Monday, June 21, 2010

செம்மொழி மாநாட்டில் எதிர்பார்ப்பது என்ன? கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.

கோவையில் தமிழக அரசு நடத்தவுள்ள செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், ஆய்விற்கும் என்ன செய்யப்பட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பை ஒரு கொள்கை அறிக்கையாக தமிழ் நேயம் நடத்திய கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.

கோவை அண்ணாமலை மன்றத்தில் ஞாயிற்றுக் கிழமையன்று தமிழ் விழா இலக்கியக் கருத்தரங்கு நடைபெற்றது. எழுத்தாளர் சூரிய தீபன் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில் வரவேற்புரை நிகழ்த்திய தமிழ் ஆர்வலரும், இலக்கிய முன்னோடிகளில் ஒருவருமான ஞானி, கோவையில் வரும் 23ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியை மேம்படுத்தக்கூடிய ஆய்வுகளை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசு உதவுவது தொடர்பான ஒரு தெளிவான திட்டத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இக்கருத்தரங்கில் ஞானியும், அவருடைய நண்பர்களும் உருவாக்கிய ‘தமிழியல் ஆய்வை மேம்படுத்தும் நோக்கில் ஒரு கொள்கை அறிக்கை’ வெளியிடப்பட்டது.

“கோவையில் நடைபெறவுள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழியல் ஆய்வுக்கு இப்பொழுது கிடைத்திருக்கிற மிகப் பெரிய வாய்ப்பு. இந்திய வரலாற்றில் தமிழர்களின் பங்கு மிகப் பெரியது. இந்திய நாகரிகத்தின் அடித்தளம் முழுவதும் தமிழர் நாகரிகம்தான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம்தான் என்பதில் இப்பொழுது எவருக்கும் ஐயமில்லை. ஆதிச்சநல்லூர் பற்றியும் அது பற்றிய அண்மைக்கால ஆய்வையும் விரிவாக அறிகிறோம். பூம்புகார் கடலியல் ஆய்வு தமிழர் வாழ்வை 11,500 ஆண்டுகளுக்கு முன் கொண்டுச் செல்கிறது. உலகளவில் நூற்றுக்கணக்கான மொழிகளில் தமிழ் இடம் பெற்றிருப்பதையும் ஆய்வாளர் தொடர்ந்து ஆய்ந்து வருகின்றனர்.

ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியா முழுவதும் தமிழர் பரவியிருந்தனர். இந்திய வரலாற்று ஆய்வைத் தென்னிந்தியாவில் இருந்துதான் தொடங்க வேண்டு்ம என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். இந்திய நாகரிகத்தின் அடித்தளம் என்று அறியப்படுகிற வேளாண்மை, நீர்ப்பாசனம், கால் நடை வளர்ப்பு, சிற்பம், மருத்துவம், இசை, கணிதம், வானவியல், தர்க்கம், மெய்யியல் முதலிய அனைத்துக் களங்களுள்ளும் தமிழரின் பங்களிப்பே முதன்மையானது. தமிழைச் செம்மொழியென நிறுவும் முறையில் இந்தியா மற்றும் உலகு தழுவிய இவ்வாய்வை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கான அறிவுத் தரமும் ஆய்வுத் திறமும் நமக்கில்லாமல் இந்தியச் சூழலில் இன்று நம்மை நிறுவிக் கொள்ள முடியாது. இந்திய வரலாற்றில் தமிழர்களின் தொன்மையான வரலாறு, நாகரிகம் பற்றி நாம் விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. சங்க இலக்கியங்கள் முதலியவை இதற்குச் சான்றாகின்றன. இந்தியாவின் அரசியல், பொருளியல், பண்பாடு முதலியவற்றில் தமிழர் தமக்கென இடத்தை பெறும் முறையில் நமக்கு ஆய்வுகள் தேவை.

செம்மொழி மாநாடு ஏன்?-இன்று தூர்தர்ஷனில் கருணாநிதி உரை
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து முதல்வர் கருணாநிதி இன்று தொலைக்காட்சியில் உரை நிகழ்த்துகிறார். இன்று இரவு சென்னை தொலைக்காட்சியில் இந்த உரை ஒளிபரப்பாகிறது. அதில் முதல்வர் கூறியிருப்பதாவது:

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே- செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல் இப்பொழுதுதான், 2004ம் ஆண்டில்தான்- அதுவும், மத்தியிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பின்னர்தான் நமக்கு கிடைத்துள்ளது.

இந்தப் பெருமையைக் கொண்டாடிடும் வகையில்தான் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது!. இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் பலர் வருகை தருகிறார்கள்!.

குறிப்பாக, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் துறைத் தலைவராக விளங்கும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் வருகிறார்.

அவர், எல்லாத் தகுதிகளையும் கொண்டுள்ள தமிழ் இதுவரை, செம்மொழி என அங்கீகரிக்கப்படவில்லையா? எனக்கேட்டு வருந்திக் கொண்டிருந்தவர்.

அதேபோல, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா என்னும் பேரறிஞர் வருகிறார். அவர், தனது ஆராய்ச்சி மூலம், சிந்து சமவெளி நாகரிகத்தையும் அங்கு கிடைத்துள்ள எழுத்து வடிவங்களையும் ஆராய்ந்து, அவை திராவிட நாகரிகத்தைச் சேர்ந்தவை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் செம்மொழித் தமிழாய்வு, மத்திய நிறுவனம் வழங்கும், கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினைப் பெற விருக்கிறார்.

இவர்களைப் போல உலகெங்கும் 49 அயல்நாடுகளிலிருந்து 536 தமிழறிஞர்கள் இந்த மாநாட்டிலே பங்கு பெறுகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட இந்தியாவிலிருந்து ஏறத்தாழ 5,000 அறிஞர்கள் பங்கு பெறுகின்றனர். மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்கள் 23.6.2010 அன்று காலையில் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்

எனவே, அருமைத் தமிழக மக்களே!

நமது தமிழ் மொழிக்குச் சிறப்புகள் சேர்க்க, தமிழ்ச் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் அய்யன் திருவள்ளுவர் தந்த மணிமொழி மண்ணில் சமதர்மம் படைத்திட வழி வகை காண்போம்!.

கோவை மாநகர் நோக்கி வருக வருக என அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.

இவ்வாறு உரையாற்றியுள்ளார் கருணாநிதி.

செம்மொழி மாநாடு-பாதுகாப்புப் பணிக்கு 60 வெடிகுண்டு நிபுணர்கள்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் எந்தவிதமான அசம்பாவதிமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கு 60 வெடிகுண்டு நிபுணர்கள் முகாமிட்டு அங்குலம் அங்குலமாக நகரையே அலசவுள்ளனர் என்று மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமிஷனர் சைலேந்திர பாபு அளித்துள்ள பேட்டியில், கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல்தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதிலுமிருந்து 60 வெடிகுண்டு நிபுணர்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நகரின் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்வார்கள்.

இவர்கள தவிர 20 மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கோவை விமான நிலையம் , ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Read more...

திருச்சியில் புலிகள் மூவர் கைது வெடிபொருட்கள் பறிமுதல், தமிழக காவற்துறையினர்.

தமிழகத்தின் திருச்சியில் புலிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.புலிகள் இயக்கத்தின் உளவுபிரிவின் தமிழகத்தின் தலைவராக செயல்பட்டவர் எனக்கூறப்படும் சிரஞ்சீவி என்ற ராஜு (வயது 38) என்வர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் சிரஞ்சீவி மாஸ்டர் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

வெடிகுண்டு தயாரிக்க தேவைபடும் அமோனியம் நைட்ரேட் என்ற பொருளை ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய வழக்கில் கடந்த 2007‐ம் ஆண்டு இவர் காவற்துஐறயினரால் தேடப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து இலங்கைக்கு தப்பி சென்ற அவர் 2008‐ம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு சென்று கண்ணி வெடி தயாரிப்புக்கு தேவைபட்ட உலோக உருளை பொருட்களையும் கடத்தியதாக இவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து உளவு தகவல்களை சேகரித்து இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் அனுப்பி வந்ததுடன் அவ்வப்போது இலங்கைக்கு சென்றுவிட்டு தமிழகத்திற்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான இறுதிக்கட்ட போருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் சிரஞ்சீவி மாஸ்டர் தமிழகம் வந்து காஞ்சீபுரத்தில் இரகசியமாக தங்கியிருந்தார். அவரை கடந்த வியாழக்கிழமை தமிழக உளவுப்பிரிவான கியூப் பிரிவு காவற்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். வழக்கமாக கள்ளத் தோணியில் தமிழகம் செல்லும் சிரஞ்சீவி மாஸ்டர் இந்த முறை கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னை சென்றுள்ளார். அவர் கடவூச்சீட்டு மற்றும் விசா வைத்துள்ளார். அவர் வைத்துள்ள கடவூச்சீட்டு மற்றும் விசா உண்மையானதா என கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் சிரஞ்சீவி மாஸ்டரிடம் நடத்திய விசாரணையில் திருச்சியிலும் விடுதலைப்புலிகள் சிலர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையொட்டி திருச்சியில் கியூப் பிரிவு காவற்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தி 3 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக தமிழக சட்டம்‐ஒழுங்குப் பிரிவின் காவற்துறை ஆணையாளர் லத்திகாசரண் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.


சிரஞ்சீவி மாஸ்டர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.புலிகளின் உளவுப் பிரிவை சேர்ந்த சிவா என்பவர் சென்னைக்கு அகதியாக வந்து தங்கியுள்ளார். இவர் தனது வருகை பற்றி காவற்துறையில் பதிவு செய்யவில்லை. ஈரோட்டில் தங்கியிருந்த புலி இயக்கத்தை சேர்ந்த செல்வம் மற்றும் திருச்சியில் வசித்த விடுதலைப்புலி உறுப்பினரான தமிழ் ஆகியோருடன் சேர்ந்து, இலங்கையில் போர் நடந்தபோது, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக சிவா வெடி பொருட்கள் கடத்தியுள்ளார்.

போரில் புலிகள் தோல்வியடைந்த பின்னர் இலங்கை இராணுவத்திற்கு எதிராக போரிடுவதற்காக வெடி பொருட்களை கடத்திச் செல்லவும் இவர்கள் தற்போது திட்டமிட்டுள்ளனர். இதுபற்றிய தகவல் கிடைத்த உடன் கியூப் பிரிவு காவற்துறையினர் திருச்சியில் அதிரடி சோதனை நடத்தி சிவா, தமிழ், செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடிகுண்டுகள் செய்ய பயன்படும் 4 ஆயிரத்து 900 சாதாரண டெட்டனேட்டர்கள் மற்றும் 430 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் நாச வேலைகள் எதுவும் செய்ய திட்டமிடவில்லை என்பதும், இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காகவே மேற்படி வெடி பொருட்களை சிறிது, சிறிதாக வாங்கி பதுக்கி வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தமிழக கடலோர பாதுகாப்பு தீவிரமாக இருந்ததால், இந்த பொருட்களை இலங்கைக்கு கடத்த முடியவில்லை எனவும் இதனால் திருச்சியிலேயே பதுக்கி வைத்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ரெயில் தண்டவாள தகர்ப்பு சம்பவத்திற்கும், இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. கைதான 3 பேரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தமிழக சட்டம்‐ஒழுங்குப் பிரிவின் காவற்துறை ஆணையாளர் லத்திகாசரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more...

Sunday, June 20, 2010

ஜெயல‌லிதா கூறுவது போ‌ல் த‌மிழ‌ர்களு‌க்கு எ‌ந்த ஆப‌த்து‌ம் வராது: தங்கபாலு

சீன கைதிகள் இலங்கையில் குடியமர்த்தப்ப‌ட்டு வருவதா‌ல் இ‌ந்‌தியாவு‌க்கு ஆப‌த்து‌ எ‌ன்று ஜெயலலிதா கூறி இரு‌ப்பதுபோ‌ல் இந்தியாவுக்கோ, தமிழர்களுக்கோ எந்த ஆப‌த்தும் வராது எ‌ன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் அ‌கில இ‌ந்‌திய பொது‌ச் செயல‌ர் ராகுல் காந்தி‌யி‌ன் 40வது பிறந்தநாள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பேசுகை‌யி‌ல், இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் மத்திய- மாநில அரசுகள்தான் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது. ஜெயலலிதா போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தவறாக திரித்து கூறுவதையும், அறிக்கை வெளியிடுவதையும் மக்கள் ஏற்கமாட்டார்கள்.

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசுதான் செய்கிறது. தி.மு.க., காங்கிரஸ் எடுக்கும் முயற்சிதான் இதில் உறுதியாக உள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்து கிறார்கள், அறிக்கை விடுபவர் சார்பில் எதுவும் செய்ய முடியாது.

காங்கிரஸ் அரசியல் நாடகம் நடத்தவில்லை. சீன கைதிகள் இலங்கையில் குடியமர்த்தப்படுவதாகவும் ஜெயலலிதா கூறி இருக்கிறார். இதனால் இந்தியாவுக்கோ தமிழர்களுக்கோ எந்த பிரச்சனையும் வராமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். தவறாக பிரசாரம் செய்து அவர் நாடகம் நடத்துவது நல்லதல்ல. இன்னும் தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது எ‌ன்று தங்கபாலு கூறினார்.

Read more...

கரோ தமிழ் பாடசாலையின் நிர்வாக தேர்தலும் BTF ஜனநாயக மறுப்பும்

கரோ தமிழ் பாடசாலை இலண்டனில் இயங்கும் தமிழ் பாடசாலைகளில் மிகவும் பழைமையானது. இங்கு இதுவரை காலமும் நிர்வாகத்திற்கான தேர்தல் என்பது நிகழ்ந்ததே இல்லை. மாறாக பெற்றோர்கள் எல்லோரினதும் புரிந்துணர்வுடன் ஒரு நிர்வாக குழு முன் மொழியப்பட்டு எல்லோரினதும் முழு ஆதரவுடன் புதிய நிர்வாக சபையினர் பொறுப்புக்களை ஏற்பார்கள். இது ஒரு சிறந்த ஜனநாயக வழியன்று.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் முற்று முழுதாக திறம்பட செயல்பட்டனர் எனவும் கூறமுடியாது. பல பெற்றோர்கள் நீணட காலமாக நிர்வாக சபையில் இருந்தனர். இதன் காரணமாக பாடசாலையினை தமது சொத்து போன்று நடத்த ஆரம்பித்தனர். உதாரணமாக தமது பிள்ளைகளையே எல்லா நிகழ்வுகளிலும் முன்னுக்கு விடுதல். அரசாங்கத்திடமிருந்து பெறும் உதவிப் பணத்தினை தமது உரிய நேரத்தில் விண்ணப்ப படிவங்களை அனுப்பி பெற முடியாமல் போனமை. கணக்கு விபரங்களை சரியாக காட்டாமை எனப் பல.

இந்த நிலையில் இவர்களுக்குள் குழுக்கள் தோன்ற ஆரம்பித்தது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் நடந்த நிர்வாக சபைத் தேர்தலில் இந்த குழுவாத வெளிப்பாடு பகிரங்கத்திற்கு வந்தது. பாடசாலைக்கு வெளியே இரு குழுக்களும் சந்தித்து ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இரு பக்கத்திலிருந்தும் பதவிகளிற்கு ஆட்கள் தெரியப்பட்டு ஒரு நிர்வாக குழுவினை அமைத்தனர். பாடசாலை பொதுக் கூட்டத்தினைக் கூட்டி பெற்றோர்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்தனர். இந்த நிர்வாக சபையில் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே பெண்கள் இருக்கலாமென்பதும் அவர்கள் தேனீர் போட்டு கொடுப்பதற்கு மட்டுமே என்பதும் ஒரு எழுதப்படாத சட்டமாகும். ஏனெனில் ஒரு பெண் செயலாளர் பதவிக்கு தனது விருப்பத்தினை தெரிவித்த போது பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்படடிருந்தது. இறுதியில் அவர் நிர்வாக சபை தெரிவுக் கூட்டத்திற்கு முன்னரே தனது பிரச்சாரத்தினை கைவிட வேண்டியிருந்தது.

வழக்கமாக நிர்வாக சபை தெரிவுக் கூட்டத்தில் ஒவ்வொரு பதவிக்கும் பெயர்களை பிரேரிக்கும் படி அறிவிக்கப்படும். ஓவ்வொரு பதவிக்கும் ஒரே ஒரு பெயர் முன் மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும். கடந்த வருடம் நிகழ்ந்த நிர்வாக சபை தெரிவுக் கூட்டம் மிகவும் நகைப்புக்குரியதாக இருந்தது. பழைய நிர்வாக சபையினர் மேற்கூறிய வழியினை மறுத்து தாமே தொடர்ந்து இருக்க விரும்புவதாக கூறி புதிய நிர்வாக சபை தெரிவிற்கு கோராது இருந்தனர். நிர்வாக சபையின் சாதாரண உறுப்பினர் தெரிவிற்கு மட்டுமே புதிய பெயர்களை பிரேரித்தனர். ஒரு சில பெற்றோர்கள் இந்த ஜனநாயகமற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் இருந்தனர். ஆனால் பாடசாலையின் நலனை கருத்தில் கொண்டு பழைய நிர்வாக சபையினை தொடர்ந்தும் இயங்க அங்கிகரித்தனர்.

இதன் பின்னணியில் இந்த வருட நிர்வாக சபை கூட்டம் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால் திரை மறைவில் பல மாதங்களாக புதிய நிர்வாக சபையினரை தீர்மானிக்கும் வேலைகள் நிகழ் நிர்வாக சபையினரின் ஆதரவுடனோ அன்றி அவர்கள் மீது நிர்ப்பந்தப்படுத்தப்பட்டோ மிகவும் திட்டமிடப்பட்டு நடந்து கொண்டேயிருந்தது. மிக நீண்ட காலமாக பாடசாலையின் நலனிற்காக உழைத்த நிர்மலனை தலைவராகவும் சமீப காலமாக பாடசாலைக்கு வரும் பெற்றோரான முரளிதரனை செயலாளராகவும் மேலும் நீண்ட காலமாக பெற்றோராகவும் பாடசாலையின் நலனிற்காகவும் பாடுபடும் ஜெயேந்திரனை காசாளராகவும் மேலும் பலரை அங்கத்தினராவும் குறிப்பாக நிர்மலசங்கர் (BTF- British Tamil Froum இன் தீவிர செயற்பாட்டாளர்) இனையும் உள்ளடக்கியிருந்தனர். முதலில் நிர்மலசங்கரின் பெயர் செயலாளர் பதவிக்கே முன் மொழியப் பட்டிருந்தது. இறுதியி நேரத்தில் இவரின் பெயர் சாதாரண உறுப்பினர் பதவிக்கு மாற்றப்படடிருந்தது.

மேலும் முரளிதரன் என்னும் நபர் பாடசாலையில் படிக்கும் பெண் பிள்ளைகளை தொட்டு தொட்டு பேசுவதாக ஒரு முறைப்பாடு நிர்வாகத்திற்கு ஏற்கனவே சம்பந்தப்பட்ட பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டுமுள்ளது. மேலும் பாடசாலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகளுக்கு தொலை பேசியில் பிறந்த நாள் வாழ்த்து கூறி பெற்றோர்களிடம் நிறையவே வாங்கிக் கடடியுள்ள நபருமாவார். மேலும் பாடசாலையின் விளையாட்டு விழாக்களின் போது மைதானத்திற்கு குடிவகைகளை கொண்டு வந்து குடித்து கும்மாளம் போடவருமாவார்.

19 ஆம் திகதி நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்திற்கு என்றுமில்லாதவாறு பெரும் திரளான பெற்றோர்கள் வந்திருந்தனர். புதிய நிர்வாக சபை தெரிவு தொடங்கியது. இருவர் பெயர்கள் முன ;மொழியப்படடனர். முதலாமவர் நிர்மலன் இரண்டாமவர் பாலச்சந்திரன் - இவர் மிக நீண்ட கால பெற்றோரும் கடந்த காலங்களில் பாடசாலைக்காக மிகவும் உழைத்தவருமாவார்.

பொது இணக்கப்பாடின்மையினால் - பாடசாலையின் வரலாற்றிலே முதன் முதலாக வாக்கெடுப்பு நிகழ்ந்தது. பாலச்சந்திரன் 20 இற்குமதிகான வாக்குகளை பெற்றிருந்தார். ஆனால் நிர்மலசங்கர் முரளிதரன் போன்றோர் கணக்கிட்டது பிழை என பிரச்சனை எழுப்பினர். மீண்டும் வாக்கெடுப்பு நிகழ்ந்தது. பாலச்சந்திரனே மீண்டும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத மேற்படி குழுவினர் கூட்டத்தினை குழப்பினர்.

இறுதியில் நடப்பு நிர்வாகத்தின் தலைவர் தாமே தொடர்ந்து இருக்கப் போவதாக எதேச்சதிகாரமா முடிவெடுத்து கூட்டத்தினை முடித்துக் கொண்டார்.
கரோ தமிழ் பாடசாலையின் பெரும் பான்மையான பெற்றோர்கள் முரளிதரன் நிர்மலசங்கர் உள்ளடங்கிய எந்த குழுவையும் அவர்களின் தனிப்பட்ட செயற்பாடு மற்றும் அவர்களின் பின்னணி காரணமாக ஆதரிக்கப் போவதில்லை.

நடப்பு நிர்வாகமே நீங்கள் தொடர்ந்தும் எதேச்சதிகதரமாக பதவியினை நீடித்து கொண்டிருக்க முடியாது. பாடசாலையினை சீரழிவுக்கு இட்டுச் செல்வதனை தடுக்க உடனடியாக இரகசிய வாக்கெடுப்பின் ழூலம் புதிய நிர்வாக சபையினை அமைக்க ஒழுங்குகளை செய்யுங்கள். உங்கள் தனி நபர் கௌரவ பிரச்சனைகளை ஒதுக்கி வைத்து விட்டு சழூகத்தினை பற்றி சிந்தியுங்கள்.

-பாடசாலையின் நலன் விரும்பும் பெற்றோர்கள்-

Read more...

கிளிநொச்சியில் ஐ.நா அலுவலகம்

போர்வேளையில் வன்னிக்கு உணவு எடுத்துச் சென்ற ஐ.நா வாகனம் ஒன்று(ஆவணப்படம்) விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவர்களின் அரசியல் தலைநகரமாக கருதப்பட்ட கிளிநொச்சி நகரப்பகுதியில் ஐ.நா அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பேரழிவுக்கு உள்ளாகிய இந்த நகரப்பகுதியிலும் அதன் மாவட்டத்திலும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருவதையடுத்து பல்வேறு அரச அலுவலகங்களும் சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்களும் அங்கு செயற்பட முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்து வருகின்ற ஐநா சபையின் முக்கிய அலுவலகங்களும் அங்கு திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான நிவாரண உணவுப் பொருட்களை பங்கீட்டு அடிப்படையில் இலவசமாக வழங்கி வருகின்ற உலக உணவுத் திட்டம், உணவு மற்றும் விவசாய நிறுவனம், குழந்தைகளின் நலன்களுக்கான ஐநாவின் சிறுவர் நிதியம் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கிய ஐ.நாவின் அலவலகமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நாவின் பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கின்றார்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து, அங்கு செயற்பட்டு வந்த ஐநாவின் அலுவலகங்கள் மூடப்பட்டதாகவும், அந்த அலுவலகங்கள் இப்போது திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

Read more...

கே.பி வவுனியா விஜயம். புலம்பெயர் புலிப்பினாமிகளுடனும் சந்திப்பு.

புலிகளின் ஆயுதத்கடத்தல் மன்னனும் பிரபாகரனின் மறைவின் பின்னர் புலிகளியக்கத்தின் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டவரும் தற்போது இலங்கை அரசின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழும் கே.பி வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார். புலம் பெயர் புலிப்பினாமிகளை தொடர்பு கொண்டு அவர்களை இலங்கைக்கு அழைத்து கலந்துரையாடியதன் பின்னர் இவ்விஜயம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. கனடா, ஜேர்மன், சுவிஸ், பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளிலிருந்து சென்றுள்ள் 9 பேர் கொண்ட புலிப்பினாமிகள் குழுவொன்று கேபியைச் சந்தித்ததாக அரச பத்திரிகையான சண்டே ஒப்சேவர் தெரிவிக்கின்றது.

ஆனால் கேபியின் அழைப்பின் பேரில் புலம்பெயர் புலிப்பினாமிகள் பலர் இலங்கை வந்தடைந்துள்ளதாகவும் அவர்கள் இலங்கையில் பல்வேறு வகையான தத்தமது வியாபாரங்களைப் பெருக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் முயற்சிகளுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நம்பரகரமாக அறியமுடிகின்றது.

அதேநேரம் வன்னி பிரதேசங்களுக்கு மேற்படி குழுவினரின் விஜயம் தொடர்ந்தும் தமிழ் மக்களின் காதில் பூச்சுத்துவதற்கான முன்னெடுப்பேயாகும். புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டத்தின் பெயரால் சுருட்டப்பட்ட பணம் மற்றும் அதன் பெயராலுள்ள அசையும் - அசையா சொத்துக்களை பங்கிட்டுக்கொள்ளும் நோக்கில் கே.பி குழுவினரால் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இச்செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் பலியாவார்களா என்பது கேள்வியே.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கே.பி மற்றும் நோர்வேயில் தலைமறைவாகவுள்ள நெடியவன் இருவருமே மகிந்த அரசுடன் உடன்படிக்கையுடன் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. அதே நேரம் புலிகளின் சில அசையா சொத்துக்களை தமது பெயர்களில் வைத்துள்ள சில தனிநபர்களிடமுள்ள சொத்துக்களை பிடுங்குவதற்கு திரைமறைவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனை அறிந்த பலர் தலைமறைவாகியுள்ளதுடன் சிலர் உடன்படிக்கைகளுடன் இலங்கைக்குச் சென்று சொத்தினை பங்கிட்டுக்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இச்சொத்துக்களைச் சேர்பதற்காக புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்காக வங்கிக் கடன்களை எடுத்துக்கொடுத்தவர்கள் கடன்சுமை தாங்காது திண்டாடுகையில் புலிப்பினாமிகள் சொத்துக்களை பங்கிட்டு வருகின்றனர். இச்சொத்து பங்கிடும் விவகாரத்தில் கே.பி மாத்திரமல்ல நெடியவன் குழுவினரும் இலங்கை அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கை சென்றுள்ள புலம்பெயர் புலிப்பினாமிகள் குழுவில் ஜேர்மனியிலிருந்து சிவனடியார் சிறுபதி கலந்துகொண்டுள்ளதுடன் ஜேர்மன் நாட்டில் புலிகளின் அசையும் அசையா சொத்துக்களை கொண்டுள்ளோரை கே.பி யுடன் ஒருங்கிணைப்பதில் தீவிரமாக இவர் செயற்படுவதாக ஜேர்மன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

ஜூன் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினம் World Refugee Day - புன்னியாமீன்

ஜூன் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினமாக World Refugee Day நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் தினமாகத்தான் Africa Refugee Day நினைவு கூரப்பட்டது. பின்னர் இத்தினமானது 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் United Nations General Assembly சிறப்புத் தீர்மானமொன்றின்படி, ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிற நாடுகளுக்குள்ளும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும்.

உறவுகளை இழந்த மனிதன் அனாதை! சொந்த தேசத்தை இழந்தவன் அகதி! எனக் கூறுவார்கள். இங்கு தேசம் எனும்போது தான் வாழும் பிரதேசத்தை விட்டு அகன்ற நிலையையும் சுட்டிக் காட்டுவதாக இருக்கும். எனவே, அகதி எனும் பதத்துக்கு ஒரு திட்டவட்டமான வரையறை விதிக்க முடியாது. இத் தினத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன..

அகதி என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். 1951 ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது. அகதி என்ற கருத்துரு, மேற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும், ஆபிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால், சொந்த நாட்டில் இடப்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர், அகதித் தகுதி கோருபவர் எனப்படுகின்றார்.

அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு என்பது அகதி என்பவர் யார் என்பதையும், அவர்களின் உரிமைகளையும், புகலிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புகளையும் வரையறை செய்த அனைத்துலக உடன்பாடு ஆகும். இது டிசம்பர் 4, 1952 அன்று டென்மார்க்கில் முதலில் ஏற்புறுதி செய்யப்பட்டது. இதுவரை 147 நாடுகள் இந்த உடன்பாட்டை உறுதிசெய்துள்ளன. இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர்வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர். அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) ஆகும். இந்நிறுவனம் 2006 இல் உலகிலுள்ள மொத்த அகதிகள் தொகையை 8.4 மில்லியன் எனக் கணக்கிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு உலகின் மொத்த அகதிகள் தொகை 12, 019, 700 என்கிறது. அத்துடன் உள்நாட்டிலேயே அகதியானோர் உட்பட போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34, 000, 000 எனவும் இக்குழு மதிப்பிட்டுள்ளது. 2009 ம் ஆண்டு ஜுன் மாதத்தில் பீ.பீ.ஸி உலக சேவை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி மோதல்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான துன்புறுத்தல்கள் காரணமாக உலகில் சுமார் 42 மில்லியன் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் மதிப்பிட்டுள்ளது என செய்தி வெளியிட்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளில் மோசமடைந்துவரும் பாதுகாப்பு நிலைமை காரணமாக குறைந்த அளவிலானோரே தமது குடியிருப்புகளுக்கு திரும்ப முடிந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்த்தானுகராலயம் தெரிவிக்கின்றது. அகதிகளை பராமரிப்பதற்கான பிரதான பொறுப்பு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் மீதே சுமத்தப்படுவாகவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடுகின்றது.ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது தென்னாபிரிக்காவே அதிக அளவான தஞ்சமடைவோரின் விண்ணப்பங்களை பெறுகின்றமையும் இந்த எண்ணிக்கை அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமானதென்பதும் குறிப்பி்டத்தக்கது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) அல்லது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம் என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும். 14 டிசம்பர் 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ளது. இவ்வமைப்பானது ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம் மற்றும் சர்வதேச அகதிகள் அமைப்பின் வழிவந்த அமைப்பாகும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954 இலும் 1981 இலும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) வரையறுத்துள்ளபடி, அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகள், அகதிகள் தாமாகவே சொந்த நாட்டுக்குத் திரும்புதல், குடியேறிய நாட்டிலேயே கலந்துவிடுதல், மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றுதல் என்பனவாகும். 2005 ஆம் ஆண்டு நிலையின் படி மிக அதிகமான அகதிகள், பாலஸ்தீனப் பகுதிகள், ஆப்கனிஸ்தான், ஈராக், மியன்மார், சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகும். உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்ட நாடு சூடான் எனப் படுகின்றது.

இலங்கையிலும் அகதிகள் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் உள்நாட்டினுள்ளே எத்தனை பேர் அகதிகளாக உள்ளார்கள் என்ற சரியான புள்ளிவிபரம் வெளியிடப்படாவிடினும்கூட, கணிசமான எண்ணிக்கையினர் அகதிகளாக இருக்கலாம் என கருத இடமுண்டு.

2007ஆம் ஆண்டு அகதிகள் நாளையொட்டி தமிழர்களின் அகதி வாழ்க்கை குறித்த அறிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கைப் பிரகாரம் வட பகுதியிலிருந்து ஏப்ரல் 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரை 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் ஒரு மிகக் குறிப்பிட்ட காலத்திலேயே மிகப் பெரும் தொகையான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது 3, 50, 000 பேர் தமிழர் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட சிங்கள பொதுமக்களுக்கு அனைத்துலக உதவியுடன் நிரந்தரமான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. பெருந்தொகையான பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ இன்னமும் தற்காலிக முகாம்களில்தான் வசித்து வருகின்றனர். தமிழ் மக்களுக்கான ஆழிப்பேரலை நிதி உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் தடுத்துவிட்டது. மழையாலும் வெள்ளத்தாலும் அந்த மக்கள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் தமிழர் தாயகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் அனைத்துத் தமிழர்களுமே ஒரு முறையேனும் இடப்பெயர்வுக்குள்ளாகி இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால் கொழும்பிலிருந்தும் தமிழர் தாயகத்திலிருந்தும் பெருந்தொகையான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதேநேரம், 1990களில் வட புலத்திலிருந்து முஸ்லிம்கள் அப்பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்ட நேரம் சுமார் 1இலட்சம் அளவில் இன்னும் அகதிகளாவேயுள்ளனர். எமது இலங்கiயில் 30ஆண்டு யுத்தத்தால் சொந்த மண்ணிலேயே அகதிகளானோரும், அகதிகளாகப் புலம் பெயர்ந்தோரும் அனாதைகளானோரும் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டிலும் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் கடும் சண்டை நடந்தது. அப்போது 1 லட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வந்தனர் எனக் கூறப்பட்டது. இவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது {2009 june} 117 முகாம்களில் 75, 738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மறுபுறமாக 2009ஆம் ஆண்டு வட புலத்தில் நடந்த இறுதி யுத்தத்தின் போது சுமார் 3இலட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகியுள்ளனர்.

அகதிகளின் பொதுவான வாழ்க்கை நிலையை நோக்கும்போது இவர்களின் அன்றாட அடிப்படை இன்னல்களையும் சிக்கல்களையும் உலக அரங்கிலும் உள்ளநாட்டு மக்கள் மத்தியிலும் புலப்படுத்துவதற்காக அனுஷ்டிக்கப்படுவதே இந்த அகதிகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது எனலாம். இதனை வேறு வகையில் குறிப்பிடுவதாயின் வாழ்கை சிதைக்கப்பட்ட நிலையில் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத அகதிகளின் மனக் குமுறல்களை வெளி உலகம் உணர வேண்டும் என்பதே இத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.. ஆனால் உலகம் உணர்ந்ததா என்பது கேள்விக் குறியே! அழகான இச்சிறு கோளினைச் சீரழித்து வரும் அனைத்து யுத்தங்களுமொழிந்து, உலகமெங்கனும் சமாதானமும், அமைதியும் , இன்பமும் மலர்ந்திட, அனைத்து அகதிகளின் வாழ்விலும் நல்ல ஒரு விடிவு காலம் வர இந்த உலக அகதிகள் தினம் உதவியாக இருக்குமெனில் சந்தோஷமே!!

Read more...

Saturday, June 19, 2010

நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் …… ‘தோழர் க.பத்மநாபா

அகிம்சை தனை போதித்து அகிலம் போற்ற வாழ்ந்தவர் தோழர் நாபா!
அடைக்கலம் தேடி வந்தோரை
அணைத்து முத்தமிட்டவர்… தோழர் நாபா!

அக்கினியில்லாத அரசியல் தந்து
அகராதியொன்றை வகுத்தவர் தோழர் நாபா!

அகம்பாவமில்லாத அகத்தை
அருமை தோழர்கள் முன் காட்டியவர் தோழர் நாபா!

அக்கரை மக்களை சோ்ப்போமென்று
அக்கறை கொண்டெழுந்தவர் தோழர் நாபா!

அப்பாவி மக்களுக்காக தன்னுயிரை
அர்ப்பணித்தவர் தோழர் நாபா!

அரண்மனை சுகபோகம் தனை
அப்-புறம் அகற்றியவர் தோழர் நாபா!

அருகிலிருந்த அசுத்தம்படிந்த மனிதரை
அன்புடன் வழியனுப்பியவர் தோழர் நாபா!

அரியாசனம் தேடி புறப்பட்டவர் அல்ல
அல்லல் படுவோர்க்காய் புறப்பட்டவர் தோழர் நாபா!

அவசியம் வேண்டி அவனியில்
அவதார புருசனாய் தோன்றியவர் தோழர் நாபா!

அனல் காற்று பலமாக வீசிய போதிலும்
அச்சமின்றி வீரநடை போட்டவர் தோழர் நாபா!

அக்கத்தில் மக்களின் ஆயிரம் குறைஏந்தி
அடக்கமுடன் தீர்வு தேடி புறப்பட்டவர் தோழர் நாபா!

அசட்டை செய்வோரையும் தன்னுடன் அணைத்து
அன்பு காட்டும் அருமை தோழர் நாபா!

அதிர்ச்சிகளை அதிகளவில் தாங்கிய
அதிபதிகெல்லாம் அதிபதி தோழர் நாபா!

அலங்காரமில்லாத பொதுவுடமை சுமந்த
அகிலத்தில் ஓர் அச்சாணி தோழர் நாபா!

அவலம் நிறைந்த மக்களின் அழுகை குரலை
அகிம்சை வழிநிறுத்த புறப்பட்ட தோழர் நாபா!

அம்புகள் ஏராளம் உமை நோக்கி வந்தாலும்
அதை தாங்கும் அணைகட்டு தோழர் நாபா!

அறம் பொருள் இன்பம் அணைத்தையும் துறந்து
அமைதிகாக்க இளமையை துறந்தவர் தோழர் நாபா!

அல்லும் பகலும் பொதுநல எண்ணத்தில் தனை
அர்ப்பணம் செய்தவர் தோழர் நாபா!!

அறிவிலிகளினால் அவமானம் பல சுமந்து
அண்ணல் மாகாத்மா நாமம் பெற்றவர் தோழர் நாபா!

புவியீர்பு சக்தியறிந்து புனிதமான ஈழமக்கள்
போராட்டத்திற்கு புத்துயிர் தந்த எங்கள் தோழர் நாபாவுக்காக…

20வது வருட நினைவஞ்சலியுடன் சுவிஸ் கிளை தோழர்கள்…



Read more...

Friday, June 18, 2010

சீனர்களின் வருகையால் தமிழர்களுக்கு ஆபத்து என்கின்றார் ஜெயலலிதா

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதா‌ல் இலங்கைத் தமிழர்களுக்கு கடுமையான ஆபத்து காத்திருக்கிறது எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, இ‌ந்த ‌பிர‌ச்சனை‌யி‌ல் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசுடன் கடினமாக நடந்து கொள்ள வேண்டும் எ‌ன்று‌ கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், ''இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க இந்தியா ரூ.1,000 கோடி அனுமதித்துள்ளது. ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது. இதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப் பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.

இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை. இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.

1962 ஆம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவத்து மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போதுகூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது. குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம்.

அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அண்மையில் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்த போது, இந்த பிரச்சனையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது. 27 ஆண்டு கால இனப் போர் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. பெரும்பாலான ஆண்கள் இந்த இனப் போரில் உயிரிழந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக்கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும்.

இந்தப் பிரச்சனையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும்; கடினமாக நடந்து கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர், தமிழ்நாட்டின் பாதுகாப்பு மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தின் பாதுகாப்பு ஆகிய பிரச்சனைகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்க முடியாத காரணத்தினால், இந்திய அரசாங்கத்திற்கு இந்த வேண்டுகோளினை நான் விடுக்கின்றேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Read more...

பிரிட்டன் அரசாங்க செலவு வெட்டுக்கள் 700,000 வேலைகளை அச்சுறுத்துகின்றன By Jordan Shilton

கன்சர்வேடிவ்--லிபரல் கூட்டணி அரசாங்கம் பொதுச் செலவை வெட்டுவதற்கான அதன் திட்டங்களை அறிவித்த சில நாட்களுக்குள்ளேயே, இது பிரிட்டனில் வேலையின்மையை தொழிலாளர் தொகுப்பில் 10 சதவிகித த்திற்கு மேல், அதாவது 3 மில்லியன் என உயர்த்தக் கூடும் என்ற மதிப்பீட்டைக் கொடுத்து ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது.

The Chartered Institute of Personnel and Development (CIPD) வரவிருக்கும் வெட்டுக்களால் 725,000 க்கும மேலான வேலைகள் ஆபத்திற்கு உட்படக்கூடும், பிரிட்டன் முழுவதும் பொதுத் துறையில் 12 சதவிகிதம் அல்லது 6 மில்லியன் தொழிலாளர்கள் இதில் அடங்குவார்கள் என்று கணித்துள்ளது. தற்பொழுது 2.5 மில்லியன் என்று இருக்கும் வேலையின்மை 2012 க்குள் 3 மில்லியனை அடையும், அந்த அளவிலேயே 2015 வரை இருக்கும் என்றும் கூறியுள்ளது.

CPID ஆனது வரிகளை உயர்த்துவது என்பதற்குப் பதிலாக செலவு வெட்டுக்களில் குவிப்புக் காட்டுவது வேலைகள் நெருக்கடியை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. நிதி மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்ன் நிதியப் பற்றாக்குறையைக் குறைக்கும் விதத்தில் "சேமிப்புக்களில்" கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தை செலவு வெட்டுக்கள் மூலம் கொண்டுவர விரும்புகிறார். மிகுதி 20 சதவிகிதம் மட்டுமே வரி உயர்வின் மூலம் அடையப்படும். இந்த இலக்கிற்காக, ஓஸ்போர்ன் ஜூன் 22 அன்று அளிக்கவுள்ள அவசரக்கால வரவு-செலவுத் திட்டத்தில் பெரும் வெட்டுக்களை அறிவிப்பார்.

இது இந்த ஆண்டு 50,000 வேலைகளை அகற்றிவிடும் விளைவைக் கொடுக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது. மொத்தத்தில் CIPD, மேலாளர் மற்றும் நிர்வாகப் பகுதியில் தேசிய சுகாதாரப் பணி (NHS) ல் 175,000 பணிகளும், ஆட்சித் துறை, கல்வித் துறைகளில் 200,000 பணிகளும் உள்ளூராட்சிப் பதவிகளில் 350,000 உம் இழக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது. CIPD யின் தலைமைப் பொருளாதார வல்லுனர் ஜோன் பிலிப்போட் சமூகத்தில் மிக வறிய நிலையில் உள்ளவர்கள்தான் மிக அதிக வேதனையை பெறுவர் என்பதையும் தெளிவாக்கினார்: "மிகவும் நலிவுற்றிருக்கும் மக்களுடைய வருங்காலம் குறிப்பிடத்தக்க வகையில் இருண்டதாக உள்ளது." என்றார்.

தேர்தலுக்கு முன்பு, கன்சர்வேடிவ்கள் அதிக செலவு கொடுக்கும் தகவல் தொழில்நுட்பத் திட்டங்களில் குறைப்புக்கள், ஆலோசகர்களின் குறைப்புக்கள் ஆகியவற்றின் மூலமும், முன்னணிப் பணிகளைப் பாதுகாப்பதின் மூலமும் சேமிப்புக்கள் அடையப்படலாம் என்று கூறியிருந்தனர். ஆனால் பதவிக்கு வந்த உடனேயே, பிரதம மந்திரி டேவிட் காமரோன் பொதுச் செலவுகளில் இருந்து 6.25 பில்லியன் பவுண்டுகள் நிதியைக் குறைத்தார். இது "வீணடித்தலை" தவிர்ப்பதின் மூலம் நடக்கும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் இத்தகைய கூற்றுக்கள் முற்றிலும் தவறனாவை. தேர்தலின் போது மக்களிடம் இருந்து நடவடிக்கைகளின் முழு பாதிப்பை மறைப்பது என்று அனைத்து முக்கிய கட்சிகளும் கொண்டிருந்த பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான் இது.

வெள்ளியன்று 6.25 பில்லியன் பவுண்டுக் குறைப்பின் உண்மைத் தன்மை தெளிவாகியது. உள்ளூராட்சி அதிகாரிகள் இந்த ஆண்டு 1.16 பில்லியன் பவுண்டுகளை இழப்பர். கட்டுப்பாட்டு அமைப்புக்கள், Equalities and Human Rights Commission போன்றவை 15 சதவிகிதக் குறைப்பைப் பெறும். உணவுத் தர நிர்ணய அமைப்பு, 1980, 1990 களில் பல உணவுப் பாதுகாப்பு ஊழல்களை அடுத்து நிறுவப்பட்டது முற்றிலும் மறைந்துவிடும் போல் தோன்றுகிறது.

வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்களின் பரப்பு ஜூன் 22ல் தெளிவாகத் தெரியவரும்போது, இங்கிலாந்தின் வடக்குப்பகுதி, தெற்கு வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளின் வருங்காலம், வேலைகளுக்குப் பொதுத்துறையை அதிகம் நம்பியிருப்பவற்றின் வருங்காலம், குறிப்பாகக் கடினமாகிவிடும். இது TUC யின் பொதுச் செயலாளர் பிரெண்டன் பார்பரை அரசாங்கத்தின் கொள்கை "வடக்கு-தெற்கு" பிளவை இன்னும் மோசமாக ஆக்கும் என்று கூறவைத்தது.

Guardian க்கு தெரிவித்த கருத்துக்களில், மிகக் கடுமையாகச் சுமத்தப்பட்டால் வெட்டுக்கள் "மிகப் பரந்த தளமுடைய பிரச்சாரங்களுக்கு வழிவகுக்கும்...அவை பொதுப் பணித்துறைகள் அளிக்கும் வேலைகள், வாழ்க்கைத்தரங்கள் மீதான பாதிப்பு பற்றி மட்டும் இராது " என்றார் பார்பர் –இது ஆளும் உயரடுக்கிற்கு வரவிருக்கும் நடவடிக்கைகள் பெருகிய முறையில் சமூகப் போராட்டங்களை அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை ஆகும்.

Independent உடைய கருத்துப்படி, ஆட்சிப் பணியாளர்கள், மந்திரிகள் ஆகியோரைக் கொண்ட "Star Chamber", கடந்த செவ்வாயன்று ஓஸ்போர்னால் கொண்டுவரப்பட்டுள்ளது, ஆண்டு ஒன்றிற்கு 60 பில்லியன் பவுண்டுகள் வெட்டுக்கள் செலவுகளில் வருவதைக் கண்காணிக்கும்---இந்த எண்ணிக்கை இப்பொழுது தற்பொழுதைய பொதுநலச் செலவுகளில் 10 சதவிகிதத்தை நெருங்கி விட்டது.

இத்தகைய அளவுகளில் வரவு-செலவுத் திட்டங்களைக் குறைப்பது நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, பொதுத்துறையில் இருந்து வெளியே இருப்பவர்களுக்கும் பேரழிவு விளைவுகளைக் கொடுக்கும். பல பொதுத்துறைப் பணிகளின் மூலம் ஒப்பந்த வேலையைக் கொண்டவர்கள் 1.7 மில்லியன் தொழிலாளர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது--இவர்கள் குப்பை சேகரித்தல், தூய்மைப்படுத்துதல், ஓய்வு வசதிகளை நிர்வகிப்பவர்கள், பள்ளிகளில் உணவு அளிப்பவர்கள் என்று உள்ளனர். போக்குவரத்துத் துறையில், குறிப்பாக தேசிய இரயில் பணியிலும் பல உள்ளூர் பஸ் சேவைகளும் அரசாங்கத்திடம் இருந்து வரும் அதிக உதவித் தொகைகளைப் பெரிதும் நம்பியுள்ளன.

அரசாங்க ஆதரவு அகற்றப்படுவது என்றால் இத்தொழிலாளர்களில் பலர் ஒப்பந்தங்கள் குறைக்கப்படும்போது அல்லது முற்றிலும் வெட்டப்படும்போது அல்லது உதவி நிதிகள் கொடுக்கப்படுவது இல்லை என்றால், பணிநீக்கத்தைப் பெறுவர் என்ற பொருள் ஆகும். ஏற்கனவே இந்த ஆண்டு 1.7 பில்லியன் பவுண்டுகளைக் குறைப்பதில் அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது. அதற்காக அது அளிப்பாளர்களிடமும் மற்ற அமைப்புக்களுடனும் ஒப்பந்தங்கள் பற்றி மறு பேச்சு வரவு-செலவுத் திட்டக் வார்த்தைகள் நடத்த உள்ளது.

இத்தகைய வெட்டுக்களின் நேரடி விளைவு தனியார் துறையிலும் உணரப்படும். அங்கு பல நிறுவனங்களும் பொது அதிகாரங்களுடன் வணிகத் தொடர்பை நம்பியுள்ளன. இதன் பொருள் இன்னும் உயர்ந்த வேலையின்மை என்ற அச்சுறுத்தல் ஆகும்.

வேலையில் இருந்து நீங்கிவிட்ட தொழிலாளர்கள் ஒரு மிகக் குறைந்த பொதுநல முறையைத்தான் எதிர்கொள்ளுவர். ஆண்டு ஒன்றிற்கு 4 பில்லியன் பவுண்டை அரசாங்கம் பொதுநலத் தரங்களை முடக்குவதின்மூலம் சேமிக்க முயல்கிறது. இதைத்தவிர இன்னும் அதிகமும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் செலவுப் பரிசீலனைக்குள் நலன்கள், வரிகளுக்கு சலுகைகள் ஆகியவற்றையும் உள்ளடக்க அது முடிவெடுத்துள்ளது. இதன் பொருள் ஏற்கனவே மிகக் குறைந்த சமூக ஆதரவுத் தளம் கொண்டுள்ள மிக நலிந்தோர் சமுதாயத்தில் இன்னும் குறைவான நலன்களைத்தான் பெறுவர் என்பதாகும்.

குழந்தைகள் நலன்கள், இயலாதவர்களுக்கான நலன்கள், வேலையின்மையில் இருப்பவர்கள் ஆகியோரைப் பற்றிக் குறிப்பாக கவனம் செலுத்தப்படுகிறது. அரசாங்கம் உதவி நலன்களைப் பெறுவதற்கான தகுதிகளைக் குறைக்க வழிவகைகளை அரசாங்கம் முடிவெடுத்தாலும், அப்படியே நலன்களின் தரங்களைக் குறைத்துவிடவும் அது முடிவெடுக்கலாம்.

திங்களன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் காமெரோன், பணிகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை பற்றி குறைகூறுவதில் குவிப்புக் காட்டினார். இத்துறைதான் நலன்கள் முறையை நிர்வாகம் செய்கிறது. பொதுநலச் செலவுகள் மொத்தத்தில் 20 பில்லியன் பவுண்டுகள் அதிகமாகிவிட்டன என்று அவர் கூறினார். செவ்வாயன்று செலவுகள் பற்றிய பரிசீலனையை அறிவித்த ஓஸ்போர்ன் பொதுநலன்கள் மற்றும் வரிச் சலுகைகளுக்கும் வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் 15ல் இருந்து 20 சதவிகிதம் குறைக்கப்பட்டுவிடும், இது தற்பொழுதைய பாராளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இயற்றப்படும் என்றும் எச்சரித்தார்.

பொதுப் பணிகள், பொதுநலச் செலவுகள் ஆகியவற்றில் குறைப்புக்களைக் கொண்டு வரும் உந்துதலில், அரசாங்கம் பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பு (CBI) உடைய ஆதரவைப் பெற்றுள்ளது. CBI ஆனது நிதி மந்திரி இன்னும் கடுமையான குறைப்புக்களை, இப்பொழுது அறிவித்தவற்றைவிடத் தீவிரமாக அறிவிக்க வேண்டும், அதுதான் வரி உயர்வைத் தவிர்க்கும் என்று கூறியுள்ளது.

CBI வியாழனன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "வணிகக் குழு பற்றாக்கறையைச் சமாளிப்பதற்கு இதுவரை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கிறது. வரவு-செலவுத் திட்டத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்தின் நிதிய நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் விதத்தில் செயல்பட்டு, இன்னும் விரைவான விதத்தில் கட்டுமானப் பற்றாக்குறையில் குறைப்பு, இன்னும் கடுமையான பொருளாதார முன்கருத்துக்களை ஏற்றல், செலவுத் திட்டங்களை இன்னும் விரிவாக்குதல் இதற்குத் தேவை" என்று வாதிட்டுள்ளது.

The Adam Smith Institute என்னும் ஒரு வலதுசாரி சிந்தனைக்குழு இக்கருத்திற்கு ஆதரவு கொடுத்து, ஐந்து ஆண்டுகளுக்குள் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை அகற்றப்பட வேண்டும் என்று வாதிட்டுள்ளது. செலவினக் குறைப்புக்களுடன், அது புதிய தனியார்மயமாக்கும் உந்துதலுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. லண்டன் நிலத்தடி இரயில், ஸ்காட்லாந்தின் நீர் நிறுவனங்கள் மற்றும் ரோயல் அஞ்சல் துறை ஆகிவை இலக்காகக் கொள்ளப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

OBR எனப்படும் வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகம், பிரிட்டனின் பொருளாதாரம் பற்றிச் "சுதந்திர" கணிப்புக்களை அளித்தல், செலவு முடிவுகள் பற்றி ஆலோசனை கூறல் ஆகியவற்றிற்காக புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது, கடன் வாங்குதல், வளர்ச்சிக் கணிப்புக்கள் பற்றித் திங்களன்று அறிவிப்பை வெளியிடும். இது பிரிட்டனின் பொருளாதார வாய்ப்புக்கள் 2011, அதற்கு அப்பால் கீழிறக்கும். அதைத்தவிர தற்பொழுதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவிகித வளர்ச்சி என்பதும் 2 ஐ ஒட்டிக்குறைக்கப்படும் என்ற ஊகம் வந்துள்ளது. இதையொட்டி ஒப்புமையில் பிரிட்டனின் கடன் அளவு பெருகும்.

City of London உடன் நெருக்கமான பிணைப்புக்கள் கொண்டவர்கள் தலைமையில் இருக்கும் OBR உடைய அதிகம் பேசப்படும் சுதந்திரம் என்பது எத்தகைய ஜனநாயக க் கட்டுபாட்டில் இருந்தும் அது முற்றிலும் ஒதுக்கப்படும் என்பதாகும். இவ்விதத்தில் அது பெரிதும் அதிருப்தி அளிக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்தக் கோரும் நிலைமையில் உள்ளது. இது அரசாங்கத்தின் கூற்றான வரவிருக்கும் சிக்கன நடவடிக்கைகள் திட்டம் பற்றி பொதுமக்களுடன் "கலந்துரையாடல்" பரந்து இருக்கும் என்பதின் மோசடித்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஐரோப்பா முழுவதும் இதே போன்ற திட்டங்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அதுவும் இந்த வாரம் 80 பில்லியன் யூரோச் செலவுகள் ஜேர்மனியில் குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, காமரோன் அரசாங்கம் தொழிலாளர் வர்க்கம் அதன் பொறுப்பைக் கொண்டிராத பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது.

Read more...

போர் குற்ற விசாரணை : பான் கீ மூனுக்கான ஆலோசனைக் குழு நியமனமாகிறதாம்:

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவை ஒரு சில நாட்களில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அறிவிக்கவுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்று திரும்பிய ஐ.நா.வின் அரசியல் விவகாரக் குழுவின் தலைவர் லின் பாஸ்கோ இத்தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு 37 ஆண்டுகளாக நடத்திய போரில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றிற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணபது தொடர்பாக இக்குழு ஐ.நா.பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்கும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க அரசப் படைகளுககும் இடையே நடந்த மோதல்களில் 1,00,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா.மதிப்பீடு செய்துள்ளது. அரச படைகளுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் கூறப்படும் போர்க குற்றங்கள் தொடர்பாக எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுத்து அதனை உறுதி செய்ய வேண்டும் என்பதனை இக்குழு ஐ.நா.பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்கும்.

உலக நாடுகளாலும், தமிழர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆலோசனைக் குழுவின் நியமனம் தொடர்பான அறிவிப்பை அடுத்த வாரம் பான் கி மூன் வெளியிடுவார் என்பது பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாஸ்கோவின் வார்த்தைகளில் இருந்து தெளிவாகிறது.

ஐ.நா.நிபுணர் குழு அமைக்கும் அதே நேரத்தில், உள்நாட்டுப் போர் குறித்து 'போரினால் கற்றப் பாடங்கள் மற்றும் இணக்கப்பாடுகள்' என்ற பெயரில் சிறிலங்க அதிபர் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தின் செயல்பாட்டையும் ஐ.நா. கூர்ந்து கவனிக்கும்.

பிபிசி தொலைக்காட்சிக்கு தனது இலங்கைப் பயணம் குறித்துப் பேசிய லின் பாஸ்கோ, 'அங்கு அரசியல் ரீதியான இணக்கப்பாட்டை நோக்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக மிக அவசரத் தேவையாகும்' என்று கூறியுள்ளார்.
பல பத்தாண்டுகளாக வளர்ந்த இரண்டு இனங்களுக்கும் இடையிலான பிளவும், கசப்புணர்வும் ஒரு இரவில் மறைந்துவிடாது என்று கூறியுள்ள பாஸ்கோ, அந்த காயங்களுக்கு மருந்திடவும், போருக்குக் காரணமான அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

போரினால் இடம் பெயர்ந்த மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தும் அரசின் செயல்பாடு திருப்தியளிக்கிறது என்றும், சிறுவர்கள் பள்ளிகளுக்குச் செல்கின்றனர், மக்களுக்கு உணவும், மருத்துவமும் கிடைக்கிறது என்றும், ஆனால் வீடு கட்டத் தேவையான பொருட்களை பெருவதுதான் பிரச்சனையாக உள்ளதென பாஸ்கோ கூறியுள்ளார்.

Read more...

பள்ளிக்கூட கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி

பள்ளிக்கூட கழிப்பறையில் 10ஆ‌ம் வகு‌ப்பு மாணவி ஒருவ‌ர் குழந்தை பெற்ற ‌நிக‌ழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ‌ந்த ‌நிக‌ழ்வு ராமநாதபுர‌த்த‌ி‌ல் நட‌ந்து‌ள்ளது. ராமநாதபுரம், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. சம்பவத்தன்று இந்த பள்ளிக்கூடத்தின் கழிப்பறையில் குழந்தை அழும் குரல் கேட்டது. உடனே மாணவிகள் சென்று பார்த்தபோது, அங்கே சில நிமிடங்களுக்கு முன்பு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது.

இது குறித்து நடந்த விசாரணையில் அந்த பள்ளியில் படிக்கும் 10ஆ‌ம் வகு‌ப்பு மாண‌விக்கு கழிப்பறையில் பிரசவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் கொடுக்கப்பட்டு அம்மாணவி நீக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி தாளாளர் தேவமனோகரன் மார்ட்டின் கூறுகை‌யி‌ல், ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் 10ஆ‌ம் வகு‌ப்பு படித்து வந்தார். அவரது தந்தை அய‌ல்நாட்டில் வேலைபார்த்து வருகிறார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அவர் அடிக்கடி கழிப்பறைக்கு சென்றார். ஆசிரியர்களிடம் தனக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறினார். ஆசிரியர்கள் அம்மாணவிக்கு மாற்று உடை ஏற்பாடு செய்து வழங்கினர்.

ஆனால் அதற்கு பின்னும் ரத்தப்போக்கு அதிகமானது. உடனடியாக அவரின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாயுடன் மரு‌த்துவமனைக்கு செல்லுமாறு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் சிறிது நேரத்தில் கழிப்பறையில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே சில மாணவிகள் கழிப்பறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்தன.

மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆசிரியர்கள் குழந்தையை எடுத்து வந்து பத்திரப்படுத்தினர். ரத்தப்போக்கு உள்ளதாக கூறிய மாணவி மீது சந்தேகம் ஏற்படவே, நானும், ஆசிரியர்களும் அந்த மாணவியையும் அவரது தாயாரையும் வரவழைத்து விசாரணை நடத்தினோம்.

அப்போது அந்த மாணவி கழிவறையில் கிடந்த குழந்தை தனக்கு பிறந்ததுதான் என்று ஒப்புக்கொண்டார். திருமணம் ஆகாத அவர் திருவிழாவின் போது ஏற்பட்ட தகாத உறவால் கர்ப்பிணியாகியுள்ளார். பள்ளி கழிப்பறையில் குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை அந்த மாணவியே அங்கிருந்த கண்ணாடி துண்டுகளால் கீறி துண்டித்துள்ளார். பின்னர் குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு வகுப்புக்கு வந்துவிட்டதாக கூறினார்.

இதனால் அந்த குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தது. இதை தொடர்ந்து மாணவியின் தாய் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களின் ஒப்புதலின் பேரில் மாற்றுச்சான்றிதழ் கொடுக்கப்பட்டது. குழந்தையும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் எதிர்கால நலன் கருதி இது குறித்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் காவ‌ல்துறை‌க்கு தகவல் தெரிவிக்கவில்லை. இது குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தலைமையாசிரியர் ஜுடித்தாசன் விளக்கம் அளித்துள்ளார் எ‌ன்று தேவமனோகரன‌் கூ‌றினா‌ர்.

Read more...

13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப் படவில்லை

இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள போதிலும், 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்படவில்லை என வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமள் தெரிவித்துள்ளார்.

13 அவது திருத்தச் சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து ஆராய்வதற்கு நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரே பாய்ச்சலில் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ள முடியாது எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வலுவான மக்கள் ஆணை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதற்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றமை இயல்பான நிலைமையே, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலேயே மாற்றுக் கருத்துக்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பிலான முனைப்புக்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் எனவும், அதற்கு தமிழ் மக்கள் சரியான முறையில் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

மட்டக்களப்பு படமாளிகை தீக்கிரை

மட்டக்களப்பில் அமைந்துள்ள பிரபல சினிமா படமாளிகை ஒன்றிற்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள படமாளிகையே தீக்கிரையாகியுள்ளது. இன்று அதிகாலை ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஐபா திரைப்பட விழாவை தமிழ் திரையுலக நடிகர்கள் புறக்கணித்தமையைக் கண்டித்து இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வடகிழக்கு சினிமா திரையரங்குகளில் இந்தியத் தமிழ் திரைப்படங்களை வெளியிட வேண்டாம் என சுதந்நிர இலங்கையின் தமிழர்கள் அமைப்பு துண்டுப்பிரசுரம் மூலம் வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில் இன்று ராவணா திரையிடப்பட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட படமாளிகை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் விஜயம் செய்தார். இச் சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

வீரம் எமது பாரம்பரியச் சொத்து. வெற்றி நாள் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி.

காலிமுகத்திடலில் இடம்பெறும் வெற்றிநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வீரம் என்பது இலங்கை மக்களின் பாரம்பரியச் சொத்து எனவும் அதனை பிறநாடொன்றிலிருந்து இறக்குமதி செய்யமுடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி எமக்கு சர்வதேச நாடுகள் விதித்த நிபந்தனைகள் யாவும் தற்போது செல்லுபடியற்றதாகியுள்ளது. பயங்கரவாதத்திற்கு மெருகூட்டிய நாடுகள் இன்று வாயடைத்து நிற்பதுடன் அவர்கள் அப்பயங்கரவாதத்தின் கொடுமையினை ஒருநாள் அனுபவிக்க நேரிடும் எனவும் அது நியதி எனவும் கூறியுள்ளார்.

எமது நாட்டின் மிகவும் பின்தங்கிய கிராமங்களிலிருந்து படையிலிணைந்துகொண்ட இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட படையினர் இராப்பகல் என்று பராது நித்திரைதுறந்த போசனங்கள் உட்கொள்ளாது நான்கு வருடங்கள் செய்த அர்பணிப்பினால் கிடைத்த பெரும் வெற்றியை வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த கதைகள் கூறி எம்மிடமிருந்து பறித்தெடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நன்றியுணர்வற்றவர்களால் மாத்திரமே அவ்வாறான செயல்களைச் செய்யமுடியும்.

மேலும் எமது பிரச்சினையை நாம் தீர்த்துக்கொள்ள முடியும். இது சர்வதேசத்திற்கு அவசியமானது அல்ல. எம்நாட்டில் யுத்தத்தின்மூலம் இடம்பெயர்ந்துள்ள மக்களை குடியமர்த்தும் விடயங்கள் இவ்வாண்டின் இறுதிக்குள் முடிவடையும்.

Read more...

Thursday, June 17, 2010

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம் World Day to Combat Desertification and Drought - புன்னியாமீன்

1994ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச்சபையின் தீர்மானத்திற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜுன் 17ஆம் திகதி முதல் இத்தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 1995ஆம்ஆண்டு ஜனவரி இலக்கம் A/RES/49/115 பிரகடனப்படி (January 30, 1995 by the United Nations General Assembly resolution A/RES/49/115) பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான போராட்ட தினமாக ஜுன் 17ஆம் திகதி உத்தியோக பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இன்று வரை ஐக்கிய நாடுகளின் பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான மகாநாட்டுக் குழுக்களும் ( PARTIES) அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இது பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுபவர்களும் இத்தினத்தை உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் 11ஆவது வருடாந்தக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்ட போது வறுமை ஒழிப்பு, பொருளாதார உதவி மற்றும் இம்மிலேனியத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைதல் என்பன பற்றி முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.வரட்சி நிலத்தில் நிலச் சிதைவுகள் ஏற்படும் பிரச்சினையைப்பற்றி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான பொறுப்பு மேற்கூறிய மகாநாடு மாத்திரமேயாகும். இதில் தற்போது 191 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

பாலைவனமாதலை உதாரணப்படுத்தக்கூடிய வகையில் பின்வரும் சம்பவத்தை இவ்விடத்தில சுட்டிக்காட்டுவது ஏற்புடையதாக இருக்கும். அதாவது சில வரலாற்று சான்றுகளின் பிரகாரம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சஹாரா பாலைநில பகுதியில் சில நீரூற்றுகள் காணப்பட்டதாக தெரிய வருகின்றது.தற்போது அந்நிலப்பகுதி தனிப்பாலை நிலமாகவே காணப்படுகின்றது.இது மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பாலைநிலங்களை நோக்கும் போது இத்தன்மையினை பொதுவாக அவதானிக்கலாம்.

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தின் போது, பாலைவனமாவதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கான மனநிலையைத் தூண்டுவதற்கானதும் உணர்வூட்டுவதற்கானதுமான நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலைவனமாவதை இலகுவாகத் தடுக்கலாம். அதற்கான தீர்வுகள் மிக இலகுவானவை. இதற்குரிய ஒரே ஒரு நடவடிக்கை சகல மட்டத்திலுமுள்ள மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதேயாகும்.

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும். பூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் சூடாகியுள்ளது. இவ்வாயுக்களை பசுமைக் கூடார வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் கூடார விளைவு என்று அழைக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம், மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம்.

பல நோய்கள் உருவாகலாம். மக்கள்தொகை அதிகரிப்பு, காடுகளை அழித்தல், அதிக அளவில் வாகனங்கள், பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல், குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பசுமைக் கூடார வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது.

கரியமில வாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. வாயுமண்டலத்தில் கரியமில வாயு இதே அளவில் உயருமானால் 2100-ஆம் ஆண்டில் 540 – 970 பிபிஎம் ஆக உயர வாய்ப்புள்ளது. கரியமிலவாயு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன. நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பசுமைக் கூடார வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக இதில் கரியமில வாயுவின் அளவு அதிகம்.மக்கள்தொகைப் பெருக்கம், தொழில் வளர்ச்சி, காடுகளை அழித்தல், அதிக அளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம், சுமார் 50 – 2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே, இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

தற்போது மீத்தேனின் அளவு 1783 பிபிபி – யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிபி-யன்கள் அதிகம். காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்கி வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. வெப்பத்தை உண்டாக்குவதில் கரியமில வாயுவைவிட இருமடங்கு சக்தி அதிகம்.60 சதவீத மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும் நெல் வயலிலிருந்தும் கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 40 சதவீதம் சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கி ஈரமான நிலங்களிலும் மற்றும் கரையான்கள் மூலமாகவும் உற்பத்தி செய்கின்றது.

பூமியிலிருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயுமண்டலப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 1000 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது. புவி வெப்பம் அதிகரிப்பால் தண்ணீர்ப் பற்றாக்குறையும், அதனால் வேளாண்மை உற்பத்தியில் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படலாம்.டஇத்தகைய நிலைகளையும் பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பெண்களுக்கு சிறப்பான முறையில் இதற்கெதிராகப் பாங்காற்ற முடியும் எனக்கூறப்படுகின்றது. குறிப்பாக வளர்முக நாடுகளின் கிராமப்புறப் பெண்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.எனவே இதற்கெதிரான நடைமுறைகள் பற்றிய நிகழ்வுகளை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வுகளை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள பல அமைப்புக்கள் முனைகின்றது.

‘நிலம் சிதைவடைவதற்கெதிரான செயற்திட்டம் ஒன்று பத்து வருடம் மெற்றிக் நகரில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பாலைவனமாவதற்கும், வரட்சிக்கும் எதிரான தினம் பற்றி நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்”என ஐ.நா.சபை செயளாலர் நாயகம் “பாங்கி-மூன் தமது செய்தியில் தெரிவித்தார்.இத்தினத்தின் வரட்சி நிலப்பிரச்சனையை சர்வதேச சூழல் நிகழ்ச்சி நிரலுக்கு உள்ளடக்க முனைகின்றனர். தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் அவுஸ்திரேலியா, அல்ஜீரியா, கனடா, சீனா, கானா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் சமீபகாலத்தில் இதுசம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தினத்தில் மாத்திரம் பாலைவனமாதல் பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுவது போதுமானதல்ல.அல்ஜீரியா போன்ற நாடுகள் பாலைவனமாதலை எதித்துப்போராடவும், விவசாய நிலங்களைப்பாதுகாக்கவும் பிரேசில் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் ஒரு தேசிய திட்டத்ததை செயற்ப்படுத்தியுள்ளது.லெபனானில்; விவசாய பாதிப்புக்கெதிரான பல முக்கிய செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாலைவனமாதல் மற்றும் வரடசிக்கெதிரான போராட்டங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுகின்றன.

இத்தினம் ஒரு பொது விடுமுறைதினமல்ல. பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான போராட்டதினத்தில் மக்களில் பொது வாழ்வு பாதிக்கப்படுவதில்லை. இங்கு போராட்டம் எனும் போது விழிப்புணர்வு நடவடிக்கையே முதன்மைப்படுத்தப்படுகின்றது.

இத்தினம் தொடர்பான கருப்பொருட்கள் வருமாறு:-
2009 - Conserving land and water = Securing our common future
2008 - Combating land degradation for sustainable agriculture
2007 - Desertificaton and Climate Change - One Global Challenge
2006 - The Beauty of Deserts – The Challenge of Desertification
2005 - Women and Desertification
2004 - Social Dimensions of Desertification: Migration and Poverty

இம்முறை (2010} மண்ணை வளப்படுத்தி, எல்லா இடங்களிலும் உயிர்களை வளப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளில் உலகெங்கும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏனெனில் வளமான மண் இருந்தால் மட்டுமே உயிர்கள் நிலைக்க முடியும். ஒவ்வொரு தனிநபரும் மண்ணை எங்ஙனம் பயன்படுத்துகிறார் என்பதிலேயே மண்ணின் ஆரோக்கியம் தங்கியிருக்கிறது.

நாம் உண்ணும் உணவின் அளவையும் தரத்தையும் கூட நாம் மண்ணில் மேற்கொள்ளும் செயற்பாடுகளே தீர்மானிக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே, சூழல்தொகுதி எமக்கு வழங்கும் சேவைகளும் அமைந்து விடுகின்றன.

Read more...

Wednesday, June 16, 2010

டிஐஜி ஐ கைது செய்ய உத்தரவு.

ஆட்கடத்தல் வலையமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய வழக்கொன்றினை விசாரிக்கும் கொழும்பு பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை கைது செய்யமாறு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்ற நிதிபதி சம்பா ஜானகி ராஜரட்ண உத்தரவிட்டுள்ளார். குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டியமை அல்லது நடைமுறைப்படுத்தாமையை அடுத்தே இக்கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்குடன் தொடர்புடைய இருவரை கைது செய்யுமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பிந்திருந்துபோதும் அவர்கள் கைது செய்யப்படவில்லை என தெரியவருகின்றது.

Read more...

தமிழக எம்பிக்கள் இலங்கை வருகின்றனர்.

வடகிழக்கு நிலைமைகளை நேரடியாக வந்து பாருங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ் நாட்டின் 21 எம்பிக்கள் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் வடகிழக்கின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்வர் என தெரியவருகின்றது. இவர்களில் கடந்த காலங்களில் புலிகளுக்கு ஆதாரவாக குரல்கொடுத்த சிலரும் அடங்குவதாக அறியமுடிகின்றது.

Read more...

Tuesday, June 15, 2010

ஒபாமாவின் விசேட பிரதிநிதி ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட பிரதிநிதியான சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இலங்கையில் போருக்கு பின்னரான நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா பவர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின், விசேட ஆலோசகராகவும் மனித உரிமைகள்,மற்றும் தேசிய பாதுகாப்பு சபையின் சிரேஸ்ட பணிப்பாளராகவும் செயற்படுகிறார்.

இதேவேளை இந்த சந்திப்பின் போது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் போர்க்குற்ற மற்றும் பொதுமக்கள்; பாதுகாப்பு பணிப்பாளர் டேவிட் பிரஸ்மேன், அமெரிக்க தூதுவர் பற்றீசியா ஏ புட்டினஸ், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

சமந்தா பவர், சூடானிய டாபூர் பிரச்சினையில் மனித உரிமைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பில், தெளிவாக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவராவார்.

Read more...

புலிகளின் வாகனங்கள் பலவற்றை அமைச்சர் ஒருவர் கம்பஹாவில் விற்றார்.

ஆழும் கட்சியிலுள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் புலிகளுக்கு சொந்தமான பல வாகனங்களை கம்பஹா பிரதேசத்திற்கு கொண்டுவந்து விற்று பெரும் பணம் சம்பாதித்துள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

யுத்தத்தின்போது காயமடைந்திருந்த இவ்வாகனங்கள் கம்பஹா பிரதேசத்திலுள்ள கராச் ஒன்றில் திருத்தப்பட்டு அவற்றுக்கு பொய்யான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லான்ட் குருஸர் , மொன்ராரோ , லான்ரோவர் , இன்ரர்கூலர் , துண்டு துழைக்காக வாகனங்கள் , மற்றும் ஒரு கற்றப்பிலர் என 200 மேற்பட்ட அதிவிலையுயர்ந்து வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாகன விற்பனையில் அமைச்சர் 2000 மில்லியன் ரூபாயக்களுக்கு மேல் சம்பாதித்துள்ளதாகவும் அச்செய்தி கூறுகின்றது.

Read more...

பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கும் தலிபான்களுக்குமிடையில் நேரடித் தொடர்பு

பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதற்கான பலமான ஆதாரங்கள் இருப்பதாக புதிய தகவலொன்று தெரிவிக்கின்றது. முன்னர் நினைத்ததை விடவும் பாரியளவில் நிதியுதவி பயிற்சி மற்றும் புகலிடம் போன்றவற்றை ஐ.எஸ்.ஐ. தலிபான்களுக்கு வழங்கி வருவதாக இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

லண்டனின் பொருளாதார கல்வி நிறுவனமொன்றினால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையை தமது நாட்டிற்கு எதிராக விரோதப்போக்குடன் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் ஒன்றென பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.

இவ்வருட முற்பகுதியில் ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்களின் 9 களமுனைத் தளபதிகள் வழங்கிய தகவலின் பிரகாரம் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தலிபான்களுடனான பாகிஸ்தானின் உறவு முன்பு நினைத்ததிலிருந்ததைவிட ஆழமானதாகவுள்ளது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக இவ்வறிக்கையைத் தயாரித்த குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தலிபான்களின் உயர்மட்டத் தலைவர்களின் சந்திப்பில் ஐ.எஸ்.ஐ. பங்குபற்றி வருவதாகத் தெரிவிக்கும் இவ்வறிக்கை தலிபான்களுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஆப்கானில் இந்தியாவின் செல்வாக்கைச் சீர்குலைக்க ஐ.எஸ்.ஐ. முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன்,பாகிஸ்தானின் அணுகுமுறையில் முக்கியத்துவமான மாற்றம் எதுவுமின்றி ஆப்கான் அரசும் சர்வதேச சமூகமும் ஆப்கானில் போராளிகளின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது சாத்தியமற்றதெனவும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வறிக்கையை குப்பையென வர்ணித்துள்ள பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் தமது இராணுவத்திற்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் பிரசாரத்தின் ஓர் அங்கமென இதனைத் தெரிவித்துள்ளார்.

Read more...

தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு புதிய கட்டிடம். SB அடிக்கல்லை நட்டுவைத்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டிடத்தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளது. இக்கட்டத்திற்கான அடிக்கல்லினை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நட்டு வைத்தார்.

உயர் கல்வி அமைச்சர் புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல்லை நட்டுவைத்து நினைவுப் படிபக்கல்லைத் திரைநீக்கம் செய்துவைப்பதையும் மாணவர்களுடன் அளவளாவி குறைநிறைகளை அறிவதையும் அருகில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் முன்னாள் பா.உ. எம்.நௌஸாட் உள்ளிட்டடோர் நிற்பதையும் படங்களில் காணலாம்.






படங்கள் . வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்

Read more...

கென்யா செல்ல ஜெனரல் பொன்சேகாவுக்கு நீதிமன்ற அனுமதி வேண்டும் - கெஹெலிய

கென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடாளுமன்ற ஒன்றியத்தில் கலந்துகொள்வதற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பட வேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்ற சலுகைகளுக்கமைய ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கிய போதிலும் அவர் வெளிநாடு செல்வதாயின் சட்ட அனுமதி தேவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜெனரல் பொன்சேகா தற்போது இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபராவார். அதானாலேயே அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு சட்ட அனுமதி தேவைப்படுகிறது என்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய மேலும் குறிப்பிட்டார்.

Read more...

ஹிட்லர் பற்றி படமா? இஸ்ரேலியர்கள் அதிர்ச்சி.

நாஜித் தலைவர், ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் பற்றி ஹிந்தியில் திரைப்படம் எடுக்கவிருக்கும் செய்தி இஸ்ரேலியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொடுங்கோலன் ஹிட்லர் இந்தியாவை நேசித்ததாகவும், அவர் இந்திய விடுதலைக்கு மறைமுகமாக பங்களிப்பு செய்ததாகவும் அதில் காட்டப்படவுள்ளது என்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இந்திய யூதர்கள் மைய அமைப்பின் தலைவர் நோவா மஸ்ஸில் இது குறித்துக் கூறுகையில்:

"நான் இந்தியன் என்று கூறிக்கொளவதை கௌரவ்மாகக் கருதி வருகிறேன், இஸ்ரேலில் எங்கு சென்றாலும் நான் இந்தியன் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன், எனது சக இஸ்ரேலியர்களிடம் நான் கூறுவதெல்லாம் இந்தியாவில் ஒரு போதும் யூதத் துவேஷம் இருந்ததில்லை என்று கூறிவந்துள்ளேன், ஆனால் இந்த பாலிவுட் பட விவகாரத்தினால் நான் இப்போது தலைகுனிந்து நிற்கிறேன், பாலிவுட்டின் அறியாமை குறித்து வெட்கப்படுகிறேன்.

எனக்குத் தெரிந்ததெல்லாம் ஹிட்லர் ஒரு போதும் இந்திய விடுதலையை ஆதரித்ததில்லை என்பதே. நான் பிரதமர் மன்மோகன் சிங் அல்லது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கடிதம் எழுதப்போகிறேன், பாலிவுட்டின் இந்த முயற்சியை நிறுத்தவேண்டும். ஏனெனில் இங்கு புகழ் பெற்றிருக்கும் அந்த சினிமா தொழிலுக்கு இழுக்கு செய்வதாகும்." என்றார் மஸ்ஸில்.

Read more...

சுரேஸ்பிரேமச்சந்திரனின் முதலமைச்சர் கனவிற்கு உலைவைக்கின்றார் வித்தியாதரன்.

எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் சுடரொளி , உதயன் ஆசிரியர் வித்தியாதரன் வட மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாக கூறியுள்ளார். புலிகளின் வன்முறைகளை நெடுங்காலங்களாக நியாயப்படுத்தி வந்த இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவதற்காகவே பத்திரிகைத் துறையிலிருந்து விலகினார் என கூறப்படுகின்றது.

இது தொடர்பாக வித்தியாதரன் கொழும்பு தமிழ் இணையத்திற்கு வழங்கிய குறிப்பு ஒன்றில் அரசியலில் இறங்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தான் மேற்படி பத்திரிகைகளிலிருந்து விலகியுள்ளதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தாயாரெனில் தான் கூட்டமைப்பில் போட்டியிட தயாரெனவும் தெரிவித்துள்ளார்.

அவருடைய மேற்படி நிபந்தனை கூட்டமைப்பினுள் நெருக்கடிகளை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முதலமைச்சர் பதவிக்கனவில் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் மண்டையன் குழுத்தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் காத்துக்கொண்டிருக்கின்றார் என்பது யாவரும் அறிந்தது. இந்நிலையில் வித்தியாதரன் பகிரங்கமாகவே தன்னை கூட்டமைப்பினர் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என அறிவித்திருப்பது கூட்டமைப்பினை சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடவிரும்பும் வித்தியாதரனின் ஊடகங்களுக்கான கருத்துக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின்போது வித்தியாதரனை தெரிவு செய்யாதவிடத்து ஆழும்கட்சியுடன் இணைந்து போட்டியிடும்போது, நான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவே விரும்பினேன், ஆனால் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காதபட்சத்தில் இம்முடிவினை எடுத்துக்கொண்டேன் என தெரிவிப்பதற்கு முன்னேற்பாடாக அமைந்துள்ளதாக நோக்கப்படுகின்றது.

Read more...

Monday, June 14, 2010

பாலியல் குற்றம்: சந்தேக நபர்கள் அடையாளம்

இலங்கையின் வடக்கே பெண்கள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச் சந்தேக நபர்கள் நான்கு பேர் அடையாளம் காணபபட்டுள்ளனர்.
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் கடந்த 6 ஆம் திகதி இந்த பாலியல் குற்றச் சம்பவம் நடந்திருந்தது.

இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக இவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சிகளின் முன்னால் நிறுத்தப்பட்டனர். அவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் தவிர ஏனைய இருவரையும் கிளிநொச்சி நீதவான் பெ.சிவகுமார் விடுதலை செய்துள்ளார்.

இந்த அடையாள அணிவகுப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் கொழும்பில் இருந்து சென்றிருந்த முக்கிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்கள்.

கொழும்பு, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் உள்ள பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தர்களும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர்.

கிளிநொச்சி நீதிமன்றத்திற்குச் சென்ற சட்டத்தரணிகள் குழுவில் இடம்பெற்றிருந்த மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் கருத்து தெரிவிக்கையில், "இந்த வழக்கில் பொலிசார் உடனடியாகச் செயற்பட்டு விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி குற்றச் செயலில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண உதவியிருக்கின்றார்கள். எனினும் கடந்த காலங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், வன்முறைகள், பாலியல் குற்றங்கள் தொடர்பில் பொலிசார் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை" என சுட்டிக்காட்டினார்.

"சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், எதிர்காலத்தில் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வைத்து வழக்தைத் தொடர்ந்து நடத்துவதில் சட்டமா அதிபர் காட்டும் மும்முரத்தை பொறுத்தே இந்த வழக்கில் நியாயம் கிடைக்குமா அல்லது கடந்த காலங்களைப்போல வழக்கு கிடப்பில் போடப்படுமா என்பது தெரியவரும்." என சட்டத்தரணி ரட்னவேல் தெரிவித்துள்ளார்.

Thanks BBC

Read more...

புலி ஆதரவாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்திய பாராளுமன்ற விவகார அமைச்சர் வீ.நாரயணசாமி தெரிவித்துள்ளார். தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்புக்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் இந்த விடயத்தில் தலையீடு செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார். எவ்வாறெனினும், தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் அமைப்புக்களின் பெயர் விபரங்களை அவர் வெளியிடவில்லை.

பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் எதிராக இந்தியாவின் சகல கட்சிகளும் கூட்டாக போராட வேண்டுமெனவும், இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் பயங்கரவாதம் தலைதூக்குவதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் மத்திய அரசாங்கமோ அல்லது தமிழக அரசாங்கமே கூடுதல் சிரத்தை காட்டவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Read more...

டக்கிளஸ் கைது விவகாரம். ஒருவாரத்தினுள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு.

இந்தியா சென்றிருந்த ஈபிடிபி அமைப்பின் தலைவரும் அமைச்சருமான டக்கிளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி எனவும் அவரைக் கைது செய்யவேண்டும் எனவும் தமிழக மக்கள் உரிமைக்கழகத்தினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றில் இடம்பெற்றது. மனுவினை விசாரித்த நீதிபதிகள் மத்திய மாநில அரசுகள் இது இவ்விடயம் தொடர்பான உருக்கமான பதிலொன்றை ஒருவார காலத்தினுள் அளிக்கவேண்டும் என அறிவித்து வழக்கினை எதிர்வரும் 21ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும், வழக்கறிஞருமான புகழேந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ''இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த இலங்கை பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, அலுவல் ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த வழக்கில் டக்ளஸ் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார்.

வெளியே வந்த பிறகு, 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கீழ்ப்பாக்கத்தில் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, ரூ. 7 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். 1989ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு வெளியே வந்தவர் இலங்கைக்கு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இப்போது டக்ளஸ் தேவானந்தா இந்தியா வந்துள்ளார். அவரை கைது செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Read more...

எப்போது எம்வாழ்வில் வசம்தம் வீசும்? ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்.

'இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைத் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக அவர்களின் விடுதலை வேண்டி கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலைக் கைதிகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளகடிதத்தில் மேற்கண்வாறு கேட்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களே ! நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நாம் யுத்தம் முடிவடைந்து ஒருவருடமாகியும் தொடர்ந்து சிறையில் வாடுகின்றோம்.எமது விடுதலை தொடர்பாக எவ்வித கரிசனையும் காட்டப்படவில்லை. கடந்த மூன்று தசாப்தங்கள் நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து அனைத்து மக்களும் சமூக ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் நற்பிரஜைகளாக வாழவேண்டும் என்பதே தங்களின் விருப்பமாகும்.

கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் போன்ற மனிதாபிமான செயற்பாடுகளை தங்களின் சிறந்த தலைமையில் நடத்திவருகின்றீர்கள். நான்கு சுவர்களுக்குள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாமல் இருக்கும் நாமும் எதிர்காலத்தில் இந்த நாட்டின் நற்பிரஜைகளாக வாழ விரும்புகின்றோம். எப்போது வசந்தம் வீசும்? கடந்த காலங்களில் நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர், சமூகப் பெரியோர்கள், அரசியல்வாதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் எம் விடுதலையை துரிதப்படுத்துவதாக உறுதிமொழிகள் கூறியும் எவ்வித முன்னேற்றமும் நன்மையும் ஏற்படவில்லை.

சிறுபான்மை இனம் ஒன்று இல்லை அனைவரும் இந்த நாட்டை நேசிக்கும் மக்களே என்று கூறியுள்ளீர்கள். தமிழ் மக்கள் அனைவரும் இந்தநாட்டில் பயமின்றி சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே தங்களின் விருப்பமாகும். எனவே நீண்டகாலமாக இலங்கையில் உள்ள பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மீது தாங்கள் கருணைகாட்டி எம்வாழ்வுக்கு வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.'

Read more...

உலக இரத்ததான தினம் World Blood Donor Day - புன்னியாமீன்

உலக இரத்ததான தினம் World Blood Donor Day (recognized by the UN) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இரத்ததானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும், பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள்.

விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது.

அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே இரத்ததானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள். இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின்றது. மறுபுறமாக இரத்ததானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மையை இரத்ததானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.

உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் இரத்ததானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை. இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும்.

2009ஆம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் ‘இரத்தம் வழங்களின் பாதுகாப்பையும், தன்னிறைவையும் செம்மைப்படுத்தி எவ்வித ஊதியமோ, வெகுமதியோ இன்றி சுயமாக தொண்டு செய்யும் நோக்குடன் இரத்ததானத்தை ஊக்குவிப்பதாகும்’. வருடாவருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்குக் கூடிய அலகுகளை இரத்ததானமாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

அதேநேரம், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களே இரத்ததானத்தை செய்கின்றனர். எல்லா நோயாளர்களுக்கும் தேவையான இரத்தம் மூலமான சிகிச்சையை உத்தரவாதப்படுத்தி வழங்க இரத்ததானம் செய்வோரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உலக மக்கள் வழங்கும் இரத்ததானம் ஆண்டுதோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங்கப்படுகின்றது. ஆனால், உலக சனத்தொகையின் 82வீதமானோர் வளர்முக நாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் இந்நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

அன்று முதல் இன்றுவரை இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் இரத்ததானமாகும். ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் வைத்தியத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக குருதிதிரவ இழைய தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளின் இதயத்தில் இவையும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முத‌ல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 - 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் இரத்ததானம் செய்ய முடியும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும்.

இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது. இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்களாக பின்வருவன அமைகின்றன:-

எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்ததானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.

நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப்பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசேடமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மனநிலையை இரத்ததானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.

சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.

ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் இரத்ததானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.

இரத்ததானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ்வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்.

உலக இரத்ததான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல்.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மையுடன் இரத்ததானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், கடந்த வருடம் 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.

எனவே, இது விடயமாக நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இரத்ததானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாங்கள் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக எமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.

Read more...

பூநகரி-குருநகர் படகு சேவை நேற்று ஆரம்பம்

பூநகரிக்கும் யாழ்-குருநகருக்கும் இடையிலான படகுச் சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு இந்த படகுச் சேவையை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்தப் படகுச் சேவை நடத்தப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக நான்கு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதன் மூலம், தரைவழியாக 2 1/2 மணி நேரம் மேற்கொள்ளும் பயணத்தை இந்த படகுச் சேவையின் மூலம் சுமார் 45 நிமிடங்களுக்குள் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் இந்தப் பிரதேசத்திலுள்ள மக்கள் பெரிதும் நண்மையடையவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பூநகரியிலிருந்து குருநகருக்கு தற்பொழுது சென்றுவரும் பொதுமக்கள் வழங்கும் பஸ் கட்டணத்தை விட குறைந்ததாக படகின் மூலம் செல்லும் பயணமொன்றுக்கு 40 ரூபா மாத்திரமே அறவிடப்படவுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வட பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி - குருநகர் பிரதேசங்களுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் இந்தப் படகுச் சேவையை வெகுவிரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

சிங்களத் தரப்பின் அரசியல் விருப்பமே இப்போது தேவை,

தமிழ் மக்களின் துன்பங்களுக்கு முன்னேற்றகரமான அதிகாரப் பகிர்வு கட்டமைப்புக்குள் திருப்திகரமான தீர்வைக் காணுமாறு இலங்கையின் தலைமைத்துவத்தை இந்தியா தொடர்ந்து ஊக்குவிக்கவேண்டும் என்று சென்னையிலிருந்து வெளிவரும் பிரபல இந்திய ஆங்கில நாளேடான இந்து வலியுறுத்தியுள்ளது.

ஆக்கபூர்வமான விஜயம் என்று மகுடமிட்டு இந்து சனிக்கிழமை ஆசிரிய தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விஜயமானது இந்தியாவுடனான நெருக்கமான பிணைப்புகளை மீள உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இருதரப்பு உறவையும் புதிய மட்டத்திற்குக் கொண்டுசெல்வதற்கு இருதரப்பினரும் தயாராக இருப்பது தொடர்பான சமிக்ஞையை விடுப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தன்மை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இருதரப்பு ஒத்துழைப்பையும் விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்குமான உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உள்நாட்டில் இன மோதலின் சுமைகள் இல்லாமல் வருகை தந்த இலங்கையின் அரச தலைவருக்கு புதுடில்லி வரவேற்பளிப்பது கால் நூற்றாண்டில் இதுவே முதற்தடவையாகும். ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் ராஜபக்ஷ ஈட்டிய பெரு வெற்றியின் மூலம் அவர் தன்வசம் வைத்திருக்கும் அரசியல் கையிருப்பானது பிராந்தியத்திலுள்ள தலைவர்கள் மத்தியில் ஒப்பிடமுடியாத ஒன்றாகும். உள்நாட்டு யுத்த அழிவுக்காக தனது அரசாங்கத்திற்கு ஆதரவு கோரியோ அல்லது உதவியை நாடியோ அவர் வந்திருக்கவில்லை. 3 தசாப்தங்களாக தமிழர் பிரச்சினையும் இலங்கையில் தொடர்ந்து ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அதனைக் கையாண்ட வழிமுறையும் இரு அயலவர்களினதும் பிணைப்புகளில் மேலாதிக்கம் செலுத்திவந்தது புலிகள் இராணுவ ரீதியில் இல்லாமல் செய்யப்பட்டதும் இருதரப்பு உறவையும் மீள வடிவமைப்பது தொடர்பாக இலங்கைத் தலைவர் தெளிவான விருப்பத்தைக் கொண்டிருக்கிறார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலதிக தூரத்திற்குச் செல்வதற்கு ஆயத்தமாக இருப்பதற்கு சான்றாக அம்பாந்தோட்டையில் இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை திறப்பதற்கு இணக்கம் தெரிவித்தமை காணப்படுகிறது. அம்பாந்தோட்டையில் நவீன துறைமுகத்தை நிர்மாணிப்பதில் சீனா உதவியளித்து வருகிறது. இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணத்தில் இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை அமைப்பதற்கும் ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கையுடனான தனது உறவுகளைக் கட்டியெழுப்ப இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இதன் அடிப்படையில் உடனடி விவகாரமாக இருப்பது இடம்பெயர்ந்த தமிழர்களை மீளக்குடியேற்றும் விடயமாகும். மனிதாபிமான நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கு 500 கோடி ரூபாவை வழங்கியதற்கு மேலதிகமாக இலங்கையின் வட பகுதி செயல்திட்டங்களுக்கு இந்தியா உதவிவருகிறது.

50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் புதுடில்லியின் தீர்மானமானது காலத்திற்கு உகந்த முன்முயற்சியாகும். ஆனால், சிறந்த அயலவரான இந்தியாவானது பாரிய அளவிலும் மிகவும் குறிப்பிடத்தக்க தரத்தினைக் கொண்டதுமான பங்களிப்பை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கின் அபிவிருத்திக்கும் தமிழர்களின் புனர்வாழ்வு மீள்நிர்மாண முயற்சிக்கும் வழங்க வேண்டியது அவசியமானதாகும்.

நியாயமான முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் துயரங்களுக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷவால் அளிக்கப்பட்டிருக்கும் உறுதிமொழிகள் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்காணப்படப்போகின்றது என்பது பற்றிய வேறுபாடுகள் கூட்டறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றமை ஆச்சரியமானதல்ல.

13 ஆவது திருத்தத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வை புதுடில்லி எதிர்பார்க்கிறது. அத்துடன் இறுதியான தீர்வுக்குத் தேவையான நிபந்தனைகளை உருவாக்குவது அவசியம் என்ற எதிர்பார்ப்பும் புதுடில்லியிடம் காணப்படுகிறது. மறுவார்த்தையில் சொல்வதானால் 13 ஆவது திருத்தமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டதாக அமுலாக்கப்பட வேண்டுமென்பது புதுடில்லியின் எதிர்பார்ப்பாகக் காணப்படுகிறது. மறுபுறத்தில் ராஜபக்ஷவின் உறுதியான தீர்மானமானது சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் இணக்கப்பாட்டைக் காண்பதென்பதாகும். அதற்குத் தேவையான நிபந்தனைகளை உருவாக்க வேண்டுமென்பதும் இலங்கை மக்கள் யாவரும் சமாதானமான, நீதியான, கௌரவமான சூழலில் தமது வாழ்வை முன்னெடுக்க வேண்டும். மற்றும் ஜனநாயகம், பன்முகத்தன்மை, சமவாய்ப்பு, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்குரிய அரசியலமைப்பின் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பாக தனது தீர்மானத்தை ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருக்கிறார். சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் விரிவான பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பான டாக்டர் மன்மோகன் சிங்கின் சிந்தனைகளை ராஜபக்ஷவும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு முதலாவதாகத் தேவைப்படுவது சிங்களத் தரப்பின் அரசியல் விருப்பமாகும். நியாயமானதும் நீடித்ததுமான தீர்வைக் காண்பதற்கு சிங்களத்தரப்பின் அரசியல் விருப்பம் தேவைப்படுகிறது. அத்துடன், தமிழ்க் கட்சிகளின் பொறுப்பும் இதன் ஓர் அங்கமாகக் காணப்படுகிறது. எத்தகைய விதமான அதிகாரப் பகிர்வு, அபிவிருத்தி மற்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமது மக்களுக்கு எத்தகைய எதிர்காலத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்பது தொடர்பாக தமிழ்க் கட்சிகள் தமது மனங்களைத் துரிதமாகத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். தமக்கிடையிலான வேறுபாடுகளை அவர்கள் வெற்றிகொள்வது அவசியமாகும். பிரபாகரனின் சகாப்தத்தில் கொண்டிருந்த பிரிவினைவாத மனப்பாங்கிலிருந்தும் அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும். அந்த மனப்பாங்கானது மிதவாதிகள் என்று அழைக்கப்படுவோரைக் கூட ஆட்சியிலிருந்த இலங்கை அரசாங்கங்களுடன் செயற்படுத்தக் கூடிய யோசனைகளை பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க முடியாமல் தடுக்கப்பட்டிருந்தது. இலங்கைத் தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள், கல்வி கற்றவர்கள், புத்திசாதுரியம் நிறைந்தவர்கள் மற்றும் பல்வேறு திறமைகளுடன் துரிதமாக மீண்டெழுந்து வருபவர்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ்க் கட்சிகள் முன்னோக்கி நகர்வை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது ஏற்புடையதாக இருக்கும் சமூக, பொருளாதார சூழல், தாராளமான அபிவிருத்தி, உதவி, சமாதானம், ஸ்திரத்தன்மை, கண்ணியமான சுயநிர்வாக வாய்ப்புகள் என்பவற்றின் மூலம் ஐக்கியப்பட்ட தேசத்தின் பகுதியாக தங்களை தாங்கள் வடிவமைத்துக்கொள்வதற்கான பிரகாசமான எதிர்காலம் காணப்படுகிறது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவானது உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சாதகமான நடவடிக்கையாகும். ஆழமான முறையில் ஏற்பட்டிருக்கும் இனப்பிளவை சீர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார். இந்த ஆணைக்குழுவில் சிங்கள, தமிழ் சமூகங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற 8 பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். 2002 பெப்ரவரி, 2009 மே க்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக இந்த ஆணைக்குழு ஆராயவுள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீள ஏற்படாததை உறுதிப்படுத்துவதற்கான சிபாரிசுகளை இந்த ஆணைக்குழு பரிந்துரை செய்யவுள்ளது. இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட காலம் மற்றும் யுத்தத்தின் இறுதி நாட்களின் போது இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் விடயங்களை விசாரிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லாதிருப்பது போன்ற விடயங்கள் குறித்து சில ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஆணைக்குழுவானது சிறுபான்மை, பெரும்பான்மை சமூகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது. கடந்த காலத்தை இச்சமூகங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சௌஜன்யத்துடன் வாழ்வதற்கு முன்னோக்கி நகர முடியும். தென்னாபிரிக்காவின் உண்மை, நல்லிணக்கக் குழுவைத் தனது முன்மாதிரியாக இலங்கை எடுத்துக்கொண்டுள்ளது. அது சிறப்பான முன்மாதிரியாக இல்லாவிடினும் நிறவெறி அத்தியாயத்தை அந்த நாடு முடிவுக்குக் கொண்டுவந்து முன்னேற்றமடைய உண்மை, நல்லிணக்கக் குழு உதவியாக அமைந்தது. இலங்கையில் பல வருடங்களாகத் தொடர்ந்த யுத்தமானது இரு சமூகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த ஆணைக்குழுவால் ஆற்றுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிச்சயமாக உதவ முடியும்.

1991 இலிருந்து புதுடில்லியிலிருந்த அரசாங்கங்கள் ஆக்கபூர்வமான முறையில் இலங்கை தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்திவருகின்றன. சாத்தியமானவற்றைக் கண்டறிந்து இருதரப்பு உறவை புதிய மட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான காலம் வந்திருக்கிறது. இதன் ஓர் அங்கமாக தன்னைத்தானே பலவந்தமாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் தமிழ் மக்களின் துயரங்களுக்கு முன்னேற்றகரமான அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்புக்குள் திருப்தியான தீர்வைக் காணுமாறு இலங்கையின் தலைமைத்துவத்திற்கு இந்தியா தொடர்ந்து ஊக்கவிப்பை அளிக்கவேண்டும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com