Tuesday, July 6, 2010

'பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை' – மேர்வின் சில்வா

நாட்டின் ஜனாதிபதியை கொல்ல சதி முயற்சிகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு இராணுவ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகாவை உயிருடன் புதைப்பதற்கு மயானம் தேவை என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உரையை பாடலுடன் ஆரம்பித்த அமைச்சர் மேர்வின் சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்சேகா மற்றும் மங்கள சமரவீர ஆகியோரின் உரைகளுக்கு பதிலளித்து கடுமையாக உரையாற்றினார்.

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் இலட்சினை கழற்றப்பட்டவர் பொன்சேகா. பின்னர் அவரின் சாஸ்திரம் நன்றாக இருந்தமையினால் மீண்டும் பதவி கிடைத்தது. அவருக்கு தேவையானதை அதிபர் மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொடுத்துள்ளார்.

மதிப்புமிக்க ஜனாதிபதியை அவர் தூற்றுகின்றார். அவரை உயிருடன் புதைப்பதற்கான மயானத்தை அமைக்க வேண்டும். அமெரிக்காவில் இவ்வாறானதொரு மயானம் இருக்கின்றது.

அதேபோல மங்கள சமரவீர கூறுவதை போல பான் கீ மூனுக்கு அஞ்சி முழங்காலிட்டு செயற்பட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் பிரச்சாரங்களின்போது ஜெனரல்; பொன்சேகா பாராளுமன்று வந்தால் தான் தனது பதவியை துறப்பேன் என அவர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

சித்திரப் போட்டியில் வவுனியா தாட்சாயினி ஜெயராசசிங்கத்திற்கு 1ம் இடம்.

தேசிய தபால் அருங்காட்சியகம் இன்று கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது புதிய முத்திரைக்கான உருவப்படத்தை வரைந்த மாணவிக்கு ஜனாதிபதி பணப்பரிசையும் அன்பளிப்பையும் வழங்கினார்.

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த தாட்சாயினி ஜெயராசசிங்கத்திற்கு ஜனாதிபதி பரிசை வழங்கினார்.

Read more...

விடுதலைப் புலிகளை து‌ணி‌ச்சலுட‌ன் எ‌தி‌ர்‌க்‌கிறே‌ன்: கருணா‌நி‌தி‌க்கு ஜெயலலிதா ப‌தி‌ல்

விடுதலைப் புலிகள் அமைப்பை தாம் துணிச்சலுடன் எதிர்ப்பதாகவும், முதல்வர் கருணாநிதி அப்படி எதிர்க்கவில்லை எனவும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், ''முதலமை‌ச்சர் கருணாநிதியும் போர்க் குற்றவாளிதான் என குற்றஞ்சா‌ற்‌றி வெளியிட்ட எனது அறிக்கையை அவர் கண்டித்திருப்பதை நான் வரவேற்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நியாயமான விசாரணையை எதிர்கொள்ள ஏதுவாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் கருணாநிதி.

“தடை செய்யப்பட்ட எல்.டி.டி.ஈ. இயக்கத்தின் எந்த உறுப்பினரும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்ற மற்றொரு தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்தும் என் மீது கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.

போர் நடக்கும் போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று நான் தெரிவித்தது உண்மை தான். நடைமுறையில் உலகம் சந்தித்த ஒவ்வொரு போரிலும் நடைபெற்றது இதுதான். ஆனால் கருணாநிதி, வேண்டுமென்றே போரின் போது பொதுமக்கள் கொல்லப்படுவதையும், போர் முடிந்துவிட்டது என்று கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட பின்னர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்ததையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

என்னை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரானவள் என்று குற்றம் சுமத்துவதன் மூலம் தமிழர்களுக்கு எதிரானவள் என்ற முத்திரையையும் குத்தலாம் என கருணாநிதி நினைக்கிறார். 1980 களிலிருந்து எம்.ஜி.ஆரும், நானும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வந்தோம்.

ஆனால், தமிழ் மிதவாதிகளையும், போட்டி அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், முன்னாள் பிரதமரையும் கொலை செய்ததற்குப் பிறகு, விடுதலை போராட்ட அமைப்பு தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது என்பது வெளிப்படையானது.

அந்த தருணத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை துணிச்சலுடன் நான் எதிர்த்தேன். கருணாநிதி எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இன்றைக்குக் கூட, போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை. ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்து, இராணுவத்தின் முன்பு சரணடைந்த விடுதலைப் புலிகளை வேண்டுமென்றே கொன்றதை நான் கண்டிக்கிறேன்.

போர் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை நம்பி பதுங்குக் குழிகளிலிருந்து வெளிவந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு தமிழர்களை கொன்று குவித்ததற்குக் காரணமானவர்களுடன் விருந்தில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய மகளையும், மூத்த தி.மு.க கட்சியினரையும், கூட்டணியினரையும் அனுப்பி வைத்து அவர்கள் விலை உயர்ந்த பரிசு பொருட்களுடன் இந்தியா திரும்பி வந்ததற்குக் காரணமான முதலமை‌ச்சர் கருணாநிதியின் நடவடிக்கையை நான் கண்டிக்கிறேன்'' எ‌ன்று ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Read more...

இலங்கைத் தமிழர்களை தொடர்ந்தும் அகதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. UNHCR

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றகரமான சூழ்நிலை மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கொண்டு நோக்கும் போது இலங்கைத் தமிழர்களை அகதிகளாக கருத முடியாது என ஐநா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச அகதிகள் தொடர்பான புதிய விதிமுறைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலைமைகள் சுமூகமடைந்து வருவதாகவும், இதனால் வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் இலங்கையர்களுக்கு உடனடி அகதி அந்தஸ்து வழங்கப்பட முடியாதென சுட்டிக்காட்டியுள்ளது. தனிப்பட்ட நபர்களின் நிலைமை மற்றும் பின்னணியை கருத்திற் கொண்டு எதிர்வரும் காலத்தில் புகலிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இலங்கையில் பாதுகாப்பு மற்றும் மீள் குடியேற்ற விடயங்களில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றபோதும் , முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்கள் சிலர் , தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுவோர் மற்றும் ஊடகவியலாளர்கள் , சில தனிநபர்களுக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் ஐ.நா வின் ஆகதிகளுக்கான உயரிஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

புகலிடம் கோரி நாட்டுக்கு வரும் இலங்கையர், ஆப்கானிஸ்தானியர் ஆகியோருக்கு அரசியல் தஞ்சம் வழங்கும் நடவடிக்கைகளை கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி முதலான மூன்று மாதங்களுக்கு அவுஸ்திரேலியா இடைநிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த அகதிகளுக்கு புகலிடம் வழங்கும் நடவடிக்கைகளை தொடர்வதா, இல்லையா, என்கிற முடிவை எதிர்வரும் 08 ஆம் திகதி அவுஸ்திரேலியா அரசு அறிவிக்கவுள்ள நிலையில் இன்று ஐநா இலங்கைத் தமிழர்கள் தொடர்பான சில விடயங்களை முன்வைத்துள்ளது.

ஐ.நா வின் இவ்வறிவித்தலை சாதகமாக பயன்படுத்தி அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ள இலங்கைத் தமிழர்கள் மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பதிய வழிகாட்டிகளின் அடிப்படையில் இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

குறிப்பாக இலங்கையில் தற்போது சுமூகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தொடர்ந்தும் வெளிநாடுளில் இலங்கையர்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கை அகதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் கில்லார்ட் உள்ளிட்ட சிரேஸ்ட அமைச்சர்கள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
...............................

Read more...

அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டது : ஜனாதிபதி பாராளுமன்றுக்கு திடீர் விஜயம்.

பாராளுமன்றத்தில் மேலும் ஒரு மாத காலத்திற்கு அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 32 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டணி, ஜனநாயக தேசிய முன்னணி என்பன அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று தீடீரென பாராளுமன்றுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி வரவு செலவுத் திட்டவிவாதங்களை கேட்டுக்கொண்டிருந்தாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Read more...

ஐ.நா அலுவலகம் முன்பாக விமல் வீரவன்ச ஆர்பாட்டம் : பான் கீ மூனின் கொடும்பாவி எரிப்பு.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு அலோசனை செய்வதற்கு என ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீ முனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை கலைக்குமாறு கோரி விமல் வீரவன்ச தலைமையிலானோர் இன்று கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கானோர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்பாட்டக்காரர்கள் திரு. பான் கீ முன் அவர்களின் பொடும்பாவியை தெருவழியாக கொண்டுவந்தனர். அவர்கள் பான் கீ முன் மீது வசை பாடி வந்துடன் அவரது பொம்மைக்கு அடியும் போட்டனர். இறுதியாக அவரது பொம்மை அங்கு எரிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா வின் கொழும்பு அலுவலகம் முன்பாக கூடியிருந்தபோது அங்கு பேசிய வீடமைப்புத் துறை அமைச்சர் விமல்வீரவன்ச இலங்கையில் பயங்கரவாதத்தை முறியடிக்க தலைமைத்துவம் வழங்கிய நாட்டின் தலைவருக்கு எதிராகவோ அன்றில் யுத்தத்தில் ஈடுபட்ட படையினருக்கு எதிராகவோ விசாரணை மேற்கொள்வதற்கு ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீன் முன் இற்கு அதிகாரம் கிடையாது என தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா வின் பொதுச் செயலாளர் அதன் அங்கத்துவ நாடுகளால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் இலங்கையில் உள்ள ஐ.நா சபையின் அலுவலத்திற்கான குடிதண்ணீர் பாவனைக்கான நிதிகூட இலங்கை அரசாங்கத்தால் செலவிடப்படும்போது ஐ.நா சபை தமக்கெதிராக செயற்படமுடியாது எனவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார்.

எது எவ்வாறாயினும் விமல் வீரவன்சவின் இச்செயற்பாடு சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பின்னடைவை கொண்டுவரும் என்பதில் எவ்வித சந்தேமும் இல்லை. ஐ.நா வின் அலுவலகம் முற்றுகையிடப்படும் என விமல்வீரவன்ச தெரிவித்திருந்தபோது , அவரது கருத்து தொடர்பாக கருத்துரைத்த ஐ.நா வின் பேச்சாளர் இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மன்னிப்புக்கோரும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீரவன்சவின் இச்செயற்பாட்டினால் நாட்டுப்பற்றுள்ள புத்திஜீவிகள் பலரும் ஆத்திரமடைந்துள்ளனர். அத்துடன் வீரவன்சவின் இச்செயற்பாடானது இலங்கை அரசின் ஒப்புதல் பெறப்படாமல் நாடாத்தப்பட்ட ஒன்றல்ல எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


Read more...

தமிழர் செய்த அதே அதேதவறை சிங்களவர் செய்யக்கூடாது. தயான் ஜெயதிலக

ஐ.நா விற்கான முன்னாள் நிரந்தர விதிவிடப்பிரதிநிதி தயான் ஜெயதிலக அவர்கள் அரசியல் யாப்பின் 13 வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் என தொடர்சியாக வலியுறுத்திவந்தவர். அவர் அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையொன்றில் „சிறுபான்மைச்சமூகம் விட்ட அதேதவறை பெரும்பான்மைச் சமூகமும் விடக் கூடாது.. தமிழ் தேசியவாதம் தனது இராணுவ வலிமையை தொடர்பாக தன்னை மிகைப்படுத்திக் கற்பனை செய்து கொண்டு விட்டது. சிங்களவர்களையும் சிங்கள ஆன்மாவையும் அது குறைத்து மதிப்பிட்டிருந்தது. விளைவாக அது ஒரு பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

அதேபோல் சிங்களவர்கள் தம்மைப் பற்றி மிகையாகக் கற்பனை செய்து கொண்டு தமிழர்களையும் அவர்களது ஆன்மாவையும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.'

குறிப்பிட்ட கட்டுரையின் சாரம்சம் பூந்தளிர் இணையத்திலிருந்து..

இராணுவமாக இருந்த புலிகள் இலங்கை இராணுவத்தின் சிறந்த படையணிகளால் தோற்கடிக்கப்பட்டு பெருமளவிற்கு அழிக்கப்பட்டுமுள்ளார்கள். பிரிவினைவாதமென்பது ஒரு அரசியல் நிகழ்ச்சித் திட்டம். ஒரு கோட்பாடு. ஒரு எண்ணக்கரு. அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களோ, கோட்பாடுகளோ, எண்ணக்கருக்களோ இராணுவ வலிமையினால் தோற்கடிக்கப்பட முடியாதவை. அவை மிகச் சிறந்த அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களாலும், கோட்பாடுகளாலும், எண்ணக்கருக்களாலும் மட்டுமே தோற்கடிக்கப்படக் கூடியவை. நாங்கள் பகைமையுள்ள ஒரு இராணுவக் குழுவைத் தோற்கடித்து பிரிந்திருந்த பிரதேசங்களை மீளிணைத்து இந்தப் போரில் வெற்றியைப் பெற்றிருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னமும் அரசியல் மற்றும் எண்ணக்கரு தொடர்பான போரில் வெற்றி பெறவில்லை. இசங்களின் இந்தப் போரானது இதயத்தோடும் மனதோடும் சம்பந்தப்பட்ட ஒரு போராகும்.

இலங்கையில் பிரிவினைவாதமென்பது பின்வாங்கியிருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் பலம் பொருந்திய பிரிவினைவாத இயக்கத்தால் அது இன்னும் வலுப் பெற்றிருக்கிறது. காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் மேற்கிலிருந்தது. குறிப்பாகக் கனடாவில் இருந்தது. எனினும் பஞ்சாப்பில் அது இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதோடு அதுவும் கலைந்து போனது. ஆனால் அவ்வாறு இங்கு தமிழ்ப் பிரிவினைவாதத்தில் நடைபெறவில்லை. ஏனெனில் இராணுவ வெற்றியைத் தொடர்ந்து நாங்கள் அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கவில்லை. பிரபாகரன் பிறப்பதற்கு முன்னரேயே பிரிவினைவாதம் இருந்து வந்திருக்கின்றது. பிரிவினைவாதத்தைத் தோற்கடிப்பதானால் பிரிவினைவாதம் வளர்வதற்கான காரணங்களை இல்லாதொழித்தல் வேண்டும். பிரிவினைவாதம் உயிர் வாழ்வதற்கான நிபந்தனைகளையும் இல்லாதொழித்தல் வேண்டும்.

அரசின் எண்ணத்திலிருந்தும் அரசியற் தோற்றப்பாட்டிலிருந்தும் பிரிவினைவாதம் பிறக்கிறது. ஒரு சிறிய உதாரணத்தினை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சோடி ஏன் பிரிகிறது. ஏனெனில் அவர்கள் சந்தோசமற்றவர்களாக இருப்பதனால். ஆகவே இந்தச் சிறிய தீவில் வாழும் பல்வேறு சமூகங்களும் மகிழ்ச்சியற்று இருப்பதற்கான காரணிகளை இல்லாதொழிக்க வேண்டும். போர் முடிவடைந்த பின்னர் எல்லா சமூகங்களும் அவர்களுடைய அடிப்படையான அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டு திருப்தியாக வாழும் வகையில் எங்களுடைய பார்வையை முன்னோக்கியதாக அமைத்தல் வேண்டும்.

அரசு கடும் அதிகாரத்தைப் (hard power) பாவிப்பதில் வெற்றி கண்டிருக்கிறது. அத்தோடு மென்மையான அதிகாரத்தையும் (Soft power) பாவிக்க வேண்டும். கடும் அதிகாரம் என்பது பலவந்தப்படுத்தப்பட்ட ஒரு வலுவாகும் அல்லது அதிகாரமாகும். அது இராணுவ பலத்தினால் பிரதியிடப்படும். மென்மையான அதிகாரம் என்பது ஒரு வகையில் கவர்ந்திழுத்தல் ஆகும். இரண்டையும் இணைத்துப் பயன்படுத்துவதை கெட்டித்தனமான அதிகாரம் (Smart power) என்பர். பிரிவினைவாதத்தை இங்கும் வெளிநாட்டிலும் நாங்கள் தோற்கடிக்க வேண்டுமானால், நாங்கள் கெட்டித்தனமான அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும். ஜனாதிபதி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை வெளிநாட்டமைச்சராக நியமித்தது ஒரு சிறப்பான நடவடிக்கையாகும். ஆனால் அது மட்டும் போதாது. ஏனெனில் நாங்கள் பிரிவினைவாதத்தை எதிர் கொள்வதற்கு தமிழ் மக்களைக் கவரக் கூடிய ஒரு பார்வையை உருவாக்க வேண்டும். கடும் அதிகாரத்தினால் அதைக் கட்டுப்படுத்துவது மட்டும் பயனளிக்கப் போவதில்லை.

புலம்பெயர் தமிழர்களிடையேயுள்ள பிரிவினைவாதம் இரண்டு வகையான அமைப்புக்களாக உள்ளது. ஒன்று பிரிட்டனில் உள்ள குளோபல் தமிழ் போரம். மற்றையது அமெரிக்காவிலும், சுவிஸ்சர்லாந்திலும் வேர் கொண்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். இவ்விரு பிரிவினரும் தங்களுடைய நோக்கத்திற்குத் தேவையான விடையங்களை ஓரளவு வினையாற்றலுடன் செய்து வருகிறார்கள். பிரிட்டனில் உள்ள தொழிற் கட்சிகளின் முக்கிய புள்ளிகளை அவர்கள் தம் பக்கம் வெள்றெடுத்திருக்கிறார்கள். தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பைப் பல இடங்களில் நடத்தி வருகிறார்கள். இந்நடவடிக்கைகளில் ஒரு சில ஆயிரக்கணக்கானவர்களே இடம்பெற்றிருந்தாலும் உலகம் முழுக்கத் தமது கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறார்கள். அரசாங்கங்களுடனும், அரசியற் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பல நாடுகளில் அவர்கள் நிழல் அரசாங்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

வெனிசுலாவைத் தம் பக்கம் வென்றெடுப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரிவினைவாதப் போக்கிற்கு ஆதரவாகக் கலை, ஊடகம் மற்றும் இளைஞர் கலாசாரம் போன்ற துறைகளிலுள்ள பல பிரமுகர்கள் இருந்து வருகிறார்கள். இவர்களுள் ரப் பாடகியான மாயாவும் ஒருவர்.

இன்னொரு மோதலுக்கான சாத்தியப்பாடுகள் எவை? நான்கு வகையான மோதல்கள் உருவாகக் கூடும் என எதிர்பார்க்கலாம். முதலாவதாக இலங்கை அரசுக்கெதிராக ஏற்கனவே ஒரு பனிப் போர் உருவாகியிருக்கிறது. இது ஏனைய நாடுகளிலிருந்தும், சர்வதேச நிறுவனங்களிலிருந்தும் இலங்கை மீதான அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டாவதாக வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களிடமிருந்து வன்முறையற்ற வழியில் எதிர்ப்புகள் உருவாகக் கூடும். இது மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர்கிங் வழிமுறையிலானது. செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் ஏற்கனவே கடைப்பிடித்திருந்தது. அரசாங்கம் அல்லது அரச ஆதரவுப் படைகள் வன்முறையைப் பாவித்து இதனை அடக்க முனைந்தால் முன்னர் குறிப்பிட்ட சர்வதேச ரீதியான அழுத்தம் எங்கள் மீது அதிகரிக்கும். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் உறுப்பினரும், ஜனாதிபதி ஒபாமாவின் உதவியாளருமான சமந்தா பவரின் வருகை வெள்ளை மாளிகையின் கண்காணிப்பு வலையத்திற்குள் நாம் இருப்பதைக் காட்டுகிறது.

மூன்றாவது விடுதலைப் புலிகள் தம்மை மீளிணைத்துக் கொள்ளல். தமிழ் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இலங்கை அரசாங்கம் சர்வதேச ஆதரவை இழந்திருக்கிறது. இந்த அடிப்படையில் அவர்கள் ஒன்றிணையக் கூடும். மீள ஒருமுறை தமிழ் நாட்டை அவர்கள் பின் தளமாகப் பாவிக்கவும் கூடும். அங்கிருந்து வடக்குக் கிழக்கிற்குள் நுழைந்து ஆங்காங்கு கெரில்லாத் தாக்குதல்களை மேற்கொள்ளவும் கூடும்.

நான்காவதாக அமைதி காக்கும் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்றின் பெயரிலோ அல்லது ஐ.நாவின் தீர்மானத்தின் அடிப்படையிலோ ஒரு வெளித் தலையீடு மேற்கொள்ளப்படும் சாத்தியமும் இருக்கிறது. ஜோர்ஜியாவில் என்ன நடந்ததென்பதைப் பாருங்கள். அத்தோடு சில வாரங்களுக்கு முன்பு ஈரானுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சீனாவும், ரஸ்யாவும் மேற்குலகோடு சேர்ந்து ஆதரித்து வாக்களித்தன. தமது வீட்டோ அதிகாரத்தை அவை பயன்படுத்தவில்லை. இதனையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று தமிழ்ப் பிரிவினைவாதம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. போர் வெற்றியையடுத்து உடனடியாக நாங்கள் பெரும் சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். நீதியானதும் பொருத்தமானதுமான ஒரு சமாதானத்தை நாங்கள் வந்தடையவில்லை அல்லது அதனை நோக்கி முன்னேறவில்லை என்றே சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் உள்ளது. அதனால்தான் இவ்வாறான எல்லாக் கேள்விகளும் எங்களை நோக்கி எழுப்பப்படுகின்றன.

நாங்கள் இப்போதும் கூட எங்களுடைய பெறுமதி மிக்க நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறோம். இப்போதும் கூட எங்களுக்கு நீண்டகாலமாக அறிமுகமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன் போன்றவர்களுடனேயே தொடர்பு கொண்டு வருகிறோம். அவர்கள் டக்ளஸ் தேவானந்தா போன்ற மிதவாதிகள் அல்லர். ஆனாலும் கூட அவர்கள் இன்னமும் மிதவாதிகள். நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களுடன் எங்களுக்கு ஒரு உடன்பாட்டிற்கு வர முடியாது போனால், நாங்கள் இவர்களைவிட இராணுவ ரீதியில் வல்லமை பொருந்திய தலைமைகளுடன் (more militant leadership) உடன்பாடு காண முயற்சிக்க வேண்டும்.

இன்றைய இந்தச் சூழலிலிருந்து விடுபட எங்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. தற்போதைய அரசியலமைப்பின் ஷரத்துக்களின்படி வடமாகாணத்தின் தேர்தலை நடாத்துதல் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் ஈபிடிபியுடனும் திஸ்ஸவிதாரணவின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபார்சுகளை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக்களை ஆரம்பித்தல்.

இவையிரண்டில் எதையாவது செய்யாமல் நாங்கள் எங்கள் மேலான போர்க்குற்றங்கள் தொடர்பான அழுத்தத்தை எதிர் கொள்ள முடியாது. இன நல்லிணக்கத்துக்கான அரசியல் நடவடிக்கைகளை வெளிப்படையாக மேற்கொண்டு வெளியுலகத்திற்குக் காட்டினால் தான் நாம் சர்வதேசத்தின் அழுத்தத்தை ஓரளவாவது குறைக்கலாம்.

நாங்கள் சர்வதேச பெரும்பான்மையை வென்றாக வேண்டும். சர்வதேச அபிப்பிராயம் என்ற போரில் நாங்கள் தோற்று வருகிறோம்.

கொள்கைகளும் பண்பும் போரை வெல்வதற்கு அவசியமானவையல்ல. அவை சமாதானத்தை வெல்வதற்குரியவை. நாங்கள் போரில் மட்டும் வெற்றியடைந்தவர்களாகக் கூடாது. சமாதானத்தில் தோற்காதவர்களாகவும் இருக்க வேண்டும். நாங்கள் சமாதானத்தை வெற்றி கொள்ள வேண்டும்.

இறுதியாக பிரிவினைவாதத்தை நாம் தோற்கடிக்க வேண்டுமாயின் அரசு பரந்து விரிந்தளவில் செயற்பட வேண்டும். எல்லாச் சமூகத்தினரையும் அதில் பங்குதாரராக்க வேண்டும். ஒவ்வொருவருடைய கூட்டு அடையாளத்தையும் கௌரவிக்க வேண்டும். இந்தச் சமூகங்களுக்கிடையில் அரசு நடுநிலையான ஒரு நடுவராகப் பணியாற்ற வேண்டும் இல்லாவிட்டால் எமது நடுவரின் தீர்ப்பு தமக்கு விரும்பிய ஒரு பெரும்பான்மைச் சமூகத்திற்கு பக்கச்சார்பான விதத்தில் வழங்கப்பட்டு விடும். இல்லாது விட்டால் பிரிந்து போவதற்கான அல்லது எதிர்ப்புக்கான நடவடிக்கைகள் வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இதனால் சர்வதேசத்தின் மதிப்பை நாம் இழக்க நேரிடும்.

இலங்கை தனக்குச் சொந்தமான எல்லாச் சமூகத்தினரையும் எல்லாப் பிரஜைகளையும் நியாயமாக நடத்துகின்றதா என சர்வதேசம் பார்வையிடும்.எனவே எல்லோருக்கும் நியாயம் கிடைக்க வகை செய்தல் வேண்டும். ஒவ்வொருவருடைய இனத்துவமும் மதமும் மதிக்கப்படல் வேண்டும். எங்களுடைய போருக்குப் பிந்தைய ஒழுங்கு பௌத்த கண்ணோட்டத்தைக் கொண்ட ஒரு நடுநிலைமையான கண்ணோட்டமாக இருத்தல் வேண்டும். அரசு ஒருகையால் பிரிவினைவாதத்தை ஒடுக்கி இனரீதியிலான சமஷ்டியை நிராகரிக்கும் அதேநேரத்தில் மறுகையில் மத்தியமயப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். அது சிங்கள மற்றும் தமிழ் தீவிரவாதத்தை நிராகரிக்க வேண்டும். உலக வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்hவிட்டால் இராணுவ வெற்றியிலிருந்து கிடைக்கும் பழங்களை நழுவ விட வேண்டியிருக்கும். அரசாங்கம் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு விடயத்தையும் நேரடியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

நாங்கள் உலகத்தின் எல்லாத் தரப்பிடமிருந்தும் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இதேமாதிரியான பிரச்சினைகளை வெற்றிகரமாகக் கையாண்டவர்களிடம் எமது கொள்கை வகுப்பாளர்கள் பேசுவதற்குத் தயாராக வேண்டும்.ஆசிய பொருளாதார அற்புதம் (Asian economic miracle) எங்களைச் சூழ நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய உள்நாட்டுப் பிரச்சினையை நாங்கள் அரசியல் சமூக நல்லிணக்கம் மூலம் தீர்க்காமலிருந்தால் எம்மைச் சூழ நிகழும் அந்த ஆசிய பொருளாதார அற்புதத்திலிருந்து கிடைக்கும் இலாபங்களை எம்மால் அனுபவிக்க முடியாமற் போகும். ஒவ்வொரு சமூகமும் ஏதோ ஒரு அளவில் சாடவதேசத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்தத் தொடர்பை அச்சுறுத்தலாகப் பார்க்காமல் அவற்றை ஒரு வாய்ப்பாக ஒரு சொத்தாக ஒரு பாலமாக ஏன் நம்மால் பார்க்க முடியாதிருக்கிறது.

பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த தற்கொலைத் தாக்குதலிடம் பல சமூகங்கள் சரணடைந்தது போல எமது மக்கள் சரணடைய மறுத்துள்ளார்கள். எங்களுடைய மக்கள் எதிரியைத் தோற்கடிக்கக் கூடிய ஒரு அரசாங்கத்தை தெரிந்தெடுத்திருக்கிறார்கள். தாங்கள் கஷ்டப்பட்டாலும் போரிடுவதற்கு தொண்டர்களைத் தந்து அரசாங்கம் முன்னே செல்ல ஆதரவளித்திருக்கிறார்கள். இந்த விடயத்தைச் செய்து முடிக்கும் வரை. நாங்கள் புலிகளைத் தோற்கடித்தோம். ஏனெனில் அது மக்கள் யுத்தமாக இருந்தது. இப்போது எமது மக்கள் புலம் பெயர்ந்த தமிழர்களால் முன்வைக்கப்படும் அரியல் திட்டங்களை தொடர்ந்து நிராகரிக்க வேண்டும். எல்லா மக்களும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை எதிர்த்து நடுவிலுள்ள ஒரு பாதையை தெரிவு செய்ய வேண்டும்.

சிறுபான்மைச்சமூகம் விட்ட அதேதவறை பெரும்பான்மைச் சமூகமும் விடக் கூடாது.. தமிழ் தேசியவாதம் தனது இராணுவ வலிமையை தொடர்பாக தன்னை மிகைப்படுத்திக் கற்பனை செய்து கொண்டு விட்டது. சிங்களவர்களையும் சிங்கள ஆன்மாவையும் அது குறைத்து மதிப்பிட்டிருந்தது. விளைவாக அது ஒரு பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

அதேபோல் சிங்களவர்கள் தம்மைப் பற்றி மிகையாகக் கற்பனை செய்து கொண்டு தமிழர்களையும் அவர்களது ஆன்மாவையும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

இரண்டு சமூகங்களுமே கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். முரண்பாட்டின் சுற்றுவட்டத்தில் அதேதவறு மீளவும் இடம் பெற அனுமதிக்கக்கூடாது. நாங்கள் பக்கங்களைப் புரட்டி புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டும். சிங்களவர்களும் தமிழர்களும் ஒருவரை ஒருவர் மதிக்கப் பழகிக் கொள்ளுதல் வேண்டும். எங்களுடைய இந்தச் சின்னஞ்சிறிய தீவில் அமைதியான சகவாழ்வுக்கான இடத்தை ஒருவருக்கொருவர் வழங்க வேண்டும். வேறு என்ன சாத்தியமான விடயங்கள் எங்கள் முன்னால் இருக்கின்றன?

நாங்கள் கடந்த காலத்தின் கைதிகளாக இருக்க முடியாது. நாங்கள் மூடுண்ட மனத்தினைக் கொண்டவர்களாக இருத்தலாகாது. திறந்த மனத்துடன் நாங்கள் இருத்தல் வேண்டும். நாங்கள் எல்லோரும் எங்களுடைய மக்கள், எங்களுடைய சமூகங்கள் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உணர்தல் வேண்டும். நாங்கள் எதிர்காலத்தை நோக்க வேண்டும். எங்களுக்கு எத்தகையதொரு எதிர்காலம் வேண்டுமென நாம் கற்பனை செய்ய வேண்டும். நாங்கள் தொடர்ந்து பல தசாப்தகாலமாக எல்லாவற்றையும் இழந்து வந்திருக்கிறோம். எனினும் அவற்றிலிருந்து 21 ஆம் நூற்றாண்டின் ஆசிய நவீனத்துவத்தை நோக்கி அணி நடை போடுவோம்.

Read more...

ஜனாதிபதியுடனான ஒப்பந்தத்தின் பிரகாரமே ஐ.நா. நிபுணர் குழு நியமனம்-சரத்பொன்சேகா

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதிக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே மூவர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இராணுவ முன்னெடுப்புக்கள் சர்வதேச சட்ட த்தின் பிரகாரமே முன்னெடுக்கப்பட்டன.

இதில் தவறு இழைக்கப்படவில்லை என்று ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். அரசாங்கம் தவறிழைக்காவிடின் ஐ.நா. நிபுணர் குழுவுக்கு ஏன் பயப்பட வேண்டும். அதில் இருந்து ஏன் ஒளிந்திருக்க வேண்டும்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக கடைப்பிடிக்கப்பட்டால் மருமகன் சரணடைவார். மக்களுக்கு பின் சென்று கொண்டிருந்த சி.ஐ.டி. யினர் தற்போது ராஜபக்ஷ குடும்பத்தினரை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இராணுவ முன்னெடுப்புக்கள் சர்வதேச சட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்பட்டன. இதில் தவறு இழைக்கப்படவில்லை. அதற்கு நான் பொறுப்பு கூறுவேன். ஜனாதிபதி 2009 ஆம் ஆண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே ஐ.நா. வின் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. தவறுகளை இழைத்திருக்காவிடின் ஒளிந்திருக்க ஏன் நீங்கள் முயலுகின்றீர்கள்.

நாட்டில் 30 வீதமானவரே 2000 டொலரை வருமானமாக பெறுகின்றனர். சம்பளத்தை பொறுத்தமட்டில் இராணுவ அதிகாரிகளே கூடுதல் சம்பளம் பெறுகின்றனர். சரியாக வேலை செய்தாலும் மரண அச்சுறுத்தல் அல்லது இடமாற்றம் வழங்கப்படுகின்றது. மக்கள் அரசாங்கத்தின் பால் அச்சம் கொண்டுள்ளனர். சட்டத்தரணிகள் எழுந்து நிற்கின்றனர். சட்டத்தை பாதுகாக்கின்றனர். யுத்தத்திற்கு பின்னர் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இனங் காணவும் இல்லை.இராணுவ வீரர்கள் தமக்கு சுமையாக இருக்கின்றனர் என அரசாங்கம் கருதுகின்றது. தற்போது இராணுவத்தினர் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தத்திற்கு பின்னர் அவர்களின் நலன்கள் பேணப்படுவதில்லை. அரசியல் தலையீட்டினால் பொலிஸ் சேவை இன்று சீர்குலைந்துள்ளது. அரசாங்கத்திற்கு சார்பானவர்களே வடக்கு கிழக்கில் சேவைக்கு அமர்த்தப்படுகின்றனர். அங்கு சேவையில் இருப்பவர்கள் இரண்டாம் தரமாகவே கணிக்கப்படுகின்றனர்.

தாய் நாட்டிற்கு பங்கம் ஏற்படாத வகையில் செய்ய வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் தயாரில்லை. முன்னர் பெற்றுக் கொண்ட ஆயுதங்களுக்கான கடனையே அரசாங்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. நாட்டில் சட்டம் பாதுகாக்க வேண்டும் சட்டம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கீழே இருக்கின்றது. அவர் முட்டாள்தனமான செயலையும் செய்வார். நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றப்படுமானால் எனது மருமகன் பொலிஸில் சரணடைவார். அவர் வயதுக்கு வந்தவர். அவரை சரணடையுமாறு நான் கூற வேண்டியதில்லை.அரசியல்வாதிகள் சட்டத்திற்குள் தலையீடுகளை செய்யக் கூடாது. பஞ்சாயுதகாரனும் பந்தம் பிடிப்பவர்களும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆடுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தேர்தல் விளம்பரத்திற்காக என்னிடம் ஆறு இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் கண்ணீர் மல்க அதனை பெற்றுச் சென்றார். மிரானில் 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அங்கு அனுப்பியது யார்? என்பதை கண்டறிய வேண்டும். உள்நாட்டு முரண்பாடு சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 60 வயது வரை நான் சேவையில் இருந்திருக்கலாம். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னரே நான் ஓய்வு பெற்றேன். வெளிநாட்டுக்கு செல்லும் இராணுவ வீரனுக்கு 200 டொலர்களே வழங்கப்படும். எனினும் ஜனாதிபதியின் மகனுக்கு 5000 டொலர்கள் வழங்கப்பட்டது எவ்வாறு? அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் மக்களை கைது செய்யும் நடவடிக்கையிலேயே சி.ஐ.டி. யினர் ஈடுபட்டனர். எனினும் இன்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பின்னாலும் சபாநாயகர் பின்னாலும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பின்னாலும் அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். பந்தம் பிடிப்பதற்கு அன்று ஒருவரே இருந்தார் இன்று அப்பணியை பலரும் செய்கின்றனர்.

நன்றி வீரகேசரி

Read more...

சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் வருடாந்தம் நிகழ்த்தப்படும் வீரமக்கள் தின நிகழ்வுகள் நேற்று பிற்பகல் சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் , தமிழீழ விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும் செயலதிபருமான தோழர் உமா மகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நாளான ஜுலை 13 ம் திகதி முதல் 19 ம் திகதி வரையான நாட்கள் வீரமக்கள் தினமாக பிரகடனம் செய்யப்பட்டு, போராட்டத்தின் பெயரால் உயிரிழந்த போராளிகள் பொதுமக்கள் வருடந்தோறும் நினைவு கூரப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

போராட்டத்தின் பெயரால் உயிரிழந்த அரசியல் கட்சித் தலைவர்கள் , போராளிகள் , பொதுமக்களின் திருவுருவப் படங்களுக்கான மலரஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. திருவுருவப்படங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளை உறுப்பினர்கள் , ஜேர்மன் கிளை உறுப்பினர்கள் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளை சார்பாக கிளையின் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு. மனோ அவர்கள் ஆரம்ப உரையை நிகழ்;த்தினார். தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் திரு. சித்தார்த்தன் அவர்களின் நினைவுரையை சுவிஸ் கிளை உறுப்பினர் திரு . சிவானந்தசோதி அவர்கள் வாசித்தளித்தார்.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையிலிருந்து திரு . ஜெகநாதன் , சுவிஸ் கிளையிலிருந்து திரு. கலாமோகன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை சார்பாக திரு. பெர்ணாண்டோ , சுவிற்சர்லாந்து தமிழர் கலாச்சார மன்றத்தின் சார்பாக திரு. விஜயநாதன் இரட்ணகுமார் , இலங்கையர் புலம்பெயர் சம்மேளனம் சார்பாக திரு. நந்தன ஆகியோர் உரையாற்றினர்.

அங்கு ஜெகநாதன் அவர்கள் பேசுகையில், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் போராட்ட இயக்கங்கள் யாவுமே மக்களுக்கு தவறு இழைத்திருக்கின்றது எனவும், இப்போராட்டத்தின் ஆரம்ப சக்தியாக புளொட் இயக்கத்தினராகிய தாம், போராட்டத்தின் பெயரால் இடம்பெற்று முடிந்துள்ள இழப்புக்களுக்கும் தவறுகளுக்குமான பொறுப்பின் பங்கினை ஏற்றுக்கொள்ளவதாகவும் தெரிவித்தார். அத்துடன் இப்போராட்டமானது தனியே தமிழீழத்திற்கான போராட்டமாக அமைந்திருக்கவில்லை எனவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சகலரும் சமத்துவமாக வாழ்வதற்கானதோர் நிலைமையினை உருவாக்குவதற்கான போராட்டமாகவே அமைந்திருந்தது. இவ்விடயத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் காத்திரமான பங்கினை ஆற்றியுள்ளனர். அத்துடன் இன்று போராட்டம் ஓய்ந்திருந்தாலும் அது முற்றுப்பெறவில்லை என தெரிவித்த அவர் தொடர்ந்தும் எம் மக்களின் தேவைகளுக்கான தமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

திரு. இரட்ணகுமார் அவர்கள் பேசுகையில், சுவிற்சர்லாந்து தமிழர் கலாச்சார மன்றம் எனும் அமைப்பு சுமார் கடந்த 3 தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கான சேவையினை செய்து வருவதாகவும,; இவ்வமைப்பு இலங்கையில் இருந்திருந்தால் அது நேரகாலத்துடன் மரணித்திருக்கும் எனவும் சுவிற்சர்லாந்தின் சட்டதிட்டங்களானது தாம் தொடர்ந்தும் செயற்படுவதற்கு வழிவிட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், தமது செயற்பாடுகளை பாசிசம் முடக்க முற்பட்டபோது அதற்கு உதவியாக நின்று எம்மீது சேறுபூசிய ஊடகங்கள் இன்று எமது சேவையினை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் எம் நிகழ்வுகளுக்கு விளம்பரம் செய்ய தாமாகவே முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

இலங்கையர் புலம்பெயர் சம்மேளனம் சார்பாக பேசிய திரு நந்தன அவர்கள் பேசுகையில் : இலங்கை என்பது இங்கு வீற்றிருக்கின்ற அனைத்து மக்களதும் தாய்நாடு எனவும் அங்கு இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்துள்ளவர்கள் அனைவரும் இலங்கையரே எனக்கூறிய அவர் அவ்வாறு உயிரிழந்த ஒரு தொகுதியினரை நினைவுகூரும் இந்நிகழ்வில் பங்கு கொள்வதில் தான் மகிழ்சி அடைவதாக தெரிவித்தார்.

அத்துடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை சார்பாக பேசிய திரு. பெர்ணாண்டோ அவர்கள், போராடப் புறப்பட்ட இயக்கங்களை பாசிசம் ஒடுக்கியதன் கொடுமைகள் என்றும் மறக்க முடியாதவை என தெரிவித்ததுடன், வீர மக்களுக்கு அஞ்சலியாக கவிதை ஒன்றையும் அங்கே சமர்ப்பணம் செய்தார்.

வீரமக்கள் தினம் வீரமறவர் தினம்

விடியல் நெஞ்சில் சுமந்து
வீரவாகை தலையில் ஏந்தி
வீரத்தின் மறவர்களாக
வீற்றிருந்த தோழர்கள் மறைந்த தினம்

வெற்றி மாலை கழுத்தில் சூடி
வேலும் வாளும் கரத்தில் ஏந்த
விடுதலை தனயன்களை
வித்தாக தரைக்குத் தந்த
வீரமிக்க மக்கள் மறைந்த தினம்

காவியங்கள் பல படைக்க
காத்திருந்த கவரிமான்களை
கறைபடிந்த மனிதர்கள்
கல்லறைக்குள் மறைத்த தினம்

வாழேந்தி பகைமுடித்து
வழிகளில் புகழ் ஏந்தி
வழிகாட்டிக் கற்களாக நிற்க வேண்டிய உத்தமர்களை
வஞ்சகர்கள் தாம்வாழ அன்று
வாள்கொண்டு வெட்டிவீழ்த்தி மறைத்த தினம்

தலைதனில் முடிசூடி
தரணிதனை அளந்த
தன்னலமற்ற தோழர்கள் இவர்கள்
தலைக்கனம் பிடித்து வெறிதனை தீர்க்கும்
தரை கெட்ட மனிதர்களால் அனுப்பிய தினம்

நெஞ்சத்தில் விடுதலை ஏந்திய தோழர்களை
நெருப்பில் இட்டு கருக்கிய வரலாறு நம்மினத்தில்
நெஞ்சம் கனக்கிறது தோழர்களே என்றும்
நெடுந்தூரம் பயணிக்கும் தினம்

விரல் தனை விந்தை காட்டி
விவேகத்துடன் சிந்தை நோக்கி
வீரத்தின் அரசிகளாக வலம் வந்த
வீரத்திண்ணம் தலையில் சுமந்த
விவேகிகள் விதைக்கப்பட்ட தினம்

கைகோர்த்த தோழர்களை
கைத்துப்பாக்கியால் அழித்த வடுக்கள்
கைதனை தூக்கி நின்ற வேளை
கணப்பொழுதில் கருக்கிபாசிசப்புலிகள்
கண்ணை விட்டு அழியாத தினம்

உன்மக்கள் மனங்களை நேசிக்கத் தெரியாத
உவர்ப்பான நெஞ்சம் கொண்டோரே
உள்ளம் கையில் எதிர்பாராதே
ஊற்றெடுக்கும் நல்லெண்ணம் தனை
உரிமையோடு நாங்கள் சந்திக்கும் தினம்

காவியங்களை கல்லறைக்கு
களப்பலிகளாக வசைபாடிய வஞ்சகர்கள்
கரங்களில் இருக்கும் கறைகளை
கழுவ மறந்ததினால் காவியங்கள் சிறைகளில்
கட்டுப்பாட்டுடன் அடைக்கப்பட்ட தினம்

கண்ணின் கருமணிகளை
கயவர் கருக்கியதால்
கனவாய் போகவில்லை இலட்சியங்கள்
கனிந்து வரும்காலம் இது எங்கள் தினம்

தோல்வியில்லாத நம்பயணம்
தொடர்ந்து பின்பற்றிச் செல்லும்
தோழர்களின் வழியில் என்றும்
தோகை மயிலும் விரித்தாடும் தோகைதனை

சூனிய எண்ணங்களை
சுயநலவாதிகள் அன்று
சுட்டெரித்து தெளிவடைந்திருந்தால்
சுடுசோறு பதமாய் நம்கைகளில்

சிந்திய குருதி வெள்ளத்தின் மீது
சிந்தித்து என்றென்றும் செயல்படுவோம்
சிறகுடைக்கப்படும்மண்ணில் புதைக்கப்பட்ட
சிந்தையில் வாழும் எங்கள் தோழர்கள் மீது..

(ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை தோழர்கள்.)..


அத்துடன் பல பெரியோர் சிறுவர்களின் கலைநிகழ்வுகளும், இறுதியாக 27.06.2010 அன்று நடைபெற்ற பரீட்சையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


















Read more...

Monday, July 5, 2010

இத்தாலியில் வேலை வாய்ப்பு; மக்களை ஏமாற்றிய வெளிநாட்டவர் கைது

இத்தாலியில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்த வெளிநாட்டவர் ஒருவரை மோசடிகள் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மக்களிடம் நிதி மோசடியில் ஈடுபடும் நோக்கத்தில் செயற்பட்டுள்ள மேற்படி சந்தேகநபர், இலங்கைக்கான விசா அனுமதிப்பத்திரம் முடிவடைந்த நிலையில் தங்கியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

கொழும்பில் அமைந்துள்ள பிரபல தொடர்மாடியொன்றில் தங்கியுள்ள மேற்படி சந்தேகநபர், தான் தங்கியிருந்தமைக்கான வாடகையினையும் வழங்கியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் உடல்நிலை மோசமாகியுள்ளதால், சிறைச்சாலை வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

Read more...

மூன்று இனந்தெரியாத சடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு புறநகர்ப் பகுதிகளான வத்தளை , களுத்துறை , கல்கிசை ஆகிய பிரதேசங்களில் மூன்று இனந்தெரியாக சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரியவருகின்றது. பொலிஸ் தகவல்களின் பிரகாரம் களுத்துறை சனச வங்கிக்கு முன்னால் உள்ள மரமொன்றில் தொங்கிக்கொண்டிருந்த உடலம் ஒன்று நேற்று 4ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலம் சுமார் 5 அடி உயரமுள்ள ஆண் ஒருவருடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவ்விடத்தில் செருப்பு கூட்டம் ஒன்றும் நீல நிற வரி சறம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அடுத்து வத்தளை பிரீத்திபுர சிறுவர் இல்லத்திற்கு பின்னால் உள்ள கரையோரப் பிரதேசத்தில் சுமார் 5 அடி 2 அங்குலம் உயரமுள்ள 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் இறக்கும்போது மஞ்சள் - நீல ரீசேர்ட் அணிந்திருந்துள்ளார். இச்சடலம் அடையாளம் காண்பதற்காக றாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்கிசை கடற்கரைப் பிரதேசத்தில் இளைஞன் ஒருவனின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இளைஞன் காலி பிரதேசத்திலிருந்து வேலைதேடி கொழும்புக்கு வந்திருக்ககூடும் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
மேற்படி உடலங்கள் தொடர்பாக பிரதேச பொலிஸார் மேலதிக விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

நியூயார்க் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் வெளியேற்றம்

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஜான்.எப். கென்னடி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இது எப்போதும் பரபரப்பாக இயங்க கூடியது. நேற்று அமெரிக்காவின் சுதந்திரதினம். எனவே, தேசிய விடுமுறை நாளான நேற்று ஏராளமானவர்கள் சுற்றுலா சென்றனர்.

எனவே, விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே மாலை 5.40 மணி அளவில் விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு பெண் டெலிபோன் செய்தாள்.

அதில் அவள் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுத்தாள்.

இதனால் பரபரப்பான ஊழியர்கள் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவசர நேரத்தில் செயல்படும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்

இதையடுத்து பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விமான நிலையம் முழுவதும் சோதனையிடப்பட்டது. இதனால் பயணிகளுக் கிடையே பதட்டமும் பீதியும் ஏற்பட்டது. முடிவில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை.

வெறும் புரளி என தெரியவந்தது. இருந்தும் இந்த செய்தி அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பரவியது. எனவே அனைத்து விமான நிலையங்களிலும் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

இதற்கிடையே விமான நிலையத்துக்கு டெலிபோனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொதுநலவாய வீரர்களை கொல்ல தீவிரவாதிகள் சதி: அமெரிக்கா எச்சரிக்கை

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி எதிர்வரும் அக்டோபர் 2ம் திகதி முதல் 14ம் திகதிவரை டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு தீவிரவாதிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான ஸ்டிராட்பர், அமைப்பும் காமன்வெல்த் வீரர்களை தீவிரவாதிகள் தாக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதை அந்த நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது. வீரர்கள் தங்கும் இடங்களிலும், விளையாட செல்லும்போதும் வீரர்கள் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறியுள்ளனர்.

வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளித்திருக்கும் போதிலும் அதையும் மீறி தாக்குதல் நடத்த பல்வேறு திட்டங்களை தீவிரவாதிகள் உருவாக்கி உள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

Read more...

இராணுவத்திலிருந்து தப்பியோடிய 16,011 பேர் பணி நீக்கம்

இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடிய 16,011 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆண்டு யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து மூன்று தடவைகள் இவர்கள் மீண்டும் சேவையில் இணைந்து கொள்வதற்கும் , இராணுவத்திலிருந்து விலகிச் செல்வதற்கும் பாதுகாப்பு அமைச்சினால் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்தது.

இந்த பொது மன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான படையினர் சேவையிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி முடிவடைந்த மூன்றாது பொது மன்னிப்புக் காலத்தில் மட்டும் 2,062பேர் அதிகாரப்பூர்வமாக பணியிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்.

Read more...

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மண்டியிடாது கெஹலிய

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் எங்கள் நண்பர்களே என்றும் எங்கள் எதிரிகள் அல்ல என்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியமானது நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை கருத்திற் கொண்டே கடனுதவியை மிக விரைவாக தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் அவர்கள் எமது செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், புரிந்துணர்வின் அடிப்படையில் அவர்களுடன் நல்லுறவை பேணிவருவதாகவும் அவர்களிடம் எக்காலத்திலும் இலங்கை மண்டியிடாது எனவும் கூறியுள்ளார்.

Read more...

திருமணமான 10 நாளில் புதுப்பெண்ணின் காதலன் சரமாரி வெட்டிக் கொலை.

இந்தியாவில் மானாமதுரை அருகே உள்ள புதுக்குளத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது27), டிரைவர் இவரும் கட்டிக்குளத்தை சேர்ந்த விஜயன் மகள் மேகலா(19)வும் காதலித்தனர். இவர்களின் காதலுக்கு விஜயன் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் மேகலா தனது காதலில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து விஜயன் தனது மகளுக்கு உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார். அதே ஊரை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 1.6.2010 அன்று மேகலாவை திருமணம் செய்து கொடுத்தார். ஆனாலும் மேகலாவால் தனது காதலனை மறக்க முடியவில்லை. எப்போதும் அவர் நினைவாகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில் மேகலாவும் சிவக்குமாரும் தனிமையில் சந்தித்து நாம் வேறு எங்கேயாவது சென்றுவிடலாம் என முடிவு செய்தனர். அதன்படி திருமணம் முடிந்து 10 நாட்கள் கழித்து மேகலா சிவக்குமாருடன் ஓட்டம் பிடித்தார். தனது மகள் வேறு ஒருவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்த பிறகும் காதலனுடன் சென்றுவிட்டாளே என விஜயன் ஆத்திரம் அடைந்தார். தனது மகள் மற்றும் காதலன் சிவக்குமாரை தேடி கண்டுபிடிக்க முடிவு செய்தார்.

இந்த நிலையில் அவர்கள் புதுக்கோட்டையில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து விஜயன் மற்றும் உறவினர்கள் மேகலாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களை சேர்த்து வைக்கிறோம். நீங்கள் கட்டிக்குளத்திற்கு வந்து வீடு எடுத்து தங்க ஏற்பாடு செய்கிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.

இதனை நம்பி காதல் ஜோடி மேகலா, சிவக்குமார் இருவரும் புறப்பட தயாரானார்கள். விஜயன் மற்றும் உறவினர்கள் அவர்களை நேற்று நள்ளிரவு பஸ்சில் மானாமதுரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் கட்டிக்குளம் வந்தனர்.

தனது மகள் ஓடிப்போனதில் ஆத்திரத்தில் இருந்த விஜயன் திடீரென ஆவேசம் அடைந்து சிவக்குமாரை தரையில் தள்ளி தரதரவென இழுத்து அடித்து உதைத்தார். மேலும் அரிவாளால் அவரது கழுத்தை ஆடு அறுப்பதுபோல் அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் சரிந்தார். இதிலும் ஆத்திரம் அடங்காத விஜயன் மற்றும் உறவினர்கள் சிவக்குமாரின் உடலை துண்டு, துண்டாக வெட்டினர். தனது காதலன் தன் கண்முன் வெட்டப்படுவதை கண்டு அலறித்துடித்த மேகலாவையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. மேகலாவையும் சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதையடுத்து அங்கிருந்து விஜயன் மற்றும் உறவினர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் மேகலாவை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை போலீசார் விரைந்து வந்து சிவக்குமார் பிணத்தை கைற்பற்றி பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விஜயன் உள்பட உறவினர்கள் 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

Sunday, July 4, 2010

ஐ.நாவுக்கான பிரதித் தூதுவர் அவசர அவசரமாக நாட்டுக்கு திருப்பி அழைப்பு.

ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக நியூயோர்க்கில் கடமையாற்றிவந்த பந்துள ஜெயசேகர அவசர அவசரமாக நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். இவர் சில மாத காலங்களுக்கு முன்னர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த நிலையில் வெளிவிவகார அமைச்சு இத்திடீர் முடிவை எடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு அவரை உடனடியாக இலங்கைக்குத் திருப்பி அழைத்துள்ளமையை ஏற்றுக்கொண்டுள்ளது. மிகவும் பாரதூரமான விடயம் ஒன்றை அடுத்தே பந்துலக திருப்பி அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அமைச்சரக அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இவ்வாறு அவர் அழைக்கப்பட்டமைக்கான பின்னணி தொடர்பாக கொழும்பு வட்டாரங்கள் தகவலறிய முற்பட்டுவருகின்றன.

இவ்வாறே ஐ.நா விற்கான இலங்கைத்தூதராக ஜெனிவாவில் கடமையாற்றிய தயான் ஜெயதிலக அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். அவர் 13 திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்ற விடத்தினை தொடர்சியாக வலியுறுத்தியமையே அவர் பதவியிழக்க காரணமாயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

ஐ.நா விசாரணைக்குழு விவகாரத்தில் எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் இருதரப்பு மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் நடவடிக்ககைகள் மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட குழு தொடர்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைருமான விமல் வீரவன்ச அவர்களும் தமது தமது நிலைப்பாட்டினை வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து அவர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளபோதும் தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறான அழுத்தங்கள் ஏற்பட்டாலும் நிலைப்பாட்டில் மாறுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கான முடிவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுக்கும்வரை இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை சுற்றிவளைக்குமாறும், அங்குள்ள உத்தியோகர்த்தர்களை தடுத்து வைக்குமாறும் பொதுமக்களிடம் கடந்த வாரம் விமல் வீரவன்ஸ கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்பான நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் அரசாங்க அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பில் அழுத்தங்கள் எதுவும் பிரயோகிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் 3 பேரைக் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பதானது, இலங்கைத் தலைவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் ஆரம்பகட்ட நடவடிக்கை என்றும் விமல் வீரவன்ஸ இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை தொடர்பாக ஆலோசனைகளை பெறவே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்‐கீ‐மூன் இந்த நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் நாட்டின் இறையாண்மைக்கு அழுத்தங்கள் ஏற்படும் என்பதால், அரசாங்கம் அரசாங்கம் இக்குழுவை அங்கீகரிக்கப்போவதில்லை எனவும் அவர்களை நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்போவதில்லை எனவும் அறிவித்திருந்தது.

நிபுணர்கள் குழுவிற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காததால், சர்வதேச அழுத்தங்கள் ஏற்படாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் அணிசேரா நாடுகளும் நிபுணர்கள் குழுவை நிராகரித்துள்ளதன் மூலம் இது தெளிவாகியுள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போரில் ஏற்பட்ட சம்பவங்களை அறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதால், நிபுணர்கள் குழு அவசியமற்றது எனவும் அந்த பேச்சாளர் கூறியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஐநா செயலாளரின் நிபுணர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

Read more...

புலிகள் மீண்டும் ஒன்றிணைய இடமளிக்காத வகையில் நடவடிக்கைகள் தீவிரம்!

புலிகள் மீண்டும் ஒன்றிணைய இடமளிக்காத வகையில் முப்படை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவுகளில் தகவல் பணியகங்களுக்கான புலனாய்வு அதிகாரிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் புலனாய்வுப் பிரிவினரின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து டெட்டநேட்டர்கள் கொண்டு செல்லப்பட்டமை, தமிழ் நாட்டில் இருந்து பெருமளவிலான டெட்டநேட்டார்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு முயற்சிக்கப்பட்டமை மற்றும் மட்டக்களப்பு, மாத்தறை பகுதிகளில் புலிகளின் இரண்டு புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டமை ஆகிய சம்பவங்களினால் வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை அவுஸ்த்ரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை போல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த புலிகளின் ஆதரவாளர்கள்,புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.

கிட்டு மோட்டார் படையணியை சேர்ந்த தலைவர் ஒருவர் யாழ்ப்பணத்தில் இருப்பதாக அறியக் கிடைத்துள்ளது எனவும் இந்த நிலைமைகளினால் புலனாய்வுப் பிரிவினரின் எண்ணிக்கையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை வடக்கு கிழக்கில் கடற்படையினரின் ரோந்து பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கடற்படைத் தளபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள பெரும் எண்ணிக்கையான மக்கள் கையடக்க தொலைபேசிகளை வைத்திருப்பதால், இந்த கையடக்க தொலைபேசிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து தினம் அதிகளவிலான அழைப்புகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், புலிகளின் சர்வதேச வலையமைப்பினர் இலங்கையில் மீண்டும் தலையீடுகளை முயற்சிப்பதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியவந்துள்ளது எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

Read more...

அபாயங்களுடன் வரும் இலங்கை அகதிகளை மீண்டும் அபாயத்துக்குள் தள்ளமுடியாது.

இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் யூலியா கில்லர்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அகதிகள் தொடர்பிலான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு, அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜுலியா அவுஸ்திரேலிய எதிர்கட்சிகளுக்கு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அகதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல், எதிர்ப்பு தெரிவித்து சுலோகங்களை தூக்குவது ஏற்புடையதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இது எதிர்கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளே தவிர, உண்மையான கரிசனைக்கானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் வாரம் தாம் இலங்கை அதிகள் தொடர்பான தீர்வினை முன்வைக்க விருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இதற்கிடையில் பசுபிக் கொள்கை அடிப்படையில், அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிப்படகுகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்ட்டது.

இதற்கு பதில் வழங்கிய அவர், பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, அபாயகரமான முறையில் அவுஸ்திரேலியா வருகின்றவர்கள் தொடர்பில் கரிசனை காட்ட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்மஸ் தீவில் இலங்கையர் தற்கொலை செய்ய முயற்சி

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விலாவுட் தடுப்பு முகாமில் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ள குறித்த இலங்கையர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

28 வயதான குறித்த இலங்கையர் நியாயமான புகலிடக் கோரிக்கையாளர் என்ற போதிலும், பாதுகாப்பு சோதனைகள் முடிவடையாத காரணத்தினால் தொடர்ந்தும் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ்மஸ் தீவில் இந்த வாரம் நான்கு பேர் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

Read more...

மட்டக்குளிய பகுதியில் பதற்றநிலை.

மட்டக்குளி பொலிஸ் நிலையப் பொலிஸாருக்கும் அப்பிரதேசவாசிகளுக்கும் இடையில் ​நேற்று இரவு எட்டு மணியளவில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுத் தாக்க முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸாரும் தீவிரமாக ஈடுபட்டனர்.

இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். இதனால் இப்பிரதேசத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை பதற்ற நிலைமை நீடித்தது. போதைபொருளை உடைமையில் வைத்திருந்தார் என்கிற சந்தேகத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை மட்டக்குளி பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அறிந்து ஆத்திரம் அடைந்ததாலேயே அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Read more...

Saturday, July 3, 2010

விமல் வீரவன்சவின் கூற்றுக்காக அரசாங்கம் மன்னிப்பு கோருமாம்.

வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் பத்திரிகையாளர் மாநாடொன்றில் பேசுகையில் , இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள குழுவை ஐ.நா கலைக்கும் வரை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டு அதன் ஊழியர்கள் அலுவலகத்தினுள்ளேயே முடக்கப்படுவர் என தெரிவித்திருந்தார்.

இக்கருத்து பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளதுடன் , அரசாங்கம் அக்கருத்து விமல் வீரவன்சவின் தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஐ.நா வின் பேச்சாளர் அவர்கள் அமெரிக்க நிவ்யோர்க்கில் உள்ள ஐ.நா தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் இலங்கை அரசாங்கம் இக்கருத்துத் தொடர்பாக ஐ.நா சபையிடம் மன்னிப்புகோரவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நாம் அதன் விளக்கத்தை எதிர்பார்த்திருக்கின்றோம் என தெரிவித்த அவர் அரசாங்கம் விமல்வீரவின்சவின் கூற்று அவரது தனிக்கூற்று என தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார்.

Read more...

அர்ஜெண்டினாவை வீழ்த்தியது, அரையிறுதியில் ஜெர்மனி

ஆட்டம் துவங்கிய மூன்றாவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்ட ஜெர்மனி அணி இறுதிவரை ஆதிக்கம் செலுத்தி மேலும் 3 கோல்களைப் போட்டு அர்ஜெண்டினா அணியை வென்று அரையிறுத்திக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரிலுள்ள கிரீன் பார்க்கில் சற்று முன் நடந்த முடிந்த மூன்றாவது கால் இறுதியில் இந்த உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கியுள்ள பலம் வாய்ந்த அணியில் முக்கியமானது என்று கூறப்பட்ட அர்ஜெண்டினாவை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது ஜெர்மனி.

ஜெர்மனி அணிக்கு எதிராக விளையாடியது தென் அமெரிக்க கண்டத்தின் தலை சிறந்த அணிகளில் ஒன்றுதானா? அதுவும் இன்றைய உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரரான டீகோ மரடோனாவால் பயிற்றுவிக்கப்பட்ட அணிதானா? என்ற சந்தேகங்களை எழுப்பியது. அந்த அளவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஆடியபோல் இருந்தது அர்ஜெண்டினாவின் ஆட்டம்.

ஆட்டம் துவங்கிய 3வது நிமிடத்தில் கிடைத்த ஒரு பெளல் வாய்ப்பை பயன்படுத்தி கோலை நோக்கி பொடோல்ஸ்கி அடித்த பந்தை, எந்த தடையுமின்றி முன்னேறி வந்த லேசாக தலையால் முட்டி கோலிற்குள் தள்ளினார் தாமஸ் முல்லர். அர்ஜெண்டினா டி-க்குள் வந்த பந்தை முன்னால் நின்று தடுக்க ஒரு தடுப்பாட்டக்காரரும் அங்கு இல்லாதது ஆச்சரியம்தான்.

இதன் பிறகு அர்ஜெண்டினாவின் ஆட்டம் சூடு பிடித்தது, ஆனால் அவர்களால் 4 பேர் கொண்ட ஜெர்மன் அணியின் தடுப்பாட்ட அரணை உடைக்க முடியவில்லை. பந்து ஜெர்மனியின் டி-யை நெருங்கியபோதெல்லாம், 6,7 ஜெர்மனி வீரர்கள் கோட்டை போல் நின்று காத்தனர்.

ஆனால் ஜெர்மனியின் முன்கள வீரர்கள் பொடோல்ஸ்கி, முல்லர், மிராஸ்லாவ் குளோஸ் ஆகியோர் நினைத்தபோதெல்லாம் அர்ஜெண்டினாவின் டிக்குள் புகுந்த தாக்கினர். 23வது நிமிடத்தில் டிக்குள் அடிக்கப்பட்ட பந்தை கோலை நோக்கி தட்டினார் குளோஸ், ஆனால் பந்து கோலிற்கு மேல் பறந்தது.

அடுத்த 10 நிமிடங்களுக்கு மெஸ்ஸி, டீவெஸ், ஹிகுவெய்ன் ஆகியோர் ஜெர்மனி கோலைத் தாக்கினர், ஆனால், எதுவும் கோலாகவில்லை. 34வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை கோலாக்கத் தவறினார் டீவெஸ்.

இடைவேளைக்குப் பிறகு அர்ஜெண்டினாவின் ஆட்டத்தில் சூடு பிடிக்கும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. 53வது நிமிடத்தில் பந்துடன் டிக்குள் புகுந்த டீவெஸ் கோலை நோக்கி அடித்த பந்து ஜெர்மனி தடுப்பாட்டக்காரர் முகத்தில் பட்டு வெளியில் பறந்தது. அது நிகழாமல் இருந்திருந்தால் அர்ஜெண்டினா நிச்சயம் சமன் செய்திருக்கும்.

இதனைத் தொடர்ந்து 57வது நிமிடத்தில் பொடோல்ஸ்கி கொடுத்த அருமையான கிராஸை கோலி இடைமறித்து தடுத்துப் பிடித்தார். ஆனால் அர்ஜெண்டினா கோலை நோக்கி அடுத்தடுத்து படையெடுத்து தாக்குதல் நடத்தியது ஜெர்மனி. அதற்கு 66வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.

பல தடுப்பாட்டக்காரர்களை கடந்து டி-யை நெருங்கிய பொடோல்ஸ்கி, பந்தை டிக்குள் தட்டிவிட அது அர்ஜெண்டினா தடுப்பாட்டக்காரருக்கும் கோலிக்கும் அகப்படாமல் கடக்க, அதனை சிரமமின்றி கோலிற்குள் தள்ளினார் குளோஸ்.

அடுத்த 8வது நிமிடத்தில் மந்தையாக வந்து டி-க்குள் புகுந்து தாக்கிய ஜெர்மனி அணியினர் மூன்றாவது கோலைப் போட்டனர். ஆர்னி பிரடெரிக் கோலைப் போட்டார். ஆட்டம் முடிய ஒரு நிமிடமே இருந்தபோது நடுக்களத்தில் இருந்து பந்தைப் பெற்றுக் கொண்டு வந்த குளோஸ் 4வது கோலை அடித்தார்.

4-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி தோற்கடிக்கப்பட்டது என்பது அந்த அணி ஆடிய ஆட்டத்திற்கு கிடைத்த முடிவு என்றாலும், டீகோ மரடோனா என்கிற ஒரு மாபெரும் கால்பந்தாட்ட வீரனால் பயிற்றுவிக்கப்பட்ட அணி, இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது சகிக்க முடியாததான்.

Read more...

சுவிற்சர்லாந்து தியாகிகள் தினம்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் கடந்த 20 ஆண்டுகளாக தவறாது நினைவுகூரப்பட்டு வரும் தியாகிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுவிற்சர்லாந்தின் தலை நகர் பேர்ன் மாநிலத்தில் கும்லிங்கன் எனுமிடத்திலுள்ள உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த போராளிகள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் நினைவுகூருமுகமாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா அவர்களை புலிப்பாசிசம் கோடம்பாக்கத்தில் நிராயுதபாணியாக நின்றபோது காவு கொண்ட நாளான ஜூன் 19ம் திகதி தியாகிகள் தினமாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இத்தினம் இவ்வாண்டு இலங்கையின் வட-கிழக்கு , ஆசியாசிவில் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் , ஐரோப்பாவில் பிரான்ஸ் , ஜேர்மன் , லண்டன் , சுவிற்சர்லாந்து , மற்றும் கனாடா என உலகம் பூராகவும் கொண்டாடப்பட்டுள்ளது.

பேர்ண் மாநகரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வுகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் , மற்றும் பொதுமக்களுடன் அவர்களது நேச அமைப்புக்களான புளொட் , ஈபிடிபியினரும் கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது.

போராட்டத்தின் பெயரால் உயிரிழந்த போராட்ட அமைப்புக்களின் தலைவர்கள் , போராளிகள் , அரசியல்வாதிகள் , பொதுமக்களின் திருவுருப்படங்களினால் சோடனை செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலிச் சுடரேற்றி நிகழ்வுகள் ஆரம்பமாயின. அவ்வமைபின் உறுப்பினர்கள் , சக அமைப்புக்களை சேர்ந்தோர் தமது நினைவுரைகளை நிகழ்த்தினர்.

ஈபிஆர்எல்எப் இன் சர்வதேச கிளைகளுக்கான பொறுப்பாளர் திரு. தம்பா அவர்கள் பேசுகையில், நாபா அவர்கள் போராட்டத்தில் எவ்வாறு தன்னை இணைத்துக்கொண்டார் என்பதையும் அவர் பணிகள் தொடர்பாகவும் விளக்கியதுடன் மறைந்த தமது தலைவருக்கு தாம் அஞ்சலி செலுத்துவதற்காக பல இன்னல்களை சந்தித்துவந்துள்ளதை நினைவு கூர்ந்ததுடன் குறிப்பிட்ட நிகழ்வினை சிறப்பாக நிகழ்த்திய சுவிஸ் கிளையினருக்கு நன்றியை தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் நாம் 20வருட தியாகிகள் தினத்தை நினைவு கூரூவதில் பெருமையடைகின்றோம். ஏனெனில் இத்தியாகிகள் உயரிய இலட்சியங்களுடன் தொலைதூரக் கனவுகளுடன் போராடப்புறப்பட்டவர்கள். அவர்கள் எம் ஒவ்வொருவருடனும் இனைந்து பணியாற்றிய காலங்களைத்தான் நாம் இலகுவில் மறந்துவிட முடியுமா? தமிழ் சமுகத்தில் பல ஆற்றல்மிக்க தலைவர்கள் கல்விமான்கள் சமுகசெயற்பாட்டாளர்கள் புத்தியீவிகள் என பல்வேறு தரப்பிபினர் படுகொலை செய்ப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் இத்தியாகிகள் தினத்தில் நினைவுகூறுவோம். இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக இடைவெளியினூடாக இவ்வருடம் வடகிழக்கில் தியாகிகள் தினம் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்ட்டது. அதேபோல் வெளிநாடுகளிலும் பிரித்தானியா கனடா ஜேர்மனி பிரான்ஸ் போன்ற இடங்களில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இது தோழர்களாகிய எமக்கு உற்சாகத்தை தருகின்றது. இதனூடாக எமது கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்று கூறினார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளை சார்பாக அக்கிளையின் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு. ரட்ணகுமார் அவர்கள் கலந்து கொண்டு பேசியிருந்தார். அவர் பேசுகையில் , ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்களும் சுரண்டல்களும் உலகின் பாமர மக்களின் தலைவிதியையே தகர்த்துவிடும் என்பதை தோழர்கள் மத்தியில் ஆணித்தரமாக பதித்துவைத்தவர் தோழர் நாபா எனவும் அவரின் அன்றைய கூற்று நிதர்சனமாகி வருவதை எம் கண்முன்னே காணக்கூடியதாகவுள்ளதாகவும் தெரிவித்துடன் , புளொட் சுவிஸ் கிளையினரால் விடுக்கப்பட்ட நினைவுத் துண்டுப்பிரசுரமொன்றும் பங்கு கொண்டிருந்தவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும் மட்டு-அம்பாறை மக்கள் அமைப்பான உதயத்தின் பொதுச் செயலாளர் திரு. அழகுகுணசீலன் அவர்கள் பேசுகையில் , எம்மினத்தின் நியாயமான உரிமைப் போராட்டம் இன்று நிர்க்கதியானமைக்கான காரணங்கள் பலவற்றை சுட்டிக்காட்டினார். குறிப்பாக பிராந்தியத்தில் இந்தியாவின் வல்லமை என்னவென்பது குறைத்து மதிப்பிடப்பட்டதன் விளைவினை நாம் அனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் என்ற அவர் இன்று உலக அரங்கில் குறிப்பாக எம் பிராந்தியம் தொடர்பான விடங்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா , மன்மோகன் சிங் ன் ஆலோசனை , அனுமதியை பெறமால் எந்த நகர்வும் மேற்கொள்வதில்லை எனச் சுட்டிக்காட்டினார். அத்துடன் இலங்கையின் அரசியல் யாப்பில் நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தாம் விரும்பும் கட்சியொன்றை ஆதரிக்கும் , அதில் செயற்பாட்டாளராகவிருக்கும் உரிமைகள் எம் எதிரிகளிடமிருந்து கிடைக்கப்பட்டிருந்தபோதும் எமது உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக்கொண்ட புலிகளமைப்பினால் மறுக்கப்பட்டையை விமர்சித்த அவர் மத்தியில் எம்மால் அரசியல் கட்சிகளை பதிவு செய்யமுடிந்தது அனால் அவை வடகிழக்கில் செயல்பட முடியாது போனது என்றார்.

ஈபிடிபி சுவிஸ்கிளை பொறுப்பாளர் தோழர் திலக் அவர்களின் அஞ்சலி உரையில் இன்றும் தோழர் நாபாவின் சிறப்பான அரசியல் வழிகாட்டிலில் தாங்கள் பயணிப்பதாகவும் தோழர் நாபா என்றும் ஓர் உத்தமர் என்றும் கண்ணீர்மெல்க தெரிவித்ததை காணக்கூடியதாகவிருந்தது.

இடதுசாரி செயற்பாட்டாளரும் அறுவை சஞ்சிகையின் ஆசிரியருமான தோழர் லோகநாதன் ஆசிரியர் பேசும்போது நான் தோழர் நாபாவுடன் அதிகளவில் நெருங்கிப்பழகியதில்லைலை. ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட தோழர்களுடன் பழகியிருக்கின்றேன். அதனூடாக தோழர் நாபா எப்படியான உயர்ந்த பண்புகளைக் கொண்டிருந்தார் என்பதை என்னால் உணரமுடிகின்றது. அத்துடன் நான் செயற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைப் பொறுப்புக்களிலிருந்து செயற்பட்ட தோழர் வீ.ஏ.கந்தசாமியும் தனது இறுதிக்காலத்தில் தோழர் நாபாவின் கட்சியுடன் இனைந்து செயற்பட்டார் என்னும்போது எனக்கு தோழர் நாபா மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கின்றது. இடதுசாரி முற்போக்கு சக்திகள் அனைவரும் ஐக்கியப்பட்டு பொதுவேலைத்திட்டத்தை உருவாக்கி செயற்படுவதே இந்த தியாகிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டார்.


இவ்வாறு பலதரப்பட்டோரின் சிறப்புரைகளுடன் நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது.

இறுதிநிகழ்வாக பாசிச புலிகளால் கொலை செய்யப்பட்ட ஈழமக்கள் புரட்சீகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் தியாகிகள் ஆன 13 தோழர்களின் இறுதி நிகழ்வு வீடியோ பதிவின் மூலம் திரையில் காண்பிக்கப்பட்டது பின்பு கட்சியின் கொள்கைத் திட்டம் மற்றும் தொடர்ந்து செல்லும் பணிகள் ஆகியன தெளிவாக விபரிக்கப்பட்டது கட்சித் தோழர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன நாட்டிய நிகழ்வுகளும் புரட்சி பாடல்களும் கவிதை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன...தோழர் நாபா மறையவில்லை என்ற கட்சிகிதத்துடன் இவ் நிகழ்வு இனிதே நிறைவேறியது இவ்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் கச கட்சித்தோழர்களும் ஈழக்கள் புரட்சீகர விடுதலை முன்னணியினர் தங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் இவ்வாறான நிகழ்வுளை நிகழ்த்துவோர் துரோகிகள் என புலிகளால் முத்திரை குத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்று அவ்வாறு முத்திரை குத்திய அமைப்பின் தலைவரான பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முடியாதவர்களாகவுள்ளனர். அவ்வாறு எவரும் அஞ்சலி செலுத்தினால் அவர்கள் மீது துரோகிகள் முத்திரை குத்தப்படும் நிலைமை காணப்படுகின்றது.








Read more...

புழல் சிறைக்கு நளினி மாற்றப்பட்டது ஏன்- சிறைத்துறை தலைவ‌ர் ‌விள‌க்க‌ம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி புழல் சிறைக்கு மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து கூடுதல் காவல்துறை இயக்குநரும், சிறைத் துறை தலைவருமான கே.ஆர். ஷியாம் சுந்தர் விளக்கம் அளித்து‌ள்ளா‌ர்.

நெ‌ல்லை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவர், தமிழக சிறைகளில் கைதிகளிடமிருந்து கடந்த ஆண்டு 250 செல்போன்கள், 150 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. கைதிகளைப் பார்க்க வருபவர்கள் எடுத்துவரும் பொருள்களுக்கிடையே மறைத்து வைத்து சிம்கார்டுகள் கொடுத்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளோம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, நிர்வாக வசதிக்கு அல்ல. தன் தாய், சகோதரர்கள் சென்னையில் இருப்பதால் வேலூருக்கு வந்து தன்னை பார்த்துச் செல்வதில் உள்ள கஷ்டங்களை அவர் மனுவில் தெரிவித்து இருந்தார். அரசு அதை பரிசீலனை செய்து இந்த முடிவு எடுத்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை அல்லது நகரின் முக்கிய சாலை ஒரங்களில் சிறைகள் உள்ளதால், சாலைகளில் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் சிறைக்குள் தூக்கி வீசப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. எனினும், செல்போன்களின் புழக்கத்தைக் கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செல்போன்களின் இயக்கத்தைச் செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்தலாம் என முதலில் முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய சிறைகளில் கைதிகளின் வசதிக்காக பொது தொலைபேசி வைக்க அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசலாம். எவ்வளவு நேரம் பேசுவது என்ற காலவரம்பு நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம் சிறைகளில் செல்போன் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

Read more...

பொன்சேகாவின் ஒலி நாடாக்களை னரிடம் ஒப்படைக்குமாறு ஊடகங்களுக்கு உத்தரவு

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேடைகளில் ஆற்றிய உரைகள் முழுமையாக பதிவுசெய்யப்பட்ட வீடியோ நாடாக்களின் பிரதிகளை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி, சுவர்ணவாஹினி மற்றும் தெரண ஆகிய தனியார் தொலைக்காட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்ட நீதவான், குறித்த விடியோ நாடாக்களுடன் அவற்றை பதிவு செய்தவர்கள், செய்திகளை ஒளிப்பரப்பியவர்கள், செய்திப் பிரிவின் பணிப்பாளர்கள் ஆகியோரிடம் வாக்கு மூலங்களை பெறவும் நீதவான் புலனாய்வுத்துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேக்கா சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில், வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு படையினரிடம் சரணடையச் சென்ற புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பிரிகேடியர் சவேந்ர சில்வாவுக்கு உத்தரவிட்டதாக தனக்கு அறிய கிடைத்து என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்காகவே இந்த வீடியோ நாடாக்களை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம் குமரன் பத்மநாதனை வட மாகாண முதலமைச்சராக நியமிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதனை எவ்வாறு அரசாங்கம் கைது செய்ததென்பதனை தாம் அறிவதாகவும், அது யுத்த ரகசியம் என்பதனால் அதனை வெளிப்படுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் குமரன் பத்மநாதனை நாடு முழுவரும் அழைத்துச் செல்வதாகவும் சில முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர் சில இராணுவ அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், குமரன் பத்மநாதனுக்கு இராஜ மாரியாதை அளிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டுக் கொடுப்பனவு போதுமானதல்ல எனவும் உயிரிழந்தவர்களுக்கு இன்னமும் 150000 ரூபாவே நட்ட ஈடாக வழங்கப்படுவதாகவும், இதனைக் கொண்டு உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஓர் தானத்தையேனும் வழங்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

படைவீரர்களுக்கு உரிய நலத் திட்டங்கள் வழங்கப்படாமையினால் படையில் இணைந்து கொள்வதற்கு இளைஞர்கள் அதிக நாட்டம் காட்டுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

சந்திரிக்கா மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.

இலங்கை அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் மாற்றங்களின் பின்னர் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க போட்டியிடலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் ஒருவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரு தடவைகளளே பதவி வகிக்கமுடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வரையறைனை 3 தடவைகளாக மாற்ற அரசியல் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் அதற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டால் சந்திரிக்கா தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை அவர் மேற்கொண்டுவருவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்காக தனித்து போராடுவதற்கான காலம் இதுவல்ல எனவும் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பையேற்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரிவித்துள்ளது.

மக்கள் பிரிவின் தலைவர்களான உபுலங்கனி மானவாடு அனுருத்திக திஸாநாயக்க ஆகியோரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனித் தனியாக சந்தித்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் அரசியல் ரீதியான அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உப்புலாங்கனி மானவடுமக்கள் பிரிவை கலைத்து விட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது குறித்து அடுத்த சில தினங்களில் நடைபெறவுள்ள மத்திய செயற்குழுவில் தீர்மானிப்பதாகக் கூறியுள்ளார்.

Read more...

ரஷ்ய “உளவாளி” பிணையில் விடுவிப்பு

ரஷ்ய உளவாளி என சந்தேகிக்கப்படும் விக்கி பிலா£ஸ பிணையில் விடுவிக்க அமெரிக்க நீதிபதி வியாழக்கிழமை அனுமதியளித்தார். ஆனால், விக்கி பிலாஸ் வீட்டுக் காவலில் இருக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரைத் தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பெருவில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற செய்தியாளரான பிலாஸ், கண்காணிப்புக் கருவியுடன் வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என்றார் நீதிபதி ரானல்டு எல்லிஸ். ஆனால், அவ்வாறு விடுவிக்க அவருக்காக யாராவது US$250,000 (S$350,000) பிணைத்தொகை கட்டவேண்டும். இதில் பத்தாயிரம் டாலர் ரொக்கமாக இருக்கவேண்டும்.

உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் ரிச்சர்ச் மர்ஃபி, சிந்தியா மர்ஃபி இருவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இத்தம்பதியருக்கு எதிராக அரசாங்கத்திடம் வலுவான ஆதாரம் இருப்பதாக நீதிபதி கூறினார்.

பிடிபட்டவர்களில் இன்னொருவரான யுவான் லசாரோவை என்ன செய்வதென்று பிற்பாடு தீர்மானிக்கப்படும் என்றார் நீதிபதி. ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததை இவர் ஒப்புக் கொண்டதாக அரசாங்க வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர். - ஏஎப்பி

ஈரானுக்கு எதிராக புதிய தடை: ஒபாமா கையெழுத்துSat, 03/07/2010

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதிக்கும் கடுமையான புதிய தடை உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை கையெழுத்திட்டார். அணுவாயுதத் திட்டத்திற்கு ஈரான் நிதி ஒதுக்கக்கூடிய ஆற்றலை இந்தத் தடைகள் ஒடுக்கும் என்று அதிபர் ஒபாமா கூறினார். கூடுதல் நெருக்குதலையும் தனிமையையும் ஈரான் எதிர்நோக்குவதாகவும் அதிபர் ஒபாமா எச்சரித்தார்.

ஐநா பாதுகாப்பு மன்றமும் ஐரோப்பாவும் விதித்திருக்கும் புதிய தடைகளோடு, அமெரிக்காவும் தடைகள் விதிக்கிறது. ஈரானின் பெட்ரோலியப் பொருள் இறக்குமதியைத் தடுத்து, அனைத்துலக வங்கி நடவடிக்கைகளை ஒடுக்குவது தடைகளின் நோக்கம். “ஈரானிய அரசாங்கம் அணுவாயுதத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி மேம் படுத்தக்கூடிய ஆற்றலை ஒடுக்குகிறோம்” என்று வெள்ளை மாளிகையில் திரு ஒபாமா கூறினார்.- ஏஎப்பி

Read more...

மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

மாகாணசபைகளுக்கு போதியளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மாகாணசபைகளுக்கான சலுகைகளை வழங்கும் விவகாரத்தில் அரசாங்கம் மாற்றான்தாய் கொள்கையையே கடைபிடித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதி, வெளிவிவகாரம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களைத் தவிர ஏனைய அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வரி அறவீடு செய்வதற்கான அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் மாகாணசபைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மட்டுமே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கு வரி அறவீடு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டால் மாகாணங்களுக்கு இடையில் ஆரோக்கியமான போட்டி உருவாகும் எனவும், இதனால் அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கத்தினால் தற்போது மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள், சம்பளக் கொடுப்பனவுகளுக்கே போதுமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

Friday, July 2, 2010

முதன்முறையாக இலங்கையில் கல்லீரல் மாற்றுச் சிகிச்சை.

இலங்கையில் முதன் முறையாக கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை ஒன்றை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் மந்திக விஜேரத்ன தலைமையிலான வைத்திய நிபுணர்கள் வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளனர்.

இதுவரை காலமும் சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குப் பயணித்து இச்சத்திர சிகிச்சையைச் வேண்டிய நிலை இலங்கையர்களுக்கு இருந்தது. அத்துடன் இதற்காக சுமார் 50 இலட்சம் ரூபா வரையில் செலவிடவும் நேர்ந்தது.

இந்நிலையில் குறித்த சத்திர சிகிச்சையை இலங்கையிலேயே மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இன்று வெற்றியளித்த இந்த சத்திர சிகிச்சையானது 40 வயதுடைய ஒரு நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்டது. விபத்தொன்றினால் மூளை செயலிழந்து மீண்டும் வாழவைக்க முடியாத நிலையிலுள்ள நோயாளி அவயங்களை அவரது இரத்த உறவுகளின் ஒப்புதலுடன் பெற்றுக்கொண்டு மேற்படி கல்லீரல் மாற்று சிகிச்சை இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட கல்லீரலை உரியவரிடமிருந்து கழற்றுவதற்கும் அதை மீண்டும் பெருத்துவதற்கும் சரியாக 24 மணித்தியாலயங்கள் எடுத்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com