Friday, October 9, 2009

10 பேர் கொண்ட தமிழக பாராளுமன்றக் குழு இன்று இலங்கை வருகை

டி. ஆர். பாலு, கனிமொழி, திருமாவளவன் உட்பட 10 பேர் பங்கேற்பு
இன்று திருமலை, மட்டு விஜயம் ஜனாதிபதியையும் சந்திக்க ஏற்பாடு


இலங்கை நிலைவரம் குறித்து ஆராயவென தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இன்று இலங்கை வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழக உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரே இன்று இலங்கை வரவுள்ளனர். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பணிப்பிற்கமைய குழுவினர் இலங்கை வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினரான அமைச்சர் டி. ஆர். பாலு தலைமையில் வரும் இக்குழுவில் 10 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைச்சர் டி. ஆர். பாலு, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், இலங்கை விவகாரம் தொடர்பாக கலைஞரின் ஆலோசகருமான கனிமொழி, எம்.பிக்களான ரி. கே. எஸ். இளங்கோ, ஏ. கே. எஸ். விஜயன், கெலன் டேவிட்சன் ஆகியோரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் என். எஸ். வி. சித்தன், என். சுதர்ஷன நாச்சியப்பன், ஏ. கே. எஸ். அழகிரி, ஜே. எம். ஹருண் ஆகியோரும்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் இன்று இலங்கை வருகின்றனர்.

இன்று காலை இலங்கை வரும் இவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுடன் திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

நாளை மேற்படி குழுவினர் யாழ். மற்றும் வவுனியா பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிவர். நாளை மறுதினம் இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் முக்கியஸ்தர்களுடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது-

இன்று காலை 8.50க்கு பண்டார நாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் இல. 1 x 621 ரக ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தமிழக குழுவினர் வருகின்றனர்.

அங்கிருந்து கிழக்கு மாகாணம் செல்லும் குழுவினர் வாகரையில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதியை பார்வையிடுகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளனர்.

மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரனுடனான சந்திப்பு இடம்பெறுவதுடன் இந்திய உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ரயில், பஸ் திட்டப் பகுதிக்கும் விஜயம் செய்வர். இன்று திருகோணமலையில் தங்கியிருக்கும் மேற்படி தமிழக குழுவினர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ். நகர் செல்லவுள்ளனர்.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் தமிழக குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் விஜயம் செய்யும் குழுவினர், மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களையும் சந்தித்து பேசுவர்.

தமிழகத்திலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகளையும் சந்திக்கும் இக்குழுவினர் யாழ். மாநகர சபையின் புதிய மேயர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர்.

யாழ். பொது நூலகம், விளையாட்டரங்கு, யாழ். பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளுக்கும் தமிழக குழுவினர் விஜயம் செய்வர். யாழ். பல்கலைக்கழக துணை வேந்தருடனான சந்திப்பின் பின்னர் நிவாரணக் கிராமங்களிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வந்த மாணவர்களையும் சந்தித்து உரையாடவுள்ளனர்.

இலங்கை புறப்படுவதற்கு முன்ன தாக ரி. ஆர். பாலு தலைமையிலான தமிழக குழுவினர் கலைஞர் கருணா நிதியை நேற்று மாலை சந்தித்து உரையாடினர். இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்னதாக முதல்வர் கலை ஞர் கருணாநிதியின் ஆலோசனையை பெறுவதற்காகவே இவர்கள் முதல் வரை சந்தித்தனர்.

Read more...

வன்னி வைத்தியர்கள் கடமைக்கு திரும்பியுள்ளனர்.


புதுமாத்தளன் பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்து சிறிலங்கா இராவத்தினரால் மனிதபேரவலம் மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த வைத்தியர்கள் நால்வர் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் நிபந்தனையுடனான பினையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் நால்வரும் நேற்றில் இருந்து வடமாகணத்தில் சேவையில் இணைந்துள்ளனர்.

இவர்களில் கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குனராக செயற்பட்டுவந்த டாக்டர் சத்தியமூர்த்தி தான் வடமாகாண மேலதிக சுகாதார இயக்குனராக நியமனம் பெற்றுள்ளதாக பிபிசி தமிழ் ஓசைக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் டாக்டர் வரதாராஜா மாகாண திட்டமிடல் வைத்திய அதிகாரியாகவும், டாக்டர் சண்முகராஜா வவுனியா மாவட்ட அதிகாரியாகவும் நியமனம் பெற்றுள்ளதாகவும் டாக்டர் இளஞ்செளியன் மேற்படிப்புக்;காக பல்கலைக்கழகம் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் இன்றைய நிலைமைகளையிட்டும் தாம் மீண்டும் வேலைக்கு திரும்புவதையிட்டும் மிகவும் சந்தோசமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

பிக்குகளை கொன்று குவித்த கருணாவிற்கு இராணுவ வீரன் சலூட் அடிப்பதா? ஜேவிபி

மஹிந்த ராஜபக்ச அரசின் நாட்டுப்பற்று முன்னாள் புலிகளை அமைச்சர்களாக்கி புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டைக்காப்பாற்றிய தளபதிகளை அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆக்குவதா என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) பாராளுமன்ற சுனின் கன்டுநெத்தி, நேற்று (08) இரவு தெரண தொலைக்காட்சியில் இடம்பெறும் 'வட்டபிற்ற' (அக்கம்-பக்கம்) எனும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்சியின் போது வினா எழுப்பினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில், நாட்டுபற்று தொடர்பாக அடிக்கொரு தடவை பேசும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலராக நியமித்துள்ளாதாக செய்திகள் தெரிவிக்கின்றது. ஆனால், புலிகளின் தலைவர் பிரபாகரனின் விசுவாசியும், அரந்தலாவையில் பிக்குக்கள் படுகொலை, தலதா மாளிகை குண்டுத்தாக்குதல், அனுராதபுரம் பௌத்த விகாரையில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டவருமான கருணாவை இதே அரசாங்கம் அமைச்சராக நியமித்திருக்கின்றது.

நாட்டின் சட்ட திட்டங்களின் படி அமைச்சர் ஒருவருக்கு செயலாளர் கீழ்படிய வேண்டும். அவ்வாறாயின் இந்நாட்டின் படையினரை சிறப்பாக வழிநடாத்தி நாட்டிற்கு வெற்றியீட்டித் தந்த இராணுவத் தளபதி ஒருவர் மேற்படி ஈனச் செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவனுக்கு சலூட் அடிப்பாதா என ஆவேசமாக கேட்டார்.


Read more...

ஒபாமாவுக்கு நோபல் பரிசு.


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலக நாடுகளுக்கு இடையே அரசுமுறை உறவை வலுப்படுத்துவதிலும், மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதிலும் அவர் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் கமிட்டி அறிவித்திருக்கிறது.

அணுஆயுதம் இல்லாத உலகை உருவாக்குவதில் அவரது முயற்சிகளையும் நோபல் பரிசுக் கமிட்டி குறிப்பிட்டிருக்கிறது.

Read more...

பிரித்தானிய குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் திடீர் நடவடிக்கை. 10 பேர் கைது.

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை கண்டுபிடிக்கும் பொருட்டு பிரத்தானிய குடிவரவு-குடியகல்வு மற்றும் பொலிஸார் இணைந்து செயற்பட்டுவருகின்றனர். இன்று காலை Bainton Close, off Charbridge Way ல் உள்ள உணவுத் தொழிற்சாலை ஒன்றை முற்றுகையிட்ட குடிவரவு-குடியகல்வு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அத் தொழிற்சாலையில் கடமை புரிந்த 10 பேரை கைது செய்துள்ளனர்.

20 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்றினால் முற்றாக சுற்றி வளைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இத்தேடுதலில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 24 வயது தொடக்கம் 48 வரையான ஆண்கள் எனவும் அவர்கள் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.

Read more...

Thursday, October 8, 2009

"சுவிஸ்சுரேஸ்" சுத்துமாத்துப் பேர்வழி என்கிறது அறங்காவலர் சங்கம்..!

புலிமுகவர்களில் புதிதாய் புத்துயிர் பெற்ற புங்குடுதீவைச் சேர்ந்த சுவிஸ்சுரேஸ் என்பவர் புங்குடுதீவு மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காய் முகாம்களில் உள்ள மக்களுக்கு தான் உதவப் போவதாக கூறி பணவசூலில் ஈடுபட்டமை. புங்குடுதீவுக்கும் புங்குடுதீவுவாழ் மக்களுக்கும் உதவப் போவதாக கூறிக்கொண்டு புங்குடுதீவு மக்களிடம் காசுகளை கறந்து தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றி வருகின்றமை, மேல் மருவத்தூர் அம்மன் கோயிலை சுவிஸில் அமைக்கப் போவதாக சொல்லி பல இலட்சம் பிறாங்குகளை சுவிஸ்வாழ் தமிழர்களிடமிருந்து சேகரித்து அந்த பணத்தை முழுமையாக ஏப்பம் விட்டமை, தடுப்பு முகாம்களில் முள்ளுக்கம்பிகளுக்கு இடையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய அவலக்குரலில் “முகாரி ராகம்பாடி” அதை இறுவட்டு மூலம் வெளியிட்டு மக்களிடம் பணம் சம்பாதிக்கின்றமை தொடர்பில் ஏற்கனவே ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தோம்..

வவுனியா நலன்புரி முகாம்களுக்கு எவரும் தன்னிச்சையாகச் செல்லவோ பார்வையிடவோ எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவோ முடியாதென்பதை குறிப்பிட்டு நாம் வெளியிட்ட இச்செய்தியினையடுத்து குறித்த சுவிஸ்சுரேஸ், வவுனியா கோயில்குளம் சிவன்கோவில் நிர்வாகமே தங்களிடம் உதவி வழங்குமாறு கேட்டதென்றும் அதன் காரணமாகவே தாம் இறுவெட்டு(சீ.டீ)க்களை வெளியிட்டு இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்காக நிதிசேகரிப்பில் ஈடுபடுவதாகவும் ஊடகங்களிடம் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகின்றார்.

இதுதொடர்பில் வவுனியா கோயில்குளம் சிவன்கோவில் நிர்வாகத்தினரிடம் அதிரடி இணையதளத்தினர் உட்பட பல ஊடகங்களைச் சேர்ந்த பலரும் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறு எவரும் தமக்கு உதவி செய்யவில்லையென்றும், லண்டன் கனகதுர்க்கையம்மன் ஆலய நிர்வாகமும், அவுஸ்திரேலியாவில் உள்ள ஓர் அமைப்பினரும் மற்றும் ஜெர்மனியிலிருந்தும் தனிப்பட்ட ஒருசிலருமே தமக்கு உதவி வருவதாகவும், சுவிசிலிருந்து எவரும் இவ்வாறான உதவிகளைச் செய்யவில்லையென்றும், சிவன்கோயில் நிர்வாகத்தினர் உதவி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது உண்மைக்குப் புறம்பான தகவல் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வியடம் தொடர்பில் சிவன்கோயில் நிர்வாகத்தினர் எழுத்து மூலமாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் வவுனியா கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகத்தினரும், அதிலுள்ள அறங்காவலர் சபையினரும் வடக்கில் மோதல்கள் இடம்பெற்றவேளையில் மக்கள் பெருமளவில் வவுனியா நோக்கி இடம்பெயர்ந்த போது பல்வேறு உதவிகளை செய்வதில் முன்நின்று செயற்பட்டவர்கள். இடம்பெயர்ந்த மக்களில் கர்ப்பணிகள், சிறுவர்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோர்க்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டும் வருகின்றனர். தவிர இறுதிக்கட்ட மோதல்களின் போது மிகத் தொகையிலான மக்கள் வன்னியிலிருந்து ஒரேயடியாக இடம்பெயர்ந்தபோது அவர்களுக்கு சமைத்த உணவினை வழங்குவதில் கணிசமான பங்களிப்பினை சிவன்கோயில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர்.

தற்போதும் முகாம்களிலுள்ள முதியர்கள் பலரைப் பொறுப்பெடுத்து பராமரித்து வருகின்ற இவர்களின் பணியானது மிகவும் வரவேற்கத்தக்கதும், நன்றியுணர்வோடு பாராட்டக்கூடியதுமான விடயமாகும். இதுதவிர தற்போது செட்டிகுளம் நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுவரும் கர்ப்பிணிகள், தாய்மார் குழந்தைகளைக் கூட பொறுப்பெடுத்து உணவு உள்ளிட்ட உதவிகளைப் புரிந்த அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்லும் வரையிலான உதவிகளைச் செய்வதிலும் சிவன்கோயில் நிர்வாகத்தினர் கணிசமானளவு பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுவிஸ்சுரேஸ் போன்றவர்கள் சிவன்கோயில் நிர்வாகத்தினரின் பெயரை தமது சுயநலத்திற்காக பயன்படுத்துவதானது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.

சிவன்கோயில் நிர்வாகத்தினருக்கும் அறங்காவலர் சபையினருக்கும் சுவிஸ்சுரேஸ் உள்ளிட்ட குழுவினர் அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே இவ்வாறான செயலைப் புரிகின்றனர். தாம் சுருட்டிய மற்றும் சுருட்டவுள்ள பணத்தை சிவன்கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சேகரித்து வழங்கவுள்ளதாக பொய்க் கதையொன்றினை சோடித்துள்ளனர். இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அவலநிலையிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் பெயரைப் பயன்படுத்தி சுயநலனுக்கான நிதிவசூல் செய்வது, மட்டுமல்லாது புனித சேவையைப் புரிகின்ற சிவன்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் சபையின் பெயர்களைப் பயன்படுத்துவது என்றுமே ஏற்றுக் கொள்ளத்தக்க விடயமல்ல என்பதையும் நாம் சுட்டிக் காட்டுகின்றோம்.

-சுவிஸ்வாழ் புங்கையூர் மக்கள் ஒன்றியம்!!



Read more...

அவரசகாலச் நீடிப்பு 70 வாக்குகளால் நிறைவேறியது.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றில் நேற்று பிற்பகல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, 70 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. வாக்களிப்பின் போது 82 பேர் ஆதரவாகவும் 12 எதிராகவும் வாக்களிக்க, ஐக்கியதேசியக் கட்சியினர் வாக்களிப்பில் இருந்து நீங்கினர், ஜே.வி.பி யினர் வாக்களிப்பிற்கு பிரசன்னாகவில்லை.

Read more...

விளையாட்டு அமைச்சின் செயலாளராக ஜெனரல் சரத்பொன்சேகா.

விளையாட்டுதறை அமைச்சின் செயலாளர் எஸ். லியனகம நீக்கப்பட்டு அவ்விடத்திற்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more...

துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இலங்கைக்கான இந்தியத் தூதர் நியமனம்.

இந்திய அயலகப் பணியின் உயர் அதிகாரியும், இலங்கைக்கான இந்தியத் தூதருமாகிய அலோக் பிரசாத் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையின் நியமனங்கள் குழு எடுத்த முடிவின்படி அலோக் பிரசாத் இரண்டு ஆண்டுகள் வரையோ அல்லது அடுத்த மாற்றம் நடைபெறும் வரையோ இப்பதவியில் இருப்பார்.

1974 பிரிவு அதிகாரியான பிரசாத் கொழும்பில் பணிபுரிவதற்கு முன்னதாக, சிங்கப்பூரில் இந்தியத் தூதராகவும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.

Read more...

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு பிரதமர் வாழ்த்து

உலகிலேயே மிகப் பெரிய விருதான நோபல் பரிசு, தமிழ்நாட்டை சேர்ந்த வேதியியல் துறை விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :- நீங்கள் வேதியியல் துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் வகையில் தங்களுக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது இந்தியாவிற்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது. நீங்கள் பெற்ற விருது மூலம், இந்தியாவில் கல்வித் தரம் சிறப்பாக இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தங்களின் ஆராய்ச்சி மென் மேலும் தொடர வாழ்த்துகிறேன். நீங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி, உயிரி மூலக்கூறு சம்பந்தமாக பல ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்விற்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். அறிவியல் சம்பந்தமாக பலவிதமான ஆய்விற்கும், மருத்துவ அறிவியல் உலகிற்கும் பல புதிய மருந்து கண்டுபிடிப்புகளுக்கும் தங்களின் ஆராய்ச்சி பயனுள்ளதாக அமையும். தங்கள் ஆராய்ச்சி, மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிறந்து, பரோடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பி.எஸ்சி., பட்டம் பெற்று, பின்னர் அமெரிக்க நாட்டிலுள்ள ஓகையோ பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., ஆய்வு முடித்து, முனைவர் பட்டம் பெற்றவர் விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்.

அமெரிக்க நாட்டில் வாழும் இவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் நகரில் எம்.ஆர்.சி. மூலக்கூறு உயிரியல் ஆய்வுக் கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார். இவர் உயிரினங்கள் அனைத்திலும் வேதியியல் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிற புரோட்டீன்களை உருவாக்கும் ரிபோசெம் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாமஸ், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி யோனத் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆய்வின் மூலம் நோய்களை எதிர்க்கும் புதிய நச்சு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை உருவாக்குதல் தொடர்பான இவரது கண்டுபிடிப்புக்காக 2009ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

இச்செய்தி கேட்டு முதல்வர் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்து, விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணனை மனமாரப் பாராட்டுவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி.இராமன், சந்திரசேகர் ஆகிய இரண்டு விஞ்ஞானிகளை அடுத்து, மூன்றாவது தமிழ் விஞ்ஞானியாக வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் நோபல் பரிசினைப் பெற்றுள்ளதன் மூலம் தமிழ்ச்சமுதாயமே மிகவும் பெருமையடைகிறது என்றும், இப்பெருமைக்குரிய விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வதாகவும் முதல்வர் தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Read more...

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக ஜேவிபி அடிப்படை உரிமை மீறல் வழக்கு.

தென் மாகாண சபைக்கான ஜேவிபி யின் ஹம்பாந்தோட்டை வேட்பாளர் குழுத்தலைவர் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்ரமரத்தின விற்கு எதிராக அடிப்படை மனித உரிமை வழக்குத் தொடர்ந்துள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் 11 ஜேவிபி அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அவை ஒவ்வொன்று தொடர்பாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அம்முறைப்பாடுகளின் பிரகாரம் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கும், கட்சியின் பனர் ஒன்றை காட்டியமைக்கா கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கும் எதிராகவே இவ்வழக்கு தொடரப்பட்டள்ளது.

Read more...

வாதத்துக்காக பேசாமல், வாழ்க்கையை பேசுவோம். - யஹியா வாஸித் -

காட்சி - 1 அந்த சகோதரி முந்தா நாளுக்கு முதல்நாள்தான் சிறிலங்கா என்கின்ற அந்த கந்தக பூமியை தரிசித்துவிட்டு வந்திருந்தார். அவருடைய கணவரின் ஒரேயொரு சகோதரர் வன்னியில் ஏற்பட்ட மிதிவெடி மிதிப்பில் காலை இழந்ததால் அவரை கொழும்பு ஆசுபெத்திரியில் வைத்திருப்பதாக செய்தி கசிந்து “ சிங்களவன் கொன்றால் கொண்டு போடட்டும்” என்ற ஒரு மன அழுத்தத்தில் அண்ணனைப் பார்க்க கணவனும், மனைவியும் பதின் மூன்று வருடத்தின் பின், கைகுழந்தையுடன் சிறிலங்கா சென்று வந்திருக்கின்றனர்.

அக்கா எப்படி அக்கா சிறிலங்கா இருக்கின்றது. வவுனியாயில் சிங்கள இராணுவம் கொடுமை புரிகின்றதாமே ? எப்படி அக்கா போய் தப்பி வந்தீர்கள். கொழும்பு போய் ஆறுநாட்கள் தங்கியிருந்தோம். எயார்போர்ட்டில் எங்கள் பெட்டிகளை திறக்கவேயில்லை. நேரடியாக அங்கிருந்து கொழும்பு போய் ஒட்டலில் றூம் எடுத்து தங்கினோம். யாரும் எங்களை கண்டு கொள்ளவே இல்லை. ஆறுநாட்களும் தொடர்ந்து ஆசுபெத்திரிக்குப்போய் அண்ணனைப் பார்த்தோம். ஆட்டோவில்தான் சென்றோம். ஒரே ஒரு நாள் மட்டும் ஆட்டோவை ராணுவத்தினர் நிறுத்தி எங்கே போகின்றீர்கள் எனக்கேட்டனர். ஆசுபெத்திரிக் கென்றதும் பாஸ்போட்டுகளைக் கூடப்பார்க்காமல் போகச் சொன்னார்கள்.

( கொழும்பில் என்னன்னவோ கொடுமைகள் தமிழ்பேசும் தமிழருக்கு நடப்பதாக இங்கு பழைய பஞ்ஞாங்கக்காறர்கள் கூப்பாடு போடுகின்றார்களே என்ற வாதத்தை நான் அந்த தாயிடம் வைக்கவில்லை. அவர், அந்த தாய் வாழ்க்கையைப் பேசினார் )

அப்புறம் வவுனியாவில் எப்படி சிங்கள இராணுவத்தின் கொடுமைகளை சகித்தீர்கள் எனக் கேட்டதும். அருணாச்சலம் முகாமில் அவருட தங்கையும், அம்மாவும் இருக்கினம். தனிக்காட்டுக்குள்ள வளச்சி முள்ளுக்கம்பி வேலியடைச்சி அவங்கள வச்சிருக்கினம். முதல்நாள் போய் பெயரைப்பதிந்துவிட்டு ரெண்டு மணிநேரம் காத்திருந்தோம். வேகாதவெயில். இரண்டுமணி நேரத்தின் பின் பார்க்க விட்டார்கள். தங்கச்சி முள்ளுக்கம்பி வேலிக்கு அப்பாலும் நாங்கள் இங்காலும் இருந்து கதைச்சம். கிட்டத்தட்ட நாலடி இடைவெளி. எந்த பொருளும் கொடுக்க முடியாது. வேலிக்கு மேலால் விரும்பினால் கொடுக்கலாம். 20 நிமிடம் வரை கதைக்கலாம் என ஆமிக்காறன் சொன்னான். நாங்கள் 30 நிமிடம் கதைத்தோம். ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கினம். ஆனால் வீட்டுக்குப் போய் கஞ்சோ, கூழோ குடிப்பதுபோல் இல்லை எனச் சொன்னார்கள்.

( முள்ளுக்கம்பி வேலிகளுக்கருகில் மகின்தவின் வெறிபிடித்த இராணும் துப்பாக்கியும் கையுமாக இருந்து பழயங், பழயங் என பார்வையாளர்களை விரட்டுவதாக அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவர்கள் சொல்லுகின்றார்களே, இலவச ரிவீ போட்டு 24 மணிநேரமும் முழங்குகின்றார்களே என்ற வாதத்தை அந்த தாயிடம் நான் வைக்கவில்லை. அவர், அந்த தாய், தன் சகோதரியின் வாழ்க்கயைப் பேசினார்.)

வவுனியாவில் நீங்கள் ஏழெட்டு நாட்கள் நின்றதாகச் சொன்னீர்களே. ஓமோம். அடுத்த நாளும் பார்க்கப் போனோம். அடுத்த நாள் சாப்பாடு, துணிகள், இன்னும் சில பொருட்கள் எடுத்துச்சென்று கொடுத்தோம். கிட்டத்தட்ட 45 நிமிடம் கதைத்தோம். அந்த முகாமுக்கு பொறுப்பானவரிடம் போய் நாங்கள் 13 வருடத்தின் பின் சிறிலங்கா வந்திருக்கின்றோம். எனது குழந்தையை என்தாய் தூக்கி வைத்திருக்க விரும்புகின்றார் என்றதும் “ வைநொட். யுகென் கோ அன்ட் ஸ்ரே வித் யுவர் மதர் என் வண் ஹவர்” என அனுமதியும் தந்து எங்களை அவர்ர தாயுடன் ஒரு மணிநேரம் கதைக்கவும் விட்டார்.

( அக்கா,அக்கா என்னக்கா பச்சப்பொய்யாச் சொல்லுறியள். இஞ்ச எல்லாச்சனலும், எல்லா இணையத்தளமும் சிங்களவன் தமிழச்சிகளை கற்பழிச்சிக் கொண்டிருக்கின்றான், என புலன் பெயர்ந்தவர்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறது என்ற வாதத்தை நான் வைக்கவே இல்லை. அவர், அந்தத்தாய் 13 வருடத்துக்கப்புறம் தான் தரிசித்த சிறிலங்கா வாழ் தமிழரின் இன்றைய வாழ்க்கையைச் சொன்னார் )

அப்புறம் றிங்கோ போய் ஆறு நாட்கள் நின்று விட்டு வந்தோம். எப்படி போற வழிகளெல்லாம் இருக்கின்றது. எத்தனை இடத்தில் ராணுவம் செக் பண்ணியது என நான் கேட்டதும். எங்கேயும், எந்த இடத்திலும் எங்களை இறக்கவில்லை. எங்கள் வேனை நிற்பாட்டி எங்கே போகின்றீர்கள் என ஒரே ஒரு இடத்தில் மட்டும் கேட்டார்கள். றிங்கோ போறம் என்றதும் விட்டுவிட்டார்கள்.

( தமிழர்களை இறக்கி பொருட்களை பறிப்பதுடன், தாறுமாறாக விரட்டுவதாகவும் செய்திகள் றெக்கைகட்டி புலம்பெயர் நாடெல்லாம் பறக்கிறதே. இந்தச் செய்திகளை கேட்காமலே சிறிலங்கா போய் வந்திருக்கிறாயே முட்டாள் பெண்ணே என்ற வாதத்தை நான் அவளிடம் வைக்கவில்லை. அவர் எதிர்கால சிறிலங்காவில் அனைவரும் ஒற்றுமையாக வாழலாம் போல இருக்கின்றது என்ற வாழ்க்கையைச் சொன்னார்.)


காட்சி – 2 அவர் வல்வெட்டிதுறையைச் சேர்ந்தவர். கொழும்பில் பிரபல வியாபாரி பிளஸ் ஏற்றுமதியாளர். அவரது பொருட்கள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா என மாதத்துக்கு ஆறு கன்டய்னர்கள் ஏற்றுமதியாகின்றன. அண்மையில் கொழும்பில் உள்ள இன்னொரு வியாபாரத்தை வாங்குவதற்காக பேரம் நடந்தது. இறுதியில் பத்து கோடி ரூபாவுக்கு வியாபாரம் பேசி முடிக்கப்பட்டது. இவரது வங்கி ஆறு கோடி ரூபா கடன் தருவதாக வாக்களித்தது. மீதி நாலூ கோடி ரூபாவுக்காக எங்கெங்கோயோ அலைந்தார். இறுதியில் அப்பணமும் கிடைத்து, வியாபாரம் கடந்த ஒண்ணரை மாதமாக களை கட்டுகின்றது.

( சிறிலங்கா பொருட்களை வாங்கக் கூடாது என, அதே ஊரைச் சேர்ந்தவர்கள் இங்கு பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளார்களே, நாளை மறுதினம் மார்க்ஸ்பென்சருக்கு முன்னால் கைகோர்க்கப் போகின்றார்களே, உங்கள் பொருட்கள் விலைப்படாமல் திரும்பப் போகின்றதே என்ற வாதத்தை நான் அவர் முன் வைக்கவில்லை. அவர் வாழ்க்கை நடாத்த வாழ்க்கையுடன் போராடுகின்றார் )

அந்த பிஸினசை நாங்கள் எடுத்துட்டம், உங்கள் உதவிக்கு நன்றி. வாங்கோ ஒரு பார்ட்டி போடுவோம் என நீர்கொழும்பிலுள்ள சீபூட் ஹோட்டலொன்றுக்கு அழைத்துச் சென்றார். சீபூட் பிளஸ் தண்ணிப்பாட்டி. ஓல்ட் அரக் தலைக்கேறியதும், சேர் எல்லாம் போய், மச்சான் பாணியில் பேச்சுக்கள் தொடர்ந்தது. நாலு கோடி ரூபா எங்கிருந்து மச்சான் புரட்டி எடுத்தயள். அது நம்மட சின்ன சால்வட பிரண்ட் ஒரு மினிஸ்டரிடம் வட்டிக்கு எடுத்தோம் மச்சான். ரொம்ப நல்லவங்க மச்சான். வந்தான் நம்முட பிஸினஸை பார்த்தான். அடுத்த நாள் நாலு கட்டாக நாலு கோடி ரூபாவ கொண்ணார்ந்து தந்தான் மச்சான். ரொம்ப நல்லவனுகள் மச்சான். சிங்களவன் சிங்களவன்தான் மச்சான்.

( கோழி மிதித்து குஞ்சு முடமாவதில்லையாம். இங்கு யார் கோழி. யார் குஞ்சு என்ற வாதத்தை நான் அவரிடம் வைக்கவில்லை. அவர் மொத்த சிறிலங்கா மக்களினதும் வாழ்க்கையைப் பேசினார் – மைனஸ் புலம் பெயர் சகோதர, சகோதரிகள் )

ஓல்ட்அரக் தலைக்கேறி முட்டி போட்டுக் கொண்டு வேனுக்குள் ஏறி வெள்ளவத்தை வந்து சேரும் போது அதி காலை மூன்று மணி. காலையில் எழுந்து சாப்பிட்டுவிட்டு டைனிங் றேபிளில் ஒரு குட்டி டிஸ்கஸன். மே 17 வன்னியில் என்ன நடந்ததப்பா. என்ன நடந்தது. ஒன்றும் நடக்கவில்லை. தலைவர் சேப்டியாக தலைமறைவாகி விட்டார். வருவார். வந்து எல்லாவற்றுக்கும் ஒரு பாடம் புகட்டுவார். அந்தாள் என்ன சும்மா சோப்ளாங்கியா என வாதத்தை தொடங்கினார். நான் போயிட்டு வாறன் எனக் கூறிவிட்டு வாழ்க்கயைத் தேடி புறப்பட்டேன்.

8-10-2009


Read more...

களுத்துறைப் பிரதேசத்தில் பெண் புலி ஒருவர் கைது.

களுத்துறை, பகலவத்தை பிரதேசத்தில் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புலிகளின் தலமையுடன் நேரடித் தொடர்புகளை வைத்திருந்தார் என்பது ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

ஆப்கனில் இந்திய தூதரகம் முன்பு குண்டுவெடிப்பு ; 14 பேர் பலி

ஆப்கனில் உள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாயினர். பலர் காயமுற்றனர். காலையில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் இது போன்று அலுவலகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆப்கன் தலைநகரம் காபூலில் இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. இந்த தூதரகம் முன்பாக இந்திய நேரப்படி காலை 9. 30 மணி அளவில் பலத்த சப்தத்துடன் வெடி சப்தம் கேட்டது. அப்போது இந்த பகுதியில் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பெரும் புகை மூட்டம் கிளம்பியது. குண்டு வெடிப்பில் சிக்கி பலர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் 7 பேர் இறந்து விட்டதாகவும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பில் இந்திய தூதரக சுவர் சேதமுற்றது. ஜன்னல் கதவுகள் அதிர்வில் பறந்தன. இந்தியர்கள் எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை. காயமுற்றவர்கள் பலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்கொலை படை தாக்குதலா ?
சம்பவம் நடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் எரிந்து சாம்பலாகிப்‌போனது. இதில் ஒரு கார் ஐ.நா., எம்பளம் பொறிக்கப்பட்டுள்ளது. நடந்திருக்கும் தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி பாகிஸ்தானில் உள்ள அல்ஜசீரா இணையதளம் வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 7 ம் தேதியும் இதே போல் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. தற்போது நடந்த இடத்தில் இந்திய அதிகாரிகள் யாரும் சிக்கியுள்ளார்களா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆப்கனை பொறுத்த வரையில் இந்தியா பல்வேறு விதமாக வளர்ச்சி பணிகளுக்கு நிதி மற்றும் ஏனைய உதவிகள் செய்து வருகிறது . இருப்பினும் அங்குள்ள பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமுற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் சிக்கி இத்தாலிய படை வீரர்கள் பலர் காயமுற்றுள்ளனர்.

நன்றி தினமலர்

Read more...

Wednesday, October 7, 2009

சிறிரெலோ வின் புதியபாதை கருணாவின் வழியில்.

தமிழீழ விடுதலை இயக்கம் எனப்படும் ரெலோ வில் இருந்து பிரிந்து சென்ற சிறிரெலோ அணியினர் தாம் புதியதாயகம் எனும் அரசியல் அமைப்பொன்றினை நிறுவியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. அவ் அமைப்பு உருவாகி ஒரு மாதம் முடிவதற்குள் அவ்வமைப்பில் இருந்த முக்கியமான புள்ளிகள் சிலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ளனர்.

அவ்வாறு இணைவந்து கொண்டவர்களில் திருமலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த சிவம் என்பவருடன் சிலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுள்ளனர். இவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும், அவரின் உதவியுடன் அங்குள்ள மக்கள் பலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுள்ளனர்.

அதே நேரம் சிறிரெலோ அணியில் எஞ்சியுள்ள சிலர் மீண்டும் அடைக்கலநாதன் தலமையிலான ரெலோவினருடன் இணைந்து செயற்பட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வவுனியா, யாழ் உள்ளுராட்சி தேர்தல் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்று சிறிரெலோ சார்பாக பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த அவ்வியக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் மன்னார் மாவட்ட பேராயரின் மத்தியஸ்தத்துடன் செல்வம் அடைக்கலநாதனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com