Friday, October 16, 2009

மகின்த சகோதரயாவுக்கு ( பாகம் – 2 ) - யஹியா வாஸித் –

ஐரோப்பாவில் பெல்ஜியம் என்ற ஒரு குட்டி நாடு இருக்கின்றது. பிறஸ்ஸல்ஸ் இதன் தலைநகரம். இந்த நாடு சில வருடங்களுக்கு முன் பொருளாதார மந்த நிலை காரணமாக ஒரு குட்டி திட்டம் தீட்டியது. ஆம். வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், உலகில் ஆங்காங்கே பரவியுள்ள பெல்ஜியம் நாட்டவர்களையும் அழைத்து நமது நாட்டில் முதலிடச் செய்வோமே என கங்கணம் கட்டினார்கள். சரி எவ்வாறு இவர்களை தொடர்பு கொள்வது. எவ்வாறு இவர்களை அழைப்பது. உடனே தங்கள் நாட்டிலுள்ள புத்திஜீவிகளையும், வியாபார ஆர்வலர்களையும் அழைத்தார்கள். பேசினார்கள். திட்டங்கள் ஏதும் இருந்தால் தாருங்களேன் என்றார்கள். ஈஸி வே. வெரி, வெரி ஈஸி வே அங்கு சொல்லப்பட்டது.

ஆம். உலகெங்கும் நமக்கு எத்தனை தூதுவராலயங்கள் இருக்கின்றது. அந்த தூதுவராலயங்களில் கொமர்ஷியல் டிவிஷன் இருக்கிறதா. ஆம் இருக்கின்றது. சரி அந்த கொமர்ஷியல் டிவிஷனை கொஞ்சம் முடுக்கி விட வேண்டியதுதானே. அது எப்படி கொமர்ஷியல் டிவிஷனை முடுக்கி விடுவது, என்ற மறு கேள்வி கேட்காமல் கொமர்ஷியல் டிவிஷன்களை முடுக்கி விட்டார்கள்.

பிளான்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட். பெல்ஜியத்தின், கடற்கரை அருகில் அமைந்த ஒரு பகுதியில் யாரும் எவரும், இன்வெஸ்ட் பண்ணலாம். 18300 யுரோ உங்களிடம் இருக்கின்றதா. வாருங்கள் வந்து முதலிடுங்கள் என கதவுகளை திறந்தார்கள். ஒரே நாளில் வங்கிகணக்கு, முதலீட்டுபத்திரங்கள், கம்பனி ரெஜிஸ்ரேஷன் என செய்து கொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஐந்து லட்சம் முதலீட்டாளர்கள் படையெடுத்தார்கள். பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மில்லியன், பில்லியன் யூரோ என முதலிட்டாளர்கள். சிக்கன் சொப், ரெஸ்ட்ரூரண்ட் தொடக்கம் கப்பல் கட்டும் கம்பனி, பாரிய ஜெனரேட்டர் கம்பனி என பல ஆயிரம் கம்பனிகள் தொடங்கப்பட்டன. இன்று பெல்ஜியம் சீனா, இந்தியாவுக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் கொடிகட்டிக் கொண்டிருக்கின்றது.

கொமர்ஷியல் டிவிஷன் ஊடாக என்ன மந்திரம், மாயவித்தை செய்தார்கள்.

ஒவ்வொரு நாட்டிலுமுள்ள பெல்ஜியம் எம்பஸிக்கு வரும் வாடிக்கையாளர்களின் ( விஸா, கடவுச் சீட்டு, வர்த்தகம், அரசியல், பொருளாதார கருத்தரங்குகளுக்கு வருபவர்கள் ) விலாசம், டெலிபோன், ஈமெயில் அட்ரஸ்களை தொகுத்து, தினமும், அல்லது வாரத்துக்கொரு முறை பிளான்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் சம்பந்தமான தகவல்களை அனுப்பினார்கள்.

கொமர்ஷியல் டிவிஷனூடாக அவ்வவ் நாடுகளிலுள்ள பத்திரிகைகளில் சிறு, சிறு விளம்பரங்கள் செய்தார்கள். அத்துடன் சிறு, சிறு கருத்தரங்குகள் வைத்தார்கள்.
தங்கள் நாட்டிலுள்ள உற்பத்தியாளர்களை இனம்கண்டு, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தங்களது கொமர்ஷியல் டிவிஷன் ஊடாக கண்காட்சிகள் நடாத்தி, தங்களது நாட்டில் இப்பொருட்களின் உற்பத்தி செலவு மிகமிக குறைவு என நிரூபித்தார்கள்.

அந்தந்த நாட்டிலுள்ள தங்கள் நாட்டவர்களை அழைத்து, நீங்கள் வேலைசெய்யும் நிறுவனங்கள் எதுவாயினும், தலைமையதிகாரியை தொடர்பு கொண்டு எங்கள் நாட்டில், இப்பொருளை உற்பத்தி செய்வது இலகு, அப்பொருளுக்கு வரிவிலக்கு இருக்கின்றது, அழகான ஈஸீயான கப்பல் துறையிருக்கின்றது என்பதை புரிய வையுங்கள். அப்படி அவர்கள் முதலிட்டால் உங்களுக்கு சன்மானங்கள் வழங்கப்படும் என ஒரு ஆலோசனையை வழங்கினார்கள்.

ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தூதுவராலயங்களில், பிளான்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் என ஒரு பிரிவை அமைத்து, அந்த நாட்டிலுள்ள முதலீட்டாளர்களை கவர வழிஅமைத்தார்கள். ( சிறிலங்காவில் கொழும்பு ஹைலெவல் ரோட்டில் இதற்கென அலுவலகம் திறந்துள்ளார்கள் )

பிளான்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட்டுக்கென ஒரு அலுவலகத்தை பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் திறந்து துடிப்பான நாட்டுப்பற்றுள்ள இளைஞர்களை வேலைக்கமர்த்தினார்கள்.

அத்துடன் சைனாவைச் சேர்ந்த பல இளைஞர்களை வேலைக்கமர்த்தி சைனாவிலிருந்தே முதலீட்டாளர்களை பெல்ஜியத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

சிறிலங்கா பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது, நமது நாட்டின் அபிவிருத்தியை 2011 ஆகும் போது 5வீதத்தால் உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான், சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியதாக, அந்நிதியத்தின் சிறிலங்கா விவகார தலைவர் பிரயன் எயிட்கென் கூறியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் கடந்த வருடம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாகவும், 50க்கு அதிகமான ஆடைஉற்பத்தி, கட்டுமானத்துறை, வெப்ப ஆடை, சீமெந்து உற்பத்தி, இரத்தினக் கல் ஏற்றுமதி, நிதி முகாமைத்துவ நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன.

இவற்றையெல்லாம் நோக்கும் போது யுத்தத்தில் செலுத்திய கவனத்தினால் பொருதாரத்தில் கவனம் செலுத்தவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது. இராணுவம்தான் அந்த வேலையை பார்த்துக் கொண்டதே. அப்படியானால் பொருளியல் நிபுணர்கள் என்ன செய்தார்கள். அவர்களுக்கு அதற்குரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அல்லது கஜானா காலி.

இனியாவது ஒரு விதி செய்வோம். உலகம் முழுதும் கிட்டத்தட்ட 53 தூதுவராலயங்கள் சிறிலங்காவுக்காக இயங்குகின்றன. அவைகளில் உள்ள கொமர்ஷியல் டிவிஷன் ஊழியர்களை யுத்த முஸ்தீபுகளுடன் இயக்க வேண்டும். எமது கொமர்ஷியல் டிவிஷன் அதிகாரிகள் ரொம்ப வீரியமானவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் முழுக்க முழுக்க இயங்குவதற்குரிய பண பலம் போதாது என்பதை பல நாட்டிலுமுள்ள கொமர்ஷியல் டிவிஷன்களையும் பார்க்கும் போது புரிகின்றது. அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். யுத்தகாலத்தில் இராணுவத்துக்கு எவ்வாறு சுதந்திரம் வழங்கப்பட்டதோ அதைவிட ஒரு படி மேலே போய் அவர்களுக்கு உதவிகளும், ஆலோசனைகளும், ஆலோசகர்களும் வழங்கப்பட வேண்டும்.

இன்று புலம் பெயர் நாடுகளில் உள்ள எம்மவர் டுபாய், கட்டார், பஹ்ரெய்ன் என அரபு நாடுகளிலும், நைஜீரியா, தன்சானியா, மடகாஸ்கார் போன்ற ஆபிரிக்க நாடுகளிலும் போய் முதலிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏன். அவர்களால் நமது நாட்டில் முதலிட முடியாதா. விளம்பரம் போதாது. அதற்கு முதல் வேலையாக அரசு ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தனது கொமர்ஷியல் டிவிஷன்களுக்கு கொஞ்சம் பணத்தை அள்ளி வீசி முதலில் நம்மவர்களை கவர்வதுதான் ஒரே வழி.

அரபுநாடுகளில் உள்ள நம்மவர்களுக்கும், அங்குள்ள கொமர்ஷியல் டிவிஷன்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கின்றது. ஆனால் இந்திய தூதுவராலயமோ, கொமர்ஷியல் டிவிஷன் ஊடாக அரபிக்களை தட்டி எழுப்பி பெங்களூர் ஐரி பார்க்கிலும், கல்கத்தா இன்டஸ்ரியல் எஸ்டேட்டுகளிலும் முதலிட வைத்துள்ளார்கள். ஏன் இது எம்மால் முடியாதா. முடியும். ஆனால் நாட்டின் இன்றைய தளபதியான நீங்கள் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

தடம் பார்த்து நடப்பவன் மனிதனல்ல.

தடம் பதித்து நடப்பவன்தான் மனிதன்.


( தொடருவேன்....)


17-10-2009





Read more...

படையினருக்கு இடர்காலக்கடன் கொடுப்பனவாக ரூ. 700 மில்லியன்

படையினர் கோரியிருந்த இடர்காலக் கடன்களுக்கென 700 மில்லியன் ரூபாவை உடனடியாக இலங்கை இராணுவத்துக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.படையினர் கோரியிருந்த இடர்காலக் கடன்களுக்கென 700 மில்லியன் ரூபாவை உடனடியாக இலங்கை இராணுவத்துக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது என பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வன்னி பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டபோது அங்குள்ள படைவீரர்கள், தாம் கோரியிருந்த இடர்கால கடன் (10 மாத கொடுப்பனவு) இதுவரை கிடைக்க வில்லை என இராணுவத் தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சுமார் 900 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் இராணுவ தலைமையகத்துக்கு கிடைத்திருந்தபோதும் நிதி பற்றாக்குறை காரணமாக உடனடியாக இக் கடனை வழங்க முடியாமல் போனது. இவ்விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி ஜனாதிபதியுடனும், பாதுகாப்பு செயலாளருடனும் பேச்சு நடத்தியதன் பயனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 700 மில்லியன் ரூப வை உடனடியாக வழங்குமாறு திறைசேரிக்கு பணிப்புரை வழங்கினார். தற்போது திறைசேரி 700 மில்லியன் ரூபாவை இராணுவத்துக்கு வழங்கியுள்ளதுடன் இடர்காலக் கடன்கள் தற்போது வழங்கப்பட்டும் வருகிறது என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

Read more...

தீபாவளி வாழ்த்துக்கள்

Read more...

ஏ9 பாதையூடாக தபால் சேவை ஆரம்பம்.

கடந்த 3 வருடங்களின் பின்பு ஏ9 வீதியூடாக யாழ் தபால் சேவை ஆரம்பித்துள்ளது. நேற்று வவுனியாவில் இருந்து 56 தபால் பைகள் யாழ்பாணத்திற்கும், யாழ்பாணத்தில் இருந்து 42 தபால் பைகள் வவுனியாவிற்கும் கொண்டு செல்லப்பட்டதாக வடக்கிற்கான உப தபால் அத்தியட்சகர் வீ. குமாரகுரு தெரிவித்துள்ளார்.

Read more...

ஜனாதிபதி தேர்தலுக்காக பசில் ராஜபக்க்ஷ இராஜினாமா செய்கின்றார்.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் திரு. பசில் ராஜபக்ச தனது நியமன எம்பி பதவியை ராஜினிமா செய்யவுள்ளமை உறிதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திரு. பசில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதற்காக தான் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான உத்தியோக பூர்வ அறிவிப்பை எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்ற அமர்வின் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read more...

8 பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 1,220 பேர் வவுனியாவிலிருந்து வந்தனர்

நேற்றிரவு ஊரடங்கு தளர்த்தப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வவுனியா அகதிமுகாம்களில் இருந்து குடாநாட்டின் எட்டுப் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 1,220 பேர் நேற்று இங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் உடனடியாகவே நேற்றிரவு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

அகதிகள் உறவினர்களுடன் வீடுகளுக்கு செல்வதற்கு வசதியாக நேற்றிரவு ஊரடங்கு தளர்த்தப் பட்டிருந்தது. வவுனியாவிலிருந்து இதுவரை முறைக்கு முறை அழைத்து வரப்பட்டவர்களில் எண்ணிக்கைகளை விட நேற்றைய எண்ணிக்கை மிக அதிகமாகும்.கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 14 ஆம் திகதி வரை மொத்தம் 10,886 பேர் வவுனியா முகாமிலிருந்து இங்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். அப்போதெல்லாம் சராசரி ஆகக்கூடியது 600 தொடக்கம் 500 பேர்களே அழைத்துவரப்படுவது வழமையாக இருந்தது.வவுனியா நலன்புரி நிலையங்களி லிருந்து 408 குடும்பங்களைச் சேர்ந்த 1220 பேர் நேற்று அழைத்துவரப்பட்டனர். அவர்கள் யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.வவுனியாவில் இருந்து 20 பஸ்களில் அழைத்து வரப்பட்ட இவர்கள் துரையப்பா விளையாட்டரங்கில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம், கோப்பாய், நல்லூர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், சங்கானை, கரவெட்டி, தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்தவகளே நேற்று அழைத்தவரப்பட்டனர்.

அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்ல வசதியாக நேற்றிரவு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்ததாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.தனித்தனியாக பிரதேச செயலக ரீதியாக துரையப்பா விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த அலுவலகங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் மக்கள் ஒப்படைக்கப்பட்டனர்.நேற்றிரவு இரவு 7மணிமுதல் பதிவு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இடம்பெயர்ந்த மக்களை வரவேற்று அரச அதிபர் கே.கணேஷ் உரையாற்றுகையில் இங்கு வந்துசேர்ந்த சகலருக்கும் ஆறுமாத காலத்துக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கப்படும். உலர் உணவு அல்லாத பொருள்களை அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் வழங்கவிருக்கிறது.அத்துடன் மீளக்குடியமரும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 25.000 ரூபா வழங்கப்படும் அதில் 5000 ரூபா பணமாக வழங் கப்படுவதுடன் 20,000 ரூபா அவர்களது பெயரில் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படும்.மேலும் இருப்பிடமில்லாதவர்களுக்கு தற்காலிக குடியிருப்புக்களை அமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அரசஅதிபர்.

Read more...

இதோனேசியக் கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கை அகதிகள் உண்ணாவிரம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் அவுஸ்திரேலியா நோக்கி சரக்கு கப்பல் ஒன்றில் சென்று கொண்டிருந்த 253 இலங்கையர்கள் இந்தோனேசிய கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். 195 ஆண்கள், 31 பெண்கள், 27 குழந்தைகள் அடங்கிய இக்குழுவினர் "நாம் இலங்கைப் பொது மக்கள், எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்" என்ற வசனத்தை மரப்பலகை ஒன்றில் பெயின்றினால் எழுதி தாங்கி வந்துள்ளனர்.

முதன் முறையாக இந்தோனேசியக் கடற்பரப்பில் இவ்வாறானதொரு இலங்கை அகதிகள் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் உள்ளவர்கள் கப்பலில் இருந்து இறங்க மறுத்திருந்ததுடன், அவுஸ்திரேலியா அல்லது ஏதாவது ஒரு நாடு தம்மை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதத்தில் இறங்கப்போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், அதிகாரிகள் கப்பலை நெருங்கினால் தாம் கப்பலை வெடிக்கவைத்து சிதறடிக்கப்போவதாக தெரிவித்திருந்ததை, கப்பலில் உள்ளவர்கள் சார்பாக பேசிய ஒருவர் மறுத்துள்ளார். தம்மிடம் எவ்விதமான வெடிமருந்துகளும் இல்லை என தெரிவித்திருந்த அவர், சிலர் பயத்தின் நிமிர்த்தம் அவ்வாறு கத்தியதாகவும் கூறியிருந்தார்.

அதேநேரம் இந்தோனேசிய கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டவர்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளாது என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றுட் திடமாக தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் அவுஸ்திரேலிய அரசு எடுக்கின்ற இறுக்கமற்ற முடிவுகள் இன்று உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்கு உதவியாக அமையும் எனவும், இவ்விடயத்தை கையாள்வதற்கு மிகவும் தேர்ச்சி பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின், அகதிகளுக்கான ஸ்தாபனம் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இந்தோனேசிய அதிகாரிகள், தடுத்து வைத்துள்ளவர்களிடம் ஆட்கடத்தல் முகவர்களின் விபரங்களை கேட்டு வருகின்றனர். ஆட்கடத்தல் முகவர்களின் விபரங்களை பகிரங்கமாக வெளியிட மறுத்துள்ள மக்கள், கடத்தல் காரர்கள் சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அவ்வாறு தாம் அவர்களது விபரங்களை வெளியிடும்போது அது இலங்கையில் உள்ள தமது குடும்பத்தவர்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமது பயணத்திற்கு பணம் செலுத்துவதாக ஒத்துக்கொண்டுள்ள தமது உறவினர்களுக்கும் ஆபத்தாக அமைந்து விடும் எனவும் தெரிவித்துள்ளனர். அதே நேரம் ஏதாவது ஒரு நாடு தம்மை ஏற்றுக்கொண்டால் அந்நாட்டிற்கு அவர்களது தகவல்களை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தோனேசிய அதிகாரிகள் அவர்களை கப்பலில் இருந்து இறங்குமாறும், தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்படும் எனவும் பின்னர் வழமையான நடைமுறைகளை கடைப்பிடிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் மக்கள் தாம் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்ககே செல்ல விருப்புவதாக தெரிவித்துள்ளனர்.







Read more...

நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நாடாத்த கோரும் எதிர் கட்சியினர்.

பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவருமான கரு ஜெயசூரிய அவர்களின் தலைமையில் தேர்தல்கள் ஆனையாளரைச் சந்தித்த எதிர்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்காலத்தில் நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடாத்தக்கோரியுள்ளனர்.

கடந்த காலங்களில் மோசடிகளும், தவறான வழிநடத்தல்களும் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் எதிர்வரும் இரு முக்கியமான தேசிய மட்டத்திலான தேர்தல்களுக்கும் சர்வதேச மேற்பார்வையாளர்கள் மற்றும் அவதானிகளை அழைத்துவருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read more...

சட்டவிரோத நீர் பாவனைக்காக அமெரிக்க தூதரகம் நஸ்டஈடு செலுத்தியது.

அமெரிக்க தூதுவரின் வாசஸ்தலத்தில் சட்டவிரோதமாக நீர் பாவிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அல்பிறட் கிறசன்ற் இல் அமைந்துள்ள அமெரிக்க தூதுவரின் வாசஸ்தலத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட நீர் வழங்கல் அதிகார சபையின் அதிகாரிகள் இவ்விடயத்தை கண்டு பிடித்துள்ளனர்.

நீர் வழங்கல் அதிகார சபை அதிகாரிகளால் 370440 ரூபா நஸ்டஈடு வழங்க பணிக்கப்பட்டுள்ளது. நஸ்டஈட்டு தொகை கடந்த 14ம் திகதி தூதரகத்தினால் ராஜகிரிய வில் உள்ள நீர்வழங்கல் சபையின் தலைமைக் காரியாலயத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இதே குற்றத்திற்காக கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கன் நிலையம் 890469 ரூபாவை நஸ்ட ஈடாக செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Read more...

ஜெனரல் பொன்சேகாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித கசப்புணர்வும் இல்லை.

அரசாங்கத்திற்கும், முப்படைகளின் தலமை அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கும் இடையில் எவ்வித கசப்புணர்வும் இல்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகங்களில் உலாவும் அரசிற்கும் ஜெனரலுக்கும் இடையிலான சர்சை தொடர்பாக ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கேட்கப்பட்டபோது, பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துடன், இவ்விடயம் தொடர்பாக பல துண்டுப்பிரசுரங்கள் மற்றும் இணையத்தளச் செய்திகள் உலா வருவதாகவும் அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

Thursday, October 15, 2009

ஜெ'புர பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தின் வாயிலை மறித்து நிற்கும் மாணவர்கள்.

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டத்தினுள் அதன் உத்தியோகித்தர்கள் நுழைவதை தடுக்கும் பொருட்டு மாணவர்கள் அங்கு ஆங்கு ஆhப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் 3 மூன்று மாணவர்களின் அனுமதி ரத்துச் செய்யப்பட்டதை எதிர்த்தே மேற்படி ஆர்ப்பாட்டம் அங்கு இடம்பெறுகின்றது.

குறிப்பிட்ட மூன்று மாணவர்களும் பகிடிவதை மற்றும் ஆர்பாட்டங்களை வழிநாடாத்தியதாக கூறியே அவர்களுடைய பல்கலக்கழக அனுமதி ரத்துச்செய்யப்பட்டுள்ளது. அவர்களை மீண்டும் இணைதுக்கொள்ளக் கோரி சக மாணவர்கள் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர். பல்கலைக்கழக பதிவாளர் காரியாலயத்தினுள் அதிகாரிகள் எவரும் நுழைய முடியாதவாறு மாணவர்கள் அங்கு கூடி நிற்பதாக தெரியவருகின்றது.

Read more...

தென் மாகாண சபைத் தேர்தலின் மூலம் மக்கள் அரசிற்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். விமல்.

அண்மையில் தென்மாகாணத்தில் இடம்பெற்று முடிந்துள்ள தேர்தலில் மக்கள் அரசிற்கு ஓர் எச்சரிக்கை சமிக்கையை அறிவித்துள்ளனர் என ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்று தேசிய சுதந்தர முன்னணி எனும் அமைப்பை நிறுவியுள்ள விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், தேர்தல் முடிவுகள் அரசு சில தவறான பாதைகளை தெரிந்தெடுத்துள்ளது என்பதற்கு சாட்சியமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், தென்மாகாண சபையின் முதலமைச்சராக ஷான் விஜெலால் அவர்களை முதலமைச்சராக நியமிக்க எடுத்துள்ள முடிவானது, அரசு மக்களால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை உணந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளினால் அமைக்கப்படவுள்ள கூட்டணியில் பொது அபேட்சகராக ஜெனரல் சரத்பொன்சேகா வை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் தொடர்பாக கேட்டபோது, அவ்வாறான ஓர் முடிவை எடுப்பதற்கு ஜெனரல் ஓர் மடையன் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.


Read more...

அரசியலினுள் நுழையும் ஆர்வம் இல்லை என்கின்றார் கோத்தபாய.

பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தனக்கு அரசியலில் நுழையும் ஆர்வம் இல்லை என அததெரண விற்கு வழங்கியுள்ள விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் திரு. கோத்தபாய ராஜபக்ச அவர்கள் போட்டியிடவுள்ளதாக வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடு சிக்கல் நிலையை எதிர்கொண்டிருந்தபோது பயங்கரவாதத்தை இப்பூமியில் இருந்து பூண்டோடு அழிப்பதற்காக மக்களால் வழங்கப்பட்டிருந்த ஆணையை நிறைவேற்றியுள்ளதாகவும், அதற்கு அப்பால் எவ்வித அரசியல் நோக்கங்களும் தன்னிடம் இல்லை என தெரிவித்துள்ள அவர், யுத்தத்தினால் அங்கவீனர்களாகியுள்ள படைவீரர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதே தனது தற்போதைய இலக்கு எனவும் அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

Wednesday, October 14, 2009

எல்லையை அறிந்து செயற்படு. ஜெனரல் சரத்பொன்சேகா விற்கு மேர்வின் சில்வா.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தின் 60ம் ஆண்டு நிறைவை ஒட்டி இடம்பெற்ற நிகழ்வில் நிகழ்த்திய பேச்சை தொடர்ந்து கிளம்பியுள்ள சர்ச்சைகளை அடுத்து, இராணுவத் தளபதிகளுக்கு தொழில் துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேல் மாகாண சபை உறுப்பினர் திலான் சுமதிபால அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதி அபிவிருத்தி திட்டம் ஒன்றை திறந்து வைத்து பகிரங்க மேடையில் பேசிய அமைச்சர் மேர்வின் சில்வா, போரிலே அரசியல் தலைமைத்துவம் என்பது மிக முக்கியமானதாகும். அவ்வாறுதான் துட்டகெமுனு அவர்களது பெயர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் நடந்து முடிந்துள்ள போர் 10 தளபதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் யாரும், வெற்றிக்கு உரிமைகோர முடியாது. காரணம் இப்போர் முப்படைத் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச அவர்களாலும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அவர்களாலும் திட்டமிடப்பட்டதுடன், கட்டளைகளும் அவர்களால் வழங்கப்பட்டது. களமுனைகளில் நின்ற தளபதிகள் கட்டளைகளை நிறைவேற்றினார்கள். இந்த யுத்தம் இடம்பெற்ற முப்பது வருடங்களிலும் எத்தனையோ தளபதிகள் இருந்திருக்கின்றார்கள். ஏன் அவர்களால் யுத்தத்தை வெற்றி கொண்டிருக்க முடியவில்லை? ஏனென்றால் அப்போது முதுகெலும்பு உள்ள அரச தலைவர்களை நாம் கொண்டிருக்கவில்லை. அவ்வாறிருக்க சில தளபதிகள் தங்களால்தான் போர் வெல்லப்பட்டதாக நினைக்கின்றார்கள். நான் அவர்களுக்கு கூறுகின்றேன் "உங்களுடைய எல்லையை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்" எவராவது எதிர்கட்சியினரின் விருப்பத்திற்கு செயற்பட விரும்புவார்களாயின், நாம் விரும்பத்தகாத முறையில் விடயங்களை கையாள வேண்டிவரும். எனவே நாம் குறிப்பிட்ட தளபதிகளை அவ்வாறான ஒர் நிலைமையை உருவாக்கிக் கொள்ளவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார் டாக்டர் மேர்வின் சில்வா.

Read more...

திசைமாறிய பரசூட் விதியில் இறங்கியது. வீரர் வைத்தியசாலையில்

கெத்தாராம விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த விசேட படையணியின் 29 பேர் கொண்ட குழுவொன்று ஹெலிகொப்ரர் ஒன்றில் இருந்து குதித்தபோது திசைமாறிய பரசூட் ஒன்று கொழும்பு 12 பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றில் தரையிறங்கியது.

பரசூட்டில் இருந்த வீரருக்கு காலில் காயம் ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com