Saturday, June 15, 2013

பிரபாகரன் மதிவதனிக்கு நிரந்தர அரச...............!

வடமாகாணசபைத் திணைக்களங்களில் தொண்டர்களாக கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழில் நேற்று நடைபெற்றறது இந்நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வின்போது பிரபாகரன் மதிவதனி என்ற பெயருடைய ஒருவருக்கும் நியமனம் வழங்கப்பட்டது.

குறித்த நபரை அழைத்தபோது அவரின் நியமனக் கடிதத்தில் உள்ள பெயரை அவதானித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதத்தில் உள்ள பெயரை பார்க்குமாறு ஆளுநரிடம் காட்டினார். குறித்த பெயரைப் பார்த்த ஆளுநர் மற்றும் யாழ். மேயர் யோகேஸ்வரி மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் தங்களுக்குள் சிரித்ததை அவதானிக்கக் கூடியாதாக இருந்தது.

Read more...

திரைப்பட இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் மரணம்

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் இன்று (15) சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீர் மாரப்டைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவருக்கு வயது 59.

இவர் , 1979-ம் ஆண்டு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆனார். இவரது முதல் படம் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. ‘நூறாவது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’ உட்பட 50 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘அமைதிப்படை’ வெற்றி பெற்று தமிழ்திரையுலகின் முக்கிய இயக்குனர் என்ற அந்தஸ்தை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

படையப்பா, முதல்வன், காதலுக்கு மரியாதை, ரெட் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் வெளியான ராஜராஜ சோழன் எம்.ஏ. என்ற படம் இவரது 50-வது படம். இதுவே கடைசிப் படமாகவும் அமைந்துவிட்டது.

நெசப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் அறிவிக்கின்றன.

Read more...

13 இற்காக அமைச்சர் பதவியைக் கைவிடுவது ‘சின்ன விடயம்’ என்கிறார் ராஜித்த

13 ஆவது திருத்தச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைச்சர் பதவியைக் கைவிடுவது என்பது சிறிய விடயம் என மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார்.

கொழும்பு அரச ஊடகத் திணைக்களத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும்போது அமைச்சர், 13 ஆவது திருத்தச் சட்டம் மாற்றியமைக்கப்படக் கூடாது என்றார்.

தனது உடம்பில் 4 வெடி குண்டுகளின் பகுதிகள் காணப்படுவதாகவும், அவற்றில் 3 ஜே.வி.பி. யினரின் வெடிகுண்டுகள் எனவும், அடுத்தது எல்.ரீ.ரீ. யினரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு எனவும் நினைவுறுத்திய அமைச்சர், அவ்வாறான நிலைக்குத் தான் முகம்கொடுத்த்தன் காரணம் அரசியலுக்காக தன்னை அர்ப்பணித்ததனாலேயே என்றும் குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தம் பற்றி மக்கள் விருப்பைப் பெறத் தேவையில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அது ஏற்கனவே பொருத்தமானதால்தான் வெற்றிபெற்றதென்றும் சுட்டிக் காட்டினார்.

13 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு தொடர்பில் நேற்று முன்தினம் (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் சூடு பிடித்திருந்ததுடன், அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ராஜித்த சேனாரத்ன, டியூ குணசேக்கர, ரவூப் ஹக்கீம் ஆகியோர் அங்கு 13 திருத்தச் சட்டம் மாற்றியமைக்கப்படக்கூடாது தீர்க்கமாக்க் கூறியிருப்பதுடன், அமைச்சர் விமல் வீரவன்ச அந்த சட்டத்தை மாற்றியமைக்காது வடக்கில் தேர்தல் நடாத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

அவுஸ்திரேலிய பிரதமரின் கணவர் ஓரினச் சேர்க்கையாளரா? பிரதமரிடம் நிருபர் கேள்வி!

அவுஸ்திரேலிய பிரதமராக உள்ள ஜுலியா கில்லர்ட்டிடம், தொலைக்காட்சி நிருபர் ஹோவர்ட் சாட்லர் என்பவர் நேருக்கு நேர் நேரடி ஒலிபரப்பு விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதன்போது அவுஸ்திரேலியப் பிரதமரின் சிகை அலங்கார நிபுணராக இருக்கின்ற மாத்திசன் என்பவர் அவுஸ்திரேலியப் பிரதமரின் நெருங்கிய நண்பராவார். இவர் ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், பிரதமர் ஜுலியா கில்லாட்டின் கணவருடன் அவுஸ்திரேலியப் பிரதமரின் நண்பருக்கு 7 ஆண்டுகள் ஓரின சேர்க்கை தொடர்பு உண்டு என கூறப்படுகிறது எனவும், இது உண்மைதானா என குறித்த நிருபர் அவுஸ்திரேலியப் பிரதமரிடம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதமர் ஜுலியா கில்லர்ட் ஒரு வழியாக சமாளித்து பதில் அளித்தார். இந்த கேள்வியை நேயர்களுக்காக நகைச்சுவையுடன் கேலியாக கேட்டதாக குறித்த நிருபர் விளக்கம் அளித்தார். எனினும், அவர் கேட்ட கேள்வி பிரதமர் ஜுலியா கில்லார்ட்டின் மதிப்புக்கு பொதுமக்களிடையே குந்தகம் விளைவிப்பதாக கருதப்படுகிறது எனவும், எனவே, அந்த தொலைக்காட்சி நிருபரை குறித்த தொலைக்காட்சி நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

வடக்கில் தேர்தல் நடாத்த கால அவகாசம் தேவை! - தேர்தல் திணைக்களம்

தேர்தல் நடத்துவதாக இருந்தால் தேர்தல்கள் திணைக்களம் தயாராகுவதற்கு போதுமான கால அவகாசம் தேவை என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஒன்றுக்கு தயாராகுவதற்கு 10 முதல் 12 கிழமைகள் வரை தேவைப்படும் என தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் விண்ணப்பப்படிவம், பெயர் பட்டியல் தயாரித்தல், தேர்தல் பிரசார நடவடிக்கை எதிர்புக்களை பதிவுசெய்தல் போன்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான காலக்கெடு அறிவிக்கப்படவேண்டும் என அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாண சபைகளில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தேர்தல் நடத்துவதற்கு இலங்கை சுதந்திரகட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதென அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இருப்பினும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விசேட சட்டமூலம் மற்றும் புதிய சட்ட திட்டங்களுக்கமைவாக தேர்தல் நடத்துவதாக இருந்தால் வடக்கில் செப்டெம்பர் மாதம் தேர்தலை நடத்துவதை உறுதிசெய்ய முடியாதென தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more...

பொதுநலவாய மாநாட்டின் மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்குள் வருகின்றதாம்!

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய வர்த்தக மாநாட்டின் மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாகவும், இது எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகுமெனவும், பொதுநலவாய வர்த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பீட்டர் கலஹான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இதுவரை 75 நாடுகள் தமது பங்களிப்பை உறுதிபடுத்தியிருப்பதுடன், ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சுற்றுலாத்துறை கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், விளையாட்டு, உட்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும், பீட்டர் கலஹான் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 12ம் திகதி முதல் 14ம் திகதி வரை கொழும்பு சின்னமன் க்ரேன் ஹோட்டலில் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாடு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more...

பிரபல கல்லூரியின் மாணவிகளை ஆசிரியைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர்! உடனடி விசாரணைகள் ஆரம்பம்.

மாத்தளையிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியொன்றின் மாணவிகளை ஆசிரியைகளே பாலியல் தொழிலில் ஈடுபட்டமை தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் சட்டத்தரணி அநோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரபல மகளிர் கல்லூரியின் ஆசிரியைகளே மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான நிலை மிகவும் கவலைக்குரியது என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு பாதுகாப்பை பெற்றுக்கொடுக்கவும் குற்றச்செயலில் ஈடுபட்ட ஆசிரியைகளுக்கு எதிராக கல்வியமைச்சுடன் இணைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read more...

Friday, June 14, 2013

புத்திசுவாதீனமற்ற அரசியல்வாதிகள் எம்மை விமர்சிக்கின்றனர்- சீறுகிறார் முருகேசு சந்திரகுமார்

மக்களுக்காக ஒன்றும் செய்யாத சில அரசியல்வாதிகள் மக்களின் வாழ்விற்குத்தேவையான அரசியலை முன்னெடுக்கும் எங்களை புத்திசுவாதீனமற்றநிலையில் கொச்சைத்தனமாக விமர்சித்து வருகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று (14) சிற்றூழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

கடந்த சில தினங்களுக்கு முன் 1110 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மாதத்தில் வடமாகாணத்தில் நீண்டகாலமாக வேலைவாய்ப்பற்றிருந்த 4800 பட்டதாரிப் பயிலுனர்களுக்கு வேலைவாய்பபு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களின் தொண்டர் ஆசிரியர்கள் 540 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. ஏனைய மாகாணங்களில் எம்மைவிட அதிகளவான வேலைவாய்ப்பற்றவர்கள் இருந்தபோதும் வடமாகாணத்தில் விசேட அடிப்படையில் கடந்த எட்டுமாத காலத்துக்குள் 9000 போருக்கு மேலதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக பெருமளவிலான வேலைவாய்ப்பற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றிவைக்க எமது அமைச்சர் (டக்ளஸ்) பெரும்பாடுபட்டு உழைத்துள்ளார். மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், இன்று அவரது அரசியல் நிலைப்பாட்டை சில புத்திசுவாதீனம் இல்லாதவர்கள் கொச்சைத்தனமாக விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு விமர்சித்துவருபவர்களால் இந்த 9000 பேரில் ஒருவருக்காவது வேலை வாய்ப்பினை பெற்றுத்தர முடிந்ததா? நிச்சயமாக இல்லை! இருப்பவர்களையும் வெளியே அனுப்பத்தான் அவர்களால் முடியும்..


எனவே, நீங்கள்தான் யோசிக்கவேண்டும் இதில் யார் உங்களுக்குத் தேவையானவர்கள் என்று!! நேற்றுவரை நீங்கள் வேலைவாய்ப்பற்று இருந்ததைப்போலவே, உங்களுக்குப் பின்னாலும் இன்னும் எத்தனையோபேர்கள் இருக்கின்றனர? அவர்களுக்கும் நல்வதொரு எதிர்காலத்தைப் பெற்றுத்தரவே நாம் உழைத்து வருகின்றோம் எனவே, நீங்களும் எம்மோடு கை கோர்தது இணையும் போதுதான் இந்தமாகாணம் வாழ்விலும் அபிவிருத்தியிலும் நல்லதொரு முன்னேற்றத்தினை பெற்றுக்கொள்ளமுடியும்! ஆகவே, இதற்காகவே நீங்கள் உளைக்கவேண்டும் என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

மனித உடலில் புதிய பகுதி கண்டுபிடிப்பு

மனித உடலிலே இதுவரை அறியப்படாதிருந்த பகுதி ஒன்றினை நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Harminder Dua என்று பெயரிடப்பட்டுள்ள இப்பகுதியானது மனிதக் கண்ணிலேயே காணப்படுகின்றது. அதாவது கண்களில் காணப்படும் அடுக்குகளில் ஒன்றாக அமைந்துள்ள இப்புதிய பகுதி கருவிழியில் முன்னர் அறியப்பட்ட 5 அடுக்குகளுடன் சேர்த்து ஆறாவது அடுக்காக (Layer) கருதப்படுகின்றது.

இப்புதிய கண்டுபிடிப்பானது கருவிழியில் கோளாறு உள்ளவர்கள் மற்றும் ஏனைய பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்குவதை எதிர்காலத்தில் இலகுவாக்கும் என்று நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more...

ஆரோக்கியமான குழந்தை உங்களுக்கு வேண்டுமா?

ஒரு பெண் முழுமை பெறுவது தாயானப் பின் தான். உங்களுக்குள் ஒரு உயிர் வாழும் போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் கர்ப்பக்காலம் மிகவும் சந்தோஷமாகவும் மறக்க முடியாதவையாகவும் இருக்கும்.

மேலும் பிறக்க போகும் தன் குழந்தை சிறந்த குழந்தையாக விளங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். ஏனெனில் சிறிய தவறு கூட, கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். எனவே பிறக்கப்போகும் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு பிறக்க சில சிறந்த வழிகளைக் பார்க்கலாம்.

• குழந்தையின் சந்தோஷம், தாயின் சந்தோஷத்தோடு நேரடி தொடர்பில் உள்ளது. அதனால் எப்பொழுதும் தாயானவள் சந்தோஷமாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தை வளத்தோடு இருக்கும்.

• மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுத்து மன அழுத்தம் தரும் விஷயங்களிடம் இருந்து தள்ளி இருக்கவும்.

• மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

• கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.

• தண்ணீர் முக்கியமான மற்றொரு ஊட்டச்சத்து. அதனுடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தோடு இருக்கவும்.

• கர்ப்ப காலத்தில் பல மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் நீங்களாகவே எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது. எப்போதும் ஒரு மருந்தை உட்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

• நடை போன்ற மெல்லிய உடற்பயிற்சி, குழந்தைக்கு நன்மையை விளைவிக்கும். ஆனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

Read more...

ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதில் சந்தேகம் உள்ளது: முகம்மட் முசம்மில்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஸ்ரபின் திடீர் மரணத்தின்பின் தலைமைத்துவத்தை மிக சூழ்ச்சியாக ரவுப் ஹக்கீம் கைப்பற்றியதாக தெரிவித்ததுடன் அஸ்ரபின் மரணத்திலும் ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் சந்தேகம் உள்ளதென இன்று (14.06.2013) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரபாகரனுடன் ரவுப் ஹக்கீம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாகவும் தமிழ்ச்செல்வன் கொலைக்கு இலங்கை பாராளுமன்றில் அனுதாபம் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர் ஏறாவூர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் முஸ்லிம்களை புலிகள் சுட்டுக் கொலை செய்யும் போது இந்த ஹக்கீம் எங்கு போனார் எனவும் கிழக்கில் முஸ்லிம்களது காணி சொத்துக்களை சூறையாடும்போது எங்கு போனார் என்றும் அவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.

ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவராக செயல்படுவதாகவும் அவர் கிழக்கை மீண்டும் வடக்குடன் இணைக்கும் வேலையே அடுத்த வருட முற்பகுதியில் செய்வார் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முசம்மில் தெரிவித்தார்.

Read more...

‍கூட்டுக்குள்ளிருந்து கொலை மிரட்டல் விடுக்கும் பொலிஸ் மாஅதிபர்! உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றில் அறிக்கை!!

கொலைக் குற்றத்தின் பேரில் காவற்சிறையில் உள்ள கொழும்பு வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவினால் தமக்கு உயிர்அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக உதவிப் பொலிஸ் அதிகாரி அபசேக்கர குறிப்பிடுகிறார்.

விசாரணையின் முடிவு பற்றி கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம். சஹாப்தீனிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துவிட்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபரான பிரதிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் விசாரணைகள் மேற்கொண்டு கைதுசெய்யும் வேளையிலேயே அவர் அமர்ந்திருந்த நாற்காலியைத் பின்பக்கமாகத் தள்ளிவிட்டு, ‘நீங்கள் இந்த வேலையைச் செய்வீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்துகொள்ளுங்கள்.... உங்களால் எந்த நாளும் என்னை உள்ளே வைத்திருக்க முடியாது... ஷானி நான் ஒரு கொலைகாரன். நான் வெளியே வந்து உங்களுக்கு நல்ல பாடம் புகட்டுகிறேன்...’ என்று குறிப்பிட்டதாக அவரது அறிக்கையில் உள்ளது.

இந்தக் கூற்றின் நம்பகத்தன்மை பற்றி விசாரித்த அதிகாரிகளுக்கும், அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் இந்த உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இரகசியப் பொலிஸ் பிரிவின் உதவிப் பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேக்கர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

அதிபர், ஆசிரியர்களின் ஏற்பாட்டிலா எம்மீது வெளி நபர்கள் தாக்குதல்; யாழ். மாணவர்கள் சந்தேகம்!

யாழ். நீர்வேலிப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை அதிபரும் ஆசிரியர்கள் இருவருமாக சேர்ந்து அப்பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது நேற்று மாலை 2.30 மணியளவில் பாடசாலை முடிவடைந்து மாணவர்கள் வீடு செல்ல முற்பட்ட போது பாடசாலை வாயில் பகுதியில் வைத்து வெளி ஆட்களை ஏற்பாடு செய்து தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் பற்றி தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் தெரிவிக்கையில், நேற்றையதினம் பாடசாலை முடிந்து நாம் வீடு செல்ல முற்பட்ட போது பாடசாலைக்கருகில் ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் மது போதையில் நின்றிருந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் எம் மீது திடீரென தாக்குதல் நடத்த தொடங்கிய போது ஒரு ஆசிரியர் வந்து அங்கு நின்ற ஏனைய மாணவர்களை பாடசாலைக்குள்ளே அழைத்து வாயில் கதவை மூடிவிட்டார். இதனால் நாம் உள்ளே செல்ல முடியவில்லை.

இத் தாக்குதல் சம்பவத்தை அருகில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் அவதானித்து விட்டு தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த போது தாக்குதல் மேற்கொண்டோர் ஓடி விட்டார்கள். இத்தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் பாடசாலை அதிபரும், ஆசிரியர்கள் இருவரும் இருப்பதாக நாம் சந்தேகிக்கின்றோம் என குறிப்பிட்டனர்.

தாக்குதல் சம்பவத்திற்கான காரணமாக நாம் கருதுவது எம்முடன் கல்வி கற்றும் மாணவர் ஒருவர் பாடசாலைக்கு சமூகம் தராமல் பாடசாலை வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றதைக் கண்ட அதிபர் மறுநாள் குறித்த மாணவனின் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து அந்த மாணவனை பாடசாலையில் இனி சேர்க்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விளக்கியுள்ளார்.

குறித்த மாணவன் தேவை கருதியே பாடசாலைக்கு சமூகம் தரவில்லை என்று பெற்றோர், பல தடவை எடுத்து கூறியும் அதிபர் அதனை ஏற்கவில்லை. மாணவனை வெளியில் அனுப்பியுள்ளார். இதனால் குறித்த மாணவனோடு கல்வி கற்கும் சக மாணவர்களாகிய நாம் 25 பேரும் வெளியேற்றப்பட்ட மாணவனை பாடசாலையில் மீண்டும் இணைக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து இட்டு அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.

இதன் காரணமாகவே எம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கின்றோம். ஏன் எனில் எம் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி செல்லுகையில் தாக்குதலாளிகள் கடிதத்தில் கையெழுத்து இட்ட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர் என குறிப்பிட்டபர்.

Read more...

இந்திய மக்கள் தொகை 2028 இல் சீனாவை தாண்டும்' -ஐ.நா.

உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை ஐ.நா. சபை நியூயார்க்கில் நேற்று(13.06.2013) வெளியிட்ட புள்ளிவிபரத்தின் படி தற்போது சர்வதேச அளவில் மக்கள் தொகை 720 கோடியாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் அது 810 கோடியாக உயரும். அதே நேரத்தில் 2050ஆம் ஆண்டில் 960 கோடியாக மாறும் என தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் 2 மடங்கு அதிகரிப்பதுடன் இந்தியாவை பொறுத்தவரை இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

சீனாவை பொறுத்தவரை 2030 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகை பெருக்கம் குறைவடைவதுடன் 2100ஆம் ஆண்டில் அதாவது இந்த நூற்றாண்டு இறுதியில் சீராகி 110 கோடியாக மாறும் என கூறப்பட்டுள்ளதுடன் தற்போதுள்ள நிலவரப்படி வருகிற 2028ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் சீனாவை தாண்டும் என்றும் ஐ.நா. செளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more...

சக்கரத்தில் மனித சடலத்தை வைத்துக் கொண்டு பறந்த விமானம்

ரஷ்யாவின் ‘ஐ பிளை’ எனும் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான எயார் பஸ் ஏ330 – 300 ரக விமானமொன்று சக்கரத் தொகுதியில் இறந்த மனிதர் ஒருவரின் சடலம் சிக்கியிருப்பது தெரியாமல் 7 தடவைகள் பறந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இத்தாலியிலிருந்து மொஸ்கோவை சென்றடைந்த போது அதன் சக்கரத் தொகுதியில் ஜோர்ஜிய கடவுச்சீட்டைக் கொண்ட ஒருவருடைய மனித சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டது.

விமானப் பயணத்துக்கான டிக்கெட் பெறாமல், சட்டவிரோதமாக பயணம் செய்வதற்காக இந்நபர் ஏறியிக்கலாம் என ரஷ்ய விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் இந்நபரின் சடலம் விமானத்தின் சக்கரத் தொகுதியில் சிக்கியது எப்படி என்பது குறித்தும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

Read more...

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் 43 இலங்கையர் கைது!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 43 இலங்கையர் உட்பட 100 சட்டவிரோத குடியேற்றகாரர்களை இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் வைத்து கைது செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜாவாவின் தென்கரை நோக்கி ஐந்து மினி பஸ்களில் பயணித்துகொண்டிந்த இவர்களை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தியபோது. இவர்கள் சட்டவிரோத குடியேற்றகாரர்கள் என்று தெரியவந்ததாகவும், கைது செய்யப்பட்ட இவர்கள் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைப்படுவர் எனவும், அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

நாட்டின் பொருளாதாரத்திற்கு கெட்ட காலம்..... 50 கோடி ரூபா செலவில் வாயற்கடை மாற்றியமைக்கப்படுகிறது....

கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ள திறைசேரிக் கட்டிடத்தின் வாயில் அமைக்கப் பட்டுள்ளதற்கேற்ப பொருளாதார ரீதியில் அபசகுனம் என சோதிடங்கள் மூலம் தெரியவந்துள்ளதால், அங்குள்ள வாயற்கடை உடைத்து தீங்கில்லாவகையில் மீண்டும் மாற்றியமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தரவுக்குக் கிடைத்துள்ள சோதிட உபதேசத்திற்கேற்ப இந்த்த் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக 500 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திறைசேரிக்கான திருத்தவேலைகளை இந்நாட்டுக் கம்பனியொன்று செய்யவுள்ளது.

(கேஎப்)

Read more...

பெண்ணொருவரை கேட்டு நீதவானை அச்சுறுத்திய இராணுவ வீரர் கைது!

நீதவானை அச்சுறுத்திய இராணுவ வீரரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, புத்தளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் குறித்த இராணுவ வீரர், குருணாக்கல் மாவட்ட நீதவான் நிமல் ரணவீரவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, பெண்ணொருவரின் பெயரைக்கேட்டு, அந்த பெண் நீதவானின் வீட்டில் இருக்கின்றாரா என விசாரித்துள்ளார்.

அதற்கு அவ்வாறான பெயருடைய பெண் இந்த வீட்டில் இல்லையென்று நீதவான் தெரிவிக்கையில், குறித்த சந்தேகநபர் தகாத வார்த்தைகளால் நீதவானை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவ வீரர் ஐந்து தடவைகள் நீதவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளதுடன், அழைப்பை மேற்கொண்ட ஐந்து தடவையும், நீதவானை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்குற்றச்சாட்டிற்கிணங்க சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

Read more...

13 ஆவது சட்டமூலத்தில் மாகாணங்களை இணைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

13 ஆவது திருத்த சட்டமூலத்தில் இரண்டு மாகாணங்களை இணைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்குவது தொடர்பான அரசாங்கத்தின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், குறித்த யோசனையை எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய கொள்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றைச் சமர்ப்பிக்க முன்னர், சகல மாகாண சபைகளினதும் அனுமதி பெறப்பட வேண்டுமென்ற பிரிவை மாற்றியமைப்பது தொடர்பில் ஏற்கெனவே அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது யோசனை தொடர்பாகவும், 13 ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்தும், சகல கட்சிகளுடனும் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கும் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிதடத போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Read more...

வாசு, டியூ, ராஜித்த, ஹக்கீம் ‘13’ இற்காக அமைச்சரவையில் இழுபறி...

13 ஆவது திருத்தச் சட்டத்திற்காக எடுக்கவுள்ள இறுதித் தீர்மானம் தொடர்பாக அமைச்சரவையில் இடம்பெற்ற கலந்துரையாடல் சூடுபிடித்திருந்தது. அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ராஜித்த சேனாரத்ன, டியூ குணசேக்கர், ரவூப் ஹக்கீம் ஆகியோர் 13 ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றக்கூடாது எனக் குறிப்பிட்டிருப்பதுடன் அமைச்சர் விமல் வீரவன்ச அதனை மாற்றியமைக்காமல் வடக்கில் தேர்தல் நடாத்தப்பட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றித் தெளிவுறுத்தியுள்ளார்.

பெரும் சத்தத்துடன் விவாதம் நடைபெறும்போது அமைச்சர் டியூ குணசேக்கர, விமல் வீரவன்சவுக்கு தீயசொற்களைப் பயன்படுத்திப் பேசியிருப்பதுடன், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ’88-89 களில் ஜேவீபீயினரை இல்லாமற்செய்ய ப்ரா இயக்கம் உருவாக்கப்பட்டது உண்மை’ எனவும் குறிப்பிட்டார்.

விமல் வீரவன்ச இப்போது தாக்கப்படுவார்... இப்போது தாக்கப்படுவார் என ஏனைய அமைச்சர்கள் பார்த்துக்கொண்டிருந்த வேளை, அவ்விடத்தில் உடனடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலையிட்டு 13 ஐ இல்லாமற் செய்வது விமலின் தனிப்பட்ட கருத்தல்ல எனக்கூறியிருப்பதால் ஒருவாறு அமைதி நிலவியுள்ளது. எதுஎவ்வாறாயினும், இறுதித் தீர்மானம் யாதெனில் 13 இரண்டு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதுடன் 154(A) சரத்தை மாத்திரம் மாற்றியமைப்பதற்கும், இதுதொடர்பில் மேலும் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தேர்வுக்குழுவினரிடம் இவ்விடயம் கையளிக்கப்படவுமுள்ளது.

பேச்சுவார்த்தையின் இறுதியில் அமைச்சர்களில் பெரும்பாலானோர், பல்வேறு இடைஞ்சல்களுக்கும் மத்தியில் விமல் வீரவன்ச தன்னுடைய கருத்தை முன்வைப்பதில் தளராத நிலையில் இருந்தமையைக் குறித்து அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

(கேஎப்)

Read more...

இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய "ஜெனரல்" ஆக பதவி உயர்வு!

வடக்கில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது வன்னி கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய "ஜெனரல்"ஆக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பதவி உயர்த்தப் பட்டுள்ளார்.

இந்த பதவி உயர்வானது இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப் படவுள்ளது. ஜகத் ஜயசூரிய 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1977ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, எல்.ரி.ரி.யுடன் நடைபொற்ற 30 வருட யுத்தத்தின்போது முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சிரிய அரசபடையினருக்கு எதிராக போராடும் போராளிகளுக்கு அமெரிக்கா உச்ச ஆதரவு! இரசாயன ஆயுதங்கள் வழங்கப்படுமாம்!

சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக சன்னி மற்றும் கிறுஸ்தவ போராளிகள் போரிட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் போரினால் அங்கு இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

அலெப்போ நகரை போராளிகளிடமிருந்து கைப்பற்ற அதிபர் படை தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. இதில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்கள் 150 பேரை அதிபர் படையினர் கொன்றுவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதனையடுத்து போராளிகளுக்கு முன்னறிவிப்பின்றி ஆயுதங்கள் வழங்கி உதவிட ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு எடுத்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. சிரிய அரசபடையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதால் போராளிகளுக்கு அதுபோன்று இரசாயன ஆயுதங்கள் வழங்கப்படும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனான் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும், ஈரானும் சிரியாவிற்கு உதவுவதால், அமெரிக்கா இந்த மிரட்டலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருச்சொரூப பவனி

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா நேற்று (13.06.2013) வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்டத் துணை ஆயர் மெக்ஸ்வல் சில்வா ஆண்டகையின் தலைமையில திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன் விசேட திருப்பலிகள் பல நேற்றைய தினம் காலையிலும் நண்பகலிலும் நிறைவேற்றப்பட்டது.

மாலை 5.30 மணிக்கு கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி திருத்தல முன்றலில் ஆரம்பித்து வேளாங்கண்ணி மாதா ஆலய வீதி- கன்னாரத் தெரு ஜிந்துப்பிட்டி வீதி- விவேகானந்த மேடு வழியாக கொட்டாஞ்சேனை பிரதான வீதியையடைந்து அங்கிருந்து மீண்டும் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்தது.

கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Read more...

விவசாயியாக இருந்திருக்க வேண்டியவர் இன்று அமைச்சராக உள்ளார்! ஏனென்றால் இலங்கையில்.... அனுரகுமார.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர், இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையில் இருப்பதால்தான் இன்று அமைச்சர்களாக இருக்கின்றார்கள் என்றும், இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையில் இல்லாமல் இருந்திருந்தால், உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க விவசாயியாகவே இருந்திருப்பார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ம.வி.மு விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்று இலவசமாக பெற்றுகொள்ளும் கல்விசார் பட்டங்களை இவர்கள் 150,000 ரூபாய்க்கு விற்பவர்களாக உள்ளனர் என்றும், இதனூடாக இன்று இலவச கல்வி என்பது அழிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் நடைமுறையில் இலவசக் கல்வியை இல்லாமல் செய்யும் முயற்சிக்கு எதிராக கருத்து தெரிவித்த 214 மாணவர்கள் இன்று பல்கலைக்கழகங்களிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

அடுத்த சுற்றிற்கு தெரிவாகும் வாய்ப்பை தக்கவைத்து இலங்கை!

இங்கிலாந்தில் நடைபெறும் செம்பியன்ஸ் கிண்ண தொடரின் முக்கிய போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் அடுத்த சுற்றிற்கு தெரிவாகும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 293 ஓட்டங்களை பெற்றது.

ஜொனதன் ட்ரொட் 76 ஓட்டங்களையும், ஜோ ரூட் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் லசித் மாலிங்க மற்றும் சமிந்த எரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பதிலுக்கு 294 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.1 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கையடைந்தது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குமார் சங்ககார ஆட்டமிழக்காது 134 ஓட்டங்களையும், நுவான் குலசேகர 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் என்டர்சன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்துள்ளன.

இதற்கமைய புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 3ம் இடத்திற்கு தெரிவாகியுள்ளது. அடுத்த அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரின் அரையிறுதிக்கு தெரிவாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

இலங்கையில் அரபு வசந்தம் போன்ற எழுச்சி ஒருபோதும் ஏற்படாது!- கோத்தபய

சமூக வலையத்தளங்கள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான ஆற்றல்களை கொண்டுள்ளதாகவும், டுனீசீயா, லிபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உருவான மக்கள் எழுச்சிக்கு சமூக வலையத்தளங்களே அடித்தளமிட்டன என தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ,இலங்கை சிறந்த அரசியல் தலைமைத்துவம் கொண்ட ஜனநாயக நாடாக காணப்படுவதனால், இலங்கையில் அரபு வசந்தம் போன்ற எழுச்சி ஏற்படுவதற்கான வாய்ப்போ, தேவையோ இல்லையென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக வலையத்தளங்களை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அதிகளவான ஆளணி தேவையில்லை என்றும், இவ்வாறான குழப்பவாதிகளை பாரம்பரிய பாதுகாப்பு முறையினால் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதனால் புலனாய்வு அமைப்புக்கள் ஒன்றிணைக்கப்பட்ட கட்டளை அடிப்படையின் கீழ் பணிபுரிவது அவசியமென பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் நல்லுறவை பேணுவது முக்கியம்வாய்ந்ததாக அமைந்துள்ளது. வீடோ அதிகாரமுள்ள குறித்த நாடுகள் இலங்கை மீதான சர்வதேச நடவடிக்கைகளின் போது தமது செல்வாக்கை பயன்படுத்தி இலங்கையை பாதுகாக்குமெனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

இரணைமடு ஓடுதளம் சனியன்று ஜனாதிபதியால் திறப்பு!

கிளிநொச்சி, இரணைமடுவில் எல்.ரி.ரி.ஈ.யின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுதளம் இலங்கை விமானப்படையினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஓடுதளம் (15.06.2013)சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.

இலங்கை விமான படை வரலாற்றில் முதன்முறையாக விமான படையினரின் சக்தியை பயன்படுத்தி சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்த ஓடுதளம் நிர்மாணிக்க்பட்டுள்ளது என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.

இந்த ஓடுதளம் 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டிருப்பதுடன் இதற்கான திட்டம், பொறியியல், நிரமாணம், உபகரங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பன விமான படையினருடையது என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளதுடன் இலங்கை விமானப்படையிடம் இருக்கின்ற மிக பெரிய விமானமான சீ-130 விமானத்தையும் இந்த ஓடுதளத்தில் ஏற்றியிறக்க கூடியவகையில் நிரமாணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

அது மட்டும்லாது இந்த கிளிநொச்சி, இரணைமடு ஓடு தளத்திற்கு மாங்குளம், அம்பாகாமம் ஓலுமடு ஊடாக அல்லது கிளிநொச்சி,வடக்கச்சி, ராமநாதபுரம் மற்றும் கல்மடு என இரண்டு வழிகளில் வருகைதரலாம் என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.

இலங்கை விமானப்படை வரலாற்றில் வரலாறு படைத்துள்ள இந்த இரணை மடு ஓடுதளத்துடன் வடக்கில் மன்னார், வவுனியா,பலாலி என நான்கு ஓடுதளங்கள் காணப்படவதாக தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிளிநொச்சி, இரணைமடு ஓடுதளம் மீட்கப்பட்டதையடுத்து விமான தலைமையகத்தின் அனுமதியுடன் 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 21 ஆம் திகதி 20 விமான படையினரின் திட்டத்துடன் மறுநாள் 22 ஆம் திகதி இரணைமடு விமானப்படை முகாம் அமைக்கப்பட்டதுடன் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் தடவையாக விமானப்படையின் கொடி இரணைமடு விமாப்படை முகாமில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 03 ஆம் திகதி இரணைமடு விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகின அதன் நிர்மானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஓடுதளம் திறந்து வைக்கப்படும் என்றும் விமானப்படை அறிவித்துள்ளது

Read more...

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தங்களை பதிவு செய்வது கட்டாயம்! ராஜித்த சேனாரத்ன

கடலுக்குச் செல்லும் மீனவர்களை பதிவு செய்து கொள்ளும் முறைமை கடுமையாக அமுல்படுத்தப்பட விருப்பதாகவும், அதற்கிணங்க படகுகளில் உயிர்க்காப்பு அங்கிகள் கட்டாயப்படுத்தப்படுவதுடன், அனைத்து படகுகளையும் இயல்பாகவே காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்கும் வகையில் இச்செயற்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என மீன்பிடித்துறையமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற அனர்த்தத்தை அடிப்படையாக கொண்டு, மேற்படி நீண்டகால திட்டங்களை உடனடி அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்த விருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்னர் பல தடவைகள் அனைத்து மீனவர்களையும் காப்புறுதி செய்யுமாறு நாம் தெரிவித்த போதும் அதில் ஒருசிலர் மாத்திரமே அக்கறை செலுத்தியிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

Read more...

புனரமைக்கப்படும் ஓல்லாந்தர் காலத்து யாழ்பாணத்து கோட்டை. (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டை புனர்நிர்மாண வேலைத்திட்டம் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதனை காணமுடிகிறது. இங்கு தினமும் ஏராளமான உள்நாட்டு ,வெளிநாட்டு உல்லாச பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த யுத்த காலத்தில் மிக மோசமாக குறித்த கோட்டை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.

இதனை தற்போது நெதர்லாந்து மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து புனரமைத்து வருகின்றன.

தேசிய மரபுரிமைகள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்புனருத்தாண செயற்பாட்டினை தொல்லியல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

(பாறூக் சிகான்)




Read more...

Thursday, June 13, 2013

யாழில் உல்லாசம் அனுபவிக்க ஆண்களை தேடிக்கொண்டிருந்த 3 யுவதிகள் கைது

யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் உள்ள பழக் கடை ஒன்றில் விபச்சாரத்திற்காக ஆண்களை தேடிப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட காத்திருந்த மூன்று தென்பகுதி யுவதிகளைக் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பேரில் குறித்த யுவதிகள் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

19, 23, 32 வயதை உடைய இந்த மூன்று யுவதிகளும் தென்பகுதி கிராமம் ஒன்றிலிருந்து யாழ்.வந்துள்ளதுடன் இவர்கள் நாவக்குழிப் பகுதியில் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்தாக பொலிஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் குறித்த பெண்களை விபச்சாரத்திற்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ சாரதி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த யுவதிகள் அனைவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆயர் செய்யப் படவுள்ளதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

Read more...

முஸ்லீம் தேசத்திலிருந்து முதலாவது பெண் போர் விமானி!

இஸ்லாமியக் குடியரசான பாகிஸ்தான் நாட்டில் இதில் 26 வயது நிரம்பிய ஆயிஷா ஃபரூக் என்ற இளம்பெண் அனைத்துப் பயிற்சிகளையும் முடித்து பாகிஸ்தானின் விமானப் படையில் ஒரு பெண், போர் விமானியாகப் பணிபுரியும் தகுதியைப் பெற்றுள்ளார்.

பெண்கள் குறித்த கட்டுப்பாடுகள் பாகிஸ்தானில் தளர்ந்து வருவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.பஞ்சாப் மாகாணத்தின் பகவல்பூரைச் சேர்ந்த ஆயிஷாவிடம் தனியாக ஒரு பெண் போர் விமானத்தில் பணியாற்றும் அனுபவம் தொடர்பாக கேட்டபோது எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை என்றும் ஆண்கள் செய்யும் அனைத்து செயல்களையும் தானும் செய்வதாகவும், துல்லியமாக வெடிகுண்டுகளை வீசுவதாகவும் பதில் அளித்தார்.

அது மட்டுமல்லாது கடந்த வருடங்களில், மொத்தம் 19 பெண்கள் பாகிஸ்தான் விமானப் படையில் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றுள்ளதுடன் இவர்களுள் 6 பேர் போர் விமானப் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

சிறுவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் நாடுகளின் பெயர் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்!

ஆயுதப் போராட்டத்தில் சிறுவர்கள்' என்னும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது என ஐ.நா. அறிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் எந்தவொரு தரப்பும் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தாததினால் இலங்கை, சிறுவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது எனவும் ஐ.நா. புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் 2012இல் எந்தவொரு தரப்பும் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தவில்லை. இதன் அடிப்படையில் நேபாளமும் இலங்கையும் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

பெயர் வைக்கும் சண்டை முடிவுக்கு வந்தது!

சாய்ந்தமருது மீனவர் வாசிகசாலைக்கு மர்ஹூம் மீராசாஹிப் அவர்களின் பெயர் வைக்க கல்முனை மாநகர சபை அங்கீகாரம் வழங்கி உள்ளது . இந்த பெயர் வைப்பதில் பல சர்ச்சைகள் எழுந்த போதிலும் இன்று நடைபெற்ற கல்முனை மாநகர சபை அமர்வில் இதற்கான அங்கீகாரத்தை மாநகர சபை உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர்.

மர்ஹூம் மீராசாஹிப் மீனவர் வாசிக சாலை அமைச்சர் ரவுப் ஹக்கீமால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

(யு.எம்.இஸ்ஹாக்)

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com