரிக்க அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் பயண எச்சரிக்கை இலங்கையின் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமற்றதென விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கையில் தற்போது அமைதி நிலவுவதால் அமெரிக்க அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் மேற்படிச் செயன்முறையானது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதுடன் உல்லாச பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதெனவும் இதன்போது எடுத்துக் கூறப்பட்டது.

அத்துடன் மோதல்களையடுத்து நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டிருக்கும் பயண எச்சரிக்கையில் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சில அம்சங்கள் நீக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

சேனைகுடியிருப்பு கம்பகாமாட்சி அம்மன் ஆலய பால்குட பவனி ஊர்வலம்! படங்கள் இணைப்பு.

கல்முனை சேனைகுடியிருப்பு கம்பகாமாட்சி அம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகத்தின் இறுதி நாளான நேற்று பால்குட பவனி ஊர்வலம் இடம் பெற்றது. இக்கிராமத்தில் உள்ள கிட்டங்கி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி ஆரம்மானது.

ஆலய பூசகர் சிவசிறி உதயன் குருக்கள் தலைமையில் இடம் பெற்ற இந்த பால்குட பவனி ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.எம்.இஸ்ஹாக்









Read more...

ஜனாதிபதி உல்லாச வாழ்க்கை வாழ்கிறாரே தவிர அரசாட்சி செய்வதில்லை! ஆபிரிக்காவில் புதிய நண்பர்களைத் தேடுகிறது அரசு!- ஹேமகுமார

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்களே தவிர, அரசாட்சி செய்வதில்லை. இந்த அரசாங்கம் நாட்டை அதளபாதாளத்துக்குள் தள்ளிக் கொண்டே செல்கின்றது என மவ்பிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிடுகிறார்.

காலி உலுவிடிகேவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றும்போது அவர்,
’13 ஆவது திருத்தச் சட்டம் பிரச்சினை அரசாங்கத்துக்குள் பரந்திருக்கிறது. 13 திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி இந்தியப் பிரதிநிதிகளிடம் ‘தர்டீன் பிளஸ்’ என்று குறிப்பிட்ட கதை இன்று வெற்றுப் பாத்திரமாக மாறியுள்ளது. இந்த வெற்றுப் பாத்திரத்திலிருந்து இந்தியாவுக்கு ஏற்படும் அசௌகரியத்தை காப்பதற்காக விசேட பிரதிநிதியாக பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு சென்றாலும், அந்த ஆலவட்டக் கதைகளால் இந்தியாவை மகிழ்ச்சிப்படுத்த முடியாது. தர்டீன் பிளஸ் என்றுதான் இந்த அரசாங்கம் சர்வதேசத்திற்குச் சொன்னது. அது நடைமுறைப்படுத்தக் கூடிய பேச்சாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது பற்றிச் சொல்லியிருக்கக் கூடாது.

இன்று எங்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்ற அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஏனைய பிரபல நாடுகள் அனைத்தும் எங்களை விட்டும் தூர உள்ளன. ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கம் ஆபிரிக்க நாடுகளுக்குப் போய் புதிய நண்பர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. நான் இந்த மந்தபோசணை அரசாங்கத்தைப் பார்த்து கேட்கிறேன்... இந்த ஆபிரிக்க நாடுகளிலிருந்து எந்தப் பொருட்களை இறக்குமதி செய்யப் போகிறீர்கள்...?அந்த நாடுகளில் இலங்கையருக்குள்ள தொழில் வழங்கல்கள் எவை? என்றும் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

13ஆவது திருத்தம் எவ்வாறு உருவானது? எல்.ரி.ரி.ஈ தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரால் சுற்றி.......!!

ஜெனரல் கொப்பேகடுவ தலைமையில் இடம் பெற்ற வடமராட்சி இராணுவ நடவடிக்கையின் போது, எல்.ரி.ரி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டபோது, பிரபாகரனை பாதுகாக்குமாறு அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். இந்த அழுத்தம் காரணமாகவே பிரபாகரனை பாதுகாப்பதற்காக 13ஆவது திருத்தம் ராஜீவினால் ஏற்படுத்தப்பட்டது என ரோஹண விஜிதமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரோஹன விஜித முனி இதனைத் தெரிவித்தார்.

இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில். சிங்கள மக்கநின் வாக்குகளி னாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிக்கின்றார் எனவும், எனவே அதற்கு எதிராக செயற்பட முடியாதென்றும், 13 மூலம் இந்தியா எமது நாட்டை ஆக்கிரமித்தது இது தான் உண்மை எனவும், எனவே வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அன்று மாகாணசபை முறைமையை எதிர்த்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இன்று தேர்தல்களில் போட்டியிடுகின்றனர் எனவும், உறுப்பினர்களாக அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர் எனவும், கிழக்கு மாகாணத்தில் இன்று சிங்கள முதலமைச்சர் இல்லை முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தம் செய்து முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக இருக்கின்றார். இதன் மூலம் சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளினாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிப்பதோடு அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை யையும் கிடைத்தது. எனவே இந்தியாவின் பேச்சைக் கேட்க அவசியமும் இல்லை. வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய தேவையும் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஜே. ஆர் ஜயவர்த்தனவுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட பின்னர் ராஜீவுக்காக இடம்பெற்ற கடற்படை அணிவகுப்பு மரியாதையின்போது அவர் மீது தாக்குதல் நடத்தியவரே ரோஹண விஜிதமுனி என்பது குறிப்பிடத் தக்கது.

Read more...

Wednesday, July 3, 2013

துரித அபிவிருத்தியை நோக்கி “ரனவிரு அபரல்ஸ்”

திரு.டேவிட் மெரிக் என்பவரால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் 27.03.1996 ஆம் திகதி "ரனவிரு அபரல்ஸ்" என்ற இலங்கை இராணுவத்தின் ஆடைத் தொழிற்சாலை தற்போது நலன் விரும்பிகளின் ஒத்து ழைப்புடன் யுத்தத்தில் காயமடைந்த இலங்கை இராணுவ படைவீரர்களைக் கொண்டு நடாத்தப்படுகின்றமை குறிப்பிட த்தக்கது.

இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு பாதுகாப்பு நிதியத்திலிருந்து ஆரம்ப கட்டமாக நிதியுதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இலங்கை அபரல்ஸ் ஏற்றுமதி கழகம் உள்ளடங்கலாக தேசிய அபரல்ஸ் ஏற்றுமதி கழகம், சிங்கர் ஸ்ரீலங்கா லெப் டிரேடிங் லிமிட்டட் போன்றவை இவ் ஆடையகத்தை நிர்மாணிப்பதற்கு தமது அநுசரணையை வழங்கியிருந்தன. இத்தொழிற்சாலையில் சேவையாற்றுவதற்கு தேவையான பயிற்சிகளை ரைஸ்டார் அபரல்ஸ் வழங்கியிருந்தது. இத்தொழிற்சாலை 25 இயந்திரங்களுடனும் 90 படை வீர்ர்களுடனும் 4 அதிகாரிகளைக் கொண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இத்தொழிற்சாலையின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் இ.எம்.ஜி விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்கும்போது, இத்திட்டமானது இராணுவத்தினருக்கு உயர் தரத்தில் சீருடையை வழங்குவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதாகும் எனக்குறிப்பிட்டார்.

இத் தொழிற்சாலையின் நிர்வாக நடவடிக்கைகளானது தலைமையகப்பிரிவு, ஆய்வுப்பணியகப்பிரிவு மற்றும் உற்பத்திப் பிரிவு என மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது. இப்பிரிவுகளின் கீழ் படையினரைக் கொண்டு தொழிற்சாலையின் நிர்வாகத்தை இலகுவாக செய்யக்கூடியதாக இருக்கின்றது.

தற்போது இத் தொழிற்சாலையில் சுமார் 300 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன, 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேவையாற்றுகின்றனர். வினைத்திறனை கருதும்போது சொற்ப அளவு கழிவுத் துணிகளே வீசப்படுகிறது. அந்த அளவுக்கு உச்ச பயனையும் பெறக்கூடியவாறு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கமைய 2012 ஆம் ஆண்டு “நெசனல் கிறீன்” விருது, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தேசிய உறபத்திக்கான விருதுகளையும் இத் தொழிற்சாலையானது பெற்றுள்ளமை தொழிற்சாலையின் வளர்ச்சிக்கு முன்னுதாரணமாகும்.

தொழிற்சாலை அமைந்துள்ள வளாகமானது சூழல் மாசுறலை பெரிதும் தவிர்க்கும் வகையில் சுத்தமாகவும் பசுமையுடனும் காட்சியளிப்பது கண்கவர் காட்சியாகும்.

Read more...

வடக்கு எப்போது மாறும் சிங்கப்பூராக!

வட பகுதியில் கடந்த காலங்களில் நிலவிவந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நான்கு வருடங்களை கடந்துள்ள நிலையில் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் பல்வேறு வீதிகள், திணைக்களங்கள், என பல்வேறுஇடங்கள் துரித கதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஊடாக செல்லும் ஏ9 பிரதான வீதி உட்பட பல உள்ளூர் வீதிகளும் செப்பனிடப்பட்டு வருவதுடன் ஏ9 வீதி புணரமைப்பு செய்யப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அண்மையில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு பகுதியில் நடைபெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கானவர்களில் பெரும்பாலனவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டிருப்பதுடன். யாழ்ப்பாணத்தை இணைக்கும் மற்றுமொரு பிரதான வீதியான ஏ-32 வீதியின் அபிவிருத்திப் பணிகளும் நிறைவடையும் கட்டத்தை அடைந்துள்ளன.

மாவட்டைத்தையோ அல்லது மாகாணத்தையோ நாட்டையோ பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதானால் சிறந்த வீதிக்கட்டமைப்பு என்பது மிகவும் அவசியம் என்பதாலேயே வீதி அபிவிருத்தியில் கூடுதலாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன் வடபகுதிக்கான புகையிரதப்பாதை , காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம், பலாலி விமானத்தள விரிவாக்கம் என்பவற்றையும் மேற்கொண்டு வருகிறது.

யாழ்.மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாகாண வீதி அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேளை துரித கதியில் செய்யப்படும் வீதி அபிவிருத்தி பணிகளால் தென் பகுதி சந்தையில் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு கடும் கிராக்கி காணப்படுவதுடன் தொன்பகுதி விவசாய பொருட்களுக்க ஏனைய பொருட்களுக்கு வடபகுதியில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் அச்சுவேலி பகுதியில் கைத்தொழில் பேட்டையை மீண்டும் புனரமைப்படுவது போன்று ஏனைய மாவட்டங்களிலும் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க திட்டமிடப்பட்ட வருவதுடன் கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இது மடடுமல்லாது வடபகுதி மாவட்டங்களில் காணப்பட்ட குடிசை வீடுகள் கல்வீடுகளாக காட்சி தருவதுடன் அங்குள்ளவர்கள் அனைவரும் யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மிக வேகமாக மீண்டு வருகின்றதை காணக்கூடியதாக இருக்கிறது.

பற்றைக்காடுகளாக இருந்த வீதிகளின் இரு பகுதிகளும் தற்போது கட்டடங்களாக காணப்படுவதுடன் இந்த பகுதிகளில் முதலிட வெளிநாட்டாளர்கள் பலரும் முன்வந்துள்ளனர்.

இவ்வாறு துரித வேகமாகா வடக்கு அபிவிருததி அடைய வேண்டும் என்றால் அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபைகளும், மக்கள் அரசியல் கட்சிகள் என்பதில் இருந்து விடுபட்டு மாகாணத்தின் அபிவிருத்தியில் ஒன்று படுவார்கள் ஆனால் மிக வேகமாக வடமாகாணம் அபிவிருததி அடையும் என்பதில் ஜயமில்லை

Read more...

13 ஆவது திருத்தச் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டாம்! - வழக்குத் தாக்கல் செய்யப்போகிறது ஐ.தே.க!!

சட்டரீதியாக அன்றி, 13 ஆவது அரசியல் யாப்பை திருத்தி யமைக்கப்படவுள்ளமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாகாண சபை சட்டதிட்டங்களுக்கு ஏற்ப குறித்த காலத்தில் அந்த திட்டத்தை மாகாண சபையினால் வெளியிடப்படும் நூலுக்குள் உள்ளடங்காமை, விவாத்த்திற்கு எடுத்துக்கொள்ளாமை முதலான பல காரணங்களை முன்வைத்து உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(கேஎப்)

Read more...

வெற்றி யார் பக்கம்!

இலங்கையில் இளம்பிள்ளைவாதம் என்கின்ற போலியோ வைத் தடுப்பதில் வெற்றி எய்தப்பட்டுள்ளதை அவ்வப்போது கிடைக்கும் தகவல்களும் செய்திகளும் தெரிவிக்கின்றன.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரே தினத்தில் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் சிறாருக்கும் குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். சர்வதேச விமான நிலையங்களில்கூட இம் மருந்து வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காண்பது அரிதாகியிருக்கிறதே தவிர ஓரு காலையோ இரண்டு கால்களையுமோ இழந்தவர்களைக் காண்பதற்கு முடியுமாயிருக்கிறது. இதில் சிறுவர் முதற் கொண்டு முதியோர் வரை அடங்குகின்றனர். இவர்களது கால்களைக் கவர்ந்து சென்றவை நம் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாகப் புதைக்கப்பட்டிருக்கும் மிதி வெடிகள்.

போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட காலப் பிரிவில் மிதி வெடிகளை அகற்றுவதற்காக வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்த குழுவில் ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது.

அவர் தமது அனுவங்களை பகிர்கொண்டார் யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட'ஒவ்வொரு மிதி வெடியையும் அடையாளங் கண்டு அகற்றும் போதும் ஓர் உயிரைக் காப்பாற்றி விட் அல்லது ஒருவரின் ஊனத்தையும் அதனுடன் சம்பந்தப்பட்டவரது குடும்பத்தில் விளையும் துயரங்களை நான் தடுத்து விட்டேன் என்கிற ஆறுதலும் திருப்தியும் ஏற்படுகின்றது எனக்குறிப்பிட்டார்.

இலங்கையில் ஒரு காலத்தில் இந்திய அமைதிப்படை இருந்தது என்பது உங்களுக்கு தெரியும் விடுதலைப் புலிகளுடனான மோதலில் மிதி வெடி ஆபத்தை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. தங்களுக்குப் பரிச்சயம் அற்ற சூழலில் அவர்களில் பலர் கால்களை இழக்கும் நிலை ஏற்பட்ட போது அதைத் தவிர்ப்ப தற்காக ஒரு காரியம் செய்தார்கள்.

இந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக செம்மறி ஆடுகள் வந்திறங்கின. ஒவ்வொரு இராணுவக் குழுவும் ஒரு செம்மறிக் கூட்டத்தை முன்னால் நடக்க விட்டுப் பின்னால் நடந்தது. முன்னால் செல்லும் ஆடுகள் கண்ணிவெடிகளில் அகப்பட்டால் அவை அக்குழுவினரின் அன்றைய உணவாக மாறியது. ஆடுகள் பொதுவா கவே துரத்தினால் கலைந்து வெவ்வேறு பக்கங்களில் தறி கெட்டு ஓடுவன. ஒன்றைச் சொல்ல வேறு ஒன்றைச் செய்பவனை 'எட செம்மறி' என்று அழைப்பதும் சொன்னதை உடனடியாகப் புரிந்து கொள்ளாதவனை 'இவன் ஒரு செம்மறியடா' என்று திட்டுவதும் யாழ்ப்பாணத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

Read more...

அனர்த்த முகாமைத்துவத்தில் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்!

அனர்த்தங்களிலிருந்து பொதுச் சொத்துக்க்கள், பொதுமக்கள், இயற்கைச் சூழல் போன்றவற்றை பாதுகாப்பது அனர்த்த முகாமைத்துவத்தின் இலக்காகும் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தொரமடலாவ’ எனும் நிகழ்ச்சிக்கு அளித்தநேர்காணலில் தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவத்தில் பாதுகாப்பு படையினரின் கடமைகளும் பொறுப்புக்களும் என்பதே நிகழ்ச்சியின் மையக்கருத்தாகும்.

கடந்த காலங்களில் அணர்த்தமுகாமைத்துவ நிலையமானது பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸ் என்பவற்றுடன் இணைந்து முன்னேற்பாடுகளை செய்ததன் மூலம் பல அனர்த்தங்களை வெற்றிகரமாக கையாளக்குடியதாக இருந்தது என செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அனர்த்தங்களை கருதும்போது இயற்கை அனர்த்தம் மற்றும் மனிதனால் மேற்கொள்ளப்படும் அனர்த்தம் என இரண்டாக வகைப்படுத்தலாம் என்று செயலாளர் குறிப்பிட்டார். மக்கள் சதுப்பு நிலங்களில் சட்டவிரோத கட்டங்களை நிர்மாணிப்பதன் மூலமும் வடிகால்களிலும் மதகுகளிலும் குப்பைகளை தேங்கச் செய்வதன் முலமும் அனர்த்தம் உருவாகக்கூடிய சூழலை உருவாக்குகின்றனர் எனவே மக்கள் இவ்வாறான அசாதாரண சூழலை தவிர்க்கும் வகையில் செயற்படவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

கால்வாய்களையும் நீர் நிலைகளையும் சுத்தமாக வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் பசுமையாகவும் கண்ணைக்கவரும் இடங்களாக நகரங்கள் மாறும். நீர் நிலைகளிலிருந்து சட்டவிரோதமாக குடிசைகளுக்கு பள்ளத்தாக்குகளை ஏற்படுத்தி நீரை திருப்பி விடுதல், கால்வாய்களை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் அவர்கள் மாத்திரமின்றி சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினரும் ஆபத்துக்குள்ளாக்கப்படுகின்றனர்.

அனர்த்தங்களின்போது உயிர்களைப் பாதுகாப்பதற்காக அணர்த்த முகாமைத்துவமானது உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன என கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது செலாளர் இதனைக் குறிப்பிட்டார்.

Read more...

இலங்கையைச் சேர்ந்த மூவர் பிரித்தானியாவில் கைது! மூவரும் நாடுகடத்தப்படவுள்ளனர்!

இலங்கையைச் சேர்ந்த மூவர் பிரித்தானியா, சிட்டிங்பேண் பகுதியிலுள்ள கராஜ் ஒன்றில் வைத்து கைதுசெய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரகசியத் தகவலின் அடிப்படையில் சென். போல் வீதியிலுள்ள பிபீ பெற்றோல் நிலையத்திற்கு சென்ற அதிகாரிகள், அங்கிருந்தவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளனவாவெனக் கேட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த கராஜிலிருந்தவர்களிடம் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், கராஜிலிருந்த 22 மற்றும் 33 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மில்ரன் ரிஜிஸ் பகுதியிலுள்ள வீதியில் 30 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் தங்களது விஸா நிபந்தனைகளை மீறி பணியாற்றிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 3 பேரையும் பிரித்தானி யாவிலிருந்து வெளியேற்றும் முகமாக குடிவரவு தடுப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்

Read more...

கார்டிப் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய நபருக்கு பிடியாணை

இங்கிலாந்து கார்டிப் மைதானத்தில் இலங்கைக்கும், இந் தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடிய நபருக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட, திறந்த பிடியாணையை இன்று பிறப்பித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி கார்டிப் மைதானத்தில் நடந்தபோது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடிய லோகேஸ்வரன் மணிமாறன் என்பவரையே கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Read more...

எனது மகன் எதிர் கொண்டது சிறிய விடயமே-ஹெகலிய!!!

கிரிக்கெட் வீரரான எனது மகன் ரமித் ரம்புக்வெல, பிரித்தானிய விமான சேவைக்குரிய விமானத்தில் எதிர்கொண்டது ஒரு சின்ன விடயமாகும் என்று ரமித் ரம்புக்வெல்லவின் தந்தையும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்லதெரிவித்துள்ளார்.

இது ஒரு சிறிய விடயமாகுமென அந்த விமான சேவை நிறுவனமே கூறியிருப்பதாகவும். விமானத்தின் பின்னால் உள்ள கதவிற்கும் மலசல கூட கதவிற்கும் இடையில் இரண்டு மீற்றர் தூரம் கூட இல்லாத நிலையில் யாரும் இவ்வாறானதொரு குழப்பத்திற்கு உள்ளகலாம்.

இந்நிலையில் இலங்கை ஊடகங்கள், டெய்லி மெயிலில் வெளியான செய்திக்கு கடும் பாரத்தை கொடுத்துள்ளது, இதுதொடர்பில் எனது மகன் என்னிடம் ஏற்கனவே கூறியுள்ளார். விமானத்திலிருந்தவர்களிடம் மன்னிப்பு கோரியதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை முன்னெடுக்கின்ற சகல விசாரணைகளுக்கும் நான் ஆதரவளிப்பேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




Read more...

இந்திய மீனவர்கள் விடுதலை!!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்று கடந்த மே மாதம் 6ம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 25 பேரையும் இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த மாதம் மேற்படி வழக்கு யாழ்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபொழுது யாழ் மேல்நீதிமன்ற ஆணையாளர் விஸ்வநாதன் இந்த 25 பேரையும் ஜீலை நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகேந்திரராஜா 25 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களும் யாழ் மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்தொழில் திணைக்கள்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Read more...

கொலை காரனை கைது செய்க! பிரேதத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம்

இறக்குவானையில் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தவரின் பிரேதத்தை வீதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்யக்கோரி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை இறக்குவானை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்து கலைத்துள்ளனர்.

இறக்குவானை மாதம்பை இல 2 தோட்டத்தைச் சேர்ந்த எல்.ராமச்சந்திரன் (வயது 42) என்பவர் கடந்த சனிக்கிழமை மர்மமான முறையில் நீரோடையில் கிடந்தவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்யவில்லையென கோரியே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Read more...

3 புலிகளின் வேட்டைக்கு இரையான வனவிலங்கு ஊழியர்!

இத்தாலியில் மூடப்பட்ட வனவிலங்கு காப்பகத்தில் வைக்கபட்டிருந்த 3 புலிகள், உணவு அளிக்க வந்த ஊழியரை கடித்து குதறின. இதனால் பலத்த காயமடைந்த அந்த ஊழியர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இத்தாலியில் உள்ள பினெரோலோ வனவிலங்கு காப்பகம் இயங்கி வந்தது. பொருளாதார நெருக்கடியால் இந்த காப்பகம் கடந்த 2009 ஆம் ஆண்டு மூடப்பட்டது. எனினும், காப்பகத்தில் இருந்த 9 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை அதே இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த 5 ஆண்டுகளில் இங்குள்ள புலிகள் குட்டிகளை ஈன்று பல்கிப் பெருகியுள்ளன.

இந்நிலையில், இந்த காப்பகத்தில் பல வருடங்களாக பணியாற்றிய 72 வயது நபர் புலியின் கூண்டை திறந்து அதற்கு உணவு அளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கூண்டிலிருந்த 3 புலிகள் அவர் மீது பாய்ந்து கடித்து குதறின.

சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் அந்த முதியவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். முறையான பாதுகாப்பின்றி புலிகள் பராமரிக்கப்படுவது குறித்து ஏற்கனவே அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் (NSA) இணையக் கண்காணிப்புத் தொழில்நுட்பம்.By Kevin Reed

ஒரு பொலிஸ் அரசின் உள்கட்டமைப்பு

மேரிலாந்தில் போர்ட் மீயட்டிலுள்ள NSA அமைப்பின் தலைமையகம். கறுப்புக் கண்ணாடிக்குக் கீழ் தோல் போன்ற மறைப்புடைய, மெல்லிய ஆரஞ்சு வண்ண செம்புக் காப்புக் கவசம் அனைத்துச் சமிக்கை அல்லது குறிகைகளையும் உள்ளே வராமலும், வெளியே செல்ல முடியாமலும் தடுக்கின்றது.

இரகசிய NSA அமைப்பின் கண்காணிப்புச் செயற்பாடுகள் குறித்து எட்வார்ட் ஸ்னோவ்டெனுடைய ஆவண அம்பலப்படுத்தலானது தொலைபேசி அழைப்புக்களின் உள்ளடக்கங்களை பெறவும் (metadata-எளிதாக தரவுகளை அணுகவும் மற்றும் பயன்படுத்தவும் செய்வதற்கான தரவுகள்) மற்றும் அமெரிக்கக் குடிமக்களினதும் தனிநபர்களினதும் மற்றும் உலகம் முழுவதுமுள்ள நிறுவனங்கள், அரசாங்கங்களின் இணைய தள (Online) பரிமாற்றச் செயற்பாடுகளை பாரியளவில் சட்டவிரோதமாக சேகரித்தது குறித்தும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

ஜூன் 11ம் திகதி காங்கிரசிற்கு கொடுக்கப்பட்ட இரகசிய உளவுத் தகவலைத் தொடர்ந்து அமெரிக்க காங்கிரசின் கீழ்மன்றப் பிரதிநிதியான அம்மையார் லோரெட்டா சான்சேஸ் ஒரு C-Span பேட்டியில் ஸ்னோவ்டென் மறைவாகயிருந்தவைகளை வெளிப்படுத்தியுள்ளமையானது “பனிப்பாறையின் உச்சிமட்டும்தான்” என்றார். உண்மையில், இன்னும் பல வெளிப்படுத்தல்கள் வரவிருக்கையில், எட்வார்ட் ஸ்னோவ்டென் தைரியமாக பெருநிறுவன-இராணுவ-உளவுத்துறை அமைப்புகள் அமெரிக்காவிற்குள் செய்துவரும் ஒரு மிகப்பெரும் உளவுச் சதித் திட்டத்தைப் பற்றி பொதுமக்கள் அறிய நன்கு உதவியுள்ளார்.

ஸ்னோவ்டெனின் வெளிப்படுத்தல்களுக்கு முன்பு, NSA அமைப்பினுடைய சமிக்கை உளவுத்துறை அமைப்புக்கள் குறைந்த வரம்பைக் கொண்டிருந்தன. இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டவற்றுள் பெரும்பாலானவை ஜேம்ஸ் பாம்போர்ட் என்னும் செய்தியாளர், உளவுத்துறை பற்றிய வல்லுனர் மற்றும் NSA அமைப்புக் குறித்துப் பல நூல்களை எழுதியவரின் படைப்புக்களில் இருந்து எடுக்கப்பட்டவை; அவருடைய நூல்களில் The Shadow Factory: The Ultra-Secret NSA from 9/11 to the Eavesdropping on America (2008) என்பதும் அடங்கும்.

NSA அமைப்பின் முன்னாள் ஊழியர்கள் மற்றும் மற்றய தகவல் தெரிவிப்பவர்களுடனும் பாம்போர்ட் பரந்த பேட்டிகளை நடத்தியுள்ளார். மேலும், நாட்டின் மிகப் பெரிய உளவு மையத்தின் கட்டிடம் NSA ஆகும் (நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை அவதானமாகப் பேசவும்) என்ற தலைப்பில் வந்த கட்டுரையையும் அவர் மார்ச் 2012 ஆண்டு Wired என்னும் ஏட்டில் எழுதியுள்ளார்.

NSA அமைப்பு கண்காணிப்பின் பின்னணி

குளிர் யுத்தகால ஆரம்பத்தில், NSA அமைப்பானது “மறைமுக” நடவடிக்கைகளை உருவாக்கத் தொடங்கியது, மேலும் அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் தகவல்தொடர்புகளை இரகசியமாகக் கண்காணிக்க உள்கட்டமைப்புக்களை உருவாக்கத் தொடங்கியது. NSA அமைப்பின் கண்காணிப்புக்களில் உரிய ஆணை இல்லாத நடவடிக்கைகளில் முதலாவதான ஷாம்ரோக் திட்டம் – (Project Shamrock) தந்திச் செய்திகளை(telegram) நகல் எடுத்து அவற்றை அமெரிக்க சட்டத்தைச் செயல்படுத்தும் பிரிவிற்கும் இராணுவத்திற்கும் அனுப்பி வைப்பதாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தகவல் தொடர்புகள் குறித்து வேறுபாடுகளும் காட்டப்படவில்லை. ஒவ்வொரு தந்திச் செய்தியும் நுண்படச்சுருள்களில் (microfilm) நகல் எடுக்கப்பட்டது.

ஷாம்ரோக் திட்டத்திற்கு NSA அமைப்பிற்கும் தகவல்தொடர்புத் தொழில்துறைக்கும் இடையே ஒத்துழைப்பு தேவைப்பட்டது. Western Union, RCA, ITT போன்ற நிறுவனங்கள் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, ஒவ்வொரு இரவும் NSA அமைப்பிடம் தந்திச் செய்திகளை ஒப்படைத்தன. இத்திட்டம் 1975ல் அம்பலப்படுத்தப்பட்டு, பிராங்க் சேர்ச்சின் செனட் உளவுத்துறைக் குழுவில் விவாதத்திற்கு உட்பட்டு, 1978ல் FISA சட்டம் கொண்டுவரப்பட்டது.

போருக்குப் பின்னான காலப்பகுதியில் செயற்கைக்கோள், நுண்ணலைத் தகவல்தொடர்புகள் (microwave communications) வளர்ச்சி ஏற்பட்ட நிலையில், Echelon என அழைக்கப்பட்ட கண்காணிப்புத் திட்டம் தொலைத்தொடர்பு தரவுகள் (data communications) மற்றும் தொலைபேசிப் பேச்சு இவைகளை இடைமறிப்பது, சேமிப்பது மற்றும் பகுப்பாய்வது என்பதில் முன்னோடியாக விளங்கியது. முழு உலகத்தையும் கண்காணிப்பதற்கு, Echelon ஆனது ஐந்து கண்கள் (அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து) என அழைக்கப்பட்ட கூட்டுத் திட்டமாகியதுடன், இது அக்காலத்தின் மிக நவீன செயற்கைக்கோள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பம் என்பவற்றை பயன்படுத்தியது. இன்று உலகின் தொலைத்தொடர்பு பரிமாற்றத்தில் 1 சதவிகிதம் மட்டுமே செயற்கைக் கோள்கள் மூலம் நடைபெறுவதால், Echelon ஆனது சமிக்கை உளவுத்துறையின் ஒரு அம்சமாக உள்ளது என நம்பப்படுகிறது. இல்லாவிடின் இது இழை ஒளி கேபிள் வலையமைப்புகளுக்கு (fiber optic cable networks) அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்.

1990களில் இணையம், உலக வலைத் தளம் மற்றும் கைபேசிகள் என்பவைகள் உலகத் தகவல் தொடர்பு முறைகளாக மாறின. அவைகளின் வேகத்திற்கு ஏற்ப வைத்துக்கொள்ளும் வகையில், NSA அமைப்பானது அதன் மறைமுக நடவடிக்கைகளை இணையக் கண்காணிப்பிலான புதிய சகாப்த மாற்றத்திற்குச் சென்றது. ஆரம்பத்தில், நிக்சன் சகாப்தத்தில் எஞ்சியிருந்த உள்நாட்டு உளவுபார்த்தல் குறித்த கவலைகள் காரணமாக, வளர்ந்துவரும் உளவுத் தொழிற்துறையினால் அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில்நுட்பங்களின் பரந்த அனுகூலங்களைப் பயன்படுத்துவதில் NSA க்கு தடைகளை ஏற்படுத்தியது. ஆனால் செப்டம்பர் 11, 2001க்குப் பின், ஏராளமான நிதிகள் கண்காணிப்புத் திட்டங்களுக்குள் செலுத்தப்பட்டன, NSA அமைப்பின் திட்டங்களும், ஆரம்ப முயற்சிகளும் பல ஆண்டுகள் கவனிக்கப்படாமல் இருந்தவை பின்னர் எடுக்கப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன.

ஆளும் வர்க்கத்திற்குள் இருந்த அதே அரசியல் சக்திகள் 9/11 குறித்த வெறித்தனத்தை பயன்படுத்திக் கொண்டு நீண்டகாலமாக இருந்த போர் திட்டங்களை செயற்படுத்த உயர் தொழில்நுட்ப ஒட்டுக் கேட்டல் நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவிற்குள் விரைவில் நகர்ந்தன என்பதும் தெளிவானதாக இருக்கிறது.

அத்தகைய திட்டத்தில் ஒன்றுதான் புஷ் நிர்வாகத்தின் TIA எனப்பட்ட முழுத் தகவல் விழிப்புணர்வு (Total Information Awareness) திட்டமாகும். இதன் ஆரம்ப முயற்சியானது இரகசிய தகவல் விழிப்புணர்வு அலுவலகத்தால் (OIA) நடத்தப்பட்டது; இதற்கு முன்னாள் ஈரான்-கொன்ட்ரா சதித் திட்டம் தீட்டிய ஜோன் பாயின்டெக்ஸ்டர் பெப்ருவரி 2002ல் இருந்து தலைமை தாங்கினார். TIA ஆனது பாதுகாப்பு முன்னேறிய ஆய்வுத் திட்ட நிறுவனத்தின் துணை இயக்குனரான ஜே.பிரியன் ஷார்க்கியின் சிந்தனையிலிருந்து பிறந்ததாகும். அவர் வெகு சீக்கிரத்திலேயே ஒவ்வொருவரின் இலக்கமுறை சுவட்டையும் (digital trail) “முற்றிலும் உறிஞ்சும் வாய்ப்பை அறிந்துகொண்டார். ஷார்க்கியின் கருத்தாக்கம் புத்தக விற்பனைக் கடைக்குச் செல்லுதல், எரிபொருள் விற்பனை நிலையங்களுக்குச் செல்லுதல், தொலைப்பேசித் தரவுகள் மற்றும் இணையத் தேடல் செயற்பாடுகள் பெரும் திறனுடைய கணிப்பொறிகளால் கையாளப்படவும், மேலும் சிக்கல் வாய்ந்த நெறிப்பாட்டுமுறையானது (algorithm) கண்காணிப்பு செயல்முறையை தானியங்கியாகச் கையாளப்படவும் முடியும் என்பதாகும்.

2002 ஆம் ஆண்டின் இறுதியில், பாயின்டெக்டெரின் TIA/OIA நடவடிக்கை அம்பலப்படுத்தப்பட்டபின், இந்த NSA யின் சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படும் என்றும், காங்கிரஸ் அதற்கான நிதியை நிறுத்திவிடும் என்றும் பொதுமக்களுக்கு கூறப்பட்டது. ஆனால் மிகவும் மதிப்பு வாய்ந்தது கைவிடப்படுவதாக கருதப்பட்டு, இந்த செயற்பாடுகள் இன்னும் ஆழமான முறையில் இராணுவ உளவுத்துறை முகாம்களுக்கு நகர்த்தப்பட்டன, மேலும் பென்டகன் அதைத் தொடர்ந்து செயற்படுத்தியது.

ஒபாமா நிர்வாகம், NSA அமைப்பின் செயற்பாடுகளைக் குறைப்பதற்கு முற்றிலும் மாறாக, சட்டவிரோத உளவு நடவடிக்கைகளை அதிர்ச்சிதரும் அளவிற்கு விரிவாக்கியுள்ளது. ஆளில்லா, தொலைதூரக் கட்டுப்பாட்டு டிரோன்களால் “இலக்கு வைக்கப்பட்டு படுகொலைகளுக்கு” பயன்படுத்துவதுடன், தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்புக்களான அதி வேக ஒளியியல் தகவல்தொடர்புகள் (high-speed optical communications), கணிப்பொறிச் செயலாக்க திறன் (computer processing power), சேமிப்பகம் (storage), மறைக்குறியீட்டு நீக்கம் (decryption) ஆகியவைகள் உளவுமுறையை தீவிரப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.

பிரமாண்டமான அளவிலான தொழில்நுட்பங்கள் தற்பொழுதுள்ளதும் மற்றும் இன்னும் வலைத்தளத்தில் வரவிருக்கும் நிலையில், கையடக்க தொலைபேசி அல்லது இணையத் தொடர்புடைய ஒவ்வொரு நபரின் சுயவிபரங்களையும் இடைமறித்து, சேமித்து, வகைப்படுத்த திட்டமிட்டுள்ள நோக்கத்தை அமெரிக்க அரசாங்கம் கொண்டுள்ளது என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான், அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பகுதியினருடையது, கிட்டத்தட்ட 4.5 பில்லியன் மக்களுடைய தகவல் தொடர்புகளையாகும்.

NSA யின் கட்டமைப்பு

மேரிலாந்திலுள்ள போர்ட் மீயட்டில், நகரத்தின் அளவிற்கு இருக்கும் தலைமையகத்தில் மையப்படுத்தப்பட்டுள்ள NSA அமைப்பானது நாள் ஒன்றிற்கு பல பில்லியன் பரிமாறல் தகவல் தொடர்புகளைக் கண்காணிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பூகோள இணையம் முழுவதும் மற்றும் தொலைப்பேசி அழைப்புத் தரவுகளையும், அமெரிக்கா மற்றும் உலகெங்கும் முக்கியமான இடங்களின் வழியாக செல்லுபவற்றை, NSA அமைப்பானது மாபெரும் தொகுதி அளவிலான தகவல்களை உடனடியாகக் கையாள்கிறது.



மார்ச் 2012ல் Wired Magazine இல் வெளியிட்டுள்ளதன்படி, இது Utah தரவு மையத்தின் வடிவமைப்பு. இத்தகவல் மையத்தில் நான்கு 25,000 சதுர அடி சேவையக (server) அரங்குகளில் யோட்டாபைட்டுக்களை (YB) சேகரித்து வைக்கக்கூடியதாகும்.1 YB என்பது 1 டிரில்லியன் ரெராபைட்டுக்கள் ஆகும். 64GB மைக்ரோ எஸ்டி அட்டைகள் (மிக நெருக்கமான முறையில் தகவல்களைச் சேமித்துவைக்கும் வடிவத்தில் கிடைப்பவை) பயன்படுத்தப்பட்டால், ஒரு YB க்குத் தேவைப்படும் இடம் கிட்டத்தட்ட 2,500,000 கன மீட்டர்கள் அல்லது Giza இலுள்ள பெரிய பிரமிட்டின் கொள்ளவிற்கு ஒப்பாகும்.

தற்போதைய மறைக்குறியீடாக்கல் (encryption) தொழில்நுட்பத் திறனின் காரணமாக உதாரணத்திற்கு இன்று எவைகள் பயன்படுத்தப்பட முடியாதோ, அவைகள் எதிர்காலத்தில் மறைக்குறியீட்டு நீக்கம் (decryption) மற்றும் பகுப்பாய்விற்காகவும் சேமித்து, வகைப்படுத்தி வைக்கப்படுகிறது. இதைத்தவிர, அமெரிக்க உளவுத்துறையின் ஓர்வெலியன் உலகத்தில், உத்தியோகபூர்வமாக இன்று “அச்சுறுத்தல்” எனக் கருதப்படாதது, நாளை அச்சுறுத்தலாக மாறலாம், அதற்கான “சான்றுகள்” தயாராக இருக்கும் தரவுத் தளங்களில் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

நிர்வாகிகள், குறிமுறைகளை உடைப்பவர்கள் (code-breakers), இடைமறித்தலை இயக்குபவர்கள் (intercept operators), மறைக்குறியீட்டு மொழி வல்லுனர்கள் ( crypto-linguists), துறை வல்லுனர்கள் என NSA நிலையத்தில் 40,000 ஊழியர்கள் உள்ளனர். பெருகிய முறையில் NSA நிலையத்தின் உப ஒப்பந்த வேலைகள் தனியார் நிறுவனங்களான Booz Allen Hamilton (எட்வர்ட் ஸ்னோவ்டெனின் முன்னாள் நிறுவனம்), Raytheon, Lockheed Martin, Northrop Grumman மற்றும் SAIC (விஞ்ஞான பயன்பாட்டு சர்வதேச நிறுவனம்) போன்றவற்றிற்கு ஒப்பந்தமுறையில் வேலையை பிரித்துக் கொடுக்கின்றனர். NSA அமைப்பின் வரவு-செலவுத் திட்டம் இரகசியம் என்றாலும், அது 2008ல் 60 பில்லியன் டாலர்களாக இருந்தது என்றும் அதில் 70 சதவிகிதம் துணை ஒப்பந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்றும் பாம்போர்ட் மதிப்பிட்டுள்ளார்.

NSA அமைப்பானது பூமியைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையில் நகராதது போல் இயங்கும் நான்கு செயற்கைகோள் நிலையங்களை இயக்குகிறது; அவைகள் செயற்கைக்கோள்களில் இருந்து வானொலி அலைகளையும் கைபேசிக்கான நுண்ணலைத் தகவல்தொடர்புகளையும், வாக்கி டாக்கி சமிக்கைகளையும் கண்காணிக்கின்றன. அமெரிக்காவிற்குள் இந்த நிலையங்கள் பென்சில்வானியா, கலிபோர்னியா, கோலோரோடோ, டெக்சாஸ், ஜார்ஜியா, டெனசி, ஹவாய் ஆகிய இடங்களில் வலையமைப்புத் தளங்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் சில டெனிசியில் ஓல் ரிட்ஜிலுள்ள ஆய்வு நிலையங்கள் போன்றவை; அல்லது உலகின் பல பகுதிகளில் இருந்து வலையமைப்புக்குள் வரும் தகவல்தொடர்பு இடைமறித்தல்களை நிர்வகிக்கும் நிலையங்களாகும்.

உலகத் தொலைத்தொடர்பு இணைப்பு தொகுதியானது ஒன்றுடன் ஒன்று தங்கியிருக்கும் காரணத்தினால், “வெளிநாடு” எனும் குறிப்பான தகவலுக்கும் மாறாக “உள்நாடு” என்னும் தகவலுக்கும் இடையே வேறுபாடுகள் பொருளற்றவையாகப் போய்விட்டன—முன்பு FISA யின் இலக்ரோனிக் ஒட்டுக் கேட்டல் சட்டம் அதை ஒட்டித்தான் இயற்றப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வலையப்பில் கடக்கும் டிரில்லியன் கணக்கான தகவல் தொகுப்புக்களில், சர்வதேச மற்றும் அமெரிக்கா மட்டும் என்னும் தரவுகள் முற்றிலும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

Interception in gigabits - ஜிகாபிட்டுக்களில் இடைமறித்தலுக்கு உட்படுத்துதல்

இழை ஒளி கேபிள் (fiber optic cables) கடலடி அமைப்பானது சர்வதேச தொலைத் தொடர்புகளில் 99 சதவிகிதத்தை கொண்டவையாகும். அமெரிக்காவிற்கு வெளிநாட்டிலிருந்து தகவல்கள் வந்து இறங்குகின்ற அமெரிக்காவிலிருக்கும் 2 டஜன் கேபிள் நிலையங்களின் இழை வலையமைப்பில் ஒட்டுக்கேட்டல் வேலையை NSA அமைப்பானது செய்யவில்லை. மாறாக, அமைப்பானது நவீன “ஒளியியல் பிரிப்புக்களை (optical splitters)”, அல்லது தரவு இடைமறிப்பான்களை (data interceptors) முக்கிய வணிகப் பரிமாற்ற இடங்களில் நிறுவியுள்ளது; கடலோரப் பகுதிகளில் பரிமாற்றப்படும் இடங்களிலும் வைத்துள்ளது. இதனால் அது பிரமாண்டமான தகவல்களைச் சேகரிக்கிறது.

ஒரு AT&T ஊழியர், 2006ல் NSA அமைப்பின் தகவல்தொடர்புக் கட்டமைப்பின் ஒட்டுக் கேட்டலை அம்பலப்படுத்திய மார்க் கிளேனை பாம்போர்ட் பேட்டி கண்டார். 2003 ம் ஆண்டிலேயே அரசாங்கமானது AT&T யின் சான் பிரான்ஸிஸ்கோ நிலையத்தை நாருஸ் இடைமறித்தல் போக்குவரத்துப் பகுப்பாய்வு அமைப்புமுறை நிறுவப்பட்டதன் மூலம் கண்காணிப்பதை கிளேன் அறிந்திருந்தார்; அது ஒரு நவீன கணிப்பொறி அமைப்புமுறை அது இழை ஒளி இணைப்புக்களை (fiber optic lines) நேரடியாக ஒட்டுக் கேட்கும். கிளேன் கூறினார்: “இணையத்தில் செல்வது அனைத்தும் இங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள்ளும் செல்கிறது என்பதைப் பார்த்தேன். பௌதிகச் சாதனங்கள் அனைத்தையும் அதற்கு அளிக்கிறது. இதில் பெரும்பாலானவை உள்நாட்டுடையதாகும்.”




நாருஸ் வரைபடம்: இது எப்படி இடைமறித்தல் N அமைப்புமுறை என்பது ஒரு முப்பட்டகம் ஒளிக்கற்றையை சிதறலடையச் செய்கிறதோ அதேபோல் தொழில்நுட்ப பிரிப்பி இழை ஒளி போக்குவரத்துக் கற்றைகளை அப்படிச் செய்கிறது. இந்த அமைப்புமுறைகளை தொலைவிடங்களில் இருந்து இயக்குவதற்கு, NSA அமைப்பானது தொலைபேசி நேரடியிணைப்பு தொடர்புகளை ஒட்டுக் கேட்டு, தரவுத்தொடர் கதிர்கற்றையை இணையத் தளம், சொற்பொருள் ஆய்வியல் (semantic plane) தளம் மற்றும் பயன்பாட்டாளர் தளம் என மூன்று கூறுகளாகப் பிரிக்கிறது.

ஆரம்பத்தில் நாருஸானது அதிவேகத் தரவு வடிகட்டி முறைகளில் சிறப்புத் தேர்ச்சியைக் கொண்டிருந்தது; அவை மின்னஞ்சல், உரையாடல், காலண்டர்படி சந்தித்தல், வரைவுக் கோப்புத் தொகுப்புக்கள், முகவரி குறிப்பு புத்தகம் போன்றவற்றின் வேறுபாட்டை எடுத்துக்காட்டியது. இது தொலைத்தொடர்பு பயன்பாட்டுக் கட்டணத்தைக் கணக்கிடுவதற்காகும். பாம்போர்ட் விளக்குவது போல், “9/11 தாக்குதல்களைத் தொடர்ந்து, நாருஸ் அதன் அமைப்புமுறையை மாற்றியமைத்து, உலகெங்கிலும் இருக்கும் உளவு நிறுவனங்களுக்கு அதை விற்றது. அவை கட்டணக் கணக்கீடு என்பதற்குப் பதிலாக பாரிய கண்காணிப்பிற்குப் பயன்படுத்தின.

இன்று போயிங்கின் துணை நிறுவனம் என்னும் முறையில், புதிய தலைமுறை நாருஸ் அமைப்பானது “முழுமையான தொகுப்பு கண்காணிப்பை” நடத்தும் திறன் உடையது. அதாவது தரவுப் பாய்வில் வேறுபட்ட தளங்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளைக் கண்டறியும் திறனைக் கொண்டுள்ளது; ஒரு வினாடிக்கு 10 ஜிகாபைட் என்று அது கேபிள்கள் மூலம் கடக்கும்போது, அதாவது ஒளியின் வேகத்தில் செல்லும்போதும் கூட இணையப் போக்குவரத்தை பரிசோதிக்கிறது. முன்னாள் NSA அமைப்பின் உளவுத்துறை அதிகாரி வில்லியம் பின்னியின் கருத்துப்படி, NSA ஆனது இந்த அமைப்புகளின் “10 அல்லது 20” கருவிகளை நாடு முழுவதும் நிறுவியுள்ளது; அவைகள் தொலைதூர போர்ட் மீயட்டிலிருந்து இயங்க வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் பெற்றுக்கொள்ளும் 20 ரெராபைட்டு இடைமறித்தல் தரவுகளை என்ன செய்வது என்ற சவாலை NSA அமைப்பினால் எதிர்கொள்ளப்படுகிறது.

Storage in yottabytes - யோட்டாபைட்டுக்களில் சேமிப்பு

தற்பொழுது Utah தரவு மையம் என அழைக்கப்படும் ஒரு நிலையத்தை NSA அமைப்பு கட்டிவருகிறது; இது இந்த ஆண்டு செப்டம்பரில் இது திறக்கப்பட உள்ளது. சால்ட் லேக் நகரத்தில் இருந்து 20 மைல் தொலைவிலுள்ள பிளப்டேலில் இந்த 2 பில்லியன் டொலர்கள் நிர்மாணிப்புத் திட்டம் உலகத்திலேயே மிகப் பெரிய தகவல் சேகரிப்பு மைய அடிப்படையிலான -cloud-based data storage- சேமிப்பு நிலையமாகவும் NSA அமைப்பின் இணைய உளவு பார்த்தல் நடவடிக்கைகளுக்கும் மையமாக இது இருக்கும். ஒரு மில்லியன் சதுர அடிக்கும் மேலான இடத்தில், அதிஉயர் இரகசிய, தானே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வளாகமானது யோட்டாபைட்டுத் தரவுகளைச் சேமித்து வைக்கும் திறனுடைய சேவையகத்தை (server) கொண்டிருக்கும். ஒரு யோட்டபைட் (1024 bytes) என்பது 1 டிரில்லியன் ரெராபைட்டுக்கள் ஆகும்.



XT5 ஜாகுவர் சிறப்புக் கணிப்பொறியானது கிரேயாலும் NSA அமைப்பினாலும் தயாரிக்கப்பட்டது, உலகின் அதி வேக கணிப்பொறியாக 2009ல் இது உருவெடுத்தது, 1.75 பெடாப்ளாப்பு (petaflops) வேகத்தில் கையாளக்கூடியது. இந்த அமைப்புமுறையில் 200 அறைகள் உண்டு, 37,500 க்வாட் உள்ளக செயலகங்கள் (quad core processors) உள்ளன; 300 TB (ரெராபைட்) உடனடி சேமிப்பகம் (RAM), 10,000 TB அளவிலான தகவல் குறுவட்டுக்களை சேமித்து வைக்கலாம். இது அதி வேகமான மேசைக் கணிப்பொறியைவிட 100,000 மடங்கு வேகமானது.

யுடாவில் மறைவாகவுள்ள தரவுகளை தேடி செயலாக்கம் செய்யும் வசதியை (data-mining facility) NSA அமைப்பு கட்டமைத்து வருகிறது; இதில் நான்கு 25,000 சதுர அடி முழுமையான தரவு அரங்குங்களில் அதி வேக சேவையகங்களைக் கொண்டுள்ளன, இது தகவல்தொடர்பு போக்குவரத்தின் பெரும் வளர்ச்சியுடன் இணைந்து நிற்கும் கிறுக்கத்தன முயற்சியாகும். இணையத்தில் கொடுக்கப்படும் முழுத் தரவுகள் 2010ல் இருந்து 2015 க்குள் நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது, அதாவது ஆண்டு ஒன்றிற்குக் கிட்டத்தட்ட 1,000 எக்ஸாபைட்டுக்கள் வரை (1 மில்லியன் எக்சாபைட்டுக்களுக்கு சமம் ஒரு யோட்டாபைட்). யுடா தரவு மையத்தினுடைய இலக்கின் முக்கிய அம்சமானது “ஆழமாக வலைத் தளத்திலிருந்து”, அதாவது பாதுகாப்பான, தனிப்பட்ட, பொதுவாக உலவிப் பெறமுடியாத, பாதுகாக்கப்பட்ட கடவுச்சொல் தரவை ஊடுருவிச்சென்று சேகரிப்பதாகும்.

இந்த நிலையத்தில் 900,000 சதுர அடி தொழில்நுட்ப உதவி, நிர்வாக அலுவலகங்கள் இருக்கும். பாம்போர்டின் கருத்துப்படி, “இதனுடைய சேவையகங்கள் (servers) மூலமும், வழிப்படுத்திகள் (routers ) மூலம் பாய்ந்து வரும், மிக மிக ஆழமான தரவுத் தளங்களில் சேமிக்கப்படுபவைகளானது அனைத்து வடிவங்களிலான தொடர்புகளாக இருக்கும்; இவற்றில் தனியார் மின்னஞ்சல்கள், கையடக்க தொலைபேசி அழைப்புக்கள், கூகிள் தேடல்கள் மற்றும் அனைத்துவித தனிப்பட்டவரிற்குரிய தரவுச் சுவடுகளாக இருக்கும் அதாவது கார் நிறுத்துமிட ரசீதுகள், பயண செய்யும் பாதைகள், புத்தகக் கடைகளில் வாங்கியவை, இன்னும் டிஜிட்டல் முறையிலான “கிறுக்கல் குப்பைகள்”.

Analysis in petaflops - பெட்டாபிளாப்புகளில் பகுப்பாய்வு

ப்ளப்டேல் மையத்தின் நோக்கங்களில் ஒன்று, சில இடைமறித்தலுக்கு உட்பட்ட தரவுகளின் உள்ளடக்கத்தைப் வாசிக்க முடியாமலிருக்கும் நிலையான மறைக்குறியீட்டை (encryption) உடைக்கும் திறனுடைய தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வதாகும். NSA அமைப்பானது இத்தகைய மறைக்குறியீட்டாக்கலை முறியடிப்பதற்கு அதி வேகக் கணிப்பொறிகள் மற்றும் “மிருகத்தனமான சக்தியுடைய” ஒரு கூட்டுத் தாக்குதல்களை தகவல்கள் மீது நடத்தும் திட்டங்களைக் கொண்டுள்ளது, இதற்கு பாரிய எண்ணிக்கையான தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். பாம்போர்ட் கருத்துப்படி, “குறிப்பிட்ட இலக்கில் இருந்து அதிக தகவல்கள் வந்தால், கணிப்பொறிகள் அவற்றின் வடிவமைப்பை வெளிப்படுத்திக் கண்டுபிடிக்கும், பிளப்டேல் பல தகவல்களை பற்றி அறிந்து கொள்ளும்.”

டெனிசியில் ஓக் ரிட்ஜிலுள்ள NSA அமைப்பினுடைய ஆய்வு நிலையத்தில் உயர்மட்ட உற்பத்தித்திறன் கணிப்பொறி அமைப்புத் திட்டத்தின் பகுதியாக தெரிய வந்துள்ள கையாளுதல் செயலாக்க அம்சத்திற்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆரம்ப இலக்கானது இதுவரை அறியப்படாத சக்திவாய்ந்த கணிப்பொறியை கட்டமைத்தல், அதாவது ஒரு வினாடிக்கு ஒரு க்வாட்டிரில்லியன் (quadrillion -1015) செயற்பாடுகளுக்கும் அப்பால் நவீன கணிப்பொறி வேகத்திற்குள் (பெட்டாப்ளாப்- petaflop) கொண்டுவருதலாகும். ஒரு பிளாப் (flop) என்பது கணித மிதவைப் புள்ளி (mathematical floating-point) கணக்கீட்டின் ஒரு அளவீடாகும். அதாவது கணிப்பொறி வினாடிக்கு எத்தனை செயல்களை கையாளமுடியும் என்பதாகும். இன்று மிக அதிக வேக மேசைக் கணிப்பொறி 100 ஜிகாப்ளாப்புக்கள் (gigaflops) அல்லது NSA நிலையத்திலிருக்கும் இலக்கை விட நூறாயிரம் மடங்கு மெதுவான வேகத்தைத்தான் கொண்டுள்ளது.

கிரேயுடன் செயற்படுகையில் (சிறப்பு கணிப்பொறி நிறுவனத்தின் 250 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தப் பங்காளி நிறுவனம்தான் கிரே), NSA அமைப்பானது “ஜாகுவார்” என்ற குறியீட்டுப் பெயரில் ஒரு அமைப்புமுறையை உருவாக்கியது; இது பெட்டாப்ளாப் (petaflop) தடையை உடைத்து, உத்தியோகபூர்வமாக உலகின் அதி வேக கணிப்பொறியாக 2009ல் வந்தது. 2011ல் ஓக் ரிட்ஜ் நிலையத்தில் 2.33 பெட்டபிளாப்புக்களை அடைந்தது, ஆனால் வேகத்தில் ஜப்பானின் “K கணிப்பொறிக்குப்” பின் மூன்றாவதாகத்தான் இருந்தது; K கணிப்பொறி குறிப்பிடத்தக்க வகையில் 10.51 பெட்டாபிளாப்புக்கள் கடக்கும், சீனாவில் Tianhe-1A System 2.57 பெட்டாபிளாப்புக்களைக் கடக்கும். அடுத்த NSA வின் இலக்கு “டைட்டான்” என்ற குறியீட்டுப் பெயரை கொண்ட திட்டத்தை நிறைவேற்றுவது ஆகும்; இது 2013 ஐ ஒட்டி 10 முதல் 20 பெட்டாபிளாப்புக்களைக் கடக்கும்.

ஒரு பொலிஸ் அரச அச்சுறுத்தல்

அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியின் உள்ளடக்கத்திற்குள் பார்க்கையில், இத்தகைய முன்னோடியிலாத அளவுகளிலும் திறன்களிலும் NSA அமைப்பின் இலத்திரனியல் ஒட்டுக் கேட்டல் உளவு முறை அமெரிக்க மக்கள் மீது மேற்கொள்ளப்படுவதும், இன்னும் உலகில் பலர் மீதும் மேற்கொள்ளப்படுவதும், ஒரு அச்சுறுத்தும் பண்பைக் கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாகக் கூறப்படும் காரணங்களைக் காட்டிலும் மற்றவற்றிற்காகவே தயாரிக்கப்படுகின்றன என்பது தெளிவு.

தன் அதிகாரத்தின் உச்சக்கட்டத்தில், அடால்ப் ஹிட்லரின் நாஜி ஆட்சி தனக்கு விருப்பத்தகாதவரின் சுவடுகளை அறிய, அடையாளம் காண மிக நுட்பமான ஒப்புமை தகவல் முறையைப் (analog information methods) பயன்படுத்தியது. 1933ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மக்களின் இனரீதியான அடையாளத்தை நிறுவப் பயன்படுத்தப்பட்டது, அதையடுத்து IBM நிறுவனத்தால் கொடுக்கப்பட்டு, ஹெர்மன் ஹோல்லெரித் கண்டுபிடித்த கணிப்பொறித் துழை அட்டை அட்டவணைப் (punch card tabulation) சேவைகளின் உதவியால் இது பின்னர் செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின் நாஜி மரணவதைசிறை முகாம்கள் ஒவ்வொன்றிலும் மூன்று இலக்க ஹோலெரித் குறியீட்டு இலக்கமுறை, அலுவலகப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டது.

கையடக்கத் தொலைபேசி, கம்பியில்லா சாதனங்ககளின் வேகமான வளர்ச்சியும், அவைகள் உலக மக்களின் பெரும்பாலானவர்களின் வாழ்வில் நிறைந்திருப்பதும், அடக்குமுறை நோக்கங்களுக்காக ஒவ்வொரு தனிநபரின் ஒவ்வொரு நாள் செயற்பாடுகளை பற்றிய விபரங்களை சேகரிப்பது, அரசிற்குள் கெடுநோக்குடைய நடவடிக்கைகளுக்கு சாத்தியமாக இருக்கிறது.

Read more...

டெங்கை ஒழிப்போம்!!

சுகாதாரத்திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன

இன்று யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளில் டெங்கை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் பல்வேறு நடைபயணங்கள் மற்றும் சிரமதானப்பணிகள் நடைபெற்றுள்ளன.

Read more...

காத்தான்குடி, ஒள்ளிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயத்தின் அதிபர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு காத்தான்குடி, ஒள்ளிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயத்தின் அதிபர் மௌலவி ஏ.சி.எம்.றிபாய் மீது நேற்றிரவு இனம் தெரியாதோரிக் தாக்குதலுக்கு உள்ளான தாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி மௌலவி றிபாய் அவரது காங்கேயனோடை யிலுள்ள ஈரான் வீட்டுத்திட்ட வீட்டில் இருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற இனந்தெரியாத மூவர் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது.

வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள், மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் போத்தல்களால் தன்னை தாக்கியதாக பொலிஸ் முறைப்பாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

13 ல் ஏதாவது பிரச்சினை இருப்பின்,அதனை இலங்கை தீர்த்துக் கொள்ளவேண்டும்! இந்தியா அல்ல!

13 ஆவது அரசியலமைபு திருத்தமானது இந்தியா இலங்கைக்கு இடையிலான நல்லுறவுக்கு எவ்விதமான பங்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், அரசியல மைப்பின் 13 ஆவது திருத்தமானது தேசிய பிரச்சினை எனவும், இந்த பிரச்சினையை இலங்கையிலேயே தீர்க்கவேண்டும் என்பதுடன், 13 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் இந்தியா கூறுவதை கேட்க வேண்டியதில்லை என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தியாவுடன் எமக்கு நல்லுறவு இருக்கின்றது. இதுவொரு விவகாரமல்ல, 13 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் ஏதாவது பிரச்சினை இருக்குமாயின் அதனை இலங்கை தீர்த்துக் கொள்ளவேண்டுமே தவிர, இந்தியா அல்ல என்றும் தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டு தீர்வே காணப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Read more...

பாரத லக்ஷ்மன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு துமிந்த சில்வா தனக்குத் தானே சுட்டார் - சாட்சி

பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு துமிந்த சில்வா, தனக்குத் தானே சுட்டுக்கொண்டார் என பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் சுரங்க குமார சாட்சிய மளித்துள்ளார்.

"துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகில் கூடியிருந் தவர்கள் இவ்வாறு தெரிவிப்பதை தான் செவிமடுத்ததாக" அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை வழக்கு, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 பேருக்கு எதிராக நடைபெற்றுவரும் நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாரத லக்ஷ்மன் தரப்பினர் சார்பில் மன்றில் ஆஜரான வழக்கறிஞர், சந்தேகநபரான துமிந்த சில்வாவினால் மன்றில் ஆஜராகி பதிலளிக்க முடியுமா என்று கேட்டறியுமாறு' நீதவானிடம் குறிப்பிட்டார். இருப்பினும், அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்ட நிலையில், சாட்சியாளர் அழைக்கப்பட்டார்.

இதன்போது, சாட்சியாளராக மன்றில் ஆஜரான பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் சுரங்க குமார, தான் கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி முல்லேரியா ராஹல வித்தியாலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் கைத்துப்பாக்கிகள் மற்றும் ரீ – 56 ரக துப்பாக்கிகள் போன்றன பலரதும் கைகளில் இருந்தன. என தெரிவித்தார்.

தொடர்ந்து சாட்சியமளித்த அவர், அப்போது, அப்பகுதிக்கு டிபென்டர் ரக வாகனமொன்று வந்தது. அதில் துமிந்த சில்வாவும் இருந்தார். அப்போது, அப்பகுதியிலிருந்த பெண்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டதுஎன தெரிவித்தார்.

பாரத மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட துமிந்த சில்வா, தன்னைத் தானேயும் சுட்டுக்கொண்டார் என்று அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டதை நான் செவிமடுத்தேன் என தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட நீதவான், டிபென்டர் ரக வாகனத்தில் இருந்தவர்கள் தற்போது நீதிமன்றத்தில் உள்ளனரா? என்று வினவினார். அதற்கு பதிலளித்த சாட்சியாளர், "இல்லை" என தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Read more...

வடமாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் முன்னாள் புலிகள்!

எல்.ரி.ரி.ஈ யின் முன்னாள் பொறுப்பாளர்கள் சிலர் வடமாகாண சபைக்கான தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப் படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் நிதிப்பொறுப் பாளரும் ஆயுத கடத்தல்காரருமான "கே.பி" என்றழைக் கப்படும் செல்வராசா பத்மநாதன், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை மகளீர் பிரிவு முன்னாள் பொறுப்பாளரான "தமிழினி" என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமி மற்றும் "தயா மாஸ்டர்" என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி ஆகியோர் வடமாகாண சபைக்கான தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விண்ணப் பித்துள்ளனர்.

வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர்கள் விண்ணப்பித்துள்ள போதிலும் கட்சி வேட்பாளர் நியமனக்குழு முன்னிலையில் இவர்கள் தோன்றவேண்டியிருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

குறித்த மூவரையும் நீதிமன்றங்கள் எதுவும் குற்றவாளிகள் எனகாணவில்லை. எனவே, வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர்கள் செய்துள்ள விண்ணப்பங்களை கருத்தில் எடுக்காமல் விடுவதற்கான காரணமெதுவுமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துக்கொண்டு ஒரு கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த தமிழினி அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் திகதி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்!

இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம், இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும், இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது.

மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டு படுக்கக் கூடாது.

வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

அங்கவீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

பசு மாட்டை, 'கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

Read more...

மேல் மாகாண சபை அனுபவிக்கும் அதே அதிகாரங்களை வடக்கிற்கும் வழங்க வேண்டும்.

மேல் வடமேல் மத்திய மாகாண சபை அனுபவிக்கும் அதே அதிகாரங்களை வடக்கிற்கும் வழங்கப்படுவதில் எதுவித பிரச்சினையும் கிடையாது என நிர்மாண பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் அனுபவிக்காத அதிகாரத்தை விட கூடுதல் அதிகாரம் வடக்கிற்கு வழங்குவது பிரிவினைக்கே வித்திடும் எனவும் எனவே மேல் வடமேல் மத்திய மாகாணங்களின் அதிகார த்துக்குச் சமமான அதிகாரத்தை வடக்கில் அமுலாக்காமல் போனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிவினைவாத ஓட்டை களால் நுழைந்து செல்லும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரிவினைவாத ஓட்டைகளை மூடிவிடாவிட்டால் அவை பெரிதாகி சமாதானத்துக்கும் அச்சுறுத்தலாகலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கிருலப் பனையில் 'ஜனசெவன' வீடமைப்புத் திட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த வைபவத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Read more...

சீ. சீ. ரி. வி. கெமராவால் கள்வனுக்கு வந்த வினை!! எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்.

அக்கரைப்பற்று தனியார் வங்கியென்றின் ஊழியரின் மோட் டார் சைக்கிளை திருடிய நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த தனியார் வங்கிக்கு பின்னால் உள்ள வாகன தரிப்பிடத்தில் வங்கி ஊழியர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு கடமைக்கு சென்றுள்ளார்.

பகல் சாப்பாட்டுக்கு செல்வதற்காக பகல் 1.00 மணியளவில் வந்து மோட்டார் சைக்கிளை பார்த்த போது அதனை காணவில்லை. இதனையடுத்து குறித்த நபர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து வாகன தரிப்பிடத்தில் பொருத்தப் பட்டிருந்த சீ. சீ. ரி. வி. கெமராவில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடியவரை அடையாளம் கண்டு பொலிஸார் மறுநாள் வெள்ளிக்கிழமை அவரை கைது செய்தனர்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் பாகங்களும் பிரிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றியதையடுத்தே நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் அக்கரைப்பற்று பதுர் நகர் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் இவர் மெக்கானிக்காகவும் தொழில் புரிந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more...

நிரந்தர நியமனம் வழங்கப்படாத 27,000 பட்டதாரிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிரந்தர நியமனம்.

அரச துறையில் இணைத்துக்கொள்ளப்பட்ட நிரந்தர நியமனம் வழங்கப்படாத 27,000 பட்டதாரிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. அபேகோன் தெரிவித்தார்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பட்டதாரிகளுக்கு அந்தத்தப் பிரதேசத்திலேயே நிரந்தர நியமனப் பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்ப ட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் திட்டத்தில் பட்டதாரியொருவர் தகைமை அடிப்படையில் உள்வாங்கப்பட்டு பட்டதாரி பயிலுனர்களாக ஒருவருட பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு ஒரு வருட பயிற்சியை முடித்துக்கொண்டவர்களில் இதுவரை 20,000 க்கு மேற்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 27,000 பேருக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்தன மற்றும் அமைச்சின் செயலாளர் பீ. அபேகோன் ஆகியோரது கவனத்திற்கும் கொண்டுவந்தது. இது தொடர்பில் வினவியபோதே அமைச்சின் செயலாளர் பீ. அபேகோன் இவ்வாறு தெரிவித்தார்.

Read more...

பௌதீக மற்றும் ஆளணிப் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்க! மூதூரில் பேரணி (படங்கள் இணைப்பு)

மூதூர் தள வைத்தியசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளணிப் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுத்து நேற்று மூதூரில் பேரணியொன்று இடம்பெற்றது. ஆயிரத்திற்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்ட இப்பேரணி மூதூர் எரிபொருள் நிலைய சந்தியிலிருந்து ஆரம்பித்து தள வைத்தியசாலை வரை சென்றது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் வைத்திய சாலைக்குத் தேவையான ஆளணியினரை பெற்றுத்தருமாறும், போதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும், எழுதப்பட்ட வாசகங்களை தாங்கிய அட்டைகளை ஏந்திச் சென்றனர்.

மிகப்பழமையான இவ்வைத்தியசாலை 2006ஆம் ஆண்டு முதல் தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதும் போதிய வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றது. பேரணியை ஏற்பாடு செய்த வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.எம்.தௌபீக் கருத்து தெரிவித்தபோது,

இவ்வைத்தியசாலையானது தள வைத்தியசாலையாக இருப்பதனால் மூதூர் பிரதேச மக்கள் மட்டுமன்றி ஈச்சிலம்பற்று, சேருவில பிரதேசங்களையும் உள்ளடக்கி சுமார் ஒரு இலட்சம் பேர்களின் வைத்தியத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும், ஆனால் குறைந்தளவான ஆளணியினரும் பௌதீக வளப்பற்றாக்குறையும் மக்களுக்கு போதிய வைத்திய சேவையை வழங்குவதற்குத் பெரும் தடையாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

நாளொன்றுக்கு வெளி நோயாளர் பிரிவிற்கு மட்டும் 400 ற்கும் அதிகமான நோயாளர்கள் வருவதாகவும் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஓரிருவரே கடமையில் இருக்கின்றனர். இதனால் ஒரே நேரத்தில் பெருந்தொகையாக வந்து குவிகின்ற நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றர்.

சில காலமாக இயங்கி வந்த சத்திர சிகிச்சை கூடம் ஆளணி பற்றாக்குறையினால் இழுத்து மூடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவும் போதிய வசதிகள் இன்றியே இயங்கி வருகின்றது. கதிரியக்க கூடமும் முறையாக இயங்க முடியவில்லை. கிளினிக் வரும் நோயாளர்கள் அமர்ந்திருப்பதற்கு போதிய இடமில்லாது அங்குமிங்கும் குந்திக் கொண்டு இருக்கும் நிலையே இருக்கின்றது. வைத்தியர்களுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் முறையான விடுதி வசதிகூட இவ்வைத்தியசாலையில் இல்லை. அவர்கள் பெரும் தியாகத்தோடுதான் இங்கு தங்கியிருந்து சேவையாற்றுகின்றனர்.

எனவே, இவ்வைத்தியசாலையில் வைத்திய விடுதிகள், நோயாளர் விடுதிகள், மருந்துக் களஞ்சியம், கதிர் இயக்க கூடம், இரத்த வங்கி, ஆய்வு கூடம் முதலானவை முறையாக அமைக்கப்பட வேண்டும். பற்றாக்குறையாக இருந்து வருகின்ற அத்தியவசிய உபகரணங்களும் போதிய ஆளணியினரும் வழங்கப்படவேண்டும்.அப்போதுதான் இவ்வைத்தியசாலையினால் சிறந்த சேவையை வழங்கமுடியும் என்றார்.

பேரணி முடிவின் போது ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கென மகஜர் ஒன்று மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். ஹரீஸ், மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

(யு.எம்.இஸ்ஹாக்)





Read more...

மருதமுனை றகுமான் ஏ.ஜமீலின் "காற்றை அழைத்துச் சென்றவர்கள்" என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 06.07.2013.

மருதமுனை கவிஞர் றகுமான் ஏ.ஜமீல் எழுதிய "காற்றை அழைத்துச் சென்றவர்கள்" என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 06.07.2013 காலை 9.30 மணிக்கு மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற வுள்ளது.

மருதமுனை அல்-மதீனா வித்தியாலய அதிபரும், கவிஞருமான ஏ.ஆர்.நி.மத்துல்லாஹ் தலைமையில் நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதுடன் இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் (துல்சான்) முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் இணைப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதுடன் சிறப்பு அதிதிகளாக தென் கிழக்கு பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம்,பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்,ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(எம்.எம்.ஏ.காதர்)



Read more...

Tuesday, July 2, 2013

சமூகவலயத் தளங்கள் தொடர்பில் புதிய சட்டம்! தண்டனையாக 111,000 அமெரிக்க டொலர்கள்!

கிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலயத் தளங்களுடன் தொடர்புபட்ட சட்டத்தை குறித்த நாடு அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த சட்டத்தின் பிரகாரம் சமூகதளங்களில் அந்நாட்டு பாவனையாளர்கள் எவரேனும் மற்றையோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ, துன்புறுத்தும் வகையிலோ கருத்தை தெரிவிக்கவோ, கமெண்ட் தெரிவிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்தார் என முறைப்பாடொன்று கிடைக்கும் பட்சத்தில் நீதிபதி யொருவர் அது தொடர்பில் ஆராய்வார். சட்டத்தை மீறி குற்றம் இழைத்துள்ளார் என உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படும். தண்டனையாக 37,000 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமாக அறவிடப்படலாம் அல்லது 3 வருட சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.

இது மட்டுமன்றி கிரெனடாவில் சிறுவர் சம்பந்தப்பட்ட பாலியல் காணொளிகள் அல்லது படங்களை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராகவும் தண்டனை வழங்கும் விதத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்படி குற்றத்துக்கு 111,000 அமெரிக்க டொலர்கள் தண்டப் பணமாக விதிக்கப்படலாம் அல்லது 20 வருட சிறையோ வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெலவின் மகனே விமானத்தின் கதவை திறக்க முயன்றார்.

ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெலவின் மகனான ரமித் ரம்புக்கெலவே விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித் துள்ளது. அத்துடன் மதுபோதையில் விமானத்தில் குழப் பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்விசாரணையின் போது குறித்த வீரர் குற்றவாளி என கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரொருவர் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்றமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கிந்தியத்தீவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு மீண்டும் நாடு திரும்பிக்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் 'ஏ' பிரிவு வீரர் ஒருவர், தான் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முற்பட்ட நிலையில் பதற்றத்தை ஏற்படுத்தினார்.

இவரது நடவடிக்கை தொடர்பில் மேற்படி குழுவின் முகாமையாளரது அறிக்கையின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் முகாமையாளராக ஜயந்த செனவிரத்ன செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

Read more...

‘நான் குற்றம் செய்திருந்தால் என்னை விலக்கி விடுங்கள்’! - ஜயசுந்தர

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் போய்க்கொண்டி ருப்பதற்கு நிதியமைச்சின் செயலாளரான நான்தான் காரணம் என்று நினைத்தால் என்மீது அவதூறுகள் சொல்லாமல், என் பெயரைக் களங்கப்படுத்தாமல் என்னை அப்பதவியிலிருந்து விலக்கிவிடுங்கள் என திறைசேரியின் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தர குறிப்பிடுகிறார்.

நேற்று இரவு ‘தெரண 360’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்தாடும்போது அவர், ‘நிதியமைச்சின் செயலாளராக இருக்கக்கூடிய எனது கடமை என்னவென்றால், வரவு செலவுத் திட்டத்தின் மூலமும் அமைச்சரவையின் மூலமும் எடுக்கப்படுகின்ற முடிவுகளை நடைமுறைப்படுத்துவதாகும்’ எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று ஒருசிலர் குறிப்பிடுகின்ற கருத்தை நிராகரித்த அவர், பிழைத்தால் எனக்கும் சரியானால் புள்ளிகள் அவர்களுக்கும் இட்டுக்கொள்கின்ற நடமுறை உள்ள தன்மையையும் சுட்டிக் காட்டினார்.

உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்ற இந்நேரம், இலங்கையின் பொருளாதாரமானது மேலெழுந்துள்ளதாகவும் இவ்வாண்டின் முதற்பகுதியில் நாடு 6% பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் கண்டுள்ளது என்றும் அந்நிகழ்ச்சியில் அவர் சுட்டிக் காட்டினார்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com