Monday, March 8, 2010

ஜெர்மனி சூதாட்ட மையத்தில் ஆயுதமேந்திய கொள்ளையர்

ஜெர்மனியின் பெர்லின் நகரில் சூதாட்ட மையம் ஒன்றில் அரிவாள் கள், கைத்துப்பாக்கி களுடன் சனிக் கிழமை நுழைந்த கொள்ளையர் கிட்டத்தட்ட 800,000 யூரோக் களைக் (S$1.1 மி.) கொள்ளையடித் துள்ளதாக ஏஎப்பி செய்தித் தகவல் கூறுகிறது. ஆனால் இந்த ஒரு நல்ல அம்சம் என்னவென்றால் சூதாட்ட மையத்திலிருந்த பாதுகாவலர் ஒருவர் கொள்ளையர்களை எதிர் கொண்டதால் அவர்கள் கொள்ளைப் பணத்தின் பெரும் பகுதியை விட்டு விட்டுச் சென்றதுதான். மொத்தம் 7 முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டனர்.

Read more...

பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம்

புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் நந்திக்கடல் பிரதேசத்தில் ராணுவம் நினைவுச் சின்னம் எழுப்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

Read more...

நைஜீரியா: மதக்கலரவத்திற்கு 500 பேர் பலி

நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மதக்கலவரத்தில் 500 க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஜோஸ் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்வது உண்டு.

இந்நிலையில் நேற்றிரவு இங்குள்ள இரண்டு கிறிஸ்தவ கிராமங்களுக்குள் புகுந்த எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள், வீடுகளில் நுழைந்து அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

கலவரக்காரர்களால் வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.இதில் சுமார் 500 க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக உள்ளூர் மனித உரிமை குழுக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூறியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கலவரம் வெடித்த பகுதிகளில் காவல் துறையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமைதியை நிலைநாட்டிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நைஜீரிய அதிபர் பொறுப்பில் உள்ள ஜோனாதன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Read more...

நித்யானந்த‌ர் மீது பெண்கள் பா‌லிய‌‌ல் புகார் கொடுக்கவில்லை: ராஜே‌ந்‌திர‌ன்

‌நி‌த்யான‌ந்த‌ர் ‌மீது பெ‌ண்க‌ள் யாரு‌ம் பா‌லிய‌ல் பலா‌த்கார புக‌ா‌ர் கொடு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன் கூ‌‌றினா‌‌ர். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவல‌ர்களு‌க்கான மருத்துவ முகாம் எழும்பூரில் உள்ள காவல‌ர் மருத்துவமனையில் இன்று செ‌ன்னை மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌ர் ராஜே‌‌ந்‌‌திர‌ன் தொட‌ங்‌கி வை‌த்தா‌‌ர்.

‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அவ‌ர் பே‌ட்டி அ‌ளி‌த்தா‌ர். அ‌ப்போது, நித்யானந்த‌ர் மீது பெண்கள் யாராவது பா‌‌லிய‌ல் பலா‌த்கார புகார் கொடுத்துள்ளார்களா எ‌ன்று செ‌ய்‌‌தியாள‌ர்க‌ள் கே‌‌ள்‌வி கே‌‌ட்டத‌ற்கு, இ‌ல்லை எ‌ன்று ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர் ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌‌ன்.

‌நி‌‌த்யான‌ந்த‌ரி‌ன் சீடர் லெனின் தர்மானந்தா காவ‌ல்துறை கட்டுப்பாட்டில் உள்ளாரா எ‌ன்ற ம‌ற்றொரு கே‌ள்‌வி‌க்கு‌ம், இ‌‌ல்லை எ‌ன்று ஆணைய‌ர் ப‌தி‌ல் அ‌ளி‌‌‌த்தா‌ர்.

லெனின் தர்மானந்தா மீது காந்தப்படுக்கை மோசடி வழக்கு ஏதும் உள்ளதா எ‌ன்று கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌‌ல் அ‌ளி‌த்த ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன், தெரியவில்லை. விசாரிக்கிறேன் எ‌ன்றா‌ர்.

வெளி மாநிலங்களில் ‌நி‌த்‌யான‌ந்த‌ர் த‌ஞ்சம் அடைந்துள்ளாரா? அவரை தேடி தனி படை வெளி மாநிலம் சென்றுள்ளதா எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு, வெளி மாநிலங்களுக்கு தனிப்படை போகவில்லை. விசாரணை இங்குதான் நடந்து வருகிறது எ‌ன்று ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன் ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர்.

‌நி‌‌‌த்யான‌ந்த‌ர் மீது முதற்கட்ட விசாரணை ஆரம்பமாகி விட்டதா எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த ஆணைய‌ர், முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டு விட்டது எ‌ன்று‌ம் ‌நி‌‌த்யான‌ந்த‌ர் எங்கெல்லாம் சென்றார், அவரது பண பரிமாற்றம் எப்படி நடைபெற்றது என்பது பற்றி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

நித்யானந்த‌ர் மீதான கொலை மிரட்டல் வழக்கு ‌விசாரணை எந்த நிலையில் உள்ளது எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு, இந்த கொலை மிரட்டல் வழக்கு குறித்து சேலம் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணைக்கு சென்னை காவ‌ல்துறையு‌ம் உதவும். ‌நி‌‌‌த்யான‌ந்த‌ர் பிடிபடும்போது சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ள மோசடி வழக்கு தொடர்பாகவும் விசாரிப்போம் எ‌‌ன்று ஆணைய‌ர் ராஜே‌‌ந்‌திர‌ன் கூ‌றினா‌ர்.

‌நி‌த்யான‌ந்த‌ர் மீதுள்ள வழக்குகளை கர்நாடகத்திற்கு மாற்றிவிட்டீர்களா எ‌ன்ற ம‌ற்றொரு கே‌ள்‌வி‌க்கு, கர்நாடக கா‌வ‌ல்துறை அதிகாரிக்கு இந்த வழக்குகளை மாற்ற கடிதம் எழுதி உள்ளேன். எனவே வழக்கு இன்று கர்நாடகத்துக்கு மாற்றப்படும். கர்நாடக காவ‌ல்துறை எந்த உதவி கேட்டாலும் உதவுவோம் எ‌ன்று ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன் கூறினார்.

Read more...

இனந்தெரியாத உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

களனி கங்கையுடன் இணைந்ததாக கொழும்பு முகத்துவாரம் பெர்குஷன் வீதிக்கு அருகில் சேற்றுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சடலம் மீட்கப்பட்டுள்ள பகுதிக்கு மிக அண்மையில் முகத்துவாரம் இராணுவ முகாம் காணப்படுகின்றது.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க 5 அடி 3 அங்குலம் நீளமுடைய தடித்த மீசைகளை கொண்ட ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. ஊடலில் பின்புறத்தில் வலது பக்கதோளுக்கு கீழே இரு காயங்களும் முழங்காலுக்கு கீழே இரு காயங்களும் காணப்படுவதாக தெரியவருகின்ன்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் இன்றுமாலை வரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

30 வருட யுத்தத்தில் புலிகள் எதை சாதித்தார்கள் என்ற கேள்வியை கேட்க முடியும். சித்தார்த்தன்.

லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வாராந்த அரசியல் ஆய்வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07/03/2010) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் திரு. சித்தார்த்தன் கலந்திருந்தார். இலங்கையின் நடைமுறை அரசியல் தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அவரிடம் தொலைபேசி ஊடாக இணைந்து கொண்ட நபர் ஒருவர் கடந்த 87 ம் ஆண்டிலிருந்து அரசுடன் இணைந்து செயற்பட்டு வந்திருக்கின்றீர்கள் எனவும் இத்தனை காலப்பகுதியில் எதைச் சாதித்துள்ளீர்கள் எனவும் கேட்டபோது, தம்மிடம் இக்கேள்வியைக் கேட்டால் இலங்கைத் தமிழ் மக்களின் சகல வழங்களையும் ஒன்று திரட்டி புலிகள் 30 வருடங்களாக நாடத்திய ஆயுதப்போராட்டத்தின் ஊடாக எதைச் சாதித்துள்ளார்கள் என்ற கேள்வியையும் எம்மால் எழுப்ப முடியும் எனக்கூறிய அவர், தமது அமைப்பு வவுனியாவில் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளதாகவும் இலங்கையில் வடகிழக்கில் 90 ம் ஆண்டிலிருந்து இரவு நேரங்களில் நிரந்தரமான ஊரடங்கு அமுல்படுத்தப்படாத பிரதேசமாக வவுனியா இருந்து வந்துள்ளது எனக்கூறியதுடன், தாம் இராணுத்தினருடன் பேணிய உறவுமுறையின் பிரதிபலனாகவே வவுனியா மக்களால் ஊரடங்கு உத்தரவு அற்ற பிரதேசம் ஒன்றில் வாழமுடிந்தது எனவும் தாம் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையேயான தடைச்சுவராக இருந்துள்ளதாகவும் தமது இராணுவத்தினருடனான சுமகமான உறவுகளுடாக அவர்கள் மக்களை நேரடியாக அணுகாதவாறு பாதுகாத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் சிறுபான்மை தமிழ்கட்சிகள் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனைகளை எடுத்து கூறுவதற்காக தனித்துவத்துடன் செயல்படவேண்டியது தமிழ் அரசியல் கட்சிகளின் கடமை என தெரிவித்துள்ளார்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறுதுறை செயலாளர் நிருபாமா ராவ்யை சந்தித்தித்து அம்மக்களின் நாளாந்த தேவைகள் தொடர்பாக எடுத்து கூறியதாகவும் அதனை மிகவும் அக்கறையுடன் செவிமடுத்தாகவும் தெரிவித்த அவர் வன்னிமக்கள் தமது உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்வதால் அவர்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதோடு தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வினை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுகொள்ளுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது நடைபெற உள்ள நாடளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்ற அதேவேளை பல புதிய புதிய அரசில் கட்சிகளையும் பல சுயோட்சை குழுக்களையும் அரசாங்கம் உருவாக்கி இத் தேர்தலில் போட்டியிட வைத்துள்ள போதிலும் மக்கள் மிக தெளிவாக அவர்களை இனம் கண்டுகொண்டு உள்ளதாகவும் தருமலிங்கம் சித்தார்த்தன் மேலும் கூறினார்.

தோடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்போதை சூழ்நிலையில் தமிழ்கட்சிகள் ஒன்றினைந்து செயற்பட வாய்ப்புகள் இல்லை என தெரிவித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒஸ்லே பிரகடனத்தின் அடிப்படையிலும் தமிழர் விடுதலை கூட்டணி இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கான அதிகாரமுறை போன்றும் , தமிழ்காங்கிரஸ் இருதேசம் ஒரு நாடு என்ற முறையிலும் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மாநாபா) மற்றும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகம் சமஸ்டி முறையிலும் (சுவிஸ் நாட்டு அரசில் முறைபோல்) , ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பதிமூன்றாவது அரசியல் அமைப்பு சட்டதிருத்தபடியும் தீர்வுதிட்டங்களை முன்வைத்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிகாட்டியதுடன் தேர்தல் முடிந்தவுடன் தெரிவுசெய்படுகின்ற நாடளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட எண்ணம் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் பிரித்தானியாவில் உலக தமிழர் பேரவையினரால் கூட்டபட்ட கூட்டத்தில் பிரித்தானியாவின் வெளியுறுதுறை அமைச்சர் கலந்து கொண்டதும் அதன் பின்பு பிரித்தானியா பிரதமர் சந்திப்புகளை நடாத்தியுதும் பிரித்தானியாவில் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள தேர்தலில் தமிழர்களின் வாக்குளை பெறுவதற்காகவே என குறிப்பிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளிநாடுகளில் நடைபெறும் நாடுகடந்த தமிழ் ஈழம் வட்டுகோட்டை தீர்மானம் போன்றவைகளை பற்றி இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அக்கறை கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

Read more...

பொன்சேகாவிற்கு எதிராக 5 குற்றச் சாட்டுக்களுடன் வழக்கு நீதிமன்றுக்கு வருகின்றது.

ஜெனரல் பொன்சேகா கைதாகி இன்றுடன் ஒருமாதமாகியுள்ள நிலையில் இன்னும் ஒரிரு தினங்களில் அவருக்கெரிரான வழக்கு இராணுவ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வாக்குமூலங்கள் பெறப்பட்டிருப்பதுடன், சாட்சியங்களின் தொகுப்பு இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக பதியப்பட்டுள்ள 5 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ சட்டவல்லுனர்கள் ஆராந்ய்து வருவதாகவும் இராணுவ சட்டவல்லுனர்களின் பரிந்துரையை அடுத்து இராணுவத் தளபதி இராணுவ நீதிமன்றிற்கான சிபார்சுகளை விடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள சாட்சியங்களின் தொகுப்பில் 22 இராணுவத்தினர், 7 பொலிஸார், 6 பொதுமக்கள் என 35 பேரது சாட்சியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜெனரல் பொன்சேகாவின் விடுதலை வேண்டி இன்று ஹட்பாக் கோணரில் கூட்டமொன்று நடைபெறவிருக்கிறது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

இந்தக் கூட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா,மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதே நேரம் ஜெனரல் பொன்சேகா அவரது உறவினர்களுடன் உரையாடும் பொருட்டு அவருக்கு ஸ்கைப் வசதிகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. அவ்வசதிகள் மேலதிகமானவை என நேற்றிலிருந்து மறுக்கப்பட்டபோது அவ்வசதி தொடர்ந்தும் தனக்கு வழங்கப்படவேண்டும் என ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரத் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். இந்நிலையில் இன்றிலிருந்து அவரது மனைவி அவரை பார்வையிடச் செல்லும்போது கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் சென்று அவரது மகள் மாருடன் பேசுவதற்கான தொடர்புகளை ஏற்படுத்தமுடியும் என இராணுவப் பேச்சாளர் தெரிவிததுள்ளார்.

Read more...

Sunday, March 7, 2010

சர்வதேச மகளிர் தினம் (International Women's Day)- புன்னியாமீன் .

ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிடத்தான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப் படுத்தியுள்ளது. இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும். இக்கொண்டாட்டங்களில் குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் தனியாகவும்இ குழுக்களாகவும் அமைப்புக்கள் சார்ந்தும், அக்கபூர்வமான செயல்வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகளிர் தினத்தின் சுருக்க வரலாறு.

மகளிர் தினத்தின் சுருக்க வரலாற்றினைப் பின்வருமாறு இனங்காட்டலாம். வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப்பண்டங்களாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம்தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

ஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னன் வாக்களித்தான். ஆனால், அது அவனால் இயலாமற்போகவே மன்னன் லூயிஸ் முடிதுறந்தான். இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் 'விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையில், ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோதுஇ ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2வது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக்குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தான். அந்த நாள் மார்ச் 8. 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளேஇ 'மகளிர் தின'மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது!

1857ல் நியூயோர்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி, போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இப்போரட்டங்களால் ஆட்சியாளர்கள் நிலைகுலைந்தார். உலகநாடுகள் அனைத்திலும் பரவிய இப்போராட்டங்களின் விளைவாக, 1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையை முன்வைத்தார். பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோர சர்வதேசம் முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஏகமனதாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜெர்மனில் The Vote for Women மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகளை வெளியிட்டன. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. 1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி எட்டுத் திக்கிலும் பரவியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 1848ல் பிரான்ஸ் மன்னன் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8 ஐ நினைவுகூரும் வகையில், 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8-க்கு மாற்றியமைத்து. ஆனாலும் அது உத்தியோக பூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ந் திகதி ரஷ்யாவில் உள்ள சென்பீற்றர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடாத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஸ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார். இப்போராட்டத்தையடுத்து 1921 ம் ஆண்டு மார்ச் 8ந் திகதியே சர்வதேச பெண்கள் தினமாக உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மார்ச் 8ந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாகக் அனுஸ்டிக்கப்பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.

ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும், அவர்கள் சமத்துவ கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945-ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள்இ இலட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடு உழைத்துள்ளது..

1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது. 1977-ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

இச்சந்தர்ப்பத்தில் பெண்ணியம்இ பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துக்கள் குறித்துச் சற்றுச் சிந்தித்தல் அர்த்தமுள்ளதாக இருக்கும். பெண்ணியத்தை எடுத்து நோக்குமிடத்து ஆண்கள் பெற்றுள்ள சட்டபுர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் எழுந்தது. குடும்பம், உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியம்இ தந்தை வழிக்கோட்பாட்டுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் என்பன பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை (Biological Foundation ) அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன. நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் Feminism என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். Feminism என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

முதலாளித்துவ வாதத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியாளர்களை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் அடிப்படை என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.

பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.

பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY), உயிரியல்(BIOLOGY), சமூகவியல் (SOCIOLOGICAL), வர்க்கம் (CLASS) ,பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION),சக்தி (FORCE), மானுடவியல் (ANTHOROPOLOGY), உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.

சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக கோட்பாட்டு, வரலாற்று விளக்கங்கள் மேற்குறித்தவாறு காணப்பட்டாலும் கூட பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா என்பது கேள்விக்குறியே. சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது என்பது ஓரவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்த போதிலும் கூட எமது பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும், சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அனுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று. இந்த அறியாமை மாற வேண்டும். பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்விடுதலை என்பது, சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை... இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள்.... வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தாற்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.

பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.

இவ்விடத்தில் 2007ம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் விடுத்துள்ள செய்தியில் 'அனைத்து சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார். பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது மட்டும் இலக்கு அல்ல; இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும்இ மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும் என்ற அவர்இ அனைத்து நாடுகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் பின்னுக்கே தள்ளப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். அத்துடன், பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார். இவ்வறிக்கையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்வது பயனுடையதாக இருக்கும்.

Read more...

ஜெனரல் பொன்சேகா சாகும்வரை உண்ணாவிரதம்.

இராணுவப் பொலிஸாரினால கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா வெளிநாடுகளில் இருக்கும் தனது மகள் மாருடன் பேசுதற்கான உரிமை வழங்கப்படும் வரை சாகும் வரை உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளதாக அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர், தடுப்புக்காவலில் உள்ள ஒருவருக்கு தொலைபேசி வசதிகளை வழங்குவது என்பது மேலதிக சலுகையாகும். இலங்கை இராணுவம் இதைச் செய்யவேண்டும் என கடமைப்படவில்லை. எமக்கு எவ்வித நீதிமன்ற உத்தரவுகளோ அன்றில் உயர்மட்ட அறிவுறுத்தல்களோ கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

Read more...

நிருபமா - ஜனாதிபதி சந்திப்பு : மன்மோகன் சிங்கிடமிருந்து அவசர அழைப்பு.

நேற்றிரவு 10.30 மணியளவில் இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் இன்று இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே.காந்தா, இலங்கை வெளிநாட்டமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க,ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியை சந்தித்த நிரூபமா ஜனாதிபதியை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் முடிந்த சீக்கிரம் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் தேர்தலில் 1000 இக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வடகிழக்கு பகுதியில் போட்டியிடுவது அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதை உணர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும் 3 நாள் காலத்தினுள் பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

இராணுவ நீதிமன்றமும் அதன் செயற்பாடுகளும்

கோர்ட் மார்ஷல் என்பது பலரும் அறிந்த பெயர். இராணுவ நீதிமன்றம் என்பது இதன் தமிழ்ப் பெயர். இராணுவம் என்பது எல்லா நாடுகளிலும் ஒரு பெரிய சக்திவாய்ந்த அமைப்பாக செயல்படுகிறது. ஏனெனில் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் பாரிய பொறுப்பு இராணுவத்தினுடையது. இந்த இராணுவம் ஜனநாயக நாடுகளில்தான் ஆளும் அரசுகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்கிறது. இது ஒரு பரந்த, வலுவான, வித்தியாசமான நிறுவனமாக இயங்குவதால் இதை வழிநடத்தவென தனியான சட்டங்கள் உள்ளன. தனிப் பொலிஸ், தனி வாகன இலக்கத் தகடுகள், தனி ஆஸ்பத்திரி, தனி நீதிமன்றம், தனி மறியல்சாலை என இராணுவத்துக்கு எல்லாமே தனிதான். இது உலக வழக்கம். யுத்தம் செய்பவர்களை தனியாகத்தானே வைத்திருக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அவர் தன் பதவிக் காலத்தில் செய்திருக்கக் கூடிய குற்றங்களை விசாரிக்கும்பொருட்டு இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதையடுத்து, நாட்டில் கோர்ட் மார்ஷல் அல்லது இராணுவ நீதிமன்ற விசாரணை பற்றி பலரும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் இராணுவ நீதிமன்றம் என்றால் என்ன என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். சுல்பிகார் அலி பூட்டோவை, சதாம் உசைனை விசாரித்த மாதிரியான ஒரு தலைப்பட்ட நீதிமன்றமாக இருக்குமா? அதன் முன் நிறுத்தப்படுபவருக்கு மீட்சியே கிடையாதா? கோர்ட் மார்ஷலுக்கு அகப்படுபவர் மரண தண்டனைக்கு உள்ளாவது படு நிச்சயமா? என்றெல்லாம் பல கேள்விகள் விடையின்றி எழுந்து திரிகின்றன.

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில்தர வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் பொறுப்பு. இராணுவமும் தெளிவுபடுத்தத்தான் வேண்டும்.

எனவே இன்று அனைவராலும் பரவலாக பேசப்படும் இராணுவ நீதிமன்றம் தொடர்பாக விளக்கமளிக்கும் சந்திப்பு ஒன்றை இராணுவம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

1991ம் ஆண்டு தொடக்கம் 1998ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இராணுவ நீதிமன்றின் முக்கிய பிரதிநிதிகளில் ஒருவராக இருந்த பாதுகாப்பு படைகளுக்கான முன்னாள் நீதிபதி, அட்வகேட் ஜெனரல் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எம். ஜே. சமரகோன் இச் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.

இராணுவ நீதிமன்றம் என்றால் என்ன?
நீதிமன்றங்கள் பல வகைப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. ஒருவர் இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தண்டனை வழங்குவதற்கும் அநீதிக்கு உள்ளான ஒருவர் உரிய தீர்வை பெற்றுக் கொள்வதற்கும் இந்த நீதிமன்றங்கள் சட்ட ரீதியாக உதவுகின்றன.

ஒரு நாட்டின் சாதாரண பிரஜை தொடக்கம் அரசாங்கத்தில் உயர் பதவியை வகிக்கும் ஒருவர் வரை நாடிச் செல்வது சிவில் நீதிமன்றங்களையே. ஆனால் இராணுவ நீதிமன்றம் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

இங்கு குற்றம் செய்திருக்கக் கூடிய படையினர்கள் மாத்திரமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். சேவையிலுள்ள படைவீரர், அதிகாரி அல்லது ஓய்வுபெற்ற படைவீரர், அதிகாரி அல்லது இராஜினாமா செய்த அதிகாரி இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரித்து உரிய தீர்ப்பை வழங்குவதற்காகவே இந்த இராணுவ நீதிமன்றம் (Court Martial) நியமிக்கப்படுகிறது.

இந்த நீதிமன்றின் செயற்பாடுகள் சிவில் நீதிமன்றின் செயற்பாடுகளை விட மாறுபட்டதாகவும், சட்டத்தையும், ஒழுக்க விதிமுறைகளையும் முற்றிலும் கடைப்பிடிப்பதாகவும் அமைந்திருக்கும்.

இராணுவ நீதிமன்றின் அதிகாரம்

சிவில் நீதிமன்றத்தை போன்றே இராணுவ நீதிமன்றத்திலும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சாதாரண தண்டனை தொடக்கம் இராணுவ சட்டத்தின் 133வது பிரிவின் கீழ் வாய்மூல எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் உயர்பட்ச தண்டனையாக குறித்த நபருக்கு மரண தண்டனை வழங்கவும் முடியும்.

இந்த நீதிமன்றம் எவ்வாறு யாரால் நியமிக்கப்படும்?

இராணுவ நீதிமன்றம் மூன்று அல்லது ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். சட்டவிதிமுறைகளுக்கு அமைய முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மூன்று அல்லது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவை இராணுவ நீதிமன்ற நீதிவான்களாக நியமிப்பார்.

இதற்கு மேலதிகமாக செயற்படத்தக்க நிலையில் மேலதிக (Waiting Members) உறுப்பினர்களும் நியமனம் செய்யப்படுவர்.

இதேவேளை, நியமிக்கப்படும் மூன்று அல்லது ஐந்து உறுப்பினர்கள் தொடர்பிலோ அல்லது அவர்களில் எவரேனும் ஒருவர் தொடர்பிலோ விசாரணைக்குட்படுத்தப்படும் சந்தேக நபர் அதிருப்தி அல்லது குறைபாடுகள் காணும் பட்சத்தில் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பித்து அவர்களை மாற்றும்படி கோரலாம்.

சந்தேக நபர் முன்வைக்கும் ஆட்சேபனைகளில் உண்மை இருக்கும் பட்சத்தில் வேறு மூன்று அல்லது ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.

எவ்வாறானவர்கள் நியமனம் செய்யப்பட முடியும்?

குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் தரத்திற்கு (Rank) சமமானவராக தற்போது சேவையில் இருக்கும் ஒருவரே இந்த இராணுவ நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட முடியும்.

அவ்வாறு சமமான தரத்தைக் கொண்ட அதிகாரி ஒருவர் தற்போது சேவையில் இல்லாத பட்சத்தில் அந்த தரத்தைவிட குறைந்த தரத்தைச் (Law Rank) சேர்ந்த அதிகாரி ஒருவரை நியமிக்க முடியும்.

எந்த அடிப்படையில் கைது செய்ய முடியும்

குற்றம் இழைத்ததாக கூறப்படும் ஒருவர் மூன்று சட்ட விதிமுறைகளுக்கு அமைய கைது செய்யப்படலாம்.

1. இராணுவச் சட்டம் (Army Act)

2. இராணுவ ஒழுக்க விதிகள் (Army Disciplinary Regulations)

3. இராணுவ நீதிமன்ற ஒழுக்க விதிகள் (Army Court Martial Regulations)

யார் கைது செய்வது, முறைப்பாடு அவசியமா

இராணுவத்திலுள்ள ஒருவர் குற்றம் செய்யும் பட்சத்தில் அவரை மற்றொரு இராணுவ வீரரோ அதிகாரியோ கைது செய்ய முடியாது. மாறாக (Military Police) இராணுவ பொலி ஸாரால் மாத்திரமே கைது செய்யப்பட முடியும். கைதுசெய்ய போகும் இராணுவ பொலிஸார் குற்றவாளியி டம் கைது செய்வதற்கான காரணத்தின் அடிப்படையை மாத்திரம் கூறினால் போதுமானது.

ஒருவருக்கு எதிராக இராணுவ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில் அல்லது சேவையிலுள்ள அல்லது ஓய்வுபெற்ற ஒருவர் இராணுவ சட்டத்திற்கு முரணாக நடந்துள்ளார் என்பதாக இனங்காணப்பட்டால் அவர்களை கைதுசெய்யும் அதிகாரம் இராணுவ பொலிஸாருக்கு உண்டு.

கைது செய்வதற்கான கால எல்லை

* சேவையிலுள்ள ஒருவர் குற்றம் இழைத்து மூன்று வருடங்களுக்கு உட்பட்ட காலத்திற்குள் மேற்குறிப்பிட்ட இராணுவ சட்ட விதிகளுக்கு அமைய கைது செய்யப்படலாம்.

* சேவையிலிருந்து ஓய்வுபெற்ற படைவீரர், அதிகாரி அல்லது இராஜினாமா செய்த அதிகாரி, ஒருவரை சேவையிலிருந்து ஓய்வு அல்லது இராஜினாமா செய்த ஆறு மாத காலத்திற்குள் கைது செய்ய இராணுவ சட்டத்தின் கீழ் அதிகாரம் உள்ளது.

எந்த நேரத்திலும் கைது செய்வதற்கான குற்றங்கள்

1. தேசத் துரோகம்

2. இராணுவத்தை ஏமாற்றுதல்

3. இராணுவத்திலிருந்து தப்பி ஓடுதல்

மேற்படி குற்றச் செயல்களில் எவற்றை செய்தாலும் சரி அவர்களை எந்த நேரத்திலும் கைது செய்யலாம். கைதுசெய்யப்பட்டவுடன் எடுக்கப்படும் நடவடிக் கைகளும், கால எல்லையும் இராணுவ பொலிஸாரி னால் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு எதிரான சாட்சியங்கள் பதிவு செய்யப்படும். அந்த சாட்சிகள் தொடர்பில் ஆராயப்பட்ட (Summary of Evidence) சாட்சியங்களின் தொகுப்புகள் தயாரிக்கப்படும். சாட்சியங்களும், சாட்சியங்களின் தொகுப்புகளும் தயாரிப்பதற்கு ஒரு நாள் தொடக்கம் பல மாதங்கள் தேவைப்படலாம். இதற்கான கால எல்லை கிடையாது. சாட்சியங்களின் தொகுப்புகள் தயார்படுத்தி பூர்த்தியான பிறகு அவை இராணுவ நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும். குற்றஞ் சுமத்தப்பட்டவ ருக்கு வழங்கப்படும் சலுகைகள்

குற்றஞ் சுமத்தப்பட்ட நபர் ஒருவருக்கு சிவில் நீதிமன்றத்தில் வழங்கப்படுவதை போன்று பல்வேறு சலுகைகள் இராணுவ நீதிமன்றத்திலும் வழங்கப்படுகின்றது.

* குற்றஞ் சுமத்தப் பட்ட நபர் தனக்காக வாதாடுவ தற்கு தான் விரும்பும் சட்டத்தரணி ஒருவரை தெரிவு செய்ய முடியும்.

* விசாரணைகளின் போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணைகளும் செய்ய முடியும்.

* தனக்காக வாதிடுவதற்காக தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக தனது நண்பர் ஒருவரையும் முன்மொழிய முடியும்.

* (Court of Appeal) அல்லது (Supreme Court) உச்ச நீதிமன்றுக்கும் செல்லலாம்.

தீர்ப்பு

சிவில் நீதிமன்றில் நீதியரசர் அல்லது நீதவான் அந்த வழக்கு தொடர்பாக ஆராய்ந்து இறுதியாக தீர்ப்பை வழங்குவார்.

மூன்று அல்லது ஐந்து பேர் கொண்ட நீதிமன்றிலும் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டாலும் இறுதி முடிவை நீதியரசர் அல்லது பிரதேச நீதவான் எடுப்பார்.

இராணுவ நீதிமன்றத்தை பொறுத்த மட்டில் நியமிக்கப்படும் மூன்று அல்லது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவே இறுதி முடிவை எடுக்கும்.

அந்தக் குழு ஒன்றாக இணைந்தே தண்டனையை அறிவிப்பார்கள்.

இந்த நீதிமன்றில் உள்ளவர்கள் (Judge Advocate General) நீதிபதி, அட்வகேட் ஜெனரல் என்றே அழைக்கப்படுவர்.

தினகரனுக்காக ஸாதிக் ஷிஹான்


Read more...

Saturday, March 6, 2010

புலனாய்வுத்துறை இயக்குனர் விசாரணை செய்யப்பட்டதான செய்தியில் உண்மை இல்லை.

இலங்கை இராணுவ புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான பொறுப்புணர்சியற்ற செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், லசந்த கொலை தொடர்பாக 17 இராணுவ அதிகாரிளும் 2 சிப்பாய்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 6 தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொன்சேகா மீதான விசாரணைகள் முடிவடையும் தறுவாயை எட்டியுள்ளதாக தெரிவித்த அவர், சாட்சியங்களின் தொகுப்பு அடுத்தவாரம் இராணுவத்தளபதியிடம் கையளிக்கப்படும் எனவும் பணப்பரிமாற்றம் மற்றும் சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிவில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.

இராணுவப் புலனாய்வுத்துறை தடைசெய்யப்பட்டுள்ளதாக ஊடகவியாலளர் ஒருவர் கேட்டபோது மறுதலித்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இராணுவப் பேச்சாளர் இராணுவப் புலனாய்வுத்துறையின் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இராணுவ நீதிமன்றில் ஜெனரல் பொன்சேகாவின் வழக்கு விசாரிக்கப்படும்போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா எனக் கேட்கப்பட்டபோது உலகில் எங்கும் அவ்வாறான நடைமுறை இல்லை எனவும் இது இராணுவத்தின் உள்வீட்டு விவகாரம் எனவும் தெரிவித்துடன், இது தொடர்பாக ஜெனரல் பொன்சேகா வேண்டுகொள் விடுத்தால் அதை இராணுவத் தளபதி பரிசீலிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கை அரசின் அனுசரணையில் பிரபாகரனின் தாய் வெளிநாடு சென்றார்.

பிரபாகரனின் தாயார் பார்வதி இன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று வெளியேறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் நெருங்கிய நேசத்திற்குரியவரான சிவாஜிலிகங்கம் ஏற்பாடுகளை செய்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றது. பிரபாகரனின் தகப்பன் வேலுப்பிள்ளை உயிரிழந்தபோது அவ்விடத்தினை வைத்து சிவாஜிலிங்கம் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு பிரபாகரனின் சகோதரிகள் அனுமதி வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாககும்.

கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டி வெஸ்டன் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இவர் எந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது தொடர்பாக தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. அவரின் பிள்ளைகள் இந்தியா, டென்மார்க் மற்றும் கனடாவில் வசிப்பதால் இந்த மூன்றில் ஒரு நாட்டிற்கு சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Read more...

பான் கீ மூ இன் முடிவுக்கு ஜனாதிபதி எதிப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை அரசு நடத்திய யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க மனித உரிமைக் குழு ஒன்றை ஏற்படுத்துவது என்ற ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் முடிவை சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கடுமையாக எதிர்த்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் குறிப்பாக இருதரப்பினாலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோள் உலக மட்டத்தில் நிலவுகின்றது. ஆனால் இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

அயர்லாந்தில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே என்றும், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளது என்றும் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா.வின் மீது அழுத்தம் அதிகரிக்க, இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள், தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்குவதற்கு மனித உரிமைக் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளார் பான் கி மூன்.

தனது இம்முடிவை அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் தெரிவித்தார். பான் கி மூன் முடிவை கடுமையாக எதிர்த்துள்ள மகிந்த ராஜபக்ச, இப்படிப்பட்ட மனித உரிமைக் குழு தேவையற்றது என்று கூறியுள்ளார்.'சிறிலங்கா தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை உருவாக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் எடுத்துள்ள முடிவு தேவையற்றது என்று அதிபர் மகிந்த ராஜபக்ச கருதுகிறார்' என்று அதிபர் அலுவலக அறிக்கை கூறியுள்ளது.

'பெருமளவிற்கு மானிட உயிர் சேதத்தை ஏற்படுத்திய மிகப் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை மேற்கொண்டுவரும் நாடுகள் தொடர்பாக இப்படிப்பட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில் இப்படியொரு நிபுணர் குழு சிறிலங்காவிற்கு எதிராக அமைக்கப்படுவதை எதிர்த்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு சிறிலங்கா தள்ளப்படும் என்பதை அதிபர் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more...

07-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்

இலங்கையின் அரசியல் நிலமைகள் தொடர்பாக நடைபெற உள்ள இந் நிகழ்ச்சியில் புளட் அமைப்பின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர்.

மாலை 3மணி முதல் 5 மணி வiர் நடைபெற உள்ளது நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்

TBC Radio, live on 7th sunday March 2010, there is a exclusive political discussion with Plote Leader Dharmlingam siddarthan TBC Political analyser V Sivalingam ,TBC Germany Political analyser S Jeganathan and TBC Director V Ramarajah.
To Participate you can call us on 00 44 208 930 5313
or you also can visit our website www:tbcuk.com
at 3.00 pm to 5.00 pm.

Read more...

நித்தியானந்தாவுக்கு எதிராக திரும்ப ரஞ்சிதா மறுப்பு?

நித்யானந்தா ஆசிரமத்தில் கனடா பெண் சீடர் கொலை: லெனின் கருப்பன் புகார்
ரஞ்சிதா தற்கொலை முயன்றாரா?
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா
நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக புகார் அளிக்கவோ, அவருக்கு எதிராக திரும்பவோ முடியாது என்று நடிகை ரஞ்சிதா கூறி விட்டதாக அவருக்கு நெருக்கமான தரப்பு கூறுகிறது. நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோ காட்சி போலியானது, அது கிராபிக்ஸ் வேலை என்று நித்தியானந்தா பீடத்தின் பி.ஆர்.ஓ. நித்ய ஆத்ம பிரமானந்தா கூறியுள்ளார். மேலும், சாமியாருக்கு எதிராக புகார் அளிக்குமாறு ரஞ்சிதாவுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் ரஞ்சிதாவோ, சாமியாருக்கு எதிராக புகார் தரவோ, எதிராக செயல்படவோ முடியாது என்று உறுதிபடக் கூறி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் ரஞ்சிதா புகார் கொடுத்தால் மட்டுமே சாமியார் மீது நடவடிக்கை எடுக்க உறுதியான வாய்ப்புகள் உண்டு. எனவே ரஞ்சிதாவை சாமியாருக்கு எதிராக திருப்ப சிலர் தீவிரமாக முயன்று வருவதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் பிடியில் சிக்காமல் ரஞ்சிதா நழுவி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ரஞ்சிதா எப்படி நித்தியானந்தாவுடன் இணைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கை மகளான நடிகை ராக சுதாதான், ரஞ்சிதாவை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தாராம். கணவருடன் ஏற்பட்ட பிரிவால் மனம் உடைந்து போயிருந்த ரஞ்சிதாவை, ராக சுதாதான், பெங்களூர் ஆசிரமத்திற்கு அழைத்துப் போய் ஆறுதல் அளித்துள்ளார்.

ஆசிரம சூழல் ரஞ்சிதாவுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது. இதையடுத்து அங்கேயே தங்கியிருந்துள்ளார். அங்கு பல மணி நேரம் தியானம் செய்வாராம். யோகா குறித்த ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தாராம்.

மேலும் நித்தியானந்தர் மீது வைத்திருந்த மதிப்பு காரணமாக அவரது அறையைக் கூட ரஞ்சிதாதான் சுத்தம் செய்வாராம். அப்போதுதான் நித்தியானந்தாவுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டு விட்டதாம்.

இந்த சமயத்தில்தான் உள்ளடி வேலையில் இறங்கியுள்ளது ஆசிரமத்திலேயே இருந்து வந்த நித்தியானந்தா எதிர்ப்பு கோஷ்டி. இவர்கள் செய்த சதியில்தான் ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் மாட்டிக் கொண்டு விட்டதாக கூறுகிறார்கள்.

இன்னொரு விஷயமும் இதேபோல உலா வருகிறது. மிகக் குறுகிய காலத்தில் உலகப் புகழ் பெற்றவர் நித்தியானந்தா. 32 வயதிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம் அமைத்து உலகம் முழுவதும் மடத்துக்கு 1500 கிளைகள் உருவாக்கிய நித்யானந்தா மீது வேறு சில மடங்களின் சாமியார்களுக்கு பொறாமை இருந்ததாம்.

அவர்களும், இந்த எதிர்ப்புக் கோஷ்டியைத் தூண்டி விட்டு, நித்தியானந்தாவை வீழ்த்த சமயம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார்கள். இப்படி பல முனைகளிலிருந்து கிளம்பிய எதிர்ப்புகள், பொறாமைகள் உள்ளிட்டவை சேர்ந்துதான் நித்தியானந்தாவை, இன்று ரஞ்சிதா மூலம் வீழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறது.

ரஞ்சிதா தற்கொலை முயன்றாரா?
சாமியாருடன் உல்லாசமாக இருந்த ஆபாசப் படங்கள் வெளியாகிவிட்டதால், அந்த அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்றார் நடிகை ரஞ்சிதா என அவருக்கு ஆதரவான சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர். பிரம்மச்சாரி மற்றும் பரமஹம்ஸ என்று தன்னைக் கூறிக்கொண்ட சாமியார் நித்யானந்தமும், நடிகை ரஞ்சிதாவும் செக்ஸ் உறவு கொண்ட காட்சிகள் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியாகி உலகை அதிர வைத்தன.

இரண்டு நாள் அமைதி காத்த சாமியார் தரப்பு, பின்னர் இது போலியான வீடியோ என்றது.

ஆனால் சாமியாரிடமும் விசாரித்துவிட்டே இந்த வீடியோவை ஒளிபரப்பியதாக சன் தொலைக்காட்சி நேற்று அறிவித்தது. போலி வீடியோ என்று நித்யானந்தா தரப்பு மறுத்தாலும், அதை நிரூபிக்க தங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டனர்.

இந் நிலையில் பிரச்சனையின் மையப்புள்ளியான ரஞ்சிதா இருக்கும் இடம் தெரியவில்லை. அவரது வீடு பூட்டிக் கிடக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள தனது நெருங்கிய தோழியின் வீட்டில் அவர் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ரஞ்சிதாவை போலீசார் விசாரணை நடத்துவதற்காக தேடுகிறார்கள். ராவண் படத்துக்கு டப்பிங் பேச மணிரத்னமும் அவரது யூனிட்டாரும் கூடத் தேடுகிறார்கள்.

ரஞ்சிதாவுக்கு உதவ நடிகர் சங்கத்தின் பிரதிநிதிகளும் தொடர்பு கொள்ள முயன்று வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் ரஞ்சிதாவின் கணவர் ராகேஷ் மேனன் குடும்பத்தினரும் அவமானத்தால் நொறுங்கி போய் உள்ளனராம். ராகேஷ் மேனன் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இருவருக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை. கணவருடன் இருப்பதாகவே ரஞ்சிதாவும் கூறிவந்தார். ஆனால் தனியாகவே வசித்து வந்தார்.

தானும் சாமியாரும் உள்ள ஆபாசக் காட்சிகள் வெளியானதால் ரஞ்சிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சிலர் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், சில தினங்களாக ரஞ்சிதா பற்றி வெளியாகும் செய்திகளின் தீவிரத்தைத் தணிப்பதற்காகவும், ரஞ்சிதாவைத் தேடும் போலீசாரின் வேகத்தை மட்டுப்படுத்தவும் இந்த 'தற்கொலை முயற்சி' செய்தியை அவருக்கு வேண்டிய சிலர் பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

நித்யானந்தா ஆசிரமத்தில் கனடா பெண் சீடர் கொலை: லெனின் கருப்பன் புகார்
பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் சீடர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்ற நித்ய தர்மானந்தா புகார் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோவை ரகசியமாக எடுத்த இவர் இன்று சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன் முன் தஞ்சம் அடைந்தார். அப்போது நித்யானந்தா-ரஞ்சிதா முழு லீலைகள் அடங்கிய வீடியோ சிடியை கமிஷ்னரிடம் தந்தார்.

பின்னர் அவர் அளித்த புகாரில், ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா சீரழித்துள்ளதாகவும், ஒரு கனடா நாட்டுப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

அவரால் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட சிலர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் நித்யானந்தாவிடம் சீடர்கள் ஏமாறுவதைத் தடுக்கவே இந்த வீடியோவை எடு்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

வழக்குகள் பெங்களூருக்கு மாற்றம்:

இந்த விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், லெனின் கொடுத்த புகாரின்பேரில் சாமியார் நித்யானந்தா மத உணர்வை துன்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல், மிரட்டல், சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன் லெனின் நித்யானந்தரின் படுக்கை அறை காட்சிகள் அடங்கிய சி.டி. ஒன்றையும் கொடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுள்ளதால் வழக்குகள் அனைத்தும் அந்த மாநில போலீசாருக்கு மாற்றப்படும். இதற்கான ஏற்பாடுகள் தமிழக டிஜிபி மூலம் நடந்து வருகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக கர்நாடக போலீசாருக்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் தமிழக போலீசார் செய்வார்கள் என்றார்.

பர்மா பஜாரில் ரஞ்சிதா-நித்யானந்தா சி.டிக்கள் அதிகமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, 'அப்படியா' என்றார் கமிஷ்னர். லெனின் தந்துள்ள சாமியாரின் சி.டி. எவ்வளவு நேரம் ஓடுகிறது என்று கேட்டதற்கு, நான் சி.டி.யை பார்க்கவில்லை என்றார். அப்போது அருகில் இருந்த துணைக் கமிஷனர் ஸ்ரீதர் கூறுகையில், இந்த சிடி இரண்டரை மணி நேரம் ஓடுகிறது என்றார்.

சாமியாருடன் படுக்கை அறையில் இருப்பது நடிகை ரஞ்சிதா தானா என்று கேட்டதற்கு, ஆம் அவர் ரஞ்சிதா தான், அவர் எங்கே இருக்கிறார் என்று விசாரித்து வருகிறோம் என்றார் கமிஷ்னர்.

நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா
எந்த ஆசிரமத்துக்கும் நான் இதுவரை போனதில்லை, சாமியார்களை நம்புவதுமில்லை... கடவுளை மட்டுமே நம்புவேன்'' என்று நடிகை திரிஷா கூறினார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் சிலம்பரசன், திரிஷா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில் நிருபர்களுக்கு த்ரிஷா அளித்த பேட்டி:

சில நடிகைகள் ஆசிரமத்துக்கு சென்று சாமியாரிடம் ஆசி பெற்று வருகிறார்களே? நீங்கள் எந்த ஆசிரமத்துக்காவது சென்றிருக்கிறீர்களா?

அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஆசிரமங்களுக்கு நான் போனதில்லை. இனிமேல் நான் போகமாட்டேன். நான் சாமியைத்தான் நம்புவேன், சாமியார்களை நம்புவதில்லை. கடவுளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதெப்படி ஒரு சாதாரண மனிதன் கடவுளாக முடியும்... மனிதர்களை கடவுளாக நினைத்து காலில் விழுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

Read more...

அவுஸ்திரேலியாவில் தொடரும் இனவெறித்தாக்குதல்களுக்கு ஐ.நா கண்டனம்.

ஆஸ்திரேலியா வில் தொடர்ந்து இந்தியர்கள் மீது நடந்துவரும் தாக்குதல்களும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தொடரும் மனித உரிமை மீறல்களும் பெரும் கவலை தருவதாகவும், இவை கண்டனத்துக்குரியவை என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நவநீதம்பிள்ளை கூறுகையில், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. ஆஸ்திரேலிய நிர்வாகம், இந்தத் தாக்குதலின் மூல காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.

தேசிய அளவிலும், மாகாண அளவிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ள வேண்டும். விசாரணை மற்றும் தண்டனைகளில் தீவிரம் காட்டப்பட வேண்டும். இதுபோன்ற வன்முறைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் காணப்பட வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது வேதனை தருகிறது என்றார்.

Read more...

தமிழக மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்கவே நிருபமா இலங்கை வந்துள்ளார். விக்கிரமபாகு

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் உணர்வை மழுங்கடிக்கவே இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் சிறிலங்க பயணம் மேற்கொள்கிறார் என்று இலங்கை இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கூறியுள்ளார்.

நிருபமாவின் இலங்கைப் பயணம் குறித்து கருணாரட்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உணர்வுபூர்வமான செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவே இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவிற்கு இந்திய மத்திய அரசு முழுமையான ஆதரவை அளித்தது. ஆனால் தற்போது 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை காண்பதற்கு முயன்று வருகின்றது.

ஈழத் தமிழர்களின் பிரச்சனையில் தமிழகத் தலைவர்களிடம் ஏற்பட்டுவரும் மாற்றங்களை மழுங்கடிப்பதற்கே தற்போது இந்தியா முயன்று வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகளும் சிறீலங்காவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளன. அவற்றை எல்லாம் மழுங்கடிப்பதற்கே இந்தியா தற்போது முயன்று வருகின்றது. அதற்காகவே நிருபமா சிறீலங்கா வந்துள்ளார்.

அமெரிக்காவும், இங்கிலாந்தும் இப்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றன. ஆனால் விடுதலைப்புலிகளை முறியடிப்பதற்கு அவர்கள் தான் சிறீலங்கா அரசுக்கு பணமும், ஆயுதங்களும் வழங்கியவர்கள். தற்போது அவர்கள் அரசியல் தீர்வு பற்றிப் பேசி வருகின்றனர்.

சிங்கள இன கடும்போக்காளர்களை கொண்ட அரசிடம் இருந்து நாம் எவ்வாறு அதிகாரப்பகிர்வை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் தற்போது உள்ளூராட்சி சபைகளுக்கு எதனை வழங்கியுள்ளார்களோ அதனை தவிர நாம் எதனையும் அவர்களிடம் இருந்து பெறமுடியாது” என அவர் கருணரட்ன தெரிவித்துள்ளார்.

இடதுசாரி போர்வை போர்த்துள்ள விக்கிரமபாகு மேற்குலகத்தினதும் மஹிந்தவினதும் ஊதுகுழல் என்பது பலரும் அறிந்திராத விடயம். இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாக இந்திய அரசோ மேற்குலகமோ அரசு மீது அழுத்தம் ஒன்றை பிரயோகிக்க முனையும் போது, குறிப்பிட்ட நாடுகள் புலிகளை அழிப்பதற்கு உதவி வழங்கிய விடயங்களை அம்பலப்படுத்துவோம் என மறைமுகமாக விடுக்கும் எச்சரிக்கையாகவே மேற்படி அறிக்கை அமைந்துள்ளது.

Read more...

நிதி, நேர்மை, நியாயத்தை நிலைநாட்ட நாடு முழுக்க பிரச்சாரம் செய்வேன். அனோமா.

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரான சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்கா முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்காக நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் என அவரது மனைவி அனோமா தெரிவித்துள்ளார்.

எனது கணவரால் மக்களுக்கு உரையாற்ற முடியாது போனாலும் அவர் நாட்டு மக்களின் நலனில் அக்கறைகொண்டுள்ளதாகவும், அவர் சார்பாக வடகிழக்கு உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் இடம்பெறும் பிரச்சாரங்களில் பங்குகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் நீதி, நேர்மை மற்றும் நியாயத்தை நாட்டில் நிலைநாட்டும் நோக்கில் தாம் செயல்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஸ்ரீபதி சூரியாராட்சியின் மனைவி புதிய சாதனை : அரசுடன் இணைந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு கம்பஹா மாவட்டத் தலைவியாகவும் ஐ. தே. க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமாகவுள்ள காலச்சென்ற ஸ்ரீபதி சூரியாராட்சியின் மனைவி 48 மணித்தியாலயங்களுள் முன்று அரசியல் கட்சிகளின் அங்கத்துவத்தை கொண்டவராக இலங்கை அரசியலில் பாரிய சாதனை ஒன்றை புரிந்துள்ளார்.

கடந்த 3ம் திகதி மங்கள சமரவீரவின் செயற்பாடுகளை விமர்சித்தவராக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டு அதன் உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட அவர் மறுநாள் நான்காம் திகதி அலரி மாளிகை சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் கரு ஜெயசூரியவின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பபை ஏற்படுத்தி தான் சகல பதிவிகளிலும் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Read more...

பான் கீ மூன் ஜனாதிபதியுடன் தொபேசியில் பேசினார். விசேட நிபுணர் குழு அமைக்கப்படும்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க இருப்பதாக ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கடந்த வியாழக்கிழமையன்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கைப்படையினர் சுட்டுக்கொன்றது உட்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, பான் கீ மூன் விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என சித்ரவதைகள் மற்றும் சட்டவிரோத கொலைகள் தொடர்பான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி பிலிப் அஸ்ட்டன் கோரியிருந்தார்.

அதேவேளை, கடந்த மாதம் இலங்கைக்கு செல்லவிருந்த ஐக்கிய நாடுகளின் அரசியல்துறை ஆலோசகர் லின் பாஸ்கோ அறிவித்தபடி அங்கு செல்லவில்லை. அவர் அடுத்த வாரம் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு செல்கின்ற போதும், இலங்கைக்கு செல்லவில்லை.

இது குறித்து கேள்வி எழுப்பிய இனனர் பிரஸ் சிட்டி ஊடகவியலாளர்கள், இலங்கை விடயத்தில் ஏனைய உறுப்பு நாடுகளின் அழுத்தம் காரணமாகவே ஐக்கிய நாடுகளின் செயலாளர் தாமதமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என ஐக்கிய நாடுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜெராட் ஆருட் தெரிவித்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம் குறிப்பிட்ட நிபுணர்கள் குழு ஐ.நாவின் செயலருக்கே பரிந்துரைகளைச் செய்யும் எனவும் ஜனாதிபதிக்கு எவ்வித அறிவுறுத்தல்களையும் வழங்கமாட்டாது என பான் கீ மூன் உறுதியளித்தாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் றோகிந்த போகல்லாகம தெரிவித்துள்ள அவர் இக்கலந்துரையாடலானது வழமையானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

பொருட்களின் விலையேற்றத்திற்கு கடன் சுமையே காரணம். பிரதமர்.

புலிகளியக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் கொன்றொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்திற்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஏற்பட்ட கடன் தொகை நிலுவையில் உள்ள நிலையில் பொருட்களின் விலையை குறைக்கமுடியாது என இலங்கையின் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுத தளவாடங்களுக்காகவும் வெடிபொருட்களுக்காகவும் செலுத்தப்படவேண்டிய தொகை நிலுவையில் உள்ளதால் அதனை திருப்பி செலுத்தவேண்டும்.

அதனால் பொருட்களின் விலையை குறைக்கமுடியாது.அத்துடன் 'மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக' மற்றைய நாடுகளால் கொடுக்கப்பட்ட கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.

போர் தற்போது இல்லாவிட்டாலும் பணத்தை சேமிக்கவும் முடியாது. வரியைக் குறைத்து பொருட்களின் விலையையும் குறைக்கமுடியாது. இருக்கின்ற கடனை திருப்பி செலுத்தவேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது 50 விழுக்காடு போரே முடிவடைந்துள்ளதாகவும், இன்னும் 50 விழுக்காடு போர் உள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

இலங்கையின் ஊடக சுதந்திரம்: அமெரிக்கா கவலை

இலங்கையில் ஊடக சுதந்திரம் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான அமெரிக்க துணை தூதரக அதிகாரி வெலரி ப்ளவர், இந்த கவலையை வெளியிட்டார்.

உண்மையை எழுதுவதற்கும், கட்டுரைகளை பிரசுரிப்பதற்கும் தயக்கம் காட்டப்படுகிறது. சுய தணிக்கை செய்யும் நிலையும், லஞ்சம் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கும் தடைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

கல்முனை மா. ந. சபை தமிழரசுக்கட்சி உறுப்பினர் கணேஷ் சு.கவில் இணைவு.

தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிவருவதாக அவர் குற்றச்சாட்டு : இனியபாரதியின் வெற்றிக்காக உழைப்பேன்.
கல்முனை மாநகரசபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் நேற்று முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.

இது தொடர்பான நிகழ்வு நேற்று காரைதீவில் நடைபெற்றது.

பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (ரிஎம்விபி) கட்சி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் இவர், போட்டியிலிருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தார். இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட காத்தமுத்து கணேஷ் ஜனாதிபதியின் இணைப்பாளரான கு. இனியபாரதியைச் சந்தித்து கட்சி மாறியதற்கான விளக்கத்தை அளித்தார்.

தேசிய நல்லிணக்க அமைச்சின் இணைப்பாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி, இணைப்பாளர் ரி. நந்தகுமார் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

அங்கு காத்தமுத்து கணேஷ் கருத்துத் தெரிவிக்கையில்:- “நான் கடந்த 30 வருட காலமாக இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்தேன். அவர்களால் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் இதுவரை கிட்டவில்லை. 1946 களிலிருந்த தமிழ்த் தலைவர்கள் தந்தை செல்வா, ஜி. ஜி. பொன்னம்பலம் போன்றோர் நல்ல தலைமைத்துவத்தை அன்று வழங்கினர்.

இன்று தமிழர்களுக்கு எந்தவித தலைமைத்துவமும் இல்லை. தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இனியும் தமிழ் மக்கள் அவர்களை நம்பக்கூடாது. சரத் பொன்சேகாவுடன் கடந்த தேர்தலில் 10 அம்சக்கோரிக்கையை முன்வைத்து ஒப்பந்தமொன்றைச் செய்திருந்தனர்.

22 எம்பிக்களில் 5 பேரை மந்திரிசபை அமைச்சராக்குவதென்பது அதில் ஒன்று. அது தோல்வியில் முடிந்தது. அரசியல் சாணக்கியம் அவர்களுக்கு இல்லை.

யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 48 ஆயிரம் வாக்குகள் பெற்ற கஜேந்திர பொன்னம்பலம் முதல் தங்கேஸ்வரி வரை சகலரும் விலகினார்கள். பழைய தலைவர்களின் ஆசனம் பறிபோய்விடும் என்பதற்காக இந்நாடகத்தை நடத்துகிறார்கள். கல்முனைக்கு வந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤டன் கூட்டுவைக்கிறார்கள். இப்பச்சோந்திகளை யார் நம்புவது?

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றக் கூடிய 45 ஆயிரம் வாக்குகளை பெறக்கூடிய ஒரே வல்லமை ஸ்ரீல. சு. கட்சியின் இனியபாரதி க்கு மட்டுமே உண்டு.


Read more...

Friday, March 5, 2010

கம்போடியாவின் ஏவுகணைச் சோதனை

அண்டை நாடான தாய்லாந்துடன் நில உரிமை தகராறு நிலவி வரும் வேளையில்,கம்போடிய ராணுவம் வியாழக்கிழமை பகிரங்கமாக ஏவுகணைச் சோதனை நடத்தியிருக்கிறது. தாய்லாந்துடனான எல்லையிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விமானத் தளத்திலிருந்து கம்போடிய ராணுவத்தினர் 200 ஏவுகணைகளைப் பாய்ச்சினர்.

ஆனால், தாய்லாந்துக்கு எதிராகத் தங்களது வலிமையைக் காட்டிக்கொள்வது இதன் நோக்கமல்ல என்று தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் சும் சொச்சீட் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார். “இந்தச் சோதனையை மிரட்டலாகவோ அல்லது அண்டை நாடுகளிடமும் அந்நிய நாடுகளிடமும் எங்களது பலத்தைக் காட்டிக்கொள்ளவோ நாங்கள் செய்யவில்லை” என்றார் அவர்.

“நாட்டைத் தற்காக்கும் கடமையை நிறைவேற்றும் நோக்கத்துடன், நமது படைகளின் வலிமையைப் பெருக்குவதே இதன் நோக்கம்” என்று பிரதமர் ஹுன் சென் சென்ற வாரம் ஆற்றிய உரையில் கூறினார்.

பனிப்போர் காலத்தில் ரஷ்யாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் நெடுங்காலமாகச் சரக்குக் கிடங்குகளில் பயன்படுத்தப்படாமல் இருந்தன. அவற்றின் தரத்தைச் சோதிக்கவே ஏவுகணை சோதனை நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

Read more...

ஜெனரல் பொன்சேகாவின் உதவியாளரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி.

இராணுவப் பொலிஸாரின் தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் இராணவத் தளபதியும் நடந்து முடிந்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் பொன்சேகாவின் உதவியாளர்கள் தொடர்ந்து விசாரணைகளுக்கு உட்பட்டு வருகின்றனர். எதிர்வரும் சில தினங்களில் அவர் மீதான குற்றப்பத்திரிகை சிவில் மற்றும் இராணுவ நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் என அரச தரப்பிலிருந்து கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஜெனரல் பொன்சேகாவின் மருமகனின் தாயாரினால் கொழும்பு தனியார் வங்கியொன்றின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 75 மில்லியன் ரூபாய்கள் தொடர்பாக, கொழும்பில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றின் உரிமையாளரான பிரசன்ன லியனகே டொன் சன்ஜீவ குமார என்பவரை விசாரிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவை வேண்டிய சீஐடியினர் அவர் நாட்டை விட்டு ஒடிவிட்டதாக நம்புவதாகவும், அவரை கைது செய்வதற்கு சர்வதே பொலிஸாரின் உதவியை நாடும் பொருட்டு பிடிவிறாந்து பிறப்பிக்கவேண்டும் என மன்றை வேண்டினர். சீஐடி யினரின் வேண்டுதலை ஏற்று கல்கிசை மஜிஸ்ரேட் நீதிவான் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார்.

குறிப்பிட்ட நபரே பணத்தினை டிபென்டர் வண்டியொன்றில் வங்கிக்கு கொண்டுவந்தாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சீஐடி யினர் மன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

ஜெனரல் பொன்சேகாவில் மருமகனான தனுன திலகரத்தினவை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக கூறப்படுவதுடன், அவரை தேடி இலங்கை கிறிக்கட் குழுவைச் சேர்ந்த ஹசான் திலகரட்ணவின் வீடு சோதனைக்குள்ளாகியுள்ளது. தனுன பல லட்சம் முறைகேடு செய்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹசான் திலகரத்தின இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் என்பதுடன் அவர் தனுனவின் நெருங்கிய உறவினரும் அவார். ஆவர் தற்போது அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளதுடன் ஜெனரல் ஜேவிபி இணைந்துள்ள கூட்டில் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதும் குறிப்பிடத்கதாகும்.

ஹசானை விசாரித்த சீஐடி யினர் தனுன மறைந்துள்ள இடம் தொடர்பாக வினாவியுள்ளனர். துனது வீட்டில் சிறிது காலங்களுக்கு முன்னர் தனுன தங்கியிருந்துள்ளதாக தெரிவித்த ஹசான் நீதிமன்றில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டபின்னர் தனது வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

அதே நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை, அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை அங்கு சென்றிருந்த போது, பொன்சேகாவுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆணைக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தம்மால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? போன்ற விடயங்கள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. ஆணைக்குழவின் பரிந்துரையில் ஜெனரல் தங்கவைக்கப்பட்டுள்ள அறைக்கு போதிய காற்றோட்டம் மற்றும் அவருக்கான வைத்திய வசதிகள் என்பன சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

தமக்கான வசதிகளை அதிகரிக்குமாறு கோரி பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுவை அடுத்தே மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கு சென்றது.

Read more...

நவநீதம்பிள்ளையின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றார் மஹிந்த சமரசிங்க.

இலங்கையில் நடைபெற்ற போர்குற்ற விசாரணைகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் அவசியம் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் வருடாந்த அமர்வில் அறிக்கை தயாரித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இக்கூற்றினை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை நவநீதம்பிள்ளை நினைவுகூர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

போரின்போது இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமைகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கவேண்டும் என்றும், இதற்காக சர்வதேச நாடுகள் உதவுமுடியும் எனவும் நவநீதம்பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த மே மாதம் யுத்தம் முடிவடைந்த நிலையில்,இலங்கை அரசு சமர்பித்த யோசனைகள் சபையில் நிறைவேற்றப்படாதது குறிப்பிடத்தக்கது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

நிருபமா ராவ் நாளை இலங்கை வருகை

இந்தியாவின் அயலுறவுச் செயலாளர் நிருபமா ராவ், இரண்டு நாள் பயணமாக நாளை இலங்கை வருகிறார். இந்தியாவின் அயலுறவுச் செயலர் பதவியை ஏற்றபின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதாலும், இலங்கையில் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள இந்தச் சமயத்தில் அவர் இலங்கைக்கு வருவதாலும் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இலங்கையில் இந்தியத் தூதராகவும், தூதரகத்தின் முதலாவது செயலாளராகவும் பணியாற்றியவர் நிருபமா ராவ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை அதிகாரப் பரவலாக்கல் யோசனைத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகையில், நிருபமா ராவின் தற்போதைய வருகை மிகவும் முக்கியமானதாகும்.

நிருபமா ராவின் இலங்கை வருகை வழக்கமான இரு தரப்பு பரஸ்பர நலன் அடிபடையிலான கலந்துரையாடல் தொடர்பானதே என அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை இனப்பிரச்னை விவகாரத்தில் தீர்க்கமான சில கொள்கை முடிவுகள் குறித்து பொதுத் தேர்தலுக்கு முன்னர் இலங்கை சூசகமாக தெரிவிக்க வேண்டும் என இந்தியா கருதுவதாகவும், புதுடெல்லியின் அந்த நிலைப்பாட்டை நிருபமா ராவ் தனது கொழும்பு விஜயத்தின் போது இங்குள்ள அதிகார வர்க்கத்திடம் அழுத்தம், திருத்தமாகத் தெரியப்படுத்துவார் எனவும் கூறபடுகிறது.

Read more...

போலிச் சாமியார் நித்யானந்தாவுக்கு கடும் தண்டனை தரமுடியும்! - வக்கீல்கள்

'நம்பி ஏமாந்துட்டேனே...!' - நித்யானந்தா பற்றி நடிகை தாரா
நித்யானந்தர் சொ‌த்து‌க்க‌ள் முட‌க்கமா? கர்நாடக அமைச்சர் ப‌தி‌ல்


சென்னை, பிரபல சாமியார் நித்தியானந்தா, ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோவை பிரபல தமிழ்த் தொலைக்காட்சி (மார்ச்.2) ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பக்தர்களும், இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் நித்யானந்தா ஒரு தமிழ் நடிகையுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருவண்ணாமலையில் 1978ம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் நிஜ பெயர் ராஜசேகரன். இவருக்கு கர்நாடகத்திலும், தமிழகத்திலும் ஆசிரமங்கள் உள்ளன. நித்தியானந்தாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். பெங்களூரில் மைசூர் சாலையில் இவரது தலைமையகம் உள்ளது. இவர் பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன் 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக தியானபீடத்தின் வெப்சைட் கூறுகிறது.

இந்நிலையில், நித்தியானந்தா, ஒரு நடிகையுடன் இருப்பது போன்ற வீடியோவை பிரபல தமிழ்த் தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நடிகையின் முகத்தை மட்டும் அந்தத் தொலைக்காட்சி மறைத்து விட்டது. மாறாக அவரது பெயர் 'ஆர்' என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகும் என்று மட்டும் குறிப்பிட்டது.

அந்த நடிகையும், நித்தியானந்தாவும் சின்னச் சின்ன சில்மிஷங்களில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ எப்போது எப்படி எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைதான் இதை ரகசியமாக படமாக்கியிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த நடிகைதான் இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு அனுப்பியிருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது.

ஆசிரமம் சூறை

புனிதமான காவி உடை தரித்து நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் சல்லாப லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாமியாரின் ஆசிரமத்திற்கு விரைந்து வந்த இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி ஆசிரமத்தைத் தாக்கினர். அங்கிருந்து நித்தியானந்தாவின் படங்களை கிழித்துத் தீயிட்டுக் கொளுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென ஆசிரமம் முன் வந்து நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சிவபாபு உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். ஆசிரமத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கல்கி ஆசிரமத்தில் மக்கள் தாக்குதல்

சித்தூர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்தை பொதுமக்கள் தாக்கி சூறையாடி தீவைத்தனர். 2 பஸ்களுக்கும் தீவைக்கப்பட்டது. சித்தூர் மாவட்டம் வரதையாபாலம் என்ற இடத்தில் இந்தஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தின் தகவல் அலுவலகமும் தாக்கி சூறையாடப்பட்டு விட்டது.

ஆசிரமத்தில் பெண்களுக்கு லேகியத்தில் போதை மருந்தை கலந்து தருவதாகவும், பண மோசடி நடப்பதாகவும் கூறி பொதுமக்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர்.

தாக்குதலில் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. 2 பஸ்களுக்குத் தீவைக்கப்பட்டது. மேலும் ஆசிரமத்திற்குள் இருப்போரையும் பொதுமக்களே மீட்டு வந்தனர்.

ஆசிரமம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் பெருமளவில் விரைந்து வந்தனர். போராட்டக்காரர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தினர். ஆசிரமத்தைக் காக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி அருகே உள்ள ஏம்பலம் கிராமத்தில் உள்ள நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் சூறையாடப்பட்டது. ஆசிரமத்துக்குள் இருந்த பொருட்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பதட்டம் அதிகரித்தது. மேலும் ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த சாமியாரின் படங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதேபோல் அம்பலத்தார் மடத்து வீதியில் உள்ள சாமியாரின் யோகா மையத்திலும் சாமியாரின் படங்களுக்கு தீ வைக்கப்பட்டது. யோகா மையம் சூறையாடப்பட்டது.

கதவைத் திற காற்று வரும்

கதவைத் திற காற்று வரும் என்ற தலைப்பில் நித்தியானந்தா சுவாமிகளின் போதனைகள் குறுகிய காலத்தில் பிரபலமானவை.

இவரது ஆசிரமக் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது.

ஒரு சிலரின் இத்தகைய காமக் களியாட்டங்களால் உண்மையான பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள நேர்மையான சாமியார்களின் பெயரும் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டமானது.

போலிச் சாமியார் நித்யானந்தாவுக்கு கடும் தண்டனை தரமுடியும்! - வக்கீல்கள்
போலிச்சாமியார் நித்தியானந்தன் செக்ஸ் லீலைகளுக்கு தண்டனை தர முடியாவிட்டாலும், அவருக்கெதிராக பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் மோசடி, மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து பெரும் சொத்து குவித்தது, மதத்தை இழிவுபடுத்தியது என பல்வேறு மோசடிகள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை கூட பெற்றுத் தர முடியும், என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

நித்யானந்தா மீது தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் அவர் மீது யாரும் செக்ஸ் புகார் கூறாததால், அவர் தப்பித்துக் கொள்வார் என்று கூறப்பட்டது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஆயுள்தண்டனை வரை பெற்றுத் தர முடியும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருள்ரமேஷ் கூறுகையில், "இப்போது நித்யானந்தம் மீது 420, 295 பி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி, மத உணர்வுகளைப் புண்படுத்தியது போன்ற பிரிவுகள் இவை.

இவை தவிர, அவர் மீது சமூக அமைதியைக் கெடுத்ததற்காகவும் அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும். குண்டர் சட்டத்தில் கூட அவரை உள்ளே தள்ளலாம் அரசு நினைத்தால். ஆனால் செய்வார்களா தெரியவில்லை..", என்றார்.

வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், "சாமியாராக இருப்பவர்கள் இல்லறத்தில் ஈடுபடகூடாது என்று எந்த சட்டமும் கூறவில்லை. ஒரு மைனர் பெண்ணிடம் அவள் விரும்பியோ, விரும்பாமலோ உறவு கொண்டால் குற்றம் .

ஆனால் வயதுக்கு வந்தவர்கள் விரும்பி உறவு வைத்துக் கொண்டால் யாராலும் கேட்க முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை.

நித்யானந்தா விவகாரத்தில் நடிகை ரஞ்சிதாவுடனான நெருக்கம் ஒருவேளை உண்மையாக இருந்தால் கூட ரஞ்சிதா புகார் செய்யாத பட்சத்தில் சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

ஆனால் மோசடி, சமூக அமைதியைக் கெடுத்தது போன்ற பிரிவுகளில் தகுந்த ஆதாரங்கள் உள்ளபட்சத்தில் கடுமையான தண்டனை வாங்கித் தரமுடியும்", என்றார்.

வழக்கறிஞர் ராஜேந்திரன் கூறுகையில், "ஊடகங்களின் செய்தி மட்டுமே முழுமையான ஆதாரமாகிவிட முடியாது என்றாலும், குறிப்பிட்ட சம்பவம் உண்மையில் நடந்திருந்தால், அதற்கான ஆதாரங்களுக்கு வலு சேர்க்க ஊடக செய்திகளும் எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு நிறைய முன் உதாரணங்கள் உள்ளன.

நடந்தது என்ன என்பதை முழுமையாகச் சொல்ல பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் உண்டு. அந்த வகையில் இப்போது வந்துள்ள செய்திகள் மற்றும் கையிலுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு தொடரலாம்.

சாட்சிகள் வலுவாக அமைந்தால் நித்யானந்தம் கம்பி எண்ணுவதைத் தவிர்க்கவே முடியாது..", என்றார்

'நம்பி ஏமாந்துட்டேனே...!' - நித்யானந்தா பற்றி நடிகை தாரா
நித்யானந்த சாமியார் ஒரு மோசடி ப் பேர்வழி. அவரை நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி என்று புலம்பியுள்ளார் நடிகை தாரா.

கன்னடத்தில் முன்னணி நடிகை கம் அரசியல்வாதி இந்த தாரா. தமிழில் இங்கேயும் ஒரு கங்கை, நாயகன் என சில படங்களில் நடித்தவர்.

நித்யானந்தரின் மிகத் தீவிரமான பக்தை இந்த தாரா. நித்யானந்தமே பக்தர்களுக்கு 'நித்திய ஆனந்தம்' என்றும், கடவுள் அவதாரம் என்றெல்லாம் வெளிப்படையாக ஆதரவு அளித்தவர் தாரா. நித்யானந்தத்துக்காக பல ரியல் எஸ்டேட் டீல்களில் இவர் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. கன்னடத் திரையுலகில் நித்யானந்தன் புகழ் பரப்புவதில் முன்னணியில் இருந்தார்.

தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் நித்யானந்தனின் பெங்களூர் பிடாதி ஆசிரமத்துக்குப் போய் நாள் முழுக்க அங்கே சேவைகள் செய்வது தாராவின் வழக்கம்.

இந்த நிலையில் நித்யானந்தன் - ரஞ்சிதா பலான டிவிடி சன் செய்திகளில் ஒளிபரப்பாகி, நாடு முழுவதும் கொதிப்பைக் கிளப்ப, அதிர்ந்து போய்விட்டாராம் தாரா.

இன்று தாராவின் பிறந்த நாள்!

ஆசிரமத்துக்குப் போவீர்களா என அவர் முன் மைக்கை டிவிக்காரர்கள் நீட்டியதுதான் தாமதம். கண்ணீரும் கோபமுமாக பொறிந்து தள்ளினாராம் தாரா.

அவர் கூறுகையில், "என்ன விளையாடறீங்களா.. மனுசன் போவானா இனிமே அந்த ஆசிரமத்துக்குள்ள. ச்சே.. நான் எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன். என்னை மாதிரி எத்தனை லட்சம் பக்தர்கள் தெரியுமா அந்த ஆளுக்கு (!). இப்படி ஒரு அசிங்கம் நடந்த இடத்துல இனி நான் கால் வைப்பேனா?

இந்த பக்தர்களை ஏமாற்ற எப்படி நித்யானந்தனுக்கு மனசு வந்தது. இனி மனித உருவில் சாமிகள் என்று சொல்லும் யாரையும் நம்பக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்த ரஞ்சிதா விவகாரத்தின் முழுப் பின்னணியையும் வெளியில் கொண்டுவர வேண்டும். இந்த மாதிரி போலிச் சாமியார்களை ஒழிக்க வேண்டும்...!" என்றார்.

நித்யானந்தர் சொ‌த்து‌க்க‌ள் முட‌க்கமா? கர்நாடக அமைச்சர் ப‌தி‌ல்
நித்யானந்தர் ஆசிரமம் அரசு நிலத்தில் உள்ளதால் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எ‌ன்று‌ம் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அ‌றி‌க்கை வ‌ந்தது‌ம் சொ‌த்து‌க்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் க‌ர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா தெரிவித்தார்.

க‌ர்நாடகா சட்டப்பேரவை நே‌ற்று கூடியதும் நித்யானந்தர் பிரச்சனையை கிளப்பி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசினார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது சொத்துக்களை முடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதில் அளித்து பே‌சிய அமைச்சர் ஆச்சார்யா, சாமியார் நித்யானந்தர் ஆசிரமம் கர்நாடகாவில் பிடுதியிலும் உள்ளது. அந்த ஆசிரமம் உள்ள இடம் அரசு நிலம். இந்த ஆஸ்ரமத்துக்கு நமது நாட்டில் பல மாநிலங்களில் இருந்தும், அய‌ல்நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

அ‌ய‌‌ல்நாடுகளிலும் அவருக்கு ஆஸ்ரமம் உள்ளது. இவரைப் பற்றி 2ஆம் தேதி இரவு தனியார் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் அவரது ஆசிரமத்தின் மீது தாக்குதல் நடத்தினர். ஒரு கட்டடத்துக்கு தீ வைத்துள்ளனர். இதுபற்றி அறிந்ததும் அங்கு விரைந்து சென்று சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கட‌ந்த 3ஆ‌ம் தே‌தி அந்த ஆசிரமத்தில் இருந்த இரு குடில்கள் தீப்பிடித்து எரிந்துவிட்டன. மேலும் நித்யானந்தர் மான் தோலைப் பயன்படுத்துவதாக தகவல் வெளியானதை அடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த ஆசிரமத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். ஆனால் மான்தோலோ அல்லது வேறு விலங்கள் தோலோ கிடைக்கவில்லை. அந்த ஆசிரமத்தில் இருந்து 26 கிலோ சந்தன மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

அதுபற்றி விசாரித்தபோது ஆசிரமத்தில் இருந்த சந்தன மரத்தை சில நாள்களுக்கு முன் திருடர்கள் வெட்டி எடுத்துச் சென்று கிளைகளை அங்கேயே போட்டுவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் அதுபற்றி காவ‌ல்துறை‌யிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. நித்யானந்தர் குறித்து தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம். அவர் கர்நாடகம் வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவரது ஆசிரமத்தின் சொத்துக்கள் தொடர்பாக தகராறு இருந்து வருவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கும்படி ராம்நகர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்சியர் அறிக்கை கிடைத்ததும் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஆசிரமம் அரசு நிலத்தில் உள்ளதால் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மேலும் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட விடியோ காட்சிகள் பிடுதி ஆசிரமத்தில் எடுக்கப்பட்டதல்ல. அவை தமிழகத்தில் உள்ள ஆசிரமத்தில் எடுக்கப்பட்டுள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ச்சா‌‌ர்யா கூ‌றினா‌ர்.

Read more...

யு.எஸ். ராணுவத் தலைமையகம் பென்டகனில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் காயம்: சுட்டவர் பலி

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் நுழைவாயிலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பிச் சுட்டதில், மர்ம நபர் காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

அந்த மர்ம நபரால் சுடப்பட்டு காயமடைந்த இரு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்ட நபர் அமெரிக்கர் என்று தெரிய வந்துள்ளது. பென்டகன் வளாகத்திற்குச் செல்லும் மெட்ரோ ரயில் நிலையம் வழியாக, பென்டகன் நுழைவாயிலை அடைந்தார் அந்த நபர்.

அப்போது அங்கு நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரிடம் நுழைவாயிலைத் தாண்டிச் செல்ல வழங்கப்படும் பாஸைக் காட்டுமாறு கேட்டனர். இதையடுத்து தனது கோட் பைக்குள் கையை விட்ட அந்த நபர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அருகில் நின்றிருந்த மற்ற பாதுகாப்பு அதிகாரிகள், அந்த மர்ம நபரை சரமாரியாக சுட்டனர். இதில் அவர் சுருண்டு விழுந்தார். அவரை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அமெரிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்கியபோது பென்டகனும் தாக்கப்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் அது புதுப் பொலிவுடன் இயங்கத் தொடங்கியது. நான்கு மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்க ராணுவத்தின் போர்ட் ஹூட் முகாமில் ஒரு டாக்டர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி சிலரது உயிரைப் பறித்தார்.

இந்த நிலையில் பென்டகனுக்குள் ஊடுறுவ முயன்ற ஒரு நபர் சுட்டதில் 2 பேர் காயமடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இது தீவிரவாத முயற்சி போல தோன்றவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் ஜான் பேட்ரிக் பெடல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது வயது 36.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பென்டகனுக்குள் செல்லும் ஐந்து நுழைவாயில்களும் மூடப்பட்டன. சிறிது நேரத்திற்குப் பின்னர் துப்பாக்கிச் சூடு நடந்த நுழைவாயில் தவிர மற்ற நான்கும் திறக்கப்பட்டன.

Read more...

சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: பலத்த பாதுகாப்பு

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கடலோரத்தில் நிற்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கிடைத்த தகவலால், கடல் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கப்பல் மற்றும் விமானங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் வாங் கான் செங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று இதனை தெரிவித்த அவர், நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் கூறிய அவர், எந்த பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதல் சதிக்கு திட்டமிட்டுள்ளது என்பதை தெரிவிக்கவில்லை.

இதனிடையே மலேசியாவுக்கும் இதே தாக்குதல் இருப்பதாகவும், இதனால் அங்கும் இதேப்போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

Thursday, March 4, 2010

ஐரோப்பாவில் கைதாகும் புலிகள்.

கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் பெயரால் அராஜகங்களை மேற்கொண்டுவந்த புலம்பெயர் புலிகள் கைது செய்யப்படுகின்றனர். ஜேர்மன் ஒபகோசன் பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் கழகத்தினை நேற்று சுற்றிவளைத்த ஜேர்மன் பொலிஸார் அங்கிருந்த ஜேர்மன் புலிகளின் பொறுப்பாளர் வாகீஸன் உட்பட ஐவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரணிகள் பொலிஸாரைத் தொடர்பு கொண்டபோது பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய பல சட்டவிரோத செயல்கள் தொடர்பாக கைது இடம்பெற்றுள்ளதாகவும் , பொலிஸாரின் விசாரணைகள் முடிவுற்று வழங்கு நீதிமன்றுக்கு வரும்போது போதிய கால அவகாசத்துடன் சட்டத்தரணிகளுக்கு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் அதுவரை காத்திருக்கும்படியும் பொலிஸார் தெரிவித்துள்ளதாக புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

சமாதான ஒப்பந்த காலத்தில் வன்னி சென்றிருந்த தமிழ் மக்களை புலிகள் கடத்தி மற்றும் பலவந்மாக தடுத்து வைத்திருந்து பணம் பறித்திருந்ததுடன் பல மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டிருந்தனர். இவ்விடயங்கள் தொடர்பாக வெளிநாடுகளிலிருந்து சென்றிருந்த பாதிக்கப்பட்டவர்கள் தாம் வசிக்கும் நாடுகளுக்கு இது தொடர்பாக அறிவித்திருந்துடன், இச்செயற்பாடுகளுக்கும் வெளிநாடுகளில் செயற்பட்ட புலிகளுக்கும் இடையேயான தொடர்புகளும் விபரிக்கப்பட்டிருந்தது. நீண்டநாட்கள் தமது விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தற்போது கைதுகளை மேற்கொண்டுள்ளனர்.

வன்னியில் உயிர்தப்பிய புலிகளில் பலர் தற்போது ஐரோப்பா கனடா போன்ற நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரிவருகின்றனர். அவர்களை விசாரிக்கும் குறிப்பிட்ட நாடுகளின் விசேட பொலிஸ் பிரிவினர் தத்தமது நாடுகளில் உள்ள புலிகளின் முக்கியஸ்தர்களுக்கும் வன்னிக்கும் இடையே காணப்பட்ட தொடர்புகள் தொடர்பாகவும் , மனித உரிமை மீறல்களுக்கான பங்களிப்புக்கள் தொடர்பாகவும் துரவித்துரவி விசாரணைகள் மேற்கொண்டு சாட்சியங்கள் பதிவு செய்து அதனடிப்படையிலேயே விசாரணைகள் தொடர்வதாகவும் தெரியவருகின்றது.

Read more...

எதிர்வரும் நவம்பர் 18ல் ஜனாதிபதி பதவி ஏற்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இரண்டாவது முறையாக வரும் நவம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார் என அமைச்சரவை பேச்சாளர் ஜி எல் பீரிஸ், இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு ராஜபக்ச முதல் தடவையாக அதிபராக பதவியேற்றுக்கொண்ட ஜனாதிபதி தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே தேர்தலை நாடாத்தி அதில் வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 30 நாட்களுள் பதிவிப்பிரமாணம்; செய்து கொள்ளவேண்டும் என்ற கருத்துக்கள் நிலவிய நிலையில் உச்சநீதிமன்ற ஆலோசனைப்படி எதிவரும் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி அவர் இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.

அவர் பதவியேற்கும் காலத்திலிருந்து ஆறு வருடங்களுக்கு பதவி வகிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும் ஜனாதிபதி தனது முதலாவது சேவைக்காலமான 6 வருடங்கள் முடிவடைந்த பின்னர் இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பிக்கலாம் என எதிர்பார்த்து நீதிமன்றை நாடியதாகவும் அதற்குரிய அனுகூலங்கள் சட்டத்தில் இல்லை என்பதால் தீர்ப்பு சாதகமற்றதாக அமைந்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com