Friday, June 4, 2010

அட்டப்பள ஸ்ரீ சித்திவிநாயகர் மகா கும்பாபிசேகம்.

அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்பள்ளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிசேகம் இன்று வெள்ளிக்கிழமை 4ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விமரிசையாக நடைபெற்றது. பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் ஆசியுரை வழங்குவதையும் பரிபாலன சபையினர் ஆசீர்வாதம் பெறுவதையும் பக்தர்களையும் ஆலயத் தோற்றத்தையும் படங்களில் காணலாம்.

அதேநேரம் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் கனிஸ்ட விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. போட்டியில் முதலிடம் பெற்ற கோபாலரெத்தினம் ஸ்நேகன் அதற்கான பரிசை சேனைக்குடியிருப்பு சோவோ அமைப்பின் பணிப்பாளரும் வங்கி முகாமையாளருமான கந்தையா சத்தியநாதனிடமிருந்து பெறுவதையும் பிரதி அதிபர் த.பூவேந்திரன் ஏனைய வீரர்களையும் படங்களில் காணலாம்






(விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்)

Read more...

எமது தேவைகளை கவனியுங்கள் : தருமபுரம் மக்கள் சிறிதரனிடம் விசனம்.

ஏகப்பட்ட உறுதிமொழிகளுடன் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்று தெரிவாகியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழமைபோல் தலைநகரில் குடிகொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைவிடும் தம் பணியை சிறப்பாக செய்துவருதையிட்டு விசனம் அடைந்துள்ள தருமபுரம் மக்கள், கடந்த தேர்தலில் பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அப்பிரதேசத்திற்கு தனது பிரத்தியேக தேவைக்காக சென்றபோது அவரை சுற்றிவளைத்து எமது வாக்குகளை பெற்று பாராளுமன்று சென்றீர்களானால் எமது தேவைகளிலும் கவனம் செலுத்துங்கள் என மிகவும் கண்டிப்பாக கேட்டுக்கொண்டதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் மக்களின் இவ் அதிருப்தியை இருட்டடிப்புச் செய்த பா.உ தான் அப்பிரதேசத்திற்கு சென்றபோது மக்கள் தன்னிடம் தமது தேவைகள் குறித்து வேண்டுகோள் விடுத்ததாக தனது சகோதரனின் இணையத்தளமூடாக பரப்புரை செய்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் வன்னியில் புலிகளியக்கதிலிருந்த உயிரிழந்த உறுப்பினர்களுக்கான நினைவுச் சிலைகள் மற்றும் நினைவாலயங்களை தொடர்ந்தும் தனது பிரதேசத்தில் வைத்துக்கொள்வதற்காக உழைப்பேன் என அவர் தெரிவித்திருந்தமை தொடர்பாகவும் அவரிடம் மக்கள் வினவியாதாகவும் தெரியவருகின்றது.

Read more...

ததே.கூ இந்தியாவின் விருப்பத்திற்கு செயற்படுகின்றமையாலேயே நாம் பிரிந்துள்ளோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனை கருத்திலெடுக்காது இந்திய அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படுகின்றமையாலேயே தாம் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்ல நேரிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 1ம் திகதி முதல் 30ம் திகதி வரை புதிய கட்சிகளை பதிவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருப்பதை அடுத்து தாம் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி எனும் கட்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிக்காந்தாவின் பெயரை தலைவராகவும் தனது பெயரை செயலாளர் நாயகமாகவும் போட்டு பதிவு செய்து கொள்ளவுள்ளதாக மேலும் கூறியுள்ளார்.

Read more...

Thursday, June 3, 2010

ஐ.நா பாதுகாப்பு சபையில் இலங்கைப் போர்குற்ற விவகாரம் விவாதிக்கப்படமாட்டாது.

இலங்கை விடயம் தொடர்பில் தற்போது ஐ நா வின் பாதுகாப்புச் சபையில் பரிசீலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோல்வியடையச் செய்துவிட்டதாக இலங்கை அரசு கூறி வரும் நிலையில், அப்போது இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் தேவை என்று குரல்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் அது குறித்து பரிசீலனைக்கான முன்னெடுப்புகள் இப்போதைக்கு இல்லை என்று தற்போது பாதுகாப்பு சபைக்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள மெக்ஸிகோ கூறியுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 14 ஆவது அமர்வில் தொடக்க உரையாற்றிய அதன் ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் போரின் இறுதிகட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை தேவை என்று கூறியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரும் இது தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க ஒரு வல்லுநர் குழுவை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதேவேளை இப்படியான அனைத்து கோரிக்கைகளையும் இலங்கை அரசு எதிர்த்தும் நிராகரித்தும் வந்துள்ளது.

இதன் பின்புலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை தற்போது ஏற்றுள்ள மெக்ஸிகோவின் தூதர் க்ளாட் ஹெல்லார் செய்தியாளர்களை சந்தித்த போதே, தற்போது பாதுகாப்பு சபையில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்கும் முன்னெடுப்புகள் இல்லை என கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையின் விவாத அட்டவணையில் இந்த விடயம் இல்லை. எனவே அது குறித்து விவாதிப்பதற்கு உறுப்பினர்களிடையே விருப்பமின்மையும் தயக்கமும் இருக்கின்றன.

எனவே பாதுகாப்பு சபை இது குறித்து நடவடிக்கையில் ஈடுபடுவதில் எதிர்ப்பு இருக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் தலைமைச் செயலர் நடவடிக்கை எடுக்கலாம் என்று நாம் கருதுகிறோம் என க்ளாட் ஹெல்லார் தெரிவித்துள்ளார்.

Read more...

விமல் வீரவன்சவின் கிரீடம் பறிபோகின்றது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களை கட்சிகளின் சின்னங்களாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்டத்தினை தான் உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் விமல் வீரவன்ச தலைமையலான தேசிய சுதந்திர முன்னணின் சின்னமான கிரீடத்திற்கு பதிலாக வேறு சின்னமொன்றை தேர்ந்தெடுக்குமாறு விமல் வீரவன்சவிற்கு தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

தேர்தல் ஆணையாளரினால் விடுக்கப்பட்டுள்ள இவ்வுத்தரவை ஏற்றுள்ள விமல் வீரவன்சவின் கட்சியினர் சின்னமொன்றினை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்

Read more...

நேபாளத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையில் இலங்கை மூன்றாமிடம்.

நேபாளத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையில் அமெரிக்கா, தென் கொரியாவிற்கு அடுத்த நிலையில் இலங்கை உள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கைக்கான பங்களாதேஷ தூதுவர் Mr.Mahbubuzzamam அவர்கள், பிரதமர் டிஎம் ஜெயரத்ன அவர்களை சந்தித்து பேசியபோது இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டாளர்கள் றப்பர் உற்பத்திபொருட்கள், ஆடைகள் தொழிற்சாலைகள் , இரசாயனப் பொருட்கள் என்பவற்றில் தமது முதலீடுகளை செய்துள்ளதாகவும், இலங்கையர்களின் நிறுவனங்கள் பல தமது நாட்டில் மிகவும் ஆரோக்கியமாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இருநாடுகளுக்குமான உறவு மிகவும் சுமுகமாக அமைந்துள்ளதாகவும் இவ்விடயத்தில் தமது நாடு திருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுமார் 2000 இலங்கையர்கள் தமது நாட்டில் ஆடைத்தொழிற்சாலைகளில் தொழில் புரிவதாகவும் தாம் ஒவ்வொரு மாதமும் இலங்கையர்களுக்கான 400 தொழில் வீசாக்களை வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ள அவர் தமது மருத்துவ பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்கள் பயின்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தினை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 8ம் தேதி இந்தியா சென்றடையவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருவதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகம் முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை குடியரசுத் தலைவர் ராசபக்சே ஜூன் 8ஆம் நாள் இந்திய அரசின் அழைப்பின் பேரில் வர இருக்கிறார்.

அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் ராசபக்சேயை போர்க்குற்றவாளி என முடிவு செய்து, சர்வதேச நீதிமன்றத்திற்குமுன் அவர் நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது.

அய்.நா. பேரவையின் பொதுச்செயலாளர் பான்கீமூன் இலங்கையில் நடந்த போர் அத்துமீறல்கள் குறித்து அய்.நா. விசாரனை மன்றம் ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். பல்வேறு நாடுகளும் ராசபக்சேயின் போர்க்குற்றம் குறித்து விசாரனை நடத்தப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.

உலக சமுதாயத்தினால் போர்க் குற்றம் புரிந்தவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள ராசபக்சேவுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பை இந்திய அரசு அளிக்க இருப்பதை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசின் இந்த செயல் தமிழக மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை ராசபக்சேவுக்கு தெரிவிக்கும் வகையில் ஜூன் 8ஆம் நாள் காலை 10மணிக்கு சென்னையில் இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன்பாக மாபெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதே நாளில் அதே நேரத்தில் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகள், அனைத்துத் தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளாகக் கலந்துகொண்டு நமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read more...

முல்லை முஸ்லிம்களை மீண்டும் மீள்குடியமர்த்த உத்தரவு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முல்லை மாவட்ட த்துகான மாநாட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கபடுகின்றது.

எதிர்வரும் 7ஆம் திகதி இவர்களை மீள்குடியமர்த்த பணிக்கப்பட்டுள்ளது . அதே வேளை மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ கடந்த வாரம் இந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகள் பாரியளவில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கின்றனர். இவற்றை அகற்றும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே அதிகளவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளமை இப்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும் அந்த மாவட்டத்தில் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான அறிக்கை எமக்குக் கிடைத்த பின்னரே அகதி முகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியும் என தெரிவித்தமை குறிபிடதக்கது.

முல்லைத்தீவு மாட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீண்டும் மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இம்மாநாட்டின் போது முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக தெரிவிக்க படுகின்றது. இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தலமையில் இடம்பெற்ற உயர் மாநாட்டிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் கண்ணி வெடிகளை மிக விரைவில் அகற்றி மக்களை மீள்குடியமர்த்துமாறும் வியாபார நோக்கத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வரும் மக்களை பிரதேச செயலகங்களில் பதிவு செய்து அரசாங்க அதிபர் ஊடாக அதனை இராணுவத்திடம் சமர்ப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகின்றது .

Read more...

ஜனாதிபதியுடன் பேசத் தயார்-சம்பந்தர்

இனப்பிரச்சினை தீர்வுத் திட்டம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக உள்ளதாக அதன் நாடாளுமன்ற குழுவின் தலைவர் இரா சம்பந்தர் கூறுகிறார். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அவர்களுடன் தான் இது தொடர்பில் பேச்சு நடத்தியதகவும் அவர் கூறுகிறார்.

பேராசிரியர் பீரிஸுடனான சந்திப்பின் போது, அரசியல் தீர்வு தொடர்பாகவும் ஒரு ஆரம்ப முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது எனவும் சம்பந்தர் தெரிவிக்கிறார். இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது என்றாலும், இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை அவரை சந்திப்பதற்கான அழைப்பு அரச தரப்பிலிருந்து வெளிவரவில்லை என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

இலங்கை வெளியுறவு அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில், தற்போது தகவல்களை வெளியிடுவது பொருத்தமாக இருக்காது என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகள் மூலமாக ஏற்படுகின்ற ஒரு தீர்வு என்ன விதமாக அமையலாம் என்பது பற்றி அந்தக் கூட்டத்தில் ஒரு ஆரம்ப பரிசீலனை செய்யப்பட்டதாக மட்டுமே தற்போது கூற இயலும் என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை காணும் நோக்கில், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதை நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தாங்கள் தெரிவித்திருந்ததை இரா சம்பந்தர் சுட்டிக்காட்டுகிறார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது பிரேரணைகளை இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு முன்னர் அவரிடம் விவாதிக்க வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது என்று வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

எனினும் பல விடயங்கள் தொடர்பில் தமது தரப்பு இந்தியாவுடன் பேசி வருவதாகவும் அவர் கூறுகிறார். இலங்கை ஜனாதிபதி இம்மாதம் 8 ஆம் தேதி புதுடில்லியில் இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks BBC

Read more...

9வது ஆவது ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அமைசர் பீரிஸ் தலைமையில் இலங்கைக்குழு.

பாதுகாப்பு தந்திரோபாய ஆய்வுக்கான சர்வதேச நிறுவகத்தின் ஒன்பதாவது ஆசிய பாதுகாப்பு உச்சிமாநாடு நாளை சிங்கப்பூர், சங்கிரி-லா ஹொட்டலில் ஆரம்பமாகவுள்ளது. சங்கிரி-லா பேச்சுவார்த்தை என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவொன்று நாளை சிங்கப்பூர் பயணமாகவுள்ளது. இக்குழுவில் விமானப் படைத்தளபதி எயார் மாஷல் றொஷான் குணத்திலக, இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா ஆகியோருடன் பல சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசியா மற்றும் பசுபிக் வலையங்களைச் சேர்ந்த 28 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

நடைமுறைச் சாத்தியமான பாதுகாப்புக்கான ஒத்துழைப்புக்களை வளர்த்தல், நம்பிக்கையினைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்ட கலந்துரையாடல்களில், ஆசிய - பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் ஈடுபடக்கூடிய வகையிலான ஒரு மன்றத்தின் தேவைக்கேற்ப இந்த சங்க்ரி - லா பேச்சுவார்த்தை 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

அந்தவகையில் இவ்வருடம் இடம்பெறவுள்ள ஒன்பதாவது உச்சிமாநாட்டின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான மோதலின் இலங்கை பெற்ற வெற்றி, அந்த அனுபவங்கள் மற்றும் வெற்றியின் பின்னரான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் விளக்கமளிக்கப்படவுள்ளன.

அத்துடன் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள அவுஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துரயாடவுள்ளதுடன், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர், கல்வி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அந்நாட்டு சட்டமா அதிபர் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பாதுகாப்பு தந்திரோபாய ஆய்வுக்கான சர்வதேச நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சிமாநாட்டில் லண்டன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், புரூனை, கம்போடியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மன், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், லாவோஸ், மலேசியா, மொங்கோலியா, பர்மா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கொரியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்கள் ,பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பாகிஸ்தானிடம் இந்தியாவைவிட அதிக அணு ஆயுதங்கள்!

இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவிடம் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், பாகிஸ்தானிடம் 70 முதல் 90 அணு ஆயுதங்கள் வரை இருப்பதாகவும் ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த சர்வதேச அமைதிக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தானால் மிகக் குறைவான கால அவகாசத்தில் 100 அணு ஆயுதங்களைத் தயாரித்துவிட முடியும். சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் உள்ளதாகத் தெரிகிறது. சீனாவின் உதவியோடு பாகிஸ்தான் இப்போது அமைத்து வரும் குஷாப் அணு மின் நிலையம் கட்டி முடிக்கப்பட்டுவிடடால், அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான பாகிஸ்தானின் புளுட்டோனியம் உற்பத்தி 7 மடங்காக அதிகரித்துவிடும்.

அமெரிக்கா வழங்கிய எப்-16 போர் விமானங்கள் மற்றும் கஸ்நவி, ஷகீன் ஆகிய ஏவுகணைகளைத் தான் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல பாகிஸ்தான் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான புளுட்டோனியத்தை (Pu-239) பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள சைரஸ், துருவா அணு உலைகள் பூர்த்தி செய்கின்றன.

உலகம் முழுவதும் மொத்தம் 22,600 செயல்படும், செயலிழந்த, பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் உள்ளன. இதைத் கொண்டு ஒட்டுமொத்த பூமியை பலமுறை அழிக்கலாம்.

ரஷ்யாவிடம் 12,000 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில் 4,630 அணு ஆயுதங்கள் ஏவத் தயார் நிலையில் ஏவுகணைகளிலும் போர் விமானங்களிலும் பொறுத்தப்பட்டுள்ளவை. அமெரிக்காவில் 9,600 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில் 2,468 அணு ஆயுதங்களை எந்த நொடியிலும் ஏவலாம். இந்த இரு நாடுகளும் இவற்றின் எண்ணிக்கையை 3ல் ஒன்றாகக் குறைக்க முடிவு செய்துள்ளன.

பிரான்சிடம் 300, இங்கிலாந்திடம் 225, இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன. வட கொரியாவிடம் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான அளவுக்கு புளுட்டோனியம் தயாராக உள்ளது.

இந்தியாவிடம் உள்ள ஹைட்ரஜன் அணுகுண்டு எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று தெரியவில்லை. போக்ரானில் 1998ம் ஆண்டு இந்தியா நடத்திய ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை முழு வெற்றி பெறவி்ல்லை என்ற வாதம் உலகளவில் உள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைத் தயாரித்துள்ள நிலையில் இந்தியாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையோ, நீர்மூழ்கியிலிருந்து பாயும் ஏவுகணையோ இல்லாதது பெரும் குறையாகும்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கைப்பற்ற தீவிரவாதிகள் கடுமையான முயன்று வருகின்றனர். அவை எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளன என்பது கவலை தரும் விஷயம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more...

காசாவிற்கு கப்பல் தொடரணியில் சென்ற ஆதரவாளர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளமையானது சீற்றத்தைத் தூண்டியுள்ளது

(By Chris Marsden and Jean Shaoul) காசாவிற்கு உதவுவதற்கு கப்பல் தொடரணியில் சென்றிருந்த ஆதரவளார்களில் கிட்டத்தட்ட 19 பேரை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளமையானது சர்வதேச அளவில் சீற்றமான எதிர்ப்புக்களை தூண்டியுள்ளது. ஆனால் ஒபாமா நிர்வாகம் இந்த இரத்தம் தோய்ந்த நடவடிக்கைக்கு உட்குறிப்பான ஒப்புதலை அடையாளம் காட்டி, இஸ்ரேலிய நடவடிக்கையைக் குறைகூறாமல் உயிரழப்புக்கள் பற்றி வெறுமனே வருத்தம் தெரிவித்துள்ளது.

தொண்டு நடவடிக்கையாளர்களையும் முக்கியமான உதவிப் பொருள்களையும் அதிகாலையில் கொண்டு வந்திருந்த பல கப்பல்கள் தொடரணியை, கமாண்டோக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் அதிகாலையில் படகுகளின் தளத்தில் இறங்கித் தாக்கினர். இறப்பு எண்ணிக்கையானது 10ல் இருந்து 20 வரை என்று தகவல்கள் கூறியுள்ளன. அதில் உதவி ஏற்பாட்டாளர்கள் குறைந்தது 30 என்று எண்ணிக்கையைக் கூறுவதுடன் 50 பேருக்கும் மேலாக காயமுற்றிருப்பர் எனக்கூறியுள்ளனர். காயமுற்றவர்களில் இஸ்ரேலின் தீவிர இஸ்லாமிய இயக்கத் தலைவரான ஷேக் ரயிட் சலாவும், லெபனான் நாட்டு மனிதாபிமானப் பணிக்குழுவின் தலைவ ர் டாக்டர் ஹனி சுலைமானும் இருந்தனர்.

கப்பலில் மீது ஏறி தலைமை மாலுமியைக் காயப்படுத்தியதோடு இஸ்ரேலிய கடற்படைப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கப்பலில் இருந்து அல்-ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதன் ஒளிபரப்பு ஹீப்ரூ மொழியில் ஒரு குரல் “அனைவரும் வாயை மூடுங்கள்” என்ற கூறுவதுடன் முடிவடைகிறது. தொடரணியில் முதலில் வந்த Mavi Marmara என்னும் துருக்கியக் கப்பலின் மேல்தளத்தில் எடுக்கப்பட்ட துருக்கியத் தொலைக்காட்சிப் படங்கள் மக்கள் காயமுற்று தளத்தில் வீழ்ந்து கிடப்பதைக் காட்டுகிறது. ஹிஜப்பில் இருக்கும் ஒரு பெண் இரத்தக்கறை நிறைந்த தூக்குப் படுக்கையை பிடித்திருப்பது காணப்படுகிறது.

தன்னுடைய படைவீரர்கள் தாக்கப்பட்டதாகவும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன என்றும் இஸ்ரேல் கூறுகிறது. “எங்கள் படைகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடந்தது. அவர்கள் வன்முறையைத் பாவித்தனர், அது 100 சதவிகிதம் தெளிவு” என்று இஸ்ரேலிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் பிபிசி இடம் கூறினார். கப்பல் சர்வதேச நீர்நிலையில் இருந்ததால் இஸ்ரேலியத் தாக்குதல் கடற்கொள்ளை எதிர் நடவடிக்கையாக இருந்தது மேலும் தளத்தில் இருந்தவர்கள் எதிர்க்கும் உரிமையைப் பெற்றிருந்தனர் என்ற உண்மை பற்றி அவர் ஏதும் கூறவில்லை.

எப்படியும், தொடரணிக்கு ஏற்பாடு செய்திருந்த Free Gaza Movement ன் செய்தித் தொடர்பாளர் ஆட்ரி பொம்சே பிபிசியிடம் “உண்மையான தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டது பற்றி எவ்விதச் சான்றும் இல்லை” என்றார்.

“கத்திகள், கோடரிகள் அல்லது மற்றவற்றைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது துருக்கியக் கப்பலில் நடந்ததை அப்படியே நேரடியாகக் காட்டுவது, நீங்கள் இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் சுடுவதைக் காண்கிறீர்கள். அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டிற்கு சான்றுகள் ஏதும் இல்லை.” என்றார் பொம்சே.

காசா விடுதலை இயக்கத்தின் (Free Gaza movement) செய்தித் தொடர்புப் பெண்மணியான கிரேடா பேர்லின் கூறினார்: “கப்பல் மேல்தளத்திற்கு வந்து சாதாரணக் குடிமக்களை அவர்கள் தாக்கியுள்ளது இழிந்த செயலாகும். நாங்கள் சாதாரணக் குடிமக்கள். குடிமக்களை எப்படி இஸ்ரேலிய இராணவத்தினர் இப்படித் தாக்கலாம்? பாலஸ்தீனியர்களைப் பொறுப்பற்ற முறையில் தாக்கலாம் என்பதால் அவர்கள் எவரையும் அவ்வாறு தாக்கலாம் என்று நினைக்கிறார்களா?’

பணியில் ஈடுபாட்டிருந்த ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சைப்ரஸ் நாட்டு உறுப்பினர் Kyriacos Triantafyllides, “தொண்டு செயற்பாட்டாளர்கள் “இஸ்ரேலிடம் இருந்து வலுவான பின்விளைவை எதிர்பார்த்தனர், ஆனால் படையெடுத்துவந்து இராணுவ நடவடிக்கை போல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.” என்றார்.

கப்பல்கள் மூன்று துருக்கியக் கொடியின் கீழ் இருந்தவை, இதில் முக்கிய பயணிகள் கப்பலும் அடங்கியிருந்தது. கப்பல் தொடரணி ஒரு துருக்கிய உதவிக் குழுவினால் வழிநடத்தப்பட்டது. முக்கிய கப்பலான மாவி மர்மராவில் இருந்த பெரும்பாலான பயணிகள் துருக்கியர்கள் ஆவர். இஸ்ரேலின் நடவடிக்கை “கடற்கொள்ளைக்கு ஒப்பானது” என்று துருக்கிய அதிகாரி ஒருவர் கூறினார். இஸ்ரேலிய குற்றச்சாட்டான, கப்பலில் இருந்த காசாப் பகுதிக்குச் செல்ல இருந்தவர்கள் சிலர் ஆயுதம் ஏந்தியிருந்தனர், இஸ்ரேலிய வீரர்களை தாக்கினர் என்பதை மறுத்தார்.

துருக்கியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்தான்புல்லின் உள்ள இஸ்ரேலிய துணைத் தூதரகத்தைச் சூழ்ந்து கொள்ள முயன்றனர். பின் நகரத்தின் முக்கியச் சதுக்கத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். லண்டனில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய அகதிகளும் செயற்பாட்டாளர்களும் லெபனான், நெடுகிலும் ஆர்ப்பரித்து, “எங்களுக்கு ஆயுதம் கொடுங்கள், ஆயுதம் கொடுங்கள், காசாவிற்கு அனுப்புங்கள்” என்று கோஷமிட்டனர்.

சிரியாவிலும் ஜோர்டானிலும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

பல உத்தியோகபூர்வ ஆதார இடங்களில் இருந்தும் கண்டனங்கள் வெளிப்பட்டுள்ளன. இஸ்ரேலின் நெருக்கமான நட்பு நாடாகிய துருக்கி அதன் தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்டு, மூன்று கூட்டு இராணுவப் பயிற்சி நடப்பதாக இருந்தவற்றையும் இரத்து செய்தது. இஸ்ரேலின் தூதர் காபி லெவி துருக்கிய வெளியுறவு அமைச்சரகத்திற்கு அழைக்கப்பட்டார். “குடிமக்களை இலக்கு வைத்த விதத்தில் இஸ்ரேல் மீண்டும் மனித வாழ்வு, சமாதான முயற்சிகளுக்கு அதன் அவமதிப்பைக் காட்டியுள்ளது…. இந்த கண்டிக்கத் தக்க நிகழ்வு பொதுக் கடலில் நடந்தது, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும், இது நம் இரு நாடுகளின் உறவுகளில் சீர்செய்யமுடியாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என்று அமைச்சரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மற்றும் லெபனிய பிரதம மந்திரி சாத் ஹரிரியும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, இஸ்ரேலின் நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் ஒரு போரைத் தூண்டக்கூடும் என்று எச்சரித்தனர். சிரியாவும் லெபனானும் “Freedom Flotilla தளத்தில் நிராயுதபாணிகளான குடிமக்கள் மீது மிருகத்தனத் தாக்குதலை நடத்திய விதத்தில் இஸ்ரேல் இழிந்த குற்றத்தைச் செய்துள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

காசாவில் இருக்கும் ஹமாஸ் அரசாங்கத்தின் தலைவரான இஸ்மெயில் ஹனியே, ஐ.நா. தலைமைச் செயலாளர் பான்கி மூனைச் சந்தித்து “இக்கப்பல்களில் இருந்த ஒற்றுமைக் குழுக்களின் பாதுகாப்பை காக்க வேண்டும் என்ற பொறுப்பை ஏற்குமாறும், அவர்கள் காசாவிற்கு வருவதைப் பத்திரமாக ஏற்பாடு செய்யுமாறும்” தெரிவித்தார். முஸ்லிம்களும் அரேபியர்களும் இத்தாக்குதலுக்கு விடையிறுக்க “எழுச்சி” பெறுமாறும் அவர் கூறினார்.

பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்நிகழ்வை “ஒரு படுகொலை” என்று விவரித்தார். பாலஸ்தீனியத் தலைமை பேச்சுவார்த்தை நடத்துபவரான சாயிப் எரக்கட் இத்தாக்குதல் “ஒரு போர்க்குற்றம் ஆகும்” என்றார்.

அரபு நாடுகள் குழுவின் தலைமைச் செயலரான அம்ர் மூசா இன்று ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, இத்தாக்குதல் “பயங்கரவாதச் செயல்” என்றார்.

கப்பலில் பயணிகளைக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலியத் தூதர்களை அழைத்து விசாரணை வேண்டும் எனக் கோரின. அயர்லாந்து அரசாங்கம் உதவித் தொடரணியில் சென்றிருந்த அதன் குடிமக்கள் எட்டு பேர் பற்றி “பெரும் கவலையை” வெளியிட்டுள்ளது. வெளியுறவு மந்திரி மைக்கேல் மார்ட்டின், “15 பேர் கொல்லப்பட்டது, 50 பேர் காயமுற்றது என்றும் தகவல் உறுதியானால், அது காசாவிற்கு மிகவும் தேவைப்படும் பொருட்களை எடுத்துச் சென்றிருந்த மனிதாபிமானக் குழுமீது இஸ்ரேலிய இராணுவம் எடுத்த நடவடிக்கை முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல” என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாள் பான் கி-மூன் “காசாவிற்குப் பொருட்களை எடுத்துச் சென்றிருந்த படகுகள் மீது நடத்திய தாக்குதல்களில் கொலைகளும் காயங்களும் ஏற்பட்டன என்ற தகவல்களினால் தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறினார். ஐரோப்பிய ஒன்றியம் என்ன நடந்தது என்பது பற்றிச் சரியாகத் தெரிய ஒரு விசாரணை வேண்டும் என்று அறிக்கை விடுத்தது. “உயிரிழப்புக்கள், காயங்கள் பற்றித் தான் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும், இச்சோகத்தைச் சூழ்ந்த நிலைமையை அறித்து கொள்ள முயல்வதாகவும்” அமெரிக்கா கூறியுள்ளது.

கனடாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேடன்யாகு அதை இடை நிறுத்தும் கட்டாயத்திற்கு உட்பட்டார். மேலும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவை இன்று சந்திப்பதாக இருந்ததையும் இரத்து செய்தார். அரசியல் அளவில் சங்கடத்திற்கு உட்பட்ட வெள்ளை மாளிகை இதற்கு உத்தரவிட்டிருக்கலாம்.

இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் ஆக்கிரோஷ அறிக்கைகளை வெளியிட்டவகையில் இதை எதிர்கொண்டார். பாதுகாப்பு மந்திரி எகுட் பரக் இறப்புக்களுக்குக் காரணம் காசா உதவிக் கப்பல் தொடரணிக்கு ஏற்பாடு செய்தவர்கள் என்று குற்றம் சாட்டினார். “காசாவில் பட்டினி ஏதும் இல்லை என்றும் அங்கு மனிதாபிமான வகை நெருக்கடி ஏதும் இல்லை” என்றும் உறுதியாகக் கூறினார். இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் துணைத் தலைவர் டானி டானன் இத்தொடரணியில் “குற்றம் சார்ந்த பயங்கரவாதிகள்” இருந்தனர் என்றார்.

இஸ்ரேல் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காசா எல்லைப் பகுதி முழுவதும் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டதும் அதில் அடங்கும். Haaretz ல் எழுதிய அமோஸ் ஹாரெல், “சில சூழ்நிலையில் இரு தரப்பினரும் நிலைமையைச் சமாதானப்படுத்தம் நடவடிக்கைகளில் தோற்றால், அது ஒரு மூன்றாம் இன்டிபடா அல்லது பாலஸ்தீனிய எழுச்சியில் முடியலாம்” என்றார்.

இத்தாக்குதல் சர்வதேச நீர்நிலையில் நடைபெற்றது. துருக்கிய கடல்துறை உதவிச் செயலாளர் ஹாசன் நைபொக்ளு, “கப்பலின் தலைமை மாலுமி எங்களை 4.30 அதிகாலையில் கூப்பிட்டு, இஸ்ரேலிய கடற்படை அவர்களை வழிமறித்தது என்றார். பலர் காயமுற்றனர் என்பதை நாங்கள் அறிந்தோம். அதன்பின் கப்பல்களுடன் எங்களுக்கு தொடர்பின்றிப் போய்விட்டது….

இஸ்ரேலானது கப்பல்களை தரையில் இருந்து 70 கடல் மைல்களுக்கு அப்பால் வழிமறித்தது. சர்வதேச சட்டத்தின்கீழ் அவ்வாறு செய்யும் உரிமை அவர்களுக்குக் கிடையாது” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

தொடரணி வரிசையில் மற்ற இரு கப்பல்கள் அமெரிக்கக் கொடியின்கீழ் இருந்தன. 6 கப்பல்களைக் கொண்ட அணி வரிசை 10,000 டன்கள் உதவிப் பொருட்களை எடுத்துக் கொண்டு, ஞாயிறன்று துருக்கிக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள வடக்கு சைப்ரஸில் இருந்து புறப்பட்டது. இவை பின்னர் 600 தீவிர ஆர்வலர்களைக் கொண்டிருந்த மாவி மர்மராவின் தலைமையில் வந்தன. கப்பல்களில் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் துருக்கியர் ஆவர். ஆனால் பயணிகளில் ஐரோப்பியர்களும், அமெரிக்க குடிமக்களும்—வட அயர்லாந்து சமாதான செயலர் நோபல் பரிசு பெற்ற Mairead Corrigan Maguire போன்றோரும் இருந்தனர்.

தொடரணியின் மீதான தாக்குதல் காசாவை முற்றுகையிடும் முடுக்கிவிடப்பட்டுள்ள நடவடிக்கைகளில் சமீபத்தியது ஆகும். இதில் இஸ்ரேலும் எகிப்தும் ஒத்துழைக்கின்றன. ஏனெனில் ஹமாசின் இஸ்லாமிய இயக்கம் 2007 ல் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் புதன் அதிகாலையில் இஸ்ரேல் காசா நகரத்தின் கிழக்கே உள்ள Beit Hanoun மீது வான் தாக்குதலை நடத்தியது. காசாவின் எகிப்துடனான தெற்கு எல்லைக்கு அருகே உள்ள ராபாவில் உள்ள நிலத்தடிப் பாதைகள் மீது குண்டுவீசியது. அதில் 22 பேர் காயமுற்றனர், ஒரு 15 வயதுச் சிறுவனும் அதில் அடங்கியிருந்தார். இத்தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காசாவில் இருந்து வெடிகுண்டுகள் இஸ்ரேலுக்குள் வீசப்பட்டன. ஒரு பெரும் வெடிப்பு எல்லையில் நடந்தது அது ஒரு கழுதை பூட்டப்பட்ட வண்டி மூலம் நடைபெற்றது.2008-09 காசா மீது இஸ்ரேல் தாக்கி 16 மாதங்களுக்குப் பின்னர்—அதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர், 50,000 பேர் வீடிழந்தனர், பெரும்பாலான வீடுகள் அழிந்துபோயின. ஆனால் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் அல்லது வெடிகுண்டுத் தாக்குதல்கள் மிகக் குறைவுதான். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காசா இஸ்ரேல் மற்றும் எகிப்தின் முடக்கம் தரும் முற்றுகையினால் அதன் பொருளாதாரம் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டதைக் காண்கிறது. மறு கட்டமைப்பு தடுப்பிற்கு உள்ளாகிவிட்டது. மக்கள் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஒவ்வொரு வாரமும் காசாவிற்கு 15,000 டன்கள் மனிதாபிமான உதவிப்பொருட்களைத் தான் அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இது தேவையில் கால் பகுதிதான் என்று ஐ.நா. கூறியுள்ளது. காசா மக்கள் உற்பத்தித்திறன் உடைய கிராமப்புற நிலங்களைக் கைவிடுமாறு இஸ்ரேல் கட்டாயப்படுத்தியுள்ளது. அவற்றுள் பல Strip எனப்படும் பகுதியைச் சூழ்ந்துள்ள வேலிக்குள் உள்ளன. இதை இஸ்ரேல் ஒரு இடைத் தடைப்பகுதி என அறிவித்துள்ளது. 2008-09 தாக்குதல் மதிப்புடைய விளைநிலங்களை அழித்து, அப்பகுதியின் பல இடங்களையும் இஸ்ரேலிய வெடிப்பொருட்களில் இருந்து வெளிப்பட்ட நச்சு உலோக கலவைப் பொருட்கள் மாசுபடுத்தியுள்ளன. காசாவில் செயல்படும் வங்கிகளுடன் இஸ்ரேலிய மத்திய வங்கி செயற்பாடுகளை நிறுத்திவிட்டது. இதையொட்டி கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வணிக வாழ்வையும் பெரும் பாதிப்பிற்கு உட்படுத்தி ஹமாஸ் அரசாங்கம் அதன் ஊழியர்களுக்கு சிறு பகுதியைக்கூட ஊதியமாகக் கொடுக்க முடியாமல் செய்துள்ளது. இதில் ரமல்லாவில் இருக்கும் பாலஸ்தீனிய அதிகாரம் கொடுக்கும் நிதியும் அடங்கும். தன்னுடைய பங்கிற்கு எகிப்து காசாவின் தெற்கு எல்லையை மூடி, ஒரு நிலத்தடி எஃகுச் சுவரையும் எழுப்பியுள்ளது. அது சுரங்கப்பாதைகள் மூலம் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுத்துவிடும். எகிப்துடனான தன் எல்லை முழுவதிலும் இஸ்ரேல் ஒரு சுவரை எழுப்புகிறது. “இது ஹமாஸுக்கு இடர் கொடுக்கும்—அது ஒன்றுதான் பயங்கரவாதத்தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலுக்குள் செல்லக்கூடிய ஒரே பாதை என்று Jerusalem Post எழுதியுள்ளது.Opertion Cast Lead ல் இருந்து ஹமாஸ் ஒரு நடைமுறை போர்நிறுத்தத்தை செயல்படுத்தி காசாவில் உள்ள மற்ற போராளிக் குழுக்கள் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. ஆனால் இது இஸ்ரேலுக்குப் போதவில்லை. அது ஹமாஸை அப்பகுதியில் இருக்கும் ஈரான் சார்பு என்றும் அது அகற்றப்பட வேண்டும் என்றும் கருதுகிறது.


Read more...

மலேசிய கடற்பரப்பில் கைதான தமிழர்களுக்கு நோர்வே, கனடா தஞ்சமளிக்கிறது.

வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் படகொன்றில் புறப்படுகையில் மலேசிய கடற்பரப்பில் வைத்து அந்நாட்டு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 75 இலங்கை தமிழர்களும் தமக்கு தஞ்சம் வழங்கக்கூடிய நாடொன்றுக்கு தம்மை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில தினங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்ததுடன் இவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக மலேசிய அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து உண்ணாவிரம் கைவிடப்பட்டிருந்தது.

இவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மலேசியாவிலுள்ள கனடா மற்றும் நோர்வே தூதரகங்களை மலேசிய அதிகாரிகள் தொடர்பு கொண்டதை அடுத்து அவ்விரு நாடுகளும் தஞ்சமளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி அகதிகள் இலங்கை திரும்புவதை நிராகரித்துள்ளதாக மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கலாநிதி டி .டி. ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தூதரகத்தின் அதிகாரிகளை சந்திப்பையும் அவர்கள் நிராகரித்துள்ளனர்.

சட்டவிரோதமாக படகொன்றின் மூலம் அவுஸ்த்ரேலியா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது இவர்கள் மலேசிய கடற்பரப்பில் வைத்து கடந்த ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டனர். பெண்கள்,சிறுவர்கள் உள்ளிட்ட இந்த 75 பேரும் மலேசியாவின் கோலாலம்பூர் விமானத்திற்கு அருகில் உள்ள தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.



Read more...

Wednesday, June 2, 2010

ஜெர்மனி: 2ம் உலகப் போர் குண்டு வெடித்து 3 பேர் பலி

ஜெர்மனியின் கோட்டிங்கன் நகரில் 2ம் உலகப் போர் காலத்து குண்டு திடீரென வெடித்துச் சிதறியதில் 3 பேர் பலியானர்கள். 6 பேர் படுகாயமடைந்தனர். மத்திய ஜெர்மனி நகரான கோட்டிங்கனில், 2ம் உலகப் போர் காலத்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை செயலிழக்கச் செய்ய முயற்சித்தபோது அது திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குண்டு வெடித்த இடத்தில் 7 மீட்டர் அளவுக்கு ஆழமான பள்ளம் ஏற்பட்டு விட்டது. இந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மிகச் சிறந்த வெடிகுண்டு நிபுணர்கள் ஆவர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து 7000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கோட்டிங்கன் நகர ரயில் நிலையமும் சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டது. இரவில் அது மீண்டும் திறக்கப்பட்டது.

ஜெர்மனி அதிபர் கோஹ்லர் திடீர் ராஜினாமா:

ஜெர்மன் அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் (67), திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ரகசிய சுற்றுப் பயணம் செய்து, அங்குள்ள தனது நாட்டுப் படையினரை சந்தித்துவிட்டுத் திரும்பிய கோஹ்லர், ஆப்கானிஸ்தானில் ஜெர்மனியின் ராணுவ நடவடிக்கை குறித்து விமர்சித்து ஒரு பேட்டி தந்தார்.

மேலும் சோமாலியாவில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் சேர்ந்து கொண்டு, கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தி வரும் ஜெர்மன் கடற்படையின் செயல்களையும் விமர்சித்தார்.

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனி போன்ற நாடுகள், பிற நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும், அனாவசியமான மோதல் போக்கை தவிர்க்க வேண்டும்.

ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் நிலவும் ஸ்திரமற்ற உறவுகள் நமது வர்த்தகம், வேலைவாய்ப்பு, நாட்டின் வருவாய் உள்ளிட்டவற்றில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

அவர் எதை, யாரை குறை கூறுகிறார் என்பதை விளக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இந் நிலையில் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா குறித்து நிருபர்களிடம் ஹோர்ஸ்ட் கூறுகையில்,

ஆப்கானிஸ்தான் குறித்து நான் தெரிவித்த கருத்துகள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், எனக்கு இதுவரை ஆதரவளித்து வந்த மக்களுக்கு இந்த வேளையில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது இந்த முடிவு குறித்து பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கும் தெரிவித்துவிட்டேன். ஜெர்மனி அதிபராக பதவி வகித்ததை எனக்குக் கிடைத்த மாபெரும் கெளரவமாக கருதுகிறேன் என்றார்.

ஜெர்மனியில் எந்த அரசியல் கட்சியையும் சாராத முதல் அதிபராக 2004ம் ஆண்டு கோஹ்லர் பதவியேற்றார். பொருளாதார நிபுணரான அவர், கடந்த ஆண்டு மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஜெர்மன் மக்களிடையே மிகவும் பிரபலமாக அதிபராக இவர் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

த.தே.கூ வட மாகாண சபையை கைப்பற்றி வன்னி மக்களுக்கு உதவி செய்வார்களாம்.

ஏலவே எதிர்பார்த்தது போன்று அடுத்த வாக்கு வேட்டைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது. வட மாகாணத்தில் விரைவில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளதாகவும், இந்தத் தேர்தலில் தமது கட்சி போட்டியிட உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அதன் மூலம் இடம்பெயர் மக்கள் எதிர்நோக்கி வரும் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

வட மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் வன்னி மக்களின் அவலங்களுக்கு தீர்வு காண முடியும் னஎ அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகவும் வன்னி மக்கள் எதிர்நோக்கி வரும் அவலநிலைமைகளை தாம் நேரில் பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின்போது பாராளுமன்ற ஆசனங்களினூடாக மக்களின் அவலங்களை தீர்க்கபோகின்றோம் என முழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அப்போது மாகாண சபையினூடாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற கருத்தை முன்வைத்திருக்கவில்லை என்ற விடயம் சுட்டிக்காட்டப்படவேண்டியதாகவும்.


Read more...

முள்ளிவாய்கால் முடிவு யாரால் ? எதற்காக?

முள்ளிவாய்கால் முடிவுகள் மற்றும் அதன் பின்னணிகள் உட்பட பல்வேறுபட்ட விடயங்களை கலந்துரையாடுவதற்கான நிகழ்வொன்று கனடிய தமிழர் ஒருங்கமைப்பு குழுவினரால் ஏற்பாடாகியுள்ளது. இக்கலந்துரையாடல் எதிர்வரும் 06ம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Read more...

ஜப்பான் பிரதமர் ராஜினாமா அமெரிக்க இராணுவத் தளத்தை அகற்றும் விவகாரம் பின்னணி.

கட்சித் தலைமையின் உத்தரவை ஏற்று ஜப்பான் பிரதமர் யூகியோ கடோயாமா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஜப்பானின் ஒகினாவா தீவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை அகற்றும் விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என யூகியோ கடோயாமா மீது விமர்சனம் எழுந்தது. மேலும் அவர் மீது நிதி முறைகேடு குற்றச்சாற்றும் கூறப்பட்டது,

இதை தொடர்ந்து நடந்த கருத்து கணிப்பில், மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கு 20 விழுக்காடாக குறைந்து விட்டது தெரிய வந்தது. இந்நிலையில், வருகிற ஜுலை மாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவை தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் போட்டியிட இருக்கும் அவரது கட்சி உறுப்பினர்கள், கடோயாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளதால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர்.

இதனையடுத்து அவரை பதவி விலகும்படி ஆளும் ஜப்பான் ஜனநாயக கட்சி அவருக்கு உத்தரவிட்டது. அதனை ஏற்று யூகியோ கடோயாமா இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை கட்சியின் பொதுச் செயலாளர் ஓஸாவா ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

புலிகளியக்க முக்கிய உறுப்பினர் ஒருவர் தலைமையிலான கொள்ளை கும்பல் கைது

புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் ஒருவரின் கீழ் செயற்பட்டுவந்த கொள்ளைக் கூட்டமொன்றின் சிங்கள உறுப்பினர்கள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராஜாங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி உறுப்பினர்களில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் கடற்படை வீரர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மேற்படி புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்தே இந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரீ - 56 ரக துப்பாக்கியொன்று, இரு மகசின்கள் மற்றும் 60 துப்பாக்கி ரவைகள் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளன்ன.

மேற்படி ரீ - 56 ரக துப்பாக்கியானது கடந்த 2003ஆம் ஆண்டு மன்னார் பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல் போனது என அடயாளம் காணப்பட்டுள்ளது என்று இராஜாங்கனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more...

கனடா புலி ஊடகங்களிடையே மோதல் : உண்மைகள் வெளிவருகின்றது. நிதிமோசடியாம்!!!

உண்மைகள் முற்றிலும் காற்று நிரப்பிய பந்தின் தன்னையை உடையவை. அவற்றை எவ்வாறு அமுழ்தினாலும் வெளிவரும் தன்மையே அதன் சிறப்பம்சமாகும். அதனடிப்படையில் புலிகளுடன் இணைந்து நின்று மக்களை ஏமாற்றிய ஊடகங்கள் , ஊடகவியலாளர்களிடையே பெரும் மோதல் வெடித்துள்ளதுடன் புலித்தலமைமையினால் நியமிக்கப்பட்டிருந்த நிர்வாகப் பொறுப்பாளர்களை தொடர்ந்தும் இவ் ஊடகவியலாளர்கள் ஏற்க மறுத்துள்ளதுடன் சில உண்மைகளை மின்னஞ்சல் மூலமாக சக ஊடகவியலாளர்களுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். அம் மின்னஞ்சலின் முழுவடிவம் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக மிகவிரைவில் மக்களுக்கு அறியத்தர இலங்கைநெற் முயற்சிக்கின்றது. புலிகளின் தலைமை மற்றும் ஊடகவியலாளர்களிடையே பணம் மற்றும் பதவிகளில் போட்டி ஏற்பட்டுள்ளபோதும் அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தாமல், தம்மிடையே இணக்கங்களை ஏற்படுத்தி தொடர்ந்தும் மக்கள் முதுகில் சவாரி செய்ய முற்படும் இத்தரப்பினரின் உண்மை முகம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.


அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே!

உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள்!


கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம்.

இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் செலவு செய்யும் நேரத்திற்கும் எமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சம்பந்தமேயில்லாத அளவிற்கு நாங்கள் பல மணித்துளிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இப்போது இடம்பெறும் இந்த நிகழ்வு நூற்றுக்கு மேற்பட்ட எங்களது வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ள படியால் உங்கள் முன் உண்மைகளை வைக்கிறோம்.

தாயகத்தில் எமக்காகப் போராடிய உறவுகள் மௌனித்துப் போனதும் இங்கே நிலைமை தலைகீழாக மாறியது. இந்த மூன்று ஊடகங்களையும் நிர்வகிக்க என தாயகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தனிமனிதனால் அடக்கு முறையாகவே நடத்தப்பட்டு வந்தோம்.

இந் நிலையிலேயே இந்த ஊடககங்களை தனது சொந்தச் சொத்து எனக் கூறி “அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி சுவீகரிக்க முற்பட்டார். எங்களிடமே பலமுறை இது பொதுப் பணமல்ல, எனது சொந்தப் பணம் என்று உண்மைக்கு மாறாக கதைக்க முற்பட்டார். ஆனால் அவர் எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த நிலையிலேயே இந்த மூன்று நிறுவனங்களையும் ஒரு பொது நிறுவனம் கையேற்க வேண்டுகோள் எங்கள் மத்தியில் வலுப்பெற்றது. எங்களது உணர்வுகளைப் பிரதிபலித்து இதையே தான் ரி.வி.ஐ. நிர்வாகமும் தற்போது செய்திருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.

மக்களாகிய நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரி.வி.ஐ. நிர்வாகத்தினர் ஏதோ தனியாகப் பிரிந்து போவதாகக் கூறப்படும் கதையில் உண்மையில்லை. ரி.வி.ஐ நிர்வாகத்தினர் தனியார் கபடமாக அபகரிக்க முற்பட்ட தமிழர்களின் சொத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே முழுப்பிழையும் சி.எம்.ஆர் – சி.ரீ.ஆர் நிறுவனங்களை இப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நபரையே சாரும்.

ரி.வி.ஐ நிர்வாகம் கேட்பது தான் எமது கோரிக்கையும் என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறோம். இந்த மூன்று நிர்வாகங்களையும் ஒரு பொது அமைப்பின் (trustee company) கீழ் கொண்டு வாருங்கள். ஊழியர்களிற்கு தகுந்த சம்பளம் வழங்குங்கள். தனியான ஒரு ஆள் அமைப்பின் பேரால் சுருட்டிச் செல்லும் அநியாயத்தை தடுக்க விரும்புகிறோம்.

ஒரு கிழமையில் ஒரிரு நாட்கள் அலுவலகத்திற்கு வரும் “தாயக அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி 150,000 டொலர்களை வருடச் சம்பளமாகவும் கார், விமானச்சீட்டு என ஏனைய வசதிகளையும் ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு பெற நாங்களோ மணிக்கு 15 டொலர்களையே பெறுகிறோம். இந்த நபர் இரண்டு வருடங்களிற்கு முன்பே திடீரெனக் கொண்டு வந்து புகுத்தப்பட்டவர். ஆனால் நாங்கள் 7 வருடங்களிற்கு மேலாக இந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறோம். இதைவிடக் கொடுமைபல ஊதிய விவகாரத்திலும் ஏனையவற்றிலும் இடம்பெறுகின்றன.

குறிப்பாக 3,500 டொலர்கள் பெறப்படும் ஒரு மணி நேர நேரடி விளம்பர ஒளிபரப்பிற்கு நாங்கள் குறைந்தது 6 மணித்தியாலங்களை அந்த நேரடி ஒளிபரப்பு நடைபெறும் கடையில் செலவளிப்போம். ஆனால் எங்களிற்கு தரப்படுவது வெறும் 100 டொலர்கள் மட்டுமே. இது ஒரு ஜனநாயக விரோத செயலாக இருந்தும் நாங்கள் தொடர்ந்து பணி புரிகிறோம்.

எனவே ரி.வி.ஐ. நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த மூன்று நிறுவனங்களiயும் கனடாத் தமிழ் மக்கள் ஒரு பொது நிறுவனத்தின் மேற்பார்வையில் கொண்டு வந்து தனிநபர்கள் பொது மக்களின் சொத்துக்களை அபகரிப்பதைத் தடுக்க பணிவாக வேண்டிக் கொள்கிறோம்.
இந்தப் பிரச்சினையை மக்கள் முன் கொண்டு வந்து எமது பிரச்சினையை முன்னெடுத்து நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்.

- பாதிக்ப்பட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் விசன் தொலைக்காட்சி, கனடியப் பல்கலாச்சார வானொலி, கனடியத் தமிழ் வானொலி.

Read more...

வடக்கில் இராணுவ முகாம்கள் குறைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினர்.

வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினர் முகாம்களை அமைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. வடமாகாணத்தில் முற்றிலும் சிவில் நிர்வாகத்தை நிறுவும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பிரதேச அமைதி மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பர் எனக் கூறப்படுகின்றது. கலகம் அடக்குதல் சிவில் சமூகத்தினுள்ளிருந்து எழும்பக்கூடிய கிளர்சிகள் சம்பந்தமான புலனாய்வு என்பவற்றில் விசேட பயிற்சி பெற்றுள்ள அதிரடிப்படையினர் எதிர்வரும் வாரம் கிளிநொச்சி நகரிலும் பின்னர் பூநகரி முல்லைத்தீவு சாவக்சேரி பிரதேசங்களிலும் முகாம்களை அமைக்கவுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.


Read more...

ஜப்பான் மீண்டும் இலங்கைக்கு நிதியுதவி.

இடைத்தங்கல் முகாம் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கென ஜப்பான் மீண்டும் 100 மில்லியன் ஜப்பான் ஜென் களை (1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. இப்பணம் நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயரிஸ்தானிகத்திடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பான் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து நேரடியாகவும் தொண்டு நிறுவனங்களுடாகவும் இலங்கைக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளது. அத்துடன் இலங்கைக்கான தமது பணி தொடரும் எனவும் ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

Read more...

Tuesday, June 1, 2010

கிழக்கு மாகான முஸ்லிம்களின் கல்வி பின்னடைதுள்ளது

கல்முனை சமூக முனேற்ற ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த காலங்களுடன் ஒப்டுகையில் கிழக்கு மாகான முஸ்லிம்களின் கல்வி பின்னடைதுள்ளது என்று தெரிவித்துள்ளது இந்த ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்விக்கான வசதி வாய்புகள் குறைத்தன காலங்களில் கல்வியில் கிழக்கு மாகான முஸ்லிம் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் கடந்த ஐந்து வருடங்களாக பின்னடைதுள்ளது என்று தெரிவித்துள்ளது.

சுனாமியின் பின்னர் எமது சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் கல்வி வறுமையை போக்குவதற்கு புத்திஜீவிகள் , பொது அமைப்புகள் , சமூக நலன் விரும்பிகள் ஒன்றிணைத்து செயல்படவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் வளங்கள் கொண்ட பாடசாலைகள் குறைவாக இருந்தது, ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்பட்டது , மாலை நேர வகுப்புகள் பெரிதாக இருக்கவில்லை ஆனால் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் சிறப்பாக இருந்தது என்று கூறும் இந்த அமைப்பு முஸ்லிம்களின் கல்வி பின்னடைவுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்ட சில அடிப்படையான காரணங்கள் என்று சிலவற்றை சுட்டி காட்டியுள்ளது.

மாணவர்களிடம் அதிகரித்துள்ள கையடக்கத் தொலைபேசி, வெளிநாட்டு மோகம் – UK,USA- அதிகரித்துள்ள பொழுதுபோக்கு வசதிகள், விரைவாக பணத்தை அடையும் மனநிலை, பெற்றோர்களின் கவனக் குறைவு, சமூக நல நிறுவனங்களின் மந்தமானபோக்கு, படங்கள் , நாடகங்கள் மீது உள்ள மோகம், புகைத்தல் பாவனை, பாடங்களை வீட்டில் மீட்ட தவறுதல், இணைய வலம் , பேஸ் புக் பாவனை , போன்றவற்றை பிரதான காரணமாக குறிபிட்டுள்ளது

Read more...

வாழைச்சேனையில் மிதிவெடிகள் மீட்பு.

வாழைச்சேனைப் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளது. தடுப்புக்காவலிலுள்ள புலிகளியக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலினடிப்படையில் இது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read more...

நவி பிள்ளைக்கு இலங்கை அரசு கண்டனம்

போர் குற்றங்கள் குறித்து சமீபத்தில் பல புதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஐ நாவின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை கூறிய கருத்துக்களுக்கு இலங்கை அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், "இது ஒரு நியாயமற்ற நடவடிக்கை என்றே நாங்கள் நினைக்கிறோம். இது ஒரு அடக்குமுறை கொண்ட நடவடிக்கையும் கூட. இலங்கையை துன்புறுத்துவதில் வெற்றிகாணும் வரை சிலருக்கு ஒய்வு கிட்டாது போல் இருக்கிறது" என்று சாடியுள்ளார்.

கடந்த ஆண்டு போரின் இறுதி கட்டத்தின் போது மக்கள் மீது இரு தரப்பும் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தின அல்லது வகை தொகையற்ற தாக்குதல்களில் மக்கள் சிக்கியது போன்ற செயல்கள் நடைபெற்றுள்ளன. இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கோருகின்றன.

போர்க் குற்றங்கள் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை தொடர்ந்து மறுத்து வருகறது. விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில் போர் குற்ற விசாரணை என்று வந்தால் அது அரச தரப்பின் செயல்பாடுகளை ஆய்வதாக இருக்கும் என்பதால் இது போன்ற கோரி்க்கைகள் இலங்கைக்கு ஆத்திரத்தை தருவதாக உள்ளன.

"நவி பிள்ளையைப் போன்ற சிலர் இலங்கையை விடாப்பிடியாக இம்சைப்படுத்துகின்றனர்" என்கிறார் அமைச்சர் பீரிஸ்.

இலங்கை அரசு படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தை உருவாக்கியுள்ளது என்றாலும் இலங்கை நிலவரம் குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று திங்கள் கிழமையன்று ஐ நாவின் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பேசியபோது நவி பிள்ளை தெரிவித்திருந்தார்.

அதேநேரம் இலங்கை ஆணையத்துக்கு தனது ஆதரவை வழங்கியுள்ள அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன், இந்த ஆணையம் போர் குற்றங்கள் குறித்த புகார்களையும் ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Thanks BBC

Read more...

காசா சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

காசா பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற ஆறு கப்பல்களை இஸ்ரேலிய போர்க் கப்பல் தாக்கியதில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஒரு துருக்கிய கப்பலில் 10,000 டன் உதவிப் பொருட்கள் ஏற்றப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதில் அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர்களும் பயணித்ததாகக் கூறப்பட்டது.

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் யாரும் எதுவும் கூறவில்லை. துருக்கிய கப்பலிலிருந்து அல்ஜஜீரா தொலைக்காட்சிக்கு வந்த தகவலின் படி இஸ்ரேலிய கடற்படையினர் கண்மூடித் தனமாக சுட்டதில் கப்பல் கேப்டன் காயமுற்றதாக கூறப் பட்டது.

கப்பல்களை காசா பகுதிக்குள் அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேல் ராணுவத்தினர் கூறியதாகத் தெரிகிறது. இஸ்ரேலியத் தாக்குதலுக்கு ஹமாஸ் அரசாங்கத் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..

இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் 15,000 டன் உதவிப் பொருள்கள் காசா பகுதிக்குள் அனுமதிக்கப் படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு தேவைப்படும் உதவிப் பொருள்களில் இது கால்வாசியே என்று ஐநா கூறுகிறது.

இஸ்ரேலியத் தாக்குதலுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இச்செயல் இருதரப்பு உறவை பாதிக்கும் செயலாகும் என்று துருக்கி அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read more...

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான 'omega-3 fatty acids' (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். தாய், சிசுவின் உடலில் 'omega-3 fatty acids' அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது. 32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Read more...

சஜித் கட்சியின் தலைவரானால் ஆழும் தரப்பிலிருந்து பல MP க்கள் மாறுவார்களாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு அதன் தலைவராக முன்னாள் ஜனாதிபதி பிறேமதாசவின் மகன் சஜித் பிறேமதாஸ தெரிவு செய்யப்பட்டால் ஆழும் கட்சியிலுள்ள முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியினரான எம்பிக்கள் சுமார் 10 பேர் வரை தன்னுடன் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகவுள்ளதாக மலைநாட்டு மாவட்டம் ஒன்றிலிருந்து பாராளுமன்று தெரிவாகி பிரதி அமைச்சராகவுள்ள ஒருவர் தெரிவித்துள்ளதாக லங்காஈநியூஸ் இணையம் தெரிவிக்கின்றது.

Read more...

3 விபசார பெண்களை கொன்ற குற்றவியல் ஆராய்ச்சியாளர்.

இங்கிலாந்தில் 3 விபச்சாரப் பெண்களை கொன்றதாக கொலைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த குற்றவியல் ஆராய்ச்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் ஆராய்சிப் பிரிவில் படித்து வந்தவர் ஸ்டீபன் கிரிபித்ஸ் (40). தனது பி.எச்.டி. டாக்டர் பட்டத்துக்காக '19ம் நூற்றாண்டில் கொலைகள்' என்ற தலைப்பில் குற்றவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

பிராட்போர் பகுதியில் சூசனா பிளாமையர்ஸ் (36), ஷெல்லி ஆர்மிடேஜ் (31), சூசன் ரஷ்வோர்த் (43) ஆகிய மூன்று விபச்சாரப் பெண்கள் கொலையான வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட இவரிடம், உன் பெயர் என்ன என்று நீதிபதி கேட்க, 'மனித மாமிசம் உண்ணும் வில்' (crossbow cannibal) என்று பதிலளித்து அதிர்ச்சி தந்தார்.

இவரால் கொல்லப்பட்ட பெண்களில் ஒருவர் இந்த வகை வில்லால் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. கொல்லப்பட்டவர்களில் சூசனா பிளாமையர்சின் சில உடல் பகுதிகள் ஒரு ஆற்றுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் கடந்த ஜூன் மாதம் காணவில்லை. இவர்களது உடலோ, பாகங்களோ இன்னும் கிடைக்கவில்லை.

Read more...

தனுன நீதிமன்றில் ஆஜராக வேண்டும் அன்றில் அசையும் , அசையா சொத்துக்கள் பறிமுதல்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவை எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு கோட்டை மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகு மாறும் அவ்வாறு ஆஜராகத் தவறினால், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதவானும் மேலதிக மாவட்ட நீதிவானுமான லங்கா ஜயரட்ன நேற்று உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவு தொடர்பாக நாடு முழுவதும் பொது அறிவிப்பை மேற்கொள்வதுடன், தனுன நாட்டில் மிகவும் தேவைப்படும் மனிதன் என சிங்களத்திலும் தமிழிலும் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை நீதிமன்ற வளவிலும் மற்றும் பொது இடங்களிலும் ஒட்டுமாறும் நீதிவான் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் தனுன திலகரட்ன எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதைக் கூறும் அறிவித்தல்கள் பலவற்றை தயார்படுத்துமாறும், தனுன திலகரட்னவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பற்றிய முழுமையான அறிக்கையொன்றை அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இரகசிய பொலிஸாருக்கு நீதிவான் மேலும் உத்தரவு பிறப்பித்தார்.

ஹைகோர்ட் நிறுவன மோசடி வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான தனுன திலகரட்னவை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவின் பேரில் தனுனவை கைது செய்யுமாறு கூறும் சுவரொட்டிகள் நேற்று நீதிமன்ற வளவிலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் சந்தேக நபரான தனுன திலகரட்ன நீதிமன்ற உத்தரவுகள் பலவற்றை அசட்டை செய்துள்ளதை அவதானித்திருப் பதாக குறிப்பிட்ட நீதவான், தனுனவின் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை பற்றிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து இரகசிய பொலிஸார் விடுத்த அறிக்கையில் சந்தேக நபரான தனுன திலகரட்ன மாறுவேடத்தில் வசித்து வருவதாகவும் அவரது நடையுடை பாவனையை அவர் மாற்றிக்கொண்டுள் ளதாகவும் கூறினர்.

சந்தேக நபரான தனுன திலகரட்னவை கைதுசெய்ய வேண்டுமென்றும், அவருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதாகவும் அரச தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஜனக பண்டார நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

இதேவேளை ஹைகோர்ட் நிறுவன பணிப்பாளரான வெலிங்டன் டியோட் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சரத் சிரிவர்தன, தனது கட்சிக்காரரை பிணையில் விடுமாறு கேட்டுக்கொண்டார். எனினும் நீதிவான் அவரது பிணை மனுவை நிராகரித்ததுடன் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி வரை வெலிங்டன் டியோட் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர விட்டார்.

Read more...

சீபா தொடர்பாக நேரடி வாதத்திற்கு வாருங்கள் : அனுரகுமார திஸாநாயக்க

இலங்கை இந்தியா விடையே செய்து கொள்ளப்படவுள்ள சீபா எனப்படும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நேரடி விவாதம் ஒன்றினை பாராளுமன்றில் மேற்கொள்ள அனுமதி கோரவுள்ளதாக ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் ஜேவிபி யின் முக்கியஸ்தருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது பிரபல்யமாக பேசப்படுகின்ற இவ் ஒப்பதந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த 2008ம் ஆண்டு இலங்கையில் சார்க் நாடுகளுக்கான உச்சிமாநாடு இடம்பெற்றபோது பேசப்பட்டதாகவும் அதற்கான ஒப்பந்தம் தற்போதே கைச்சாத்தாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி ஒப்பந்தத்தினை மேற்கொள்ள கூடாது என வலியுறுத்தி கொழும்பு வர்த்தகசங்கத்தின் ஒரு பிரிவினர் லிபர்டி சுற்றுவட்டாரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் ஜனாதியை சந்தித்து பேசியபோது , இலங்கைக்கு பாதகம் ஏற்படக்கூடிய எந்த ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என ஜனாதிபதி தெரிவித்திருந்தாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

12 மாணவிகளை கெடுத்த ஆசிரியரைத் தேடி வலைவிரிப்பு.

மஸ்கெலிய பிரதேசத்திலுள்ள அரச பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். குறிப்பிட்ட ஆசிரியர் அப்பாடசாலையில் கல்வி பயின்ற 12 உயர் தர மாணவிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் பொலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட ஆசிரியர் கடந்த ஒரு மாத காலமாக இச்செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்தாகவும், மாணவிகள் பயம் காரணமாக விடயத்தினை வெளிவிடவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். விடயம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர் பிரதேசத்தை விட்டு ஒடி ஒழிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read more...

இலங்கையில் விசாரணை ஆணையம் நம்பிக்கை அளிக்கிறது: ஹில்லாரி கிளிண்டன்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமனம் செய்துள்ள 8 பேர் கொண்ட விசாரணை ஆணையம் நம்பிக்கை அளிக்கிறது என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரீஸ், வாஷிங்டனில் நேற்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஹில்லாரி இவ்வாறு கூறியுள்ளார்.

'ஜனாதிபதி அமைத்துள்ள அந்த ஆணையம் (போர்க் குற்றம் குறித்து விசாரிக்கும்) என்ற நம்பிக்கை அளிக்கிறது. அது அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறோம். விசாரணை ஆணையத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நோக்கின்படி அது மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையாக விசாரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்' என்று ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

போர்க் குற்றம் ஏதும் நடக்கவில்லை: பீரிஸ்


இலங்கைப் போரின் இறுதிகட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாவும், மிகப் பெரிய அளவில் போர்க் குற்றமும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுவதை இலங்கை வெளிவிககார அமைச்சர் பீரிஸ் மறுத்துள்ளார்.

போர்க் குற்றம் நடந்துள்ளது என்றும், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் சர்வதேச சிக்கல் தீர்ப்புக் குழுவும், மனித உரிமை கண்காணிப்பகமும், சர்வதேச பொது மன்னிப்புச் சபையும் கூறும் குற்றச்சாற்றுகளை மறுப்பதாகக் கூறியுள்ள பீரிஸ், அவர்கள் கூறும் குற்றச்சாற்றுகளுக்கு ஆதாரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

'ஐ.நா.வின் அமைப்புகள் மூலம் சாதிக்க முடியாததை இவர்கள் வேறு வழிகளில் சாதிக்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் கூறும் குற்றச்சாற்றுகளை நிரூபிக்க வேண்டுமெனில் இவர்கள் ஐ.நா. பாதுகாப்பு பேரவை வாயிலாகவோ அல்லது பொது அவையிலோ அப்பிரச்சனையை கொண்டு சென்று தீர்வு காணட்டுமே' எனவும் சவால் விடுத்துள்ளார்.

'இறுதி கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச சிக்கல் தீர்விக் குழு (ஐவெநசயெவழையெட ஊசளைளை புசழரி - ஐஊபு) கூறுகிறது, ஆனால் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை. இங்குதான் அவர்கள் குத்துவாளை மறைத்து வைத்திருக்கிறார்கள்' என்றும் பீரிஸ் குற்றம் சாற்றியுள்ளார்.

பீரிஸின் குற்றச்சாற்றிற்கு பதிலடி கொடுத்துள்ள சர்வதேச சிக்கல் தீர்வுக் குழு, 'நாங்கள் ஆதாரங்களை பொதுவில் வெளியிட்டால் அதனை சிறிலங்க அரசு காணடித்துவிடும். அதனை அது நீண்ட காலமாகச் செய்து வருகிறது' என்று அதன் ஆசிய நடவடிக்கைக் குழுத் தலைவர் பாப் டெம்பிளர் கூறியுள்ளார்.

இறுதி கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல், படுகொலைகள் தொடர்பாக 200க்கும் அதிகமான படங்களை மனித உரிமை கண்காணிப்பகம் வைத்துள்ளது. அதில் புலிகள் செய்த மீறல்கள் தொடர்பான சில புகைப்படங்களைத் தவிர, மற்ற அனைத்தும் சிறிலங்க அரசப் படைகள் நிகழ்த்திய குற்றங்கள் தொடர்பானவையாகும் என்று அந்த அமைப்பின் ஆசிய துணை இயக்குனர் எலைன் பியர்சன் கூறியுள்ளார்.

Read more...

ஐ.நா படையுடன் மேலுமோர் இலங்கை இராணுவ அணி இணைகின்றது.

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவொன்று ஐ.நா படையுடன் இணைந்து பணிபுரிவதற்காக மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கு விரைவில் புறப்பட்டுச் செல்லவுள்ளது. மூன்று அதிகாரிகள் உட்பட மொத்தம் 61 பேர் இந்தப்படைப்பிரிவில் அங்கம் வகிக்கவுள்ளனர். இலங்கை இராணுவப்பிரிவொன்று மத்திய ஆபிரிக்காவுக்குச் செல்வது இதுவே முதற் தடவையாகும். இலங்கை இராணுவத்தின் தொழிற்சார் தகைமை மற்றும் அதன் திறமை என்பனவற்றுக்கு ஐ.நா வழங்கியுள்ள அங்கீகாரமாகவே இது கருதப்படுவதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com