Sunday, November 8, 2009

எதிர்கட்சித் தலைவர் இந்தியா செல்கின்றார்.

மெய்ப்பாதுகாவல்களை அழைத்துச் செல்ல அனுமதி இல்லை.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளதாகவும் அவர் தனது மெய்பாதுகாவலர்களை அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் கட்சியின் பேச்சாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த தனது மெய்ப்பாதுகாவலர்களை கடந்த காலங்களில் எதிர்கட்சி தலைவர் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளபோதும், நடைமுறைகளில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது வரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக பேசுவதற்கு எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தபோதும், அது பலனளிக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசின் தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் ஆர்கே நாராயணன், வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பி. சிதம்பரம், எதிர்க்கட்சி தலைவர் லால் கிருஸ்ணா அத்வானி உட்பட பல முக்கியஸ்த்தர்களை எதிர்கட்சித் தலைவர் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

கல்முனையில் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை.

கல்முனை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த சில பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருப்பதன் காரணமாக மாணவர்களின் பெற்றோரும், பாடசாலைச் சமூகத்தினரும் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

“பான்பராக்” எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் மாணவர்கள் மத்தியில் பாவனையில் உள்ளதாகவும் சில பிரதேசங்களில் இப்பொருள் மாணவர்களுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கல்முனைப் பிரதேசத்தில் உள்ள இரு பாடசாலைகளில் இப்போதைப் பொருள் வைத்திருந்ததை ஆசிரியர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து இம்மாணவர்களின் பெற்றோர் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தனியார் கல்வி நிலையங்களுக்கு வார இறுதி நாட்களிலும் மாலை வேளைகளிலும் செல்லும் மாணவர்களே இவற்றை வாங்கி பாடசாலைகளுக்குக் கொண்டுவருவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்தவாரம் இச்சம்பவங்களைக் கண்டித்து சம்மாந்துறை பிரதேசத்தில் விழிப்புணர்வுக் குழுவொன்று சுவரொட்டிகளை ஒட்டியதுடன் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

15 வயது சிறுமியை கற்பழித்த சட்டத்தரணி கைது.

மாத்தறை நீதிமன்றில் கடமைபுரியும் சட்டத்தரணி வில்சன் ஜெயவர்த்தனவை 15 வயது சிறுமி ஒருவரை கற்பழித்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி சட்டத்தரணியின் தோட்டத்தில் உள்ள காரியாலயத்தில் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் சிறுமிக்கு தனது வீட்டில் தங்குவதற்கு இடம் அளித்திருந்த சட்டத்தரணி, ஒரு நாள் மதுபாணத்தை வழங்கி சிறுமி மயக்கமுற்ற நிலையில் அவர் மீது குற்றம் புரிந்துள்ளார். மயக்கம் தெளிந்த சிறுமி தனக்கு நேர்ந்திருந்த விடயத்தை அறிந்து கொண்டதுடன் தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியும் அபகரிக்கப்பட்டிருந்ததை உணர்ந்துள்ளார்.

சவிடயம் மாத்தறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டபோது பொலிஸார் அவரைக் கைது செய்து மேலதிக விசாரணைக்காக சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். குறிப்பிட்ட சட்டத்தரணி இவ்வாறன பல பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அவர் ஓர் சட்டத்தரணி என்ற பயத்தில் மக்கள் அவர் தொடர்பாக முறைப்பாடு செய்ய பயந்திருந்தாகவும் கூறப்படுகின்றது.


அதேநேரம் சில மாதங்களுக்கு முன்னர் இவ்வாறானதோர் சம்பவம் இவர் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் இறுதியில் அது கிடப்பில் போடப்பட்டதாக தெரியவருகின்றது.

Read more...

கேபி சித்திரவதை செய்யப்படவில்லை. இராணுவப் பேச்சாளர்.

இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது. இச்செய்தியை மறுதலித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கேபி எவ்வித துன்புறத்தலுக்கும் உட்படுத்தப்படவில்லை என்பதுடன் இச்செய்தியை வெளியிட்டிருந்த புலிகள் சார்பான இணையத்தளங்கள் குறிப்பிட்டுள்ளது போல் கேபி பனாகொட இராணுவத் தளத்தில் வைத்திருக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

கிழக்கில் போரினால் மூடப்பட்ட 140 பாடசாலைகளை திறக்க ஏற்பாடு.

கிழக்கு மாகாணத்தில் போரினால் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக மூடப்பட்ட சுமார் 140 பாடசாலைகளை துரிதமாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இப்பாடசாலைகளில் 68 பாடசாலைகளின் புனர் நிர்மான வேலைகள் பூர்தியடைந்துள்ளதுடன் இவ்வருட இறுதிக்குள் மேலும் 10 பாடசாலைகளை புனர் நிர்மானம் செய்ய முடியும் எனவும் புனர் நிர்மான வேலைகள் முடிவுற்றதும் அவை உடனடியாக கல்விச் சேவைக்காக திறக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more...

இலங்கையில் அணுமின்சக்தி

உலகில் அதிகளவான கனியவளப் பாவனையினால் கனிய வளங்கள் அருகி வருவதனால் மாற்றீடுகளை பயன்படுத்துவது தொடர்பாக உலகம் சிந்தித்து வருகின்றது. இந்த வகையில் இலங்கையிலும் அணுசக்தியை மின்சாரத்திற்காக பயன்படுத்துவது தொடர்பாக பேச்சு வார்தை நடந்து வருவதாக விஞ்ஞான கனியவள அமைச்சர் பேராசிரியர். திஸ்ஸ வித்தாரன தெரிவித்துள்ளார்.

Read more...

Saturday, November 7, 2009

அமெரிக்காவின் விசாரணையை நிராகரித்தேன் : ஜெனரல் பொன்சேகா.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை அமெரிக்க பாதுகாப்பு பிரிவினர் விசாரணை செய்ய முற்பட்டிருந்தனர். விசாரணை நேரத்திற்கு முன்னர் அமெரிக்காவை விட்டு வெளியேறி நாடுவந்தடைந்துள்ள அவர், அமெரிக்க பாதுகாப்பு பிரிவினரின் வேண்டுதலை தான் நிராகரித்ததாக திவியின எனும் சிங்களமொழிப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

விசாரணை ஒன்றுக்கு வருமாறு அமெரிக்க அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தபோதும், அவ்வாறான ஓர் விசாரணைக்கு முகம் கொடுப்பதற்கு தான் இலங்கை அரசின் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ள அவர், அமெரிக்க அதிகாரிகளின் நோக்கம் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான தகவல்களைப் பெற்றுக்கொள்வதாக இருந்ததாகவும், அதற்கான வேண்டுகோள் எழுத்து மூலம் விடுக்கப்பட்டிருந்தாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சகோதரர்களான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க பிரஜா உரிமை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை அரசின் வேண்டுதல் மற்றும் நடவடிக்கைகளின் பேரிலேயே ஜெனரல் இலங்கை வந்தடைந்தாக வெளிவிவகார அமைச்சர் றோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

...............................

Read more...

இரண்டு லட்சம் ரூபாவிற்கு சமாதான நீதவான் பதவி.

மனித உரிமைகள் அமைப்பு எனும் பெயரில் தம்மை பதிவு செய்து கொண்டுள்ள அமைப்பு ஒன்று பல நிதிமோசடிகளை மேற்கொண்டுவருவது வெளிச்சத்திற்கு வருகின்றது. கொழும்பை தளமாக கொண்டுள்ள இவ் அமைப்பு மட்டக்களப்பு மற்றும் சில பிரதேசங்களில் தமக்கென முகவர்களை நியமித்து வைத்துள்ளதுடன் முகவர்களுடாக சமாதான நீதவான் பதவிக்காக நபர்களிடம் சுமார் இரண்டு இலட்சம் ரூபா வரை பேரம் பேசியுள்ளமை தெரியவந்துள்ளதுடன்.

சமாதான நீதவான் பதவி இவ்வாறு விலைபேசி விற்கப்படுவது குறித்து அறிந்து கொண்ட காத்தான்குடிப் பிரதேசத்தை சேர்ந்த நலன்விரும்பிகள் சிலர் விடயத்தை ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

மட்டக்களப்பு விசேட நிருபர்

Read more...

சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்த சிறுவர்கள் கைது.

முறையே 13,14 வயதுடைய சிறுவர்கள் இருவர் சேர்ந்து 10 வயது சிறுமி மீது பாலியல் புரிந்த சம்பவம் ஒன்று பொல்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அருகில் உள்ள கடையொன்றில் வீட்டுக்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட சிறுமி வாங்கிக்கொண்டு வரும்போது மறைந்திருந்த சிறுவர்கள் சிறுமியை அங்கு காணப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்கு இழுத்துச்சென்று மேற்கண்டவாறு நடந்துள்ளதாக சிறுமி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தகவல்களின் அடிப்படையில் சிறுவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

30 வருடங்களின் பின் சுதந்திர சிவில் நிர்வாகம்: முல்லை அரசாங்க அதிபர் இமெல்டா கூறுகிறார்

வன்னியில் முப்பது வருட காலத்திற்குப் பின்னர் முழுமையான சிவில் நிர்வாகத்தை சுதந்திரமாக நடைமுறைப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் சிவில் நிர்வாகம் எதுவிதமான தலையீடுகளுமின்றி முழுமையாகத் தமது கட்டுப்பாட்டின்கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரச அதிபர் கூறினார்.

இதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் ஆணித்தரமான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்கேற்ப இராணுவத்தினருக்குத் தாம் வழிகாட்டல்களை வழங்குவதாகக் கூறிய அரச அதிபர் அவர்கள், பாதுகாப்புக் கடமைகளை மாத்திரமே மேற்கொள்வதாகக் கூறினார்.

வன்னியில் முன்பு சிவில் நிர்வாகத்தை மேற்கொள்கின்றபோது புலிகள் இடையூறு விளைவித்ததாகக் குறிப்பிட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா புலிகளின் அனுமதிபெற்றே எதனையும் செயற்படுத்த வேண்டுமென வலியுறுத்துவார்கள் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால், புலி உறுப்பினர்கள் வந்து வீண் தலையீடுகளைச் செய்வார்களென்றும் தெரிவித்தார்.

30 வருடகாலமாக அரச நிர்வாகத்தைப் புலிகள் சீர்குலைத்தார்களென்றும் தனது நிர்வாக செயற்பாட்டுக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தினார்களென்றும் கூறிய அவர், புலிகள் என்னை அச்சுறுத்தவில்லை. ஏனெனில் அரசாங்கம் வழங்கிய உணவுப் பொருள்களிலேயே அவர்கள் தங்கியிருந்தார்கள். அதேநேரம், மக்கள் என்னோடு இருந்தார்கள். அதனால் புலிகள் என்னை அச்சுறுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, யோகபுரம் தமிழ் மகா வித்தியாலயம் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படுவதாக அரச அதிபர் கூறினார். மல்லாவி மத்திய கல்லூரியை மீளத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் 19 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். நிவாரணக் கிராமங்களிலிருந்து 90% மக்கள் வெளியேறி சொந்த வாழ்விடம் திரும்பியுள்ளனர். அதேபோல் 60% சொந்த இடங்களில் குடியேறியுள்ளதுடன் உறவினர், நண்பர்களின் வீடுகளில் உள்ள மேலும் 40% மக்கள் மீளக் குடியமர உள்ளனர் என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.

மக்கள் மீள்குடியேறிய பகுதிகளில் சுகாதாரத்துறை, கிராம சேவை அலுவலகம், பிரதேச செயலகம், கல்வித்துறை அலுவலகங்கள் தமது பணிகளை ஆரம்பித்துள்ளன. மக்களின் அன்றாடத் தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளும்பொருட்டு உள்ளகப் போக்குவரத்துச் சேவைகளை நடத்தவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அரச அதிபர் கூறினார்.

இது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்துக்குப் பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் குறிப் பிட்டார். பஸ் சேவைகளை மேற்கொள்வது பற்றி யாழ்ப்பாணம் சாலைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். பஸ் சேவைக்கான பாதுகாப்பு அனுமதியைப் பெற்றுக்கொடுக்க வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துணுக்காய், மாந்தை கிழக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மேற்குப் பகுதி, ஜயபுரம், பூநகரி, முழங்காவில், நாச்சிக்குடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் 22ஆம் திகதி மீள் குடியேற்றம் ஆரம்பமாகின.

நன்றி தினகரன்

Read more...

சர்வகட்சி குழுவின் முன்மொழிவை நிறைவேற்றக் கோரி ஐ.தே.மு ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டம்.

அண்மையில் நிறுவப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டான ஐக்கிய தேசிய முன்னணியினர் பேராசிரியர் திஸ்ஸவித்தாரண தலைமையிலான சர்வ கட்சிக் குழுவினரால் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் தீர்வு பொதியை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாடாத்த திட்டமிட்டுள்ளதாக அம்முன்னணியின் பேச்சாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வகட்சிக் குழுவின் முன்மொழிவை அரசு அமுல்படுத்துமானால் அதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தனது பூரண ஆதரவை வழங்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read more...

பதாளஉலக் குழுத் தலைவர் சுட்டுக்கொலை.

இரட்டைகொலை ஒன்று தொடர்பாக பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த பிரபல பாதாளக் குழுவொன்றின் தலைவர் ஒருவர் குருநாகல் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இனம் காணும் பொருட்டு சந்தேக நபர் பொலிஸ் வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டபோது, அவர் தனது கையில் மாட்டியிருந்த விலங்கினால் வாகனச் சாரதியை தாக்க முற்படுகையில் பொலிஸார் அவரை சுட்டுக்கொன்றதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் 25 கொலைச் சம்பவங்கள் மற்றும் பல பாரிய குற்றங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் எனவும் அவரது தாக்குதலில் வெல்லேவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டயஸ் மற்றும் பொலிஸ் பரிசோதகர் தர்மசிறி ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Read more...

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக சுதர்சினி பெர்னாந்துப்பிள்ளை

புலிகளினால் கடந்த வருடம் சித்திரை மாதம் 6ம் திகதி படுகொலை செய்யப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்துப்பிள்ளை அவர்களின் மனைவி சுதர்சினி பெர்ந்துப்பிள்ளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கந்தானை தேர்தல் தொகுதிக்கான பிரதான அமைப்பாளராக நியமனம் பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

இவ் நியமனம் எதிர்வரும் 9ம் திகதி உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் எனவும் நம்பப்படுகின்றது.

Read more...

பொது வேட்பாளர் யார் என்பது வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்படும். மனோ கணேசன்.

ஜேவிபி பூரண ஆதரவு வழங்கும் அனுரகுமார திஸாநாயக
புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கூட்டணி எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா பொது வேட்பாளராக நியமிக்கப்படலாம் என முன்னணி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி எனும் கட்சியின் தலைவர் மனோகணேசன் பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகா நியமிக்கப்பட்டால் அதை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், கூட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஜெனரல் பொன்சேகாவிற்கு நெருக்கமான வட்டாரத்தினருக்கும் மனோகணேசனுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து ஜெனரலை ஆதரிப்பதற்கு மனோகணேசன் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதே நேரம் எதிர்கட்சிளின் பொது வேட்பாளராக அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் இல்லாத ஒருவர் தேர்தலில் நிறுத்தப்படும்போது எதிர்கட்சிகளின் கூட்டு முன்னணிக்கு பூரண ஆதரவு வழங்க ஜேவிபி தயாராக இருப்பதாக ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read more...

அமெரிக்க படைத்தளத்தில் துப்பாக்கிப் பிரயோகம் 13 படையினர் மரணம்.

அமெரிக்க டெக்சாஸ் படைத்தளத்தில் திடீரென வீறு கொண்ட படைவீரர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 13 அமெரிக்கப்படை வீரர் மரணித்தனர். அதேவேளை 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பலத்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் 39 வயதுடைய நிடால் மாலிக் கசன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அமெரிக்கப் படைத்துறையைச் சேர்ந்தவர், வேர்ஜினியாவில் பிறந்தவர், இவருடைய பெற்றோர் பாலஸ்தீனர்கள், எருசெலேமிற்கு பக்கத்தில் இவர்களுடைய சொந்த இடம் இருந்துள்ளது. இப்பகுதியில் உள்ள இமாம் கூறும்போது இவர் அங்குள்ள பள்ளிவாசலுக்கு தினசரி வருவதாகக் கூறினார். துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் முன்னர் இவர் இஸ்லாமிய உடையுடன் கடையொன்றுக்கு வந்து கோப்பி உட்பட காலை உணவை வாங்கிச் சென்றுள்ளார். மிகவும் சாதாரண மனிதராக இயல்பு வாழ்க்கை வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது.

ஆனால் இவருடைய உறவினர் ஒருவர் கூறும்போது இவர் அமெரிக்கப்படை வீரர்களால் அடிக்கடி கேலி செய்யப்படுவதாகவும், இவருடைய பாலஸ்தீன பிறப்பு கேலியாக பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈராக்கிற்கு படை கொண்டு செல்வதை இவர் எதிர்த்துமுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com