Monday, October 12, 2009

யாழ் மேயர் இன்று அலறி மாளிகையில் பதவியேற்றார்.


இடம்பெற்று முடிந்த யாழ் மாநகர சபைத் தேர்தலில் யாழ் மேயராக தெரிவுசெய்யப்பட்ட திருமதி. பத்மினி யோகேஸ்வரன் இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதி மேயர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் மத்தியில் பேசிய ஜனாதிபதி, யாழ் மாவட்டத்தில் எஞ்சியுள்ள உள்ளுர் ஆட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் யாவும் மிகவிரைவில் நாடாத்தப்படுமென தெரிவித்தார்:

Read more...

டிஆர் பாலுவின் தகாத வார்த்தை பிரயோகங்களால் வவுனியா அரச அதிபர் அழுதார்.


இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட இலங்கை சென்றுள்ள இந்திய பாராளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்றுள்ள டிஆர் பாலுவின் வார்த்தைப் பிரயோகங்களால் வவுனியா மாவட்ட பிரதேச செயலர் திருமதி. சார்ள்ஸ் அவர்கள் கண்ணீர் விட்டழுததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தொலைபேசி ஊடாக கருத்து தெரிவித்த திருமதி. சார்ள்ஸ், இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்ற குழுவின் இடைத்தங்கல் முகாம்களுக்கான விஜயத்தின் நிகழ்சி நிரலில் தலையிடவேண்டாம் என டிஆர் பாலு கேட்டுக்கொண்டதாகவும், அவரது அதிகார தோரணையிலான பேச்சும் குரல் ஆழுத்தமும் தன்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் செய்தியில் இடைத்தங்கல் முகாம் ஒன்றிற்கு செல்லமுற்பட்ட டிஆர் பாலு குழுவினருடன், திருமதி சார்ள்ஸ் அவர்களும் செல்ல முற்பட்டபோது, இலங்கை அதிகாரிகளின் வழித்துணை தமக்கு அவசியம் இல்லை டிஆர் பாலு அவரை நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது மிகவும் சிறப்பாக செயற்பட்டு அம்மக்களின் அன்றாட தேவைகளைக் கவனித்து திருமதி. சார்ள்ஸ் அவர்கள் தனது கடமையை செய்து வந்திருந்திருந்தார். இந்நிலையில் தமது அரசியல் தேவைகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க இலங்கை வந்திருக்கும் டிஆர் பாலுவை இலங்கை அரசாங்கம் நாடுகடத்தாமை பலரதும் சிந்தனையை தூண்டியுள்ளது.

Read more...

எஸ்.எஸ்.பி யின் மனைவி, மகன் உட்பட்ட 10 பேரும் பிணையில் விடுதலை.

தகவல் தொழில்நுட்பக் கல்ல}ரி மாணவன் நிபுண ராமனாயக்கவை கடத்தி, அடித்து துன்புறத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி, மகன் மற்றும் 8 பொலிஸாரும் பிணையில் விடுவிக்கப்பட்டள்ளனர்.

அவிசாவளை உயர் நீதிமன்றில் சந்தேக நபர்கள் மேற்கொண்ட மேல் முறையீட்டை தொடர்ந்து, உயர் நீதிமன்று அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது.

Read more...

புலிகளினால் தகவல் சேகரிப்புக்கு அமர்த்தப் பட்டிருந்தவர் கைது.

சிலாபம் பகுதியில் புலிகளினால் தகவல் சேகரிப்புக்கு அமர்த்தப்பட்டிருந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அரச புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் செயலிழந்துள்ள புலிகளியக்கத்திற்காக குறிப்பிட்ட நபர் கொழும்பு துறைமுகப் பிரதேச தகவல்களை திரட்டியுள்ளமை வெளிவந்துள்ளது.

இவரின் இச்செயற்பாடுகளுக்காக 19 மீற்றர் நீளமான 25 குதிரைவலுக் கொண்ட படகு ஒன்று புலிகளினால் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து புலனாகியுள்ளது.

Read more...

ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் துப்பாகிச் சூட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்.

ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்சிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெற்று முடிந்துள்ள மாகாண சபைத்தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் தனது தோல்விக்கு காரணமாக அமைந்தவர்கள் என சந்தேகித்த பொதுமக்கள் குழு ஒன்றின் மீது நாடாத்திய தாக்குதலிலேயே இவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Read more...

குழந்தைகளுக்கான கடவுச் சீட்டுக்களைப் பெற பெற்றோர் இருவரதும் ஒப்துதல் வேண்டும்.

குழந்தைகளுக்கான கடவுச்சீட்டு வழங்குவதில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களுக்கிணங்க, கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் 16 வயதுக்கு குறைந்த குழந்தைகளின் பெற்றோர் இருவரும் காரியாலயத்திற்கு நேரில் வந்து தமது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ரி.பி அபயக்கோண் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து பெற்றுள்ள அல்லது சட்டப்படி பிரிந்து வாழும் பெற்றோர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயற்படவேண்டும் எனவும் பாதுகாவலர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் இருவரதும் ஒப்புதலைச் சமர்பிக்கவேண்டும் எனவும் புதிய திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் பெற்றோரினால் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரிப்பதை தொடர்ந்தே இம்மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Read more...

Sunday, October 11, 2009

புலம்பெயர்ந்த இலங்கையர் சம்மேளனத்தினரின் கருத்தரங்கு சிறப்பாக நிறைவேறியது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை என்பன தமிழர் தேசத்தை மாசுபடுத்த திட்டமிட்ட முறையில் நிறுவப்பட்டவை என்றார் பேராசிரியர் கா. சிவத்தம்பி.

உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களின் நிகழ்கால, எதிர்கால வாழ்வு குறித்தும், இலங்கைவாழ் சிறுபான்மை மக்களின் சமஉரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்தும், புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் கடமைகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு சுவிற்சர்லாந்து புலம்பெயர்ந்த இலங்கையர் சம்மேளனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி இனிதே நிறைவுற்றது.

சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் உட்பட பலர் சொற்பொழிவாற்றினர். அங்கு பேசிய அனைவரும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களின் துயரங்கள் தொடர்பாக எடுத்துரைத்ததுடன் அவற்றுக்கு மாற்றீடாக செய்யக்கூடிய விடயங்களையும் எடுத்துரைத்தனர்.

அங்கு சிறப்பு பேச்சாளாராக கலந்து கொண்ட பேராசியர் கா.சிவத்தம்பி இலங்கையின் வடக்கே அமைக்கப்பட்டுள்ள சீமெந்து தொழிற்சாலை மற்றும் இரசாயனத் தொழிற்சாலை என்பன சிங்கள அரசாங்கங்களால் திட்டமிட்டமுறையில் தமிழர் தேசத்தை மாசுபடுத்துவதற்காக அமைக்கப்பட்டவை எனவும் அவற்றை அங்கு தொடர்ந்தும் இயங்க அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

பேராசிரியரின் கருத்தில் அங்கிருந்த பெரும்பாலானோர் அதிருப்தியடைந்திருந்ததை காண முடிந்தது. அத்துடன் புலிகளின் மறைத்த நிகழ்சி நிரலின் செயற்பாட்டாளர்களின் ஒருவரான குறிப்பிட்ட பேராசிரியர், புலிகளின் அழிவிற்கு பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் அரசினால் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்திகளில் மக்களை அச்சம் கொள்ளச் செய்வதற்கு தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வருவதை இக்கருத்து உணர்த்துகின்றது.

அவரைத் தொடர்ந்து பேசிய திரு. அழகுகுணசீலன் அவர்கள், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, தொலை நோக்கு சிந்தனை போன்ற விடயங்கள் அடிப்படையில் இருந்து எம் மக்களுக்கு புகட்டப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி பேசியதுடன், முதற்கட்டமாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இலங்கையிலே எல்லைப் புறங்களிலே வாழுகின்ற மக்களிடையே உருவாக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுடைய மேற்குறிப்பிட்ட கருத்தை தான் வலுவாக எதிர்பதாக தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்கான சுதந்திரப்போராட்டம் எனும் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டத்தினை புலிகள் இயக்கம் தமிழ் மக்களை ஆழும் ஆயுதமாக மாற்றிக்கொண்டதற்கும், புலிகளின் மனிதகுலத்திற்கு எதிரான சகல செயற்பாடுகளுக்கும் யாழ் பல்கலைக்கழகம் துணை நின்று வரலாற்றுத் துரோகம் இழைத்திருக்கின்றது என்றார். அத்துடன் பேராசிரியரின் குறிப்பிட்ட கருத்தானது இனவாதத்தை துண்டுவதும், உண்மைக்கு புறப்பானதும், ஏற்றுக்கொள்ள முடியாததும் என்ற பொருள்பட கூறிய அவர், புலிகள் கடந்த காலங்களில் தாம் மேற்கொண்ட ஒவ்வொரு கொலைகளுக்கும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான கருத்துக்களையே கூறிவந்துள்ளனர் என்றார்.

திரு அழகுகுணசீலன் அவர்களின் கருத்தினை ஆதரித்து கருத்துக்கூறிய திரு. ஜெகநாதன், தனது சிறுபிராயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஜி. பொன்னப்பலம் அவர்களின் தேர்தல் பிரச்சார பேச்சுக்களைச் செவிமடுத்துள்ளதாகவும், அதன்போது ஜி.ஜி. பொன்னப்பலம் அவர்கள் மேற்குறிப்பிட்ட இருதொழிற்சாலைகளையும் தான் இலங்கைச் சிங்கள அரசிடம் மிகவும் சண்டையிட்டு, தமிழ் மக்களின் நலனிற்காக நிறுவியதாகவும் தெரிவித்திருந்தது ஞாபகம் இருப்பதாக தெரிவித்தார். அந்த வகையில் குறிப்பிட்ட இரு தொழிற்சாலைகளும் சிங்கள அரசினால் திட்டமிட்ட முறையில் தீய நோக்குடன் நிறுவப்பட்டது என்ற கருத்து அடிப்படையில் அதாரமற்றது எனக் கூறினார்.

அத்துடன் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பொறியலாளராக கடமையாற்றியதாக தன்னை அறிமுகம் செய்து கொண்ட திரு. அஜீவன் அவர்கள் சூழல் மாசடைதலைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பல உண்டு எனக் கூறி, அவற்றை தொழில் நுட்ப ரீதியாக விரிவாக விளக்கினார்.

மேலும் கடந்த காலங்களில் இலங்கைக்குச் சென்று இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் கைதுசெய்யப்பட்ட, சரணடைந்த புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு வந்திருந்தோர் தாம் அங்கிருந்து எடுத்துவந்திருந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிளை காண்பித்தனர். அவற்றில் சில விடியோக்கள் இங்கே தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read more...

எதிர்வரும் தேர்தல்களுக்கு தயாராகுங்கள்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச அமைப்பாளர்களை எதிவரும் தேர்தல்களுக்கு தயாராகுமாறு ஜனாபதி மஹிந்து ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more...

கிழக்கிலங்கையில் மீண்டும் அரசியல் கடை திறக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

பாராளுமண்றத் தேர்தல் நடைபெறும் முன்னரே புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து செண்ற கருனாவின் ஆசிர்வாதத்துடன் தேர்தல் களம் இறங்கிய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட வேட்பளர்களில் ஜோசப் பரராஜசிங்கம் தவிர்ந்த ஜெயானந்தமூர்த்தி உட்பட அனைவருமே புலிகளின் ஏகபிரதிநிதிக்கொள்கைக்கு எதிரான கருத்தினை கொண்டிருந்த ஒரே காரணத்தால்தான் அவ்ர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

புலிகளே தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி எண்று இறுதிவரை மார்தட்டி நிண்ற ஜோசப் பரராஜசிங்கம் வரலாறு காணத தோல்வியைத் தழுவியதும் புலிகளின் ஏகபிரதிநிதித்துவக் கொள்கையை கிழக்கு வாழ் மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியது.

இதில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டேயாகவேண்டும் இண்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமண்ற உறுப்பினர்களாக உள்ள அரியநேந்திரன் மற்றும் சந்திரகாந்தன் ஆகியோர் முறையே கிங்ஸ்லி இராஜநாயகத்தை புலிகள் நயவஞ்சகமாக படுகொலை செய்ததன் மூலமும் மட்டககளப்பு மக்களால் அரசியலில் இருந்து தூக்கியெறியப்பட்ட பின்னர் புலிகளின் ஆசீர்வாத்ததுடன் பாராளுமண்றம் நுளைந்த ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடம் மூலம் பின் கதவால் பாராளுமணறத்திற்றுள் புகுந்தவர்கள் என்பதும் தெளிவான உண்மை.

கிழக்கில் புலிகளுக்கு எதிரான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தெருக்களிலும் மர நிழல்களுக்கு கீழும் உடுக்க உடையிண்றி உண்ண உணவிண்றி ஆதரவற்ற நிலையில் தமது தொகுதி மக்கள் சொல்ல முடியாத்துன்ப துயரங்களை அனுபவித்த காலங்களில் கொழும்பில் பாராளுமண்ற உறுப்பினர்கள் விடுதியில் உல்லாசமாக இருந்து கொண்டு வெறும் அறிக்கைகளை வெளியிட்டும் வெளி நாடுகளுக்கு விஜயம் செய்து புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் தமது குடும்பங்களை மேற்கத்தைய நாடுகளில் குடியமர்த்தியதுமே இவர்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு செய்த பெரும் காரியம்.

புலிகளின் விசுவாசிகளாக செயற்பட்ட இவர்களின் கொள்கை மாற்றம் காணவேண்டும் என்பதும் அதன் மூலம் அவர்கள் சுயமாக சிந்தித்து தத்தமது தொகுதி வாழ் மக்களுக்கு நேரடியான சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் ஒரு சிலரது கருத்தாக இருந்ததில் தவறு இருப்பதாகக் கருதிவிடமுடியாது.ஆனால் இவர்கள் உண்மைகளை முழுமையாக மூடிமறைத்து தங்களுக்கு உயிர் அச்சுருத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பல கதைகளைக் கூறிவந்தார்கள்.

இவர்களை மீண்டும் தமது தொகுதிகளுக்கு வந்து மக்களின் தேவைகளை உணர்ந்து சேவைசெய்யுமாறு பலர் இவர்களுடன் தொடர்பு கொண்டதும் அவர்கள் நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் ஏன் வருடக்கணக்கிலும் காலத்தை வீணடித்துவந்தார்களே தவிர தமக்கு வாக்களித்த மக்களின் நலன்களை சிறிதளவும் சிந்திக்கத்துணியவில்லை என்பதே உண்மை.

இவர்களை மீண்டும் தமது பிரதேசங்களுக்கு அழைத்து அவர்களது சேவைதொடர இவர்களைத்தொடர்புகொண்ட சிலர் இலங்கையில் பேசுவதற்கு தயக்கமகவிருந்தால் பிறிதொரு நாட்டிலாவது சந்தித்து பேச பலதரப்பட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதை இவர்கள் இலகுவாக மறுத்துவிட முடியாது.புலிகளுக்கு அஞ்சியோ அல்லது புலிகளுக்கு விசுவாசமாக இருந்ததாலோ அவர்கள் கைகூடிய அனைத்து முயற்சிகளையும் அலட்சியம் செய்தனர்.

இண்று கிழக்கில் பாரிய மாற்றம் ஏற்படாவிட்டாலும் ஒருவகையான் இயல்புவாழ்க்கை துளிர்க்கத் தொடங்கியுருக்கிண்றது என்பதுமட்டுமல்ல கிழக்கிலங்கை வாழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண அரசாங்கம் தன்னாலான பல அபிவிருத்திட்டங்களையும் தொழில் சார் அபிவிருத்திகளையும் மேற்கொண்டு மூவின மக்களும் பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்க்கை மாற்றமும் ஏற்படத்தொடங்கியிருக்கிண்றது.

தற்போது வட மாகாண சபை தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் தேர்தல்கள் நடாத்தப்பட்டு அடுத்தது பாராளுமண்றத் தேர்தல் என்பதை மிகத்தெளிவாக உணர்ந்து மீண்டும் தமது பாராளுமண்ற ஆசனங்களைத் தக்கவைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் ஒருவகை காய் நகர்த்தலே இவர்களது மீள் பிரவேசம் என்பதை கிழகிலங்கை வாழ் மக்கள் மிகத் தெளிவாகப்புரிந்துகொள்வார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது..
புலிகள் அழிக்கப்பட்டாகிவிட்ட நிலையில் இவர்களிடம் என்ன கொள்கை இருக்கிண்றது?

வாக்களித்த மக்களுக்கு இவர்கள் செய்துமுடித்த சேவைகள் என்ன?

என்ன விடயத்தை சொல்லி மக்களிடம் வாக்குக் கேட்பது?


இவற்றில் ஒண்றிற்காவது இவர்களிடம் பதில் இல்லாத நிலையில் கிழக்கில் பலம் பொருந்திய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது நாடுகடந்த தமிழீழ அரசுக் கதை சொல்லி மக்களை ஏமாற்ற முயல்வதா இவர்களது நோக்கம் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

பாராளுமண்றத் தேர்தல் அல்ல கிராமசபைத் தேர்தலாக இருந்தாலும் இவர்களால் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்பதை எதிர்வரும் தேர்தல்கள் இவர்களுக்கு உணர்த்தும் காலம் வெகுதொலைவில் இல்லை.

எஸ்.எஸ்.கணேந்திரன்



Read more...

தீவிரவாதிகளுடன் தொடர்பு: அணுவிஞ்ஞானி கைது

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அணு விஞ்ஞானி ஒருவர் சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் வட ஆப்பிரிக்காவில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்தது. இவருடன் சேர்ந்து, அவரது 2 சகோத ரர்களும் கைது செய்யப் பட்டனர்.

Read more...

தென் மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு முன்னணி அமோக வெற்றி.

நேற்று (10.10.2009) இடம்பெற்று முடிந்துள்ள தென்மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. ஆழும்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 804,071 வாக்குகளைப் பெற்று(67.88%) 38 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 297,180 வாக்குகளைப் பெற்று(25.09%) 14 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) 72,379 வாக்குகளைப் பெற்று(6.11%) 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

Read more...

Saturday, October 10, 2009

எங்களுக்கு அவல், பரமேஸ்வரனுக்கு பேகர், வன்னி புனிதர்களுக்கு !

அந்த கடைசி பத்து நாட்கள். மே 17 க்கு முந்தைய கடைசிப் பத்து நாட்கள். மொத்த
தமிழ் பேசுபவனும், அவன் சிறிலங்கா தமிழனாக இருக்கட்டும், சிறிலங்கா தமிழ் பேசும் முஸ்லீமாக இருக்கட்டும், இந்திய தமிழனாக இருக்கட்டும், ஏன் லண்டன் வெஸ்மினிஸ்டர் பாராளுமன்ற சதுக்கத்தை தாண்டிய அத்தனை உயிர்களும், அந்த உண்ணா நோன்பாளிக்காக, ஒரு சொட்டு கண்ணீர் சிந்தியதை நாம் அறிவோம், உலகமும் அறிந்ததே.

Hunger striker's £7m Big Mac: Tamil who cost London a fortune in policing was sneaking in fast-food
By STEPHEN WRIGHT
Last updated at 10:41 AM on 09th October 2009

Comments (226)
Add to My Stories
He was the hunger striker at the centre of one of the longest-running demonstrations ever mounted in Britain.

For weeks Parameswaran Subramaniyan lay in a tent outside the Houses of Parliament as Tamils protested about the plight of relatives under attack in Sri Lanka.

At one stage, his supporters claimed he was 'critically weak'.

Tamil takeaways: 'Hunger striker' Parameswaran Subramaniyan, sitting outside the Houses of Parliament, secretly ate McDonald's burgers

The protest finally ended in June, but two revelations put it back in the spotlight yesterday.

First, police said it had left them with a £7.1million overtime bill.

Then it emerged that Mr Subramaniyan, 28, had eased his ordeal by secretly eating McDonald's burgers.

Scotland Yard surveillance teams using specialist monitoring equipment had watched in disbelief as he tucked into the clandestine deliveries.

A police insider said: 'In view of the overtime bill, this has got to be most expensive Big Mac ever.'

Scotland Yard made no official comment but senior sources said police decided against dragging the bogus hunger striker out of his tent for fear it would start a riot.

One source said: 'This was such a sensitive operation that it was felt officers could inflame the situation if we brought the hunger strike and demonstration to a premature end. This is a further example of the complexities of policing London today.'

The Yard figures revealed that officers pocketed nearly five times more overtime on the Tamil demonstration - which at times brought Westminster traffic to a standstill - than they did for the G20 summit of world leaders in the capital in early April.

The overtime bill for policing the Tamils was nearly as much as the one for foiling the country's biggest-ever terrorist plot, to blow up several trans-Atlantic flights in 2006, which added up to £7.3million.

The police response to the 7/7 terrorist attacks in London in 2005 resulted in overtime payments of £21.7million.

எங்கோ ஆறாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள வன்னித் தமிழர்களுக்காக, தூக்கம் மறந்து, உணவு மறந்து, உயிரை துறக்க சித்தமான அந்த பரமேஸ்வரன் என்ற புனிதனுக்காக, பாடசாலை மாணவ, மாணவிகள், இளையோர்கள், தொழிலாளர்கள், தாய்மார்கள், புத்திஜீவிகள், அங்கவீனர்கள், வயோதிபர்கள் என ஒரு மனிதப்பட்டாளம், இரவு பகல் பாராமல் வெஸ்மினிஸ்டர், சாரிங்குறொஸ்,கிறீன் பார்க், சென் பீட்டர்ஸ், வாட்டர்லூ, லண்டன் பிறிஜ் போன்ற புகையிரத நிலையங்களில் அலைமோதியை நேற்று ( 07-10-2009 ) வரை நினைத்து புளகாங்கிதம் அடைந்தோமே.

இளையயோர்களே ! பார்த்தீர்களா உங்களுக்காக, நமது மண்ணுக்காக, சிங்களவனின் அட்டூளியங்களை உலகுக்கு பறை சாற்றுவதற்காக, அங்கு நம்மினப் பெண்களை சிங்கள இராணுவம் கற்பழித்துக் கொண்டிருப்பதை உலகுக்கு பறை சாற்றுவதற்றாக, ஒரு சகோதரன் உயிரை துச்சமென மதித்து சாகும் வரை உண்ணாமல் உண்ணா நோன்பிருக்கின்றான். என ஒரு தாய், பல தாய்மார், பல புத்திஜீவிகள் அந்த கடைசிப்பத்து நாட்களும், தீபம் ரீவியில் மைக்கை கையில் பிடித்துக்கொண்டு கதறிய கதறல் இன்னும் எங்கள் மனக்கண்ணைவிட்டு ஓட மறுக்கின்றதே !


மொத்த சோகத்தையும் ஒரு மக்டோனல் பேகரில் சிதறடித்து விட்டாயே நண்பனே.

நண்பா ! நீ வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவன், அங்கிருந்து இந்தியா வந்து, பல சிரமங்களுக்கு மத்தியில் இங்கிலாந்தில் அகதியானவன். உனக்கும் புலிகள் இயக்கத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை, இங்கு நீ லண்டனில் லூசியம் என்ற இடத்தில் இருந்து கொண்டு வேண்டத்தகாத தொழில் செய்த நீர். உமக்கு இங்கு நிரந்தர இருப்பிடமே இல்லை. உனக்கு இந்த நாட்டில் குடியுரிமையும் கிடையாது. ஏற்கனவே நீர் இங்கு வேண்டத்தகாத தொழில்கள் விடயமாக செல்லமாக தேடப்படுபவர். லூசியம் காவல் நியைம், மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலும் உமக்கு நல்ல பெயர் இருக்கின்றது.

இவையனைத்தும் அனைவருக்கும் தெரிந்தும், வீரமறவனாகத்தான், அந்த புத்தி ஜீவிகள் உன்னை சாக்காட்ட துணிந்தனர். ஆனால் நீ எமனுக்கே பச்சடி கொடுத்துவிட்டு, துரியோதனர்களுக்கு கிச்சடி கொடுத்து, எங்களுக் கெல்லாம்

அவலை அல்லவா வழங்கி விட்டாய்.

சகோதரா ! டெய்லி மெயில் காறனுக்கு எதிராகவும், ஸ்கொட்லான்ட் யார்ட் துப்பறிவாளர்களுக்கெதிராகவும் நீர் வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகவும் இன்னொரு பட்சி கூறுகின்றது. நல்லது. உலகுக்கே உலக நாகரிகம் சொல்லிக்கொடுத்த பிரிட்டிஷாருக்கு எதிராக வழக்குத் தாக்கல். ரொம்ப நல்லது. அரபு நாட்டவர்கள் தங்கள் கிணறுகளிலுள்ள எண்ணைய்யையே இவனைக் கேட்டுத்தான் தோண்டுகின்றார்கள், விற்கின்றார்கள். அந்த அளவுக்கு இவனது கண்கள் நீண்டு, பரந்து, உலகெல்லாம் விரிந்து கிடக்கின்றது. அவனது ஹெட் ஆபீஸிலிருந்து அறுநூறு அடி தூரத்தில் அமைந்துள்ள வெஸ்மினிஸ்டரில் ஜாலியாக இருந்து கொண்டு நீர் ஹம்பேகர் சாப்பிட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டா இருந்திருப்பார்கள். சாக்கிரதை சகோதரா, குயீன்ஸ் எலிசபேத் ஹோள் ( நீர் உண்ணா விரதம் இருந்த இடத்துக்கு நூறடி தூரத்தில் இருக்கின்றது ) அடருகில் போய், எங்கு கமரா பூட்டி இருப்பார்கள் என்று, ஆராய்ந்துவிட்டு வழக்கை தொடரு நண்பனே !

சகோதரா ! நீ ஏதோ எல்லோரையும் உசுப்பேத்தி விட்டுப் போய்விட்டாய். வெள்ளையன் அதற்கு 7.1 மில்லியன் கணக்கு சொல்கின்றான். அடேங்கப்பா 131 கோடி 35 லட்ச ரூபா. இதில் 10 வீதத்தை கொடுத்தாலே போதும், மகின்த சகோதரயா, அங்குள்ள மக்களுக்கு அழகான குடியிருப்பு வசதி செய்து கொடுத்து விடுவார்.

சகோதரா ! இன்றைய டெயிலி மெயிலை தூக்கிப் பார்த்தாயா ? 226 பேர் கொமண்ஸ் எழுதியிருக்கின்றார்கள். அதில் 90 வீதம் வெள்ளையன். நாக்கை பிடிங்கிச் சாகவேண்டும் போல் இருக்கின்றது நண்பா. நான் திங்கள் கிழமை வெஸ்மினிஸ்டரில் இறங்கித்தான் வேலைக்குப் போக வேண்டி இருக்கின்றது. பிளீஸ் தோழா ! மீண்டும் ஒரு முறை வெஸ்மினிஸ்டரில் நான், பேகர் சாப்பிடல என ஒரு குட்டி உண்ணும் நோன்பு இருப்போமா ?

வெள்ளையன் செலவிட்டதை விட்டு விடுவோம். பஸ் பிடித்து, கார் பிடித்து, றெயின் பிடித்து நாங்கள் வந்தது, எங்களது குழந்தைகள் பாடசாலைக்கு கட்டடித்தது, வேலைகளை துறந்துவிட்டு உனக்காக அலைக்கழிந்தது, உன் ஒரு உயிருக்காக மொத்த தமிழனும் பரிதவித்தது, மொத்த வன்னிச் சனத்தினதும் உயிரே உன் ஒருவனின் உயிரில் ஊசலாடியது, இமைக்க மறந்த கண்கள், உண்ண மறுத்த பொழுதுகள், பேச மறுத்த உதடுகள், துடிக்க மறுத்த நாடிகள், தளும்பி நின்ற கண்ணீர் துளிகள், தட்டுத்தடுமாறிய இளையோர், தவம், இது ஒரு தவம் என மௌனித்து நின்ற வெளிநாட்டோர் அத்தனை பேருக்கும் முக்காடு போட்டு, புலி, நாங்கள் புலி. நாங்கள் எதுவும் செய்வோம், நீங்கள் நம்பணும், முட்டாள் தமிழனே

நீங்கள் நம்பணும், என எங்கள் தமிழ் சமுதாயத்தை மீண்டும் ஒரு முறை...........

10-10-2009

Read more...

இராணுவச் செலவினங்களுக்காக மேலதிகமாக 30 கோடி டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்திற்காக இராணுவச் செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதிக்கு மேலதிகமாக இவ்வருடத்தின் மீதமிருக்கும் காலப்பகுதிக்காக மேலதிகமாக 20மூ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கு நாடாளுமன்றம் தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இராணுவத்தின் எரிபொருள் மற்றும் மருத்துவ விநியோகத்துக்கும், இறந்த மற்றும் காயமடைந்த இராணுவத்தினருக்கான நஷ்ட ஈட்டை வழங்குவதற்காகவும் இந்தக் கூடுதல் நிதி பயன்படுத்தப்படும்.

Read more...

Friday, October 9, 2009

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் மெக்டொனால்ட பர்கர்களை வயிறு நிறைய உண்டார்

பொலிஸாரின் விசேட கமராக்களை ஆதாரமாக கொண்டு லண்டன் பத்திரிகைகள் செய்தி
புதுமாத்தளன் பகுதியில் யுத்தம் உக்கிரம் அடைந்திருந்த போது பிரபாகரனையும் புலிகளியக்கத்தினரையும் காப்பாற்றும் நோக்கில், உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என்று கோரி லண்டனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய தமிழ் இளைஞர், மெக் டோனால்ட்ஸ் பர்கர்களை சாப்பிட்டதாக லண்டன் பொலிஸாரின் விசேட கமராப் பதிவுகளை ஆதாரமாக கொண்டு பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டுள்ளது.

லண்டனில் ஏப்ரல6 முதல் ஜூன்17 வரை இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெரிய அளவிலான போராட்டங்கள் இலண்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பு நடைபெற்றது. இவ்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்காக லண்டன் அரசாங்கம் 7.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.
இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் இந்த செய்திகளை வெளியிட்ட இரண்டு நாளிதழ்களுக்கு எதிராக தான் வழக்குத் தொடரப் போவதாகவும் உண்ணாவிரத சர்ச்சையில் சிக்கியுள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
உலக நடைமுறைகளுக்கு மாறாக உலக பயங்கரவாதி ஒருவனை காப்பாற்றுவதற்காக அகிம்மை எனும் பெயரைகொண்டு போராட்டம் ஒன்று நாடாத்தப்பட்டபோது அதற்கு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் வழங்கிய லண்டன் பொலிஸார் என்ன தேவைக்காக அவ்வாறு பொய்படப்பிடிப்புக்களை வெளிவிடவேண்டும் என்பது கேள்வியாகும். தூம் தவறு செய்தால் அவற்றை ஏற்று மன்னிப்புக் கோருவதை விடுத்து வழக்குப் போடப்போகின்றேன் என மிரட்டுவதனால் மேலும் நிலமைகள் சிக்கலடையும் என்பதுடன் லண்டன் பொலிஸார் வழக்கு தொடங்கினால் அவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏதோ ஒவ்வொரு வழியில் குற்றவாளிகளாக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

அகிம்சையை கொச்சைப் படுத்திய குறிப்பிட்ட நபரின் செயலினால் ஒட்டுமொத்த தமிழினமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் நியாயமான கோரிக்கைக்களுக்காக தமிழர் அகிம்சை போராட்டம் ஒன்றை தொடங்கும் போது அவர்களை ஏளமாக பார்க்கும் நிலைமை தோன்றியுள்ளது.

Read more...

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கான இடமாற்றத்தை தேர்தல் ஆணையாளர் ரத்துச் செய்தார்.

காலி, வெலிகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும்படி பொலிஸ் மா அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை தேர்தல் ஆணையாளார் ரத்துச் செய்துள்ளார். காலிப்பிரதேச்தில் பி.ப 10.00 பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஒருவரால் நாடாத்தப்படவிருந்த இசை நிகழ்சி ஒன்றிற்கு குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி அனுமதி வழங்காததையிட்டே அவருக்கு அவ் இடமாற்றம் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக தேர்தல் இடம்பெறும் காலங்களில் அப்பிரதேசங்களில் உள்ள பொலிஸாரை இடமாற்ற முடியாது. அவ்வாறு இடம்பெற்றால் அதை தேர்தல் ரத்துச் செய்வதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் உண்டு.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com