Sunday, November 1, 2009

ஜனாதிபதிக்கு எதிரான கருத்தை பதிவு செய்த இளைஞன் கைது.

இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தியில் கருத்துக்கள் (comments) பகுதியில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் அதன் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ஆகியோருக்கு எதிரான கருத்தினை பதிவு செய்த இளைஞன் ஒருவன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மாதளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 06 திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

இளைஞன் அளவுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என செய்திகள் தெரிவிக்கின்றது.

Read more...

புலிகளின் அரசியல் முகமூடி தமிழ் தேசிய கூட்டமைப்பு! -முகுந்தன்.

வியப்பான பல விடயங்களை உள்ளடக்கி இன்றைய நவீன யுகத்திலும் தமிழர்களை வெறும் உணர்சியூட்டி மேலும் மேலும் அடிமையாக்க புலி தலைவர் பிரபாகரனால் பலாக்காரமாக உருவாக்கப்பட்ட சில கட்சிகளின் இணைப்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இக்கூத்தமைப்பு இன்றும் மிகக்குறுகிய நோக்கங்களையும் கொள்ளை அரசியல் இலாபமடையவும் தமிழரின் அபிலாசைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. இதில் வியப்பென்னவெனில் இக்கூத்தமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் முதுகெலும்பை கடந்தகாலத்தில் புலிகள் உடைத்தெறிந்ததுதான்.

பழம்பெரும் கட்சியாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானதுமான தமிழர் விடுதலைக் கூட்டணி, பிரதான விடுதலைப்போராட்ட இயக்கங்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் காங்கிரஸ் என்பன இதில் அங்கம் வகிக்கின்றன. இந்த கட்சிகளின் இயக்கங்களின் தலைமைகள் புலிகளினால் நயவஞ்சகமாக அழிக்கப்பட்டன. இருப்பினும் அரசியல் என்ற சாக்கடையில் வாக்குகளைப் பெற்று பல்வேறுபட்ட சுகபோகங்களை அனுபவிக்கவும் கேவலம் புலிகளிடமிருந்து தங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ளவும் புலிகளின் காலடியில் மண்டியிட்டனர்.

ஆனால் இன்றோ புலிப்பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இக் கூத்தமைப்பின் நிலைப்பாடு என்ன?

பாசிசப் புலித் தலைவரால் இக்கூட்டமைப்பினருக்கு உபதேசிக்கப்பட்ட தமிழ் தேசியம், தமிழ் தேசிய தலைமை, ஏகபிரதிநித்துவம், தமிழீழம், ஆயுதப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுதல், இனவெறிப்பிரச்சாரம், நிதிசேகரித்தல் போன்றவற்றின் நிலை என்ன?

உண்மையில் இக் கூத்தமைப்பினர் புலிகளுக்கு பயந்து சுயத்தை இழந்து நடைபிணமாகவே இருந்தனர். இனிவரும் காலங்களில் தமிழர்களை ஏமாற்ற என்னவித்தை காட்டப்போகிறார்கள் என்பதே இன்றைய கேள்வி.

புலிகளின் அழிவையடுத்து இக்கூத்தமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவநாதன் கிஷோர் பின்வருமாறு கூறிய விடயம் சற்று கவனத்திற்கொள்ளதக்கது. 'தந்தை செல்வவால் உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சிகளின் அகிம்சை போராட்டம் இலங்கை தமிழர்களுக்கு எந்த விமோசனத்தையும் பெற்றுக்கொடுக்வில்லை. பிரபாகரனால் இறுதிவரை கொண்டு செல்லப்பட்ட ஆயுதப்போராட்டமும் எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மாறாக வரலாறுகாணாத மாபெரும் அழிவுகளையே தமிழ் சமூகத்திற்கு சமாப்பணம் செய்துள்ளது'

தமிழ் கட்சிகளின் அகிம்சை வரலாறும் சிங்கள மக்களுடன் சேர்ந்து உரிமையோடு வாழும் வழியை சொல்லவில்லை. பிரிவினை மற்றும் இனவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே தொடர்ந்தன. ஈற்றில் இதுவே துப்பாக்கி கலாசாரத்திற்கு வித்திட்டது. பிரபாகரன் என்ற விஷ விருட்சத்தை தமிழ் சமூகத்திற்கு காணிக்கையாக்கி அவ்விஷத்துக்கு கட்டுண்டுபோன வரலாறே தமிழ் கூத்தமைப்பினதும் வரலாறு.

அண்மையில் புளொட் தலைவர் த. சித்தாத்தன், தமிழ் கூத்தமைப்பு புலிகளால் பலாத்காரமாக உருவாக்கப்பட்டது என்றும் புலித்தலைமை அழிந்த பின்னர் இக்கூட்டத்தின் யதார்த்தமற்ற, நடைமுறை சாத்தியப்படற்ற கோரிக்கைகளும் துவேஷ கருத்துக்களும் தேவையற்றது எனவும் புதிய சிந்தனை உருவாக கடந்தகாலப் படிப்பினைகளை வைத்து இக்கூத்தமைப்பு கலைக்கப்பட வேண்டும் எனவும் கருத்துத்தெரிவித்தார்.

இக்கருத்து வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். இதில் அங்கம் வகித்த கட்சிகள் சுயமாக இயங்கி தங்களை சுயவிமர்சனம் செய்யத்துணிந்தால் நல்ல பல பயனள்ள கருத்தாக்கங்களும் பலாபலன்களும் தமிழ் சமூகத்திற்கு கிட்டும் என்பதில் ஐயமில்லை. புதியபாதை புதிய சிந்தனையே இன்றைய தேவை. இல்லையே தமிழினத்துக்கு மீட்சியில்லை.

தமிழ் நாட்டிலும் திராவிட சிந்தனையை தோற்றுவித்த திராவிட கழகங்களும் பிரிவினை கோரிக்கையை ஒதுக்கிவிட்டு மத்திய கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி என இணைந்து வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு உச்சளவு வளர்ச்சி பெற்றுள்ள வரலாறை நாம் அலட்சியம் செய்துவிடமுடியாது. அதுவே நல்லதோர் முன் உதாரணம்.

நல்ல சந்தர்ப்பங்களை பெறுவதற்கு தனித்துவம் பிரிவினை என வாக்குக்காக இனவாதம் பேசுவதை விடுத்து ஆட்சியாளர்களுடன் நிபந்தனையுடன் ஆட்சியில் பங்கேற்கும் வகையில் தமிழர்களின் பலம் கட்டியெழுப்பப்படவேண்டும். 1977ல் பெறப்பட்ட அரசியல் பலத்தை ஆயுதக்குழுக்களை உருவாக்கி அழிவை தேடவே பயன்படுத்தினார்கள். எதிர்காலத்தில் இப்படியொரு பலத்தை பெற்ற அரசியல் உரிமைகளையும் பொருளாதார சபீட்சத்தையும் வடகிழக்கு பெறகூடியவகையில் புதிய சிந்தனை, புதிய தலைமையே இன்றைய தேவையாகும்.

எந்தவொரு இனத்தையும் பயமுறுத்தி பணியவைத்து காரியம் சாதிக்கமுடியும் என்பது அறிவீனம். இந்த முட்டாள்தனமானதைத்தான் புலிகள் கடைசிவரை கையாண்டார்கள். பிரபாகரனது சண்டித்தனத்திற்கும் கொலை வெறி அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து தனிநாட்டையோ அல்லது ஓரங்குல நிலத்தையோ வழங்கும் அளவிற்கு எந்த நாட்டின் ஆட்சியாளனும் முட்டாளாக இருக்கப்போவதில்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவ உரிமைகள் இல்லை என்பது உண்மையே. கிடைத்த சந்தாப்பங்களனைத்தும் பிரபாகரனின் முட்டாள்தனத்தால் நாசமாக்கப்பட்டன. ஏற்கனவே தமிழருக்கு இருந்த நலன்களும் சிதைக்கப்பட்டன. இணைந்த வடக்கு கிழக்கும் பிரிக்கப்பட்டது. இது நல்ல எடுத்துக்காட்டு.

பிரதேச வேறுபாடுகளையும் தமிழ் இனவாதத்தையும் புலிகள் தாரளமாகவே விதைத்தனர். தீர்வு என்று வந்தபோதும்கூட அதற்கு தீர்வுகான முடியாதபடி யாழ் மேலாதிக்க சிந்தனை வழிவகுத்தது. அனைத்து அரசியல் வழிமுறைகளையும் வன்முறையாலும் கொலைகளாலும் அடைத்துவைத்திருந்த பிரபாகரனின் இறப்பின் பின்னராவது புதிய அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வழிவகைகளை காண அனைவரும் உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மேலும் புலிகளுக்கு பயந்த ஊடகத்துறையினரும் பணத்துக்காக தார்மீகத்தை தாரைவார்த்த எழுத்தாளர்களும் சமூகத்தின் நலன் கருதி விழித்துக்கொள்ள வேண்டும். இனிமேல் அச்சமின்றி சிந்தனைகளை விழிப்புணர்வுகளை ஊடகத்துறையினர் மேற்கொள்வது அவசியமனதாகும். இந்தியாவில் ஓரளவுக்கு ஊடகங்கள் அச்சமின்றி இயங்குகின்றன. கடந்த காலங்களில் தமிழ் ஊடகங்கள் புலிகளின் இரும்புப் பிடியிலிந்தவை.

தமிழர்களை நந்திகடலில் பிரபாகரனுடன் சேர்த்துத் தள்ளியவர்களில் முக்கியமானவர்கள் இந்த ஊடகத்துறையினரே. இந்தியக் கோமாளிகளும் புலன் பெயர் குஞ்சுகளும் நாடுகடந்து தமிழீழம் அமைக்கவிருப்பர்களும் இன்னும் தமிழர்களை ஏமாற்றி பிழைப்புநடத்தவே துடிக்கின்றனர்.

புலிகளின் ஒவ்வாத கருத்துக்களையும் அவர்களின் அரசியல் முகமூடியாகிய தமிழ் தேசிய கூத்தமைப்பினர்களையும் சீர்திருத்த உண்மையான பத்திரிகையாளர்களே நேர்மையுடன் முன்வரவேண்டும். தமிழ் சமூகத்திற்கான சமஉரிமை போராட்டம் ஒய்ந்துபோகமுடியாது. உண்மை வழியில் அறிவு ரீதியான சிந்தனைகளுடன் செயற்பாடே அவசியமானது. VIII

Read more...

அழுவதுதான் அவமானம், அவதிப்படுவது அவமானமல்ல. - யஹியா வாஸித் -

நிழல் தேடி அலைந்தனர், மரம் வெட்டும் மனிர்கள், ஏன் புன்னகைக்கின்றாய் பூமித்தாயே. நம்மவனுகள் எல்லாம் காட்டுக்குள்ள போய் கள்ள மரம் வெட்டுவார்கள். வெட்டி, வெட்டி மொத்த காட்டையும் அழித்துவிட்டு, இறுதியில், இந்த மண்ணாங்கட்டி காட்டில் ஒதுங்கி நிற்பதற்கு கூட ஒரு நிழல் இல்லையே என வருத்தப்படுவார்கள். வருத்தப்பட்டார்கள், இப்போ வருத்தப்படுகின்றார்கள். ஆம் வருத்தப்படுகின்றார்கள். கொலை செய்யும் மனிதர்கள். கொலை செய்த மனிதர்கள். கொலைக்கு கொலைக்கருவி வாங்கிக் கொடுத்த மனிதர்கள் எல்லாம் வன்னி முகாம் வேதனை பற்றி வருத்தப்படுகின்றார்கள்.

அடியேய் பொண்டாட்டி எனக்கு 15 நாளில் பிள்ளை பெற்றுத்தருவாயா என என்ட பொண்டாட்டியிடம் கேட்டேன். இந்தாளுக்கென்ன லுசோ. பிள்ளை பெற பத்துமாதம் எடுக்கும் புருஷனாரே என்றாள். அதற்கு ஏதாவது மெஷினுகள் இல்லையாடி எனக்கேட்டேன். அடமுட்டாளே அது நியதி. டார்வின் தத்துவம் அல்லது இறைவனின் ஆக்கல் தத்துவம் என்றாள்.

போனமாதம் எனது 5 வயதுப் பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச்சென்று, என்பிள்ளை உடனடியாக ஓஎல் எக்ஸாம் எடுக்க வேண்டும் என்றேன். பாடசாலைப் பொறுப்பாளர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, அண்ணே உங்கள் பிள்ளையை திடீரென 10ம் வகுப்பில் கொண்டு போய் இருத்த முடியாது. ஒவ்வொரு வகுப்பாக முதல் வகுப்பில் இருந்து படிக்க வேண்டும் என்றார்.

நேற்று விவசாயத்திணைக்கள அதிகாரியைச் சந்தித்து, நாளைக்கு என்வயலில் நெல் விதைக்கப் போகின்றேன். நாளை மறுதினம் அறுவடை செய்யலாம்தானே என்றேன். அவர் என்ர அடுத்த வீட்டுக்காறனுக்கு போன் பண்ணி, இந்தாளுக்கு மறகளண்டுட்டுது பக்கத்து வீட்டுக்காறர்களெல்லாம் கவனமாக இருங்கோ எனக்கூறியுள்ளார். ஆனால் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களை நாளைக்கே குடியேற்று, குடியேற்ற வேண்டும், குடியேற்றாவிட்டால் மீண்டும் தொடங்கும் 5ம் கட்டப் போராட்டம் என எச்சரிக்கை விடுகின்றனர் கொலை செய்யும் மனிதர்கள்.

உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம், பேசுவதற்குச் சுதந்திரம் என சகல சௌபாக்கியங்களுடனும் இருந்து கொண்டு வியாபாரத்தை தொடங்கியுள்ளனர் புலன் பெயர் புண்ணியவான்கள். இது புது வியாபாரம். மங்கையர்க்கரசியக்கா சிங்களனின் தோலை உரித்து செருப்பாக அணிவேன் என 1971ல்தொடங்கி வைத்த வியாபாரம், காசியண்ணா, ஈழவேந்தன் அண்ணா, என கொஞ்சகாலம் தொய்யோ தொய்யென தொங்கி செய்த தொப்பி வியாபாரம், ஈபிஆர்எல்எப், ரெலோ, புளட், ஈரோஸ் என 1977 முதல் 1987 வரை கும்மியடித்து, கூப்பாடு போட்டு, போஸ்ர் ஒட்டி வடம் பிடித்த வியாபாரம், பின்னர் கட் அன்ட் ரைட்டானவர்கள் என சொல்லிக் கொண்டு வந்து ஆளையாள் கொன்று, அண்ணனை தம்பி கொன்று, தம்பியை அண்ணன் கொன்று, இருவரையும் அடுத்த வீட்டுக்காறன் கொன்று, எல்லோரையும் ஒருவர் கொன்று, ஒரு இயக்கம் கொன்று, அவர், அந்த நபர் தான்தோன்றி, அவருக்கு ஆரத்தி எடுத்து, அபிஷேகம் செய்து, குல்லி சூல் ஆடி ( இது தமிழ் பேசும் முஸ்லீம்கள் பாவிக்கும் வார்த்தை. இதன் அர்த்தம். நான்தான், இனி நான்தான், இனி எல்லாமே நான்தான் என்ற ஒரு மஸ்து நிலையில் கூறும் சொல் ) அடம்பிடித்து, ஆர்ப்பரித்து, கட்டுநாயக்கா, அனுராதபுரம். ஆணையிறவு என சிங்களத்தை கொன்று, எங்களுக்கு புள்ளிவிபரங்கள் சொல்லி, புலம் பெயர் நாடெல்லாம் ரொக்கட் லோஞ்சருக்கு, பைபர்கிளாஸ் போட்டுக்கு, ஏகே 47க்கு என பணம் குவித்து, வியாபாரத்தை பெருக்கோ பெருக்கென பெருக்கி, இப்போ மார்கட்டில் விற்பதற்கு எதுவும் இல்லாமல், 3லட்சம் வன்னிப் புனிதர்களை ஏலத்துக்கு கொண்டு வந்துள்ள ஏல வியாபாரம்.

சிங்களவன் மஞ்சல் துண்டுக்கு களுத்தறுப்பான் எனவும், சோனி வியாபாரத்துக்காக என்ன பொய்யும் சொல்வான் எனவும் நம்மவர்கள் சொல்வார்கள். ( நான் இங்கு குறிப்பிட்டது என் போன்ற தில்லுமுல்லுக்காறர்களை.) ஆனால்

வலி படைத்து முறம் எடுத்து புலி அடித்த தமிழினம்

கிலி பிடித்த நிலை படைத்து வெலவெலத்து வாழ்வதோ

மகள் இறக்க முலை அறுக்க முடிவெடுத்த தமிழினம்

புகழ் இறக்க மொழி இறக்க வெலி நகைக்க வாழ்வதோ
என புலன்பெயர் புண்ணியவான்களுக்கு வேப்பிலை அடித்தவர்கள், இப்போ தடுக்கி குப்புற விழுந்து, அழுது புலம்புகின்றனர். நெஞ்சை நிமிர்த்தி, இந்த புலம் பெயர் புண்ணாக்குகள் போலில்லாமல், இறுதி வரையும், அந்த மே 17 இறுதிவரையும், அவன் என்ன மண்ணாங்கட்டியைச் செய்தானோ தெரியாது, ஆனால் அந்த இறுதிநாள் வரையும் மக்களோடு மக்களாக நின்று, இறந்தானே அவன் தலைவன். மனிதன், மனிதாபிமானி. அவனுக்கு எப்போதுமே நாம் ஒரு சலாம் போடலாம். அந்த 17ம் திகதி அவர் செய்த அந்த செயலுக்கு மட்டும்தான் இந்த சலாம். அதற்காக மொத்த சூரசம்ஹாரம்களுக்கும் சலாம் போட்டுவிட்டதாக நினைத்து விடாதீர்கள்.

ஆனால் புலத்தில் இருந்து கொண்டு அழுது, அழுது மீண்டும் கண்ணீர் கதைகள் சொல்ல இந்த புண்ணாக்குகளுக்கு என்ன தகுதி இருக்கின்றது. அந்த வன்னி மக்கள் யாரும் இப்போ அழவில்லை. அழ அவர்களிடம் கண்ணீர் இல்லை. அவர்கள் அவதிப்படுகின்றார்கள். அவதிப்படட்டுமே. நமது ஒரு பத்துநிமிட காமவெறிக்காக 10 மாதம் குழந்தையைச் சுமந்து கொண்டு நமது பொண்டாட்டிமார் அவதிப்படவில்லையா. நமது பிள்ளைகள் படித்து ஓஎல், ஏஎல் எடுத்து ஒரு நல்ல தொழிலில் அமர வேண்டுமென நாம் அவனுக்காக சிக்கன் சொப்பிலிலும், பெற்றோள் கராஜுகளிலும், அரபிக்களின் கக்கூசுகளிலும் வருடக்கணக்காக அவதிப்படவில்லையா. வயலில் நெல்லை விதைத்துவிட்டு, உரம் வேண்டவும், கிருமி நாசினி வேண்டவும், காலம்தவறி மழை, வெயில் வந்துவிடுமோ எனவும் தினம், தினம் அவதிப்படவில்லையா. அவதிப்படட்டும். அந்த வன்னிப்புனிதர்கள் அவதிப்படட்டும்.

அவதிப்பட்டுவிட்டு ஆறுதலாக அவர்கள் வெளியே வரட்டும். வந்து நிச்சயமாக இந்த புண்ணாக்குகளிடம் கேள்விகள் கேட்பார்கள். கேட்க வேண்டும் என்பதுதான் மொத்த மனிதாபிமானிகளின் பேரவா. புலத்தில் வரி அறவிட்டாயே அதில் எத்தனை வீதத்தை எங்களுக்கு செலவு செய்தாய். புலத்திலிருந்து ஒபாமா கப்பல் அனுப்புவதாக சொன்னாயே எங்கே அந்த கப்பல் என்பதில் தொடங்கி, எம்குலப் பெண்களுக்கு மஞ்சல் அரைத்துக் கொடுத்தாயா மானங்கெட்டவனே, எதற்காக எங்களை ஏலம் விட்டாய் என்பதுவரை அந்த புண்ணியவான்கள் கேட்க வேண்டும். மனிதாபிமானிகள் என்று சொல்லிக் கொண்டு இப்போது கிளம்பியிருக்கும் முன்னாள், இந்னாள் போராளிகள் பிளஸ் மனிதத்தை நேசிக்கும் புலம் பெயர் இளையோர்கள் வரை பணமறவிட்டவர்களை அழைத்து கேட்க வைக்கவேண்டும்.

தமிழ் அது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு தெய்வீகம். அது ஒரு சாத்வீகம். தமிழனுக்கு அது ஒரு கம்பீரம், அது ஒரு அபின், அது ஒரு போதை. அதன் இசை, அதன் சொல்லாடல், அதன் பாரம்பரியம், அதன் கவிநயம், அதைப் பேசும் நாம், அதை கரைத்துக் குடித்து, அதை பேணி, அதை மேலெல்லாம் சேறாக பூசி வாழ்ந்து திரிந்த நாம். இன்று மொழி தெரியாத நாட்டில், வேர்வை சிந்தாத மண்களில், வேற்று மதக்காறர்களுக்கு மத்தியில் வக்கற்றுப் போய், வாழ்ந்த மண்ணை வான்அலைகளில் பார்த்துக்கொண்டு, வேதாந்தம் பேசுபவர்களின் வேள்விகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றோம். எட்டாத தொலைவில் அந்த புனிதர்கள். போர்த்துவதற்கு துணியின்றி, போடுவதற்கு உடையின்றி, வயிறாற குடிப்பதற்கு நீரின்றி. உதவுவார்களா. உதவுவார்களா. மனிதர்கள் யாராவது வந்து உதவுவார்களா என ஏங்கிக் கொண்டு. ஜஸ்ட் போர் சம் வோட்டர் ஓர் பிறட். ( பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே. என் நாமமும், எங்கள் சந்ததிகள் நாமமும் பரிசுத்தமடைவதாக )

எங்களை விடுங்கள். நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள். எட்டப்பர்கள். நீங்கள்தான் புத்தி ஜீவிகளாச்சே அந்த மண்ணாங்கட்டி புத்தியை கொஞ்ச நாளைக்கு அற(ம்)வழியில் செலுத்துங்களேன். செலுத்தி அரசை மிரட்டுங்களேன். எல்லா வன்னி மக்களுக்கும் வங்கிகளில் தனித்தனி எக்கவுண்ட்டுகள் திறக்கச் சொல்லுங்கள். அவர்களின் வங்கிக் கணக்கிலக்கங்களை பத்திரிகைகளிலும், இன்டர்நெட்டிலும் வெளியிடச் சொல்லுங்கள். அதில் ஒவ்வொரு குடும்பத்தையும் இங்கிருந்து ( புலம் பெயர் நாடுகளில் ) தெரிவுசெய்து, அழுதுபுலம்பும் அல்லது ஆர்ப்பரிக்கும் அல்லது சிங்களத்துக்கு மீண்டும் ஆப்பு வைக்கத் துடிக்கும் உறவுகளுக்கு கொடுத்து நேரடியாக அவர்களை பணம் அனுப்பச் சொல்லுங்கள். உண்மையாக நீங்கள் அந்த புனிதர்களை மதிப்பவர்களாக இருந்தால் முதலில் இதை செய்யுங்கள். அகதிக்கு தெய்வம்தான் துணை என்பார்கள். பிளீஸ் சகோதரர்களே. பிளீஸ். கொஞ்சநாட்களுக்காவது தெய்வங்களாக மாறுங்களேன்.

மகின்த சகோதரர்கள் எங்கேயோ, எதற்காகவோ தடுமாறுவது போல் தெரிகின்றது. ஆனால் அங்கு நமது இரத்தங்கள், உடன்பிறப்புக்கள் உவ்வாவுக்காக கஸ்டப்படுகின்றன சகோதரர்களே. நாடு கடந்த தமிழீழத்துக்காக வாக்கெடுப்பு நடாத்த புள்ளி விபரங்கள் சேகரிப்பதாக அறிகின்றோம். அதை ஆறுதலாக செய்யுங்கள். இதை, அவர்களுக்கு பணம் அனுப்புவதை உடனடியாகச் செய்யுங்கள் உடன் பிறப்புகளே. பத்தினிகள் சாபம் பொல்லாதது நண்பர்களே. பல பத்தினிச்சிகள் அங்கே அறம்பாட முன்னர், உங்கள் புகழ்பாட ஏற்பாடு செய்யுங்கள் ரத்தத்தின் ரத்தங்களே.

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போபவன் விட்டுக் கொடுப்பதில்லை. நீங்கள் இந்த வன்னிப்புனிதர்கள், கொஞ்சம் ஆசுவாசப்படும் வரை, கொஞ்சம் விட்டுத்தான் கொடுங்களேன். நிச்சயமாக கெட்டுப்போக மாட்டோம். தமிழன் கெட்டுப்போக மாட்டான். இல்லை, இல்லை சிறிலங்கா அரசை உண்டு இல்லையென பண்ணி விடுவோம் என முரசறைந்தால், இன்னுமொரு முப்பது வருடத்தில், சிறிலங்காவில் வவுனியா என்ற ஒரு குட்டி பிரதேசம் இருக்கின்றது, அங்கு ஒரு குட்டி தமிழீழம் இருக்கின்றது, அதில் ஒரு மூவாயிரம் தமிழர்கள் இருக்கின்றார்கள், எனக்கூறிக்கொண்டு, அவர்களுக்காக நமது பேரப்பிள்ளைகள் ஒரு இருபது பேர் ஜெனிவாவில் கொடி பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

கொடி, தமிழுக்கு அமுதென்று பெயர், அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று சொல்லிக் கொண்டு 35 லட்சம் தமிழ் பேசுவோரும் சிறிலங்காவில் இருந்து கொண்டு கொடிபிடிக்க வேண்டும். இங்கு வெள்ளைமாளிகையின்ட கோமணத்துக்குள்ளும், வெஸ்ட்மினிஸ்டர்ர கச்சைக்குள்ளும், ஜெனீவாவின்ட குண்டிக்குள்ளும் இருந்து கொண்டு பிடிக்க கூடாது. அப்படி கொடிபிடித்து, அடம் பிடித்ததின் பலனைத்தான் மொத்த தமிழ் பேசுபவனும் மே 17ல் முள்ளி வாய்க்காலில் அறுவடை செய்தான், செய்தோம். அவர்கள் வியாபாரிகள் அப்பர்களே. அவர்களது வியாபாரம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நாறோ நாறென நாறி, ஈரானிலும் நாற்றமெடுக்கத் தொடங்கியுள்ளது. இப்போது வன்னிப்புனிதர்கள் முள்ளுக்கம்பிக்குள்ளே இருக்கின்றார்களாம் என ஒரு புது வியாபாரம். இந்தியா பக்கத்தில் இருக்கும் வரை எந்த வியாபாரமும் வேகாது என்பது பால்குடிமறவா புள்ளைக்கும் தெரியும்.

தமிழ் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல. எங்களுக்கும் அதோடு நிறைய கொடுக்கல் வாங்கல் இருக்கின்றது உறவுகளே. அது எங்களுக்கும் சொந்தம். அது உங்களுக்கு வியாபாரப் பொருளாக இருக்கலாம். எங்களுக்கு அது உயிர் மூச்சு. உங்கள் எல்லா வியாபாரத்தையும் நிறுத்திவிட்டு முதலில் வன்னிப் புனிதர்களுக்கு மூச்சு போய் விடாமல் இருக்க உதவி செய்யப் பாருங்கள். அப்புறம் யார் நெல்லுகுத்துவதென வன்னிப் புனிதர்கள் முடிவெடுக்கட்டும். நீங்கள் ஒப்புக்குச் சப்பாணியாக அழுதவர்கள். அழுபவர்கள். ஆனால் அந்தப் புனிதர்கள் உண்மையாகவே அழுது, உண்மையாகவே வாழ்ந்து, உண்மையாகவே அனைத்தையும் இழந்து, உண்மையாகவே அவதிப்பட்டவர்கள். தமிழீழம் வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது அந்த அவதிப்பட்ட, அவதிப்படும் அந்த மனிதப் புனிதர்களே. VIII



1-11-2009

Read more...

திரு. ஆனந்தசங்கரி தமிழக முதல்வருக்கு கடிதம்.


மாண்புமிகு டாக்டர் கலைஞர்.மு கருணாநிதி
முதலமைச்சர்
தமிழ்நாடு
சென்னை
30-10-2009

பெருமதிப்புக்குரிய ஐயா,


தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது.


பேரறிஞர் அண்ணாவென வாஞ்சையோடு அழைக்கப்பட்டும், தங்களையும் தன் அமைச்சரவையில் இணைத்து கொண்டு, தங்களுக்கு முன் முதலமைச்சர் பதவி வகித்த பெரு மதிப்புக்குரிய சீ.என். அண்ணாதுரை அவர்களின் காலம்தொட்டு எமது பிரச்சினையில் தாங்கள் கொண்டிருக்கும் பெரும் அக்கறை பற்றி நான் நன்கறிவேன். எமது பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிட்டுமென முழு உலகும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறது.

ஐயா! துரதிஷ்டவசமாக எமது பிரச்சினை தீர்வுக்காக எற்பட்ட பல வாய்ப்புக்களை நாம் இழந்து நிற்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன் தங்களின் நன்மதிப்பை பிரயோகித்து இலங்கை அரசுக்கு பிரச்சினையை தீர்க்க உதவுமாறு வேண்டியிருந்தேன். அத்தகைய கடிதங்களின் பிரதியொன்றையும் இத்துடன் இணைத்துள்ளேன். இனப்பிரச்சினைத் தீர்வு இந்திய அரசியல் சாசனத்தின் முன் மாதிரியாகக் கொண்டு தீர்வு காணப்பட வேண்டுமென்று நான் ஆலோசனை வழங்கியிருந்தேன். சிறிதும் எதிர்பாராத இடங்களில் இருந்தும்கூட அந்த ஆலோசனைக்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தையொத்த அதிகாரப்பகிர்வு இலங்கையின் மாகாணசபைகளுக்கு வழங்கினால் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதோடு இலங்கைவாழ் மக்களின் பெரும்பாலானோருக்கும் ஏற்புடையதாக இருக்கும். மேலும் தமிழ் நாட்டில் வாழும் தமிழ் மக்களை அமைதிப்படுத்துவதோடு அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண உதவிய பெருமையும் தமிழகத்திற்கு சேரும். அண்மையில் இலங்கைக்கு விஜயம்செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பிரதமர் கௌரவ மன்மோகன் சிங் அவர்களை சந்தித்தபோது விரைவில் இலங்கையிலிருந்து ஒரு உயர்மட்டக்குழு புதுடில்லிக்கு வர இருப்பதாகவும் அவர்களுடன் முக்கிய இரு பிரச்சினைகளான அரசியல் தீர்வு, இடம் பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் போன்றவை பற்றி பேசும் சந்தர்ப்பம் உண்டென குறிப்பிட்டதாக அறிகின்றேன். இந்த விடயமே இக் கடிதத்தை எழுத என்னைத் தூண்டியது.

50 ஆண்டுகளுக்கு மேல் நான் அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன் என்பது பற்றியும் இனப்பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முதற் காரணமாக இருந்த பிரஜா உரிமை சட்டம் 1949ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதும், 1956ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்கள சட்டம் ஆகியன மேலும் நிலைமை மோசமடைய காரணமாக இருந்த இக்காலகட்டத்தில் நான் வாழ்ந்தவன் என்பதால் இவை பற்றி நன்கறிந்தவன் என்பதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். நிரந்தர தீர்வு காண்பதற்கு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் கடும் போக்காளர்களின் செயற்பாட்டால் குழப்பத்திற்குள்ளாகி நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து இந்த ஆண்டின் முற்பகுதியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. 2009 மே 18ம் திகதி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்;டதோடு மறுநாள் அதன் தலைவர் இறந்ததுடன் அத்தனையும் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தது. மொத்த விளைவு இலங்கையின் 25 மாவட்டங்களில் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 08 மாவட்டங்கள் அழிந்தன. கடந்த கால் நூற்றாண்டு காலமாக சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் பல்வேறு சமூகத்தினரும் எதுவித வேறுபாடின்றி பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தனர். கோடிக்கணக்கான பெறுமதியான பொது சொத்துக்களும் அரச சொத்துக்களும் அழிக்கப்பட்டன. ஏனைய சமூகத்தினரோடு ஒப்பிடுகையில் முஸ்லீம், தமிழ் மக்களின் உயிரிழப்புக்களும் சொத்தழிவுகளும் மிகக் கூடுதலானவை எனக் கூறலாம். கிழக்கு மாகாணத்தில் 45,000 பேரும் வட மாகாணத்தில் அதே போன்ற தொகையினர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அரச தரப்பு போர் வீரர்களின் மனைவியரும் பெருமளவில் விதவையாக்கப்பட்டுள்ளனர். அநாதையாக்கப்பட்டோhரின் எண்ணிக்கையும் குறைந்ததல்ல. இன்றும் கூட 1100 க்கு மேற்பட்ட, முகாம்களில் உள்ள அநாதைகளை பொறுப்பேற்க ஒரு சிறு உறவினர்களைத் தவிர வேறு யாரும் முன்வரவில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் இறந்துள்ளனர். அனேகர் தம் கால்கள், கைகளையும், கண் பார்வையையும், கேட்கும் சக்தியையும், தம் நெருங்கிய அன்பு உள்ளங்களையும் இழந்துள்ளனர். நம்பிக்கையானதொரு தகவலின்படி முகாம்களில் பத்துக்கு ஒருவர் அங்கவீனர்களாக உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மீன் பிடி, விவசாயம், பல்வேறு தொழில்கள் பெருமளவில் குறைக்கப்பட்டு அல்லது முற்றாக நிறுத்தப்பட்டும் உள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளின் மத்தியிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் முற்று முழுதாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருந்த போதும் யாரும் பட்டினி கிடக்கவில்லை. எந்;தவித பாகுபாடின்றி அரசு அப் பிரதேசத்திற்கு உணவு அனுப்பியது. மக்களும் தம் சொந்த முயற்சியால் கஷ்டமின்றி வாழ்ந்தனர். அநேகர் லொறி, ட்ராக்டர், கார், பல்லாயிரக் கணக்கானோர் மோட்டார் சைக்கிள்களையும் சொந்தமாக வைத்திருந்தனர். கணிசமான தொகையினர் பாற்பண்ணை, கோழிப்பண்ணை நடத்தியதோடு பெருமளவில் விவசாயமும் மேற்கொண்டனர். இன்று இவைகள் அனைத்தும் அற்றுப் போயின.

இடம் பெயர்ந்த மக்கள் இடத்துக்கு இடம் மாறி இறுதியில் உடைமைகள், அத்தனையையும் இழந்தனர். சிலர் தமது மனைவியர், அன்பு பெற்றோர், மக்கள் ஆகியேரை இழந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்ததும், அரசால் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டவேளை அவர்கள் எதுவுமற்றவர்களாகவும், உடுத்த உடையுடனும் வந்து சேர்ந்துள்ளனர். இரு மாதத்திற்குள், அவர்கள் மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்ததன் பின், அத்தனை பேரும் பரம ஏழைகளாக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் கடந்த சில மாதங்களாக பட்ட துன்பங்களை கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் பலாத்காரமாக எதுவித தேவையுமின்றி தடுத்து வைக்கப்பட்டு;ள்ளனர். விடுதலைப் புலிகளின் தீவிர உறுப்பினர்கள் ஏறக்குறைய அனைவரும் முகாம்களில் இருந்து தப்பி சென்று விட்டனர். 1,50,000 இற்கு மேற்பட்டவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் அப்பாவி பிள்ளைகள் 10,000 இற்கு மேற்பட்டோர் புலிகளின் சிறுவர் போராளிகளாக முத்திரை குத்தப்பட்டு பெற்றோர்களிடமிருந்து பலாத்காரமாக பிரிக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகளுக்காக புனர் வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இன்று பாடசாலைகளில் கல்வி போதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் கல்வியில் மிகவும் திறமைசாலிகளாக முன்னேற கூடியவர்கள். அப்பாவிகள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்ற வேளையில் உண்மையான குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர். வயதில் முதிர்ந்தோர், கர்ப்பிணி தாய்மார்கள், பிள்ளைகள், காயமுற்றோர் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எந்த சந்தர்ப்பத்திலும் நியாயப்படுத்த முடியாததொன்று. அரசாங்கம் தற்போது முகாம்களில் உள்ளவர்களை பகுதி பகுதியாக மீளக்குடியமர்த்துவதற்காக விடுவித்து வருகின்றது. அவர்களுக்கு ஆறுமாத காலத்திற்கு போதுமான உலர் உணவு, விவசாய கருவிகள் சிலவையும், சொற்ப உதவி பணத்தொகையும் மட்டும் வழங்குவது போதுமானதல்ல. சகல இடம் பெயர்ந்தோருக்கும் அவர்களுடைய இழப்புக்களுக்கு ஏற்ப நட்டஈடு வழங்ப்பட வேண்டும். தங்களின் பங்களிப்புடனேயே இவர்கள் நட்டஈடு பெறுவது சாத்தியமாகும்.

நாடும் நாட்டு மக்களும் அதிகளவில் கஷ்டங்களுக்கு உள்ளாகி பலவற்றை இழந்துள்ளமையால் இந்த நாட்டிலோ அல்லது வேறு எங்கே யார் இருந்தாலும் இவ்வாறு மீண்டும் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது, ஏற்படவிடவும் கூடாது. ஒற்றையாட்சியின் கீழ் எத்தகைய தீர்வு வழங்கப்பட்டாலும் கடும் போக்காளர்கள் எதிர்காலத்தில் அநாவசியமாக இதில் தலையிடும் வாய்ப்பைக் கொடுக்கும். ஆகவேதான் இந்திய முறையிலான ஒரு தீர்வை முன் வைக்குமாறு நான் வற்புறுத்தி வருகின்றேன். இந்தியர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறந்ததொரு கோட்பாட்டுக்கு அமைய தமது அரசிலமைப்பை உருவாக்கியுள்ளமையால் அம் மாதிரியான அமைப்புமுறை 'ஒற்றையாட்சி' 'சமஷ்டி' ஆகிய வார்த்தைகளை விரும்பாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

ஆகவே ஐயா, சகல அரசியல் வேறுபாடுகளையும், வேற்றுமைகளையும் மறந்து தமிழ் நாட்டவர் அனைவரையும் ஒன்றிணைத்து அரசியல் தீர்வு காண்பதில் தங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். எங்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த நாம் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம். எனது வேண்டுகோளை தாங்கள் ஏற்று இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்திய அரசை இலங்கை சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதாகவுள்ள எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டுமென மிக விநயமாக கேட்டுக் கொள்கிறேன். தங்களை சந்தித்து இது சம்பந்தமாக மேலும் சில கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பை விரைவில் ஏற்படுத்தித் தருவீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி
தங்கள் உண்மையுள்ள

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ


Read more...

இன்றைய விசேட செய்திகள்

கிழக்கில் அதிகரிக்கும் களவுச் சம்பங்கள்.
கிழக்கு மாகாணத்தில் அங்காங்கே பல களவுச் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றது கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறான சம்பங்கள் தொடர்ந்து இடம்பெற ஆரம்பித்துள்ளன. தொடர்ந்து பெய்யும் அடை மழையினால் இவ்வாறான சம்பங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழை

வடக்கு கிழக்கு மகாணங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நி லையம் அறிவித்துள்ளது அத்துடன் இலங்கையின் ஏனைய பகுதிகளும் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்வு கூறியுள்ளது.

சமையல் எரிவாயு விலை ஏற்றம்
சமையல் எரிவாயு இன்று நல்லிரவு முதல் ரூபா.05 விலை உயர்தப்படவுள்ளது இதன் படி சமையல் எரிவாயு பல நோக்கு கூட்டுறவுக் கடைகளில் ரூபா. 1630 என விற்பனை செய்யப்பட்டவை இனி 05 ரூபா விலை அதிமாக விற்பனை செய்யப்பட்டும் அதே சமயம் தனியார் கடைகளில் 1670/= அல்லது 1680/= என விற்பனை செய்யப்பட்டவை இனி இன்னும் விலை அதிகமாக விற்பனை செய்யப்படும்.

கிழக்கிலிருந்து விசேட தொடர்பாளர்.

Read more...

Friday, October 30, 2009

முன்னாள் புலி உறுப்பினர்கள் 1000 பேருக்கு USAID நிறுவனத்தின் உதவியுடன் தொழில்பயிற்சி.

யுஎஸ்எய்ட் நிறுவனத்தின் அனுசரணையில் முன்னாள் புலி உறுப்பினர்கள் 1000 பேருக்கு புனருத்தாபனம் அளிக்கும் பெரும் செயற்திட்டம் ஒன்று நேற்று ஆரம்பமானது. அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களைச் சேர்ந்த 1000 முன்னாள் புலி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் எதிர்காலத்தில் சமுதாயத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்வதற்கான தொழில் பயிற்சிகள் வழங்க ஏற்பாடாகியுள்ளதுடன், எதிர்காலத்தில் அவர்கள் தாம் கற்கும் துறையில் வேலை செய்வதற்குரிய உபகரணங்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுக்கின்றது.

International Organization for Migration (IOM)எனும் நிறுவனத்தின் மேற்பார்வையில் இடம்பெறவுள்ள இவ்வேலைத்திட்டம் நேற்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

Read more...

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்த இருவர் கைது.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இவர்களிடமிருந்து 1448 சாராயப் போத்தல்களும், 4338 பியர் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிமால் மெடிவக்க தெரிவித்துள்ளார்.

Read more...

மாணவர் தலைவன் பிணையில் விடுதலை.

அரசிற்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு கடந்த 1.5 மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்தின் தலைவர் உடுல் பிரேமரத்ன இன்று கங்கொடவில் மஜிஸ்திரேட் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது விடுதலை வேண்டி பல்கலைக்கழக மாணவர்கள் பல விதமான ஆர்பாட்டங்களை நாடாத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

மனநோயாளியை கடலில் மூழ்கடித்த பொலிஸ் உத்தியோகித்தர் சரண்.

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் புத்தி சுயாதீனமற்ற இளைஞன் ஒருவர் கடலில் பலவந்மாக மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகித்தர் பொலிஸில் சரணடைந்துள்ளதாவும் அவரை கைது செய்துள்ள பொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

ரிஎன்எல் தொலைக்காட்சி நிறுவனத்தின் வீடியோ பிரிவினர் குறிப்பிட்ட இளைஞன் நீரில் முழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை வீடியோ செய்துள்ளனர். இவ்வீடியோ நாடா சம்பந்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கு போதுமானது என நம்பப்படுகின்றது.

Read more...

புதிய பொலிஸ் மா அதிபராக மகிந்த பாலசூரியா நியமிக்கப்படலாம்.

பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்தின எதிர்வரும் வாரம் ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய பொலிஸ் மா அதிபராக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியா அவர்கள் நியமனம் பெறலாம் என நம்பகரமாக தெரியவருகின்றது.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான திரு. மஹிந்த பாலசூரியா அவர்கள் பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக இயக்குனராகவும், விசேட அதிரடிப்படையின் சிறப்பு கட்டளைத் தளபதியாகவும் தற்போது செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

பொலிஸாரினால் பம்பலப்பிட்டி யில் மனநோயாளி ஒருவர் கடலில் மூழ்கடிக்கப்பட்டார்.

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகித்தர் மற்றும் சில நபர்களினால் இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட சம்பவம் பம்பலப்பிட்டியில் உள்ள Z Building இல் இருந்து TNL தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களால் மிகவும் துல்லயமாக வீடியோ செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இளைஞன் மனநோயாளி ஒருவர் என தெரியவருவதுடன் அவர் அப்பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள், புகையிரதங்கள் என்பவற்றுக்கும் கற்களால் ஏறிந்து கொண்டிருந்துள்ளார். புத்திசுயாதீனமற்ற குறிப்பிட்ட இளைஞனின் செயலில் ஆத்திரமுற்ற பிரதேசத்தை சேர்ந்த சிலரும் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிலரும் இணைந்து குறிப்பிட்ட இளைஞனை கடலினுள் விரட்டி, அவரை தடிகளால் அடித்து மூழ்கடித்துள்ளதை காணமுடிகின்றது.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவோம் என சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பொலிஸார் மனநோயாளி ஒருவர் சுயநினைவின்றி மேற்கொண்ட செயலுக்காக அவரது உயிரை குடிக்கும் அளவிற்கு சென்றுள்ளது மிகவும் பாரதூரமானதாகும்.

குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ள பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Thursday, October 29, 2009

கண்ணிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்த மேலும் 5 நவீன இயந்திரங்கள்

மக்களை துரிதமாக மீளக் குடியமர்த்து வதற்கு ஏதுவாக மிதி வெடிகள், நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கை களை விரைவுபடுத்தும் நோக்குடன் மிதிவெடிகள் அகற்றும் மேலும் ஐந்து நவீனரக இயந்திரங்கள் இன்று இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்படுகின்றன.

250 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி 5 இயந்திரங்களும் ஸ்லோவேக்கியா நாட்டிலிருந்து தருவிக்கப்படுவதாக தேசநிர்மாண அமைச்சு அறிவிக்கிறது.

இன்று காலை 7.30 க்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மேற்படி 5 இயந்திரங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தேச நிர்மாண அமைச்சர் எஸ். எம். சந்திரசேன, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, தேசநிர்மாண அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி ஆகியோர் இன்று விமான நிலையத்தில் மேற்படி இயந்திரங்களை பொறுப்பேற் கவுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை உடனடியாக குடியமர்த்துவதற்கு ஏதுவாக மேற்படி மிதிவெடிகள் அகற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதேபோன்று ஏற்கனவே 10 இயந்திரங்களும் தருவிக்கப்பட்டுள்ளன. அவை வவுனியா வடக்கு, மன்னார் பகுதிகளில் மிதிவெடி, கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

Read more...

பிரபல தொழிலதிபர் லலித் கொத்தலாவல வீடு திரும்பினார்.

செலிங்கோ நிறுவனத்தின் தலைவரும் இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருமான தேசமானி லலித் கொத்தலாவல அவர்கள் உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகளுடனான பிணையில் வீடு திருப்பினார்.

கோல்டன் கீ கடனட்டை மற்றும் வங்கி வைப்பு விடயங்களில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்ட அவர் கடந்த 9 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றும் பிணை வழங்கிய போது பலத்த நிபந்தனைகளை விதித்திருந்தது.
50 லட்சம் றொக்கப்பிணையாக செலுத்தப்படவேண்டும், 1 கோடி சரீரப் பிணைக்காக கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட வருமான வரி செலுத்துவோர் ஐவர் பிணை நிற்கவேண்டும். அவர் கொண்டுள்ள சகல வீசாக்கள், பிரயாண பத்திரங்கள், கடவுச்சீட்டு என்பனவற்றை உச்ச நீதிமன்றில் பாரம் கொடுக்கவேண்டும், அத்துடன் மேல் மாகாண சபை எல்லைக்கு வெளியே நீதிமன்ற உத்தவின்றி செல்லக்கூடாது என பல மிகவும் கடினமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சகல பிணை நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றை பூரணப்படுத்தியவராக இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு திரு. லலித்கொத்தலாவல வீடு திரும்பியுள்ளார்.

Read more...

ஐக்கிய தேசியக் கட்சியின் அழைப்பை ஜேவிபி நிராகரிக்கின்றது.

எதிர்கட்சிகளினால் உருவாக்கப்படும் பொது கூட்டு முன்னணியுடன் ஜேவிபி யை இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினரால் விடுக்கப்பட்ட அழைப்பை ஜேவிபி நிராகரிப்பதாக அக்கட்சியின் பொது வேட்பாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவதற்காக அமைக்கப்படும் கூட்டு முன்னணியுடன் எந்தக்கால கட்டத்திலும் ஜேவிபி இணையமாட்டாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்படும் எதிர்கட்சிகளின் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஜேவிபி யினருக்கு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

தமிழ் கட்சிகளின் அரசுடனான மென்மை போக்கை கண்டிக்கின்றார் மண்டையன் குழு தலைவர்.

அரசுடன் மென்மை போக்கை கடைப்பிடிக்கின்றன தமிழ்கட்சிகள் என்று குற்றஞ்சாட்டுகிறார் முன்னைநாள் மீன்பிடி அமைச்சு ஆலோசகர் சுரேஸ் பிரேமசந்திரன்!
தமிழ்கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் அரசின் நடவடிக்கைகளை கண்டிக்காமல், மென்மை போக்கை கடைப்பிடிப்பதாக முன்னைநாள் மண்டையன் குழுவின் தலைவரும், பின்னர் மீன்பிடி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக இருந்தவருமான தற்போதைய தமிழ்கூட்டமைப்பு பா.உ சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார்.

பதவிக்காக மண்டியிட்டு தமிழ் கூட்டமைப்பில் இணைந்தவர்தான் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் என்ற ஒடுகாலி. இவரை தமிழ்கூட்டமைப்பில் இணைத்து கொள்வதற்கு அவ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய தமிழ்கட்சிகள் விரும்பாதபோதும், மற்றுமொரு ஒடுகாலியான செல்வம் அடைக்கலநாதனின் காலில் விழுந்து மண்டியிட்டு கூட்டமைப்பில் இணைந்து கொண்டவர்தான் இந்த சுரேஷ்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் பொது செயலர் அமரர் பத்மநாபா கொலைக்கு பிரதான காரணியாக இருந்தவரே இந்த பிரேமச்சந்திரன். அதன் நண்றிக்கடனாகவே பின்னர் புலிகளுடன் இணைந்து அவர்களுக்க சேவகம் செய்தவர். இன்று மற்றைய தமிழ்கட்சிகளை பார்த்து அரசுடன் மென்மைபோக்கு கடைப்பிக்கின்றனர் என்று குற்றச்சாட்டு சொல்வதற்கு இவருக்கு எந்த தகுதியும் இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தமிழ் மக்களுக்காக எதுவுமே செய்யாமல் இந்தியாவிலம் வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் இருந்துவிட்டு உள்ளாட்சி தேர்தலுக்காக மஹிந்தவின் காலில் மண்டியிட்டு வந்தவர்தான் இந்த குறும் நோக்கம் கொண்டவர்தான் இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன். வன்னியில் அகோர யுத்தம் இடம்பெற்ற நிலையில் சொத்துக்களையும், சொந்தங்களையும் இழந்த நிலையில் வவுனியா நோக்கிவந்த அந்த மக்களுக்காக ஒரு போத்தல் தண்ணீரோ அல்லது ஒரு நேர உணவு கூட கொடுக்க வக்கில்லாத இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன். மக்களின் அவலத்தில் அல்லும் பகலும் பக்கதுணையாய் இருந்து செயற்பட்ட தமிழ்கட்சிகளான புளொட் போன்ற கட்சிகளை விமர்சிப்பதற்கு இந்த சந்தர்ப்பவாத அரசியல் நடாத்தும் கோடரிகாம்புக்கு எந்த முகாந்திரையும் கிடையாது.

வசதி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம். தனது குடும்பத்தை பாதுகாத்து கொள்வதும், சொத்து சேகரித்து கொள்வதுமே இவரது கொள்கை. இந்தியாவில் பத்மநாபா புலிகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது துணைவியார் ஆனந்தி பெயரில் தமிழகத்தில் இருந்த வீட்டினை போலி கையெழுத்து போட்டு வித்தவர் இந்த சுரேஸ் ஆவர்.

இந்திய பெண்மணியாக ஆனந்தி அவர்கள் இருந்தபோதும், பத்மநாபா பெயரில் அறக்கட்டளை அமைப்பை கட்டியமைப்பதற்காகவே மேற்படி வீட்டை ஆனந்தி அவர்கள் வைத்திருந்தார். இந்நிலையில்தான் மேற்படி வீட்டை சுரேஸ் திருட்டுத்தனமாக அபகரித்துக் கொண்டார். கண்ணியமான பெண்மணியாக இருந்தபடியால் ஆனந்தி அவர்கள் சட்டநடவடிக்கை எடுக்க கூடிய நிலையில் இருந்தும் தனது கண்ணியத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது மட்டுமல்ல கொழும்பு வத்தளை பகுதியில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் பெயரில் வாங்கப்பட்ட வீட்டை கபளீகரம் செய்து கொண்டவர்தான் இந்த சுரேஸ் என்ற சுரெஸ் பிரேமச்சந்திரன்.

இதுமட்டுமா கடந்த உள்ளாட்சி தேர்தல் நிதியாக வெளிநாடுகளில் இருந்து புலிகளால் அனுப்பி வைக்கப்பட்ட 1 கோடி ரூபாயில் சிறு தொகையை தமிழ்கூட்டமைப்புக்கு செலவழித்துவிட்டு மிகுதி நிதியை தனது பொக்கற்றுக்குள் போட்டுக்கொண்டவர்தான் இந்த ஈனப்பிறவி சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இவருக்கு தமிழ்மக்களின் விடுதலை பற்றியோ புலிகளின் போராட்டத்தை குறைகூறுவதற்கோ அல்லது மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் கட்சிகளை விமர்சிப்பதற்கு எந்தவித அடிப்படை தகுதியுமற்றவர். தமிழ் கூட்டமைப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகி இவர் மக்களுக்கு செய்த சேவை என்றால். மனைவி பிள்ளையை கனடாவுக்கு அனுப்பியது மட்டுமல்லாமல் அங்கே அவர்களுக்கு நிரந்தர வதிவிடவுரிமையயை பெற்றுகொண்டு பின்னர் இந்தியாவுக்கு அழைத்து முன்னைநாள் இந்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மூலம் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கல்லூரியில் மகளுக்கு அனுமதி பெற்றதுதான் இவர் பாராளுமன்ற உறுப்பினராகியதன் பலன்.


குருபரன்
பிரித்தானியா.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com