Sunday, October 18, 2009

இடம்பெயர்ந்த மக்களுக்காக 700 மில்லியன் ரூபாய்களை ஐசிஆர்சி செலவிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 700 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக அண்மையில் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாடொன்றில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்புக்களுக்கான இணைப்பாளர் Hachim Badji தெரிவித்துள்ளார்.

இப்பணம் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நீர், மலசலகூட தேவைகள், மருத்துவம், சத்துணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், இத்தேவைகளின் நிமிர்த்தம் ஐசிஆர்சியின் 500 ஊழியர்கள் திருமலை, வவுனியா, மன்னார், யாழ்பாணம் போன்ற இடங்களில் 24 மணித்தியாலயமும் செயற்பட்டுவருவதாகும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

இலங்கைக்கு மேலும் ரூ. 500 கோடி வழங்க இந்திய அரசு தீர்மானம்

இலங்கைத் தமிழர்களின் ‘மறுவாழ்வுக் கென மேலும் 500 கோடி ரூபாவை வழங்க இந்திய அரசு தீர்மானித்துள்ளதென மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
இது குறித்த திட்ட அறிக்கை இலங்கை அரசிடமிருந்து கிடைத்ததும் நிதி ஒதுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

அமைச்சர் சிதம்பரம் நேற்றுக் காலை 9.00 மணிக்கு கோபாலபுரம் சென்று முதல் அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இருவரும் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பிறகு ப. சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அண்மை யில் தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை சென்று நிவாரணக் கிராமங்களில் தமிழர்களை சந்தித்து பேசி நிலவரங்களை அறிந்து வந்திருந்தனர்.

ஆய்வறிக்கையும் வழங்கினர். இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல் அமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசித்தேன்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மற்றும் அவர்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்த என்னென்ன அறிவுரை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்தும் பேசினோம்.

முதல் அமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசித்தது குறித்து மத்திய அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும்.எம்.பிக்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு இதுவரை 5 ஆயிரம் தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது தொடக்கம் என்பதால் மெதுவாக உள்ளது போகப் போக அனைவரும் குடியமர்த்தப்படுவார்கள். இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக ஏற்கனவே ரூ. 500 கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது. மீண்டும் ரூ. 500 கோடி வழங்க தயாராக உள்ளது.

இது குறித்து திட்ட அறிக்கை இலங்கை அரசிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை. வந்த பிறகு நிதி ஒதுக்குவோம் என்றார்.

Read more...

வவுனியா வில் கொள்ளையில் ஈடுபட்டவன் இனம்காணப்பட்டான். (முன்னாள் புலி)

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையில் ஈடுபட்டுச் செல்கையில் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டபோது, மக்களின் முற்றிகையை உடைத்து செல்வதற்காக துப்பாக்கிப் பியோகம் செய்து ஒருவரை கொன்று விட்டு தப்பித்துச் சென்ற கொள்ளையன் மக்களினால் இனம் காணப்பட்டுள்ளான்.

மூன்று முறிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த, சுப்புண் எனும் பெயரில் வவுனியா மக்களினால் அறியப்பட்டிருந்த முன்னாள் புலியே இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் ஒரு லட்சம் ரூபா பணத்தையும் 26 பவுண் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்ற முன்னாள் புலியின் துப்பாக்கி பிரயோகத்தில் 36 வயதுடைய இராமமூர்த்தி புலேந்திரன் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 வயதுடைய திருநாவுக்கரசு கிருபாகரனது கால் அகற்றப்பட்டுள்ளது.

Read more...

இடைத்தங்கல் முகாம் வாழ்கை இந்தியர்களுக்கு வியப்புத்தரக் கூடயது அல்ல. மனோ கணேசன்.

இந்தியாவில் இருந்து இலங்கை வந்திருந்த பாராளுமன்றக் குழுவினர் இலங்கையில் உள்ள இடைத்தங்கல் முகாம் மக்களை பார்வையிட்ட பின்னர் எவ்வாறான மன நிலையில் திரும்பியுள்ளார்கள் என ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசனிடம் கேட்டபோது, இங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரத்தானியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல, அவர்கள் இந்தியாவில் இருந்தே வந்திருந்தார்கள், ஆசியாவிலே இந்தியாவின் வாழ்கைத் தரம் எவ்வாறானது என்பது உங்களுக்கு தெரியும் எனவே இடைத்தங்கல் முகாம் மக்களின் வாழ்கை நிலை அவர்களுக்கு பெரிய விடயமாக தென்பட்டிருக்கும் என நான் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Read more...

அனுமதியின்றி பறந்த அமெரிக்க விமானம் . . ,

205 கடற்படை வீரர்களுடன் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி அதிகாரிகள் விசாரணை
இந்திய வான் எல்லையில் அத்துமீறியும், கட்டுப்பாட்டு அறைக்கு உரிய சிக்னல் கோடு வழங்காமலும் பறந்து சென்ற அமெரிக்க விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு பின்னர் கிளம்பி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.அமெரிக்காவை சேர்ந்த விமானம் 767, இந்திய எல்லைக்குள் இன்று காலையில் பறந்து வந்துள்ளது.

இந்நேரத்தில் இதனை கண்டறிந்த மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு துறையினர் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் இந்த விமானத்தை ஓட்டி வந்த பைலட் சரியான கோடு வாடு உபயோகிக்கவில்லை. அதாவது பயணிகள் விமானத்திற்கும், ராணுவ படை விமானத்திற்கும் தனித்தனியான சங்கேத வார்த்தைகள் உண்டு . இது சரியானதாக இல்லை என்பதை உணர்ந்த அதிகாரிகள் விமான பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அமெரிக்க விமானத்தை தரையிறக்க உத்தரவிட்டனர். இதன்படி விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி விமானநிலையத்தில் இறக்கப்பட்டது.

விடுமுறையை கழிக்க தாய்லாந்து பயணம் : இந்திய விமானப்படை அதிகாரிகள் விமானத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். விமானத்தில் 205 அமெரிக்க கடற்படை வீரர்கள் இருந்துள்ளனர். புஜாரா ( ஐக்கிய அரபு எமிரேட் ) பகுதியில் இருந்து பாங்காங் செல்வதாக கூறினர். இருப்பினும் இந்திய எல்லைக்குள் வரும் போது கட்டுப்பாட்டு அறைக்கு உரிய தகவல் கொடுக்காததால் விசாரணை நடத்தப்பட்டது.

விமான நிலையத்தில் இந்திய மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் விடுமுறை நாளை கழிப்பதற்காக பாங்காங் (தாய்லாந்து ) செல்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து விமான படை துறையினர் முழுமையாக விசாரித்து பின்னர் விடுவித்தனர். 6 மணி நேர விசாரணைக்‌கு பின்னர் விமானம் மதியம் 2.30 மணியளவில் தாய்லாந்து நோக்கி புறப்பட்டு சென்றது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஜூன் மாதம் இதேபோல் ஒரு அமெரிக்க விமானம் ஆயுதங்களுடன் எல்லைக்குள் பறந்து சென்றது. இது தரையிறக்கப்பட்டு விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

76 இளைஞர்களுடன் புலிகளின் கப்பல் கனடிய கடற்பரப்பில். (வீடியோ உள்ளே)

வன்கூவர் தீவுக்கு மேலே கனடியக் கடற்பரப்பில் கனடிய கடற்படை மற்றும் பொலிஸாரினால் படகொன்று 76 இளைஞர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. தகவல் ஒன்றின் அடிப்படையில் செயற்பட்ட கடல்கடத்தல் தொடர்பான விசேட பயிற்சி பெற்ற படையினர் இக்கப்பலினை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து அதில் இருந்தவர்களை விசேட தடுப்பு முகாமில் வைத்துள்ளதாக கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் வான் லொன் தெரிவித்துள்ளார்.

ஓசியன் லேடி எனும் பெயரிடப்பட்டு கனடிய கடற்பரப்பை அடைந்துள்ள இக்கப்பலிலுள்ள அனைவரும் சிறந்த உடல்நலத்துடன் காணப்படுவதாகவும், குறிப்பிட்ட கப்பல் எங்கிருந்து புறப்பட்டுள்ளது என்பது தொடர்பான தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தோல்வியை தழுவியுள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்பு சர்வதேச ஆட்கடத்தலில் ஈடுபட்டுவருவகின்றமை தெளிவாகின்றது. புலிகளியக்கத்திற்காக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருந்த புலிகளின் கப்பல் கம்பனிகளின் செயற்பாட்டாளர்களே இவ் ஆட்கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். குறிப்பிட்ட கப்பல் கம்பனிகளின் பெயரில் பொருத்தமான கப்பல்களை கொள்வனவு செய்யும் இவர்கள் அவற்றின் மூலம் சர்வதேச மட்டத்தில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றமை மிகவிரைவில் ஆதாரங்களுடன் நிருபனமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்குறிப்பிட்ட கப்பலினை புலிகளின் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்த இந்தோனிசியாவில் இருந்து செயற்பட்டுவரும் பிரித்தானியா பிரஜையும் புலி உறுப்பினருமான சங்கர், தாய்லாந்தில் இருந்து செயற்படும் கனடிய பிரஜாவுரிமை கொண்டுள்ள கட்ட ரவி, மணி, சீலன், சதீஸ், கருப்பை அல்லது கடாபி, ஆகியோரே ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சர்தேச மட்டத்தில் பல குற்றச் செயல்களுக்காக தேடப்படுபவர்கள் என்பதுடன் கடாபி என்பவர் இந்தியாவூடாக புலிகளுக்கு பல தொழில்நுட்பங்களை சட்டவிரோதமாக அனுப்ப முனைந்த குற்றத்திற்காக கியூ பிரிவு பொலிஸாரினால் தேடப்படுபவருமாவர்.

இந்தோனேசியாவில் இருந்து 42 நாட்களுக்கு முன்னர் புறப்பட்டுள்ள கப்பலில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதுடன் இக்கப்பலில் ஓட்டிகளாக செயற்படுவோர் புலிகளின் கப்பல் கம்பனிகளின் கப்படன்களும், முன்னாள் கடற்புலிகளும் என நம்பப்படுகின்றது.

இக்கப்பலில் வெளிநாடுகளுக்கு கொண்டுவரப்படுபவர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என புலம் பெயர் தேசத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு கூறப்பட்டாலும் இது முற்றிலும் வியாபார நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடு என்பது, கப்பலில் பயணம் செய்துள்ளவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் தகவல்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படுகின்றது.

இக்கப்பல்களில் ஏற்றப்படுபவர்களின் உறவினர்களிடம் இருந்து கணிசமான அளவு முற்பணம் வாங்கப்பட்டுள்ளதுடன் பல உடன்படிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் புலிகளின் சர்வதேச மட்டத்திலான இச்செயற்பாடு நிச்சயம் தமிழ் மக்களுக்கு பாரிய சிக்கல் ஒன்றை ஏற்படுத்தும் என பலரும் அஞ்சுகின்றனர்.

வீடியோவிற்கு அழுத்துங்கள்

Read more...

பசில் திடீர் மனமாற்றம். எம்பி பதவியை இராஜினாமா செய்யவில்லை.

ஜனாதிபதி செயலாளரான பசில் ராஜபக்ச அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவதாக கொண்டிருந்த முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அப்பதிவியில் தொடர்ந்தும் நீடிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கான பொது அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பசில் அவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது தான் எதிர்கொள்ளக் கூடிய வேலைப்பளுவை கருத்தில் கொண்டு இராஜினாமா செய்ய முடிவ செய்திருந்தார். ஆனால் அம்முடிவு உசிதமானது அல்ல என்பதை அவரது நண்பர்கள், அரசியல் அவதானிகள் எடுத்துக் கூறியதை அடுத்து முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றது.

Read more...

Saturday, October 17, 2009

லங்கா பத்திரிகையின் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு விடுதலை.

லங்கா எனப்படும் சிங்கள மொழிப் பத்திரிகையின் ஆசிரியர் சந்தண சிறிமால்வத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நண்பகல் கைசெய்யப்பட்ட அவர் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டார்.

இவரிடம் கடந்த 16ம் திகதி பத்திரிகையில் முன்பக்கச் செய்தியாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கும் இடையே உருவாகிவரும் முரண்பாடு தொடர்பாக எழுதப்பட்டிருந்த விடயம் சம்பந்தமாக வினவப்பட்டுள்ளது.

Read more...

அகதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர். பலர் உயிரிழப்பு.

அவுஸ்திரேலியாவிற்கு அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் படகொன்றில் சென்று கொண்டிருக்கையில் இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டபோது உண்ணாவிரம் இருந்த இலங்கை அகதிகள் என தம்மை கூறுவோர் 56 மணித்தியாலயங்களின் பின்னர் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

அவர்களில் பலர் உயிர் இழந்துள்ளதாக Sydney Morning Herald எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. அங்கு சென்ற மக்கள் சார்பான பேச்சாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள அலெக்ஸ் என்பவர், கடத்தல்காரர்கள் 30 குடும்பங்களிடமிருந்து 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயணச் செலவாக பெற்றுள்ளதாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார். பிறந்த குழந்தை ஒன்றுக்கு கூட 15000 அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

4 மில்லியின் அமெரிக்க டொலர்களை வழங்கக் கூடிய 30 குடும்பங்கள் வன்னியில் இருந்தாக என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.



Read more...

அம்பலத்திற்கு வருகின்றது புலிகளின் ஆட்கடத்தல் வியாபாரம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த கப்பல் கம்பனிக்காறர்கள் வலையில் சிக்கும் அபாயம்.
கடந்த 11ம் திகதி அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் சிறியரக சரக்குக் கப்பல் ஒன்று 253 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது. இந்தோனேசியக் கடற்பரப்பில் கப்பலில் ஏற்பட்ட கோளாறுகாரணமாக கப்பல் நகர்வது தாமதமானபோது இந்தோனேசிய கடற்படையினரால் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது.

கப்பலில் இருந்தவர்கள் „நாம் இலங்கைப் பொதுமக்கள்" என்ற சுலோகத்தை பெயின்றினால் மரப்பலகை ஒன்றில் எழுதி வந்திருந்தனர். அவர்களை சுற்றி வழைத்த இந்தோனிய கடற்படையினர் அவர்களுக்கு மனிதாபிபான ரீதியில் இந்தோனேசியாவில் தங்குவதற்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கி அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயரித்தானிகராலயத்திடம் பாரமளிக்க முன்வந்திருந்தனர். ஆனால் மக்கள் இந்தோனேசிய அதிகாரிகளின் முன்மொழிவை நிராகரித்திருந்தோடு தம்மை அவுஸ்திரேலியா, நியுசிலாந்து அல்லது கனடா பாரமெடுக்கவேண்டும் எனவும் அன்றேல் தாம் கப்பலிலேயே சாகும்வரை உண்ணாவிரம் இருக்கப்போவதாவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அவுஸ்திரேலிய பிரதர் இவ்விடயம், இந்தோனேசிய கடல் எல்லைக்குட்பட்டவிடயம், இதற்கான முடிவை அந்நாட்டு அரசாங்கம் எடுத்துக்கொள்ளட்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், குறிப்பிட்ட ஆட்டகடத்தல் வலையமைப்பை கண்டுபிடிக்கும் நோக்கில் கடத்தல் முகவர்கள் தொடர்பாக கப்பலில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் வினவியபோது, கடத்தல் காரர்கள் சர்வதேசவலை அமைப்பை கொண்டுள்ள அதிபயங்கர கும்பல் எனவும் அவர்களது பெயர்களை வெளிவிட்டால் தமது புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்கும் இலங்கையில் உள்ள குடும்பத்தவர்களுக்கும் உயிராபத்து ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் குறிப்பிட்ட ஆட்கடத்தல் வியாபாரம் புலிகளின் சர்வதேச கப்பல் வியாபாரக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடிக்கண்காணிப்பில் இயங்கிய கப்பல் கம்பனிகளின் நிர்வாகிகளான பிரித்தானிய பிரஜாவுரிமையை கொண்டுள்ள சங்கர், நோர்வே பிரஜாவுரிமையை கொண்டுள்ள ஸ்டீபன் ராஜா, ஆகியோருடன் ஜேர்மன் பாபு, பிரித்தானியாவில் வசிக்கும் புலிகளின் உறுப்பினரான மோகன், மலேசியாவில் வசிக்கும் கண்ணன் , டானியல் ரொனால்ட் அல்லது சுகு, இந்தோனிசியாவில் வசிக்கும் மதி ஆகியோர் இப்பாரிய மோசடியில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

இவர்களில் ரொனால்ட் அல்லது சுகு என அழைக்கப்படுபவர் மலேசியாவில் புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர் என்பதுடன் புலிகளின் சர்வதேச நிதியை கையாள்பவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இவர் புலிகளின் பணத்தில் மலேசியாவில் ஆடம்பர மாளிகை மற்றும் வாகனங்களை வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இவர் சோதியுடன் என்பவருடன் இணைந்து வன்னி இடைத்தங்கல் முகாம்களில் உள்ள புலி உறுப்பினர்களை வெளியே கொண்டுவந்து அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கு கப்பல் வாங்கவேண்டும் என கனடா வாழ் மக்களிடம் 3 லட்சம் டொலர்களை சேகரித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு வன்னி முகாம்களில் சிக்கியுள்ளதான புலி உறுப்பினர்களை மீட்கவென சேகரித்த 3லட்சம் கனடிய டொலர்களில் 35000 அமெரிக்க டொலர்களுக்கு பாவனைக்கு உதவாத கப்பலொன்றை வாங்கி அக்கப்பலில் 30 புலி உறுப்பினர்களும் 223 பொதுமக்களும் ஏற்றப்பட்டுள்ளனர். இதில் 223 பொதுமக்களிடமும் தலா 15000 அமெரிக்க டொலர்கள் பேரம் பேசப்பட்டுள்ளதுடன் சிலரிடம் முழுப்பணமும், சிலரிடம் பகுதிப்பணமும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்றப்பட்டுள்ள 30 புலி உறுப்பினர்களின் உறவினர்களிடமும் குறிப்பிடத்தக்க பணம் பெறப்பட்டுள்ளமை உறிதியாக தெரியவருகின்றது.

மக்களின் பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல் முற்றிலும் வியாபரநோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இச்செயலானது இலங்கையில் இருந்து அகதி அந்தஸ்து கோரும் நியாயமான அச்சுறுத்தல்கள் உள்ளோரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் குறிப்பிட்ட கப்பலில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தம்மை இலங்கைத் தமிழர்கள் எனவும் வன்னியில் இருந்து பல இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்களில் எவரும் தமது வாழ்நாழில் வன்னியை கண்டிருப்பார்கள் என்பது சந்தேகம். அங்குள்ள குழந்தைகள் நிச்சயமாக சிறந்த ஆங்கில மொழிமூல பாடசாலைகளில் கல்வி கற்றிருக்கவேண்டும் என்பது அவர்களது ஆங்கில உச்சரிப்பில் விளங்கின்றது. பார்வைக்கு மிகவும் செல்வந்தர்களாக விளங்கும் குறிப்பிட்ட குழுவினரிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு உலகில் இடம்பெறும் இவ்வியாபாரம் உண்மையான பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் நிவாரணத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை இவர்கள் எள்ளளவும் சிந்திக்கப்போவததில்லை.

ரொனாலட் சோதி போன்றோர் மலோசியாவில் பயங்கரவாத பாதளாகுழுக்கள் போன்று செயற்படுவதாகவும் மலோசியாவிக்கு செல்லுகின்ற தமிழ் செல்வந்தர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கடத்தியும் மிரட்டியும் பணம் பெறும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவருகிறது. அண்மையில் மலேசியா சென்றிருந்த தமிழ் வர்த்தகர் ஒருவரின் மகனை கடத்தி பெருந்தொகைப் பணத்தினை (?? லட்சம் டொலர்களை) பெற்றுவிட்டு அவரை விடுவித்த சம்பவமும் குறிப்பிடதக்கது.

எது எவ்வாறாயினும் சர்வதேச மட்டத்திற்கு வந்துள்ள குறிப்பிட்ட கப்பல் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் குறிப்பிட்ட கப்பலில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் இக்கும்பலின் துரோகங்களை உணர்ந்திருப்பர். அவர்கள் அங்கு இடம்பெறும் விசாரணைகளின் போது நிச்சயமாக தாராளமான தரவுகளை வழங்குவர். அப்போது இக்கும்பல் கைதுசெய்யப்படும் என்பதுடன் புலிகளின் புலம்பெயர் தேசத்தில் எஞ்சியுள்ள பலமும் தகரும் எனவும் பல கோடி சொத்துக்கள் முடக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் கப்பலில் உள்ள மக்கள் உண்ணாவிரம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் பரமேஸ்வரனின் பர்க்கர் விவகாரத்துடன் தமிழ் மக்களின் அகிம்சை போராட்டத்திற்கு உலகமட்டத்தில் இருந்த கிராக்கி இறங்கியுள்ளதென்பதை அம்மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.









Read more...

வவுனியாவில் துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றவர் முன்னாள் புலி (சுப்புண்).

கடந்த இரவு வவுனியா சாமரக்குளம் பிரதேசத்தில் கொள்ளையடிப்பதற்காகச் சென்று மக்களால் சுற்றி வளைக்கப்பட்டபோது ஒருவரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்ற நபர் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மூன்று முறிப்பு. பிரதேசத்தை சேர்ந்த இவர் சுப்புண் எனும் பெயரில் வவுனியா மக்களினால் அறியப்பட்டிருந்தார். இவர் கடந்த காலங்களில் வவுனியாவில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமையை மக்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

Read more...

மருந்துப் பொருட்களை ஈரானிலிருந்து கொண்டுவர ஒப்பந்தம்.

ஈரானில் இருந்து இலங்கைக்கு மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்று கைச்சாத்தாகியுள்ளது. இதற்கான ஒப்ந்தம் அலறிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்றது, ஒப்பந்தத்தில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முட்டாசி அவர்களும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் றோகித்த போகல்லாகம அவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.

இவ் ஒப்பந்தமரனது இருநாடுகளுக்கிடையான புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகின்றது.

Read more...

வெடிபொருட்களும் உலர் உணவுப் பொருட்களும் மீட்பு

வவுனியா பொலிஸார் மகாவில்லுப் பிரதேசத்தில் வெடிபொருட்களையும் உலர் உணவுப் பொருட்களையும் மீட்டுள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இத்தேடுதலின்போது, 5, 3 கிலோகிராம் எடைகொண்ட கிளேமோர் குண்டுகள் இரண்டும், 17 கிலோகிராம் சீ4 வெடிமருக்துக்களும், 1440 ரி56 ரக துப்பாக்கிகளுக்கான ரவைகளும், 98 டெற்னேற்றர்களுடன் மேலும் சில இராணுவ உபகரணங்களும் உலர் உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

இராணுவச் சீருடடையணிந்த கொள்ளையனின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி.

வவுனியா சாமரக்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு 9 மணியளவில் இராணுவச் சீருடையை ஒத்த உடை ஒன்றில் சென்ற கொள்ளையன் ஒருவன் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறிப்பிட்ட கொள்ளைக்காரன் வீடொன்றினுள் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டு அடுத்த வீட்டிற்கு சென்றபோது பிரதேச மக்கள் அவனை சுற்றி வழைத்து பிடிக்க முற்பட்டபோது அவன் துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு ஓடித்தப்பியுள்ளான்.

குறிப்பிட்ட கொள்ளைக் காரனை இனம் காண்பதற்கு வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

Read more...

Friday, October 16, 2009

கிண்ணியா பாலம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

72 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கிண்ணியா பாலம் எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வினால் திறந்து வைக்கப்படவுள்ளது. 396 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்ட இப்பாலத்தினை அமைப்பதற்கு சவுதி அரேபியா அரசாங்கம் நிதி உதவி வழங்கியிருந்தது.

கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேங்களுக்குச் செல்வதற்காக வள்ளங்களைப் பாவித்த மக்கள் எதிர்காலத்தில் இப்பாலத்தினுடாக சுயமாக சென்றுவரமுடியும். குறிப்பிட்ட பிரதேச மக்களின் பல நாள் கனவு நனவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதே நேரம் ஓட்டமாவடி பாலத்தின் வேலைத்திட்டங்கள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி திணைகளத்தினால் அது மிகவிரைவில் மக்கள் பாவனைக்கு விடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com