Wednesday, October 21, 2009

புதினம், தமிழ்நாதம் இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணி என்ன?

புதினம், தமிழ்நாதம் எனும் இரு இணையத்தளங்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள கரன் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இவ் இரு இணையத்தளங்களும் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்ரரின் மேற்பார்வையில் இயங்கி வந்தன. இவ் இணையங்களுக்கான செய்திகள் வன்னியில் இருந்து நந்தவனம் எனும் பெயரில் இயங்கிவந்த புலிகளின் இளை ஒன்றில் இருந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

அதேநேரம் இவ் இணையத்தினை நிர்வகித்து வந்த கரன் என்பவருக்கு தயா மாஸ்ரரின் சிபார்சின் பேரில் மேற்குலக நாடொன்றில் வசிக்கும் தமிழ் தொழில் அதிபர் ஒருவர் நிதி உதவி செய்து வந்துள்ளார். ஆனால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரனுக்கான மாதாந்த வருமானம் கிடைக்காமையால் அவ்விணையம் தடைப்பட்டிருக்க வேண்டும் என கடந்த காலங்களில் புலிகள் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் சந்தேகம் தெரிவித்தார்.

அத்துடன் தயா மாஸ்ரர், இலங்கை அரசாங்கத்தினால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது பலரினாலும் உணரப்பட்டுள்ள விடயம். அந்நிலையில் தயா மாஸ்ரரின் நம்பக்கைக்கு உரியவரான கரனால் நிர்வகிக்கப்பட்டு வந்த இணையம் தனிப்பட்ட காரணங்களுக்காக சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்ள்ளது. தனிப்பட்ட காரணங்கள் எனும்போது தயா மாஸ்ரரின் தேவைக்காக நிறுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட இணையம், பிற்காலத்தில் தயா மாஸ்ரர் கும்பல் மீண்டும் ஒரு வடிவத்தில் மக்களை ஏமாற்ற மக்கள் முன் தோன்றும்போது புதினம், தமிழ்நாதம் போண்ற இணையங்களும் தமது வடிவத்தையும் மாற்றிக்கொண்டு வெளிவருவதற்கு முன் ஏற்பாடாக நிறுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

புலிகள் இயக்கம் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளபோது, குறிப்பிட்ட இரு இணையங்களும் கே.பி தரப்பினரை ஆதரிவந்திருந்தன. கே.பி யின் கைதை தொடர்ந்து இடம்பெற்ற தொடர்கைதுகளையும், இலங்கை அரசியல் மாற்றங்களையும் வைத்து நோக்குகின்றபோது, கொழும்பில் தடுப்புக்காவலில் உள்ள கேபி யின் அழுத்தத்தில் குறிப்பிட்ட இணையங்கள் நிறுத்தப்படனவான என்கின்ற சந்தேங்களும் எழுந்துள்ளன.


Read more...

சரத்பொன்சேகா பொது வேட்பாளரா? நாம் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்படும்போது தாம் பூரண ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஜேவிபி மற்றும் சில கட்சிகள் தெரிவித்துள்ளது. அதே நேரம் இம்முன்னணியில் பொது வேட்பாளராக பொன்சேகா நிறுத்தப்படும்போது நாம் முன்னணியில் இருந்து வெளியேறுவோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read more...

Tuesday, October 20, 2009

ராஜரட்ணம் ஐ.தே.க எம்பி ரவி கருணாநாயக்க விற்கு பணம் வழங்கினாரா?

பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க FBI இனரால் கைது செய்யப்பட்டுள்ள பிரபல கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்திடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பணம் பெற்றுள்ளதாக தகவல் கசிகின்றன.

அமெரிக்க வங்கி ஒன்றில் இருந்து கொழும்பில் உள்ள வங்கி கணக்கொன்றுக்கு 3 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாணயமாற்று விதிகளுக்கு முரணாக மாற்றப்பட்டது தொடர்பாக ரவிகருணாநாயக்க உட்பட மூவருக்கு கொழும்பு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை எதிர்வரும் 02.02.2010 இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் இப்பணம் இராஜரெட்ணத்தினால் அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.

Read more...

முத்து கெட்டிகம சிறிலங்க சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றார். மைத்திரிபால.

காலி மாவட்டத்தில் மாகாண சபைத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நிசாந்த முத்துகெட்டிகம கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கட்சியின் அக்மன பிரதேச அமைப்பாளர் பதவியில் இருந்து முத்துகெட்டிகம நீக்கப்பட்டுள்ளார். அவரை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு ஒழுக்காற்று விசாரணை நாடாத்தவேண்டிய தேவை இல்லை. ஆனால் கட்சியில் இருந்து விலக்குவதற்காக அவர்மீது ஒழுக்காற்று விசாரணை இடம்பெறும். அவருக்கான குற்றப்பத்திரிகை தயார் படுத்தப்பட்டுள்ளது. அவர் மீது, தேர்தல் காலங்களில் அவர் நடந்து கொண்ட விதம், தெரிவத்தாட்சி அலுவலரை மிரட்டியமை, ஐக்கிய தேசியக் கட்சி தலைவரை சந்தித்தமை போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன என்றார்.

அத்துடன் முத்துகெட்டிகம கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், தனது உயிருக்கு தான் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் கனடா, சுவிற்சர்லாந்து அல்லது இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் ஒன்று தனக்கு அரசியல் தஞ்சம் தந்துதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more...

பாதுகாப்பு அமைச்சு: குறை நிரப்பு பிரேரணை நிறைவேற்றம்

பாதுகாப்பு அமைச்சுக்கு மூவாயிரத்து முன்னூற்று எண்பத்து நான்கு கோடியே 66 லட்சம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பிரேரணையை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும், ஒழுங்கும் அமைச்சுக்கென 570.8 மில்லியன் ரூபாவும் இலங்கை இராணுவத்துக்கு 1968.1 மில்லியன் ரூபாவும் கடற்படைக்கு 7374.3 மில்லியன் ரூபாவும், விமானப் படைக்கு 2950 மில்லியன் ரூபாவும், பொலிஸ் திணைக் களத்துக்கு 1640 மில்லியன் ரூபாவும், சிவில் பாதுகாப்பு திணை க்களத்துக்கென 1630.5 மில்லியன் ரூபாவும் குறைநிரப்பு தொகை யாக வழங்கப்படுகிறது.

Read more...

இலங்கையில் மிகவும் நீளமான பாலம் நேற்று முதல் மக்கள் பாவனைக்கு .


இலங்கையில் மிக நீளமானதும் கடலுக்கு குறுக்காகவும் அமைக்கப்பட்ட பாலம் எனும் பெருமைக்குரியது நேற்று திறக்கப்பட்ட கிண்ணியா பாலமாகும். எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இப்பாலம் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. சவுதி அரேபிய நாட்டின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாலமானது சுமார் 396 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாய் 29 கோடி ரூபாய் செலவில் அமைக்க்பட்டதாகும். சுமார் 30 வருட காலத்தின் பின்னர் கிழக்கில் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டு வருகின்ற அபிவிருத்திப் பணிக்கு இப்பாலமானது மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமி;ழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்

கிழக்கு மாகாணத்தில் தற்போது மஹிந்த சிந்தனையில் கிழக்கில் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் சகல துறைகளிலும் பாரிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.,

குறிப்பாக பாதைகள், குளங்கள், பாலங்கள் என்பன மிகவும் முதன்மைப்படுத்தப்பட்டு அபிவிருத்திப்பணிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபையின் தோற்றகத்தின் பின்னர் கிழக்கின் பல பாகங்களிலும் நெடுஞ்சாலைகளின் அபிவிருத்தி பணிகள் நடைபெறுகின்றது. திருமலை மட்டக்களப்பு நெடுஞ்சாலை, அதே சமயம் மட்டக்களப்பு அம்பாறை பிரதான வீதி, வெருகல் பாதை திருமலையிலிருந்து புல்மோட்டை வரையான பிரதான பாதை எனப் பல பிரதான பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அதே போல் நீர்ப்பாசனக் குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு விவசாயச் செய்கைக்காக அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக கிழக்கு மாகாணத்திலேயே மிகவும் முக்கியமான பல பாலங்கள் அமைக்கப்பட்டுக்கொண்டு வருகின்றமை விசேட அம்சமாகும். அதில் சில பாலங்கள் முடிவடைந்து மக்கள் பாலவனைக்காக திறந்து விடப்;பட்டிருக்கின்றது. ஒரு சில பாலங்களில் வேலைகள் முடிவுறும் தறுவாயில் இருக்கின்றது. அதனடிப்படையில் கிழக்கு மாகாணம் என எடுத்துக்கொண்டால் மிக பெரிய பல பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு அமைக்கப்பட்டு வருகின்ற அறுகம்பை பாலம், கல்லடிப்பாலம், ஓட்டமாவடிப்பாலம், கிண்ணியாப்பாலம்,யான ஓயா பாலம், இறக்ககண்டிப்பாலம், புடவைக்கட்டுப்பாலம் என பல பாலங்கள் மிகவும் பிரமாண்ட மான முறையில் அமைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.

இதனடிப்படையில் எதிர்வருகின்ற காலங்களில் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் இப்பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் பெரிதும் பயன்படும். அத்தோடு இதனூடாக அதிகளவான பயன் எமது கிழக்கு மக்கள் அடைகின்றனர். இவற்றுக்கெல்லாம் காரண கர்த்தாவாக அமைந்த எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எமது நாட்டினதும் எமது மாகாணத்தினதும் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதில் மன மகிழ்ச்சி அடைகின்றேன் எனக் குறிப்பிட்டார்.




Read more...

Bangkok இல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 45 இலங்கையர்கள் கைது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் இல் சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை கைது செய்யும் பொருட்டு குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தினரால் இன்று காலை 6.30, மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்கள் என்பதுடன் இவர்களில் 15 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் எனவும் ஏனைய 30 பேரில் இருபாலாரும் அடங்குகின்றனர் எனவும் தெரியவருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடா மற்றும் இந்தோனேசிய கடற்பரப்பில் பிடிபட்ட கப்பல்களின் பின்னணியில் உள்ள ஆட்கடத்தல் முகவர்களில் சிலர் தாய்லாந்து நாட்டில் இருந்து செயற்படுவதாக சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததை தொடர்ந்து, தாய்லாந்து அதிகாரிகள் அவர்களை கைது செய்யும் நோக்கில் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Read more...

தடுப்பு மருந்து போத்தலினுள் உடைந்த போத்தல் துண்டு.


Cefuroxine எனப்படும் மருந்தை நோயாளிக்கு ஏற்ற முற்பட்ட வைத்தியர் அம்மருந்துப் போத்தலினுள் உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்று இருந்ததைக் கண்டு பிடித்துள்ளார்.
குறிப்பிட்ட மருந்து அனைத்து வயதினருக்கும் உரிய நோய்தடுதப்பு (கிருமிகொல்லி) மருந்தாகும். அனுராதபுரம் வைத்தியசாலையில் சத்திர சிகிச்கைக்கு உட்படுத்தப்படவுள்ள நோயாளி ஒருவருக்கு சத்திர சிகிச்சை அறையில் வைத்து குறிப்பிட்ட மருந்தினை ஊசி மூலம் ஏற்றுவதற்கு வைத்தியர் தயாரானபோதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

750 மி.கிராம் தூள் கொண்ட மருந்து குப்பியினுள் பாவனைக்கு முன்னர் 10 மி.லீட்டர் நீர் சேர்க்கப்பட்டு நன்கு குலுக்கப்படவேண்டும். அவ்வாறு வைத்தியர் மருந்தினுள் நீரை சேர்த்து குலுக்கியபோதே அம் மருந்துக் குப்பியினுள் உடைந்த போத்தல் துண்டு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.

இம்மருந்து இலங்கை பூராகவும் பாவிக்கப்படுவதுடன், அது இந்திய கம்பனி ஒன்றின் உற்பத்தியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

பொய்த் தகவல்களை வழங்குகின்ற இணையத் தளங்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படும்.

இலங்கை நிலவரங்கள் தொடர்பாக பொய்த்தகவல்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற இணையத்தளங்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படும் என ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு கருத்துக்களை வெளியிடுகின்ற சுத்ந்திரம் இருக்கின்ற போதிலும் சில இணையங்கள் அண்மைக்காலமாக உண்மைக்கு புறம்பான செய்திகளை திட்டமிட்ட முறையில் வெளியிட்டுவருவதாகவும் அவை தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்தும் பொருட்டு அரச பத்திரிகைகளுடாக குறிப்பிட்ட இணையத்தளங்களின் பெயர்கள் வெளிவிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

Monday, October 19, 2009

புதையல் தோண்டிய மதகுரு கைது

புதையல் தோண்டிய மதகுரு ஒருவரை அம்பலந்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் அம்பலந்தோட்டை, வாதுருப்பு, தேரபுத்ர ரஜமஹா விஹாரையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

மேற்படி புராதன விஹாரையிலுள்ள பல தொல் பொருட்கள் இந்த சம்பவத்தில் சேதமடைந்து ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு மதகுருவையும் பொலிஸார் தேடிவருகின்றனர்.



Read more...

புதினம் சொல்ல இனி புதினம் இல்லை.

புலிகளின் முன்னணி இணையத்தளமான புதினம் தனது சேவையை தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. புலிகளின் சகல அராஜகங்களையும் நியாயப்படுத்தி வந்த குறிப்பிட்ட இணையம் பிரபாகரனின் மரணத்தின் பின்னர் கே.பி தரப்பினரை ஆதரித்து வந்தனர்.

கடந்த காலங்களில் அவ்விணையத்தில் வெளியாகியிருந்த வழுதி என்பவரின் கட்டுரைகளில் பிரபாகரனது கடந்த கால குறைபாடுகள் பல மறைமுகமாக விமர்சிக்கப்பட்டிருந்ததுடன் கே.பி யை புலிகளின் புதிய தலைவராக மக்களுக்குள் திணிப்பற்கான நோக்கம் கொண்டவையாகவும் இருந்தன. குறிப்பிட்ட கட்டுரைகள் வெளியானதை தொடர்ந்து புலிகளின் முன்னணி இணையத்தளங்கள் சில புதினம் வியாபார நோக்கம் கொண்ட ஓர் இணையம் எனவும் அதில் கட்டுரைகைளை எழுதியிருந்த வழுதி புழுதியை கிளப்புகின்றார் எனவும் சாடியிருந்ததுடன் அவ்விணையத்தளத்திற்கு நெடியவன் தரப்பினரால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருந்தாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.

புலிகளின் நாடுகடந்த தமிழீழத்திற்கான பிரச்சாரப்பணிகளுக்கு புதினத்தின் பங்களிப்பை உருத்திரகுமார் கும்பல் பெரிதும் நம்பியிருந்தது. காரணம் பெரும்பாலான புலிகளின் ஊடகங்கள் நெடியவன் தரப்பினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் கடந்த காலங்களில், கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள், இணையத்தளங்கள் யாவும் அரசின் பொய்பிரச்சார ஊடகங்கள் என கூறிவந்த புலிகளின் ஊடகங்கள் இன்று அப் பத்திரிகைகள், இணையங்களின் செய்திகளையே நம்பி இணையத்தளங்களை இயக்கி வருகின்றனர். கொழும்பில் இருந்து இயங்கும் சிங்கள, ஆங்கில இணையங்களின் செய்திகளை மொழிபெயர்த்து செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும் புலிகளின் இணையங்கள் இலங்கையில் இருந்து வெளிவரும் இணையங்கள் தனது சேவையை நிறுத்தும்போது தர்மசங்கடத்திற்குள்ளாவர்.

தே நேரம் மேல் குறிப்பிட்ட செய்திகளை ஒரு கால கட்டத்தில் பொய் எனவும் விசமப் பிரச்சாரம் எனவும் பிரச்சாரம் செய்த புலிகளின் ஊடகங்கள் தற்போது அச்செய்திகளையே மொழிபெயர்த்து தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவதானது இத்தனை காலமும் தாம் தமது இணையங்களினூடாக தமிழ் மக்களுக்கு வழங்கிவந்தது யாவும் பொய்யான தகவல்கள் எனவும் குறிப்பிட்ட இணையங்கள் பத்திரிகைகளில் வெளிவருபவையே நேர்மையான செய்திகள் என்பதை கூறுவதாகவும் கருதப்படுகின்றது.



Read more...

மக்கள் பணத்தில் ஏப்பம்விடும் புலம்பெயர் புலிகள்.-சுதன்-

ஈழவிடுதலை போராட்டம் என்று கூறி இளைஞர், யுவதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள், மதகுருமார், அரசியல் தலைவர்கள், சக விடுதலை அமைப்பு போராளிகள், தலைவர்கள் என தன் இனத்தவர் தனது அமைப்பு உறுப்பினர்கள் என்று கொலை செய்து சிங்கள அரசுக்கு மகிழ்ச்சி ஊட்டிய பிரபாகரனின் சொல்லை கேட்டு எதிரியிடம் மண்டியிடாமல், குண்டுகட்டி உயிரை மாய்த்த மறவர்கள், எதிரிக்கு ரகசியங்கள் தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக சைனைற் அருந்தி தம் உயிரை மாய்த்தனர் திராவிட இளைஞர்கள். ஆனால், அந்த இளைஞர்களின் மரணத்தில் சுகபோகம் அனுபவித்த கேரளத்து மைந்தன் பிரபாகரன், மூன்று இலட்சம் மக்கள் முகவரியை துலைத்துவிட்ட நிலையில் முட்கம்பி வேலிக்குள் அவலப்படுகையில் தான் மட்டும் தனது கைத்துப்பாக்கி, சைனைற் குப்பி, செய்மதி தொலைபேசி அனைத்தையும் சிங்கள ராணுவத்திடம் கையளித்து சரணாகதி அடைந்தது மட்டுமல்லாமல், மண்டியிட்டு ஊயிர்பிச்சை கேட்டு இறுதியில் சிங்கள அரசபடைகளின் கோடாலி கொத்துக்கு இலக்காகி தன்னுயிரை ஈர்ந்தார்.

இது இப்படியிருக்க புலம்பபெயர் புலிகள் இறுதியுத்தம், அவசர நிதிசேகரிப்பு என்று தமிழர் நிலங்கள் மன்னாரில் தொடங்கி படிப்படியாக சிங்கள படைகளிடம் பறிபோய் கொண்டுள்ள நிலையிலும் தமது ஊண்டியல் வசூலிப்பை புலம்பெயர் புலிகள் கைவிடவில்லை. சிங்களபடையின் ஆக்கிரமிப்பை வீரம் செறிந்த புலிகள் வீரவரலாறு படைக்கின்றனர் என்று கூறி தமது ஊடகங்கள் வாயிலாகவும் முட்டாள்களாக்கி தமது இறுதிகட்ட வருவாய் வசூலிப்பை மூர்க்கத்தனமாக மேற்கொண்டனர்.

இந்த ஆண்டு தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் பிரான்ஸின் ஒவ வில்லியஸ் லாக்குறுனோ பகுதி புலிகளின் நிதி பொறுப்பாளர் ஏழாலை ரகுலேஸ் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களிடம் அவசரமாக சேர்த்த நிதியினை கொண்டு “லாக்குறுனோ” பகுதியில் பினாமி பெயரில் ஒர் திருமண மண்டபத்தை வாங்கி தனக்கு முதலீடாக்கியுள்ளார். இது தவிர இவருக்கு இரு வீடுகள் உள்ளன அவற்றில் ஒன்று தற்போது தனது சகோதரரின் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளதுடன் மற்றைய வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு அரசு வழங்கும் வருமானம் குறைந்தவர்களுக்கான வீட்டில் வசித்து வருகின்றார்.

இவை மட்டுமா? இவரால் வசூலிக்கப்பட்ட பணத்தில் 90,000 யுரோ பணம் கந்து வட்டிக்கும் விட்டுள்ளார். இவற்றை அறிந்து கொண்ட நான் உட்பட மேலும் சிலர் இவர் வழங்கிய நிதி பற்றுசீட்டினையும் கொண்டு சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவர்களையும் தனது குண்டர்படையை (அடியாட்கள்) வைத்து மிரட்டி அனுப்பியள்ளார். இதனால் நாம் ஏமாற்றமடைந்துள்ளோம். தமிழீழம் ஒன்று கிடைக்கும் அதனை எமது தேசிய தலைவர் காலத்திலேயே பெற முடியும் என்ற நம்பிக்கையில்தான் நாம் இந்த நிதியினை வழங்கினோம். ஆனால் எம்மிடம் சேகரிக்கப்பட்ட நிதியெதுவும் அங்கு செல்லவில்லை. இங்குள்ளவர்கள் அவற்றை தமது பொக்கற்றுக்குள் போட்டு கொண்டுள்ளனர். ஆதலால்தான் இவர்களால் இவ்வளவு தொகையில் சொத்துக்களை வைத்திருக்க முடிகின்றது.

இன்றுவரை அரசின் தயவில் தங்கிவாழும் இந்த குடும்பத்திற்கு இவ்வளவு சொத்துக்களை வாங்கிகொள்ள எங்கிருந்து பணம் வந்தது. இதனை அம்பலப்படுத்தி இந்த நிதிகள் அனைத்தும் முட்கம்பி வேலிகளுக்குள் வாழும் மக்களுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும் பங்கீட்டு வழங்கவேண்டும் என்றும் இதற்கான அழுத்தத்தை பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தெருவுக்கு இறங்கி போராட்டம் நடாத்த முன்வர வேண்டும் இதற்கு அனைவரும் ஒன்றுதிரளவேண்டும். உங்களில் ஒருவனாக ஏமாந்துபோனவன் என்றவகையில் நானும் உங்களுடன் வீதிக்கு இறங்க தயாராகவுள்ளேன்.

தயவு செய்து இந்த மனகுமுறலை அனைத்து ஊடகங்களும், இணையத்தளங்களும் வெளிக்கொண்டுவர வேண்டும். அப்போதுதான் என்னைபோல் வருங்காலங்களில் மற்றையவர்கள் எமாறாது இருக்க முடியும். அதற்காகவே இந்த மடலை வரைகின்றேன். தயவு செய்து உங்களிடம் மன்றாட்டமாய் கேட்கின்றேன் இதனை அம்பலப்படுத்தி எனது இந்த முயற்சிக்கு உதவுங்கள்.


விடுதலையை கூறி பணம் சேகரித்த கொள்ளையர்களிடம் ஏமாந்துபோன தமிழன்.

Read more...

லங்கா காரியாலயத்தில் சிஐடி யினர்.

லங்கா எனப்படும் சிங்களமொழி பத்திரிகை அலுவலகத்தினுள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சற்று நேரத்திற்கு முன்னர் நுழைந்துள்ளதாக தெரியவருகின்றது. இப்பத்திரிகையின் ஆசிரியர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

திருமனை மாவட்ட த.தே.கூ , ஐ.தே.க முன்னணி செயற்பாட்டாளர்கள் அரசுடன் இணைவு.

திருமலை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் பலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ளனர். பா.உ பசில் ராஜபக்ஷ வுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் இவ்வாறு கட்சி தாவியுள்ளதாக தெரிவியவருகின்றது.

திருமலை மேயரது இல்லத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர், திருமலை மேயர், பிரதேச சபைத் தலைவர், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சில ஐக்கிய தேசியக் கட்சின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இவ்வாறு கட்சி தாவியுள்ளனர்.

Read more...

அகதிகளை மீளக் குடியமர்த்தும் பணி குடாநாட்டில் நவம்பர் மத்தியில் பூர்த்தியாகும். வன்னித் தளபதி

இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்தும் பணி யாழ். குடாநாட்டில் நவம்பர் மாதம் 15 ஆம் திகதியளவில் பூர்த்தியடைந்துவிடும் என அரச தரப்பு அறிவித்துள்ளது. வன்னிமாவட்ட படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்தின இத் தகவலை வெளியிட்டார். இதுவரை 16 ஆயிரம் பேரை மீள்குடிய மர்த்தியுள்ளோம். அவர்களில் 8 ஆயிரம் பேரை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தியுள்ளோம் என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்தின மேலும் கூறினார்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த 282,000 பொதுமக்களில் இதுவரை 55 ஆயிரம் பேர் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் 30 ஆயிரம் பேர் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு தடவையும் 2 ஆயிரம் பேர் வீதம் 40 ஆயிரம் இடம் பெயர்ந்தவர்களை யாழ்.மாவட்டத்தில் மீள் குடியமர்த்த "வடக்கின் வசந்தம்" திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் வவுனியா, யாழ்ப்பாணம். அரச அதிபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்தின மேலும் தெரிவித்தார். அதேபோல் மன்னார் மாவட்டத்தில் 1,200 பேர் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். கிழக்கு மாகாண குடியமர்வு பூர்த்தியாகியுள்ளது. என்றும் அவர் கூறினார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com