Friday, July 2, 2010

பொறியியல் படிப்பில் இலங்கையர்களுக்கு இடம் உண்டு.

பொறியியல் படிப்பில் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கும் இடம் உண்டு என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இலங்கை அகதியின் மகனாகப் பிறந்த ஒருவர் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்ற நிலையிலும் அவருக்கு பொறியியல் கல்வி பயில வாய்ப்பு தரப்படவில்லை என பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.

இதற்கு விளக்கம் அளித்து, முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

பாதிக்கப்பட்டதாக தெரிவித்த மாணவரே உயர்கல்வித் துறை அமைச்சரைச் சந்தித்து தனது குறையைத் தெரிவித்தார். உடனடியாக, அவரது குறை களையப்பட்டு அவர் தொழிற் கல்வி பயில வாய்ப்பு தரப்பட்டு விட்டது. அது மாத்திரமல்ல, பொதுவாகவே தமிழகப் பள்ளிக் கூடங்களில் படித்த இலங்கை அகதிகளுடைய குழந்தைகளைப் பொதுப் பட்டியலில், தரவரிசையின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, அதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Read more...

Thursday, July 1, 2010

முன்னாள் பிரதியமைச்சருக்கு விளக்கமறியல்.

1996 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் நாள் பிலியந்தலையில் சி.டி.சந்திரரத்ன என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக முன்னால் பிரதி அமைச்சர் சந்தன கதிரியாராய்ச்சி உட்பட 4 பேரை இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கை ஒரு ஜூரி சபையின் கீழ் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளவும் கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

Read more...

டக்ளஸ் விஜயகலா பாராளுமன்றில் கடும் வாய்த்தர்க்கம். 100 மில்லின் மான நஷ்டம்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகால மகேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த விஜயகால மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். எனினும் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் தங்களுக்கு தேவையானவர்களுக்கு மாத்திரமே பயன்களை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட டக்ளஸ் தேவானந்தா, நீங்கள் அப்படி யாரை குறிப்பிடுகின்றீர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு விஜயகால மகேஸ்வரன் அரசாங்கத்தில் பல கட்சிகள் இருப்பதாகவும் குற்றம் செய்தவர்களுக்கே உறுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒலி வாங்கி முடக்கிவிடப்படாத நிலையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.

வாய்த்தார்க்கம் சூடானபோது நீங்கள் தானே மகேஸ்வரனை கொலை செய்தீர்கள் என்று டக்ளஸ் தேவானந்தாவை பார்த்து சிங்கள மொழியில் ஆவேசமாக குற்றஞ்சாட்டினார்.

இவர்கள் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற போது ஆளும் தரப்பினர் கூச்சலிட்டனர். பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் விஜயகால மகேஸ்வரனுக்கு ஆதராவாக கூச்சலிட்டனர்.

விஜயகால மகேஸ்வரனின் உரை முடிந்ததும் அவையிலிருந்த எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதே நேரம் சபையில் பேசிய பா.உ விஜயகலா , டக்களஸ் தேவானந்தா தன்மீது திட்டமிட்டவகையில் அபாண்டமான பழியை சுமத்தி வருவதாகவும் , இதனால் தனக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்திக்கான நஷ்ட ஈடு கோரி நீதிமன்று செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் , வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்கும் டக்ளஸ் தேவானந்தா , நான் கொழும்பிலிந்து காடையர்களை கொண்டுவந்து திலிபனின் சிலையை உடைத்தாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் அபாண்டமான குற்றச்சாட்டு இதற்காக நான் மான நஷ்டமாக 100 மில்லியன் ரூபாய்களை கோரவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

ஐ.நா. நிபுணர் குழு: இந்தியாவின் மவுனத்திற்கு இலங்கை அதிருப்தி

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.செயலர் நாயகம் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவிற்கு இந்தியா இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்காதது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்ச அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.நா சபையில் வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யா உள்ளிட்ட 29 நாடுகள் தமக்கு ஆதரவாக நிபுணர் குழுவை எதிர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ராஜபக்ச, அயல்நாடான இந்தியா மௌனம் சாதிப்பது, இந்தக் குழுவை ஏற்பது போன்று அமையும் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு இலங்கை அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளதாக அந்த அமைச்சத்தின் உயரதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டும் என இலங்கை அமைச்சர் டி.எம்.ஜயரட்ன அண்மையில் கூறியிருந்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அதேசமயம் அண்மையில் இந்தியா சென்றிருந்த ராஜபக்சவும் இந்தியாவின் ஆதரவை பல வழிகளிலும் கோரியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

போர் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஐ.நா. சபையிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலும் பிரேசில், மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளால் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள், இந்தியாவின் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more...

லண்டனில் 17000 ஸ்ரேலிங் பவுண் மோசடி செய்த இலங்கைக் குடும்பம் கைது.

லண்டனில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று 1 மில்லியன் ஸ்டேலின் பவுன் சொத்துக்கள் மற்றும் BMW கார்கள் வைத்திருந்த நிலையில் அரசிடமிருந்து வீட்டுக்கடன் என கூறி, 170,000 ஸ்டேலின் பவுன் மோசடி செய்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

இந்த பண மோசடியுடன் தொடர்புடைய நான்கு பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 46 வயது நிரம்பிய பிரேம்குமார் பத்மநாதன் 14 மாதங்களுக்கும் அவருடைய சகோதரன் சிவகுமார் பத்மநாதன் 15 மாதங்களுக்கும் நல்லையா கௌரிதாஸ் என்பவர் 15 மாதங்களுக்கும் ஷாமினி கௌரிதாஸ் 6 மாதங்களுக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரேம்குமாரின் மனைவியான கல்யாணிக்கு 12 மாத சிறைதண்டனையும் 150 மணித்தியாளங்கள் சம்பளமற்று வேலைசெய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Read more...

தலைவர்கள் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைவிதியை நிர்ணயிக்க முடியாது!

பேராசிரியர் சிற்றம்பலம் குற்றச்சாட்டு!கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய ஒழுங்குகள் யாவும் தமிழரசுக் கட்சியின் தலைவரான திரு. இரா. சம்பந்தன் தலைமையில் பூர்த்தியாகிவிட்டன. இதனை இட்டு இக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் 1956ஆம் ஆண்டு தொடக்கம் இக்கட்சியின் இலட்சியத்திலிருந்து இம்மியும் விலகாது பேசியும் எழுதியும் செயற்பட்டும் வருபவனாகிய நாம் அதிர்ச்சியடைந்தோம்.

இத்தகைய அதிர்ச்சியில் தான் வடக்குக் கிழக்கு மாகாணத்திலுள்ள கட்சித் தொண்டர்களும் உறைந்திருந்ததை அவர்கள் நம் முடன் மேற்கொண்ட தொடர்புகள் மூலம் அறிந்து கொண்டேன் என யாழ். பல்கலைக் கழகத்தின் ஓய்வு நிலைத் சிரேஷ்ட பேராசிரியரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் உப தலைவர் பேரா சிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இங்கு பிரசுரமாகின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக நேற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.)

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியை 1949 ஆம் ஆண்டில் தந்தை செல்வநாயகம் அவர்கள் ஆரம்பித்தபோது அதனை வெறும் கட்சியாக மட்டும் இனங்காணாது தமிழ் மக்களுக்கு விமோசனமளிக்கும் ஒரு இயக்கமாகவே இனங்கண்டார். இத்தகைய இயக்கம் தமிழ் மொழி பேசும் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் ஒரு சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதே அவரது கனவாகும்.

இதனால்தான் தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளின் சின்னமாக ‘வீடு’ (வீடுபேறு அளிப்பது) அமைந்தது. தந்தை செல்வநாயகம், தலைவர் அமிர் தலிங்கம் போன்ற தலைவர்களின் பாதங்கள் வடக்குக் கிழக்கின் பட்டிதொட்டியயங்கும் படியத் தமிழ்த் தேசியம் வலுவான சக்தியாக உருவெடுத்தது. தலைவர்களினதும் தியாகத்தாலும் தொண்டர்களது அர்ப்பணிப்பாலும் அப்பளுக்கற்ற தியாகத்தாலும் வடக்குக் கிழக்கு மாகாண மக்களின் இதயங்களில் வீட்டுச் சின்னமே தமக்கு விமோசனமளிப்பது என்ற எண்ணக்கரு உருவாகி ஆல விருட்சமாக வளர்ச்சி பெற்றது.

தமிழரசுக் கட்சி மேற்கொண்ட போராட்டங்களும் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் ஏனைய தமிழ்க் கட்சிகளை விட இதனை முதன்மை நிலைக்கு இட்டச் சென்றன. இருந்தும் நமக்குள் ஏட்டிக்குப்போட்டி போடும் அரசியலைத் தவிர்க்கும் நோக்கில் இக் கட்சி தமிழ்க் காங்கிரஸுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக உதயசூரியன் சின்னத்தில் இயங்கினாலும் அதன் முதன்மையும் தனித்துவமும் இக்கூட்டமைப்பில் பேணப்பட்டது.

எனினும் சித்தாந்த ரீதியிலன்றி வெறும் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு என்ற கோ­த்தின் அடிப்படையில் ஏற்பட்ட இவ்விணைப் பின் விபரீத விளைவுகளை அண்மைக்கால சம்பவங்கள் மட்டுமன்றி நடந்து முடிந்த தேர் தலும் துலாம்பரமாக எடுத்துக் காட்டியுள்ளது.

வீட்டை விரும்பிய புலிகள்

தமிழரசுக் கட்சியின் வீடுதான் தமிழர் தாயகத்தை இணைக்கும் மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியமுடைய சின்னம் என்பதாலும் ஏனைய தமிழ்க் கட்சிகளைப் போலன்றி வடக்குக் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் வியாபித்துள்ள கட்சி என்பதாலும் 2004 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவான போது இதிலேதான் இக் கூட்டமைப்பினர் தேர்தலில் போட்டி போட வேண்டும் என்று விடுதலைப்புலிகளும் விரும்பினர்.

இதனை ஏனைய கட்சிகளும் ஏற்றன. அன்று இக் கூட்டமைப்பு உருவானபோது நல்லிணக்க அடிப்படையில்தான் ஒவ்வொரு கட்சியும் செயற்பட்டன. எனினும் கடந்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடின்மையும் கடந்த தேர்தலில் நிற்போரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்ட இழு பறிகளும் இதனால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் ஒருகால் உள்வீட்டுப் பிள்ளைகளாயிருந்து பின்னர் விலகிச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் விதண்டாவாதங்களும் இத் தேர்தலில் போட்டி போட்டோர் பற்றித் தமிழரசுக் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட விமர்சனங்களும் இதன் விளைவாக அவர்கள் மத்தியில் கால்கொண்ட அக்கறையின்மையுமே வட பகுதியில் தமிழரசுக் கட்சியைக் களத்தில் பின்னடையச் செய்தன. கட்சியாகப் பதிவு தேவைதானா?

இப் பின்னணியில் அதுவும் கடந்த கால அனுபவங்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்தல் காலத்தின் தேவைதானா? என்பது பற்றி மிக ஆழமாக சிந்திக்க வேண்டியதொன்றாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கட்டாயம் ஒரு கட்சியாகப் பதிவு செய்தல் வேண்டும் என்பதில் தலைவர்கள் முரண்பிடித்து ஒரு தலைப்பட்சமாகத் தீர்மானிக்க முடியாது. மிக நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தையுடைய இக் கட்சியின் இதற்கான வழிமுறைகள் பல உள.

மத்திய குழு, பொதுச்சபை ஆகியவற்றினுள் இது பற்றி விவாதிக்கப்படல் வேண்டும். இவையே கட்சியின் கொள்கை எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றை வகிக்கும் கருவிகளாகும். மாநாடு முடிந்து ஆறு மாதங்கள் ஆகி யும் இவற்றைக் கூட்டிக் கட்சித் தொண்டர்க ளுடன் கருத்துக்களைப் பரிமாறத் தலைமைப் பீடம் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத சூழலில் மத்திய குழுவைக் கூட் டும்படி 02.06.2010 இல் தலைவர்/செயலா ளர் ஆகியோருக்குக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் என்ற ரீதியில் ஒரு கடிதத்தினை அனுப்பியிருந்தோம்.

இற்றைவரை கடிதம் கிடைத்தது என்று கூடப் பதில் இல்லை. தன்னிச்சையான செயற்பாடுபொதுவாகக் கட்சித் தொண்டர்கள் மத்தியில் தலைமைப்பீடம் தங்களைக் கலந்தா லோசிக்காது தன்னிச்சையாகச் செயற்படுகின்றது என்ற கருத்து நிலவுகின்றது. தலைமைப் பீடம் எதேச்சையாக செயற்பட்டதை அண்மைக்கால நிகழ்வுகளும் எடுத்துக் காட்டியுள்ளன.

எவ்வாறிருப்பினும் மிக நீண்ட ஜனநாயகப் பின்னணியுடைய இக் கட்சியில் இத்த கைய போக்கினை அனுமதிக்க முடியாது. இதனால் கட்சியின் எதிர்கால ஆரோக்கியமான வளர்ச்சி தடைப்பட்டு விடும். எதுவித இலட்சியப்பற்றுமற்ற வெறும் வழிப்போக்கர்கள்தான் கட்சியில் நுழைந்து தொண்டர்களுக்கு ஆணையிடும் நிலை ஏற்படும். இது மிக மிக ஆபத்தான நிலையாகும்.

இத்தகைய நிலை வெள்ளைக் கையர்களாக எமது மறைந்த தலைவர்களது தியாகத்திற்கும் எமது ஜனநாயகப் பாரம்பரியத்திற்கும் அழிவைத் தேடித் தந்தே விடும். எனினும் இனியும் காலம் தாழ்த்தாது உட னே கட்சியின் மத்திய குழுவையும் பொதுக் குழுவையும் கூட்டல் வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும் நடவடிக்கை பற்றி அலசி ஆராயப்பட வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யப்படும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னம் யாது என் பதில் தெளிவு வேண்டும். எக்காரணம் கொண்டும் வீட்டுச் சின்னத்தைத் பரிமாற்றம்செய்ய முடியாது. விலைபேசவும் முடியாது. காரணம் இன்று இவ் வீட்டுச் சின்னம் தமிழரசுக் கட்சி யின் தியாகிகளின் நினைவாலயமாகவும் மிளிர்கின்றது.

கண்ணீராலும் செந்நீராலும் வளர்க்கப்பட்ட கட்சி

தலைவர்களினதும் தொண்டர்களினதும் கண்ணீராலும் செந்நீராலும் வளர்க்கப்பட்ட இத் தமிழரசுக் கட்சி என்ற ஆல மரத்தைப் புதுமுகங்கள் வெட்டித் தறிக்கத் தமிழரசுக் கட் சியின் தொண்டர்கள் இடம் கொடுக்கக் கூடாது. அவ்வாறு இடம் கொடுத்தால் இப் புதுமுகங்களே தாம்தாம் நவயுக தியாகிகள் எனத் தம் பட்டம் அடித்துக் கொண்டு எமது தலைவர்கள் செய்த தியாகத்தையும் எம் கட்சியின் தியாக வரலாற்றையும் குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள்.

இவ்வாறு நடைபெற்றால் தந்தை செல்வ நாயகம், கோப்பாய் கோமான் வன்னியசிங் கம், இரும்பு மனிதன் நாகநாதன், திருமலை இராசவரோதயம், பட்டிருப்பு இராசமாணிக் கம், தலைவர் அமிர்தலிங்கம் போன்றோரை யும் அவர்களின் பங்களிப்புகளையும் எதிர் கால சந்ததியினர் அறியாவண்ணம் இவ் நவஉலகத் தியாகிகள் புறந்தள்ளி விடுவார்கள்.

நீதிமன்றம் செல்வோம்

இன்றெல்லாம் கட்சிகளைப் புனரமைக் கும் பணி நடைபெறுகின்றது. இத்த கைய பணியிலேயேதான் இலங்கைத் தமிழ ரசுக் கட்சியும் இனியும் காலம் தாழ்த்தாது இற ங்க வேண்டும். எவராவது தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின் னத்தையோ அன்றி அதன் கொடியையோ சுய நலத்திற்காக விலைபேச முற்பட்டால் நீதி மன்றம் சென்றாவது இதனைத் தடுத்து நிறுத் துதல் ஒவ்வொரு தமிழரசுக் கட்சியின் தொண் டனின் தலையாய கடமை என்று வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க கூறியதுபோன்று இன்று அரசியல் என்பது பொய்யும் புரட்டும் புளுகும் நிறைந்த வியாபாரமாகி விட்டது. உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பன தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதி களால் தம் புகழ்பாட இதய சுத்தியின்றி உச்சரிக்கப்படும்.

Read more...

21 வது வீரமக்கள் தினம் - சுவிஸ்



நிகழ்ச்சிநிரல்


* நினைவு வணக்கம்

* மலரஞ்சலி

* வரவேற்புரை

* வினோதஉடை சிறுவர் நிகழ்ச்சி

* கழக தோழர்களினதும், தோழமை அமைப்பு பிரதிநிதிகளினதும் உரைகள்

* நாட்டிய நிகழ்ச்சிகள் (சிறுவர் நிகழ்ச்சிகள்)

* நாடகம்

* இசைநிகழ்ச்சிகள்

* பாட்டுக்கேற்ற அபிநயம்

* காமெடிக்கதம்பம்

* மேலும் பல நிகழ்ச்சிகள்....

* பரிசில்கள் வழங்கல்

* நன்றியுரை

Read more...

Wednesday, June 30, 2010

பால‌ஸ்‌‌தீன‌ம்-இ‌ஸ்ரே‌ல் மோதலு‌க்கு ‌நிர‌ந்தர ‌தீ‌ர்வு: ஒபாமா

பால‌ஸ்‌‌தீன‌ம், இ‌ஸ்ரே‌ல் இடையே ‌நீடி‌த்து வரு‌ம் மோதலு‌‌க்கு ‌நிர‌ந்தர ‌தீ‌ர்வு கா‌ண்பத‌ற்கு அமெ‌ரி‌க்கா, சவு‌தி அரே‌பியா இணை‌ந்து முய‌ற்‌‌சிகளை தொடர உ‌ள்ளதாக அ‌திப‌ர் ஒபாமா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ஜி 20 உறு‌ப்பு நாடுக‌‌ள் கூ‌ட்ட‌த்த‌ி‌ல் ப‌ங்கே‌ற்க வா‌‌ஷி‌ங்ட‌ன் செ‌ன்று‌ள்ள சவு‌தி அரே‌பியா ம‌ன்ன‌ர் அ‌ப்து‌ல்லா, அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஒபாமாவை ச‌ந்‌தி‌த்து பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌‌‌‌தினா‌ர்.

அ‌ப்போது ஆ‌‌ப்கா‌னி‌‌ஸ்தா‌‌ன், பா‌கி‌ஸ்தா‌னி‌ல் தா‌லிபா‌‌ன் ‌தீ‌விரவா‌திகளா‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌பி‌ன்னடைவு, ஈரா‌ன் அணு ஆயுத ‌விவகார‌ம், ம‌த்‌திய ‌‌கிழ‌க்கு‌ப் ப‌கு‌‌திக‌ளி‌ல் ‌நிக‌ழ்‌ந்து வரு‌ம் மோத‌ல்க‌ள் கு‌றி‌த்து ‌விவா‌தி‌த்தன‌ர்.

‌பி‌ன்ன‌ர் செ‌‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சிய ஒபாமா, இ‌ஸ்லா‌மிய நாடுக‌ளி‌ல் அமை‌தி ‌நிலவ வே‌ண்டு‌ம் எ‌ன்பதே இரு நாடுக‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌ம் எ‌ன்றா‌ர். 70 ஆ‌ண்டுகளாக சவு‌தி அரே‌பியா, அமெ‌ரி‌க்கா இடையே ‌நீடி‌த்து வரு‌ம் ந‌ட்பு கு‌றி‌த்து பெரு‌மித‌ம் தெ‌ரி‌வி‌த்த ஒபாமா, இதனா‌ல் இரு நாடுகளு‌ம் பெ‌‌ற்று‌ள்ள வள‌ர்‌ச்‌சிகளை சு‌ட்டி‌க்கா‌ட்டினா‌ர்.

பால‌‌ஸ்‌தீன ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து ‌விவா‌தி‌த்ததாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ஒபாமா, இ‌ஸ்ரே‌ல் நா‌ட்டினை ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ம் மன‌ப்பா‌‌ண்மை இ‌ஸ்லா‌மிய நாடுகளு‌க்கு ஏ‌ற்பட வே‌ண்‌டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

Read more...

தமிழ் தேசிய கூட்டமைப்பு விண்ணப்ப படிவத்தினை வழங்கியது

பதிவு செய்யப்படாத மற்றும் புதிதாக அரசியல் கட்சிகள் தமது பதிவுகளை செய்யக்கூடிய இறுதி தினம் இன்று ( ஜூன் 30 ) என தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயக தேசிய முண்னனி மற்றும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட 60 கட்சிகள் தமது விண்ணப்ப படிவங்களை வழங்கியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வன் அடைக்கலநாதன் ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான விண்ணப்பத்தை தேர்தல் திணைக்களத்தில் இன்று கையளித்தாக தெரிவிக்கப்படுகிறது.

Read more...

கிழக்குப் பகுதியில் யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம் மூடப்படும்

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் இலங்கையின் கிழக்குப் பகுதியில் தனது பணிகளை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதன்படி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மட்டக்களப்பில் செயற்பட்டு வந்த அந்த அமைப்பின் அலுவலகம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் இதுவரை காலமும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அதனால் இடம்பெயர்ந்தவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் அலுவலகம் உதவி வந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இடம்பெயர்ந்திருந்த நிலையில் இருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் தமது இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டதாகவும் அதனாலேயே தமது பணிகளை கிழக்கு மாகாணத்தில் குறைத்துக் கொள்வதாகவும் யு என் எச் சி ஆர் அமைப்பின் இலங்கை பிரதிநிதி மைக்கேல் ஸ்வாக் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பியிருந்தாலும் பல காலமாக அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் உதவிகளை தமது அமைப்பு செய்து வந்துள்ளது என்றும் மைக்கேல் ஸ்வாக் கூறியுள்ளார்.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற உச்சக்கட்டப் போரின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 1,60,000 பேர் இடம்பெயர நேர்ந்தது. மேலும் கிழக்கு மாகாணத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் 1,40,000 பேர் இந்த மாவட்டத்துக்கு வந்தனர்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இன்னமும் 2000 பேர் வரை மீளக் குடியேற்றப்படாத நிலையில் இருக்கிறார்கள் எனவும் ஐ நா வின் அதிகாரி கூறுகிறார். அவர்கள் வாழ்ந்து வந்தப் பகுதிகளில் கண்ணி வெடி அகற்றும் பணி முழுவதுமாக முடியவில்லை என அரசு கூறுவதே இவர்கள் தமது இடங்களுக்கு செல்வதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கே இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கும் 54,000 மக்களின் நலன் குறித்தும் அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் வாழ்வது குறித்தும் தாங்கள் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் யு என் எச் சி ஆர் அமைப்பின் இலங்கை பிரதிநிதி மைக்கேல் ஸ்வாக் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது பணிகளை நிறுத்திக் கொண்டு அலுவலகத்தை மூடுவது தங்களுக்கு கவலை அளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கூறுகிறார்.

மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் முழுமையான வாழ்வாதாரங்கள் ஏற்படவில்லை என்றும் அதுவரை ஐ நா வின் அகதிகளுக்கான ஆணையம் போன்ற அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது எனவும் அவர் கூறுகிறார்.

BBC Tamil

Read more...

ஜனாதிபதியுடனான இணக்கப்பட்டின் பிரகாரமே நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது . பொன்சேகா

யுத்தம் முடிவடைந்திருந்த நிலையில் இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்குமிடையேயான இணக்கப்பாட்டினடிப்படையிலேயே ஐ.நா செயலாளர் நாயகத்திற்கான ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

லண்டன் பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ள அவர் மேலும் கூறுகைiயில் , ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தத்வும் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் தாம் தயார் எனக் கூறியுள்ளார்.

ஓர் நாட்டின் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் சந்தேகம் காணப்பட்டால் அவற்றை களைவதற்கு குறித்த நாடு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர் ஐக்கிய நாடுகள் சபையுடன் முறுகல்களை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் அறிறுத்துகின்றார்.

இலங்கைப் பிரஜை என்ற ரீதியில் இவ்வாறான விசாரணைகளுக்கு தாம் முழு ஆதரவளிக்க உள்ளதாகவும், விசாரணைகளுக்கு ஆதரவளிக்க தாம் தயங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனைகள் நியாயமானது எனக் கூறியுள்ள பொன்சேகா அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற ஒன்றியத்தின் நிபந்தனையினுள் தானும் அடங்குவதாக தெரிவித்துள்ளதுடன் இவ் நிபந்தனையினை உள்விவகாரத் தலையீடாக கருத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், நிபுணர்கள் குழுவிற்கு இலங்கை விஜயம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Read more...

ஜனாதிபதி மஹிந்தவுக்கு உக்ரேய்னில் செங்கம்பள வரவேற்பு

உக்ரேய்ன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சின் அழைப்பின் பேரில் நேற்று இங்கிருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் நேற்றிரவு 7.30 மணியளவில் (இலங்கை நேரப்படி) உக்ரேய்னின் கிவ் நகரிலுள்ள பொரிஸ்பல் விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

அங்கு அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரேய்ன் அரசாங்கத்தின் சார்பில் உக்ரேனிய வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் கொஸ்டயன்டின் கிரிஸ்சென்கோ மற்றும் கிவ் நகரின் பிரதிமேயர் அலெக்ஸாண்டர் பொபோல் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குழுவினரையும் வரவேற்றனர்.

உக்ரேய்னில் தங்கியிருக்கும் போது உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யனுகோவிச், பிரதமர் மைக்கோலா அஸாரோசி ஆகியோருடனும் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுடனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன் சுற்றுலா, போக்குவரத்து, கடற்படை, பாதுகாப்பு தொடர்பான முக்கிய உடன்படிக்கைகள் இந்த விஜய த்தின் போது இரு நாட்டு தலைவர் களினாலும் கைச்சாத்திடப்படவுள்ளன. அத்துடன் இலங்கை - உக்ரேனிய வர்த்தக மாநாட்டிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்குபற்றுவார். உக்ரேனிய பாராளுமன்றத்தை அவர் பார்வையிடுவதுடன் உக்ரேய்ன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர் விசேட சொற்பொழிவாற்றுவார்.

ஜனாதிபதியுடன் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் செயற்பாட்டு பிரிவின் பிரதான அதிகாரி காமினி செனரத் ஆகியோர் ஜனாதிபதியுடன் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்த முடியுமென அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். உக்ரேய்னைப் பொறுத்தவரை பரந்துபட்ட விஞ்ஞானம், விவசாயம், தொழில்நுட்பம், கைத்தொழில் துறைகளின் வளங்களைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நாடாகவும் விளங்குகிறது.

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கு மிடையிலும் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியிலும் பூகோள ரீதியாக முக்கியத்துவமிக்க உக்ரேய்ன், கடற் போக்குவரத்திற்காகவும் வாய்ப்பான நாடு என்பதுடன் வரலாற்று ரீதியாகவும், மூலோபாய முக்கியத்துவம்மிக்க முக்கிய நாடாகவும் விளங்கியுள்ளது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் சுதந்திர நாடான உக்ரேய்ன் தற்போது ஒற்றையாட்சி நாடாக விளங்குகிறது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை ஏற்றுமதி செய்வதில் பிரதான நாடாக விளங்கும் உக்ரேய்ன் சுற்றுலாத்துறையில் எட்டாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

வட மாகாண முதலமைச்சருக்காக டக்ளஸ் போட்டியிடுவாராம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டுவரும் டக்ளஸ் தேவானந்தா எந்தக்கட்சியில் போட்டியிடவுள்ளார் என்பதனை இதுவரை வெளியிடவில்லை.

Read more...

சந்திரிகாவின் முன்னாள் பாதுகாப்பு பணிப்பாளருக்கு 4 வருட கடுழிய சிறைத்தண்டனை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்கவின் காலகட்டத்தில், பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிஹால் குணரத்னவுக்கு கண்டி மேல் நீதிமன்றம் 4 வருட கடுழிய சிறைத்தண்டனையையும் 50 ரூபா அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை பயமுறுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதே இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 50 ஆயிரம் ரூபா அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

Read more...

நக்சல் வேட்டை: இந்திய அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது

நக்சலைட்டுகளுக்கு எதிரான வேட்டையின்போது உயிரிழந்த நக்சலைட்டுகளை, விலங்குகளைப்போன்று மூங்கில் கம்புகளில் கட்டி சிஆர்பிஎப் படையினர் தூக்கிச் சென்றது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சா வனப்பகுதியில் கடந்த ஜூன் 16 ஆம் தேதியன்று நகசலைட்டுகளுக்கு எதிராக, சிஆர்பிஎப் படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது நடைபெற்ற மோதலில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 3 பேர் பெண்கள்.

இந்நிலையில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் உடல்களை, இறந்த விலங்குகளை கொண்டு செல்வதுபோன்று மூங்கில் கழிகளில் தூக்கி கொண்டு சென்றனர் சிஆர்பிஎப் படையினர்.

கொல்லப்பட்டது நக்சலைட்டுகளே ஆனாலும், மனித உடலுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச மரியாதையைக் கூட அளிக்காமல் அவர்களை விலங்குகளைப்போன்று கேவலமாக கொண்டு சென்ற மத்திய ரிசர்வ் காவல் படையினரது இந்த செயல், புகைப்படங்களாக பத்திரிகைகளிலும், வீடியோ காட்சிகளாக தொலைக்காட்சிகளிலும் வெளியானது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும் மத்திய ரிசர்வ் காவல் படையினரது இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று குற்றம் சாற்றியிருந்தனர்.

இந்நிலையில் இது குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை பார்த்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஊடகங்களில் வெளியான செய்திகள், வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில் இது தொடர்பாக வருகிற ஜூலை 27 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தாக்கீதும் அனுப்பியுள்ளது.

இத்தகவலை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது மிக மோசமான மனித உரிமை மீறல்களாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

Read more...

தமது அதிகாரங்களுக்கு உட்பட்ட வகையிலேயே நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தமது அதிகாரங்களுக்கு உட்பட்ட வகையிலேயே நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு குறித்த கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அணி சேரா நாடுகளினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம், இரு தரப்பினருக்கும் இடையில் நிலவும் புரிந்துணர்வின்மையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருட மே மாதத்தில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது ஜனாதிபதியுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் அடிப்படையில் இந்த நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரத்தை மீறிச் செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்கள் மற்றும் அதற்கான தண்டனை வழங்குதல் தொடர்பிலான சர்வதேச தர நிர்ணயங்களை கருத்திற் கொண்டு தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது எந்த வகையிலும் இலங்கையின் இறைமைக்கு இடையூறாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தலில் அழுத்தங்களை செலுத்தும் நோக்கில் மேற்குலக நாடுகள் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்வதற்காக இலங்கை மீது சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற யுத்தத்தின் போது எந்த சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை எனவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Read more...

Tuesday, June 29, 2010

சரத் பொன்சேக்கா தாக்கல் செய்ய மனு நிராகரிப்பு.

ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளை இடைநிறுத்த கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ளாது அதனை நிராகரிப்பது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது. மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர் சத்தியா ஹெட்டிகே இந்த தீர்ப்பை அறிவித்தார். மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் அதில் வாதங்கள் முன்வைக்கப்படவில்லை என நீதியரசர் ஹெட்டிகே குறிப்பிட்டார். இதனையடுத்து, மூவரடங்கிய நீதியரசர்கள் குழு மனுவை விசாரணைக்கு எடுக்காது அதனை நிராகரித்தது.

Read more...

அமெரிக்காவில் தங்கி உளவு பார்த்துத வந்த 10 ரஷ்ய உளவாளிகள் கைது.

அமெரிக்காவில் சாதாரண மக்களைப் போல தங்கி உளவு பார்த்து வந்த 10 ரஷ்யர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பத்து பேரும் கடந்த சில ஆண்டுகளாகஅமெரிக்காவில், சாதாரணர்கள் போல வசித்து வந்துள்ளனர். மாணவர்கள் என்ற போர்வையில் தங்கிக் கொண்டு உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். கைதான பத்து பேருக்கும் ரஷ்ய உளவு அமைப்பு பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது.

பல்வேறு முக்கிய தகவல்களைப் பெற்று அவற்றை ரஷ்ய அரசுக்கு்க கொடுப்பதற்காக இவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது. அமெரிக்க அணு ஆயுதங்கள், ஈரான், அரசியல் கட்சிகள், சிஐஏ குறித்த தகவலக்ள், அமெரிக்க ஆயுத இருப்பு நிலை உள்ளிட்டவை குறித்து இவர்கள் முக்கிய தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஊடுறுவுதல், உளவு பார்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more...

பதில் நிதி அமைச்சராக சரத் அமுனுகம நியமனம். 2010 இற்கான வரவுசெலவுத் திட்டம்.

ஜனாதிபதி இன்று உக்ரேய்னுக்கு புறப்படு முன்னர் பதில் நிதி அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பாராளுமன்று கூடியபோது பதில் நிதி அமைச்சரினால் 7 பாராளுமன்றுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்து பேசிய பதில் நிதி அமைச்சர் சரத் அமுனுகம தற்போது இலங்கையில் தனிநபர் வருமானம் ஆண்டிற்கு 2053 அமெரிக்க டொலர் எனவும் இது 2004ம் ஆண்டு 1062 அமெரிக்க டொலராக காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6% அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை 28.5% வளர்ச்சியை காண்பிப்பதாகவும் சரத் அமுனுகம தெரிவித்தார். இதேவேளை 2004ம் ஆண்டில் தொழில் அற்றோர் விகிதம் 8.3 ஆக காணப்பட்டதுடன் தற்போது அது 5மூ குறைந்துள்ளதாகவும் சரத் அமுனுகம தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பேசுகையில் மீள் குடியேற்றம் மற்றம் கன்ணி வெடி அகற்றுதல் என்பனவே அரசின் பிரதான பணிகாகவுள்ளதாகவும் அதன் பொருட்டு 640 கிராமங்களில் 15 லட்சம் மிதிவெடிகள் மீட்டகப்பட்டுள்ளதாவும் தெரிவித்த அவர் இதன் பிரகாரம் அரசாங்கம் 700 கோடி ரூபாய்களை செலவிட்டுள்தாகவும் தெரிவித்தார்.

இன்று சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது நாட்டு மக்களுக்கு ஏதுவானது அல்ல எனவும் இது மக்களை மேலும் வறுமைக்கு இட்டுச்செல்லும் எனவும் எதிர்கட்சியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தெரிவித்ததை அடுத்து பாராளுமன்றம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளை 9.30 மணிக்கு மீண்டும் வரவு செலவு திட்டம் மீதான விவாதம் தொடரும் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Read more...

இந்தியா எங்களோடு இருந்தால் போதும்: ராஜபக்ச

தமிழர்கள் எதிராக நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உலக நாடுகளும், ஐ.நா.வுன் என்ன கூறுகின்றன என்பது குறித்து தனக்கு கவலையேதும் இல்லை என்று கூறியுள்ள சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவும், அண்டை நாடுகளும் தங்களோடு இருந்தால் போதுமானது என்று கூறியுள்ளார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, போர்க் குற்றங்கள் குறித்து உரிய வகையில் விசாரணை நடத்தாவிட்டால் தாங்கள் அளிக்கும் வரிச் சலுகைகளை இரத்து செய்யப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதே என்று கேட்டதற்கும், “எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை” என்றே பதிலளித்துள்ளார்.

“ஐரோப்பிய ஒன்றியம் வரிச் சலுகையை அளிக்க விரும்பாவிட்டால், அவர்களே வைத்துக் கொள்ளட்டும். நாங்கள் என்ன செய்தோம் என்பதை அவர்களுக்கு விளக்கியுள்ளோம், அவ்வளவுதான்” என்று ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க குற்றங்கள் குறித்து ஐரோப்பிய நாடுகளும், ஐ.நா.வும் வலியுறுத்தி வருகின்றனவே என்று கேட்டதற்கு, “நான் ஏன் அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். இந்தியாவும் மற்ற அண்டை நாடுகளும் எங்களோடு நட்புறவுடன் இருந்தால், அது எனக்குப் போதும்” என்று கூறியுள்ளார்.

Read more...

Monday, June 28, 2010

கே.பி க்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக கூறமுடியாது. கெஹலிய

புலிகள் அமைப்பிற்கான ஆயுதக்கொளவனவாளரும் பிரபாகரனின் மரணத்தின் பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்தி கொண்டவருமான கே.பி க்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தற்போதைக்கு எதுவும் திடமாக கூறமுடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்.

கே.பி க்கு எதிரான சில விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கூறியுள்ள அவர், அவ்விசாரணைகள் முடிவதற்கு முன்னர் கே.பி க்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பாக எதுவும் கூறமுடியாதுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குமரன் பத்மநாதன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதுடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடன் புலம்பெயர் தமிழ் பிரமுகர்களை இணைத்துக்கொள்வதற்கு கே.பி மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கே.பி – மஹிந்த அரசின் கூட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளதுடன் பல அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்பலைகள் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

அமெரிக்க தீவிரவாதிகள் பட்டியலில் 6 வயது இந்திய சிறுமி.

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் 6 வயது மகளை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா . அந்தச் சிறுமி விமானங்களில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓகியோ மாகாணம் வெஸ்ட்லேக் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் சந்தோஷ் தாமசின் மகள் அலிஷா (6). இவரது பெயரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (US Department of Homeland Security), அவர் விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது.

சமீபத்தில் க்ளீவ்லேண்டில் இருந்து மினியபோலிஸ் நகருக்கு விமானத்தில் செல்ல டிக்கெட் பு்க் செய்ய முயன்றபோது, ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் இந்தத் தகவலை சந்தோஷிடம் தெரிவித்தார். இருப்பினும் விமானத்தில் பயணிக்க அனுமதி அளித்த விமான நிலைய அதிகாரிகள், இது குறித்து உள்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் பேசி, சிறுமியின் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து பாதுகாப்புத்துறைக்கு டாக்டர் சந்தோஷ் கடிதம் எழுதினார். ஆனால், அவர்களிடமிருந்து வந்த பதில் அதிர்ச்சியைத் தந்தது. சிறுமியின் பெயருக்கு அனுப்பப்பட்ட அந்த பதிலில், உங்களது கோப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரத்தை பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி கையில் எடுத்தது. இது குறித்து விமானப் பாதுகாப்பு துறையிடம் அந்தத் தொலைக்காட்சி கேள்வி எழுப்பியபோது,

''அப்படிப்பட்ட பட்டியல் இருப்பதும், அவர்களை விமானத்தில் பயணிக்காமல் தடுப்பதும் உண்மை தான். ஆனால், அதில் யாருடைய பெயர்கள் உள்ளன என்பது ரகசியம். மேலும் அந்தப் பட்டியலில் உள்ள நபர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்பதால் அது குறித்து யாருக்கும் எந்த விளக்கமும் தரப்படாது'' என்று பதில் கிடைத்துள்ளது.

இத்தனைக்கும் அலிஷா பிறந்து 2 மாதத்தில் இருந்து பலமுறை விமானப் பயணம் செய்துள்ளார். கடந்த பிப்ரவரியில் மெக்சிகோவுக்கும் குடும்பத்துடன் சென்று வந்துள்ளது இந்தக் குழந்தை. அப்போதெல்லாம் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. திடீரென இப்போது தான் அவரது பெயரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர் அதிகாரிகள்.

முன்பு வெளிநாட்டுப் பயணிகளி்ல் சந்தேகப்படும்படி உள்ளோரின் பெயர்களை இந்தப் பட்டியலில் சேர்த்து வந்தனர். இப்போது உள்நாட்டினரையும் அதில் சேர்க்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்த விவகாரத்தை நேரடியாக அமெரிக்க உள்துறையிடம் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் டாக்டர் சந்தோஷ் ஈடுபட்டுள்ளார்.

Read more...

ஆப்கான்-தலிபான்களால் 11 பேர் தலை துண்டித்து கொலை

ஆப்கானிஸ்தானில் 11 பொது மக்களை தலிபான் தீவிரவாத கும்பல் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளது. காட்டுமிரான்டித்தனத்துக்கு அடையாளமாக விளங்கும் தலிபான்கள், தங்கள் எதிரிகளை கொடூரமாக கொல்வதை கொள்கையாக கொண்டுள்ளனர்.

காஸ் உருஸ்கான் மாகாணத்தில் 11 பேரை கடத்திச் சென்ற தலிபான்கள் அவர்களை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த தலிபான் கமாண்டரான ஜுமா கான் என்பவர் கடந்த மாதம் அமெரிக்கப் படைகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார். அவரை காட்டிக் கொடுத்ததாக சந்தேகத்தின்பேரில் இந்த 11 பேரையும் தலிபான்கள் கடத்திச் சென்றனர். பின்னர் அவர்களை தலையை வெட்டிக் கொன்றுள்ளனர்.

Read more...

இளைஞன் ஒருவரின் சடலத்தை கடலில் வீசி விட்டுச் சென்ற சீஐடி அதிகாரி கைது.

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலத்தை கடலில் வீசிவிட்டுச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்றை முந்தல் பொலிசார் மடக்கிப்பிடித்ததோடு அதிலிருந்த இருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பிரதம பரிசோதகர் புஸ்பலா சில்வா என பொலிஸ் திணைக்கள அடையாள அட்டையினுடாக தெரிவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இரண்டாமவர் வெள்ளவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ரெஸ்ருறன்ட் ஒன்றின் உரிமையாளரான ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்: இவர்கள் பயணித்த வாகனத்திலிருந்து துப்பாக்கியொன்றும் கொலைக்க பயன்படுத்தப்பட்டதாக சந்தேசிக்கப்படும் கயிறு ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

கெப் ரக வாகனம் ஒன்றில் வந்தவர்கள் சடலத்தை பள்ளிவாசல்பாடு எனும் பிரதேசத்தில் கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் இதனைக் கேள்வியுற்ற ஊர் மக்கள் வாகன இலக்கம், வர்ணம் போன்ற விபரங்களுடன் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன், அப்பிரதேசத்தைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் முந்தல் நகரில் வைத்து குறித்த வாகனம் பொலிசாரினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ள நபா இந்தியாவைச் சேர்ந்த 24 வயதுடைய தென்னரசு செல்வராஜா எனவும் , அவர் மேற்படி ஹோட்டலில் சமையல்காரராக வேலை செய்துவந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசாரணைகளில் அவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள அநேநேரம் , உயிரிழந்தவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் உடலத்தை அழிக்கும் நோக்கில் தாம் அவற்றை கடலில் வீசியதாகவும் சந்தேக நபர்கள் விசாரணையின்போது பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு இன்று புத்தளம் மஜிஸ்ரேட் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டபோது , விசாரணைகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட ஹோட்டல் கல்கிசை மஜிஸ்ரேட் ருஜிர வெலிவத்தை அவர்களின் மேற்பார்வையில் சோதனையிடப்படவுள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ளவரின் மனைவி அவருடன் கொழும்பில் வசிந்து வந்துள்ளதுடன் தனது கணவன் பிக் பனானா ரெஸ்ருரண்டில் வேலை செய்துவந்ததாகவும் கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போயிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்:

Read more...

ஐ.நா நிபுணர்கள் குழு இன்று முதல் நியூயோர்க்கில் கூடவுள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனைகளை பெறுவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்‐கீ‐மூன் நியமித்த நிபுணர்கள் குழு இன்று முதல் முறையாக நியூயோர்க்கில் கூடவுள்ளது. குழுவின் தலைவரான மர்சுகி தருஸ்மன், யஷ்மின் சூகா, ஸ:டிபன் ரட்ணர் ஆகியோர் கூடி கலந்துரையாடவுள்ளனர். இந்த பேச்சுகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி அதனை பகிரங்கப்படுத்துவதில்லை என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.

இதேவேளை அவுஸ்த்ரேலிய ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கிய மர்சுகி தருஸ்மன், யுத்தத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து அரசாங்கத்திடம் மாத்திரமல்லாது புலிகளுடன் தொடர்புடையவர்களிடமும் சாட்சியங்கள் பெறப்படும் எனக்கூறியுள்ளார்.

இலங்கையிடம் நேரடியாக தகவல்கள் பெறப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அவர், ஐக்கிய நாடுகள் செயலாளரின் அலுவலகத்தின் ஊடாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார். எனினும் புலிகள் தொடர்பான தகவல்கள் எந்த அமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் என தருஸ்மன் தெரிவிக்கவில்லை.

Read more...

குடியேறிகள் குறித்த பிரிட்டிஷ் அரசு வரையறை

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள நாடுகளிலிருந்து வேலைக்காக பிரிட்டனுக்குள் வரும் குடியேறிகளின் மொத்த எண்ணிக்கை குறித்த உச்ச வரம்பை பிரி்ட்டிஷ் அரசு வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் அடுத்த ஏப்ரல் வரையான காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளிலிருந்து வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பப்ட்டுள்ளது.

பிரிட்டனின் உள்துறை அமைச்சரால் இந்த திட்டம் எதி்ர்வரும் திங்களன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. ஐக்கிய இராச்சியத்திற்குள் 2008 ஆம் ஆண்டில் வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒருலட்சத்து அறுபத்து மூவாயிரமாக இருந்தது. இதை மூன்றில் இரண்டு பங்காக குறைக்க புதிய அரசு விரும்புகிறது.

வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க கடுமையான சட்டத்தை ஏப்ரலில் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது. குடியேறுவோர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாவே இந்த முடிவு பார்க்கப்படுகின்றது.

வர்த்தக நிறுவனங்களும், பொதுச் சுகாதாரத் துறையைச் சார்ந்தவர்களும் இந்த கொள்கை குறித்து ஐயம் வெளியிட்டுள்ளனர். இந்த மாதத் துவக்கத்தில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக, ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவைகள் துறை இந்தியாவில் இருந்து மருத்துவர்களை பணியில் அமர்த்த துவங்கியுள்ளது,

அதேநேரம் குடிவரவு சம்மந்தமான விதிகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாக ஏற்கனவே பிரிட்டினில் பணிபுரியும் பல இந்திய டாக்டர்கள் தமது சொந்த நாட்டுக்கே திரும்பச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

Read more...

ஈழத் தமிழர்கள் – இந்தியாவின் நிலை : சபா நாவலன்

தெற்காசியாவின் தெற்கு மூலையில், நந்திகக்கடலோரம் பல்லாயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்ட வேளையில் முழு உலகமுமே செய்வதறியாது வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தது. இந்திய இலங்கை அரசுகளின் கூட்டு இராணுவம் திட்டமிட்டு உருவாக்கிய மனிதப் பேரவலம் வெறுமனே இந்திய சீன அரசுகளுக்கிடேயேயான இராணுவப் பொருளாதாரப் போட்டி என்ற குறுகிய எல்லைக்குள் நிறுத்திக் கொள்வோமாயின் அதைவிட அறிவீனம் இருக்க முடியாது.

90 களின் பின்னர் உருவான புதிய உலக அரசியற் சூழல் சீனா இந்தியா ரஷ்யா அமரிக்கா என்ற நாடுகளிடையேயான முரண்பாடுகளிலேயே தங்கியிருப்பதைக் காணலாம். இலங்கையைப் பொறுத்தவரை இந்த நாடுகளின் அணிசேர்க்கைகளின் பரிசோதனைக் கூடம். இவற்றின் ஈர்ப்பு மையமும் கூட.

ஹம்ப்பாந்தோட்டையில் சீனாவின் துறைமுகம் 450 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட போது முதலாவதாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடு இந்தியா அல்ல. அமரிக்க புஷ் அதிகாரம் அதனை செயற்பாட்டுத் தளத்தில் எதிர்த்தது. ஹம்பாந்தோட்டையில் துறைமுகக் கட்டுமானத்திற்கான ஒபந்தம் உருவான நான்கு மாத எல்லைக்குள் அமரிக்க செனட் சபையில் இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி அனுமதியை நிறுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2008 ஆம் நிதியாண்டிற்கான முன்மொழிவாக இது கருதப்பட்டாலும் 01.07.2007 இலிருந்தே ஆயுத விற்பனைக்கு அமரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தெற்காசியாவில் அமரிக்காவின் அழிவுக்காலம் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திலிருந்து தான் ஆரம்பமானது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

இதே ஆண்டில் அமரிக்க பாதுகாப்பு செயலகத்திற்கு சின்டி கேர்ட்ஸ் என்ற இராணுவ ஆய்வாளர் ஒரு அறிக்கை சமர்ப்பிகிறார். இந்தியாவைச் சூழவர கடல் வழியூடாக எரிபொருளை கொண்டு செல்வதற்கு வசதியாக சீனா துறை முகங்களை உருவாக்கிக் கொள்கிறது என்ற அவரது ஆய்வு இராணுவ ஆய்வாளர்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் அடைகிறது.

இலங்கையில் ஹம்ம்பாந்தோட்டை, பாகிஸ்தான், மாலைதீவு, சோமாலியா போன்ற நாடுகளில் பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்படும் துறைமுகங்கள் இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என அமரிக்க இராணுவ மையங்கள் இந்தியாவை நோக்கி அபாய சமிக்ஞை செய்கின்றன. இதையே சீன அரசின் முத்துமாலைத் திட்டம் என்று பெயரிட்டுக்கொள்கின்றனர்.

குறிப்பாக அமரிக்க இராணுவ ஆலோசனை மையம் இக்கருத்தை மேலும் பிரச்சாரம் மேற்கொள்கின்றது. இதனையே சீன கற்கை மையத்தைச் சேர்ந்த பி.ராமன் போன்றோர் மேலும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

அமரிக்கா இராணுவத் தளபாட அனுமதியை அமரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு நிராகரிக்கத் தீர்மானம் நிறைவேற்றிய அதே வேளை தனது தெற்காசிய நண்பனாகக் கருதிக்கொண்ட இந்தியாவிடமிருந்து இலங்கையில் சீனத் துறைமுகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்பார்த்தது. இதன் பின்புலத்தில் தெற்காசியாவில் இந்திய – சீனப் போட்டி உருவாகும் என்பதையும் அதனூடாக தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தலாம் என்பதையுமே அமரிக்கா தனது தந்திரோபயமாகக் கொண்டிருந்தது.

ஆக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான முரண்பாட்டை கூர்மைப்படுத்தும் களமாக இலங்கையை அமரிக்கா கருதியிருந்தது.

ராஜீவ் – ஜெயவர்தன பாதுகாப்பு ஒபந்தத்தின் அடிப்படையிலும் இந்திய இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் இந்தியாவே இலங்கையில் அதிக இராணுவ உரிமை பெற்றிருந்தது. ஏனைய நாடுகளிடையேயான இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் கூட இந்தியா தலையிடும் உரிமை இவ்வொப்பந்தங்களில் வழங்கப்பட்டிருந்தன.

இவ்வாறான இலங்கை மீதான அனைத்து ஆதிக்கங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்தியா ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு எதிரான எந்தச் செயற்பாட்டையும் இதுவரை மேற்கொண்டதில்லை.

90 களின் பின்னர் பாய்ச்சல் நிலையிலான மாற்றத்தை ஏற்படுத்திய சர்வதேசிய அரசியல் நகர்வுகள் உலகின் அணிசேர்க்கையை முற்றாக மாற்றிவிட்டிருந்தது. இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் உச்ச நிலையை அடைந்த அமரிக்க – ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடி மீட்சியற்ற தொடர் நிகழ்வாகவே உணரப்பட்டது.

இதன் பிரதான வெளிப்பாடாக, அமரிக்காவின் புதிய உலக ஒழுங்கு குறித்த தந்திரோபாயம் முற்றாக மாற்றமடைந்தது. ஐரோப்பாவும் இந்தப் புதிய யுக்தியோடு கைகோர்த்துக் கொண்டது. இரு துருவ வல்லரசுகள் என்ற உலக ஒழுங்கிலிருந்து பல துருவ வல்லரசுகள் உருவாவதற்கான சாத்தியப்பாட்டை அமரிக்கா சார்ந்த அணி ஊக்கப்படுத்தியது. இந்தியா, சீனா, ரஷ்யா என்ற மூன்று வல்லரசுகள் உருவாவதையும் அதன் தலைமை சக்தியாக அமரிக்கா தன்னை உயர்த்திக் கொள்வதையுமே தனது பிரதான தந்திரோபாயமாகக் கொண்டிருக்கிறது.

பலதுருவ வல்லரசுகளிடையேயான முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்வதனூடாகத் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நாட்டுவதையே அமரிக்க தனது புதிய உலக ஒழுங்கு குறித்த திட்டமாக மேற்கொண்டது.

பலதுருவ வல்லரசுகளின் தலைமை சக்தியாக உருவாகும் அமரிக்காவின் அரசியல் பொருளாதாரக் கனவிற்கு முதலில் புதைகுழி வெட்டப்பட்டது இலங்கையில் தான்.

இலங்கைக்கான இராணுவ உதவிகளுக்கான அனுமதியை நிறுத்திக் கொள்வதாக அமரிக்க செனட்சபை தீர்மானித்த அதே வேளை 2003 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இலங்கை கைச்சாத்திட்ட இராணுவ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கான தொழில் நுட்ப இராணுவத் தளபாடங்களை ரஷ்ய அரசு விற்பனை செய்ய ஆரம்பித்தது.

லெப்.கேணல் மெல்பென்ஸ்கோவ் டிசம்பர் 2007 இல் ரஷ்யாவுடனான இராணுவ ஒப்பந்தத்தைத் துரிதப்படுத்துவதற்காக இலங்கை செல்கிறார். செச்சினியாவின் கட்டளைத்துறைத் தளபதியாகச் செயற்பட்ட இவரின் வருகைக்குப் பின்னர் அமரிக்கா விற்பனை செய்வதற்கு மறுப்புத் தெரிவித்த, இந்திய அரசிடம் கொள்வனவு செய்துகொள்ள முடியாத அனைத்து இராணுவத்தளபாடங்களையும் ரஷ்யா விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது.

இலங்கை மீதான இராணுவ ஆதிக்கத்திலிருந்து அமரிக்கா துடைத்தெறியப்பட்ட முதலாவது நிகழ்வு இது.

கனரக ஆயுத விற்பனையில் ரஷ்யா அமரிக்காவைப் பிரதியிடுவதற்கு இரண்டு மாதங்களின் முன்னர் இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியுறவுத் துறைச் செயலர் ஷிவ் சங்கர் மேனனைச் சந்தித்து புலிகளுக்கு எதிரான யுத்தம் குறித்த பேச்சுக்களை மேற்கொள்கிறார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவின் நிலையே உலக அரங்கில் அமரிக்காவின் ஆதிக்கத்தைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாக அமையும் என அமரிக்க உளவுத்துறை ஆலோசனை மையம் “எதிர்கால உலகின் படமாக்கல் 2025″ என்ற அறிக்கையைச் அமரிக்க அரசிற்குச் சமர்ப்பிக்கிறது.

வன்னி யுத்தம் நடத்தப்படுவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் சீன ரஷ்ய உதவியோடு இந்தியா மேற்கொள்கிறது. அதே வேளை இந்திய சீன எல்லைகளில் தமக்கிடையே சச்சரவுகள் உருவாகின்றன என்று இவ்விரு அரசுகளும் அமரிக்காவிற்கும் உலகிற்கும் காட்டிக்கொள்கின்றன.

இந்திய அரசு திட்டமிட்டபடி இலங்கையில் யுத்ததை நிகழ்த்தி முடிக்கிறது. இந்திய அரசால் ரஷ்ய சீன அரசுகளின் துணையோடு தெற்காசியாவின் திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்த்தி முடிக்கப்படுகிறது. இன்றைக்கு வரைக்கும் அமைரிக்கா போன்ற நாடுகளே இலங்கையில் நடந்தது போன்ற இனப்படுகொலைகளை நன்கு திட்டமிட்டு நிகழ்த்திவிட்டு தமது ஜனநாயக முகமூட்டிக்குள் ஒளிந்து கொன்டிருந்தன. இப்போது இந்தியாவும் கூட அதனோடு இணைந்து கொண்டுள்ளது. அது தான் ஆசியப் பொருளாதாரத்தின் கோர முகம்.

அமரிக்க அணியின் அரசியல் பொருளாதார இராணுவ ஆதிக்கத்திற்கு தெற்காசியாவில் ஆசியப் பொருளாதார நாடுகள் இணைந்து வழங்கிய மிகக் குறிக்கத்தக்க சாட்டையடிதான் வன்னிப் படுகொலைகளும் யுத்தமும்.

யுத்தத்தின் பின்னான காலம் என்பது இந்த முரண்பாடுகளையும் அரசியல் சதுரங்கத்தையும் இன்னும் தெளிவாகவே கோடிட்டுக் காட்டுகிறது.

இலங்கையின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட அமரிக்கா அதன் புகழ்பெற்ற ராஜதந்திரியான பற்றீசியா பட்டனிஸை 2009 இல் இலங்கைக்கான தூதுவராக அமரிக்க அரசு நியமித்தது.

சர்வதேச வல்லரசுப் போட்டியின் பிரதான ஈர்ப்பு மையமாக இலங்கை சிக்குண்டுள்ளது. இன்றைக்கு இலங்கையில் தனது ஆதிக்கத்தை மீள்கட்டமைப்பதற்காக அமரிக்காவிற்கு இரண்டு அடிப்படையான துருப்புச் சீட்டுகள் உள்ளன. முதலாவதாக மனித உரிமை மீறல் இரண்டாவதாக ஜீ.எஸ்.பி பிளஸ். இந்த இரண்டையும் எதிர்கொள்ள இலங்கை அரசு இந்தியப் பின்பலத்தில் தயாராகவே உள்ளது.

ராஜபக்ச ஜீ.எஸ்.பி பிளஸ் நிபந்தனைகளை முற்றாக நிராகரித்துவிட்டார். ஐ.நா சபைகளின் பிரதிநிதிகள் இலங்கை வருவதை இந்தியா அணிசேரா நாடுகளின் குழுவுடன் இனைந்து எதிர்த்துள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தனித்தனியாக ஐ.நா விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஜனநாயகமும் அதன் புதிய பொருளாதாரக் கட்டமைப்பும் எதிர்ப்பியக்கங்களையும், போராட்டங்களையும் அடக்கியொடுக்குவதிலிருந்தே உருவாக முடியும். அமரிக்க அரசின் ஆதிக்கமும் கூட மனித உரிமை குறித்துப் பேசுவதிலிருந்தே உருவாக முடியும். இந்தியாவின் மிகப்பெரிய சவால் வேலையற்ற மக்கள் பகுதியும், உரிமைப் போராட்டங்களும் பயங்கரவாதமுமே என்கிறது அமரிக்க உளவுத்துறை ஆலோசனை மையம். ஆக, இந்திய அரசும் அதன் மக்கள் மீதான தாக்குதல்களும் ஒரு புறத்தில் அமரிக்க ஆதிக்க்கத்திற்குத் துருப்புச் சீட்டாகப் பயன்படும் என்பது தவிர இந்திய அரச அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் போரட்டத்தோடு இரண்டறக் கலந்துள்ளது.

அமரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதன் முற்போக்கு பண்பியல் ஆசியப் பொருளாதாரத்தின் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளாமல் நிறைவனதாக அமையாது.

இவ்வாறான ஒரு புதிய அரசியல் பகைப்புலத்தில் இந்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்றமுடியும் எனக் கருதினால் அது அப்பாவித்தனமானது. இந்திய – சீன முரண்பாட்டை நாம் கையாளமுடியும் என்று கருதினால் அது கேலிகூத்தானது. அவ்வாறான ஒரு முரண்பாடென்பதே இந்த இரு நாடுகளிடையே இலங்கை விவகாரத்தில் மட்டுமல்ல தென்னாசிய அரசியல் சூழலில் கூடக் காணப்படவில்லை. ஆசியப் பொருளாதாரத்தின் கோரமுகத்திற்கு எதிராக மக்கள் சார்ந்து நம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதே இன்றையை சமூகப் பிரக்ஞை கொண்ட ஒவ்வொரு தனிமனிதனதும் கடமை.

நன்றி இனியொரு

Read more...

ஜூன்:26, சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள். புன்னியாமீன்

International Day in Support of Torture Victims.
மனித உரிமைகள் பற்றியும், ஊடக சுதந்திரம் பற்றியும் அதிகமாகக் கதைக்கப்பட்டு வரும் இந்த மிலேனிய யுகத்தில் இதுபோன்ற ஒரு தினம் பற்றி சிந்திக்க வேண்டியிருப்பது உண்மையிலேயே வேதனைக்குரிய ஒரு விடயமே. மனிதன் எவ்வளவு முன்னேறிவிட்டாலும் ‘மனிதனை மனிதன் வதைப்படுத்தும்” காட்டுமிராண்டித்தனத்துக்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை. மாறாக நாகரிகம் வளர வளர மனிதனை வதைப்படுத்தும் உத்திகளும் நாளுக்குநாள் நவீனத்துவமடைந்து கொண்டு போவதாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ள முடியுமோ முடியாதோ - ஏற்றுத் தான் ஆக வேண்டியுள்ளமை மனித குலத்தின் ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும்.

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது ஐக்கிய நாடுகள் பொதுசபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

உலகெங்கிலும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையிலும், ஆறுதல் தெரிவுக்கும் வகையிலும், மனோரீதியான முறையில் அவர்களுக்கு விமோசனமளிக்கும் ஏற்பாடுகளை செய்யும் அடிப்படையில் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சிறப்புத் தீர்மானத்தின் படி சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் உலகில் விடுதலை, நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் இத்தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது. இன்று உலகளாவிய ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவு நல்கும் வகையிலும், மனிதாபிமான அடிப்படை நோக்கிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் சித்திரவதைக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்கின்ற வகையில் 200க்கும் மேற்பட்ட நிலையங்கள் செயற்படுகின்றன.

சித்திரவதை என்பது “உடலால், உளத்தால் நோவினையும் வேதனையும் திட்டமிட்டு ஒரு நபர் மீது பிரயோகிப்பது” என்று பொருள் கொள்ளப்படுகின்றது. சித்திரவதை தொடர்பாக சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையிலும் மேற்படி வாக்கியமே வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.

சித்திரவதைபற்றி நாங்கள் சமயபுராணக் கதைகளில் இருந்தே நாம் கற்றிருக்கின்றோம். இவ்வுலகத்தில் தீமைபுரிவோர் நரகலோகத்தில் சித்திரவதை செய்யப்பட்டு வேதனைப்படுத்தப்படுவர் என்று அக் கதைகள் கூறுகின்றன. இந்துக்களின் சைவ சமய பாடக்கதைகளிற் சமயகுரவரான அப்பர் சமணர்களால் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றித்தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சமணர் அதிகாரமிழந்த போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றியும் அறியக்கிடைக்கிறது. இயேசுபிரான் தலையிற் முட்கிரீடம் சூட்டப்பட்டுப் பாரச்சிலுவை சுமத்தப்பட்டுப் பின் அதன்மீதே ஆணிகளால் அறையப்பட்டார் என வேதாகமம் சொல்கிறது. சித்திரவதை என்னும் எண்ணத்தின் தோற்றுவாய் சமயப்புராதண கதைகளிலும் சமய சித்தாந்தங்களிலும் ஆரம்பமாகி விடுகின்றது. உலக வரலாற்றில் இருண்ட காலத்திலும் மத்திய காலத்திலும் அடிமை முறையின் கீழும் சமய முறையின் கீழும் சித்திரவதைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. எனவே சித்திரவதைகள் என்ற எண்ணக்கரு மனிதனின் ஆரம்ப காலங்களில் இருந்தே தோன்றியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.

வரலாற்று சம்பவங்களை ஆராயும்போது மத்திய காலத்திற் குறிப்பாக 15ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிற் சித்திரவதை மிக அதிகளவில் நடைமுறையில் இருந்துள்ளது. பின் அது படிப்படியாக குறைவடைந்து மீண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிகப்பரவலாக இடம் பெறத்தொடங்கி இக்காலம்வரை நீடித்து வருகின்றது. முன்னைய காலங்களைவிட நவீன காலத்தில் சித்திரவதைகள் மிகவும் அதிகரித்திருப்பதை போல தென்படுவதற்கு ஊடகங்களின் வளர்ச்சியையும் வெளிப்படையாகக் கூறலாம். இரண்டாம் உலக யுத்த காலத்தில் மனிதகுலம் வெட்கப்பட வேண்டிய அநாகரிகமான வரலாறு எழுதப்பட்டது. ஜேர்மனிய நாசிகளால் யுதர்கள் மீது புரியப்பட்ட சித்திரவதைகளும் கொலைகளும் உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது.

மனிதரை மனிதர் சித்திரவதை செய்யும் எண்ணம் எவ்வாறு தோன்றியது என்று ஆராயும் போது மனிதர்களின் பரம்பரை அலகுகளை ஆராய்ந்த மருத்துவர்கள் ஒரு சில மனிதர்கள் பிறக்கும் போதே கொடூரமான இயல்புகளை வெளிப்படுத்துவதற்குரிய நிறமூர்த்தஅலகுச்சேர்க்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் எனக்கூறுகிறார்கள். ஆனால் சித்திரவதை எனும் செயல் முறை புறநடையான தனிமனித இயல்பினாற் மேற்கொள்ளப்படும் ஒரு சிறுநிகழ்வாகக் கருதப்படமுடியாது. ஏனெனில் இது திட்டமிடப்பட்ட செயல்வடிவமாகவும், தத்தமது நோக்கங்களை அடைவதற்குரிய ஒரு ஆயுதமாகவும் கையாளப்பட்டு வருவதினால் நிறமூர்த்த அலகுகளுக்கும் இங்கு ஈடுபடும் மனிதர்களுக்கும் தொடர்பு இருக்குமென கருத முடியாது. ஜனநாயக ரீதியிலும்சரி தீவிரவாத அடிப்படையிலும்சரி உலகத்திலுள்ள எல்லாவகையான அதிகார சக்திகளும் தமது இருப்பைப் பேணவே சித்திரவதையைச் செய்கின்றன. சாதாரண குடும்ப உறவுகளில் தொடங்கி அரசாங்கம்-மக்கள் உறவு வரை இதையே அவதானிக்க முடிகிறது.

நவீன காலத்தில் சித்திரவதையின் நோக்கங்களாக செய்த குற்றத்தை அல்லது செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச்செய்தல், தேவைப்படும் தகவல் ஒன்றைப் பெறுதல் அல்லது தமக்கு சாதகமான தகவலையறிய தூண்டுதல். கைது செய்யப்பட்டவரைப் பழிவாங்குதல், தேடப்படுகின்ற ஒருவரின் குடும்பத்தினரை அல்லது நண்பர்களைத் துன்புறுத்துவதற் கூடாகத் தேடப்படுகிறவரைப் பணிய வைத்தல் அல்லது சரணடைய வைத்தல், தனது கொள்கைகளை முன்வைத்தல் எனப் பன்முகப்படுத்தப்பட்ட நோக்கங்களைக்கொண்டதாக உள்ளன. எனவே நோக்கங்களை வகைப்படுத்துவதென்பது இங்கு கடினமான ஒன்றாகும். இன்றைய கால கட்டங்களில் குற்றம் ஒன்றை நிரூபிப்பதற்கு வேறுபல வழிகள் இருக்கின்ற போதும், தேவைப்பட்ட தகவலைப் பெற வேறுவழிகள் உள்ளபோதும், அல்லது அத்தகவல்களைப் பெற்றபின்னரும் கூடச் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மனிதனின் அநாகரிகத்தையே வெளிப்படுத்துவதாக உள்ளது.

சாட்சி ஒருவரைச் சித்திரவதைக்குள்ளாக்குவதன் மூலம் அவரது உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் அழித்துவிடச் சித்திரவதை செய்பவர்கள் விரும்புகிறார்கள். சாட்சி ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை அழிக்கப்படுவது அதிகார சக்திகளுக்கு மிகவும் தேவையானதாகும். ஏனெனில் அரச அமைப்பை எதிர்த்துப் புரட்சி செய்பவர்கள், பிழையான தலைமையை எதிர்ப்பவர்கள் அவற்றுக்கெதிரான கருத்தியலையும் நடத்தைகளையும் கொண்டிருக்கிறார்கள் அவர்களது கருத்தியலும் நடத்தைகளும் இன்னும் பலரையும் தொற்றிகொள்வது தமது அதிகாரத்தைப் பேணவிரும்புகிற அரசாங்கத்திற்கோ தலைமைக்கோ ஏற்புடையதல்ல. எனவே இத்தகையவர்களின் மன உறுதியை உடைத்துவிடுவது அதிகார சக்திகளுக்கு அவசியமானதாகும்.

சர்வதேசமன்னிப்புச் சபையின் அறிக்கையொன்றின் படி உலகின் ஆறில் ஜந்து பங்கு நாடுகளில் அரச ரீதியான சித்திரவதைகள் இடம்பெற்றுவருகின்றன எனப்பட்டிருந்தது. உலகம்முழுவதும் அகதிகளாகி உள்ளவர்களில் 10 இல் இருந்து 30 சதவீதமானவர்கள் சித்திரவதைக்குள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சித்திரவதையானது உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நிகழ்த்தப்படுகின்றது. உடலியல் ரீதியான சித்திரவதைகள் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு வழிவகுக்கின்றன. சித்திரவதையானது இராணுவம் பொலிஸ் முதலாளிகளது அடியாட்கள் அல்லது போராளிகளின் ஆயுதக்குழுக்கள் சாட்சியினை கைதுசெய்வதுடன் ஆரம்பிக்கிறது.

சித்திரவதை என்பது ஒரே முறையைக் கொண்டதல்ல. இது ஒவ்வொரு அமைப்புகளுக்கேற்ப வேறுபடும். இருப்பினும் உடலியல் ரீதியான சித்திரவதைகள் பின்வரும் அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ளன.

தாறுமாறான தாக்குதல்: தடி, இடுப்புப்பட்டி, மண்நிரப்பிய எஸ்லோன் குழாய், போன்றவற்றினால் மிருகத்தனமாக உடலெங்கும் தாக்குதல் போன்றவை இதனுள்ளடங்கும்.

திட்டமிட்ட தாக்குதல்: தடிகளால் பாதங்களில் தாக்குதல், ஒரே நேரத்தில் இரு காதுகளிலும் அறைதல், முழங்கால் மூட்டுச்சில்லுகளில் அடித்தல், போன்றவை இதனுள் அடங்கும்.

மின்சாரச் சித்திரவதை : மின்சாரம் பாய்ச்சப்படும் போது உடலில் கடும் நோவுடன் கூடிய வலிப்பு தோற்றுவிக்கப்படுகிறது.

மூச்சுத்திணற வைத்தல்: இவ்வகையான சித்திரவதைகளின் நோக்கம் சாட்சியை மிகக்கடுமையான திணறலுக்கு உட்படுத்துவதாகும். இவ்வகைச் சித்திரவதையின் போது சாட்சி மரணமடைந்துவிடாதபடி கைதியின் நாடித் துடிப்பை சித்திரவதைசெய்பவர் கணித்தபடி இருப்பார். இந்நிலையில் மரணங்கள் ஏற்படுவதும் உண்டு.

எரிகாயங்களை உண்டாக்குதல்: எரிகின்ற சிகரட்டினால் உடலின் மென்மையான பாகங்களில் சுடுதல். தீயில் நன்கு எரிக்கப்பட்ட கம்பிகளால் சுடுதல்.

கட்டித்தொங்கவிடுதல்: இருகைகளையும் முறுக்கிக் கட்டி தொங்கவிடுதல், இருகால்களையும் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுதல், ஒருகை அல்லது ஒருகாலில் மாத்திரம் கட்டித் தொங்கவிடுதல் போன்றவை இதனுள் அடங்கும்.

உடற் பாகங்களைப் பிடுங்குதல்: தலைமயிர், நகங்கள், நாக்கு, விதைகள், பற்கள் என்பவற்றைப் பிடுங்குதல் அல்லது உடைத்தல் அல்லது நசுக்குதல்.

பாலியல் ரீதியான சித்திரவதைகள்: உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை உண்டுபண்ணுகிற ஒரு சித்திரவதையாகும்.

உளவியல் ரீதியான முறைகள்: தனிமைப்படுத்தி வெறுமையை உண்டாக்கி மன அழுத்தத்திற்கு உட்படுத்தல்:

அதீதிமான பயமுறுத்தல்கள்: இப்போது சில நாடுகள் பயன்படுத்தும் சித்திரவதை முறைகள்
இவற்றைவிட அதிகக் கொடுமையாக இருக்கிறதாக மனித உரிமை அறிக்கைகள் கூறுகின்றன. இதற்காக வேண்டி விதம் விதமான கருவிகளும், ஐயறிவுஜீவிகளும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. இன்று சித்திரவதை என்பது தொழில் முறையாகவும் கலைநுணுக்கம் நிறைந்ததாகவும் நவீன உபகரணங்கள் பாவிக்கப்படுவதாகவும் மாறியுள்ளது. சித்திரவதை செய்வோர் சித்திரவதைக்குள்ளாகி உயிர் வாழ்பவர்களின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து கைதியை மரணமடையச் செய்யாமல் அதே நேரத்தில் எவ்வளவு கடுமையாகச் சித்திரவதைகளைச் செய்யலாம் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். Frederic Forsythe எழுதிய ‘Fist of God’, எனும் நூலில் அவர் வித விதமான சித்திரவதை முறைகளை விலாவாரியாக விவரித்திருக்கிறார்.

இவ்வாறு சித்திரவதைகள் நிகழ்த்தப்பட்ட பின்பு சாட்சியானவர் சித்திரவதை செய்யப்படவில்லையென மருத்துவரொருவர் சான்றிதழை வழங்குவார். அல்லது சாட்சி தான் சித்திரவதை செய்யப்படவில்லை என ஒப்பதல்வாக்குமூலமொன்றில் கையொப்பமொன்றை அல்லது விரலடையாளமொன்றை இடவேண்டியிருக்கும். இந்த நடவடிக்கைகள் அரசாங்கங்கள் தமது தூய்மைத்தன்மையைப் பேணிக்கொள்ள கடைபிடிக்கும் வழிமுறையாகும்.

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), இன்று என்ற அடிப்படையில் சித்திரவதைக்கு ஆளானவர்கள் நிலை பற்றி நோக்குதல் அவசியமானதாகும். சித்திரவதையின் விளைவுகள் சடுதியாக அல்லது நீண்டகால அடிப்படையில் வெளிப்படுபவையாக இருக்கலாம். அதேபோல சிகிச்சையின்போது உடனடியாகவும் குணமடையலாம். சிலதாக்குதல்களுக்கு நீண்டகால சிகிச்சையும் தேவைப்படலாம். சிலசந்தர்ப்பங்களில் சித்திரவதையின் விளைவுகள் வாழ்நாள் உள்ளவரை தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக உடல் அங்கவீனம், இனப்பெருக்க ஆற்றல் இழப்பு போன்றவற்றை நிரந்தர விளைவுகளாகக் குறிப்பிடலாம்.

சித்திரவதைக்குட்பட்டவர் தாக்கப்பட்ட நிலையில் வெளிப்படையான காயங்கள், இரத்தக்கண்டல்காயங்கள், சிறிய பாரிய எலும்பு முறிவுகள் என்பனவும் ஏற்பட்டிருக்கலாம். பற்கள் உடைதல் பற்கள் இல்லாது போதல் முழுப் பற்களும் காலப்போக்கில் உதிர்தல் போன்றனவும் அவதானிக்கப்படுகிறது. மூட்டுக்களில் நோ, மூட்டுக்கள் வீங்குதல், நீண்ட தூரம் நடக்கமுடியாமை போன்ற தசை, வன்கூட்டுத் தொகுதிகளுடன் தொடர்புடைய விளைவுகளும் ஏற்பட இடமுண்டு.

மூச்சுத் திணறவைக்கும் சித்திரவதை முறைகளால் சுவாசக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். அதேநேரம், வயிற்றழர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்களும் உள்ளன. இது தவிர இழைய வீக்கம், தசைத் தொழிற்பாடு மந்தமடைதல் போன்ற நோய்களும் தோன்றுகின்றன. சித்திரவதைக்குள்ளான அனேகமானவர்கள் இருதயம், சுவாசப்பை, உணவுக்கால்வாய் தொகுதி, மூளை ஆகியவற்றுடன் தொடர்புடைய பாதிப்புக்களைக் கொண்டுள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உடலியல் ரீதியான சித்திரவதையின் விளைவுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படின் அவற்றிலிருந்து ஓரளவுக்காவது மீள முடியும். ஆயினும் சித்திரவதையினால் ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு சிகிச்சைகளை மேற்கொள்வதே உடலியல் சிகிச்சையை விட முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இதற்காக வேண்டி இன்று பல்வேறுபட்ட கவுன்சிலின் நடவடிக்கைகள் நிறுவன மட்டங்களிலும் தனியார் மட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சித்திரவதை செய்யப்பட்டவர் தான் மாற்றப்பட்டுவிட்டதாக, தனது அடையாளம் அழிக்கப்பட்டு விட்டதாக ஏற்படும் உணர்வினை கலைவது கடினம். சித்திரவதைக்கு முன்பு உறுதியானவராகவும்

பலமுடையவராகவும் இருந்த அவர் சித்திரவதையின் பின் உறுதியை இழந்தவராக களைப்படைந்தவராக மாறிவிடுகிறார். சுயமதிப்பீடு அவருக்கு சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது. சூழ உள்ளவர்களை நம்ப அஞ்சுகிறார். மன அமைதியை இழந்து போகிறார். இது இயல்பாக ஏற்படக்கூடிய ஒரு உணர்வாக இருக்கின்றது.

சித்திரவதைக்குள்ளாகி உயிர்வாழும் அரசியல் கைதிகளின் நிலை மிகப் பரிதாபகரமானதே. ஏனெனில் இவர்கள் தாம் எதற்காககாகத் துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள் என்பவற்றைக்கூட பிறருடன் கருத்துப் பரிமாறிக் கொள்ள முடியாத நிலையில் மாற்றப்பட்டு விடுகின்றார். மறுபுறமாக அவர்கள் எந்த அரசியல் சமூக வாழ்க்கை முறைகளை புரட்சிகரமானதாக கருதினார்களோ அவற்றைப் புரிந்து கொள்ளும் திறனுள்ள மனிதர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

பொதுவாக கடுமையான சித்திரவதைகளுக்கு உட்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான தலையிடி, ஞாபகமறதி, உறக்கமின்மை என்பன பொது நோய்களாக அமைந்துவிடுகின்றன. எனவே, சித்திரவதைக்குள்ளானோர் சமூகத்தில் அதிகமாக சிந்திக்கப்படக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களுக்காக வேண்டி ஒரு தினத்தை மாத்திரம் உருவாக்கி இவர்கள் பற்றி சிந்திப்பதைவிட தினந்தோறும் பராமறிக்கக் கூடிய ஒரு குழுவினர் என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும். விசேடமாக மானசீகமான முறையில் இவர்களின் உளத்தாக்கங்கள் கலைய விளைய வேண்டியது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்.

Read more...

Saturday, June 26, 2010

புலிகள் சரணடையவிருந்தமை பற்றி அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது .

இலங்கையின் போர் இறுதிகட்டத்தை அடைந்திருந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர்கள் சரணடை விருப்பம் தெரிவித்திருந்தமை இலங்கை அரசின் உயர் மட்டதினருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தாக நோர்வே அமைச்சர் எரிக் சொல்கேம் தெரிவித்துள்ளார். புலிகளின் விருப்பத்தை தான் நேரடியாக அரசாங்கத்திற்கு அறிவித்திருந்ததாக தெரிவித்துள்ள அவர் இலங்கை அரசில் யாரிடம் இதை தெரிவித்திருந்தார் மற்றும் அதற்கான ஒப்புதல் இலங்கை அரச தரப்பிலிருந்து கிடைக்கப்பெற்றிருந்ததா என்பது தொடர்பாக தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக கூறிய அவர் புலிகளின் சமாதான செயலகத்தைச் சேர்ந்த புலித்தேவன் , அரசியல் துறைத் தலைவர் நடேசன் ஆகியோர் மே 17ம் திகதி புலிகளின் தலைவர்கள் சரணடைவதற்கு விரும்புவதாகவும் அதற்கு ஆவன செய்யுமாறு வேண்டியிருந்தாகவும் தெரிவித்துள்ளதுடன் அப்போது அதற்கான நேரம் கடந்திருந்ததாகவும் வெள்ளைக் கொடிகளைக் தூக்கிக்கொண்டு முன்னே செல்வது ஒன்றே தற்போதைக்கு உள்ள வழி என தான் அவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தாகவும் கூறியுள்ளார்.

ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கவென அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு நோர்வே பூரண ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் அமைச்சர் சொல்கேம் இன் ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம் புலிகள் சரணடையும் போது அவர்கள் எவ்வாறு நடாத்தப்படுவார்கள் என்ற எவ்வித உறுதி மொழியும் வழங்கப்படவில்லை என்பதும் சரணடைதலை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் அத்தருணத்தில் தயாராக இருந்திருக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. அவ்வாறு இலங்கை அரசாங்கம் அவர்களின் சரணடைதலை ஏற்றுக்கொள்ள தயாராகவிருந்திருந்தால் அதற்கான நிபந்தனைகள் மற்றும் உறிதிமொழிகளை வெளிப்படுத்த எரிக் சொல்கேம் தயங்கப்போவதில்லை.

புலிகளின் தலைவர் சரணடைந்து கோடாரியால் கொத்துவாங்கிச் செத்தாரா அன்றில் கே.பி தெரிவித்திருந்ததுபோல் தன்தலைவன் வீரமரணமடைந்தாரா என்பது பற்றி விவாதிக்க மக்கள் தயாராகவில்லை. விவாதிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில் இத்தனை அளிவுகளையும் சந்தித்த பின்னர் என்ன நோக்கத்திற்காக புலிகளின் தலைவர்கள் சரணடைய முயற்சித்தனர்? அவ்வாறு அவர்கள் சரணடைய முன்னர் மக்களை ஏன் விடுவிக்கவில்லை? 2009 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதி நேரத்திலும் ஏன் குழந்தைகளை பலவந்தமாக பிடித்திருந்தார்கள்? ஏன் கேள்விகளை அடிக்கிகொண்டே செல்ல முடியும்.

Read more...

பைலாவிற்கு ஆடுகின்றார் அம்மான்.

புலிகளின் மட்டு – அம்பாறை முன்னாள் இராணுவத் தளபதியும் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் மீள் குடியேற்ற பிரதி அமைச்சருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயக்கமூர்த்தி முரளிதரன் மாலம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் பைலா பாடல் ஒன்றிற்கு ஆடுவதை படத்தில் காண்கின்றீர்கள்.

பைலா பாடலுக்கு மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ கைதட்ட கருணா சுழன்று சுழன்று சிறப்பாக ஆடியதாக நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

Read more...

லங்கா நீயூஸ் வெப் ஆசிரியரை லண்டனில் கைது செய்ய கொழும்பு நீதிமன்று உத்தரவு.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பொய்யான செய்திகளை வெளியிட்டுவரும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்தை பிரித்தானியாவிலிருந்து நிர்வகித்துவரும் இலங்கை சட்டத்தரணியான சந்திம அனில் வித்தானராச்சி என்பவரைக் கைதுசெய்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் பகிரங்க பிடிவிராந்து ஒன்றை பிறப்பித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. போலி ஆவணங்களைத் தயார் படுத்தியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக அபகீர்த்தியை ஏற்படுத்தும் தேசத்துரோக செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இந்த இணையத்தளம் குறித்து இரகசியக் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

போலி ஆவணங்களை தயாரித்து மோசடிகளில் ஈடுபட்டமை சம்பந்தமாக விதானாராச்சி என்பவருக்கெதிராக பல காவல்நிலையங்களில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோசடி செய்வதற்கு உதவி வழங்கியமை, அன்பளிப்பு உறுதிப் பத்திரங்களை போலியாக தயாரித்து சொத்துக்களை மோசடி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அவரும், அவரது மனைவியும் போலி கடவுச் சீட்டின் மூலம் பிரித்தானியாவிற்குச் சென்றுள்ளனர். இரகசியக் காவல்துறையினர் பிரான்ஸைத் தலைமையமாகக் கொண்டியங்கும் சர்வதேச காவல்துறையினரிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், வித்தானாராச்சியைக் கைதுசெய்வதற்கான கடுமையான நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதுடன், சிவப்பு அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விபரங்கள் சர்வதேச காவல்துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

லங்காநியூஸ்வெப் இணையத்தளம், இரகசிய இணையத்தளமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் அவரது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்கள் என்பன காணப்படவில்லை. மின்னஞ்சல் முகவரி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக இந்த இணையத்தளத்தின்மூலம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராக அடிப்படையற்ற பல செய்திகள் வெளியிடப்பட்டதாக இரகசியக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

பிரித்தானியாவின் புதட்போர்ட்டிலுள்ள விலாசமொன்றிலிருந்து இந்த இணையத்தளம் இயக்கப்பட்டு வருவதாக இரகசியக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். சந்தேக நபர்களிடமுள்ள பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட இரண்டு தொலைபேசிகள் மூலம் அவர் இலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதாகவும், அவற்றில் ஒன்று வீட்டில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எனவும் மற்றையது கையடக்கத் தொலைபேசி எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், அவர் ஸ்கைப் மூலமும் தொடர்புகளை பேணி வருகிறார். அரசாங்கத்திற்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதற்காக இந்த தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் இணையத்தளத்தை நடத்துவதற்காக வித்தானாராச்சி இலங்கையிலுள்ள செல்வந்த வர்த்தகர் ஒருவரிடம் பணத்தைப் பெற்றுள்ளார்.

அரசியலில் பிரவேசித்துள்ள குறித்த வர்த்தகர் வடக்கில் தொலைபேசி இணைப்புகள், கையடக்க தொலைபேசி விற்பனை ஆகியவற்றின்மூலம் பெருமளவு பணத்தை சம்பாதித்திருப்பதாகவும், அவரது வியாபாரத்திற்காக விடுதலைப் புலிகள் பல்வேறு உதவிகளைச் செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கையிலுள்ள பிரபல சிங்கள தேசிய ஊடகமொன்றில் பணியாற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவர் வித்தானாராச்சிக்கு இலங்கையின் தகவல்களை வழங்குபவர்களில் ஒருவர் எனவும், அவருக்கு அரசியலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் மாதாந்தம் கொடுப்பனவொன்றை வழங்குவதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் கடந்த தமிழ் ‐ சிங்கள புதுவருட விடுமுறைக் காலத்தில் ஆசிய நாடுகளில் பயணம் மேற்கொள்வதற்காக இலவச வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், பணம் வழங்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அறிக்கைகளைத் தயார் செய்துவரும் நாட்டிற்கு வெளியில் இருக்கும் இலங்கையின் ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொள்வோரின் உதவியும் வித்தானாராச்சிக்கு கிடைத்துவருகிறது.

கொழும்பைத் தலைமையமாகக் கொண்டு இயங்கும் ஊடக அமைப்பொன்றில் நிதி மோசடி செய்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நபர் உள்ளிட்ட தற்போது ஐரோப்பாவில் இருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான ஊடகவியலாளரின் உதவியும் வித்தானாராச்சிக்கு கிடைத்து வருகிறது.

லங்காவெப்நியூஸ் இணையத்தளம், பிரித்தானிய சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக நடத்தப்பட்டுவருவதாகவும் இணையத்தள நிர்வாகத்திற்கு சட்டங்கள் இருப்பதுடன் பொய்யான பிரசாரம் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த பிரித்தானியாவைப் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கும் வெளிவிவகார அமைச்சு இதுதொடர்பாக தூதரகப் பிரிவினர் மூலமாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பிரத்தியேக செய்தி என்ற தலைப்பில் முல்லைத்தீவு நந்திகடல் களப்பில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களை அப்புறப்படுத்தும் பணிகளை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுக்கு வழங்கியிருப்பதாக வெளியிடப்பட்ட செய்தியும் இவ்வாறு வெளியிடப்பட்ட பொய்யான செய்திகளில் ஒன்றென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நட்பு நாடுகளுடன் இலங்கைக்கு இருக்கும் உறவுகளை இல்லாமல் செய்யும் நோக்கில் இவர்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டுவருவதாக அரசாங்கம் நம்புகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் குறித்து வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளது. இலங்கையில் தேடப்பட்டுவரும் வித்தானாராச்சி பிரித்தானிய குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அங்குள்ள இலங்கையர் எவரும் அவர் வசித்து வரும் இடத்தை அறிந்திருக்கவில்லை எனவும் அறியக்கிடைத்துள்ளது. சந்தம அனில் வித்தானாராச்சி, இலக்கம் 84‐1, ஸ்கூல் பிளேஸ், தலபன்பிட்டிய வீதி, நுகேகொடை என்ற முகவரியில் வசித்துவந்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ.ரி.ரத்னாயக்க இவரைக் கைதுசெய்வதற்கான பிடிவிராந்தைப் பிறப்பித்துள்ளார்

Read more...

ஐ.நா விடயத்தில் சிந்தித்து செயற்படுவதே புத்திசாலித்தனமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நகர்வுகள் இலங்கை அரசாங்கத்தை படுதோல்வியடையச் செய்து விட்டன. காலம் கடந்து விட்ட விடயம் குறித்து கத்திக் கொண்டிருப்பதை விடுத்து அதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் சிந்தித்து செயற்படுவதே புத்திசாலித்தனமாகும்.

நிபுணர்கள் குழு விடயத்தில் தோற்றுப் போனதை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட ஆக வேண்டும் என்று ஜே.வி.பி. கடுமையாக விமர்சித்துள்ளது. நிபுணர்கள் குழு இலங்கைக்குள் நுழைவதற்கு விசா வழங்கப் போவதில்லை என்பது வாய்ச் சவடால் மட்டுமல்ல, மக்களை ஏமாற்றும் செயலுமாகும்.

ஏனெனில் குழுவை அமைத்துள்ள ஐ.நா.இலங்கைக்குள் பிரவேசிக்காமலேயே அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இயலுமை கொண்டுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான இலங்கையின் நிலைவரங்களை ஆராய்வதற்கென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் மூன்று நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் மேற்படி நிபுணர்கள் குழு இலங்கைக்கு வருவதையும் இங்கு விசாரணைகள் மேற்கொள்வதையும் அனுமதிக்க முடியாதென அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், யுத்தம் நிறைவடைந்து விட்ட நிலையிலும் அரசாங்கம் தனது நேர்மைத் தன்மையை மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை தனி மனித ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தவறி விட்டமையே ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு அமைக்கப்படுவதற்கு காரணமாகும்.

ஒரு வருட காலம் கடந்து விட்ட போதிலும் போரின் பாதிப்புகளுக்கு இலக்கான அப்பாவி மக்களின் நிலைமைகளை கவனிப்பதற்கோ அவர்களை வாழ வைப்பதற்கோ அரசாங்கம் தவறி விட்டது.

புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர். ஆனால் அந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கோ அல்லது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரஜைகளாக மாற்றுவதற்கோ அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் தொடர்பில் அரசு அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. மீள் குடியேற்றம் என்பது சர்வதேசத்துக்கு காட்டப்படுகின்ற நாடகமாகவே அமைந்துள்ளது. உண்மை நிலைவரங்கள் வெளியாக விடாது ஊடக அடக்கு முறைகளினூடாக மூடி மறைத்துக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் மோசமான பிரதிபலன்களையே தந்து கொண்டிருக்கின்றன.

அரசாங்கத்தின் தான்தோன்றித் தனமும் அதே நேரம் முறையற்றதும் கொள்கையற்றதுமான இராஜதந்திர உறவுகளுமே ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அமைக்கப்படுவதற்கான காரணமாக அமைந்தன என்று கூறுவதில் தவறுகள் கிடையாது.

அரசாங்கத்தின் நேர்மைத் தன்மை நல்லாட்சி ஒழுகப்பட்டிருந்தால் ஐக்கிய நாடுகள் இங்கு மூக்கை நுழைக்க வேண்டியிருந்திருக்காது. மேலும் குழு அமைக்கும் விடயம் இன்று நேற்று பேசப்பட்டதோ தீர்மானிக்கப்பட்டதோ அல்ல. இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென ஐ.நா. குழு அமைக்கவிருக்கும் விடயம் பல மாதங்களுக்குன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

Read more...

கண்டி முஸ்லிம் சர்வதேச பாடசாலைக்கு அச்சுறுத்தல்

கண்டி அரும்பொலை என்ற பிரதேசத்தில் முஸ்லிம்களால் நடாத்தப்படும் இஸ்லாமிய முறையிலான சர்வதேச பாடசாலை ஒன்று இயங்கிவருகின்றது இந்த சர்வதேச பாடசாலையில் கற்கும் மாணவியர் இஸ்லாமிய உடையிலான சீருடை அணிந்து பாடசாலைக்கு சென்றுவருகின்றனர். இந்த பாடசாலையை உடனடியாக மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தும் சுவரொட்டிகள் அந்த பிரதேசத்தில் ஓட்டபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த ஆங்கில மொழி பாடசாலை இஸ்லாமிய கல்வி முறை சார் நடைமுறை பின்பற்றபடுவதாக அறியமுடிகின்றது , இவ்வாறான பல அச்சுறுத்தல்களை கண்டி மாவட்ட முஸ்லிம்கள் அண்மைகாலமாக எதிர்கொள்வதாக அறிய முடிகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com