Thursday, March 4, 2010

சீனாவிடமிருந்து புதிய விமானங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றது.

இராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக சீனாவிடம் இருந்து 6 சியான் எம் ஏ 60 ரக விமானங்களை இலங்கை வாங்குகிறது. இந்த விமானங்கள் சீனாவின், தேசிய வான் தொழில்நுட்ப கூட்டுத்தாபனத்தில் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாக விமான போக்குவரத்து இணையத்தளம் தெரிவித்துள்ளது.

'பிளைட்குளோபல்' என்ற இணையத்தளத்தின் தகவல்படி, இந்த 6 விமானங்களும் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதில், 56 இருக்கைகளைக் கொண்ட இரண்டு விமானங்கள் இந்த வருடத்தில் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளன.ஏனையவை 2011 ம் ஆண்டில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

எம் ஏ 60 விமானங்கள், 52 முதல் 60 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய தன்மையை கொண்டிருக்கின்றன. இலங்கையில் தற்போது, போக்குவரத்துகளுக்காக ஏ.என் அன்டனோவ், லொக்ஹீட் மார்டின் சி- 130 கே எஸ் மற்றும் சீன தயாரிப்பான ஹார்பின் வை 12 ஆகிய விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சவுதி எண்ணைக் கப்பல் கடத்தல். 13 இலங்கையர்கள்.

சவூதிக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை, 14 சிப்பந்திகளுடன் சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். நிசா-அல்-சவுதி எனப்படும் இக்கப்பல் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ஆப்ரிக்க கடல் நடவடிக்கை தொடர்பான நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது.

சோமாலியா கடற்பரப்புக்கு அண்மையிலுள்ள ஏதன் வளை குடாப்பகுதியில் வைத்து இக்கப்பல் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 14 சிப்பந்திகள் இருந்ததாகவும், இதில் 13 பேர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் கிரேக்கர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருளை ஏற்றிச்செல்லும் இக்கப்பல் ஜப்பானிலிருந்து சவூதியின் ஜெட்டா நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.

இக்கப்பல் தற்பொழுது சோமாலியாவின் கடற்பரப்பில் கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கென்ய கடற்படை தெரிவித்துள்ளது.

அதேவேளை இக்கப்பலை விடுதலை செய்வதற்கு கொள்ளையர்களால் பிணைத் தொகை கோரப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்றும் கென்ய கடற்படை கூறியுள்ளது.

Read more...

மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 13ம் அமர்வுகள் கடந்த 1ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இவ்வமர்வுகள் எதிர்வரும் 26ம் திகதிவரை இடம்பெறவுள்ளது. ஐ.நா வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி நவநீதம்பிள்ளை இன்று அவரது வருடாந்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளார். அதில் இலங்கை விபரம் சுட்டிக்காட்டப்படும் என தெரியவருகின்றது.

இவ்வமர்வுகளில் இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் கலந்து கொள்கின்றார். மனித உரிமைகள் அமைச்சருக்கு தேர்தல் வேலைப்பளு காரணமாக அவர் இம்வமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் முஸ்லிம் கல்விமான்

பலராலும் மதிக்கப்படும் முஸ்லிம் கல்விமான், பயங்கரவாதத்திற்கும் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கும் எதிரான ஃபத்வா சமயத் தீர்ப்பை லண்டனில் வெளியிடுகிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் தாஹிர் உல்-கத்ரி வெளியிடும் 600 பக்க அறிக்கை, அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் வன்செயல் கொள்கையை முற்றிலும் தவிடுபொடியாக்குகிறது.

அல்-காய்தா என்பது “புதிய பெயர்கொண்ட பழைய தீமை” என்று வர்ணிக்கும் டாக்டர் தாஹிர், அல்-காய்தாவுக்கு எதிராகப் போதிய அளவு சவால் விடுக்கப்படவில்லை என்கிறார்.

இவரது இயக்கம் பிரிட்டனில் விரிவடைந்து வருகிறது. அரசியல்வாதிகளும் பாதுகாப்புத் தலைவர்களும் இவரது இயக்கத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். அப்பாவி மக்களைக் கொல்வதையும் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்துவதையும் இஸ்லாம் தடை செய்வதாக டாக்டர் தாஹிர் தனது அறிக்கையில் கூறுகிறார்.

இதற்கு முன் வேறு பல கல்விமான்கள் இதே போல கூறியிருந்தாலும், டாக்டர் தாஹிர் இக்கருத்துக்கு விரிவான விளக்கம் தருவதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் போராளிகள் நடத்தும் வெடிகுண்டுத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தனது ஃபத்வா அறிக்கையை டாக்டர் தாஹிர் சென்ற ஆண்டு தயாரிக்கத் தொடங்கினார்.

“தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த நினைப்போரின் மனதில் இந்த அறிக்கை ஐயத்தை ஏற்படுத்தும்” என்று பிரிட்டனிலுள்ள மின்ஹஜ்-உல்-குர்ஆன் அமைப்பின் பேச்சாளர் ஷாஹித் முர்சலீன் கூறினார்.

“பிரிட்டனிலுள்ள தீவிரவாதக் குழுக்கள், தற்கொலைத் தாக்குதல் நடத்தினால் அடுத்த பிறப்பில் கண்டிப்பாக வெகுமதி கிடைக்கும் என்று கூறி இளையர்களைச் சேர்க்கிறார்கள்.
“டாக்டர் தாஹிரின் ஃபத்வா, இந்த எண்ணத்தைக் களையும்” என்றார் அவர்.

- பிபிசி நியூஸ்

Read more...

இலங்கைக்கு அதிக நிதியுதவியை வழங்கிய நாடு சீனா

2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிக நிதி வழங்கிய நாடாக சீனா விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றை விட சீனா நிதி வழங்கிய நாடுகளில் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் பாதை அபிவிருத்தி, நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி மைய செயற்பாடுகள், தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம் என்பவற்றுக்கான 3.4 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

அத்துடன் திட்டக்கடன்களாக 1.9 பில்லியன் டாலர்களையும், நிதிகளாக 279.6 மில்லியன் டாலர்களையும் சீனா, இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இலங்கையில் மனித உரிமைமீறல்களை காரணம் காட்டி, மேற்கத்திய நாடுகள், நிதியுதவிகளை குறைத்து வந்துள்ள நிலையிலேயே சீனா, இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.

இதேவேளை சீனா, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு மொத்தமாக கிடைத்த நிதியுதவிகளில் 84.3 வீதத்தை வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் ஜப்பான் மற்றும் மனிலாவை தளமாகக்கொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவையே இலங்கைக்கான பெரிய நிதியளிப்பாளர்களாக இருந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

தமிழ் சிங்கள மாவணவர்களின் சந்திப்புக்கான சிறப்பு ஏற்பாடு.

சிங்கள தமிழ் மாணவர்களுக்கிடையிலான சமாதான உறவுப்பால நிகழ்வொன்று காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் மனித அபிவிருத்திதாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தலமையில் நடைபெற்றது. அங்கு அம்பாரை மற்றும் கல்முனை வலயங்களைச்சேர்ந்த காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம் காரைதீவு விபுலானந்தா மத்தியகல்லூரி அம்பாரை நுவான்கல மகாவித்தியாலயம் ஹிங்குறான காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஆசிரிய ஆலோசகர்களும் அடங்கலாக 125 பேர் கலந்து கொண்டனர். மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் உரையாற்றுவதையும் மாணவர்களின் சமாதான நிகழ்ச்சிகளையும் கடற்கரையில் மாணவர்கள் குதூகலிப்பதையும் படங்களில் காணலாம்.







(படங்கள் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்

Read more...

04-03-2010 ரிபிசியின் வியாழக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்

இலங்கையின் அரசியல் நிலமைகள் தொடர்பாக நடைபெற உள்ள இந் நிகழ்ச்சியில் கிழக்கு மகாணசபை முன்னால் அமைச்சரும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மட்டகளப்பு வேட்பாளாருமான A.L.M ஹிஸ்புல்லா ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர்.

மாலை 8மணி முதல் 10 மணி வiர் நடைபெற உள்ளது நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் 00 44 208 930 5313

TBC Radio, live on Thursday March 2010, there is a exclusive political discussion
TBC Radio, live on Thursday March 2010, there is a exclusive political discussion with Eastern provincial council ex minister A.L.M. Hisbulla TBC Political analyser V Sivalingam ,TBC Germany Political analyser S Jeganathan and TBC Director V Ramarajah.

To Participate you can call us on 00 44 208 930 5313 or you also can visit our website www:tbcuk.com at 8.00 pm to 10.00 pm



V.Ramaraj
Thamil broadcasting corporation-London

00 44 7817063682
00 44 208 930 5313

Read more...

Wednesday, March 3, 2010

ஆஸ்திரேலியாவில் மீன் மழை: மக்கள் வியப்பு

ஆஸ்திரேலியா வின் லஜாமனு நகரத்தில் மீன் மழை பெய்ததை மக்கள் விசித்திரமாக பார்த்து ரசித்தனர். ஆஸ்திரேலியாவின் வறட்சியான வடக்குப் பகுதியில், ஆயிரத்துக்கும் குறைவான மக்களே வசிக்கும் சிறிய நகரம் லஜாமனு.

தனாமி பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த வறண்ட நகரத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறான தட்பவெப்பம் நிலவி வந்தது. கடந்த இரு நாட்களாக இந்த நகரத்தில் மழை பெய்தது. அப்போது விசித்திரமாக மழைத் துளிகளுடன் மீன்கள் வந்து விழுந்ததாக நகர மக்கள் தெரிவித்தனர்.

நகரின் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான மீன்கள் வந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சுமார் 14 இன்ச் அளவுக்கு இந்த மீன்கள் இருந்தன. 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் மழை நீரில் மீன்கள் வந்து விழுந்ததை பார்த்திருப்பதாக இப்பகுதியில் உள்ள வயதான முதியோர் கூறினர்.

சில நேரங்களில் பலத்த சூறாவளிக் காற்றின் போது, ஆற்று நீரில் உள்ள மீன்கள் உறிஞ்சப்பட்டு, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வீசப்படுவது பொதுவாக நடக்கக்கூடியது தான் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Read more...

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஏப்பிரல் 8 அன்று நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில், வாழ்க்கைத் தரத்தின் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் ஆழமடைந்துவரும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காகப் போட்டியிடுகின்றது. சோசலிச சமத்துவக் கட்சி சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, உழைக்கும் மக்களின் அவசர தேவைகளை இட்டு நிரப்ப ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்தும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி தலைநகர் கொழும்பு, யுத்தத்தால் சீரழிந்த யாழ்ப்பாணம், மத்திய தேயிலைத் தோட்ட பிராந்தியமான நுவரெலியா மற்றும் தெற்கில் காலி ஆகிய நான்கு மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், குடும்பப் பெண்கள், தொழில் அற்றவர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுமாக மொத்தம் 58 வேட்பாளர்களை சோசலிச சமத்துவக் கட்சி நிறுத்தியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் காக்க தமது முழு இளமைக் காலத்தையும் அர்ப்பணித்துக்கொண்டவர்களான விலானி பீரிஸ், எஸ். சந்திரசேகரன், எம். தேவராஜா மற்றும் ரட்னசிறி மலலகம ஆகியோர் தலைமை வேட்பாளர்களாவர்.

கூர்மையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியிலேயே இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது. கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த போதிலும், வாழ்க்கைத் தரம் தொடர்ந்தும் சீரழிந்து வருவதோடு சமூக பதட்ட நிலைமைகள் கூர்மையடைந்து வருகின்றன. "சமாதானத்தையும் சுபீட்சத்தையும்" கொண்டுவருவதாக வாக்குறுதியளித்த ஜனாதிபதி இராஜபக்ஷ, ஊடக விமர்சகர்களின் வாய்களை மூடவும், வேலை நிறுத்தங்களை தடை செய்யவும் அரசியல் எதிரிகளை கைது செய்யவும் ஜனநாயக விரோத வழிமுறைகளை நாடியுள்ளார். கடந்த ஆண்டு அவர் சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையை தடை செய்தார். ஜனவரி 26 நடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், அரசாங்கம் பிரதான எதிர்க் கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்தது. அவர் ஒரு சதிப் புரட்சிக்கு திட்டமிட்டார் என்ற உறுதியற்ற, பொய்யாகப் புணையப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர்கள், பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் ஏற்றிவிடுவது என்ற அடிப்படை பிரச்சினையில் உடன்பாடு கொண்டுள்ளனர். தேர்தலின் பின்னர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என உழைக்கும் மக்களை நம்பவைத்து ஏமாற்றும் முயற்சியில் முழு அரசியல் ஸ்தாபனமும் ஈடுபட்டுள்ளது. பொருளாதார பிரச்சினைகள் கிடையாது மற்றும் இலங்கை "ஆசியாவின் அதிசயமாக தோன்றி வருகின்றது" என்ற பொய்யை அரசாங்கம் பரப்பி வருகின்றது. ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய எதிர்க் கட்சிகள் நெருக்கடிகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் வீணடிப்புகளுக்கு முடிவுகட்டினால் மட்டுமே தீவு ஏறத்தாழ ஒரு சுவர்க்கமாக மாறும் என்ற பொய்யை கூறித் திரிகின்றன.

தொழிலாள வர்க்கம் கொடூரமான அதிர்ச்சியை எதிர்கொள்ளவுள்ளது என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது. 2008ல் வெடித்த முதலாளித்துவத்தின் பூகோள பொருளாதார நெருக்கடி அதன் இரண்டாவது கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. நாட்டுக்கு நாடு, கூட்டுத்தாபனங்களை பிணை எடுப்பது மற்றும் கம்பனிகளுக்கான ஊக்குவிப்பு பொதிகள் ஊடாக, அரசாங்க கணக்கில் ரில்லியன் கணக்கான டொலர்கள் எடுக்கப்பட்டதால் குவிந்துள்ள கடனை தாங்க முடியாதுள்ளது. இப்போது கிரேக்கத்தில் நடப்பது போல், நெருக்கடிக்கு வழி வகுத்த நிதி ஊக வாணிப கூத்துகளுக்கு உழைக்கும் மக்கள் பொறுப்பாளிகளாக இல்லாவிட்டாலும், இந்தக் கடன்கள் இப்போது அவர்கள் மீதே திணிக்கப்படுகின்றன.

இலங்கை இந்த பூகோள பொருளாதார நெருக்கடியில் சிக்காமல் இருப்பதற்கு மாறாக, குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளது. கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் தீவின் பெரும்பகுதி அழிவுக்குள்ளாகியுள்ளது. ஜனாதிபதி இராஜபக்ஷ தனது குற்றவியல் யுத்தத்துக்கு செலவிடுவதற்காக நாட்டை முழுவதும் அடகு வைத்துள்ளதன் விளைவாக, அரச கடன் இப்போது 4 ரில்லியன் ரூபாய்களுக்கும் மேலாக அல்லது மொத்த தேசிய உற்பத்தியில் 90 வீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலையில், பூகோள கடன் நெருக்கடியின் மத்தியில், அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய கடுமையான அந்நிய செலாவனி பற்றாக்குறை நெருக்கடியை தவிர்ப்பதன் பேரில், அவர் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் டொலர்களை கடனாகப் பெறத் தள்ளப்பட்டார்.

மத்திய வங்கியின் உடந்தையுடன், அரசாங்கம் வேண்டுமென்றே நாட்டின் நிதி நிலைமையை மூடி மறைக்கின்றது. இராஜபக்ஷ தேர்தல் முடியும்வரை வரவு செலவுத் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார். வரவு செலவு பற்றாக்குறையின் அளவு பற்றி இதுவரை புதிய தரவுகள் கிடையாது. அது 11.3 வீதம் என ஒரு மதிப்பீடு தெரிவிக்கின்றது. அது 2011ம் ஆண்டில் 5 வீதமாக குறைக்கப்பட வேண்டும் என கோரும் சர்வதேச நாணய நிதியம், அரசாங்கம் அதன் இலக்குகளை அடையாததன் காரணமாக, வழங்கவிருந்த புதிய கடன் தொகையை கொடுக்காமல் வைத்திருக்கின்றது.

வரவு செலவுத் திட்டத்தை அரைவாசிக்கும் மேலாக வெட்டிக்குறைப்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே கிரேக்க நாட்டில் ஒப்புவிக்கப்பட்டுள்ளன. கிரேக்க அரசாங்கம், அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி, பொதுச் சேவைகளுக்கான கொடுப்பணவை 20 வீதத்தில் குறைத்து, சராசரி ஓய்வு பெறும் வயதை இரண்டு வருடங்கள் அதிகரித்து, பெறுமதி சேர் வரியை விதித்து மற்றும் எண்ணெய், மது மற்றும் புகையிலை மீதான வரியையும் அதிகரித்துள்ளது. இலங்கையில், வேலையற்ற இளைஞர்களின் தொகை ஏற்கனவே உத்தியோகபூர்வமாக 35.4 வீதமாக இருப்பதுடன், 15 வீதமான மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் கீழ் இருப்பதுடன், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ள நிலைமையின் கீழ், "கிரேக்க தீர்வை" இங்கு அமுல்படுத்துவதானது அழிவுகரமானதாக இருக்கும்.

இராஜபக்ஷ தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு "பொருளாதார யுத்தத்தை" முன்னெடுக்கும் தனது எண்ணத்தை பிரகடனம் செய்துள்ளார். அவர் உழைக்கும் மக்களின் எந்தவொரு எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி நசுக்க, புலிகள் மீதான 26 ஆண்டுகால யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்துவார் என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது. யுத்தத்தின் போது, வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களையும் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களையும் தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாக ஜனாதிபதி கண்டனம் செய்தார். அவரது "தேசத்தை கட்டியெழுப்புதல்" என்ற வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை எதிர்க்கும் எவரையும் தேசப்பற்றில்லாதவர்கள் என பழி சுமத்த அவர் தயங்கப்போவதில்லை.

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர், வேலைத் தளங்கள், ஊடகம், இராணுவம் மற்றும் பொலிசின் உயர்மட்டத்தினர் உட்பட பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கு மற்றும் எதிர்க் கட்சிகளுக்கு எதிரான பாய்ச்சலை பரந்தளவில் முன்னெடுத்தது. ஆயினும், அரசியல் உள் மோதலின் கொடூரத் தன்மை ஒருபுறம் இருக்க, அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடு, குறிப்பாக கூர்மையடைந்து வரும் பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான பகைமைகளுக்கு மத்தியில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை எந்தப் பக்கம் திசையமைவுபடுத்துவது என்ற தந்திரோபாய பண்பைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் வரலாற்று வீழ்ச்சியும் சீனா மற்றும் இந்தியா போன்ற புதிய சக்திகளின் எழுச்சியும், உலக அரசியலில், குறிப்பாக தெற்காசியாவில் கடுமையான ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஆப்கானிஸ்தானில் யுத்தத்தை உக்கிரமாக்குவதும் மற்றும் அமெரிக்காவுக்காக பாகிஸ்தானில் யுத்தத்தை உக்கிரமாக்குவதும், மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கின் பிராதான மூலோபாய பிராந்தியத்தில் அமெரிக்க செல்வாக்கை விரிவுபடுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். எரி சக்தி மற்றும் வளங்களுக்காக மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் தங்கியிருக்கும் சீனா, இந்து சமுத்திரம் ஊடான தனது வர்த்தக பாதையை காத்துக்கொள்ள முயற்சிக்கின்றது. இந்தியா இந்தப் பிராந்தியத்தை அதன் சொந்த செல்வாக்குப் பகுதியாக கருதுகிறது.

இலங்கை இந்த போட்டியினுள் மேலும் மேலும் இழுபட்டுச் செல்கின்றது. தனது இனவாத யுத்தத்தின் போது ஆயுத, நிதி உதவிகளுக்கும் மற்றும் அரசியல் ஆதரவுக்கும் சீனாவை நாடிய இராஜபக்ஷ, அதற்குப் பிரதியுபகாரமாக, ஹம்பந்தொட்டையில் ஒரு தீர்க்கமான புதிய துறைமுகத்தை கட்டியெழுப்புவது உட்பட பொருளாதார மற்றும் மூலோபாய வாய்ப்புகளை வழங்கினார். சீனாவின ஆதரவின் மீது நம்பிக்கை வைத்து, இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றிய சர்வதேச விமர்சனங்களை "மேலைத்தேய சதி" என இராஜபக்ஷ மறுதலித்தார். மறுபக்கம், பொன்சேகா ஜனாதிபதி தேர்தலின் போது, இலங்கையின் பாரம்பரிய நேச நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை நோக்கி சாய்வதாகக் காட்டிக்கொண்டார். "சர்வதேச சமூகத்தில் இருந்து" அந்நியப்பட்டுவிட்டதாகவும் ஐரோப்பிய ஒன்றிய சலுகையை ஆபத்தில் தள்ளவிட்டுள்ளதாகவும் அவர் இராஜபக்ஷவை விமர்சித்தார்.

பொன்சேகா மற்றும் எதிர்க் கட்சிகள் மீதான இராஜபக்ஷவின் பாய்ச்சல், தொழிலாள வர்க்கத்துடன் மோதுவதற்கான தயாரிப்பில், தனது நிலைமையை பலப்படுத்திக்கொள்வதை இலக்காகக் கொண்டதாகும். யுத்தம் முடிவடைந்த போதும், அவர் ஏறத்தாழ சகல பாராளுமன்றக் கட்சிகளினதும் ஆதரவில் அவசராகல சட்டத்தை அமுலில் வைத்திருந்தார். தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் யுத்த காலத்தில் நூற்றுக்கணக்கானவர்களை கொன்று தள்ளிய அரசாங்க சார்பு கொலைப் படைகள், தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.

அவரது முதலாவது பதவிக் காலத்தில், இராஜபக்ஷ பாராளுமன்றத்தை ஒரு இறப்பர் முத்திரையாக தரம் குறைப்பதற்கு தனது விரிவான நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொண்டார். அவர் அதிகரித்தளவில் உறவினர்கள், நெருங்கிய ஆலோசகர்கள், உயர்மட்ட ஜெனரல்கள் மற்றும் அதிகாரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்கலாக ஒரு அரசியல்-இராணுவ குழுவின் ஊடாகவே இயங்கி வந்தார். பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி இராஜபக்ஷ பிரதானமாக ஆர்வம் காட்டுவது, தன் விருப்பப்படி அரசியலமைப்பை மாற்றி, தனது பொலிஸ்-அரச ஆட்சியை பலப்படுத்திக்கொள்ளத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தக்க வைத்துக்கொள்ளவே ஆகும்.

குறிப்பாக, இராஜபக்ஷ அரசாங்கத்தின் தமிழ் சிறுபான்மையினரை நசுக்கும் இனவாத யுத்தம் மற்றும் இலங்கை முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்துவதற்கான அதன் பொருளாதார நடவடிக்கைகள் போன்ற ஒவ்வொரு அடிப்படை பிரச்சினையிலும், அரசாங்கத்துடன் உடன்பாடு கொண்டுள்ள எதிர்க் கட்சிகளான யூ.என்.பி. அல்லது ஜே.வி.பி. மீது தொழிலாளர்கள் எந்தவொரு நம்பிக்கையும் வைக்கக் கூடாது. ஐக்கிய தேசிய முன்னணியும் ஜே.வி.பி. யும், இராஜபக்ஷவின் யுத்தத்தை முன்னெடுத்த ஜெனரல் பொன்சேகாவை, கூட்டுத்தாபன கும்பல்கள் கோரும் வேலைத் திட்டங்களை அமுல்படுத்தக்கூடிய ஒரு மாற்று எதேச்சதிகாரியாக ஜனாதிபதி தேர்தலில் முன்கொண்டுவந்து ஆதரித்தன. இத்தகைய வலதுசாரி கட்சிகளுடன் வெட்கமின்றி அணிதிரண்டுகொண்ட முன்னால் இடதுசாரிகளான நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியின் உதவியின்றி, ஐ.தே.மு. மற்றும் ஜே.வி.பி. யால் இராஜபக்ஷவுக்கு ஒரு ஜனநாயக பதிலீடாக காட்டிக்கொள்ள முடியாது.

கால் நூற்றாண்டு கால கொடூரமான உள்நாட்டு யுத்தம், சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் இனவாதத்தின் பிற்போக்குப் பண்பை அம்பலப்படுத்தியுள்ளது. ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த தமிழர்-விரோத பகைமைகளை கிளறிவிட்டதோடு, அவையே 75,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட குற்றவியல் யுத்தத்துக்கும் பொறுப்பாகும். ஆயினும், தமிழ் வெகுஜனங்களின் நலன்களை அன்றி, தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்யும் புலிகளின் தமிழ் பிரிவினைவாத வேலைத் திட்டம், முன்னேற்றமான மாற்றீடு அல்ல. புலிகளின் இராணுவத் தோல்வியானது, மொத்தத்தில் அதன் அரசியல் வங்குரோத்தின் விளைவேயாகும். அது தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் இயலுமை கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அறைகூவலும் விடுக்க இயல்பாகவே இலாயக்கற்றதாகும்.

தொழிலாளர்கள் அவசியமான படிப்பினைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். பாராளுமன்ற ஒருங்கிணைவு மற்றும் திட்டமிடல்கள் என்ற அரசியலின் ஊடாக தொழிலாளர்களின் நலன்களை காக்க முடியாது. கம்பனிகளின் இலாபங்களுக்காக அன்றி, தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தேவைகளை அடைய முழு சமுதாயத்தையும் மறுகட்டமைப்புச் செய்யும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், அவர்கள் சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். அத்தகைய போராட்டத்துக்கான அடிப்படை தேவை எதுவெனில், தமது பொது வர்க்க நன்மைக்கான போராட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதே ஆகும். தீவின் யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல துருப்புக்களையும் திருப்பியழைக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி கோரிக்கை விடுக்கின்றது.

உழைக்கும் மக்களுக்கு கல்வியூட்டவும், வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நெருங்கிக்கொண்டிருக்கும் தாக்குதல்களைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கவும் மற்றும் பல தசாப்தங்களாக நசுக்கப்பட்டு வந்துள்ள வர்க்கப் போராட்ட வழிமுறைகளை உயிர்பெறச் செய்யவுமே ஏப்பிரல் 8 நடக்கவுள்ள தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகின்றது. உழைக்கும் மக்களின் உரிமைகளைக் காக்க வேலைத் தளங்கள், தொழிலாள வர்க்கம் வாழும் பகுதிகள் மற்றும் நகரங்களிலும் கிராமங்களிலும் நடவடிக்கை குழுக்களை அமைக்க ஊக்குவிப்பதற்காக எமது வேட்பாளர்கள் இந்த பிரச்சாரத்தை பயன்படுத்திக்கொள்வார்கள். அத்தகைய நடவடிக்கைக்கு, வங்குரோத்து இலாப முறையுடன் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போட்டு வைத்திருக்கும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து அரசியல் ரீதியில் முழுமையாக பிரிவது அவசியமாகும்.

தொழிலாள வர்க்கம் அடிப்படை உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டும்: முதலாளித்துவ முறை தோல்வியடைந்துள்ளதோடு, புதிய மற்றும் மிகவும் கொடூரமான யுத்தங்கள், அழிவுகரமான காலநிலை மாற்றங்கள் மற்றும் வெகுஜனங்கள் மத்தியிலான சமூக வறுமை போன்றவற்றை தவிர மனித குலத்துக்காகக் கொடுக்க அதனிடம் ஒன்றும் இல்லை. தெற்காசியாவிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக, - ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை- ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில் கிராமப்புற வெகுஜனங்களை அணிதிரட்டிக்கொள்ள போராடுவதன் மூலம் மட்டுமே, இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் தமது மிகவும் அடிப்படையான உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியும். நாம் எமது வேலைத் திட்டத்தை படிக்குமாறும், எமது அரசியல் பிரசுரங்களை விநியோகித்து, எமது வேட்பாளர்கள் உரையாற்ற கூட்டங்களை ஏற்பாடு செய்து, எமது பிரச்சாரத்துக்கு நிதி வழங்கி மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்வதன் மூலம் எமது பிரச்சாரத்துக்கு செயலூக்கத்துடன் ஆதரவளிக்குமாறு, தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Read more...

தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் விஞ்ஞாபனம் : பாராளுமன்றத் தேர்தல் - 08.04. 2010

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் அரை நூற்றாண்டுக்கு மேலாக அனுபவித்துவரும் துன்பங்களுக்கு இதுவரை நிரந்தரத் தீர்வோ அல்லது, தற்காலிக நிவாரணமோ கிட்டவில்லை. இதற்காக காலத்திற்குக் காலம் நற்சிந்தனையுள்ள தலைவர்கள் நியாயபூர்வமாக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தொடர்ந்து சில கடும் போக்காளர்களினால் முட்டுக்கட்டை
போடப்பட்டு வந்தன.

இவற்றைக் கவனத்திற்கொண்டு, தமிழர் விடுதலைக்கூட்டணி அதன் அடிப்படைக் கொள்கையில் பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக விவேகமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் யுத்தம் உட்பட நடந்தேறிய பல சம்பவங்கள் சிறுபான்மையினரின் மனிதாபிமான பிரச்சினைகள் மேலும் அதிகரித்துள்ளமையால் அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு ஒரே விதமான சிந்தனை கொண்ட கட்சிகளினதும், மக்களினதும் பொறுப்பு ஏன தமிழர் விடுதலைக்கூட்டணி உணர்கின்றது.

பல்வேறு திசைகளில் இருந்து கடந்த காலங்களில் நாட்டை குட்டிச்சுவராக்க கங்கணம் கட்டி நிற்கின்ற சில கடும் போக்காளர்கள் உட்பட, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் திடீரென தம்மை வெளிக்காட்டிக்கொண்டு, நாட்டின் நிலமையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை வெளியிடுவதிலும், அறிக்கைகளை விடுவதிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது. இதற்கு சில உள்நோக்கங்கள் இருக்கின்றமையை தெளிவாக உணர முடிகின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின்வெளிப்படையான கருத்து, சகலருக்கும் மனத்திருப்தியை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கி, சிறியவன், பெரியவன் என்ற பேதமின்றி அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே!

நம் நாட்டில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்தும் எம் அனைவரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்துள்ளன. பல்லாயிரக்கணக்கான உயிர்கள், பல கோடி ரூபா பெறுமதியான தனியார், அரச உடமைகள் என்பன அண்மையில் நடந்து முடிந்த யுத்தித்தில் இழக்கப்பட்டுள்ளன. கற்பனைக்கெட்டாத பெருந்தொகையான பணம் யுத்தத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. பல கோடி ரூபா செலவிலான இராணுவ முகாம்கள், தளபாடங்கள் மற்றும், படையினருக்கு ஏற்படுகின்ற செலவுகள் அத்தனையும் நம் அனைவருக்கும் நல்லதொரு பாடத்தை போதித்துள்ளது.

இத்தகையதொரு நிலமை மீண்டுமொரு தடவை ஏற்படக்கூடாது. ஏற்பட விடவும் கூடாது. தமிழர் விடுதலைக் கூட்டணி, சோல்பரி அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இனத்திற்கு ஒரேயொரு பாதுகாப்பாக இருந்த 29வது சரத்திற்கு ஏற்பட்ட கதியை நன்கு அறிந்துள்ளது.

இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஒற்றை ஆட்சி அமைப்பின் கீழ் ஏற்பட்டு, அத்தீர்வு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் மீள் பரிசீலிக்க நேர்ந்தால் இதுவரை காலமும் பல உயிரிழப்புகளுக்கும் சொத்தழிவுகளுக்கும் மத்தியில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அத்தனையும் பாழாகிவிடும். கடந்த ஐந்து ஆண்டு காலமாக சமஸ்டி அமைப்பின் கீழ் ஒரு தீர்வை அடைய பெரு முயற்சி எடுத்திருந்தும், அதற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வொன்றை ஏற்க தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருந்தது. ஓற்றையாட்சி அமைப்பின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வொன்றை ஒரு போதும் அடைய முடியாதென தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையாக நம்புவதால் முற்று முழுதாக ஒற்றையாட்சி முறைமையை கூட்டணி நிராகரிக்கின்றது.

வடக்கு கிழக்கு இணைப்பால் இந்நாட்டிற்கும் அன்றி, அப்பகுதியில் வாழும் எந்த இனத்திற்கும் எதுவித பாதிப்பும் ஏற்படாது. மாறாக, பல்லின மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் சமாதானத்தையும் வளர்க்க அது உதவுவதாக அமையும் என்பதையும், அம்முயற்சிக்கு அப்பகுதியில் வாழும் பல்லின மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதையும் கூட்டணி பூரணமாக நம்புகின்றது. அத்தோடு அரசின் திட்டமிட்ட குடியேற்றம் இன ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதிலாக வேற்றுமையையே வளர்க்கும் என்பதால், இம்மூன்று விடயங்களிலும் மாற்ற முடியாத ஒரே நிலைப்பாட்டை தமிழர் விடுதலைக் கூட்டணி கொண்டுள்ளது.

பின்வரும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இக்கட்டான நிலையில்
தள்ளப்பட்டுள்ள இந்த நாட்டை மீட்டெடுத்து இனங்களுக்கிடையே வலுவான ஒரு உறவுப்பிணைப்பை ஏற்படுத்தி சுபீட்சமான வாழ்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி உண்மையாகவும் மிக உறுதியாகவும் நம்புகிறது. அவ்விடயங்கள் தொடர்பாக கூட்டணி அரசாங்கத்தோடு விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும்.

1. இடம்பெயர்ந்த மக்களை- வடக்கு கிழக்குத் தமிழர், இந்திய வம்சாவளித்தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி எந்த இனத்தவராகிலும் அவர்கள் முன்னர் வாழ்ந்த அவர்களின் சொந்த இடங்களிலேயே குடியமர்த்த தமிழர் விடுதலைக்கூட்டணி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்.

2. இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட உயிழப்பு, உறுப்பிழப்பு, சொத்து சேதம் என்பவற்றிற்கும் இன, மத, சமூக பேதமின்றி முழு அளவிலான இழப்பீடு வழங்கப்பட அரசிற்கு வலுவான அழுத்தத்தை கூட்டணி கொடுக்கும். அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமரும் பகுதிகளில் அவர்களுக்கான போக்குவரத்து மற்றும், மருத்துவ சுகாதார வசதிகள் விரிவு படுத்தப்பட அரசை வலியுறுத்தும்.

3. யுத்தம் ஆரம்பித்த பின்னர் வன்னிப்பகுதியில் உயிழந்தும், காணாமல் போயுமுள்ள குடிமக்களின் பெயர், முகவரி போன்ற விபரங்களைத் திரட்ட நடவடிக்கை எடுக்க அரசிற்கு அழுத்தம் கொடுத்து அதற்கான ஒத்துழைப்பையும் தமிழர் விடுதலைக் கூட்டணி வழங்கும்.

4. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிச் சிறுவர்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக விடுதலைப்புலிகள் என முத்திரைக் குத்தி புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அச்சிறுவர்கள் அவரவர் பெற்றோர்களிடம் உடன் கையளிக்கப்பட வேண்டும். அவர்களில் சிலர் தாமாக விரும்பி புலிகள் இயக்கத்தில் இணைந்திருக்கலாம். ஆனால், ஏனைய அனைவரும் பலாத்காரமாக இணைக்கப்பட்டவர்களாவர். இப்போது
இச்சிறுவர்களுக்கு அவசியமாகத் தேவைப்படுவது பெற்றோரின் அன்பும் அரவணைப்புமாகும். இந்த அப்பாவிப் பிள்ளைகளை பெற்றோரிடம் கையளிப்பின் அவர்களுக்கு எத்தகைய கல்வியை ஊட்ட வேண்டும் என்பதை பெற்றோர்களே தீர்மானிப்பர் என்பதை, அரசிற்கு எடுத்துக்கூறி அதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும்.

5. வடக்கில் ஆட்கடத்தல், கொலைகள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்கு மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வடக்கிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, காணாமல் போனோரைக் கண்டுபிடிக்க தமிழர் விடுதலைக்கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

6. தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு, அங்குள்ள வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட அரசை வற்புறுத்துவோம். உரியவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் தனியார் விடுகள் மற்றும், கட்டடங்கள் உடனடியாக உரியவர்களிடமோ, அல்லது அவர்களின் வாரிசுகளிடமோ ஒப்படைக்கப்பட தமிழர் விடுதலைக்கூட்டணி அரசை வற்புறுத்தும்.

7. சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு கிழக்கு பகுதிகளில் அப்பாவி மக்களிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவு தங்கம் பின்னர் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற உறுதியோடு பெறப்பட்டது. ஒரு சிலருக்கு தங்கம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. பலருக்கு கொடுக்கப்பட வில்லை. இது தவிர மக்கள் தங்கள் தங்க நகைகளை புலிகளின் வங்கிகளில் ஈடுவைத்திருந்தனர். அத்துடன் தங்கள் பணத்தையும் அவ்வங்கிகளில் வைப்புச் செய்திருந்தனர். வன்னியில் மீட்கப்பட்ட தங்கமும் பணமும் உரிய மக்களுக்கே சொந்தமானவை. ஆகவே அங்கு மீட்கப்பட்ட நகைகளும் பணமும் உரிமை கோருபவர்களுக்கு வழங்கப்பட தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வற்புறுத்தும்.

8. உயர் கல்வி பெறும் வாய்ப்புப் பெற்று யுத்தம் காரணமாகவும், பலவந்தமாக பிடிக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளவுமான செயற்பாடுகளில் ஈடுபட்டு, கல்வியைத் தொடர முடியாமல் பலர் இருப்பதால் அவர்கள் கல்வியைப் பெறவும், வன்னிப்பகுதிக்கென பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அங்கு விவசாயம், கலைப்பிரிவு போன்ற துறைகளை இயங்க வைக்கவும் தமிழர் விடுதலைக்கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

9. வன்னி வர்த்தகர்களில் பலர் அனைத்து சொத்துக்களையும் இழந்துள்ளனர் என்பதால் இடம்பெயர்வதற்கு முன் அவர்கள் பெற்றிருந்த உரிமைகளான- ஏக விநியோக உரிமை, உத்தரவு பெற்ற வர்த்தக உரிமை, எரிபொருள் நிலையம் நடத்தும் உரிமை போன்றவற்றை வழங்கும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வலியுறுத்தும்.

10. இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்தும் போது, இரு விசேட பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். முதலாவதாக 1992ஆம் ஆண்டு வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நலன்கள்; பேணப்பட வேண்டும். இரண்டாவது- 1958 இற்கும் 1983 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்தும், நாட்டின் பல வேறு பகுதிகளிலிருந்தும் வவுனியா, கிளிநொச்சி , முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் குடியேறிய மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கூட்டணி இவ்விரண்டு விடயங்கள் குறித்தும் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.

11. கணவன் தடுப்பு முகாம்களிலும், மனைவி மக்கள் வீடுகளிலும் என ஆதரவற்ற நிலையில் வாழும் குடும்பங்களை ஒன்று சேர்த்து வைக்க தமிழர் விடுதலைக்கூட்டணி நடவடிக்கை எடுக்கும். அத்துடன் ஊனமுற்றோர், உடலில் துப்பாக்கி ரவைகள், குண்டுச்சிதறல்கள் தைக்கப்பட்டு உடல் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட அரசாங்கத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தும். உடல் ஊனமுற்று இயங்க முடியாமலுள்ளவர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருப்பது வேதனைக்குரியதாகும், இது நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயம் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசிற்கு உணர்ததுகிறது.

12. வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகளை புனரமைத்து மீள இயங்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழர் விடுதலைக்கூட்டணி மேற்கொள்ளுவதோடு, அரசுத்துறைகளிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிலும் இதுவரை இழந்தவற்றை சீர்செய்து, கணிசமான பங்கினை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்க வழங்க அரசை வற்புறுத்தும்.

13. வடக்கில் மூன்றில் இரண்டு பகுதி கடலால் சூழப்பட்ட பகுதியாகும் கடற்றொழில் எமது மக்களின் பாரிய தொழில் வளமாகவுள்ளது. தற்போது கடற்றொழிலாளர்கள் தங்கள் தொழிலில் எதிர்நோக்கும் சிக்கல்களை அரசாங்கத்திடம் விளக்கி கடற்றொழிலாளர்களுக்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும். விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி, விவசாயிகள் தற்போது எதிர்நோக்கும் சிக்கல்களையும், சவால்களையும் நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை கூட்டணி மேற்கொள்ளும்.

14. வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் தன்னிச்சையாக ஒரு சிலரின் விருப்பத்திற்கு இணங்கச் செயற்படுத்தாமல் சம்பந்தப்பட்ட பிரதேச மக்கள், அரச அதிகாரிகள், நன்கொடை வழங்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆகியோரின் ஆலோசனைகளையும் பங்களிப்புகளையும் பெற்று செயற்படுத்த வேண்டும். அவ்வாறில்லாவிடில், உண்மையான அபிவிருத்திப்பணிகளை அரசினால் தனித்து நின்று மேற்கொள்ள முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகின்றது.

15. போர்ச் சூழலாலும், பொருளாதார நிலைமைகளாலும் வழிதவறிப்போன இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்தும் செயற்திட்டங்களையும் கூட்டணி மேற்கொள்ளும்.

16. மனிதஉரிமை விதிமுறைகளை மீறுவோருக்கு கடும் தண்டனை வழங்க வலுவுள்ள ஓர் அடிப்படை சாசனம் சட்டமாக்கப்பட தமிழர் விடுதலைக்கூட்டணி முயற்சி எடுக்கும்.

17. யுத்தம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட கல்வித்தரத்தனை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், அதே போல் விளையாட்டுத்துறைகளை உயர்த்த சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளவும் கூட்டணி முயற்சியெடுக்கும்.

18. புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு உள்ள10ரில் உறவுகள் சொத்துக்கள் போன்ற பல்வேறு தொடர்புகள் இருப்பதால் அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு வந்து செல்லவும், மீளக்குடியேறவும் வழிவகை செய்ய கூட்டணி பாடுபடும்.

தமிழ் பேசும் மக்களின் எதிர்கால நலன்களில் இதயபூர்வமான, உள்ளார்ந்த அக்கறை கொண்டுள்ள முதிர்ந்த அரசியல் கட்சி என்பதாலும், சொந்த நலன்களை ஈட்டுவதற்காக அரசியல் நடத்துபவர்கள் அல்லர் என்பதாலும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக மிளிர்வதாலும் தமிழ் மக்களுக்கு கௌரவத்துடன் கூடிய சமாதானத் தீர்வும், ஏனைய மக்கள் சகலருக்கும் நீதி, நியாயமும் விரைவில் கிடைக்கின்ற சூழ்நிலை உதயமாவதற்கும் தமிழர் விடுதலைக்கூட்டணி தம்மாலான அனைத்து முயற்சிகளையும் முன் போல தொடர்ந்து மேற்கொள்ளும்.

எனவே, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

Read more...

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் : – புன்னியாமீன் -

ஏப்ரல் 8ல் நடைபெறப் போவது விகிதாசார முறையின் இறுதித் தேர்தலா?
இலங்கையில் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 08ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சி வெற்றி பெறுமிடத்து, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையினை முதலில் மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், விகிதாசார முறையின் கீழ் இலங்கையில் நடைபெறும் இறுதித் தேர்தலாக இது அமையுமா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

விகிதாசார தேர்தல் முறை அமுலில் உள்ள இக்காலகட்டத்தில் இம்முறையின் கீழ் சிறுபான்மை சமூகத்தினரின் பாராளுமன்ற உறுப்புரிமை அதிகரித்திருப்பதைப் போல பழையபடி பெரும்பான்மை முறையை அல்லது பெரும்பான்மை முறையையும், விகிதாசாரமுறையையும் இணைத்த ஒரு புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்படுமிடத்து சிறுபான்மையினரினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவம், பெருமளவிற்கு பாதிப்படையலாம், என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவு இல்லாமலே, ஜனாதிபதி வெற்றி பெற்றதினால் பெரும்பான்மை சமூகத்தினரைக் கொண்டே ஆட்சி, அதிகாரங்களைக் கைப்பற்றலாம் என்ற புதிய நிலையொன்று தோன்றியுள்ள இந்நிலையில், விகிதாசாரத் தேர்தல் முறை பற்றி முன்வைக்கப்படும் வாதப்பிரதி வாதங்கள் அழுத்தமாக சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும்.

2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன், தொடர்புபடுத்தி இப்பாராளுமன்றத் தேர்தலை அணுகுமிடத்து, சுமார் 140 ஆசனங்களுக்கு மேல் ஆளுங்கட்சியால் வெற்றி பெறக்கூடிய நிகழ்தகவு உண்டு. எனவே ஆளுங்கட்சியினரின் மூன்றில் இரண்டு என்ற இலக்கு சாத்தியப்பாடுமிக்கதல்ல என்று உதாசினப்படுத்த முடியாது. அவ்வாறு மூன்றில் இரண்டு பாராளுமன்றப்பலம் கிடைக்குமிடத்து விகிதாசாரத் தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுவது தவிர்க்க முடியாததொன்றாகும். அவ்வாறானதொரு நிலை ஏற்படுமிடத்து, ஆளும் கட்சியைச் சார்ந்த, சிறுபான்மை சமூக பிரதிநிதிகளும் நிச்சயமாக ஆதரவு வழங்குவார்கள் என்பது மறுப்பதற்கு இயலாது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இலங்கையில் தேர்தல் முறைகள் பற்றி சற்று விரிவாக ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும்.

பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் என்றால் என்ன?

நவீன உலகில், ஜனநாயக ஆட்சி நிலவும் நாடுகளில், மக்கள் தம்பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்காக பெற்றுக் கொள்ளும் உரிமையே ஜனநாயக உரிமையாகக் கொள்ளப்படுகின்றது. இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகளில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக யாப்புகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இரண்டு முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

1. பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ முறை.
2. விகிதாசார பிரதிநிதித்துவமுறை என்பவையே அவை.

1910ம் ஆண்டில் குருமெக்கலம் அரசியலமைப்பின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 1977ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாரளுமன்றப் பொதுத்தேர்தல் வரை இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களும், பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ முறைக்கமையவே நடைபெற்றன.

(தேர்தல்) தொகுதிவாரியாக, மக்கள் தம் பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிந்து கொள்வர். ஒரு தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இம்முறையே பெரும்பான்மைத் தேர்தல் முறை எனப்படும்.

உதாரணமாக : X எனும் தேர்தல்; தொகுதியில் போட்டியிட்ட A,B,C,D என்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு அமைந்தன எனக் கொள்வோம்.
A = 15,833
B = 12,217
C = 2,893
D = 518
இம்முடிவின்படி ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற A என்பவர் X தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இவர் பெற்ற மேலதிக வாக்குகள் 3616 ஆகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை என்றால் என்ன?

1978ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு (இலங்கையின் 8வது அரசியலமைப்பு) அமுல்படுத்தப்பட்டதையடுத்து இலங்கையில் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகமானது. 1850களில் டியுனிஸ் அரசியல்வாதியான ஸி.ஸி.ஜி. அந்திரேயும், பிரித்தானியாவைச் சேர்ந்த பாரிஸ்டர் தோமஸ் குரேயும் விகிதாசாரத் தேர்தல் முறையினை அறிமுகப்படுத்திய போதிலும் கூட, உலகளாவிய ரீதியில் இத்தேர்தல் முறை பிரபல்யம் அடையக் காரணமாக இருந்தவர் “ஜோன் ஸ்டுவார்ட் மில்” என்பவராவார்.

விகிதாசாரத் தேர்தல் முறை எனும் போது ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்தவ) தேர்தல் தொகுதியில் (அல்லது ஒரு தேர்தல் மாவட்டத்தில்) வேட்பாளருக்கு அல்லது பல வேட்பாளர்களை உள்ளடக்கிய (பட்டியல்) ஒரு குழுவிற்கோ அல்லது கட்சிக்கோ அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களை ஒதுக்கும் உபாயங்களைக் கொண்ட வாக்களிக்கும் முறையே விகிதாசார முறை எனப்படும்.
இந்த விகிதாசார முறையானது இரண்டு பிரதான மாதிரிகளைக் கொண்டதாகும். அவை:
1. தனிமாற்று வாக்குரிமை
2. பட்டியல் முறை

தனிமாற்று வாக்குரிமையின் கீழ் இலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். இத்தகையத் தேர்தல் 1982,1988, 1994, 1999, 2005, 2010ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பட்டியல் முறையின் கீழ் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மாகாண சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், உள்@ராட்சி சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (மாநகர, நகரசபை, பிரதேச சபை) என்பன நடைபெறும். இம்முறைக்கமைய 1989, 1994, 2000, 2002, 2004ம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே இத்தேர்தல் நடைமுறைகளை அவதானிக்கும் போது சிறுபான்மை இனத்திற்கு எத்தேர்தல் முறை நன்மை பயக்கும் என்பதை இனங் காட்டக்கூடியதாக இருக்கும்.

எனவே பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, 1972ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெரும்பான்மைத் தேர்தல் முறைமையும், 1978ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் விகிதாசாரத் தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராய பின்வரும் தலைப்புக்களின் கீழ் நோக்குதல் பொருத்தமானதாக அமையும்.

1. தேர்தல் தொகுதிகள் பிரிக்கும் முறை.
2. நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் முறை.
3. வாக்களிக்கும் முறை.
4. ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் முறை.
5. வெற்றிடமேற்படும் போது மீள்நிரப்பப்படும் முறை

தேர்தல் தொகுதி பிரிக்கப்படும் முறையினால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

பெரும்பான்மைத் தேர்தல்முறை இடம்பெற்ற முதலாம் குடியரசு யாப்பில் ( 1972ம் ஆண்டு யாப்பு) தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் தொடர்பான ஏற்பாடுகள் யாப்பின் 77 முதல் 81 வரையுள்ள உறுப்புரைகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இதன்படி 78(2) உறுப்புரையின் பிரகாரம் இலங்கையில் 75, 000 மக்களுக்கு (மக்கள் தொகை) ஒரு பிரதிநிதியென்றும், 1000 சதுரமைல்களுக்கு ஒரு பிரதிநிதியென்றும், வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஓவ்வொரு தடவையும் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து மூவரைக் கொண்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்றை, ஜனாதிபதி அமைத்தல் வேண்டும் என்றும் யாப்பின் 77(1) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 1974ம் ஆண்டில் திரு. நோயல் தித்தவெல (முதலாம் குடியரசு யாப்பு நிர்ணய ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றியவர்) என்பவரின் தலைமையில் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் சிபார்சுக்கமைய தேசிய அரசுப் பேரவையினால் (பாராளுமன்றத்தால்) 1975ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில், 1ம் குடியரசு யாப்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது திருத்தமாக 78(2) உறுப்புரையில் 90, 000 மக்களுக்கு ஒரு தொகுதி என்ற நிலை பேணப்பட்டது. திரு. நோயல் தித்தவெல ஆணைக்குழுவின் அறிக்கை 1976ம் ஆண்டில் ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவை மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி 1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது உறுப்பினர் எண்ணிக்கையும்ää தொகுதிகளும் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டது.

1 சனத்தொகை அடிப்படையில் மொத்த சனத்தொகை 90, 000 ஆல் வகுக்கப்பட்டு 143 அங்கத்தவர்களும்.
2 பரப்பளவின் அடிப்படையில் இலங்கையின் மொத்தப் பரப்பளவான 25, 332 சதுரமைல்கள் 1000ஆல் வகுக்கப்பட்டு 25 அங்கத்தவர்களுமாக மொத்தம் 168 பிரதிநிதிகள் தேசிய அரசுப் பேரவையில் இடம்பெற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த 168 பிரதிநிதிகளும் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகவே அமைவர். (நியமன அங்கத்துவம் இங்கு நீக்கப்பட்டது) இந்த 168 பிரதிநிதிகளும் இலங்கையில் ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த 160 தொகுதிகளினூடாக தெரிவு செய்யப்படல் வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது.

1947ம் ஆண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பில் இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை இனத்தவர்களின் அரசியல் காப்பீடு ஏற்பாடாக பல அங்கத்துவத் தேர்தல் தொகுதி முறை அல்லது இரட்டை அங்கத்தவர் தேர்தல் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு தேர்தல் தொகுதியில் பெரும்பான்மை, சிறுபான்மை இனங்கள் அண்ணளவாக சமமாக வாழ்ந்தால் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், அல்லது ஒரு தேர்தல் தொகுதியில் இரண்டு சிறுபான்மை இனத்தவர்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், இத்தகைய பல அங்கத்துவ தேர்தல் தொகுதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்படி கொழும்பு மத்தி, நுவரெலிய, மஸ்கெலியா (மூன்று அங்கத்துவத் தொகுதிகளாகவும்) பேருவளை, ஹாரிஸ்பத்துவ, பொத்துவில், மட்டக்களப்பு என்பன இரட்டை அங்கத்துவத் தொகுதிகளாகவும் வகுக்கப்பட்டன.

இதன்படி பல அங்கத்துவர் தொகுதி 6 இல் இருந்தும் 14 பிரதிநிதிகளும், தனி அங்கத்துவர் தொகுதிகள் 154இல் இருந்தும், 154 பிரதிநிதிகளுமாக 160 தேர்தல் தொகுதிகளிலும் இருந்து 168 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ், தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படல்.

விகிதாசார தேர்தல் தொகுதியின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படுவதில்லை. மாறாக தேர்தல் மாவட்டங்களே வரையறை செய்யப்படுகின்றன. 2ம் குடியரசு யாப்பின் 96ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவு பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ‘ஜனாதிபதியால் அமைக்கப்படும் தேர்தல் வரையறை ஆணைக்குழு இலங்கையை இருபதுக்குக் குறையாததும், இருபத்து நான்கிற்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங்களாகப் பிரித்து அவற்றிற்குப் பெயர்களைக் குறித்தொதுக்குதல் வேண்டும்.’

அரசியலமைப்பின் 95ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவுக்கமைய 1978– 11– 29ம் திகதி திரு ஜீ.பீ.ஏ சில்வா என்பவரின் தலைமையிலான தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழுவினை இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அமைத்தார். இவ்வாணைக் குழுவின் அறிக்கை 1981 தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழு அறிக்கை எனப்படுகின்றது. இவ்வறிக்கையின் படி (26ம் பக்கம்) இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டது. இலங்கையில் விகிதாசார முறையின் கீழ் இதுவரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்பட்டிருந்தமை அவதானிக்கத்தக்கதாகும்.

சுதந்திர இலங்கையின் செயற்பட்ட சோல்பரி அரசியலமைப்பிலோ, 1ம் குடியரசு அரசியலமைப்பிலோ பாராளுமன்ற அங்கத்துவர் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டிருக்கவில்லை. (நெகிழும் அங்கத்துவத்தைக் கொண்டதாகவே அங்கத்துவ எண்ணிக்கை அமைந்திருந்தது) ஆனால் 2ம் குடியரசு யாப்பில் இலங்கைப் பாராளுமன்ற அங்கத்துவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ‘அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கிணங்க அமைக்கப்பட்ட பல்வேறு தேர்தல் மாவட்டங்களில் தேருநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 196 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் கொண்டிருக்க வேண்டும்.’ அதே நேரம் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்துக்கிணங்க (1988ல்) இந்த எண்ணிக்கை 225 ஆக உயர்த்தப்பட்டது. இந்த 225 அங்கத்தவர்களும் பின்வரும் ஒழுங்கில் இடம்பெறுவர்.

1 இலங்கையின் முழு வாக்காளர் தொகையையும், கருத்திற் கொண்டு 160 உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாகத் தெரிவுசெய்யப்படுதல்.

2. ஒரு மாகாணத்திற்கு 4 என்ற வீதம் 9 மாகாணங்களுக்கும், 36 உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.(ஆக மேற்படி 196 உறுப்பினர்களும், 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து நேரடியாக மக்கள் மூலம் தெரிவு செய்யப்படுவர்)

தேசிய ரீதியில் ஒவ்வொரு கட்சிகளும், குழுக்களும் பெறும் வாக்கு விகிதாசாரத்துக்கு அமைய மீதமான 29 பிரதிநிதிகளும் தேசியப் பட்டியல் மூலம் இடம்பெறுவர்.

தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படக்கூடிய முறையினை நோக்குமிடத்து பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரத் தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்குத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ள அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஏனென்றால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தினர் சிதறியே வாழ்ந்து வருகின்றனர். எனவே தொகுதி ரீதியாக அமையும் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது மிகக் கடினமானதொன்றாகும். ஆனால் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தேர்தல் மாவட்டமாக வரையறை செய்யப்படுவதினால் மாவட்டத்தில் சிதறிவாழும் சிறுபான்மையினருக்கு ஓரிரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கலாம். எனவே பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரப்பிரதிநிதித்துவம் சிறுபான்மை சமூகத்தினருக்கு அதிக வாய்ப்புண்டு என்பது மறுக்க முடியாததாகும்.
ஏனைய நடைமுறைகளை அவதானிக்கும் போதும் இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்தலாம்.

(தொடரும்…….)

Read more...

பெண்கள் மீதான வன்முறைகள். -வி.ரி.சகாதேவராஜா-

நூறாவது சர்வதேச பெண்கள் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாவே காணப்படுகின்றது.

1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பிக்கின்றன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலைநேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்களை மேற்கொண்டனர். ஆனால் தற்காலத்திலும் பெண்கள் தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

எமது இதிகாசங்களை உற்று நோக்கும் போது ஆரம்ப கால பெண்கள் மிகக் கௌரவத்துடனும் சுதந்திரமாகவும் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் கூறப்படுகின்றது. இடைக்காலப் பகுதியில் அந்நிய நாட்டினரின் ஆக்கிரமிப்புக்கள், பொருளாதார நெருக்கடி போன்ற சமூகக் காரணங்களால் பெண் அடிமைத்துவம் அல்லாவிட்டால் பெண்ணிற்குரிய வேற்றுமை அதிகரித்து வந்ததாகக் கருதப்படுகின்றது. தற்போதைய நிலையிலும் இது தொடர்கின்றது என்பதை பல தரப்பட்ட மட்டங்களிலிருந்து அறியக்கூடியதாய் உள்ளது. இன்று ஊடகங்களில் நாளொன்றுக்கு ஆகக்குறைந்தது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான ஒரு வன்முறையாவது அறிய முடிகின்றது. பெண்ணாக பிறப்பதாலேயே பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய பின்னணியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனம், சீடோ எனப்படும் பெண்களுக்கெதிரான சகல விதமான பாரபட்சங்களுக்கும் எதிரான பிரகடனம் ஆகியன பெண்களின் உரிமைகளை வலியுறுத்துகின்றன.

சீடோவின் முகவாசத்தின் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. எல்லா மனிதரும் சமமாகவே பிறக்கிறார்கள். உரிமைகளைப் பொருத்தவரையில் எல்லா மனிதர்களும் சுதந்திரமும் சமத்துவமும் உடையவர்கள். இருந்தும் பெண்களுக்கெதிரான உரிமை மீறல்கள் இன்றும் தொடர்கிறது. உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச ஏற்பாடுகள் இருக்கின்ற போதும், பெண்களுக்கெதிராக, சகல வடிவங்களிலும் காட்டப்படும் பாகுபாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்படுவது அவசியம். அத்தோடு பெண்களுக்கெதிரான பாகுபாடுகள் என்பது ஆண்களுக்குள்ள மனித உரிமைகளையும் (அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, குடியியல் மற்றும் வாழ்க்கையின் பிற துறைகள் சார்ந்த) சுதந்திரங்களையும் அனுபவிக்கவிடாது மகளிரைத் தடுக்கும் எப்பொருளும் அல்லது எச்செயலும் ஆகும் என வரைவிலக்கணப்படுத்துகின்றது.

மேலும் பெண்கள் தொடர்பான அரசின் பங்கும் பொறுப்பும், அரசியலில் பங்குபற்றுதல், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவபடுத்துதல், தேசியம், கல்வி, வேலை மற்றும் நியாயமான தொழில் உரிமைகள், சுகாதாரம், பொருளாதார, சமூக வாழ்வு, கிராமப்புற மகளிர், சட்டத்தின் முன் சமத்துவம், திருமணத்திலும் குடும்ப உறவுகளிலும் சமத்துவம் போன்ற உரிமைகளை சீடோ பிரகடனம் வலியுறுத்துகின்றது. இலங்கை உட்பட பெரும்பாலான நாடுகள் சீடோவை ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்கின்றன.

பெண்களுக்கெதிராக நடைபெறுகின்ற வன்முறைகள் பல மட்டங்களிலும் பல விதமாக இடம்பெற்று வருகின்றன. அதாவது குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, பாலியல் தொல்லைகள், உடல் உள ரீதியான துன்புறுத்தல்களாக பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பெண்களுக்கெதிரான வன்முறையானது உலகளாவிய ரீதியில் அதிகரித்துக் காணப்படுவதற்கான காரணங்களாக

* யுத்தமும் இடப்பெயர்வும்
* பாதுகாப்பற்ற நிலமை
* அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை
* பொருளாதார நெருக்கடிகள்
* முகாம்களில் முறையான முகாமைத்துவமின்மை
* ஆண்கள் தனது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்துதல்
* நல்ல சுகாதார வசதிகளின்மை
* மகளிர் உரிமை தொடர்பாக போதிய தெளிவின்மை

போன்றவை காணப்படுவதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இலகுவாக ஆளாகக் கூடிய பெண்களாக பின்வருவோர் காணப்படுகின்றனர்.

* வறுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள்
* வலது குறைந்த பெண்கள்
* கர்ப்பிணிப் பெண்கள்
* வயோதிபப் பெண்கள்
* சிறு குழந்தையின் தாய்மார்
* சிறுமியர்

போன்றோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர். உலகளாவிய முறையில் நடாத்தப்பட்ட 50 ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மூன்றுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் உடல், உள பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாத்தல்

குடும்பத்திலும் யுத்தம் இடப்பெயர்வின் போதும் ஏற்படும் வன்முறைக்கு பெண்கள் ஆளாகின்றனர். ஆனால் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டனைகள் இன்றியே தப்பித்து விடுகின்றனர். உரிமை மீறல்களுக்குட்டபட்ட கலாசார ரீதியான தடைகள், நிதி வசதியின்மை, பிறரில் தங்கி வாழ்தல், சட்ட நிவாரணங்களைப் பெறுவதற்கான வழி வகைகள் பற்றி அறியாதிருத்தல், உரிமை மீறல்கள் பற்றிய அறியாமை காரணமாக பெண்கள் மீதான வன்முறைகள் பதிவு செய்யப்படுவதில்லை. எனவே பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழிக்கும் நாளாக வருடந்தோறும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாளில் பெண்களுக்கெதிரான ஏற்படும். வன்முறைகள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தற்கால கட்டத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கெதிராக ஏற்படும் வன்முறையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

சர்வதேச மகளிர் தினம், பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் போன்றவை பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிரான வெளிப்பாடுகளாகும். எனவே இத்தகைய தினங்களில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமது பங்களிப்பை குடும்பம், வேலைத்தளம், சமூகம், அரசு உள்ளிட்ட அனைவரும் வழங்குதல் வேண்டும்.

இவ்வாக்கம் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. VIII

Read more...

ஜெனரலின் விடுதலைக்காக வீடுவீடாகச் செல்லும் டிஎன்ஏ.

ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்காக டிஎன்ஏ யினரால் ஒன்லைன் பெட்டிசன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்பொருட்டு www.freesarathfonseka.com எனும் இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்விணையத்திற்கு சென்று ஜெனரல் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி குரல் கொடுக்க விரும்புபவர்கள் கையொப்பம் இடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட இணையத்தளத்தினுள் விசமிகள் அத்துமீறி நுழைவதாகவும், திட்டமிட்ட முறையில் இணைத்தளம் ஆங்காங்கே தடைப்படுத்தபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள ஏற்பாட்டாளர்கள், குறிப்பிட்ட பெட்சிசனில் கையொப்பம் பெறுவதற்காக வீடு வீடாக செல்வதாக தெரியவருகின்றது.

Read more...

Tuesday, March 2, 2010

'இந்தியாவின் நம்பகமான அரசியல்வாதி மன்மோகன் சிங்'

இந்தியாவின் நம்பகமான அரசியல்வாதி பிரதமர் மன்மோகன் சிங் என்று பிரபல பத்திரிகையான "ரீடர்ஸ் டைஜஸ்ட்" நடத்திய வாக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அரசியல், தொழில்துறை, சினிமா மற்றும் விளையாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 100 பேர்களது பட்டியலை வெளியிட்டு, அவர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து வாக்களிக்குமாறு தனது வாசகர்களை "ரீடர்ஸ் டைஜஸ்ட்"( Readers Digest) பத்திரிகை கோரியிருந்தது.

இதில் கலந்துகொண்டு வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர், இந்தியாவின் நம்பகமான அரசியல்வாதியாக பிரதமர் மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்துள்ளனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்தியாவின் மிக நம்பகமான மனிதர் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து நம்பகமான மனிதர் பட்டியலில், டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா இரண்டாவது இடத்திலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அதே சமயம் இந்தியாவின் ஒட்டுமொத்த நம்பகமான மனிதர் பட்டியலில், மன்மோகன் சிங்கிற்கு 7 ஆவது இடமே கிடைத்துள்ளபோதிலும், நம்பகமான அரசியல்வாதி பட்டியலில் அவர் முதலாவது இடத்தில் உள்ளார்.

இதே பட்டியலில் ராகுல் காந்திக்கு 27 ஆவது இடம் கிடைத்துள்ளது.சோனியா காந்திக்கு 72, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு 50, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு 73, பா.ஜனதா தலைவர் அத்வானி 94, மம்தா பானர்ஜி 96, ஷரத் பவார் 97, பிரகாஷ் காரத் 98, லாலு பிரசாத் 99 மற்றும் மாயாவதிக்கு 100 ஆவது இடமும் கிடைத்துள்ளது.

அதேப்போன்று "இந்தியாவில் எப்போதும் விரும்பப்படுவர்கள்" பட்டியலில் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி 4 வது இடத்திலும், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 5, செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 6 ஆவது இடத்திலும் உள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

Read more...

இலங்கை விமானப்படை தனது 59 ஆண்டு நிறைவை கொண்டாடியது.

இலங்கை விமானப்படையின் 59ம் ஆண்டு நிறைவு விழா இன்று இலங்கையில் உள்ள சகல விமானப்படைத் தளங்களிலும் கொண்டாடப்பட்டது. அதன் பிரதான நிகழ்வு கொழும்பு விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் முப்படைகளின் பதில் பிரதானியும் விமானப்படைத் தளபதியுமாகிய எயார் சீப் மாஸல் ரொஸான் குணதிலக வுடன் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read more...

அரசியல் உலகம் பார்க்கப் போகின்றோம்

அரசியல்வாதிகள் அரசுப் பணியாளர்கள் இருவரும் மக்களுக்காக, மக்கள் நலப் பணிக்காக இருப்பவர்கள். இந்த இரண்டும் சீராக இருந்தால் நிர்வாகமும் சீராக இருக்கும். நம் அமைப்பு இரட்டை மாட்டு வண்டி கூட இல்லை. மூன்று மாடுகள் இழுத்துப் போகும் வண்டி. மக்கள் தங்கள் பொறுப்பை மறந்து புழுதிவாரி கொட்டக் கூடாது. ஒரு அரசியல் பிரமுகருடன் நடந்த உரையாடல். இது கற்பனையல்ல, நிஜம்

ஏன் லஞ்சம் வாங்குகின்றீர்கள்?

லஞ்சம் என்று ஏன் சொல்லுகின்றீர்கள். வக்கீலுக்கு கொடுக்கும் பீஸ் மாதிரி இது. அவன் அவசரத்துக்கு, தேவைக்கு குறுக்குவழிலில் போகணும்னு நினைக்கறான். எங்க கிட்டே வரான் நாங்க செய்து கொடுக்கற வேலைக்கு பீஸ் வாங்கறோம்.

அவசரம், முறையற்ற கோரிக்கைகள், இந்த புத்தி, எப்படியும் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் ஆரம்பித்து வைத்தது லஞ்சம். எத்தனை நாட்கள் வெறும் பார்வையாளனாக இருப்பது, அரசாங்கப் பணியாளனாக இருந்தாலும் அவனும் மனிதன்,, அவனும் குறுக்குவழிப் பணத்திற்கு ஆசைப் பட ஆரம்பித்துவிட்டான்

ஆண்டவனுக்கே லஞ்சம் கொடுக்கின்றோம். நம் பாவங்களுக்குக் கூட்டாளியாக்குகின்றோம். 'எனக்கு செய்து கொடு. உன் கோயிலுக்கு வரேன். உன் உண்டியல்லே பணம் போடறேன்' கடவுள் எல்லாவற்றையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றான்.

நேர்மையுடன் வாழ்கின்றவர்களை மேடையில் புகழ்வோம். ஆனால் கீழே இறங்கியவுடன் அவனை ஏளனமாகப் பார்த்து ,'பிழைக்கத் தெரியாதவன்' என்று கேலி பேசுவோம்.

அரட்டைக் குழு இளைஞர்களில் ஒருவன் கூறியது : 'படிப்பு முடியவும் நான் அரசியலில் சேர்ந்துவிடுவேன். சீக்கிரம் பணம் சேர்க்கலாம். மத்தவங்களை மிரட்டலாம். நம்மைக் கண்டா பயப்படுவாங்க. எதுக்காக ஒருத்தன் கிட்டே வேலை பார்க்கணும்.' அவன் பொறியல் கல்விகற்கும் மாணவன்

வன்முறை வாழ்க்கையில் கவர்ச்சி. உழைக்காமல் மிரட்டியே இலகுவாகச் சம்பாதிக்கலாம். அடுத்தவர்க்கு அச்சம் தரும் வாழ்க்கையினை நோக்கி இளம் உள்ளங்கள் நகர ஆரம்பித்திருக்கின்றன. படித்து முடிக்கவிட்டுத் தானே வேலைக்குப் போக முடியும். எதற்குக் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும்?

மாற்றம் இளைஞர்களிடம் மட்டுமா ?
தன் வீட்டுக் கதவைத் தட்டி, தீமைகள் உள்ளே நுழையும் வரை மனிதன் மெத்தனமாக இருகின்றானே! நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்? 'நெஞ்சு பொறுக்குதில்லையே ' என்று கத்தத் தோன்றுகின்றது அரசியல் பேச்சுக்கு உண்மைகள் தேவையில்லை. உரத்த குரல் போதும். கொச்சைப் பேச்சுக்களில் மனத்தின் இச்சையைத் தீர்க்கும் களம்.

மக்களுக்கு என்ன செய்யப் போகின்றோம் என்று கூறுவதைவிட, நிந்தாஸ்துதி கச்சேரிகள் தான் அதிகம் வெளிப்படையாகப் பேசுகின்றவர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை.

Read more...

பேத்தியை கற்பழித்த 85 வயது பாட்டன் கைது.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் 13 வயதுடைய தனது பேத்தியை கற்பழித்த வயோதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீண்ட காலங்களாக ஒரே வீட்டில் வசித்துவந்த பாட்டன் இக்குற்றச் செயலை புரிந்தாக கூறப்படுகின்றது.

Read more...

தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கின்றன. உள்வீட்டு மோதல்களே அதிகம்.

பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பாரமளிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதாக தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வன்முறைகளில் அதிகமானவை ஆழும் கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே இடம்பெற்றுவருகின்றது. தேர்தலில் விருப்பு வாக்குகளை அதிகமாக பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு உள்வீட்டு மோதல்கள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான நிலைமைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடாமல் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்று செல்லத் தீர்மானித்தாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் செல்வாக்கு மிக்க அமைச்சரான டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் தேர்தலில் விருப்பு வாக்குகள் அதிகம் பெறவேண்டுமாயின் மிகுந்த பணம் செலவிடவேண்டிவரும் எனவும் அதற்கான பணம் தன்னிடம் இல்லை எனவும் கூறியிருந்தார்

Read more...

இலங்கை-இந்திய தம்பதியினர் மீது அவுஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதல்.

ஆஸ்ட்ரேலியாவில் இந்தியப் பெண் மற்றும் இலங்கை நாட்டவரான அவரது கணவர் ஆகியோர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்தவரான சகஷ்ரனாமன் (60) என்பவர் கடந்த 19 ஆண்டுகளாக ஆஸ்ட்ரேலியாவில் வசித்து வருகிறார்.இவரது மனைவி அகல்யா இந்தியாவைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் மெல்பர்னில் வசித்து வரும் இவர்களது வீட்டினுள், நேற்றுமுன்தினம் காலை ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த சுமார் 25 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது. மது அருந்திய நிலையில் காணப்பட்ட அக்கும்பல், அவர்களை இனவெறி அடிப்படையில் அவதூறாக பேசி, தாக்கியுள்ளனர்.மேலும் நாட்டைவிட்டு வெளியேறுமாறும் குரல் எழுப்பியுள்ளனர்.

இருப்பினும் சகஷ்ரனாமன், கையில் இரும்புக் கம்பி ஒன்றை வைத்துக்கொண்டு அவர்களை சமாளித்தபடியே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து காவல் துறையினர், அதிர்ஷ்டவசமாக அங்கு விரைந்து வந்தனர்.

காவல்துறையினரைக் கண்டதும்,அக்கும்பல் தப்பி ஓடியது.இருப்பினும் அக்கும்பலில் ஒருவர் மட்டும் பிடிபட்டதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more...

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: யார் வென்றாலும் ரணில் பிரதமர்?

இலங்கையில் பொதுத் தேர்தலுக்கு பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கும் என கூறப்படுகின்றது.இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையிலேயே அண்மையில் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்ற பெற்றதாக கூறப்படுகிறது.

சரத் பொன்சேகா சுதந்திரமாக செயற்படும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்க் கட்சிகளின் பிரதான தலைவர் என்ற அந்தஸ்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் அமையும். பொன்சேகா குறுகிய காலத்தில் புகழ்பெற்றதன் அடிப்படையில், எதிர்க்கட்சிகளின் பல உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக செயற்பட முன்வந்துள்ளதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

எனினும் பொன்சேகாவை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அண்மைக் காலமாக ரணில் விக்கிரமசிங்க முயற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. எனவே பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாகவோ அல்லது தடுத்து வைக்கும் அடிப்படையிலோ ரணில் அக்கறை காட்டிக்கொள்வதில்லை.

இந்நிலையில் அண்மையில் ராஜபக்சவுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின்போது, பொன்சேகாவை விடுவிக்க, தேசிய அரசாங்கம் அமைப்பது நிபந்தனையாக முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.இதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Read more...

ஹக்கீமுக்கான பாதுகாப்பு மீண்டும் வழங்கப்படுகின்றது.

பாராளுன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து எதிர்கட்சி பாராளுன்ற உறுப்பினர்கள் யாவரதும் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து 17 முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்று முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்களான பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருந்தது. இதனடிப்படையில் கட்சிகளின் தலைவர்கள் , பொதுச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

Read more...

வஞ்சம் தீர்க்கும் அரசியல் எம்மிடம் கிடையாது : ஜனாதிபதி

நாட்டில் என்ன தான் அபிவிருத்தி இடம்பெற்றாலும் மக்களின் வாழ்க்கை தரமும், நற்பண்புகளும் மேம்படாவிட்டால் அந்த அபிவிருத்திகளால் எந்தப் பயனுமே இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் மாலையில் பெல்மதுல்லையில் தெரிவித்தார். பெல்மதுல்ல ரஜமஹா விகாரையில், நடைபெற்ற அறநெறிச் சந்திப்பில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில் இவ்வைபவத்தில் பங்குபற்றுவதையிட்டு நான் பெரிதும் சந்தோஷப்படுகின்றேன். இந்த விகாரைக்கு நான் தொழில் அமைச்சராக இருந்தபோது முதலாவதாக இங்கு வந்தேன். அப்போது இங்கு தொழிற் பயிற்சி நிலையமொன்றையும் திறந்து வைத்தேன். அதன் பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயமும் வந்து சென்றேன். இப்பகுதிக்கும் எமக்கும் நீண்ட காலமாக நல்ல தொடர்பு இருந்து வருகின்றது. அந்த வகையில் எனது வெற்றிக்காக தேரர்கள் பாரிய பங்களிப்பும் செய்திருக்கின்றார்கள்.

இந்த நாடு அச்சுறுத்தல்களுக்குள்ளான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பெளத்த தேரர்கள் முன்வந்து நாட்டை அந்த அச்சுறுத்தல்களிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றார்கள். இது வரலாறாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தால் நாட்டின் நிலைமை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை விபரிக்கவே முடியாது. நாம் ஜனநாயகத்தையும் பாதுகாப்புகள் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின் றோம். எம்மிடம் வஞ்சம் தீர்க்கும் அரசியல் கிடையாது.

மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதேநேரம் சுமார் முப்பது வருடங்கள் நாட்டுக்குப் பெரும் தலையிடியாக இருந்த பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் ஒழித்துக்கட்டி துண்டாடப்பட்டிருந்த நாட்டை மீளவும் ஒன்றுபடுத்தியுள்ளோம். பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எமது பதவிக் காலத்தில் இங்கு ஆரம்பிக்க ப்பட்டிருக்கின்றன.

வீதி அபிவிருத்தி, மின்னுற்பத்தித் திட்டங்கள், துறைமுகங்களின் அபிவிருத்தி என பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருந்தபோதிலும் நாட்டில் என்ன தான் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றின் மூலம் மக்கள் மேம்பாடு அடையாவிட்டால் அந்த அபிவிருத்திகளால் எந்த பயனுமே இல்லை. மக்களின் உள்ளங்கள் மேம்பட வேண்டும். அது அவர்களை சிறந்த நற்பண்பாளர்களாக மேம்படச் செய்யும் அத்தோடு மக்களின் வாழ்க்கைத் தரமும் வளர்ச்சி அடையும். இவை எதிர்கால சமுதாயத்திற்குச் சுபீட்சத்தைப் பெற்றுக் கொடுக்கும்.

மக்களின் உள்ளங்களை மேம்படுத்தவென தேரர்கள் பாரிய பங்களிப்பு செய்கிறார்கள். இருப்பினும் இந்நாட்டினருக்கும், வெளிநாட்டவருக்கும் பெளத்த மதம் குறித்த தெளிவை ஏற்படுத்த வேண்டிய தேவை நிலவுகின்றது. இதனை அவரவர் மொழிகளிலேயே செய்ய வேண்டும். இதற்கு வெளிநாட்டு மொழிகளின் அறிவு அவசியம். அதனால் வெளிநாட்டு மொழி அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு பிரிவெனா கல்வி பெரிதும் உதவும். இதனூடாக பெளத்த மதத்தை பரப்ப முடியும். இத்திட்டத்திற்கு நாம் பங்களிப்பு செய்யத் தயாராகவுள்ளோம்.

அரசியல்வாதிகள் எப்போதும் முன்னுதாரணம் மிக்கவர்களாகத் திகழவேண்டும். அவர்கள் மக்களின் வாழ்க்கை தர மேம்பாட்டுக்காகப் பாடுபடவேண்டும். அந்த வகையில் இரத்தினபுரி மாணிக்கக் கல் நிறைந்த பூமி என்றாலும், இங்கும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் சீவிக்கின்றார்கள்.

இவ்வாறான மக்கள் வாழும் பிரதேசங்கள் ஏற்கனவே அடையாளப்பத்தப்பட்டுள்ளன. இம்மக்களின் வாழ்வாதாரத்தை பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read more...

Monday, March 1, 2010

ஐ.தே.கட்சியின் வேட்பாளர் தெரிவில் தமிழ் தேசிய செயற்பாட்டுக் குழுவிற்கு திருப்தியாம்.

வேட்பாளர் பட்டியல் யாவும் பாரமளிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் வேட்பாளர் பட்டியலில் தமிழ் பிரதிநிதிகளுக்கு இடம் ஒதுக்கியுள்ள விதத்தில் பல குறைபாடுகள் நிலவுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தெரிவு தமிழ் தேசிய செயற்குழுவிற்கு திருப்தி அளிப்பதாகவும், பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்பளிக்கப்படாதவர்களுக்கு எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதே நேரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியலில் 14 சிங்களவர்களும் 9 தமிழர்களும் 6 முஸ்லிம்களும் இடம்பெறுகின்றனர். சிறுபாண்மை யினருக்கு 50 வீதத்திற்கும் மேலான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணி தேசியப் பட்டியலில் 4 முஸ்லிம்கள் 4 தமிழர்கள் இடம்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

வேட்பாளர் மனுவில் மோசடி : சிஐடி யிடம் முறையிடப்போகின்றேன் என்கின்றார் திஸ்ஸ.

மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்றது. ஐக்கிய தேசிய முன்னணியின் மொனறாகலை மாவட்டத்திற்கான வேட்பு மனு பாரமளிக்கப்பட்டபோது, அவ்மனுவில் இடம்பெற்றிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) வேட்பாளர் ஒருவரின் பெயர் ரிபெக்ஸ் பண்ணி அழிக்கப்பட்டு வேறொருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த ரணில், மொனராகலை மாவட்டத்திற்கான ஐக்கிய தேசிய முன்னணியின் குழுத்தலைவர் மடும பண்டாரவே இச்சம்பவத்திற்கு முழுப்பொறுப்பு என தெரிவித்திருந்தார். அத்துடன் வேட்பாளர் மனுவில் தான் எவ்வித மாற்றமும் செய்யவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க கொடுத்த வேட்பாளர்பட்டியலை தெரிவத்தாட்சி அலுவலரிடம் தான் அப்படியே பாரமளித்ததாகவும் மடும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் 16ம் திகதி இரவு வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இட்டுவிட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆவலாக இருந்தாகவும் மோசடி மூலம் தனது பெயர் பட்டியலிலிருந்து எவ்வாறு நீக்கப்பட்டது என்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சீஐடி யில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் மொனறாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட திஸ்ஸ குட்டியாராட்சி அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

ஜெர்மனி-ஸ்பெயின்-பிரான்சில் பயங்கர புயல்: 51 பேர் பலி

மேற்கு ஐரோப்பாவில் வீசிய ரடும் புயல் காற்றில் பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, போர்சுகல், பெல்ஜியத்தி்ல் 51 பேர் பலியாகியுள்ளனர். மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசும் 'சிந்தியா' என்று பெயர் சூட்டப்பட்ட இந்தப் புயலுடன் பெய்த கன மழை மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் மட்டும் 45 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 1999ம் ஆண்டுக்குப் பின் பிரான்ஸைத் தாக்கிய பயங்கர புயல் இதுவாகும். இதையடுத்து பிரான்சில் தேசிய பேரழிவு அறிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

பலியான 45 பேரில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் நீர் புகுந்ததால் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானவர்களைக் காணவில்லை.

பிரான்சில் மின்சாரமும் தடைபட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கன மழையால் ஸ்பெயினில் 3 பேரும், ஜெர்மனியி்ல் ஒருவரும், போர்சுகலில் ஒரு குழந்தையும் பலியாயினர்.

ஆல்ப்ஸ் மலை பகுதியிலும் கன மழை பெய்து வருவதால் பெரும் பனிச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கன மழையுடன் புயல் காற்றும் வீசுவதால் இந்த நாடுகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு பிடிங்கி வீசப்பட்டுள்ளன.

இதனால் இந்த நாடுகளில் விமான சேவையும், ரயில் போக்குவரத்தும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read more...

ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்காக ஒன்லைன் பெட்டிசன்.

இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலைவேண்டி ஒன்லைன் பெட்டிசன் கையொப்பம் கேசரிக்கப்பட்டுவருகின்றது. ஜனநாயக தேசியக் கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் நிகழ்வினை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இன்று காலை றோயல் அவனியு வில் அமைந்துள்ள ஜெனரல் பொன்சேகாவின் காரியாலயத்தில் து ஆரம்பித்து வைத்தார்.

முன்னாள் பிரதம நீதியரசர், ஜேவிபியின் தலைவர், முன்னாள் பா.உ அருஜூனா ரணதுங்க, ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் ஆகியோர் உட்பட பல ஆரம்ப நிகழ்வில் கலந்த கொண்டனர்.

Read more...

தேர்தல் ஆணையாளர் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகின்றாராம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனது அறிவுறுத்தல்களுக்கு கீழ்படியாத ஊடகங்களுக்கு எதிராக கடந்த ஜனாதிபதி தேர்தலைப் போலல்லாது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் திஸாந்த தஸநாயக்க தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றின் கட்டளையின்படி செயற்படாத அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் அரச ஊடகங்கள் தனது கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்றிருந்தாகவும், மிகவும் பொறுப்புணர்ச்சியற்றவகையில் பக்க சார்பாக அவை செயற்பட்டிருந்தாகவும் தேர்தல்கள் ஆணையாள குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையாளரின் செயற்பாடுகள் சிறப்பாக காணப்பட்டதாக பலராலும் போற்றப்பட்டிருந்தபோதும், அண்மையில் அவரினால் வெளியிடப்பட்ட சில அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகளால் மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

Read more...

வேடுவச் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்தோர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

நீர்கொழும்புப் பிரதேச்தில் உள்ள சிறு தொழிற்சாலை ஒன்றில் நான்கு வேடுவச் சிறுவர்களை வேலைக்கமர்த்தியிருந்த குடும்பம் ஒன்று தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளது. பொலிஸாரினால் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். சிறுவர்களை வேலைக்கமர்த்தியமை, அவர்களுக்கு அதிபார வேலைகளை வழங்கியமை போன்ற பாரிய இரு குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.

Read more...

பெற்ரோலியக் கூட்டுத்தாபன தலைவரை சீஐடி யினர் விசாரித்தனர்.

முன்னாள் பெற்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் மேஜர் ஜெனரல் அசோக தொரதெனியவை சீஐடி யினர் விசாரணை செய்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதராவாக செயற்பட்டதாகவே அவர் மீது விசாரணைகள் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வெளியாகியவுடன் இவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

முன்னாள் பா.உ களுக்கான பாதுகாப்பு : நீதிமன்று சட்ட மா அதிபருக்கு ஆலோசனை.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்த்து எதிர்கட்சி பாராளுன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து 17 முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகள், பாராளுன்றம் கலைக்கப்பட்டிருந்தாலும் , முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்களுக்கான உயிரச்சுறுத்தல் தொடர்ந்தவண்ணமே உள்ளதாகவும் அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் வாதாடினர்.

மேற்படி வாதத்தினை கருத்திலெடுத்த நீதிபதிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய சந்தர்பங்களை ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்

Read more...

இராணுவ மேஜர் கைது. இருவர் தேடப்படுகின்றனர்.

பம்பலப்பிட்டியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் கலாட்டா செய்த இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்விடுதியில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்றை அடுத்து தனது கைத்துப்பாக்கியை எடுத்து விடுதியிலிருந்து உழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அவர் அங்கிருந்து பொருட்களையும் அடித்து நொருக்கியுள்ளார்.

இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சித் குமார எனப்படும் மேஜர் இன்று கல்கிசை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்யுமாறு பொலிஸாரை பணித்துள்ளது.

Read more...

சிலி நிலநடுக்கத்தில் இரண்டு மில்லியன் மக்கள் பாதிப்பு

சிலியின் மத்திய பகுதியைச் சனிக்கிழமை தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிபர் மிஷல் பச்சலட் தெரிவித்தார்.
சக்திவாய்ந்த இயற்கைப் பேரிடர் நாட்டைச் சோதனைக்குள்ளாக்கி இருப்பதாகத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார். சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகள் பதிவுசெய்த நிலநடுக்கத்தால் பசிபிக் வட்டாரத்தில் சுனாமி ஆழிப்பேரலையும் எழுந்தது. ஆனால் அலைகளின் உயரம் எதிர்பார்த்த அளவை எட்டவில்லை. “இயற்கையின் பயங்கரத்தால் எங்கள் நாடு பெரிதும் பாதிப்படைந்துள்ளது” என்று கூறினார் அதிபர் பச்சலட். “பேரிடரிலிருந்து மீண்டெழும் நமது ஆற்றலை இந்தப் பேரிடர் சோதிக்கிறது. நாட்டின் அடிப்படை சேவைகள் அனைத்தையும் வழக்கநிலைக்குக் கொண்டு வரும் அனைத்து வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஆனால் செய்வதற்கு நிறைய இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

சிலியின் ஆறு வட்டாரங்களில் பேரிடர் நெருக்கடி நிலையை அதிபர் பச்சலட் அறிவித்திருக்கிறார். ஐம்பது ஆண்டுகளில் சிலி நாட்டை உலுக்கியிருக்கும் ஆகப்பெரிய நிலநடுக்கம் இது. பல இடங்களில் சாலைகள், கட்டடங்கள் ஆகியவை சேதமடைந்தன. தலைநகரில் இரசாயனத் தொழில்சாலை தீப்பற்றிக் கொண்டது. மின்சாரம், தண்ணீர் விநியோகமும் தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டன.

மாவ்லி வட்டாரத்தில் மட்டும் 85 பேர் மாண்டதாகச் செய்தியாளர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தின் மையத்திலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தவர்களாலும் கூட நிலநடுக்கத்தின் உலுக்கலை உணர முடிந்தது. கான்செப்ஷன் நகரிலிருந்து 115 கிலோமீட்டர் வடகிழக்கிலும் தலைநகர் சான்டியாகோவிலிருந்து 325 கிலோமீட்டர் தென்மேற்கிலும் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சான்டியாகோ, ஓ ஹிகின்ஸ், பியோபியோ, ஆராவ்கேனியா, வால்பராய்சோ ஆகிய வட்டாரங்களிலும் மக்கள் கொல்லப்பட்டனர்.

கான்செப்ஷனில் முக்கியமான பாலம் ஒன்று உடைந்து பியோபியோ ஆற்றில் சரிந்து விழுந்தது. இடிந்து கிடக்கும் கட்டடங்களில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள். பர்ரல் நகரின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உதவச் சென்று ஆபத்தில் சிக்கிக் கொண்டார்.
“நான் அவரைக் காப்பாற்ற முயன்றபோது, சுவர் இடிந்து என் முதுகில் விழுந்தது. நான் தரையில் விழுந்தேன். என் கால்கள் கட்டிலுக்குக் கீழே சிக்கிக் கொண்டன. எப்படியோ இடிபாடுகளுக்கு இடையிலிருந்த சிறிய ஓட்டை வழியே வெளியே தலைகாட்டினேன். அங்கிருந்து மீட்புக் குழுவினர் என்னைக் காப்பாற்றினார்கள்” என்றார் அப்பெண்.

சான்டியாகோவில் கார்ப்பேட்டை உட்பட பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அந்நகரில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். நிலநடுக்கத்திற்குப் பிறகு சான்டியாகோ நகரின் பெரும்பகுதி கும்மிருட்டாக இருப்பதாக பிபிசி செய்தி நிறுவனத்தின் கிடியன் லொங் தெரிவித்தார். சான்டியாகோ அனைத்துலக விமான நிலையமும் சேதமடைந்து, குறைந்தது 72 மணி நேரத்திற்கு மூடப்பட்டது.



Read more...

தேயிலை: இலங்கையை மிஞ்சியது கென்யா

உலகில் தேயிலை ஏற்றுமதியில் ஆக அதிக தொகையை ஈட்டிய நாடு என்ற பெருமையை இலங்கை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஆக அதிக ஏற்றுமதி என்று வரும்போது அதன் ஜம்பம் ஆப்ரிக்க நாடான கென்யாவிடம் பலிக்கவில்லை. தேயிலை ஏற்றுமதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையைக் கிழே தள்ளிவிட்டு விட்டது கென்யா.

வறட்சி காரணமாக இலங்கையில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும் 2009ல் ஏற்றுமதி வருவாய் 1,000 மில்லியன் டாலரைக் கடந்து விட்டது என்று இலங்கை தேயிலைத் துறைத் தலைவர் லலித் ஹெட்டியரச்சி, ஒரு செய்தி இதழிடம் சொன்னார்.
இலங்கை சென்ற ஆண்டில் 280 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்தது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com