Wednesday, November 11, 2009

மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிரா மங்களுக்கு அவுஸ்திரேலியா, தென்னா பிரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட குழுவினர் நேற்றுக் காலை தனித்தனியாக விஜயம் செய்தனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், மீள்குடியேற்றம் பற்றி நேரில் அவதானிக்கும் பொருட்டு இவர்களுடைய விஜயம் அமைந்திருந்ததென செட்டிகுளம் பிரதேச செயலக சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதுகாப்புபடை உயர் அதிகாரிகளும் சிவில் அதிகாரிகளும் நிலைமைகளை விளக்கினார்கள்.

Read more...

ரிபிசியின் விசேட அரசியல் கலந்துரையாடல்

இன்றைய நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துனை பொதுச்செயலாளார் நிசாம் காரியப்பர் மற்றும் அரசியல் அவதானி மயில்வாகனம் சூரியசேகரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் ஒன்றியத்தின் பிரித்தானியா கிளையின் முன்னால் தலைவர் நஜாமுகமட், ரிபிசி யின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம், ரிபிசி யின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் செ.ஜெகநாதன் , ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர்.

மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில்
நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் 00 44 208 930 5313

ரிபிசி நிர்வாகம்

Read more...

இராணுவ ஆட்சி தொடர்பாக எச்சரிக்கின்றார் நந்தன குணதிலக.

விமல் வீரவன்ச தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக எந்த கீழ் நிலைக்கும் செல்லக்கூடிய சந்தர்ப்பவாதியாவார்.
ஜேவிபி யில் இருந்து பிரிந்த விமல் வீரவன்ச தலமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், உல்லாசத்துறை அமைச்சருமான நந்தன குணத்திலக களுத்துறைப் பிரதேசத்தில் தனது கட்சி உறுப்பினர்களைச் சந்தித்தபோது எதிர்காலத்தில் இராணுவ ஆட்சி ஒன்று உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. அவர் தேர்தலில் வெற்றி பெறுவாரானால் பங்களாதேஷ், மியன்மார், பாக்கிஸ்தான் போன்று இலங்கையிலும் இராணுவ ஆட்சி இடம்பெறலாம் என எச்சரித்துள்ளார்.

கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவுடனான முரண்பாட்டின் நிமிர்த்தம் கட்சியில் இருந்து வெளியேறிய நந்தன குணதிலக, விமல் வீரவன்சவை மிகவும் விமர்சித்துள்ளதுடன், விமல் வீரவன்ச தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக எந்த கீழ் நிலைக்கும் செல்லக்கூடிய சந்தர்ப்பவாதியாவார் எனக்குறிப்பிட்டு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவரை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மிகவிரைவில் இணையப்போவதாகவும், பாணந்துறை பிரதேச அமைப்பாளர் ரெஜினோல்ட கூரேயை நீக்கி விட்டு தன்னை அப்பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read more...

17000 வேலையில்லாப் பட்டதாரிகள் மிக விரைவில் தொழில் வழங்கப்படும் -ஜனாதிபதி-

வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக இன்று காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றை தொடர்ந்து 17000 வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் உடனடி தொழில்வாய்பை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிரான கோசங்களை தொழிற்சங்கள் பலதும் எழுப்பி வரும் இத்தருணத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளும் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்திருந்ததும், 60 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

யாழ்-கொழும்ப நேரடி பஸ்சேவை ஆரம்பம்.

யாழ்பாணத்தில் இருந்து கொழும்புக்கான நேரடி பஸ்சேவை இன்று காலை ஆரம்பமானது. இன்று காலை யாழிலிருந்து புறப்பட்ட 3 இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அரை-சொகுசு (semi luxury) பஸ் வண்டிகளும் இன்றிரவு 8 மணிக்கு கொழும்பைச் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்-கொழும்பு சாதாரண கட்டணம் ரூ. 368 ஆகும். ஆனால் அரைச் சொகுசு பஸ்வண்டிக்கான கட்டணமாக 550 ரூபா அறவிடப்பட்டுள்ளது.

யாழ்-கண்டி பிரதான பாதையான ஏ9 வீதி கடந்த ஜனவரி மாதத்தில் திறந்து விடப்பட்டபோதும், அப்பாதையினூடாக பயணம் செய்வதற்கு பாதுகாப்புப் படையினரின் அனுமதி பெறவேண்டியுள்ளது.

Read more...

ஜெய-புர பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் காலவரையறையின்றி மூடப்படுகின்றது.

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் சங்கங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கலைப்பீடம் இன்று நண்பகல் 12.00 மணியிலிருந்து காலவரையறையின்றி மூடப்படுகின்றது. நேற்று இரவு இடம்பெற்ற மோதல்களில் காயமடைந்த நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இவ் அவசர முடிவை எடுத்துள்ளனர்.

நிலமைகள் மேலும் மோசமடையாதவாறு பாதுகாத்துக்கொள்ள இன்று காலையில் இருந்து வளாகத்தில் பொலிஸார் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

Read more...

Tuesday, November 10, 2009

சரத் பொன்சேகா இராஜனாமா கடிதத்தை தந்தால் ஏற்றுக்கொள்வேன். ஜனாதிபதி

ஜெனரல் சரத் பொன்சேகா தனது இராஜனாமா கடிதத்தை தந்தால் அதை அரை மணிநேரத்தில் அங்கீகரிப்பதற்கு தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் எவரதும் ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்கு தயாராக தான் இல்லை என தெரிவித்துள்ள அவர் அரசியல் ரீதியாக எந்த சாவாலையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நேற்று இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் முன்னாள் இராணுவத்தளபதி தொடர்பாக அவரிடம் கேட்க்கப்பட்டபோது எவ்வித பதிலையும் கொடுக்க மறுத்த ஜனாதிபதி, சரத்பொன்சேகாவை இலங்கை இராணுவத்தின் ஓர் உயர் அதிகாரியாகவே தனக்கு தெரியும் எனவும் தெரிவித்திருந்தார்.

இலங்கை சட்டத்தின் அடிப்படையில் இராஜனாமா கடிதம் வழங்கப்பட்டாலும் அதை நாட்டின் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கினாலேயே ஒருவரால் சேவையில் இருந்து விலக முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும்; கடந்த மாதம் பாதுகாப்புச் செயலரை தொடர்பு கொண்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு பதவி நீடிப்பு ஒன்று அவசியம் இல்லை என தெரிவித்திருந்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Read more...

புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பலரை கைது செய்யப ஏற்பாடு. கோத்தபாய

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் முக்கியஸ்தர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவாதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற தொலைக்காட்சி நேரடி நிகழ்வொன்றில் இதை தெரிவித்த அவர், கேபி யிடம் மேற்கொண்ட விசாரணைகளுடாக புலிகளின் புலம்பெயர்ந்து வாழும் முக்கிய புள்ளிகள் பலரை கைது செய்து அவ்வியக்கத்தின் வலையமைப்பை சிதைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இக்காரணங்களின் நிமிர்த்தமே கேபி மீதான விசாரணைகள் தொடர்பான விடயங்கள் மிகவும் ரகசியமாக பேணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Read more...

சவுதியில் கைவிடப்பட்ட 260 இலங்கையர்களை அழைத்துவர தூதரகம் ஏற்பாடு.

சவுதி அரேபியாவின் தலைநகர் ஜித்தாவில் கைவிடப்பட்ட நிலையில் நிர்கதியானவர்களான 3000 தொழிலாளர்கள் அங்குள்ள ஷறாபியா எனப்படும் பாரிய பாலம் ஒன்றின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் காணப்படும் 260 இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைந்துவர சவுதியில் உள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தூதரக அதிகாரி பெரேரா தெரிவித்துள்ளார்.

260 பேருக்குமான விமானச் சீட்டுக்கள் தூதரகம் வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நிர்கதியாக்கப்பட்டுள்ளவர்கள் தாங்கள் அனைவரும் வீட்டுப் பணிப்பெண்களாகவும், சிலர் தொழிற்சாலை வேலையாட்களாகவும் தொழில் புரிந்து வந்ததாகவும், பல்வேறுபட்ட துன்புறுத்தல்கள் காரணமாக தாம் தமது தொழிலை தூக்கி எறிந்து விட்டு தெருவுக்கு வர நிர்பந்திக்கப்பட்டதாகவும் தெரிவித்ததுடன், தமக்கான கொடுப்பனவுகள் கூட மாதக்கணக்கில் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.



Read more...

பொலிஸ் மாஅதிபரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமைகளில் சந்திக்கலாம்

பொதுமக்கள் உதவி நிலையம் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் திறப்பு
எஸ். எஸ். பி. தலைமையில் 10 பொலிஸார் நியமனம்


வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களை நேரடியாக சந்திக்க புதிய பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தீர்மானித்துள்ளார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை பொதுமக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண உள்ளதாக பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

பொதுமக்களை காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை சந்திக்கவே தான் முன்னர் தீர்மானித்ததாகவும் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக செல்வதால் ஒரு மணி நேரத்தினால் இதனை நீடித்ததாக வும் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் 2.30 மணிக்குப் பின்னரும் தான் பொது மக்களை சந்திக்க தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்களுக்கு சிநேகபூர்வமான சிறந்த சேவையாற்றவும் பொலிஸ் நிலையங்களினூடாக தீர்க்கப்படாத முறைப்பாடுகளை தீர்க்கவும் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய பொதுமக்கள் உதவி நிலையம் நேற்று புதிய பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரியவினால் பொலிஸ் தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டின் எப்பாகத்தில் இருந்தும் எந்தப் பொதுமகனும் தொலைபேசி யூடாகவோ பெக்ஸ் மூலமோ மின்னஞ்சல் மூலமோ தபால் மூலமோ அல்லது நேரடியாக வந்தோ இங்கு முறையிட முடியும் என பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் இந்த நிலையத்திற்கு பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அடங்கலாக 10 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

5 வருடங்களுக்கான புதிய திட்டம் ஒன்றை பொலிஸ் மா அதிபர் பிரதமரிடம் கையளித்தார்.

புதிதாக நியமனம் பெற்று பொலிஸ் மா அதிபர் பொலிஸ் திணைக்களத்தின் அபிவிருத்தி தொடர்பான தனது 5 வருட திட்டமொன்றை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவிடம் கையளித்தார். இத்திட்டத்தை கையளித்து பேசிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியா தனது திட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தில் உள்ள சகல பிரிவுகளும் அடக்கப்பட்டுள்ளதாவும், திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களுக்கு பொலிஸாரினால் சிறந்த சேவையை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலின்போது மக்களுடன் மிகவும் சினேகபூர்வமாகவும் நெருக்கமாகவும் பொலிஸார் நடந்து கொள்ளவேண்டும் என பிரதமர் பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொண்டார்.

கடந்தகாலங்களில் பொலிஸாரின் அதிகார துஸ்பிரயோகம் மிகவும் பாரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்து என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

நோர்வே நிறுவனம் ஒன்றுக்கு இலங்கையில் பழ உற்பத்திக்கு அனுமதி.

நோர்வேயை சேர்ந்த Pure Nature Limited எனும் நிறுவனம் இலங்கையில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை முதலீட்டுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிறுவனம் நவீன உபகரணங்களின் உதவியுடன் மொனறாகல காவம்பிட்டிய பிரதேசத்தில் தனது வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

75 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் வேலைத் திட்டத்தினூடாக 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. இந்நிறுவனம் பழ உற்பத்தியை முதற்கட்டமாக ஆரம்பித்துள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட நிறுவனம் அதன் முதலீட்டை 200 மில்லியனாக அதிகரிக்கவுள்ளதாகவும், அதன்போது 1000 பேர் வேலைவாய்ப்பை பெறுவர் எனவும் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more...

பா.உ ரங்கபண்டாரவின் மனைவி பாதுகாப்பு தேடுகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார வின் மனைவி காந்தி சேனநாயக்க அவர்கள் தனது ஆசிரியை தொழிலை முன்னெடுக்கும் பொருட்டு அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை சுதந்திர ஆசிரியர்கள் சங்கம் அரசாங்கத்தை கேட்டுள்ளது.

கொழும்பு ஆனந்தா பாளிகா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் காந்தி சேனநாயக்க அவர்கள் பாராளுன்ற உறுப்பினர் ரங்க பண்டாரவின் சட்ட ரீதியான மனைவியாகும். அவர் கடந்த சில காலங்களாக தனது கணவனில் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவரது இரு குழந்தைகளும் தகப்பனின் பராமரிப்பிலேயே வாழந்து வருகின்றனர்.

ஆனால் இந்நிலைமை பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டாரவின் அரசியலுக்கு பாதகமாக அமைந்துள்ளாதாக தெரிவித்து அவர் ஆசிரியை காந்த சேனாநாயக்கவை மிரட்டிவருவதாக இலங்கை சுதந்திர ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவி கந்தப்பன்கொட தெரிவித்து அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுள்ளார்.

அத்துடன் ஆசிரியை காந்தி சேனாநாயக்க தனக்கு விடுக்கப்படும் மிரட்டல் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Read more...

கண்ணீர் அஞ்சலி

ராஜமனோகரன் பிரபாகரன் (தோழர் பிரபா)
மக்கள் விடுதலையை நேசித்த மகத்தான வீரர்களில் ஒருவனாக தோழர் பிரபா இயற்கையெய்திய செய்தி எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1983ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிமக்கள் கொல்லப்பட்டபோது, தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு அரசியல் மயப்படுத்திய மக்கள் புரட்சியே சரியான பாதை என்பதை உணர்ந்து கொண்ட தோழர் பிரபா அவர்கள் 83களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

பள்ளிப்பாரயம் முதலே விடுதலையில் ஆர்வம் கொண்ட தோழர் பிரபா, பல்வேறு சத்தியக்கிரக போராட்டங்கள், மாணவர் எழுச்சி ஊர்வலங்கள் என தன்னையும் ஒருவராக மாணவர் பேரவையுடன் இணைந்து செயலாற்றியதுடன் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டார். 1984களின் நடுப்பகுதியில் இந்தியாவிற்கு சென்ற தோழர் பிரபா அரசியல், இராணுவ கற்கை நெறிகளை தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் பாசறைகளில் கற்றுக்கொண்டு ஒர் சிறந்த மக்கள் போராட்ட வீரனாக தன்னை தயார்படுத்திக் கொண்டவர்.

1987ம் ஆண்டு இலங்கை-இந்திய அரசுகளிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பினார். தாயகத்திலும் தனது கழக செயற்பாடுகளை முன்னெடுத்த நிலையில், பாசிசபுலிகள் இலங்கை அரசிடம் உதவிகளை பெற்றுக்கொண்டு கழக உறுப்பினர்களையும், சகோதர அமைப்பின் உறுப்பினர்களையும் கொன்றொழித்தபோது நயவஞ்சக கொலைகளை எதிர்த்து வந்தார். பாசிசம் உச்சம் கட்டதாண்டவம் ஆடியபோது விடுதலை உணர்வுடன் போராட்ட அமைப்புக்களில் இணைந்து கொண்டவர்களில் பலரும் வெளிநாடுகளிற்கு இடம்பெயர வேண்டிய நிலையில்தான் பிரபாவும் இடம்பெயர்ந்தார். அவ்வாறாக இடம்பெயர்ந்து பலர் வந்தபோதும், அவர்களில் கணிசமானோர் தமது குடும்பவாழ்வில் அமைதியாக ஈடுபட விரும்பியபோதும், பிரபா அவர்கள் அவ்வாறில்லாமல் தான் நேசித்த கொள்கையில் உறுதியாக கழகத்தின் வழியில்; தனது போராட்டப் பாதையில் சுவிற்சர்லாந்தில் கழகத்தின் பணிகளை முன்னெடுத்த தோழர்களுடன் இணைந்து கொண்டு செயலாற்றினார். அக் காலகட்டத்திலும் பாசிசத்தின் பல்வேறு சாவல்களுக்கு முகம்கொடுத்து கழகத்தின் பாதையில் வழிதவறாது தொடர்ந்து செயலாற்றிவந்தார்.

சுவிற்சர்லாந்தில (தமிழன்குரல் வானொலி, வீரமக்கள்தினம் போன்றவற்றை ஆரம்பிப்பதற்கு முன்நின்று உழைத்த தோழர்) கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் ஏனைய தோழர்களுடன் தோளோடு தோள்நின்று செயலாற்றியதுடன், கால நீரோட்டத்தில் பிரான்ஸ்க்கு இடம்பெயரவேண்டிய சூழ்நிலையிலும் அங்கேயும் பாசிசத்திற்கு துணிந்து முகம் கொடுத்து தனது செயற்திறனால் கழகத்தின் (அமைப்பாளராக) பணிகளை முன்னெடுத்து வந்ததுடன், வன்னியில் மோதல்களால் இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்த மக்களிற்கு உதவிடும் தலைமையகத்தின் பணியில் பிரான்ஸ் கிளையும் இணைந்து உதவியதுடன், நிற்கதியாகிய நிலையி;ல் வந்த மக்களுக்கான மறுவாழ்வில் தொடர்ச்சியான பணிகளை கழகத்தின் மற்றைய கிளைத் தோழர்களுடன் இணைந்து முன்னெடுத்து வந்தார். கழகத்தின் கொள்கை வழியில் சகோதர அமைப்புக்களுடனும் ஒர் நல்லுறவை ஏற்படுத்தி அவர்களுடனான உறவையும் சிறந்தமுறையில் பிரான்ஸ் மண்ணில் முன்னெடுத்த ஒரு சிறப்புமிக்க தோழர் ஆவர்.

மக்கள் புரட்சியியே மக்களின் சுதந்திர விடியலுக்கு ஒரே தீர்வு என்ற இலட்சிய வேட்கையுடன் தனது இறுதி மூச்சுவரை உழைத்த தோழர் பிரபாவின் நினைவுகளோடும், கனவுகளோடும் கழகத்தின் பாதையில் எமது பயணம் தொடரும் என்று கூறி அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி நிற்கின்றோம்.


தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T.E)

ஜனநாயகமக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F)

சர்வதே ஒன்றியம் சார்பாக




Read more...

பொலிஸ் பரிசோதகர் சீருடையில் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது.

பொலிஸ் பரிசோதகருக்கான சீருடையணிந்து கொள்ளையில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை பிலியந்தல பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். சீருடையில் வானொன்றை ஓட்சிச் சென்ற அவரை பொலிஸார் கைது செய்ததுடன் அவரது இடுப்பில் இருந்து கைத்துப்பாக்கியையும், ரி 56 ரக துப்பாக்கி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

கொள்ளைக்காரன் கடந்த காலங்களில் பேராதெனிய, அத்துரகிரிய, பிலியந்தல பிரதேசங்களில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com