Tuesday, November 3, 2009

வெளிநாடுகளில் மறிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்ப அரசு வேண்டுகோள்

வெளிநாடுகளில் வழிமறிக்கப்பட்டுள்ள சட்ட விரோதக் குடியேற்றக் காரர்களில் இலங்கையர்கள் இருப்பதாக கண்டறியப்பட்ட இலங்கையர்கள் அனைவரையும் இலங்கைக்கு திருப்பியனுப்புமாறு இலங்கையின் வெளிவிபகார அமைச்சு சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் சட்டவிரோதமாக குடியேறும் நோக்கில் சென்று கடலில் மூன்று இடங்களில் வழி மறிக்கப்பட்டுள்ள (இந்துநேசியா, கனடா மற்றும் அவுஸ்ரேலியா) சட்டவிரோதக் குடியேற்றக் காரர்கள் இலங்கையர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டாலும் அவர்கள் உண்மையில் இலங்கையர்களா? என்று விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்கள் உண்மையில் இலங்கையர்கள் என இனம்காணப்படும் அனைவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு வெளிவிபகார அமைச்சு அந்தத்த நாட்டின் அரசுகளை கேட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இலங்கையின் சட்ட திட்டங்களை மீறி தப்பிச் சென்றவர்களாவர் இவர்களில் புலிகள் இருந்தால் அவர்கள் மீதும் ஏனையவர்கள் சட்டங்களை மீறியதற்காகவும் சட்டப்படி விசாரிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்


Read more...

சிறுபாண்மைக் கட்சிகளின் கூட்டணி தொடர்பாக இன்று பேசப்படுகின்றது.

சிறுபாண்மைக் கட்சிகளின் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பாக இன்று பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் அதன் தலைவர்கள் கூடி ஆராய்கின்றனர். கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகள், கொள்கைகள் தொடர்பாக இன்று பேசப்படவுள்ளதாக அதில் அங்கம்
பெறவுள்ள கட்சியொன்றின் தலைவர் ஒருவர் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாரா எனக் கேட்கப்பட்டிருந்தபோது, அது தொடர்பாக வேட்புமனுக் கோரப்படும்போது முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபாண்மைக் கட்சிகளின் கூட்டில் அங்கம் வகிக்கவுள்ள மனோ கணேசனது கட்சி, ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டு முன்னணியுடனும் இணைந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

ஐ.தே.கட்சி தலைமையில் 12 கட்சிகளின் கூட்டணி. தலைவர்கள் கையொப்பம்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் 12 கட்சிகளின் கூட்டணி ஒன்று சற்று நேரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியின் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், சிறிலங்க சுதந்திரக் கட்சி (மக்கள் முன்னணி) மங்கள சமரவீர ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.

முன்னணியை ஆரம்பித்து வைத்து பேசிய அவர்கள், முன்னணியானது நாட்டில் ஊழலை ஒழித்து ஜனநாயத்தை நிலைநாட்டும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Read more...

மஹிந்த மாமா ஏன் எங்கள் வீடு எரிக்கப்பட்டது.

பா.உறுப்பினரின் குடும்பம் பாராளுமன்றின் முன் சத்தியாகிரகம். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டாரவின் குடும்பத்தினர் பாராளுமன்றின் முன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.உ ரங்க பண்டார தென்மாகாண சபை தேர்தல்கள் இடம்பெற்றபோது கட்சிப்பணிகளின் நிமிர்த்தம் தென்மாகாணத்தில் தங்கி இருக்கையில் அவரது வீடு புத்தளம் பிரதேசத்தில் எரியூட்டப்பட்டிருந்தது.

தமது வீடு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை திசை திருப்ப அல்லது தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எதிர்த்து ரங்க பண்டார தனது குடும்பத்தினருடன் பாராளுமன்றின் முன் சத்தியா கிரகம் இருப்பதை காணமுடிகின்றது. அங்கு அவரது மகள் „ரnகிள் மஹிந்த ஏன் எங்கள் வீடு எரியூட்டப்பட்டது' என்ற சுலோகத்தை தாங்கியுள்ளார்.


Read more...

Monday, November 2, 2009

மேலும் ஒருதொகுதி முன்னாள் புலிகளுக்கு கொழும்பில் கல்வி வசதி.

புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் படையிரால் கைது செய்யப்பட்டும், சரணடைந்துமிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின்போது தமது கல்வியை தொடர விருப்புவோருக்கு அதற்குரிய வாய்புக்கள் செய்து கொடுக்கப்படுகின்றது.

அவ்வாறு கடந்த சில வராங்களுக்கு முன்னர் 81 சிறுவர்களும் 63 சிறுமிகளுமாக 154 பேர் கொழும்பு ரத்மலானை இந்துக்கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். அதன் இரண்டாம் கட்டமாக கடந்த 31ம் திகதி பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 44 சிறுவர்களும் 23 சிறுமிகளும் கொழும்பு கொண்டுவரப்பட்டு அதே பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான தங்குமிட, உணவு உட்பட சகல வசதிகளும் அரச செலவில் வழங்கப்படுவதுடன், இவர்களின் பெற்றோர் மாதத்தில் ஒருமுறை அல்லது 2 முறை பார்வையிட முடியும் எனவும் தெரியவருகின்றது.

Read more...

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் கைது.

மனநலம் பாதிப்படைந்த இளைஞன் ஒருவரை அடித்து துன்புறுத்தி நீரில் மூழ்கடித்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உதவி பொலிஸ் பரிசோதகர் விஜேந்திர வீரரத்தின என்பவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவரை எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் பொலிஸில் சரணடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பிட்ட இளைஞனது மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரிகள், மேலதிக விசாரணைகளுக்காக உடலின் சில அவயங்களை கண்டி பேராதனிய மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சட்டத்தையும் நீதியையும் காப்பாற்ற வேண்டிய பொலிஸாரின் மனிதாபிமான மற்ற செயலை நேரில் கண்ட 40 மேற்பட்டோர் சாட்சியமளித்துள்ளனர். அத்தோடு இளைஞர் தாக்கப்பட்டபோது பல வழிப்போக்கர்களும் சேர்ந்து இளைஞனை தாக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துமாறு கொழும்பு பேராயர் வேண்டியுள்ளார். மேலும் இச்சம்பவத்தை கண்டித்து நாளை நண்பகல் எதிர்ப்பு பேரணி ஒன்றை நாடாத்வுள்ளதாகவும் அதில் அனைவரையும் இன, மத பேதங்களின்றி கலந்து கொள்ளுமாறும் மனோ கணேசன் வேண்டியுள்ளார்.

Read more...

32 வது பொலிஸ் மா அதிபாராக மஹிந்த பாலசூரியா நியமனம்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 32 வது பொலிஸ் மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை உத்தியோக பூர்வமாக பதவிப்பிரமானம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1978ம் ஆண்டு உதவி பொலிஸ் அத்திட்சகராக பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொண்டதுடன், 31 வருட கால பொலிஸ் சேவையில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

இவர் வட-கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியுள்ளதுடன், விசேட அதிரடிப் படையின் சிறப்புத் தளபதியாக கடந்த 2007.09.23 லிருந்து கடமையாற்றி வந்தார். தற்போது அரசியல் விஞ்ஞானத்துறையில் பேராதெனிய பல்கலைக் கழகத்தில் கலாநிதி பட்டத்திற்காக தனது கல்வியைத் தொடர்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம்-

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கடமையாற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கறுப்புப்பட்டி அணிந்து போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்றுகாலை 9மணிமுதல் கறுப்புப் பட்டிகளை தங்களது கைககளில் கட்டிக்கொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வதிகாரிகள் சம்பள உயர்வு மற்றும் கடந்த 10வருடகாலமாக குறித்த திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் பதவியுயர்வு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்தே இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேறும் மற்றும் உட்பிரவேசிக்கும் பகுதிகளிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளே இவ்வாறு கறுப்புப்பட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினமும் 16 மணித்தியாலங்களுக்கும் மேலாக பணியாற்றும் தமக்கு உரிய ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையைவும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.


Read more...

இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்

இலங்கையில் அண்மையில் டெங்கு காய்ச்சல் பரவி இருநூற்றுக்கு அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தனர். இந்தக் காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார அமைச்சு ஒவ்வொறு பிரதேச மட்டத்திலும் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.

அண்மையில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் டெங்கு காய்ச்சல் மீண்டும் பெருகும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது இதனால் பொது மக்கள் மிகவும் விளிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுவரை டெங்குக் காய்சலினால் இலங்கையில் இருநூற்றுக்கு மேற்பட்டோர் இறந்ததுடன் கம்பஹா மாவட்டதில் மட்டும் ஐம்பதைந்து அதிகமானோர் மரணமடைந்திருந்தனர்.

Read more...

அத்தியாவசியப் பொருற்கள் மீதான பாதுகாப்பு வரி நீக்கம்.

இலங்கையில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வந்த அத்தியாவசியப் பொருட்கள் மீதான பாதுகாப்பு வரி தளர்த்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இலங்கையில் நிலவிவரும் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யவுமே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சீனி,அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தி விலை உயர்வையும் தட்டுப்பாட்டையும் குறைப்பது நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read more...

Sunday, November 1, 2009

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்புகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தமது அரசியல் சுத்துமாத்துக்களை தொடர இலங்கை திருப்பவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த காலங்களில் பல வெளிநாடுகளுக்கும் சென்று புலிகள் சார்பாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், குதிரை கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் இலங்கை அரசிற்கு எதிரான மிகவும் சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்திருந்தனர்.

புலிகள் சார்பாக தாம் வெளியிட்ட கருத்துக்கள் இலங்கையின் இறைமையை மீறியதும், சட்டரீதியாக அணுகப்படும்போது தண்டனைக்குரிய குற்றமாக நிரூபனமாக்கூடியது என்பதையும் உணர்ந்திருந்த இவர்கள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நாடு திரும்பாமல் இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அஞ்சாவாசம் புரிந்து வந்தனர்.

இவர்களில் குதிரை கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள நிலையில், செல்வம், சிவாஜிலிங்கம் ஆகியோர் நாடு திரும்புகின்றனர். இவர்கள் கடந்த சில மாதங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற சக்திகள் ஊடாக அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் நாடு திருப்புவதாக நம்பப்படுகின்றது.

நாடு திரும்பும் இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி அல்லது அக்கூட்டமைப்பினுள் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிற்கு வழங்குவார்கள் என இவர்கள் சார்பாக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சக்கிகள் அரசிற்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

புலிகளை தமிழ் மக்கள் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளதாக உலகிற்கு பறைசாற்றும் நோக்கில் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முன்னாள் ஆயதக்குழுக்களான ரெலோ, ஈபிஆர்எல்எப், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் புலிகளின் அரசியல் துறையின் வழிநடத்தலில் பொம்மைகளாக களம் இறங்கிய வேட்பாளர்களில் 22 பேர் வடகிழக்கில் இருந்து பாராளுமன்றம் சென்றனர். இவர்களில் பத்துபேர் மேற்குறிப்பிட்ட எந்த அரசியல் கட்சிளையும் சாராதவர்கள் என்துடன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என, தமது சுய லாபத்திற்காக உருவாக்கப்பட்ட கூத்தமைப்பினுள் புகுத்தப்பட்டவர்கள் ஆகும். புலிகளின் சிபார்சின் பேரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களில் ஈழவேந்தன் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிபார்சில் வேட்பாளர் பட்டியலினுள் சேர்க்கப்பட்வர் என்பது முக்கியமான விடயமாகும்.

Read more...

1977 வன்செயல் : யாழ்ப்பாணத்தில் எந்தவொரு சிங்களவரும் தாக்கப்படவில்லை

பேராசிரியர் சுசரித்த கம்லத்
1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயலின் போது யாழ்ப்பாணத்தில் எந்தவொரு சிங்களவரும் தமிழ் மக்களால் தாக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படவில்லை. சூறையாடப் படவில்லை. என்பதை நான் எனது கண்களால் கண்டு தெரிந்து கொண்டவன்.

பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பல அதிகாரிகள் என்னை வற்புறுத்தியும் நான் யாழ். மண்ணையும் அம்மக்களையும் விட்டு தென்பகுதிக்கு வெளியேறவில்லை. இவ்வாறு வரலாற்று ஆய்வாளரும், பேராசிரி யருமான சுசரித்த கம்லத் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் திரிகோணி கலை அமைப்பிற்காக மொழிபெயர்ப்பு செய்த ஏ. ஜே. கனகரத்னா யாழ்ப்பாணத்தின் மனச் சாட்சி என்ற சிங்கள நூலின் வெளியீட்டு விழா பொரளை கலாநிதி என். எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போதே பேராசிரியர் சுசரித்த கம்லத் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிகழ்விற்கு தர்மசிறி பண்டார தலைமை வகித்தார்.

“புராதன சிங்கள தமிழ் உறவுகள்” என்ற தலைப்பில் தொடர்ந்து பேராசிரியர் சுசரித்த கம்லத் உரையாற்றுகையில், அன்றைய கலவர சூழ்நிலையிலும் நான் பாதிக்கப்படவில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அன்று பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த இருநூறு சிங்கள மாணவர்கள் பாதுகாப்பு பிரிவினரால் தென் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அன்று கொழும்பிலும், இந்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டன. தீவைக்கப்பட்டன. உயிர்கள் பலி எடுக்கப்பட்டன. இந்தச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் வேகமாக பரவிய நிலையிலும் எந்தவொரு சிங்கள வரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வரும் வழியில் சிங்கள மாணவர்கள் வீதியில் செல்வோரை கேலி செய்வதில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் நீண்ட உறவு முறை உண்டு. கலை, கலாசாரம், பண்பாடு, மொழி என பல வகைகளிலும் தொடர்பு உண்டு. தமிழ் மொழி மிகப் பெரியதோர் பழைமைவாய்ந்த மொழி. இன்று உலக நாடுகள் அனைத்திலும் பேசப்படும் மொழியாகும். தமிழ் மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர். சிங்களவர்களும் இந்திய நாட்டிலிருந்து வந்தவர்களே. பல சிங்கள மன்னர்களின் ஆட்சியில் மந்திரிகளாகவும், படை வீரர்களாகவும், கடமையாற்றியவர்கள் இந்நாட்டு தமிழர்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

பல மன்னர்கள் தமிழ் பெண்களை மணம் முடித்துள்ளனர். வரலாற்றை துல்லியமாக ஆய்வு செய்யும் போது பல உண்மைகள் வெளிவரும். தமிழ் சிங்கள மக்களின் உறவு நீண்ட வரலாற்றையும் அந்நியோன்னியத் தையும் தெரிவிக்கிறது. பல சிங்கள மன்னர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ், மலையாள குருக்கள்மாரின் ஆலோசனைகளை பெற்று ஆட்சி புரிந்தவர்கள். (ரு - து)

நன்றி தினகரன்


Read more...

பார்வைக்கு அது விடுதலை இயக்கம்

புலிகள் இயக்கம் ஒருசினிமாக்கம்பனி என்று நண்பர்களோடு பலதடவை கருத்துப்பரிமாறியிருக்கிறேன். வெளிப்பார்வைக்கு அது விடுதலை இயக்கம் ,போராடும் இயக்கம் என மயக்கமிருந்தாலும் அதனை சினிமாவோடு ஒப்பிடுவோர்க்கு அல்லது தீவிரமான நமது சினிமா ரசிகர்களுக்கு அது சினிமா கம்பனியேதான் என முடிவிற்கு வருவதற்கு சிரமமிராது.

அந்தோ!! அயல் சினிமா ரசிகர்கள் ஆனையிறவுத்தாக்குதலையும் சினிமாவைப்போலவே கண்டுகளித்தனர். சினிமா ரசிகர்களை அயலில் திருப்தி செய்வதற்காகவே அவர்கள் தாக்குதலில் ஈடுபடவும் கொப்பி தயாரித்து அனுப்பவும் வேண்டியிருந்தது.

மகேந்திரன்,சீமான் ,பாரதிராஜா,விஜயகாந்த் போன்றோர் புலிகளின் அல்லது பிரபாகரனின் ரசிகர்களாக இருப்பது ஒரு சுவாரசியமான அவதானம்!

தீவிர சினிமா ரசிகரான ஜமுனா ராஜேந்திரன் புலிகளின் ஈழமுரசு பத்திரிகையில் கமல்ஹாஸன் சினிமா,பாரதிராஜா சினிமா ,மணிரத்தினம் சினிமா,சமாந்தர சினிமா என மேலும் அவர்களுக்குப் பரிந்துரை செய்திருந்தார்.

அ.ரவியும். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்கூட தமிழ்ச்சினிமா குறித்து அவர்களுக்கு எழுதவேண்டியிருந்தது.

கடைசியில் இந்த இயக்குனர்திலகங்கள் தங்களைக் காப்பாற்றும் என ஐந்துலட்சம் சனத்தையும் அவர்கள் அடைத்துவைத்தார்கள்.

தந்தை பெரியார் இதை அப்போதே முன்னுணர்ந்து கூறினார்,

நம்மைப்பிடித்த ஐந்து நோய்கள் என பார்ப்பானுக்கு அடுத்ததாக அவர் சினிமாவை நிறுத்துகிறார்.சினிமா கிளைமாக்ஸில் அதியுச்ச பரவசம் அடையும் பார்வை மனோபாவத்திற்கு அவர்கள் மே- 18 வரை காத்திருக்கவேண்டியதாயிற்று.
உலகத்தில் வேறெந்த நிகழ்வுகளுமே அல்லது சினிமாவுமே தமிழ்ப்பார்வையாளர் மனோபாவத்திற்கு இவ்வளவு உச்சபட்ச கிளர்ச்சி அனுபவத்தைத் தந்திராது.

மக்களைப் பார்வையாளர் மனோபாவத்திலேயே இருபத்தைந்து வருடங்களாக வலுக்கட்டாயமாக வைத்திருக்கும் நிலைக்கு அவர்கள் இருபத்தைந்து வருடமாக சினிமா ஓட்டவேண்டிய நிலை இருந்தது.

"கிளிநொச்சி" என்றே ஒரு படம் தயாரிக்க தலைப்பிட்டிருந்தார்கள்.
'டைட்டில் சாங்' வேறு யார் வைரமுத்துதான்;

ஏறத்தாள 2000 வரையான சினிமா சிடி கள் பிரபாகரனிடம் இருந்ததாகவும்
அதில் சிலதை தனக்குத் தந்ததாகவும் மகேந்திரன் தனது பேட்டியொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

2000 சினிமா சிடி களைப்பார்ப்பது ஒருவகையில் சாதனை என்றே சொல்லவேண்டும். ஆகவே 2000 சினிமா சிடிக்களைப் பார்த்த ஒருவர் என்ற சாதனை பிரபாகரனுக்கு எப்போதும் உண்டு.

இடைக்காலத்தில் பிரபாகரன் தமிழ்நாட்டில் இருக்கும்போது சினிமாவில் நடிக்கவைக்க பல இயக்குனர்கள் அவரை அணுகியதாக பத்திரிகை ஒன்றில் படித்தது நினைவுக்கு வருகிறது.
ஒத்துக்கொண்டிருந்தால் வன்னிக்கு வந்தது வந்தது ஒருசில படங்களோடு போயிருக்கும்.
மூன்றரை லச்சம் சனம் அகதிமுகாமில் இருந்திருக்கவேண்டிய நிலை வந்திராது.
ஒரு லச்சம் சனம் சாகவேண்டி வந்திராது.

தொல்.திருமாவளவன் பிரபாகரனின் ரசிகராயிருந்து சினிமாவில் நடிக்கவில்லையா!
தனது சினிமாவைப் பார்க்கமுடியாத மக்களுக்கு துப்பாக்கியை மார்போடணைத்து
இரண்டு தோள்களையும் சுற்றிவர துவக்கு ரவைகளை சங்கிலிமாதிரி சுற்றி தமிழ்நாடெங்கும் திருமா போஸ்டர் ஒட்டவில்லையா!

"திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதாக இருந்தால் ஆணுறை பாவியுங்கள்" என்று பகுத்தறிவோடு நடிகை குஸ்பு சொன்னபோது இந்த சினிமாக்கும்பல் அவரை என்னபாடு படுத்தியது.

சினிமா பாடலாசிரியர் அறிவுமதி புகலிடத்தில் புலிகளின் மேடைகளை பங்குபோட்டார்,தங்கர் பச்சான் போராட்டத்தைப்பற்றிப் படம் தயாரிக்கமுயன்றார்,

ஆனால் புலிகளின் விசுவாசியான வ.ஐ.ச.ஜெயபாலன் நேரடியாகவே சினிமாவுக்குள் இறங்கிவிட்டார். அப்படியாகத்தானே தமிழ்நாடு, ஐரோப்பிய நாடெங்கும் பிரபாகரன் படமும் திருமாவளவன் படமும் ,விஜயகாந்த் படமும் சுவர்களையெல்லாம் மே- 18 வரை மறைத்துக்கொண்டிருந்தன.

'கப்டன் பிரபாகரன்' என்ற படமே புலிகள் இயக்கம் சினிமா தரும் பார்வைநிலை பொழுதுபோக்கிற்கப்பால் வேறெதையும் மேலதிகமாக தரப்போவதில்லை என்ற அறிவிப்பைத்தானே செய்தன!

சினிமாவிலேயே அவர்கள் நிறைய முதலீடுகளை செய்துள்ள செய்திகள் வந்தன.
ஐரோப்பிய அமெரிக்க மற்றும் புகலிட நாடுகளின் சினிமா சிடி ,பாட்டு சிடி மற்றும் அவர்களது 'லுன் இன்ரனசனல்' போன்ற சினிமா வர்த்தக கடைகள் எல்லாம் அவர்கள் அப்பழுக்கல்லாத சினிமாக்கொம்பனி என்ற மதிப்பீட்டைத்தானே தந்தன.

யாழ்ப்பாணத்தின் சினிமா கலாச்சாரமும் புலிகளின் சினிமாக்கலாச்சாரமும் வேறுவேறல்ல.
பாதி சினிமாவில் எழுந்துபோகும் பார்வையாளர்களைப்போல் யாழ்ப்பாணத்தார்
பாதியிலேயே வெளியே வந்துவிட்டார்கள்.
சினிமாப்பாத்திரங்கள் வரமுடியுமா?
வரமுடியாதே!!!


சீமானின் ஆனந்தவிகடன் பேட்டி அதைத்தான் சொல்கிறது.

பிரபாகரனின் யாழ் மையவாதம்
****************************
சீமானின் பேட்டியிலிருந்து:

"விஜய் பற்றிப் பேசிட்டு இருந்தப்ப, ‘யாழ்ப்பாணத்துக்காரரின் பெண்ணைத்தானே அவர் திருமணம் செய்திருக்கிறார்’ என்று நினைவுபடுத்திக்கொண்டார். ‘பாலாவும் சேரனும் நம்ம போராட்டத்தின் நியாயத்தை ஆதரிப்பவர்கள்தானே’ என்று என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்.. அமீர் பற்றி அதிகம் விசாரித்தார். அவருக்கு ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ மாதிரி ஈழப்போராட்டத்தை ஒரு படமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது".

Read more...

புளொட்டின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் பிரபாவுக்கு புளொட் கண்ணீர் அஞ்சலி!!

புளொட் அமைப்பின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளரான யாழ். வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த இராஜமனோகரன் பிரபாகரன் நேற்று முன்தினம் (30.10.2009) பிரான்ஸ்சில் அகால மரணமானார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம். மானிப்பாயை பிறப்பிடமாகவும், ருயி மெகுல், பென்டின், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இராஜமனோகரன் பிரபாகரன், இராஜமனோகரன் பரமேஸ்வரி (இந்தியா) தம்பதிகளின் புதல்வரும், முரளிதரன் (பிரான்ஸ்), கிருபாகரன் (இந்தியா) ஆகியோரின் சகோதரருமாவார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரான இவர், 1984, 85களில் புளொட் அமைப்பில் இராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். 1987 இலங்கை - இந்திய உடன்படிக்கையின் பின்னர் வெளிநாடு சென்றிருந்த அவர், கழகத்தின் பணியில் சுவிஸ்கிளை முன்னெடுத்து வந்த வேலைத்திட்டங்களில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்தார். பின்னர் பிரான்ஸில் வசித்துவந்த அவர், கழகத்தின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளராக மரணிக்கும் வரையில் கடமையாற்றினார்.

வெளிநாட்டில் வசிக்கும் நிலையிலும் தமிழ் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு கழகம் முன்னெடுத்த பணிகளில் பல்வேறு சவால்களையும், இடர்களையும் சந்தித்தபோதிலும் மனந்தளராது எமது கட்சியைப் பலப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். புலம்பெயர் நாடுகளில் உள்ள கழக உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் ஒருங்கிணைக்கும் பாரிய பொறுப்பினையும் ஏற்று அதனை செவ்வனே செய்து வந்ததுடன், யுத்தம் காரணமாக வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்து, அம்மக்களுக்கான உதவிகள் சென்றடைவதற்கான வேலைத்திட்டங்களிலும், அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் முனைப்புடன் ஈடுபட்டார்.

அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் தாய், சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரோடும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு, எமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம்.

-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)

Read more...

ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் விசாரிக்கப்படலாம்.

முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய முப்படைகளின் பிரதான அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்க hழஅநöயனெ பாதுகாப்பு அதிகாரிகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்க கிறீன்காட் எனும் நிரந்தர வதிவிட உரிமை கொண்டுள்ளவரான ஜெனரல் சரத்பொன்சேகா தனது வதிவிட அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ள தனது துணைவியார் அனோமா சகிதம் அமெரிக்கா சென்றுன்றுள்ளபோது இந்நிலைமைய உருவாகியுள்ளது.

இலங்கையில் இறுதிகட்ட யுத்தம் இடம்பெற்றபோது புலிகளினாலும், அரச தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள், பயங்கர மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் கடந்த 22ம் திகதி 68 பக்கங்களை கொண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் 4ம் திகதி அமெரிக்க அதிகாரிகள் தமது அறிக்கையின் பிரகாரம் ஜெனரல் பொன்சேகாவுடன் கலந்துரையாடவுள்ளாக தெரியவருகின்றது.

அதேநேரம் ஜெனரல் பொன்சேகா அமெரிக்காவில் உள்ள தனது சட்டத்தரணியின் ஆலொசனையை நாடியுள்ளதாகவும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ரொனால்ட றேகன், ஜோர்ச் டபிள்யூ புஸ் ஆகியோருக்கான ஆலோசகராக செயற்பட்ட அனுபவம் கொண்டுள்ள அவரது சட்டத்தரணி நேர்முகப்பரீட்சைக்கு முகம்கொடுக்குமாறும், சகல வினாக்களுக்கும் நேர்மையாக பதிலளிக்குமாறு தெரிவித்துள்ளதாவும் மேலும் தெரியவருகின்றது.

அதே நேரம் குறிப்பிட்ட நேர்முகப்பரீட்சைக்கு ஜெனரல் சரத்பொன்சேகாவின் சுயவிருப்பின்பேரிலேயே வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளாரா என்பது தொடர்பாக இதுவரை சரியான தகவல்கள் வெளியாக வில்லை. அவர் குறிப்பிட்ட நேர்முகப்பரீட்சைக்கு முகம்கொடுக்க மறுத்தால் அமெரிக்க அதிகாரிகள் எவ்வாறான வழிமுறைகளை கையாள்வர் என்பது தெளிவில்லை.

அதே நேரம் அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை ஜெனரல் சரத் எழுதியுள்ளதாகவும், அக்கடிதத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாதுகபாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக சாட்சியம் கூறுமாறு தான் வேண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அக்கடிதத்தில் அமெரிக்க அதிகாரிகள் இருவர் தன்னை தனது மருமகனின் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டாக குறிப்பிடப்பட்டுள்ளதாவும் கூறப்படுகின்றது.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com