Sunday, June 13, 2010

புலம்பெயர் தமிழர்களின் ஈழக்கனவினால் இங்குள்ள தமிழர்கள் காயப்படுகின்றனர்.

புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் ஈழக் கனவினால் தமிழ் மக்களே காயப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமிழீழக் கோரிக்கையை கைவிட மறுப்பதனால், தமிழ் மக்களே பாதிக்கப்படப் போவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் புலம்பெயர் மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழீழ இராச்சிய கோரிக்கை பெரும்பான்மை இலங்கை மக்களுக்கு எந்த வகையிலும் நன்மை அளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போதோ எதிர்காலத்திலோ தமிழீழ இராச்சியமொன்றை அமைக்க முடியாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்திலேயே ஈழ இராச்சியம் என்பது ஓர் கனவாகவே காணப்பட்டதாகவும், தற்போது ஈழ இராச்சியம் என்பது கனவுகளின் கனவாக மாற்றமடைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரனினால் சாதிக்க முடியாதவற்றை இந்த புலம்பெயர் தமிழர்களினால் சாதிக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருபோதும் இவர்களினால் ஈராக்கியமொன்றை உருவாக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்தின் ஒரு பகுதியினரிடையே தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தமிழர்களின் வாழ்க்கை நெருக்கடி மிகுந்ததாக மாற்றமடையும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவது குறித்து புலம்பெயர் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களுக்கு காத்திரமான பங்களிப்பினை நல்குவதே புலம்பெயர் சமூகத்தின் தற்போதைய கடப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பிரபல இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களே இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கவனிக்குமாறு அமைச்சர் தேவானந்தா தமிழக அரசியல்வாதிகளிடம் கோரியுள்ளார்.

Read more...

யாழ்தேவிக்கான முன்பதிவினை கையடக்க தொலைபேசி மூலம் செய்து கொள்ளலாம்.

யாழ்தேவி ரயில் சேவைக்கான முன்பதிவினை கையடக்க தொலைபேசி மூலம் செய்துகொள்ளக்கூடிய புதிய முறையொன்றினை இலங்கை புகையிரத திணைக்களம் அறிமுகம் செய்கின்றது. எதிர்வரும் ஆவணி மாத பாடசாலை விடுமுறையின்போது பயணிக்கவுள்ள பயணிகள் பயனடையும் வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதியிலிருந்து இவ் முன்பதிவுமுறை நடைமுறைக்குவரும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை யாழ்தேவி நாளாந்தம் செயற்பட்டு வருகின்றது. தாண்டிக்குளத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான புதையிரத பாதை திருத்தவேலைகள் முடிவுறும் தறுவாயில் உள்ளதாக தெரிவித்துள்ள புகையிரத திணைக்களம் திருத்தவேலைகள் முடிவுற்றவுடன் கொழும்பு காங்கேசன்துறைச் சேவை ஆரம்பமாகும் என அறிவித்துள்ளது.

கண்டி இன்ரசிற்றி ரயில் சேவைக்கான முன்பதிவினை 365 என்ற இலக்கத்தினை அழுத்தி கையடக்க தொலைபேசிளுடாக செய்து கொள்ளமுடியும் எனவும் புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

Read more...

நளினி சிறை அதிகாரிகளுக்கு எதிராக 3 பக்கத்தில் புகார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்து வருகிறார் நளினி. அவர் தற்போது இருக்கும் சிறையில் தனக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறி தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நளினியின் வக்கீல் புகழேந்தி வேலூர் சிறையில் நளினியை சந்தித்துவிட்டு வெளியே வந்தார். அவர் செய்தியாளர்களிடம், சிறை அதிகாரிகள் சிறை விதிமுறைகளை மீறி தன்னை தனிமைப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

’’நளினியைப் பொறுத்தவரை சிறைக் கையேடு வகுத்துள்ள கைதிகளின் உரிமைகளை சிறை அதிகாரிகள் மீறுகின்றனர். இது நளினி செய்துள்ள 3 பக்க புகார் அறிக்கை.( செய்தியாளர்களிடம் வாசித்தார்) இதனால் சிறை ஐ.ஜி.யிடம் தன்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார் நளினி.

என்னுடைய அறையின் பக்கம் வேறு கைதிகள் புழங்குவதை சிறை அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். சிறை ஊழியரோ, அல்லது சிறைக்கைதிகளோ என்னிடத்தில் பேச அனுமதி கிடையாது. என்னை ஏதோ தொற்று நோயாளி போல் நடத்துகின்றனர் என்று புகாரில் கூறியுள்ளார் நளினி.

நளினி இதுவரை சிறை அதிகாரிகளின் இத்தகைய போக்கு குறித்து 8 புகார்களை அளித்துள்ளார். மேலும் வேறு கைதிகளையும் இதே விதத்தில் நடத்தி அவர்களுக்கு இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படைகளை உரிமைகளை சிறை அதிகாரிகள் மறுத்து வருவதாகவும் அவர் அந்தப் புகார்களில் கூறியிருக்கிறார்’’என்று தெரிவித்தார்.

Read more...

இலங்கைத் தமிழர்களுக்கு 50000 வீடுகளைக் கட்ட இந்தியா 1000 கோடி நிதியுதவி.

முதலமைச்சர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன்சிங்-ராஜபக்சே சந்திப்பு குறித்தும், இந்தியா- இலங்கை இடையேயான கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

‘’இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா 1,000 கோடி தர சம்மதித்துள்ளது’’என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’விழுப்புரம் ரயில் தண்டவாள தகர்ப்பு மிகவும் பயங்கரமானது.

ரயில்வே ஊழியர்களின் சாமர்த்தியத்தால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில் தகர்ப்பு சம்பவத்தில் ஈடுபட்டோரை பிடிக்க போலீசுடன் உளவுத்துறையும் தீவிரமாக செயல்பட்டுவருகிறது’’ என்றும் தெரிவித்தார்.

Read more...

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம். World Day Against Child Labour - புன்னியாமீன்

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம் World Day Against Child Labour ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது விடயமாக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்துவதும் இத்தகைய விழிப்புணர்வுகளின் ஊடாக சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும் இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும்.

பொதுப்படையாக நோக்குமிடத்து எத்தனை சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் எத்தகைய விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாளுக்குநாள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வறுமை, பஞ்சம் போன்ற நிலைமைகள் இத்தகைய காரணியை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன. 2008ஆம் ஆண்டு உலகத் தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில்; உலகில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர் பணியாளர்களாகச் சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் 165மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பணியாளர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1956 ஆம் ஆண்டின் சிறுவர் பணியாளர்களின் சட்டப்படி 14 வயதுக்குட்பட்டவர்கள் பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றமை பாரிய குற்றமாகும். இந்த வயதெல்லை நாட்டுக்கு நாடு வேறுபடலாம். உலக சனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவராவர். இலங்கை சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி 1995இல் 27.7 சதவீதம் சிறுவராவர். சிறுவர் என்பது இலங்கை சிறுவர் சாசனப்படி 18 வயதுக்கக் கீழ்ப்பட்டவராவர். 1939இன் சிறுவர், இளைஞர் கட்டளைச்சட்டம் சிறுவர் 14 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் என்றும், இளைஞர் 14 - 16 என்றும் வரையறுத்துள்ளது. 1989இன் வயது வந்தவர் திருத்த சட்டத்தின்படி சிறுவர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவராவர். எவ்வாறாயினும் தேசியச் சட்டங்கள் பராயமடையும் வயதை முன் தள்ளி வைத்தாலன்றி மற்றபடி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யாவரும் சிறுவர் ஆவார்கள்.

எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் பெறுமதிமிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல் பாட்டாளர்கள். சிறுவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நமது பெரியவர்கள் சிலர் அறிவதில்லை. இத்தகைய காரணத்தினாலேயே சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் பணி எமது சமூகங்களில் தொடர்கின்றன. சிறுவர் துஸ்பிரயோகத்தில் சிறுவர் உழைப்பு ஒரு பகுதி என்றால் சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பனவும் மூன்றாம் உலக நாடுகளின் சிறுவர் உழைப்புடன் இணைந்த வகையில் தனித்துவமான பிரச்சினைகளாக மாறியுள்ளன எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல. இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. இதற்காகவே அனைத்து நாடுகள் மட்டத்திலும் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய ஆய்வு பொதுமைப்படுத்தப்பட்டதாக உள்ளன.

யூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.

சிறுவர் உரிமையில் சில அம்சங்களை கீழ்வருமாறு சுருக்கி நோக்கலாம். இங்கு வாழும் உரிமை என்பது இயற்கையாக அமைந்துள்ள உரிமையாகும். சாத்தியமான உச்சமட்டத்தில் குழந்தைகள் உயிர் வாழ்வதையும் வளர்ச்சியடைவதையும் ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல ஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பினை அளிப்பதும், கல்வி பெறுதல், ஓய்வாக சாவகாசமாக இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமையை வழங்க வேண்டிய நிலையில் உள்ளது.

உள ரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற சிறுவர், அகதிகள், அனாதைச் சிறுவர், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவர், சிறுவர் தொழிலாளர், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோருக்கு பாதுகாப்பு அவசியமாகும். சிறுவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதும் இதன் நோக்கம். கருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனசாட்சி, சமயம் என்பவற்றுக்கான சிறுவர்களுக்குள்ள உரிமை. மேலும் சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை போன்றவற்றையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் அரசு உள்ளது. 1989 நவம்பர் 20 - இல் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ.நா. சபைப் பிரகடனத்தின்படி பார்த்தால் இந்த உரிமைகளை மீறுவது சிறுவர் துஷ்பிரயோகம் எனக் கொள்ளலாம்.

2007 இல் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமும் (Inter-Parliamentary Union) யுனிசெப் (UNICEF) அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள “சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல்” (Eliminating Violence against Children) என்ற கைநூலில் சிறுவர்கள் வன்முறைக்குள்ளாகுவது தொடர்பான புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிஉலகிற்குத் தெரியவருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,

2004 இல் 218 மில்லியன் பிள்ளைகள் பிள்ளைத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 126 மில்லியன் பிள்ளைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 2000 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5.7 மில்லியன் பிள்ளைகள் பலாத்கார அல்லது அடிமை முறையில் வேலைசெய்கின்றனர்; 1.8 மில்லியன் பிள்ளைகள் பாலியற் தொழிலில் அல்லது பாலியற் திரைப்படத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; 1.2 மில்லியன் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர்.

2002 இல் 53,000 பிள்ளைகள் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் 22,000 பிள்ளைகள் (கிட்டத்தட்ட 42%) 15 முதல் 17 வயதினர்; சுமார் 75% ஆனோர் ஆண்கள் 80 முதல் 98 சதவீதப் பிள்ளைகள் அவர்களது வீட்டில் உடல் ரீதியாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளைகள் பிரம்பு, இடுப்புப்பட்டி போன்றவற்றால் அடித்துத் தண்டிக்கப்படுகின்றனர்.
குறைந்தது 30 நாடுகளில் பிள்ளைகளுக்குச் சவுக்கடி அல்லது பிரம்படி சட்ட ரீதியான தண்டனையாக உள்ளது.

உலகப் பிள்ளைகளில் 2.4 சதவீதமானோர் மட்டுமே உடல் ரீதியான தண்டனைகளிலிருந்து சட்ட ரீதியான பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் 133 முதல் 275 மில்லியன் பிள்ளைகள் தம் பெற்றோருக்கிடையேயான வன்முறையை நேரில் காண்கின்றனர். வளர்ந்துவரும் நாடுகளில் 20 முதல் 65 சதவீதப் பிள்ளைகள் (ஆய்வுக்கு) முந்தைய 30 நாட்களில் உடல் ரீதியாகவோ சொல் ரீதியாகவோ தாக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாடசாலை மாணவரில் 35 சதவீதமானோர் ஆய்வின் முன்னரான இருமாதத்தினுள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் 15 முதல் 64 சதவீதமாக மாறுபடுகிறது.

2002 இல் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண்பிள்ளைகளும் 73 மில்லியன் ஆண் பிள்ளைகளும் பலாத்காரப் பாலுறவு அல்லது வேறு பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களில் குறைந்தது 7 சதவீதமான (36 சதவீதம் வரை) பெண்களும் 3 சதவீதம் ஆண்களும் (29 சதவீதம் வரை) தாம் பிள்ளைப் பருவத்தில் பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பதிவுசெய்துள்ளனர்.

15 வயதின் முன் முதற் பாலுறவில் ஈடுபட்ட பெண்களில் 11 முதல் 45 வீதத்தினர் பலாத்காரப்படுத்தப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர். இப்போதுள்ள பிள்ளைகளில் குறைந்தது 82 மில்லியன் பெண்கள் 10 முதல் 17 வயதிலும் மேலும் பலர் அதைவிடக் குறைந்த வயதிலும் திருமணம் செய்யப்படுவர். [unicef.org]

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் பாரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இலங்கையின் வட பகுதியில் 2009ஆம் ஆண்டு முதலரைப் பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மட்டும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் இருப்பதாக இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். இவர்களில் ஆயிரத்து 34 சிறுவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் எனவும் அவர் கூறியிருந்தார். கடந்த முப்பதாண்டுகளாக இலங்கையில் ஏற்பட்டிருந்த யுத்தநிலை காரணத்தினால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது பொதுப்படையான விடயம்.

மறுபுறமாக விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றின் துரித அபிவிருத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்படுகின்ற அதேவேளை இத்தகைய பாரிய கண்டுபிடுப்புக்களின் அதிகளவான பாவனை அபாயங்களைத் தோற்றுவிக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுபோலவே இரசாயன போதைப் பொருட்களின் துஸ்பிரயோகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் இடம்பெறுகின்ற இரணுவ முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் என்பன நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுவர்களையே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் போரின் விளைவுகளால் உடல் உள உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைக் பொறுத்தவரையில் அதிகளவில் மதுபானம், சிகரெட் மற்றும் போதைபொருள் பாவனை என்பவற்றிற்கு அடிமையாவதுடன் அதிகமானோர் HIV / AIDS போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுடன் வறுமை என்பது சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.

இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் UNICEF போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன.

‘குழந்தைத் தொழிலாளர் அவலம்’ குறித்துப் பேசப்பட்டு, அறியப்பட்டு அதை எதிர்த்துச் சட்டமும் இயற்றப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. ‘குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அதிக அளவில் சட்டமியற்றிய நாடு இந்தியா என்று கூறப்படுகின்றது. ஆனால், அண்மைக்காலத்து ஆய்வின் பிரகாரம் இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்கள் மில்லியக் கணக்கில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள்.

1986 இல் இந்திய அரசாங்கம் 14 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வேலை செய்வதைத் தடை செய்தது. 1997 இல் ‘abolision act’ என்ற பெயரில் சட்டமியற்றியது. தீப்பெட்டித் தொழிற்சாலை, நூற்பாலைகள், செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள், கண்ணாடி மற்றும் செம்புத் தயாரிப்பு, தரைவிரிப்பு பின்னும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை அதிகம் ஊக்குவிக்கப்படுவதாகவும் இச்சட்டம் கண்டனம் தெரிவித்துள்ள. இச்சட்டம் குறிப்பிடாத மற்றொரு தொழில் ‘விவசாயம்’. அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவது விவசாயத்தில்தான் என்பது இத்துறையை அறிந்த அனைவருக்கும் தெரியும். சட்டங்கள் ஏன் நடைமுறையில் செயல்படுவதில்லை

எடுத்துக்காட்டாய், ஒரு ‘குழந்தைத் தொழிலாளி’ பற்றிய புகாரை சமர்ப்பித்தால், அந்தத் தொழிலாளி 14 வயதுக்குட்பட்டவர் தானா எனப் பரிசோதித்துச் சான்றிதழ் வழங்க ஒரு மருத்துவர் வர வேண்டும். மருத்துவர் கணிக்கும் வயதைக் காட்டிலும் இரண்டு வயது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என சட்டம் சொல்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் பத்து வயதைக் கடந்தவர்களே. அதனால் இந்த சட்ட நுணுக்கத்தினால் பல புகார்கள் செயலிழந்து போகின்றன. அப்படியும் உயிரோடு மீண்டு வரும் புகார்கள், குழந்தைத் தொழிலாளி அல்லது அவரது குடும்பத்தாரின் ஒத்துழையாமையால் பலனிழந்து போகின்றன.

பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் பல உறுப்பினர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் என்ற பரவலான ஒரு எண்ணமும் உண்டு. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் சிறுவர் வேலையாட்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையாவது படித்துவிட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இச்சிறுவர்களைப் பொறுத்தமட்டில் படிப்பதற்கு ஆர்வமில்லை என்பதை விட குடும்பப் பொருளாதாரமே மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாம்.

இலங்கையிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அதிலும் பெருந்தோட்டத்துறையில் உள்ள சிறுவர்களே அதிகமாக இந்த நிலைக்கு உள்ளாகியுள்ளனர். குடும்பங்களில் போதிய வருமானமின்மை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே, வளர்முக நாடுகளில் சிறுவர் பணிக்கமர்த்துவதை கட்டுப்படுத்தல் என்பது ஒரு விரிவான ஆய்வுப் பொருளாக இருப்பதையும் இதனுடன் இணைந்த வகையில் குடும்பப் பொருளாதாரப் பின்னணி பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதையும் அவதானத்தில் கொள்ளுதல் வேண்டும்.

Read more...

Saturday, June 12, 2010

‌விழு‌ப்புர‌ம் அருகே வெடிகு‌ண்டு வை‌த்து த‌ண்டவாள‌ம் த‌க‌ர்‌ப்பு: ப.சிதம்பரத்துக்கு குறியா?

விழு‌ப்புர‌ம் அருகே வெடிகு‌ண்டு வை‌த்து ம‌ர்ம நப‌ர்க‌ள் த‌ண்டவாள‌த்தை தள‌ர்‌த்து‌ள்ளன‌ர். இதனா‌ல் ரா‌க்போ‌ர்‌ட் இர‌யி‌‌லி‌ல் இரு‌ந்த 2 ஆ‌யிர‌ம் ப‌ய‌ணிக‌ள் உ‌யி‌ர் த‌ப்‌பின‌ர். பேர‌ணி எ‌ந்த இட‌த்த‌ி‌ல் இ‌ன்று அ‌திகா‌லை 2 ம‌ணி‌க்கு வெடி‌‌ச் ச‌‌த்த‌ம் கே‌ட்டு இர‌யி‌ல்வே மா‌ஸ்ட‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌தி‌ற்கு செ‌ன்று த‌ண்டவாள‌த்தை பா‌ர்‌த்து‌ள்ளா‌ர்.

அ‌ப்போது 3 அடி அகல‌த்‌தி‌ற்கு த‌ண்டவாள‌ம் வெடி‌த்து ‌உடை‌ந்து ‌கிட‌ந்ததை பா‌ர்‌த்து உடனடியாக இர‌யி‌ல்வே அ‌திகா‌ரிக‌ளு‌க்கு தகவ‌‌ல் கொடு‌த்தன‌ர். இதனையடு‌த்து அ‌ப்போது அ‌ந்த வ‌ழியாக வ‌ந்து கொ‌‌ண்டிரு‌ந்த ரா‌க்போ‌ர்‌ட் ‌விரைவு இர‌யி‌ல் உடனடியாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது. இதனா‌ல் இர‌யி‌‌லி‌ல் இரு‌ந்த 2 ஆ‌யிர‌ம் ப‌ய‌ணிக‌ள் உ‌யி‌ர் த‌ப்‌பின‌ர்.

த‌ண்டவாள‌ம் தக‌ர்‌ப்பு எ‌திரொ‌லியாக செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து தெ‌ன் மாவ‌ட்ட‌ங்களு‌க்கு செ‌ல்லு‌ம் இர‌யி‌ல்களு‌ம், தெ‌‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து செ‌ன்னை வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த இர‌யி‌ல்களு‌ம் ஆ‌ங்கா‌ங்கே ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டன.

இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்த இர‌யி‌ல்வே டி.ஐ.‌ஜி. பொ‌ன் மா‌ணி‌க்கவே‌ல் ‌விரை‌ந்து செ‌ன்று ‌விசாரணை நட‌த்‌தினா‌ர். அ‌ப்போது த‌ண்டவாள‌ம் அருகே ‌கிட‌ந்த து‌ண்டு ‌‌சீ‌ட்டை அவ‌ர் கை‌ப்ப‌ற்‌றி ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கிறா‌ர்.

அதேநேரம் இத்தாக்குதல் சிதம்பரம் அவர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்டதாக என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு 10.30 மணிக்கு புறப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி செல்ல திட்டமிட்டு இருந்தார்.

அவரது பாதுகாப்புக்காக இரவு 9.30 மணிக்கே கமாண்டோ படையினர் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து விட்டனர். ஆனால் டெல்லியில் இருந்து ப.சிதம்பரம் வந்த விமானம் காலதாமதமாக இரவு 10.50 மணிக்குதான் சென்னை வந்தது. இதனால் ப.சிதம்பரம் மலைக்கோட்டை ரெயிலில் செல்ல முடியவில்லை. இரவில் நுங்கம்பாக்கம் வீட்டில் தங்கினார்.

ப.சிதம்பரம் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த மலைக்கோட்டை ரெயிலும் இரவு 1.30 மணியளவில்தான் குண்டு வெடித்த இடத்தை கடந்து செல்லும் எனவே ப.சிதம்பரத்துக்கு குறிவைக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்தது.

இதனால் ப.சிதம்பரத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6.50 மணிக்கு அவர் விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து காரில் காரைக்குடி புறப்பட்டு சென்றார்


Read more...

Friday, June 11, 2010

டக்ளஸ் மீதான வழக்கு எதிர்வரும் 14ம் திகதிக்கு ஒத்திவைப்பு . இலங்கை வந்தடைந்தார்.

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு தமிழ் நாடு மக்கள் உரிமை பேரவையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகளான எம் வை இக்பால் ரி. எஸ் சிவஞானம் ஆகியோர் வழக்கினை எதிர்வரும் 14ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இதேநேரம் டக்ளஸ் இலங்கை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த அவர் புலிகளின் ஆதரவாளர்கள் பழைய விடயங்களை தோண்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் இந்திய இலங்கை ஒப்பந்தின் பிரகாரம் போராட்ட குழுக்களின் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் பிரகாரம் தனக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட பிடியாணையின் பிரகாரம் அவரை கைது செய்துமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டிருக்கும். மாறாக வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் டக்கிளசுக்கு இந்தியாவில் பிடிவிறாந்து உள்ளது என்பது நிருபனமாகியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி கொடுத்துள்ள மனுவில் 1986ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார். வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

1989 ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார். இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று பொறுப்பேற்ற புதிய தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், பொதுநலன் கருதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம். இந்தியா வந்துள்ள டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் ஆகிய 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர். 16 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. எனவே அவரை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும் என்று வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு தள்ளி வைப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை நாட்டை விட்டு தப்பிக்க விடக்கூடாது, உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். கொலை, ஆள் கடத்தல், கொள்ளை, மிரட்டல் போன்ற வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டுள்ளார்.

ஒரு நாட்டின் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரை இலங்கை அதிபர் ராஜபக்சே துணிச்சலாக அழைத்து வந்துள்ளார். இந்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் தான் இதற்குக் காரணம்.

டக்ளஸ் தேவானந்தா பற்றிய முழு வரலாறும் தெரியாமல் அவரை ராஜபக்சே அழைத்து வந்ததாக கருத முடியாது. நான் அழைத்து வந்தால், உங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற ராஜபக்சேயின் ஆணவ வெளிப்பாடாகத்தான் இதைப் பார்க்க வோண்டும்.

ராஜபக்சேயின் இந்த துணிச்சலுக்கு பின்னணி இருக்கவும் வாய்ப்பு உண்டு. மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, ராஜபக்சேக்கு ஏதோ ஒரு வகையில் நன்றிக் கடன்பட்டுள்ளது. எனவே தான் இவ்வளவு துணிச்சலாக டக்ளஸ் தேவனந்தாவை ராஜபக்சே அழைத்து வந்துள்ளார்.

போபால் விஷவாயு வழக்கிலும் அப்போது ஆட்சியில் இருந்த மாநில அரசும், ராஜிவ் காந்தி தலைமையிலான மத்திய அரசும் யூனியன் கார்பைடு ஆலை தலைவர் ஆன்டர்சனை தப்ப வைத்துள்ளன.

இந்த உண்மைகள் எல்லாம் ராஜபக்சேவுக்கு தெரியும். எனவே தான் கையாலாகாத இந்த மத்திய அரசால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற திடமான நம்பிக்கையில் தான் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை உடன் அழைத்து வந்துள்ளார்.

தேடப்படும் குற்றவாளிகளை தேடிக்கொண்டு இருப்பதை விட தானாக முன்வந்து நாட்டின் பிரதமரிடம் கைகுலுக்கி உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று நகையாடி இருப்பது இனிமேல் நமது நாட்டின் 'தேடப்படும் குற்றவாளி' என்ற வார்த்தையை பயன்படுத்துவதே அர்த்தமற்றதாகிவிடும்.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் டக்ளஸ் தேவானந்தா பற்றி டெல்லி போலீசுக்கு தகவல் அனுப்பி இருப்பதாக கூறுகிறார். மற்ற குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படைகளை அனுப்வது போல தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய சிறப்பு படையை அனுப்ப வேண்டியது தானே?.

அவரை நாட்டை விட்டு தப்பிக்க விடக்கூடாது. உடனே கைது செய்ய வேண்டும். தேடப்படும் குற்றவாளியை மறைத்து வைப்பதும் சட்டப்படி குற்றம். எனவே இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மீதும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Read more...

பிரிட்டன் பிரதமரைக் கொல்ல தாலிபான் சதி

பிரிட்டன் பிரதாம்ர் கேமரூனின் பயணம் ரத்து செய்யப்பட்டது.தாலிபான் தீவிரவாதிகள் அவர் செல்லவிருந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. உளவுத் துறையினர் இந்த சதியைக் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டன் ராணுவ உளவாளிகள் இது தொடர்பான தாலிபானியர்கள் இருவரின் தொலைபேசி உரையாடலில் இந்தச் சதி பற்றி .தெரியவந்ததாகத் தெரிவித்தனர்.

அதாவது, ஷாசாத் ரோந்து முகாம் அருகே இவரது காப்டரை சுட்டு வீழ்த்த திட்டம் தீட்டப்பட்டது இந்த உரையாடல் மூலம் அம்பலமானது. இந்தச் சதி அம்பலமானபோது பிரிட்டன் பிரதமர் வானில் பறந்து கொண்டிருந்தார். அதாவது இன்னும் 10 நிமிடங்கள் இருக்கிறது என்ற நிலையில் அவரை சுட்டு வீழ்த்த திட்டமிட்டுள்ள அந்தப் பகுதிக்கு அவர் வந்து கொண்டிருந்தார்.

ஆனால் அதற்குள் சதி தெரியவந்ததால் அவர் அங்கு இறங்கவில்லை. ஹெலிகாப்டர் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டு பிரிட்டன் படை தலைமைச் செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

Read more...

டக்ளஸை கைது செய்யக்கோரும் மனுமீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றில்.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவுடன் டெல்லி வரும்போது கைது செய்யவேண்டும் என இந்தியாவின் பல தரப்பினரிடமிருந்தும் குரல் எழுப்பப்பட்டிருந்ததுடன் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பிபிசி தமிழ் சேவை இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இந்நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, தான் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி என்பதை அறிந்திருக்கவில்லை எனவும் 1987 ம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அவற்றை எதிர்கொள்ள தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சூழைமேட்டுப்பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தும் நால்வர் காயமடைந்துமிருந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தா பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்ததுடன், நீதிமன்றில் தொடர்ந்து ஆஜராகமையை அடுத்து நீதிமன்றினால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் 10 சிறுவன் ஒருவனை கடத்தி 7 லட்சம் இந்திய ரூபாய்களை கப்பமாக பெறமுயன்ற வழக்கொன்றும் இவர்மீதுள்ளது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா கனடா ஆகிய நாடுகளுக்கு ஆட்களை கடந்திவந்த இலங்கையைச் சேர்ந்த முகவர் ஒருவரது மகனே டக்கிளசினால் கடத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினுடாக தமிழ் போராட்ட அமைப்பினர் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாயினும் இவ்வாறான சமுகவிரோத செயல்களுடன் தொடர்புடைய சம்பவங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதா என்பது கேள்வி. மேலும் இந்தியாவில் எவ்வாறான வழக்குகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்பது ஆராயப்படவேண்டியது.

இந்தியாவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்த பல இயக்க உறுப்பினர்கள் சிறைகளிலிருந்து சட்டரீதியாக விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. ஆனால் நீதிமன்றினால் தேடப்பட்டும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த ஒருவர் மீதான பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளதா என்பது இன்று சென்னை நீதிமன்றில் மனு விசாரணைக்கு வரும்போது தெளிவாகும். ஏவ்வாறாயினும் இவ்வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது என்பது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதிலிருந்து உறுதியாகியுள்ளது. அன்றில் மனு நிராகரிக்கப்பட்டிருக்வேண்டும்.

Read more...

தமிழ் அரசியல்வாதிகளை கண்ணால் கண்டதில்லை. கிளிநொச்சி பொலிஸ் அதிகாரி.

பொதுத்தேர்தல் முடிவடைந்து மாதங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியுடன் பிரதேச நிலைமைகள் தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்தபோது, குறிப்பிட்ட பொலிஸ் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அங்கு கடமையில் உள்ளதாக தெரிவிக்கும் பிரத பரிசோதகர் இதுவரை தான் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியையும் தனது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் சந்திக்கவில்லை என கூறுகின்றார்.

பொலிஸ் சேவையில் சுமார் 30 வருடங்கள் உள்ளதாக கூறும் அவர் நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியுள்ளதாகவும் , சுமார் ஒவ்வொரு நாட்களுமே ஏதோ ஒரு தேவைக்காக அரசியல்வாதிகளை பிரதேசத்தில் அல்லது பொலிஸ் நிலையத்தில் காணக்கூடியதாக இருக்கும் எனவும் ஆனால் இங்கு நிலைமை முற்றிலும் மாறானதாகவுள்ளதாகவும் இதுவரை தான் எந்தவொரு பாரளுமன்ற உறுப்பினரையோ அன்றில் உள்ளுர் அரசியல்வாதிளையோ கிளிநொச்சிப் பிதேசத்தில் சந்திக்கவில்லை எனவும் கூறினார். அத்துடன் தேர்தல் காலங்களில் பிரச்சார நோக்கங்களுக்காக அவர்கள் பிறபிரதேசங்களிலிருந்து சில மணித்தியாலங்கள் வந்து சென்றுள்ளதாக சக அதிகாரிகள் கூறியதை கேள்விப்பட்டுள்ளேன் எனவும் கூறினார். அவ்வாறாயின் இவர்கள் எங்கே தங்கியிருக்கின்றார்கள் எனக் கேட்டபோது, அனைவரும் கொழும்பில் என்றார்.

மக்களின் மனநிலை குறித்து பேசியபோது, அங்குள்ள குடும்பங்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு குடும்பமும் ஆகக்குறைத்தது ஒன்று அல்லது இர ண்டு குடும்ப அங்கத்தினரை இழந்தே உள்ளனர். இந்நிலையில் அவர்கள் சாதாரணநிலைக்கு திரும்புவதற்கு குறிப்பிடத்தக்க காலம் தேவைப்படும் எனவும் அவர்களுக்கு நிச்சயாமாக உளவியல் ரீதியான உதவி என்பது மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

பொருளாதாரநிலை தொடர்பாக பேசியபோது, சிலர் மிகவும் செல்வந்தர்களாக காணப்படும் அதேநேரத்தில் பலர் சகலவற்றையும் யுத்தத்தால் இழந்துள்ளனர். ஆனால் இப்பிரதேசம் சகல மூலவளங்களும் உள்ள பிரதேசமாகையால் அவர்கள் இன்னும் 2-3 வருடங்களில் மீண்டும் தமது பழைய நிலைமைக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உண்டு என்றார்.

குற்றவியல் சம்பவங்கள் தொடர்பாக கேட்டபோது, தான் சேவையாற்றிய பொலிஸ் நிலையங்களில் சந்தித்துள்ள குற்றவியல் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இப்பிரதேசத்தில் அவ்வாறான அனுபவங்கள் எதுவும் இல்லை என்றதுடன் , சில சில சிறிய சம்பவங்கள் உண்டு எனவும் அவை சிறு குற்றவியல் பிரிவினரால் தீர்த்து வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன், ஒருசில திட்டமிட்ட குற்றங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதற்கான குற்றவாளிகள் உடனடியாக இனம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Read more...

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்புச் செயலரினால் பரிசுகள்

வெலிகந்த, சேருநுவர இடைத்தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களுக்கு சென்ற பாதுகாப்பு செயலர், புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் குறித்து ஆராய்ந்துள்ளார். புனர்வாழ்வு முகாம்களில் பல்வேறு தொழில் பயிற்சிகளை பெற்று வரும் முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் பாதுகாப்புச் செயலாளரினால் வழங்கப்பட்டன.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, கிழக்கு மாகாண பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும், கிழக்கின் உதயம் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Read more...

Thursday, June 10, 2010

கொம்பனித்தெரு குடியிருப்பு அகற்றப்பட்டமை தொடர்பான நூல் வெளிவந்துள்ளது

அண்மையில் கொழும்பு, கொம்பனித்தெரு பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் சட்டவிரோதம் எனக் கூறி அரசாங்கத்தினால் இடித்து தகர்த்து அகற்றப்பட்டன. இவற்றின் உண்மைத்தன்மையை விளக்கும் ஆவணங்களுடன், நூலொன்று வெளியிடப்பட்டுள்ளது. முஸ்லிம் தகவல் நிலையம் -MIC- தன்னுடைய பத்தாவது ஆண்டு நிறைவைமுன்னிட்டு இதனை வெளியிட்டது.

ரண்முத்து ஹோட்டலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற் வைபவம் ஒன்றில் நூலின் பிரதிகள் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நூலின் பிரதியொன்றை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீமிடம் முஸ்லிம் தகவல் நிலைய செயலாளர் ஸுஹைர் காரியப்பர் கையளிப்பதை படத்தில் காணலாம். இந்த நிகழ்வில் முஸ்லிம் சமூக பல்துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர் இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக சட்டத்தரணி அஸீஸ் The President of the Bar Association of Sri Lanka கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

Read more...

அரசியமைப்புத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்.

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பதில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 7 ஆவது ஆ பிரிவு, xi பிரிவு, xviii அ பிரிவு ஆகியவற்றை உரிய முறையில் மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பில் திருத்தத்தை ஏற்படுத்துவதற்கும், இனங்காணப்பட்ட ஏனைய சட்டங்களுக்கமைய அரசியலமைப்பைத் திருத்துவதற்கும், மாற்றுவதற்கும், சட்டத்திற்கு அமைவான சட்டமூலங்களை உருவாக்கிப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும், ஆலோசனை வழங்குவதற்கும், அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளதெனப் பதில் ஊடக அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி முறைமை, நடைமுறைத் தேர்தல் முறைமை மற்றும் அதிகாரங்கள் என்பவற்றில் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்து அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஏதேனும் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஊடகவியலாலர் ஒருவர் இங்கு கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த பதில் ஊடக அமைச்சர், முதலில் வடபகுதியில் மாகாண சபை முறைமையை நிறுவுவதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளதாகக் கூறினார்.

Read more...

த.தே.கூ அரசுடன் இணைந்து நின்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது. ஆனந்த சங்கரி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசின் நிகழ்சி நிரலுக்கு ஏற்றவாறு தாளம்போட்டு தமிழ் மக்களை ஏமாற்றுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி குற்றம் சாட்டுகின்றார். த. தே. கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான சந்திபின்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இழைஞர் யுவதிகளின் விடுதலை தொடர்பாக உறுதியாக பேசத்தவறியுள்ளதாகவும் மாறாக அறிக்கைகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான இறுதி சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தாம் தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகள் தொடர்பாகவே பேசியதாகவும் அதுவே தற்போதைய தேவை எனவும் தெரிவித்திருந்தனர். யுத்தம் முடிவடைந்த தறுவாயில் தமிழ் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் நிறையவே இருந்தது. அத்தருணத்தில் மக்களின் தேவைகள் தொடர்பாக எதுவுமே வாய்திறக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் கஞ்சிக்காக கையேந்தி நிற்கவில்லை எமது மக்களின் அத்தியாவசிய தேவை அரசியல் தீர்வே எனத் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது மக்களின் தேவைகள் ஓரளவேனும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அரசியல் தீர்வு விடயமாக நியாமான கோரிக்கையை முன்வைத்து தீர்வொன்றை நோக்கி நகராமல் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் அரசியலையே முன்னெடுக்கின்றனர் என்பதை இலகுவாக உணரமுடிகின்றது.

Read more...

7 புலிச் சந்தேக நபர்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் விடுதலை.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 விடுதலைப்புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி இன்று உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இவர்கள் 2008 ஆம் ஆண்டு மூதூர் மற்றும் வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களில் கைதுசெய்யப்பட்டவரக்ளாவர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலையில் இவர்களை விடுதலை செய்யுமாறு அரச சட்டத்தரணி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் அற்ற சந்தேக நபர்களை துரிதமாக விடுதலை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை நீதியரசர் ஷிராணி திலக்கரட்ன பாராட்டியுள்ளார்.

Read more...

Wednesday, June 9, 2010

இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து.

தமிழர் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வு, முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீள்குடியமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ராஜபக்சவுடன், பிரதமர் மன்மோகன் சிங் விவாதித்த நிலையில், இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.

இலங்கை அதிபராக கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக நான்கு நாள் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்தார் ராஜபக்ச.அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜபக்ச, இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

அப்போது இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீள்குடியமர்த்துவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அவருடன் விவாதித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தியா - இலங்கை இடையே உயர்மட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரிடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராஜபக்ச ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்துவது, இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை விரைவாக மீள் குடியமர்த்தல், மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு,தமிழ் குழுக்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டது.

மேலும் வர்த்தக மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது எரிசக்தி பாதுகாப்பை உறுதிபடுத்துவது மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்பட இருதரப்பு மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.

அப்போது இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை விரைவில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்த ராஜபக்ச, அது தொடர்பான தமது அரசின் திட்டங்களையும் எடுத்துரைத்ததோடு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா அளித்த உதவியை பாராட்டினார்.

மேலும் போரினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களுக்கும் கவுரவத்துடன் கூடிய வாழ்வாதரத்தை உறுதிபடுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கருத்துக்கு தாம் உடன்படுவதாகவும் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இலங்கையின் எரிசக்தி தேவைக்கு உதவும் மின் திட்டங்கள் மற்றும் தலைமன்னார் - மது இடையே ரயில் பாதை அமைக்கும் பணிகளை இந்தியா மேற்கொள்வது உள்பட இருநாடுகளுக்கும் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நன்றி வெப்துனியா

Read more...

லண்டனுக்கு குடியேறுபவர்களுக்கு ஆங்கிலம் கட்டாய மொழியாகிறது.

பிரித்தானியாவிலுள்ளோரை திருமணமுடித்து அங்கு குடியயேறுபவர்களுக்கு ஆங்கில மொழியறிவு கட்டாயப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக ஐரோப்பிய வர்த்தக வலயத்திற்கு வெளியேயிருந்து பிரித்தானியர்களை திருமணம் முடிப்போர் நிலையான ஆங்கில பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருக்வேணடும் என இன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது.

Read more...

பொருளாதார தடை விதித்தால் அணு திட்ட பேச்சுவார்த்தை இல்லை: ஈரான்

ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டால் அணு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை தமது நாடு நிராகரித்துவிடும் என்று அந்நாட்டின் அதிபர் அகமதுனிஜாத் எச்சரித்துள்ளார். ஈரான் மீது நான்காவது பொருளாதார தடை விதிப்பதற்கான தீர்மான வரைவை இறுதிப்படுத்துவதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் இந்த தீர்மானத்தைக் காட்டி அச்சுறுத்தி தங்களை பேச்சுவார்த்தையில் உட்கார வைக்கலாம் என நினைத்தால் அது தவறாக போய்விடும் என்று அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளிடம் தாம் திட்டவட்டமாக கூறி உள்ளதாக அகமதுனிஜாத் தெரிவித்தார்.

மரியாதையும், உறுதியும் உள்ள ஒவ்வொருவரிடம் பேச்சு நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆனால் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு எங்களுடன் பேசலாம் என யாராவது நினைத்தால், அதற்கான பதிலடி எவ்வாறு இருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான் என்று அவர் மேலும் கூறினார்.
...............................

Read more...

பாசிசப் புலிகள் விடுத்த பகிரங்க மிரட்டல் – மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில்.

தமிழ் மக்கள் மேல், அரசு மட்டுமல்ல புலிகளும் கூடத்தான் போர்க் குற்றத்தை இழைத்துள்ளது. இரண்டுக்கும் எதிராக போராடாத அதை அம்பலப்படுத்தாத அனைவரும் புலிகளே. இதுதான் தமிழ்மக்களின் பெயரில் யார் புலி பினாமிகளாக உள்ளனர் என்பதை இனம் காட்டுகின்றது.

ஜனநாயகம் வேஷம் போடத் தேர்தல். வெள்ளைக்காரரை ஏமாற்ற தாங்கள் புலிகளல்ல என்று கூற வெள்ளைவேட்டி.

இதை அம்பலமாக்கிய போது பாசிசப்புலிகளின் பகிரங்க அச்சுறுத்தல். நோர்வே தொரம்சோவில் தனியாக நின்று துண்டுப்பிரசுரம் விநியோகித்த பெண்ணை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான வன்மத்துடன் அச்சுறுத்தினர் நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் உள்ளுர் கையாட்கள்.

தொரம்சோ நகரத்தில் ஜக்கிய நாடுகள் கழக சர்வதேச மக்கள் வாரத்தில் தான் இது நிகழ்ந்தது. பலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவு தரும் திறந்தவெளி அரங்கப் பேச்சைக் கேட்பதற்காய் வந்திருந்த மக்கள் மத்தியில் வைத்து, இந்த மிரட்டல் உத்தரவு இவர்களால் பிறப்பிக்கப்பட்டது. இந்த அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் யாருமல்லர். புலிகளுக்கான நிதி சேகரிப்பாளராய் இயங்கிய இயங்கும் ஒருவரும், நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் பிராந்திய வேட்பாளராய் தேர்தலில் பங்கேற்று பிரதிநிதியாகிய இன்னுமொருவருமாக சேர்ந்து துண்டுப்பிரசுத்தை விநியோகித்த பெண்ணை அச்சுறுத்தினர். இவர்கள் நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் உள்ளுர் கையாட்களாகும்.

விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் (நோர்வே மொழியில்)

பேரினவாத பாசிசத்துக்கும், பாசிசப் புலிகளுக்குமிடையில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையாய் அகப்பட்ட தமிழ்மக்களின் மூன்று தசாப்த கால போராட்டம் அவலத்தில் முடிந்ததை நோர்வே மொழியிலான துண்டுபிரசுரம் மூலம் அம்பலப்படுத்தினர். இவர்கள் மக்களுக்கு இழைத்த தாங்கொணாத துன்பங்களை தெளிவுபடுத்தும் வகையில் இவ்விரு பாசிசப் போக்குகளாலும் நிகழ்த்தப்பட்ட கொடூரமான போர்க்குற்றங்களுக்காக விசாரணையைக் கோரி துண்டுப்பிரசுரம் ஒன்றினை நோர்வேஜிய மொழியில் வெளியிட்டு விநியோகித்தபோது இப்பெண்ணை இந்நபர்கள் சூழ்ந்து கொண்டார்கள். நோர்வேஜியர்களின் கவனம் பலஸ்தீனம் பற்றிய சொற்பொழிவில் ஊன்ற ஆரம்பித்த தருணமாய் பார்த்து இந்தப் பெண்ணை இவர்கள் சூழ்ந்து கொண்டனர். “தவறான தகவல்களோடு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கிறீர்கள்” என்றும் அதனை நிறுத்தி அவ்விடத்தை விட்டு உடனடியாக அகலுமாறும் இல்லாவிடில் வீண்பிரச்சனைகளை எதிர்நோக்க நேரிடும் எனறு கைகலப்பு பாணியில் நெருங்கி நின்று கொண்டு அச்சுறுத்தும் வார்த்தைகளை அள்ளி வீசினர்.

நிலைமையின் இறுக்கத்தை உணர்ந்த அப்பெண் சற்று ஒரடி ஈரடிகள் தள்ளி நின்ற தன்னுடைய கட்சியின் பெண் உறுப்பினரை தன்னை நோக்கி எட்டி இழுத்து அழைத்தார். “துண்டுப்பிரசுரம் விநியோகிக்க வேண்டாம் உடனடியாக இடத்தைவிடத்தை விட்டுப் போகும்படி என்னை இவர்கள் எச்சரிக்கின்றனர்” என்று அவரிடம் கூறியபோது வழமையான தமது பாசிச குணத்தினை மறைக்கும் நோக்கில் தமிழில் அச்சுறுத்தும் தமது தொனியை மாற்றி நோர்வேஜிய பாசையில் அவர்கள் உரையாடலை நைசாக மாற்றினார்கள்.

”எந்த விவாதத்துக்கும் இங்கு இடமில்லை. துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் உரிமையை இங்கு யாரும் தடைபோட முடியாது” என்று ஆணித்தரமாக பதிலிறுத்த அந்த நோர்வேஜிய பெண்ணிடம் மேலும் தங்கள் பாசிச குணாம்சத்தை அமபலப்படுத்துவானேன் என்றெண்ணினார்களோ என்னவோ அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. துண்டுப்பிரசுர விநியோகம் அதன் பின்னர் தொடர்ந்தது.

இங்கு பாரதூரமானது என்னவெனில் புலிகள் தங்கள் அதே நிறுவனமயப்பட்ட பாசிச நடவடிக்கைகளை வேறு பெயர்களில் அவர்கள் உருவாக்கும் அமைப்புகளினூடாக தொடர்கிறார்கள், தொடரப் போகிறார்கள் என்பதையே இந்த நடவடிக்கை இத்தனை வருட அவலங்களுக்குப் பின்னாலும் காட்டிநிற்கின்றது.

இது நோர்வேக்கு மட்டுமான நிகழ்வானதாக நாங்கள் குறுக்கி எங்கேயோ நடந்ததென வாழாதிருப்போமாயின் மீண்டும் ஒரு பாசிச வழிக்கான ஆரம்பத்தை அனுமதித்தவர்களாவோம். எப்படி அன்று விடுதலை என்ற பெயரில் பாசிச அராஜகப் போக்குகள் முளைவிட்டு நச்சுவிருட்சமாகி தமிழ்மக்களை அச்சுறுத்தி அடக்கியொடுக்கியதோ அவர்களின் விடுதலையை துவம்சம் பண்ணினவோ அதே போக்கை நாம் மீண்டும் இன்றும் மவுனமாக அனுமதித்தவர்களாவோம்.

தமிழ்மக்களை மீண்டும் இந்தப் பாசிசப்படுகுழியில் தள்ளிவிட புலிகள் மட்டுமல்ல பேரினவாத சக்திகளும் பதுங்கியிருக்கிறார்கள். புலிகளின் இந்தப் போக்கு மீண்டும் மக்களை படுகுழியில் தள்ளிவிடுவதில் மட்டும் தான் முடியும்.

இந்த மிரட்டல் விட்ட நபர்கள் அன்றைய பாசிச இயக்குனர்கள் வன்னிப் போர் பல்லாயிரம் உயிர்களை காவு கொண்டிருந்தபோது கடைசி நிமிடம் வரையும் புலிக்காக நிதி சேகரித்தவர்கள். தற்போதைய நோர்வே ஈழத்தமிழர் பேரவைக்குள் ஜனநாயக முகமூடியுடன் நுழைந்திருக்கிறார்கள். இலங்கை தமிழ்மக்களின் போர் அழிவுகளை சித்திரக்கண்காட்சி மூலம் வெளிப்படுத்தும் நிகழ்ச்சியினை அந்தப் போர்வைக்குள் நடாத்தினர்.

இந்த மிரட்டல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் தலைவரை இந்தப் பெண் தான் அங்கம் வகிக்கும் கட்சியின் நாடாளவிய மாநாட்டில் கலந்து கொண்டபோது தலைநகர் ஒஸ்லோவில் சந்தித்திருந்தார்.

இந்த மாநாட்டு நிகழ்ச்சி நிரலில், நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் சொற்பொழிவொன்றும் சேர்க்கப்பட்டிருந்ததை இந்தப் பெண் சுட்டிக்காட்டி, அது ஒரு புலிப்பினாமி அமைப்பென்பதை தனது சக கட்சி அங்கத்தவர்களிடையே சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதை வேறொருவர் மூலமான தெரிந்து கொண்ட அங்கு வருகை தந்திருந்த அதன் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா தனது சொற்பொழிவு நேரத்துக்கு முன்னதாக இப்பெண்ணை அணுகி ஈழத்தமிழர் பேரவை புலிகளின் ஒரு பகுதியோ அல்லது புலிகள் அமைப்போ அல்ல என்றும் கருத்துரைத்திருக்கின்றார்.

அந்தப் பெண் அவருடைய வாதங்கள் எதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அவருடைய சொற்பொழிவின் பின்னரும் தொடர்ச்சியாக அந்த அமைப்பு புலிப்பினாமி அமைப்பே தான் என்று தனது சக கட்சி உறுப்பினரிடம் இந்தப்பெண் வலியுறுத்தி பேசினார் என அறிய வருகிறது. தேர்தல்களை கண்துடைப்பாய் நடாத்தி தங்களை ஜனநாயகப் போர்வைக்குள் போர்த்திக் கொண்டவர்களே இவர்கள். புலிகள் தோற்கடிக்கப்படும் வரை புலிகளுக்கான அனைத்து பொறுப்புகளையும் சுமந்த நபர்களின் பினாமிக் கூட்டுத்தான் இது என அவர் மேலும் கூறியிருக்கிறார்.

இதனை அறிந்துகொண்ட நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் பெருந்தலைவரோ -பஞ்சகுலசிங்கம் கந்தையா – இந்தப் பெண்ணின் மின்னஞ்சலை யாரிடமிருந்தோ துழாவி எடுத்து பொது வாதங்களை தனியாக கையாண்டு இப்படிப்பட்ட குரல்களை வெளியே வராமல் தனியாக கையாண்டு அடக்கலாம் என்ற வகையில் மின்னஞ்சல் மூலமாக மீண்டும் தனிப்பட்ட இருவருக்கிடையிலாக வாதமாக அதைக் குறுக்கிக் கையாளும் நரித்தனத்தை செய்தார்.

தான் தனது மின்னஞ்சலை தானாகவே வழங்காதவிடத்து மின்னஞ்சல் மூலம் ஒரு புலி சார் நபர் தன்னை தொடர்பு கொண்டாலே அது வில்லங்கம் என்று நினைக்கும் அச்சமான சூழலை புலிகளே விளைவித்த பின்னால் இப்படியொரு மின்னஞ்சலை தேடித்துழாவி எடுத்து தொடர்பு கொள்கின்றபோது தன்னைத் தொடர்ந்து வில்லங்கம் ஒன்று பின்தொடர்கின்றது என்றே பொதுவில் எவரும் உணர்வர்.

அத்தோடு தனது பதவிப் பெயரை பிரத்தியேகமான மின்னஞ்சலில் கூட தனது பெயரின் கீழ் குறிப்பிடத் தவறாதவராய் தனது மின்னஞ்சல் பெறுபவர்களை கல்விசார் தாழ்நிலைக்கு ஏற்படுத்தலாம் என்ற அறிவுமேலாண்மை இறுமாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நோக்கில் இதை பயன்படுத்துகின்றார். பகிரங்க பொதுச்சபையொன்றில் இப்பெண்ணால் தனது சக கட்சி உறுப்பினர்களிடையே நடந்த நாடுதழுவிய மாநாட்டில் எழுப்பப்பட்ட பொதுவான எதிர்நிலை நின்ற கருத்துக்களுக்கு பொதுவிடத்தில் அல்லது பொதுத்தளத்தில் பதிலிறுக்கும் நாகரீகத்தை மறுத்து இப்படி மறைமுகமாக மிரட்டுகின்றனர். நாட்கள் கடந்தபின்னர் இரு தனிநபர்களுக்கிடையிலான சம்பாசணையாக அதனை மாற்றி குறுக்கி கிள்ளி எறிந்துவிடலாம் என்ற நோக்கிலும் இப்படி கேள்விகள் எழுப்புவோரின் தற்துணிவுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிடலாம் என்றும் அவர் கனவு கண்டிருக்கிறார்.

தனியான நபராக இப்படி கையாள்வதன் மூலம் அவர்களைத் தனித்து மடக்கி, இப்பொதுக் கேள்விகள் சந்தேகங்கள் மேலெழாவண்ணம் நோர்வேஜிய மக்கள் மத்தியில் தாங்கள் அம்பலமாகாது தப்பித்து தங்கள் பாசிச முகங்களை மறைத்து பொய்கள் மேல் குந்தியிருக்கலாம் கட்டவிழ்த்து விடலாம் என்பது இவர்களது நடைமுறை.

தனியான பிரச்சனையாக அதனை இழுத்து குறுக்கிவிடலாம் என்ற அதே புலிப்புத்தியுடன் இதே பெண்ணுக்கு எழுதிய மின்னஞ்சலின் இறுதி அத்தியாயம் தான் இந்த நேரடி மிரட்டலாக நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் தொரம்சோ பிராந்திய உறுப்பினர்களால் வன்மத்துடனான பாசிச அச்சுறுத்தலில் முடிந்திருக்கிறதா அல்லது தொடருமா என்பதே இன்றுள்ள கேள்வி.

பொதுவிவாதத்திலிருந்து நழுவலாம் என்ற எண்ணப் போக்கில் பொதுவான எந்தக் கேள்விகளிலிருந்தும் நழுவும் மூடிமறைக்கும் போக்கில் எழுதிய மின்னஞ்சல்களின் தமிழாக்கம் இங்கே தரப்படுகின்றது.

முதலாவது மின்னஞ்சல்
—————————————————————————————————————————————

Fra: Panchakulasingam, Kandiah
Emne: rødt landsmøte
Dato: Tirsdag 1. juni 2010 11.01

Hei!

Takk for sist. Jeg har snakket med Bjørnar Moxnes som påstod at du hadde fremstilt NCET som en del av LTTE. Det er helt feil. NCET er en demokratisk valgt organisasjon (med 3000 stemmer i Norge) som skal jobbe for tamilenes rettigheter og frihet i Tamil Eelam.

Som politikker har du et ansvar og du må ikke spre feil informasjon. Jeg som leder for NCET ser svært alvorlig på dette. Håper det bare var en misforståelse og du blir også med oss for å kjempe for et fritt tamil Eelam.

Hilsen
Overlege Panchakulasingam Kandiah
leder, NCET.


ஹேய்!

வணக்கம். நான் கதைத்தபோது அவர் சொன்னார்; நீர் NCET ஐ LTTE இன் ஒரு பகுதி என்று கருத்து வெளியிட்டதாக. அது தவறு. NCET தமிழீழத்திலுள்ள தமிழரின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் வேலை செய்வதற்காக ஜனநாயக முறையில் தெரிவு செய்யபப்பட்ட அமைப்பு (நோர்வே இல் 3000 வாக்குகள்). …………. நீர் ஒரு அரசியல்வாதியாக இருப்பதால் உமக்கு பொறுப்பு உள்ளது. அதனால் நீர் தவறான தகவல்களைப் பரப்ப கூடாது. …NCET இன் தலைவரான நான் இதனை பாரதூரமான விடயமாக பார்க்கிறேன். புரிதலில் ஏற்பட்ட தவறு என்றே இதை கருதுகிறேன். ஒரு சுதந்திரமான தமிழீழத்துக்கான போராட்டத்தில் நீரும் இணைவீர் என எதிர்பார்க்கிறேன்

வாழ்த்துக்கள்
பெரியடாக்குத்தர்/வைத்தியஅதிகாரி பஞ்சகுலசிங்கம் கந்தையா
தலைவர் NCET

இரண்டாவது மின்னஞ்சல்


Fra: Panchakulasingam, Kandiah
Emne: SV: Vedr. rødt landsmøte
Dato: Onsdag 2. juni 2010 12.41

Hei M……..!

Det er helt greit at du ikke vil endre synet på NCET men du er feilinformert og jeg får inntrykk av at du ikke har fulgt med utviklingen i forhold til vår situasjon.

Det er mye rart i det du svarer med. Hvem har skrivet dette??? Det ble gitt uttrykk for mange vrangforestillinger i denne artikkelen. Personen som skrev dette “avis innlegg” hallusinerer.

Jeg representer ikke LTTE. NCET har ingeting med tidligere penge innsamling å gjøre. Frigjøringskampen må videreføres. Som jeg sa i landsmøte: tamiler i Eelam er blitt slaver i sitt eget land. Men jeg understrekker igjen her at du har misforstått hele greia. Jeg vet hva jeg / NCET står for og ser tiden etter 18 mai ifjor som en mulighet til å endre kurs. Vi burde ha gjort dette for 10 – 15 år siden.

Men nå er det ikke forsoning .Vårt folk nektes til og med legebehandling.

Jeg synes at argumentene dine er på feil grunnlag og ikke holder mål. Det er helt greit at du ikke vil endre synet på NCET men det er fakta feil å koble NCET til LTTE.

Hilsen
Overlege Panchakulasingam Kandiah
leder, NCET.

ஹேய் …..!
உனது NCET பற்றிய கருத்தை மாற்ற மறுப்பது பிரச்சினை இல்லை. ஆனால் உனக்கு தவறான தகவல்கள் வளங்கப்பட்டுள்ளது. மேலும் நான் நினைகிறேன் நீர் எமது நிலை சம்பந்தமாக கவனிக்க தவறிவிட்டீர் என. உமது பதில் சம்பந்தாசம்பந்தம் இல்லாத பதிலாகவுள்ளது. அதை யார் எழுதியது??? விசர்த்தனமான கருத்துகளை அந்த கட்டுரை வெளிப்படுத்துகிறது- அதை எழுதியவர் hallucinogenic . நான் LTTE ஜ பிரதிநிதிதுவப்படுத்தவில்லை. NCETஇக்கும் முன்பு சேர்த்த பணத்துக்கும் சம்பந்தமில்லை. விடுதலைப்போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் . நான் உனது கட்சி கூட்டத்தில் சொன்னது போல்இ ஈழத்தில் தமிழர்கள் தமது நாட்டிலேயே அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் நான் திரும்பவும் வலியுறுத்தி சொல்கிறேன் நீர் எல்லாவற்றையும் தவறாக விளங்கியுள்ளீர். எனக்கு தெரியும் எனது/NCET நிலைப்பாடு. மேலும் போனவருடம் மே 18 பிற்பட்ட காலத்தை (போராட்ட) பாதையை மாற்றுவதற்கான நல்ல சந்தர்ப்பம். இதை நாங்கள் 10 -15 வருடங்களுக்கு முன் செய்திருக்க வேண்டும். இப்போது(சிங்களவர்களுடனான) சகவாழ்வு முடியாத விடயம். எமது மக்கள் வைத்தியரிடம் போவதற்கு கூட மறுக்கப்பட்டுள்ளனர். உனது விவாத உள்ளடக்கம் தவறான கருத்துகளை கொண்டுள்ளது என்பதே என் கருத்து ஆகவே அது (உனது விவாதம்) தரமானதல்ல. உனது NCET பற்றிய கருத்தை மாற்ற மறுப்பது பிரச்சினை இல்லை ஆனால் NCET ஐ LTTE உடன் இணைப்பது உண்மைக்கு புறம்பானது.

வாழ்த்துக்கள்
பெரியடாக்குத்தர்/வைத்தியஅதிகாரி பஞ்சகுலசிங்கம் கந்தையா
தலைவர் NCET

நன்றி புகலிட சிந்தனை மையம்

Read more...

புலிகளுக்கு நிதிசேதரித்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது. கனடிய சட்டமா அதிபர்.

புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தார் என்கிற வழக்கில் கனடாவில் குற்றவாளியாகக் காணப்பட்டிருக்கும் தமிழருக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லையென அந்நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் போர்க்கொடி தூக்கி உள்ளது.

இவ்வழக்கில் பிரபாகரன் தம்பித்துரை என்பவர் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி சேகரித்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் கடந்த மாதம் 06 மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால் இக்குற்றவாளிக்கு குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் குறைந்தது 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சட்டத்துக்குப் பொருந்தாத வகையில் மிகக் குறைந்த தண்டனை வழங்கப்பட்டு விட்டது என்றும் கனேடிய சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் அத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. இலங்கைத் தமிழரான தம்பித்துரை 1988ஆம் ஆண்டு அகதியாக கனடாவுக்கு வந்தார். 1995 ஆம் ஆண்டு கனேடிய பிர்ஜாவுரிமை பெற்றார். புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தார் என்கிற சந்தேகத்தில் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் கனாவில் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் முதலாவது நபர் இவரே ஆவார்.

Read more...

யுத்த குற்றம் தொடர்பான ஐ.நா வின் விசாரணைக்கு பூரண அதரவு : ஜெனரல் பொன்சேகா.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதனை தடுக்க தாம் யுத்தக் குற்றச் செயல் தொடர்பான விசாரணைகளில் கலந்து கொள்வதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் விசாரணைகளின் போது ஆஜராகத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் ஒர் அலகாக செயற்பட்ட சந்தர்ப்பங்களில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும், தனிப்பட்ட நபர்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவரேனும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அது தொடர்பில் தமக்கு தெரிந்திருந்தால் எந்த நேரத்திலும் அதனை அம்பலப்படுத்த தயார் என அவர் தெரிவித்துள்ளார். எனது அறிவுக்கு எட்டிய வகையில் ஏதேனும் சம்பவங்கள் காணப்பட்டால் அதனை அம்பலப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட வேண்டியது இந்த நாட்டு குடிமகனின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்களை வெளியிட வேண்டியது கடமையாகும் எனவும், அவ்வாறான தகவல்களை வெளியிட எவரேனும் தயக்கம் காட்டினால் அவர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்றே அர்த்தப்படும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட உலக அமைப்புக்களுடன் இலங்கை நெருக்கமாக செயற்பட்டு வருவதகாவும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அவை தொடர்பில் விசாரணை செய்து இலங்கையின் பெயரை களங்கமற்றதாக்குவது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த நடவடிக்கைகளை தாம் மேற்பார்வை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவற்றுடன் நெருங்கிச் செயற்பட்டதனால் யுத்த காலத்தின் சகல தரவுகளும் தமக்கு துல்லியமாக தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு எவருக்கும் நாம் சந்தர்ப்பம் அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்ற உத்தரவாதத்தை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

விமானப்படையினரும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனிப்பட்ட நபர்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக எவரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை எவரும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது உயிர் குறித்து கவலைப்படவில்லை எனவும், தாம் எந்தவொரு பிழைகளையும் இழைக்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Read more...

Tuesday, June 8, 2010

ஜுன் 08ஆம் திகதி - உலக சமுத்திர தினம் World Oceans Day - புன்னியாமீன்

உலக சமுத்திர தினம் World Oceans Day ஆண்டு தோறும் ஜூன் மாதம் 08ஆம் திகதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. 1992 ஜுன் மாதம் 08ஆம் திகதி பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ Rio de Janerio நகரில் நடைபெற்ற “புவி மகாநாட்டின் போது” EARTH - SUMMIT சமுத்திரங்கள் மனித சமூகத்திற்கு வழங்கும் செல்வங்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் சமுத்திரதினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் 08ஆம் திகதியிலிருந்து உலக சமுத்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என 2008 டிசம்பர் 05ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை 63/iii ம் தீர்மானத்தின்படி முடிவெடுத்துள்ளது.

சமுத்திர விவகாரங்கள் மற்றும் சமுத்திர நீதிக்குப் பொறுப்பான திணைக்களம், செய்தித் திணைக்களத்துடன் இணைந்து இத்தினத்தில் பல நிகழ்ச்சிகளையும், செயற்பாடுகளையும் செய்து வருகின்றது. விழிப்புணர்வு நடவடிக்கையாக நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளன. உலகின் சமுத்திரங்களால் நாம் பெறும் பயனை அளவிடவும், அவை எமக்கு வழங்கும் (கடல்) உணவுகள், மீன்கள், செல்லப் பிராணிகள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களையும், அவற்றின் பயன்கள், பெறுமதிகள் பற்றி உயர் மதிப்புடன் நோக்கவும் இத்தினத்தை வருடாவருடம் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது

சமுத்திரம் என்பது கூடிய பரப்பைக்கொண்ட உப்பு நீர் நிலையாகும். இது நீர்க் கோளத்தின் முக்கியமான கூறாகும். ஏறத்தாழ 71% புவி மேற்பரப்பு (361 மில்லியன் சதுர கிலோமீட்டர்) தொடர்ச்சியாக அமைந்துள்ள சமுத்திரங்களினால் மூடப்பட்டுள்ளன. இவை பல சமுத்திரங்களாகவும், பல கடல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் பரப்பளவின் அரைப் பகுதிக்கு மேல் 3, 000 மீற்றருக்கு (9, 800 அடி) மேற்பட்ட ஆழத்தைக் கொண்டன. சராசரி உப்புத்தன்மை ஆயிரத்தில் 35 பகுதி (35%) ஆகும். பொதுவாக முழுக் கடல்நீரும் சராசரியாக ஆயிரத்துக்கு 30 - 38 பகுதிகள் உப்புத்தன்மை கொண்டது.

பொதுவாகப் புவி மேற்பரப்பிலுள்ள சமுத்திரங்கள் தனித்தனியானவை எனக் கொள்ளப்பட்டு வந்தாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகும். இவ்வாறு சமுத்திரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கட்டற்ற பரிமாற்றங்களைக் கொண்ட ஒரே உலகச் சமுத்திரம் என்னும் எண்ணக்கரு கடலியலில் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றது. முதன்மையான சமுத்திரங்களின், ஒரு பகுதி கண்டங்களாலும், தீவுக் கூட்டங்களாலும், ஏனைய பகுதி இயற்கை நீதிகளினாலும் வரையறுக்கப்பட்டுள்ளன.

இன்று உலகில் பசிபிக் சமுத்திரம், அத்லாந்திக் சமுத்திரம், இந்து சமுத்திரம், அந்தாட்டிக் சமுத்திரம், ஆர்க்டிக் சமுத்திரம் என ஐந்து சமுத்திரங்கள் காணப்படுகின்றன. பசிபிக், அத்திலாந்திக் சமுத்திரங்களை புவிமையக் கோட்டை வைத்து வடக்குத் தெற்குப் பகுதிகளாகப் பிரிப்பதும் உண்டு. சமுத்திரங்களின் சிறிய பகுதிகள் கடல்கள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றைவிட நிலத்தால் சூழப்பட்ட சில உப்புநீர் நிலைகளும் உள்ளன.

மக்கள் வாழ்வில் சமுத்திரங்கள் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் சமுத்திரங்கள் சம்பந்தமாக நாம் எவ்வாறான வழிகளில் பணியாற்ற முடியும் என்பது பற்றி உலக சமுத்திர வலை பின்னலோடு சமுத்திர திட்டமும் இணைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.

அளவுக்கதிகமாக மீனினங்களை நாம் உணவாக உட்கொள்வதன் காரணமாகவும், மீன்களினதும் மற்றும் பெரும்பாலான கடல் உயிரினங்களினதும் தொகை சீக்கிரமாகக் குறைந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இன்னும் 12 வருடங்களில் மீனினங்கள் வெகுவாககக்குறைந்து விடலாம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நேரடியாகப் பங்கு கொள்வதற்கு இத்தினமானது எமக்கொரு அரிய சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது. இத்தினத்தில் புதிய மன நிலையுடன் தனிப்பட்ட மற்றும் சன சமூக நடவடிக்கைகளில் இடுபடல், கடற்கரைகளின் சுத்திகரிப்பு, கல்வி சம்பந்தமான நிகழ்ச்சி நிரல்கள், வரைதல் போட்டிகள், திரைப்பட விழாக்கள், கடலுணவுகள் பற்றிய அறிவுறுத்தல் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, எங்களின் வாழ்வு சமுத்திரங்களில் எவ்வாறு தங்கியுள்ளது என்பதை உணர்த்துவதன் மூலம் மக்களின் மனச்சாட்சியினை மேம்படுத்த முடிகின்றது. இச்சமுத்திரங்களினால் மக்களுக்கு ஏற்படும் சேவைகள் விசாலமானவை. அதே நேரம் பாரிய அழிவுகளையும் நொடிப்பொழுதில் இந்த சமுத்திரங்கள் ஏற்படுத்தி விடும.; உதாரணமாக 2004ஆம்ஆண்டு சுனாமிப்பேரலையைக் குறிப்பிடலாம். இந்த நிகழ்வு பற்றிய உணர்வுகளையும் மாற்றியமைக்க எத்தனித்தல் வேண்டும்.

சமுத்திரங்கள் எங்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். கடல் வளங்கள் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. சமுத்திரங்கள், சர்வதேச வர்த்தக பாதைகளாகவும் விளங்குகின்றன. நாம் சுவாசிக்கும் தூய காற்றினையும், உணவையும் வழங்கும் சமுத்திரங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கின்றன. உலக சமுத்திர தினத்தில் Dr. சால்ஸ் குளோவர் என்பவரின் நூலை அடிப்படையாகக் கொண்ட அவரின் முகவுரையை கொண்ட புகழ்வாய்ந்த THE END OF THE LIVE எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்படுகின்றது.

நொட்டர்டேமிலுள்ள இராஸ்மஸ் பல்கலைக்கழகமும், DELFT தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து இத்தினத்தைக் கொண்டாடுவதற்குப் பல திரைப்பட நிகழ்ச்சிகளை நடாத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை உயிரினங்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

Read more...

ஆலயவழாகத்தில் குண்டுவெடிப்பு : இருவர் பலி

சாகவக்சேரி பிரதேசத்தில் உள்ள ஆலய வழாகத்தினை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததில் ஸ்தலத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அப்பிரதேசத்திற்கு மீள் குடியேற்றப்பட்ட சுமார் 30 பொது மக்கள் இச்சிரமதான பணியினை மேற்கொண்டிருந்தாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Read more...

சீபா தொடர்பாக இதுவரை தெளிவுப்படுத்த வில்லை

இலங்கை ‐ இந்திய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ள சீபா உடன்படிக்கை சம்பந்தமாக இதுவரை பாராளுமன்றத்தை தெளிவுப்படுத்தவில்லை என ஐனநாயக தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த உடனபடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும். இலங்கையின் தேசிய உற்பத்திகள் வீழ்ச்சியடையும்.சேவைகள் மற்றும் இந்திய பொருட்களுக்கு வரி குறைப்புகள் வழங்கப்படுமானால் நாட்டில் வேலையற்றவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியூதீன் சீபா உடன்படிக்கை தொடர்பாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இது குறித்த வர்த்தக அமைச்சரே பதிலளிக்க வேண்டும் எனவும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சருக்கு பதிலளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? பிரபாகரனின் இறுதி நாட்கள்


என்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் ஆங்கில நூலின் தமிழாக்கத்தின் ஒரு பகுதி

இறுதி நாள் -19 மே 2009

இறுக்கமான முகத்துடன் விநாயகமூர்த்தி முரளிதரன் குனிந்து பார்த்தார். உடலைக் கவனித்தார். பெல்ட்டைப் பார்த்தார். அடையாள அட்டையை நோக்கினார். துப்பாக்கியை ஆராய்ந்தார். அனைத்தும் அவரது முன்னாள் தலைவருடையவை.சில கணங்களுக்குப் பின் உலகுக்கு அறிவித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார்.

கர்ணல் கருணா என்றழைக்கப்படும் முரளிதரனுக்கு அது ஒரு சோகமான தருணம். ஒரு காலத்தில் பிரபாகரனின் மெய்க்காப்பாளராக இருந்த கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பின் அடிமட்டத்தில் சேர்ந்து சிறிது சிறிதாக உயர்ந்து அந்த அமைப்பின் மிகவும் சிறந்த தளபதிகளில் ஒருவராக மிகவும் நம்பத்தகுந்தவராக ஆனார். அதே அமைப்பிலிருந்து 2004 இல் விலகினார்.

இப்போது இலங்கை அரசில் ஓர் அமைச்சராக இருக்கும் அவர், போர் நிகழ்ந்த வடகிழக்கு இலங்கையில் சிறுமண் திட்டுக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார்; உலகிலேயே மிகவும் அபாயகரமான தீவிரவாதத் தலைவர் என்று கருதப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார் என்று அரசு அறிவித்தது உண்மை தான் என்பதை உலகுக்குப் பறைசாற்ற.

அடிமட்டத்திலிருந்து ஒரு கெரில்லாப் படையை உருவாக்கி, அதில் வலுவான ஒரு தரைப்படை, திறமையான ஒரு கடற்படை, அப்போது தான் முளைத்துள்ள ஒரு விமானப்படை என அனைத்தையும் கொண்டிருந்தார் பிரபாகரன். பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியைத் தன் கைக்குள் வைத்திருந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசை ஆட்டிப்படைத்து வந்தார். அப்படிப்பட்ட வலுவான ஒரு தலைவருக்கு ஏற்பட்டது மிகச் சாதாரணமான ஒரு முடிவு. ஆனால் இலங்கை இராணுவத்துக்கு அது அவ்வளவு எளிதான ஒரு வெற்றியாக இருக்கவில்லை.

33 மாதங்கள் கடுமையான , தொடர்ச்சியான, தீவிரமான போராட்டத்துக்குப் பிறகே, பிரபாகரனை ஒரு சதுப்புநிலக் காட்டுப் பகுதிக்குள் குறுக்கி கொல்ல முடிந்தது. பிரபாகரன் கொல்லப்பட்டு இரு நாட்களுக்குப் பின் இந்தப் போரை வழி நடத்திய இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா என்னிடம் பேசினார். பிரபாகரனும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் கடைசி நேரத்தில் இராணுவத்தை ஏமாற்றி, தப்ப முயற்சி செய்து, ஒரு கடுமையான தாக்குதலை நிகழ்த்தினராம். அவரது அலுவலகத்தில் நடந்த நேர்முகத்தின் போது பிரபாகரனின் கடைசி சில மணிகளைப் பற்றி விளக்கிய பொன்சேகா இவ்வாறு கூறினார்.

18 மே இரவு, 19 காலை, விடுதலைப் புலிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து கொண்டனர். நந்திக்கடல் காயல் பகுதியில் எங்களது முதல் பாதுகாப்பு வளையத்தை தாக்கி உடைத்து வெளியேறினர். இந்த மூன்று குழுக்களுக்கும் தலைமை தாங்கியவர்கள் ஜெயம், பொட்டுஅம்மான், சூசை ஆகியோர். ஆனால் முதல் வளையத்துக்குப் பின் இரண்டாவது மூன்றாவது வளையங்கள் இருக்கும் என்பதை அவர்கள் கணிக்கத் தவறிவிட்டனர். பிரபாகரனும் அவரது மெய்க்காப்பாளர்களும் தப்பித்துவிட்டதாக நினைத்தனர். ஆனால் உண்மையில் 250 பேர் அடங்கிய புலிகள் எங்களது முதலாம், இரண்டாம் பாதுகாப்பு வளையங்களுக்குள் நன்றாகச் சிக்கிக் கொண்டனர். அன்று இரவு நடந்த கடுமையான போருக்குப் பின், கிட்டத்தட்ட அனைத்துத் தலைவர்களுமே கொல்லப்பட்டனர். 19 காலை, பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஜெனரல் பொன்சேகா நிதானமாக, சுருக்கமாகச் சொன்ன இது அனைத்துமே தொலைக்காட்சி வாசகர்களுக்கானது. இந்தியாவின் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சி என்.டி.டி.விக்காக நான் அவரைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். அவரது பேச்சில் 18,19 மே மாதத்தில் நடந்த முழு விவரமும் வெளிவரவில்லை. பின்னர் பலருடன் பேசியதில் அந்த இரு நாள்களில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டேன்.

பொன்சேகா சொன்னது போல, இறுதிப்போர் நடந்தது மிகக் குறுகிய மண் திட்டில், கிழக்கில் இந்தியப் பெருங்கடலாலும் மேற்கில் நந்திக்கடல் காயலாலும் சூழப்பட்ட பகுதி. கிழக்கில் கடற்கரை. மேற்கில் நீர் நிரம்பி இருக்கும் சதுப்பு நிலக் காடுகள். இடையில் மண் திட்டு.அந்தப் பகுதியில் ஒரு முக்கிய சாலை இருந்தது. வடமேற்கு, தென்கிழக்கு அச்சில் காயல்களை நோக்கிச் சாய்ந்தபடி செல்லும் ஏ- 35 பரந்தன்- முல்லைத்தீவு நெடுஞ்சாலை, காயலை நெருங்குவதற்கு முன் இயற்கைத் தடுப்பரண்கள், மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட தடுப்புக்கள் ஆகியவற்றைத் தாண்டித்தான் செல்ல முடியும்.
விடுதலைப் புலிகளின் கடைசி நிலத்துண்டை அணுக இராணுவம் இரு தாழ்ந்த பாலங்கள், ஒரு விரிந்த கடற்கடை, புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பல மேடுகள், பள்ளங்கள் ஆகியவற்றைத் தாண்டிச் செல்லவேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைமை மீதான இந்தக் கடைசி முற்றுகையைச் செயற்படுத்த ஜெனரல் பொன்சேகா மூன்று இராணுவப்படைப்பிரிவுகள், ஒரு சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றை இறக்கியிருந்தார். 53 வது டிவிஷனுக்கு மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தலைமை வகித்தார். கர்ணல் ஜி.வி. ரவிப்பிரியா தலைமையிலான டாஸ்க் போர்ஸ் 8 க்கும் அவரே பொறுப்பு. கடந்த 33 மாதங்களாக நான்காம் ஈழப்போரில் பெரும் பங்கு ஆற்றிய பிரிகேடியர் ஷவீந்திர சில்வாவின் 58 வது டிவிஷன் இப்போதும் முன் செல்லும் படையாக இருந்தது.

இறுதியில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தலைமையிலான 59 வது டிவிஷன் வட்டுவாகல் தரைப்பாலத்துக்குத் தெற்கே தடுப்பு விய+கம் அமைந்திருந்தது. வடக்கிலிருந்து மற்ற இரு படைப்பிரிவுகளும் தாக்குதலைத் தொடங்கியிருந்தன. இந்த மாபெரும் படைக்குவியலுக்கு முன், பிரபாகரனும் விடுதலைப் புலிகளின் தலைமையும் முற்றிலுமாகச் சிக்கிக் கொண்டனர்.

பிரபாகரன் தப்பிக்க ஒரே வழி தான் இருந்தது. காயல் வழியாக. இலங்கை இராணுவத்துக்கு அது நன்றாகவே தெரிந்திருந்தது. அதனாலேயே முன்னெச்சரிக்கையாக அங்கும் படைகளை நிறுத்தியிருந்தனர்.

இறுதிப்போர் மே 17 அன்றே தொடங்கிவிட்டது. போரில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் தகவல்களின்படி மே 17 அன்றே புலிகள் தப்பிக்க முயற்சி எடுத்தனர். ஜெயத்தின் தலைமையில் 150 புலிகள் சிறு படகுகள் மூலமும் அன்று காலை 3 மணிக்கு இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். கெப்பிலாறு தடுப்பரணுக்கு அருகில் காயலின் மேற்குக் கரையில் புலிகள் இறங்கினர்.

அங்கே 5 வது விஜயபா இன்பண்ட்ரி றெஜிமென்ட்டும் 19 வது ஸ்ரீலங்கா லைட் இன்பன்ட்ரியும் தயாராக இருந்தன. காயலின் மேற்கு கரையில் மூன்று மணி நேரம் நிகழ்ந்த கடுமையான போரில் 148 புலிகள் கொல்லப்பட்டனர். இராணுவத்துக்கும் கடுமையான உயிர்ச்சேதம். ஆனால், புலிகளால் இராணுவத்தில் தடுப்பரணை உடைக்க முடியவில்லை. இந்தச் சண்டையில் இருந்து காயலின் கரையின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, அங்கிருந்து முதியங்காட்டுக்குள் தப்பிச் செல்ல பிரபாகரனுக்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தர புலிகள் முயற்சி செய்கிறார்கள் என்பது இராணுவத்துக்குப் புரிந்துவிட்டது.

ஜெனரல் பொன்சேகா என்னிடம் சொன்னார். “விடுதலைப் புலிகள் இந்த வழியைத் தான் முதலில் பின்பற்றுவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அங்கே ஒரு பகுதியைத் தக்க வைத்திருந்தார்கள் என்றால் காயல் வழியாகத் தலைவர்கள் அனைவரும் தப்பி, முதியங்காட்டுக்குள் சென்று மறைந்திருப்பார்கள். அவர்களைப் பிடிப்பது இயலாததாகி இருக்கும். கடந்த பல வருடங்களில் அவர்களது செயற்திட்டங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதால் நாங்கள் அதனை முன்னதாகவே எதிர்பார்த்திருந்தோம்.

போர் முடியும் நிலையில், விடுதலைப் புலிகள் பிணையாக வைத்திருந்த கடைசி சிவிலியன்களும் தப்பித்து அரசுகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துவிட்டனர். அதனால் நன்கு பயிற்சி பெற்றிருந்த புலிகளைத் தாக்குவதில் இராணுவத்துக்கு கட்டுப்பாடுகள் ஏதும் இருக்கவில்லை. கொழும்பில் இருந்தபடி ஜெனரல் பொன்சேகாவே நேரடியாக நிலைமையைக் கண்காணித்து வந்தார். போர்க்களத்தில் தளபதிகள் பிரபாகரனைப் பிடிக்க நேர்த்தியான திட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தனர்.

இதற்கு இடையில், விடுதலைப் புலிகள் தோற்றுவிடுவது உறுதி, பிரபாகரன் பிடிக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்று தெரிந்த காரணத்தால் உலக ஊடகங்களைச் சேர்ந்த அனைவரும் கொழும்புக்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். நானும் மே 16 அன்று விமானத்தில் கொழும்பு சென்றடைந்தேன். அன்றோ இந்தியர்கள் அனைவரும் இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளைக் காண்பதற்காக தொலைக்காட்சிப் பெட்டியிலேயே கண் வைத்த வண்ணம் இருந்தனர்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு பத்திரிகையாளர்கள் நாங்கள் அனைவரும் போர் முனையில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள, எங்களுக்குத் தெரிந்த அனைவரிடமும் தொடர்;பு வைத்துக் கொண்டு இருக்கை நுனியில் உட்கார்ந்திருந்தோம். ஆனால் அரசுத் தரப்பிலிருந்து ஒரே ஒரு செய்தி தான் வந்து கொண்டிருந்தது. “விடுதலைப் புலித் தலைமை முழுவதும் ஒரு சிறுதுண்டு நிலத்தில் மாட்டிக்கொண்டுள்ளனர்|| அதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் கிடையாது.

மே17 இரவு ஆனதும், விடுதலைப் புலிகளிடமிருந்து கடுமையான தாக்குதலை இராணுவம் எதிர்நோக்கியது. எதிர்பார்த்தது போலவே மே 17 நள்ளிரவுக்குப் பின் புலிகளின் தாக்குதல் ஆரம்பித்தது. பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் டிபன்ஸ் எல்கே, 17 ஆம் கெமுனு கண்காணிப்பு றெஜிமெண்டின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் கீர்த்தி கொட்டாச்சியை மேற்கோள் காட்டி, இந்தத் தாக்குதல் வஞ்சகமான முறையில் நடைபெற்றது என்றது. கொட்டாச்சியின் தகவலின்படி, சிவிலியின் உடையில் இருந்த சில தீவிரவாதிகள், காயல் கரையைக் காத்துக் கொண்டிருந்த துருப்புக்களை அணுகி, தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது மே 18, அதிகாலை 2.30 மணி.

“எனது படைகள் தான் காயமுள்ளிவாய்க்கால் சிவிலியின் மீட்புப் புள்ளியில் காவல் காத்துக் கொண்டிருந்தன. காயல் கரை வழியாக வந்த சில தீவிரவாதிகள் எங்கள் பாதுகாப்பு வளையத்துக்குச் சற்று முன்னதாக, சிறு தீவுக் குழுமங்களில் ஒளிந்து கொண்டிருந்தனர். ஒரு சிறு குழு மட்டும் எங்கள் அதிகாரிகளிடம் வந்து, அவர்கள் குழுவில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்களை உள்ளே அனுமதிக்குமாறும் கேட்டனர் என்று கர்ணல் கொட்டாச்சி தெரிவித்தார். ஆனால், டாஸ்க்போர்ஸ்8 இன் தலைவர் கர்ணல் ரவிப்பிரியாவும் பிரிகேட் கமாண்டர் லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகேவும் கர்ணல் கொட்டாச்சியிடம் ஏற்கனவே விரிவாகப் பேசியிருந்தனர். விடுதலைப் புலிகள், சிவிலியன் வேடத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதைச் சொல்லியிருந்தனர்.

“அனைத்துச் சிவிலியன்களையும் ஏற்கனவே காப்பாற்றி விட்டதால், காலை விடிவதற்கு முன் யாரையும் உள்ளே அனுமதிக்கவேண்டாம் என்று நான் கூறிவிட்டேன். காலை 3 மணி ஆனபோது மீட்புப் புள்ளியில் இருந்த அதிகாரி, சிவிலியன் குழு என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் வன்முறையில் இறங்குவதாகவும் பாதுகாப்பு வளையத்தை உடைக்க முற்படுவதாகவும் தெரிவித்தார். உடனே நிலைமையைக் கட்டுப்படுத்த, வானை நோக்கி இரு முறை சுடுமாறு அவருக்கு ஆணையிட்டேன். உடனே 200 புலிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே எங்கள் பகுதியைத் தாக்கத் தொடங்கினர் என்றார் கர்ணல் கொட்டாச்சி.

இறுதி யுத்தம் நிஜமாகவே ஆரம்பித்துவிட்டது. 681வது பிரிகேடின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகே, இந்தச் சண்டையைப் பற்றிக் குறிப்பிடுகையில் சொன்னார்: “தீவிரவாதிகள் எங்களது இரண்டு பதுங்கு குழிகளைக் கைப்பற்றினர். எங்களது பாதுகாப்பு வளையத்தில் 100 மீட்டருக்கு இடைவெளியை ஏற்படுத்தினர். ஆனால் முதலாவது தாக்குதலுக்குப் பிறகு, உள்ளே நுழைந்த அனைவரும் எங்களது மெஷின் துப்பாக்கியின் வீச்சுக்குள் வந்தனர். அவர்கள் அந்தக் காயல் கரையிலேயே மடிந்தனர். எங்கள் தரைப்படையும் டாஸ்க் போர்சும் சுமார் 100 புலிகளைக் கொன்றிருப்பர். அதில் சில தலைவர்களும் அடக்கம். அவர்கள் தண்ணீருக்குள்ளிருந்து வெளிவரும் முன்னரேயே கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, காலை விடியும் போது 100 புலிகளைக் கொண்ட மற்றுமொரு குழு வட்டுவாகலுக்கு வடக்கே தடுப்பாக இருந்த 58வது பிரிவைத் தாக்கியது. இந்தப் புலிகளும் கொல்லப்பட்டனர். ஏ- 35 நெடுஞ்சாலையில் கடற்கரைப் பகுதிக்கு நீந்தி வந்த புலிகளில் பெரும்பான்மையானோர் 58வது டிவிஷனால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சதுப்பு நிலக் காடுகளில் ஒழிந்திருந்த புலிகள் சுமார் 100 பேர் டாஸ்க்போர்ஸ் 8 ஆலும் தரைப்படையினராலும் தேடிப் பிடித்துக் கொல்லப்பட்டனர்.

இராணுவத்தின் கையில் சிக்கி இறந்த முதல் போராளிப் படைக்கு பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி தலைமை தாங்கினார். அந்தக் குழுவினர் வந்து இறங்கிய இடத்திலிருந்து 250 மீட்டர் தூரம் கடப்பதற்குள்ளாகவே சுட்டுக்கொல்லப்பட்டனர். சார்லஸ் ஆன்டனியின் குண்டு துளைத்த உடல் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டது.

மே 18,

இந்தச் செய்தியை நாங்கள் தொலைக்காட்சியில் அறிவித்து, தூரத்தில் கொழும்பில் இருந்தபடி அதன் விளைவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதற்குள்ளாக வதந்திகள், அரை உண்மைகள், பொய்கள் என அனைத்தும் முடிவே இல்லாமல் பரவ ஆரம்பித்தன. அன்று முழுதும் பிரபாகரனின் இருப்பிடம் பற்றி முற்றிலும் மாறுபட்ட பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாயின. ஒரு தகவல், பிரபாகரன் முதியங்காட்டுக்குள் தப்பிச் சென்று விட்டார் என்றது. பிரபாகரன், கடற்புலிகளின் தலைவர் சூசை, விடுதலைப் புலிகளின் உளவு அமைப்புத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் கைப்பற்றப்பட்ட ஒரு அம்புலன்ஸில் ஏறித் தப்பிச் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அவர்களது உடல்கள் அடையாளம் தெரியாமல் எரிந்து போயின என்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி மற்றொரு தகவல். இந்தத் தகவல்கள் எவையுமே உண்மை இல்லை என்று பின்னர் தெரிய வந்தது.

ஒரு மூத்த இராணுவ அதிகாரி பின்னர் தெளிவுபடுத்தினார். ஏயார் மொபைல் பிரிகேடின் ஆம்புலன்ஸ் வாகனம் அது. அதனைத் தீவிரவாதிகள் கைப்பற்ற முயன்று தாக்கியபோது அது தீப்பிடித்து எரிந்தது. எரிந்து நாசமான வண்டியின் உள்ளே ஓர் உடல் உள்ளது என்று படைவீரர்கள் தகவல் தெரிவித்தனர். அந்த உடல், பார்க்க பிரபாகரனின் உடலை ஒத்திருந்தது என்றனர்.ஆனால் அந்தத் தகவல் தவறானது என்று நிரூபணம் ஆனது

ஆனால் இந் விளக்கம் வர நிறையத் தாமதம் ஆனது. எனவே 18 மே அன்று ஊடகங்களில் இருந்த நாங்கள் இந்தச் செய்தியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தோம். இத்தனைக்கும் பாதுகாப்பு அமைச்சகமும் இராணுவமும் இந்தத் தகவலை அதிகாரப+ர்வமாக உறுதி செய்ய மறுத்திருந்தன.

போர்முனையில் சுற்றிவளைக்கும் இராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல விடுதலைப் புலிகளின் தலைமை செய்த அனைத்து முயற்சிகளையும் படைகள் தடுத்துவிட்டன. நாள் முழுவதும் போர் நடக்கும் பகுதியில் எஞ்சியுள்ள புலிகளைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 350க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உடல்கள் கிடைத்தன. ஆனால் ஒவ்வொன்றும் யாருடைய உடல் என்று அடையாளம் காண்பதில் நிறையச் சிரமங்கள் இருந்தன. உளவு நிறுவனத்தைச் சேர்ந்தவவர்கள் அந்த வேலையில் இறங்கினர். தம்மிடம் உள்ள புகைப்படங்களைக் கொண்டு இறந்த ஒவ்வொருவரையும் கவனமாகப் பார்க்கத் தொடங்கினர்.

அன்று மாலைக்குள்ளாக, கொல்லப்பட்டதில் 30 க்கும் மேற்பட்டோர் விடுதலைப் புலி அமைப்பின் மேல் நிலை, இடைநிலைத் தலைவர்கள் என்று இராணுவம் அடையாளம் கண்டு கொண்டது. ஆனால் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோர் எங்குமே காணப்படவில்லை.

எனவே கண்காணிப்பு தொடர்ந்து பலமாகவே இருந்தது. பிரபாகரனும் அவரது கூட்டாளிகளும் அங்கே தான் எங்கேயோ பதுங்கியுள்ளனர் என்பதை நன்கு உணர்ந்திருந்த படைத்தளபதிகள் ஒரு துளி கூடக் கவனம் சிதறிவிடக்கூடாது. துருப்புக்கள் கண்காணிப்பை தளர்த்திவிடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தனர். அடுத்த 12 மணி நேரம், மிகவும் முக்கியமானவை.

இலங்கையைப் பொறுத்தமட்டில் 19 மே 2009 மிக முக்கியமான நாளாக இருந்தது. காலை 9.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தன் உரையைத் தொடங்கினார். தமிழில் பேச ஆரம்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆனால் ராஜபக்சவும் பிரபாகரன் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அதனால் இராணுவம் போரை முடித்துவிட்டதா என்ற கேள்விக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

ஆனால் யாருக்குமே தெரியாமல் அன்று அதிகாலையிலேயே 25 ஆண்டுகாலப் போர் அதன் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு சதுப்புநிலக் காட்டில் கடும் போர் நிகழ்ந்திருந்தது.

18 மே இரவு முழுவதும், 19 மே அதிகாலையிலும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே, கர்ணல் ரவிப்பிரியா, லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகே ஆகியோர் கரயமுள்ளிவாய்;க்கால் தரைப்பாலத்தின் மீது எப்படி இறுதித் தாக்குதலைச் செய்வது என்று திட்டமிட்டபடி இருந்தனர்.

அதிரடிப்படையினர் அதற்கு முதல் நாளே பெரும் பகுதி சதுப்பு நிலத்தை முழுவதுமாகச் சோதனை செய்திருந்தனர். அன்று 8.30 மணிக்கு மிச்சம் உள்ள சதுப்பு நிலங்களை டாஸ்க்போர்ஸ் 8ம் 4ம் விஜயபா இன்பண்ட்ரி றெஜிமெண்டும் சோதனை செய்யத் தொடங்கினர்.

லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகேயுடன் 4 வது விஜயபாவின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் ரோஹித அலுவிஹாரேயும் நேரடியாகப் படைகளுக்குத் தலைமை தாங்கி முன்னே சென்றனர். 8 வீரர்கள் கொண்ட இரு குழுக்கள், 4 வீரர்கள் கொண்ட ஒரு குழு என மூன்று குழுக்கள் சதுப்பு நிலத்தில் நீரில் அமிழ்ந்தபடி தேடுதலைத் தொடங்கின.

சார்ஜண்ட் எஸ்.பி.விஜேசிங்க தலைமையிலான முதல் குழு சதுப்பு நிலத்தில் நுழைந்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் எகிற ஆரம்பித்தன. நெஞ்சளவு நீரில், முள் புதர்களுக்குப் பின் வீரர்கள் பதுங்கவேண்டியிருந்தது. ஒரு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, விஜேசிங்கயின் படை சுமார் 50 மீட்டர் தூரம் முன்னேறியது. அங்கே ஐந்து உடல்கள் கிடந்தன. இறந்தவர்கள் உடல்களில் பிஸ்டல்களும் ரிவால்வர் துப்பாக்கிகளும் கிடந்தன.

விஜேசிங்கவுக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. அவர்கள் மிக முக்கியமான தலைவர்களுக்கு அருகில் இருக்கின்றார்கள். ஏனெனில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களினக் மெய்க்காப்பாளர்கள் மட்டுமே பிஸ்டல்களை வைத்திருக்கலாம்.

சார்ஜண்ட் உடனே தன் பிரிகேட் தலைவருக்கும் கமாண்டிங் அதிகாரிக்கும் தகவல் அனுப்பினார். சில நிமிடங்களுக்குள்ளாக இறந்த ஒருவரது உடல் வினோதனுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது.; பிரபாகரனின் உள்வட்டப் பாதுகாப்பு அணியின் மூத்த மெய்க்காப்பாளர்களிர் வினோதன் ஒருவர். “உடனேயே இது முக்கியமான கண்டுபிடிப்பு என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது| என்று லலாந்த கமகே பின்னர் தெரிவித்தார்.

தங்கள் இறுதி இலக்குக்கு மிக மிக அருகில் வந்துவிட்டோம் என்று படைகளுக்குப் புரிந்துபோனது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தன் அணியின் ஒவ்வொரு நகர்வையும் மிகவும் நெருக்கமாகப் பார்த்து வந்தார்.அவர் உடனேயே சார்ஜண்ட் விஜேசிங்கவின் ஆட்களைத் தடுப்பு விய+கத்தில் நிற்கச் சொன்னார். தப்பிச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைக்குமாறு கூறினார். 8 பேர் அடங்கிய தரைப்படைக் குழு ஒன்றும் நால்வர் அடங்கிய டாஸ்க் போர்சும் விஜேசிங்கவின் குழுவுக்குப் பக்க பலமாக உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த இரண்டாவது குழுவுக்கு சார்ஜண்ட் டி.எம்.முத்துபண்டா தலைமை தாங்கினார்.

இந்த அணியினர் முன்னேறும்போது மீண்டும் துப்பாக்கிச் சூடு ஆரம்பமானது. கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சதுப்பு நிலக்காட்டில் அமைதி.இரு அணிகளும் மிகவும் மெதுவாகப் புதர்களுக்கு இடையே முன்னேறினர். 18 இறந்த உடல்கள் கிடைத்தன.

அதில் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஒருவர். இலங்கை அரசை 30 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்தவர்.

அப்போது காலை 8.30 மணி.19 மே 2009.

உடனே இராணுவத் தளபதிக்குத் தகவல் பறந்தது. ஆனால் உலகுக்குத் தகவலை அறிவிப்பதற்கு முன் ஜெனரல் பொன்சேகா இருமுறை உறுதி செய்து கொள்ள விரும்பினார்.பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடனான ஆலோசனைக்குப் பிறகு விநாயகமூர்த்தி முரளிதரன் என்னும் கர்ணல் கருணாவை அழைத்து பிரபாகரனது உடலை அடையாளம் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் சில நாட்களுக்கு முன் இலங்கை அரசிடம் தஞ்சம் புகுந்திருந்த விடுதலைப் புலிகளின் ஊடகத் தொடர்பாளர் தயா மாஸ்டரையும் போர் முனைக்கு அழைத்த வந்தனர். இருவருமே, நந்திக்கடல் காயலில் வீழ்ந்து கிடந்த உடல் பிரபாகரனுடையதே என்று உறுதி செய்தனர். உலகின் மிகப் பயங்கரமான தீவிரவாத அமைப்பைத் தோற்றுவித்த பிரபாகரனின் கதை முடிந்துவிட்டது. விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வி முழுதானது. அப்போது தான் நாடாளுமன்றத்தில் தன் பேச்சை முடித்திருந்த குடியரசுத் தலைவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்துக்குள் இராணுவ உடையில் பிரபாகரனின் உடல் உலகின் அனைத்துத் தொலைக்காட்சி சானல்களிலும் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

யாராலும் இதனை நம்பமுடியவில்லை. விடை தெரியாத பல கேள்விகள் தான் எஞ்சியிருந்தன.

எத்தனையோ புதுமையான தீவிரவாத வழிமுறைகளைப் புகுத்திய ஒரு மனிதர், எப்படி ஒரு சாதாரண சாவைச் சந்தித்திருக்கமுடியும்? தப்பிக் அவரிடம் வழியே இருக்கவில்லையா? அவர் ஏன் பிற விடுதலைப் புலி வீரர்களைப் போல சயனைட்டைச் சாப்பிட்டு உயிர்துறக்கவில்லை? எவ்வளவோ இன்னல்கள் வந்த போதும் ஆச்சரியமூட்டும் வகையில் எதிர்த்தாக்குதல்களைப் புரிந்த ஒருவர் இம்முறை ஏன் அப்படி ஏதும் செய்து நிலைமையை மாற்றவில்லை?

அவரது நெருங்கிய கூட்டாளிகளால் அல்லது குடும்பத்தினரால் மட்டுமே இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியும். ஆனால் அவர்கள் அனைவரும் இறந்திருந்தனர்.

பிரபாகரன் இறந்து பல நாள்கள் ஆன பிறகும் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன. எப்படி பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் இராணுவம் உயிருடன் பிடித்து, அவர்களைத் துன்புறுத்தி ஒவ்வொருவராக கொலை செய்தது என்றது ஒரு வதந்தி.

மற்றொரு வதந்தியில் தங்களை இராணுவம் சுற்றி வளைத்து விட்டது என்பதை அறிந்த பிரபாகரன், தன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா(23), இளைய மகன் பாலச்சந்திரன் (11) ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டுக்கொன்றதாகச் சொன்னது.

ஆனால் இந்த வதந்திகள் எதையுமே உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரம் இலங்கை அரசும் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோர் பற்றி அமைதி காத்தது. விளைவாக வதந்திகள் பரவுவதை தடுக்க வழியில்லாமல் இருந்தது.

பிரபாகரனின் இறப்புக்கு அடுத்த வாரம், புலி ஆதரவு இணையத்தளங்களும் தமிழ் இதழ்களும் செய்தித்தாள்களும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனைப் போன்ற வேறு ஒருவரது உடல் என்றும் எழுதின.

ஆனால் இலங்கை அரசைப் பொறுத்தமட்டில் இராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியே. ஒரு மாதம் கழித்து டி.என்.ஏ. சோதனை மூலம் நந்திக்கடல் காயலில் கண்டெடுக்கப்பட்ட உடல் பிரபாகரனுடையதே என்று உறுதி செய்யப்பட்டது.

பிரபாகரனின் அழிவுக்கு காரணம் என்ன?


விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பல காரணங்களைச் சொல்லலாம். ஆனால் “கர்ணல் கருணா, பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டிய மறுநாள் என்னிடம் சொன்ன ஒரு வாக்கியம், பிரபாகரனின் சுய அழிவைத் தெளிவாக விளக்குகின்றது. தன் முன்னாள் தலைவரின் கோரமான சாவுக்காகத் தான் வருந்துவதாக என்னிடம் ஒப்புக் கொண்ட கருணா சொன்னார். “ பிரபாகரன் அமைதிக்கான மனிதர் கிடையாது. அவருக்கு அழிக்க மட்டுமே தெரியும். ஆக்க அல்ல

இந்த உலகுக்கு மனித வெடிகுண்டுகளை அறிமுகப்படுத்திய ஒருவரைப் பற்றிய மிகச் சரியான கணிப்பு இது. பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் கொல்வதற்கு ஆணையிட்டவர் பிரபாகரன். ஆயிரக்கணக்கான இளம் ஆண்களையும் பெண்களையும் கவர்ந்து தமிழ் ஈழத்துக்காகத் தம் உயிரையும் கொடுக்குமாறு தூண்டியவர் பிரபாகரன். ஆனால், எப்போது நிறுத்திக் கொள்வது என்று பிரபாகரனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

பல வருடங்களாகத் தொடர்ந்து பெற்ற வெற்றிகள், விடுதலைப் புலிகளின் தலைவருக்குத் தன் திறமை மீது அதீத தன்னம்பிக்கையையும் சுயதிருப்தியையும் வளர்த்துவிட்டது. அதனால் மாறும் நிலைமைகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பயங்கரவாதியாகவே வாழ்ந்து ஒரு பயங்கரவாதியாகவே மறைந்தார். ஒரு அரசியல் தலைவராக அவர் முன்னேறவே இல்லை.

தன் அழிவுக்கான வித்தை பிரபாகரன் தானே விதைத்தது, 2008 க்குப் பிறகான காலகட்டத்தில் தான் என்கிறார் கருணா. நார்வே முன் வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட பிரபாகரன் அதை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கவே இல்லை.

என்னுரை


இந்தோரிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்து கொண்டிருக்கும்போது தான் இந்தப் புத்தகத்தை எழுதும் எண்ணம் எனக்குத் தோன்றியது. உத்தராஞ்சல் மாநிலத்தின் மோ நகரில் உள்ள புகழ்வாய்ந்த இhணுவப்படைக் கல்லூரியில் “ இராணுவத்துக்கும் ஊடகங்களுக்கும் இடையேயான உறவு|| என்ற தலைப்பில் பேசிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். அந்தப் பேச்சின் போது, சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த போரைப் பற்றி என்னிடம் இந்திய இராணுவத்தினர் ஏகப்பட்;ட கேள்விகளைக் கேட்;டிருந்தனர். நான் இலங்கைக்குச் சென்று அங்கு நடந்த போரை , என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்காகப் பின்பற்றி செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். போர் முடிந்த காரணத்தால் அப்போது தான் இந்தியா திரும்பி வந்திருந்தேன்.

என் அனுபவங்களை இந்திய இராணுவ வீரர்களிடம் பகிர்ந்து கொண்டபோது தான் இந்தப் போரைப் பற்றிய பல விஷயங்கள் வெளி உலகுக்குச் சற்றும் தெரிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். இலங்கை இராணுவத்தின் வெற்றிக்கான சூத்திரம் என்ன என்று பலரும் கேட்டனர். இன்னும் பலர், விடுதலைப் புலிகள் தவறு செய்த இடம் எது என்று தெரிந்து கொள்ள விரும்பினர். எனவே, உலகின் மிகக் கொடூரமான ஒரு தீவிரவாதக் குழுவை எப்படி இலங்கை இராணுவம் ஒழித்துக் கட்டியது என்ற கதை எழுதப்பட்டே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

இந்தப் புத்தகம் இலங்கைப் பிரச்னையை ஆழமாக அலசும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. எப்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது படைத்தளபதிகளும் அரசியல் இராணுவச் செயல்திட்டங்களை வகுத்து, இதுவரையில் வெல்லவே முடியாமல் இருந்த ஓர் அமைப்பை வெற்றி கண்டனர் என்பது பற்றியே என் கவனம் முழுவதும் இருக்கும்.

2006 முதலாகவே போரின் முன்னணியில் என்.டி.டி.வி. தொலைக்காட்சி நிருபராக இருந்து வந்துள்ளேன். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பல நண்பர்கள் எனக்குப் பல தகவல்களை அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரது பெயரையும் வெளியில் சொல்ல அனுமதி தரவில்லை. எனவே இந்தப் புத்தகத்தில் பலரது பெயர்கள் வெளிவராது.

ஆனால் இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்தில் சிலரது பெயர்களை நிச்சயமாகச் சொல்ல முடியும். மூத்த பத்திரிகையாளர், இலங்கை விவகாரத்தைக் கூர்ந்து கவனிக்கும் நோக்கர் பி.கே. பாலச்சந்திரன், இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோதபாய ராஜபக்ச, ஜெனரல் சரத் பொன்சேகா, ஹை கமிஷனர் ரொமேஷ் ஜயசிங்க, இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் பலித கொஹேன, டெல்லி இலங்கைத் தூதரகத்தின் சஜ்ஜேஷ்வர குணரத்ன, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் லக்ஸ்மன் ஹ_லுகல்ல, இலங்கை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இலங்கை ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் துஷாரா, உபேந்திரா, தாஜ் சமுத்ராவின் பத்மனாபன், இந்தப் போரைத் தொலைக்காட்சிக்காகப் படம் பிடித்த என்னுடைய சக அலுவலகர்கள் தனபால், சுகுமார் ஆகியோர்.

இந்தப் புத்தகத்தை எழுத அனுமதியும் விடுப்பும் கொடுத்த என்.டி.டி.வி யின் ராதிகா ராய், பிரணாய் ராய், பர்க்கா தத்,சோனியா சிங் ஆகியோருக்கு நன்றி. வீட்டில், என் மனைவி; நேஹா, மகன்கள் ஹர்ஷ், உத்கர்ஷ் ஆகியோர் நான் அவ்வப்போது காணாமற் போவதையும் என் ஒழுங்கற்ற செயல்களையும் சந்தோஷமாகப் பொறுத்துக் கொண்டனர்.இலங்கையின் பாதுகாப்புப் படையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்துக் கூறுவதில் பலர் எனக்கு உதவியளித்துள்ளனர். ஏதேனும் தவறுகள் இருந்தால் அவை முழுவதும் என் பொறுப்பே.

நிதின்.ஏ.கோகலே

________________________________________________________________________________________

பின் அட்டை

இலங்கையின் கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாறு எண்ணற்ற மோதல்களாலும் படுகொலைகளாலும் குண்டு வெடிப்புக்களாலும் இராணுவ நடவடிக்கைகளாலும் மட்டுமே நிறைந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடைபெற்ற நீண்ட போராட்டத்தின் விளைவே விடுதலைப் புலிகள் இயக்கம்.

புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்தி வந்த போர், மகிந்த ராஜபக்சவின் வருகைக்குப் பிறகு புதுவடிவம் கொண்டது. ராஜபக்சவும் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட இராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவும் புதிய செயற்திட்டத்துடன் கரம் கோர்த்துக் கொண்டனர்.

இருபத்தைந்து ஆண்டுகளில் எட்டமுடியாதிருந்த வெற்றி, 33 மாதங்களில் சாத்தியமாகியுள்ளது. நெருங்கமுடியாது நெருப்பாக இருந்து வந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் வீழ்த்தப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கம் சிதறடிக்கப்பட்டது. இலங்கையின் இனப்போராட்ட யுத்தமும் ரத்த வரலாறும் முடிவுக்கு வந்திருக்கின்றது. ஈழம் என்னும் கனவும் கூட!

இறுதி யுத்தம் நடைபெற்ற தருணங்களை நேரில் பார்த்து, பலரை பேட்டி கண்டு சார்பில்லாத தொனியில் இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கின்றார் நிதின் கோகலே. இந்தியாவின் முதன்மை செய்தித் தொலைக்காட்சியான என்.டி.டி.வி யின் இராணுவ- பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பான ஆசிரியர் இவர். இலங்கையில் இராணுவத் திட்;டங்களை விளக்கமாக விபரிக்கும் இந்தப் புத்தகம் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களையும் நுணுக்கமாக ஆராய்கின்றது.

ஆசிரியரைப் பற்றி

போராட்டங்கள், புரட்சி, போர்கள் ஆகியவற்றை ஆழ்ந்து படிக்கும் நிதின் ஆனந்த் கோகலே, 26 ஆண்டுகளாக போராளிக்குழுக்கள் பற்றியும் இராணுவ நடவடிக்கைகள் பற்றியும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு, நக்சல் காடுகள் ஆகிய கடினமான இடங்களில் இருந்து பதிவு செய்துள்ளார்.இதற்கு முன் இரு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தில் கடந்த பத்தாண்டுகளில் நடந்துள்ள இரு பெரும் போர்களான 1999 இந்தியா- பாகிஸ்தான் கார்கில் போர், இலங்கையில் 33 மாதங்கள் நடந்த நான்காம் ஈழப்போர் ஆகியவற்றை நேரில் பார்த்து தொலைக்காட்சிக்காக செய்திகளை அனுப்பிய ஒரே இந்தியப் பத்திரிகையாளர் இவராக மட்டுமே இருக்க முடியும்.

என்.டி.டி.வி. சானலின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விஷயங்கள் ஆசிரியராக பணியாற்றும் இவர், இந்தியாவின் அண்டை நாடுகளில் நடக்கும் விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்கின்றார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com