Friday, October 2, 2009

கே. பி. யின் பெயரில் 600 வங்கிக் கணக்கு

புலிகளின் சர்வதேச தலைவராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட குமரன் பத்மநாதன் - கே. பீ.யின் பெயரில் 600 இற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அதனால், அவர் மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.

Read more...

இலங்கை தூதரகத்தில் அத்துமீறல்: பூந்தொட்டிகளை உடைத்து ரகளை

டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், அத்துமீறி நுழைந்த புதிய தமிழகம் கட்சியினர் அங்கு கல்வீசி தாக்கியதோடு, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத்து சேதப்படுத்தினர்.

தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியினர், நேற்று டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இதன்பின், மதியம் 2.30 அளவில், டில்லி சாணக் கியபுரி பகுதியில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்திற்கு வாகனங்களில் வந்த அந்தக் கட்சியினரில் ஒரு பிரிவினர், அங்கு கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத் துச் சேதப்படுத்தினர்.

அப்போது இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இவர்கள் நடத்திய கல்வீச்சில் தூதரக அலுவலகத்தின் கண்ணாடிகள் சில சேதம் அடைந்தன. ஒரு சில நிமிடங்களில், தாங்கள் வந்த வாகனங்களில் ஏறிச் சென்றனர். அதற்குப் பின் தான் போலீசார் வந்தனர். தூதரக அலுவலகத்திற்குள் புகுந்து, தன் கட்சியினர் தாக்குதல் நடத்திய போது, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, வெளியே ஒரு காரில் இருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சில தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை சம்பவம் துரதிருஷ்டமானது. அதற் காக, கடும் வருத்தம் தெரிவிக்கிறோம்' என, வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார். "போலீசார் அங்கு குவிக் கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.

Read more...

ஹிலாரியின் அபாண்டமான குற்றச்சாட்டுக்கு அரசு வன்மையான கண்டனம்

இலங்கை இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்தை யுத்தத்தின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தவில்லையென பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முதன்முதலாக இராணுவத்தினர் மீது இப்படி ஓர் அபாண்டத்தைச் சுமத்துகிறார்களெனத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ள கூற்றை நிராகரிப்பதாகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை (02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டி லேயே அமைச்சர் இந்தக் கண்டனத்தையும் மறுப்பையும் வெளியிட்டார்.

இலங்கை இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்தை (கற்பழிப்பை) யுத்தத்தின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி உள்ளார்களென்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் கூறியுள்ளமை ஓர் அப்பட்டமான கட்டுக்கதையாகுமென்று கூறிய அமைச்சர் கெஹலிய, பொறுப்பற்ற விதத்தில் ஹிலாரி கூறியது கவலை தருவதாகக் குறிப்பிட்டார். புலிகள் இயக்கப் பெண்களும், வேறு பெண்களும் கற்பழித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகும். இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதனைக் கருதுகிறோம். முன்பு ஒருபோதும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை சுமத்தவில்லை. ஹிலாரி கிளின்ரன் இவ்வாறு கூறுகையில், புலிகள் இயக்கத்தினருக்குச் சட்ட ரீதியான எந்த ஆதரவும் வழங்கப்படமாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.

ஒரு விடுதலைக்கான நடவடிக்கையையே இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டனர். படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக பொறுப்பற்ற விதத்தில் ஹிலாரி தெரிவித்திருக்கின்றார் என்று தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சில வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவியுடன் சில அமைப்புகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

நன்றி தினகரன்

Read more...

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கேரிய 9 இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் இருந்து படகுமூலம் அவுஸ்திரேலிய கடற்பரப்பினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கேரியிருந்த 12 இலங்கையர்களில் 9 பேர் நாடு கடத்தப்படுகின்றனர். இவர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியதை தொடர்ந்து
கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் அரசியல் தஞ்சம் தொடர்பான விசாரணைகள் மாநில நிதிமன்றில் இடம்பெற்று நிராகரிக்கப்பட்டிருந்தது.

நிராகரிப்புக்கு எதிராக அவர்களால் அவுஸ்திரேலிய அரசியல் தஞ்சம் தொடர்பான வீசேட நீதிமன்றில் மேல் முறையீடு செய்யபட்பட்டது. முறையீட்டை விசாரணை செய்த வீசேட நீதிமன்று அவர்கள் தொழில்தேடி வந்தவர்கள் என ஊர்ஜிதம் செய்து கொண்டதுடன் அவர்களை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு கடந்த நவம்பரில் தஞ்சம் கோரிய 12 பேரில் இருவர் சுயவிருப்பின்பேரில் ஏற்கனவே நாடு திரும்பியுள்ளனர்.

ஓருவர் விமானப்படையின் விமானி.

இவர்களில் ஒருவர் விமானப் படையின் விமானி தென்னக்கோன் என தெரியவந்துள்ளது. அவர் தனது அரசியல் தஞ்சத்திற்கான காரணமாக, தான் விமானப்படையில் கடமையாற்றியபோது, இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிந்தமை புலிகளுக்கு தெரியவந்ததை அடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி Mr Rintoul, தென்னக்கோனை நாடுகடத்துவதனால் அவரது உயிருக்கு மேலும் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என மேல் முறையீடு செய்யதுள்ளதை தொடர்ந்து அவர் தொடர்ந்தும் கிறிஸ்மஸ்தீவு பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விமானி தொடர்பாக எவ்வாறான முடிவை அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுக்கும் என திட்டவட்டமாக எதுவும் கூறமுடியாது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயரிஸ்தானிகர் சேனக்க வலகம்பாய, நாடுகடத்தப்படுபவர்கள் 9 பேரும் சிங்களவர்கள் எனவும் அவர்கள் கரையோரப் பிரதேசங்களான சிலாம், நீர்கொழும்பு, மாறவில, கொச்சிக்கடை பிரதேசங்களை சேர்ந்த மீன்பிடித் தொழிலாளர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

குருநாகல் பிரதேசத்தில் குண்டு வெடிப்பு இருவர் பலி 12 பேர் காயம்.

குருநாகல் உடுவப்பொலவில் உள்ள சுமணதாச மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான வானின் சாரதி மற்றும் வானில் இருந்த 12 வயதுடைய மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 12 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். காயமடைந்துள்ளவர்களில் ஒரு மாணவியின் கால் முற்றாக துண்டாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் நால்வர் வயது வந்தவர்கள் எனவும் 8 பேர் மாணவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

பாடசாலை சேவையில் ஈடுபடும் குறிப்பிட்ட வான், மாணவர்களை ஏற்றிக் கொண்டு உரிமையாளரின் வீட்டு தரிப்பிடத்தில் இருந்து புறப்பட முற்பட்டபோது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இக்குண்டு குறிப்பிடத்தக்களவு சக்திவாய்ந்ததாக காணப்படுவதுடன் அது வானில் பொருத்தப்பட்டிருந்தாக அன்றில், வெளியே இருந்து வீசப்பட்டதாக என்பது இதுவரை தெளிவாகவில்லை. எது எவ்வாறாயினும் இக்குண்டு வெடிப்பானது தனிப்பட்ட போட்டிகள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read more...

Thursday, October 1, 2009

சர்வதேச சிறுவர் தினம்:சரணடைந்த சிறுவர், சிறுமியர் கலந்துகொண்ட நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புலிகள் இயக்கத்திலிருந்து சரணடைந்த சிறுவர், சிறுமியர் பங்குபற்றும் நிகழ்வொன்று நேற்று வவுனியாவில் நடைபெற்றது. வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மேற்படி சரணடைந்தவர்களுள் 18 வயதுக்குக் குறைந்த சிறுவர், சிறுமியர்கள் இந்நிகழ்வில் பங்கு பற்றினர். இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 500 பேருள் 198 சிறுவர், சிறுமியர்கள் சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Read more...

மனிதாபிமானப் பணிகளுக்காக 196 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுவரை 196 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிதியை கொண்டு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பல தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 250000 மக்களை வெகுவிரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு முனைப்புடன் செயற்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

Read more...

கற்பழிப்புக்கள் இடம்பெற்றதாக தகவல்கள் இல்லை. எம்பி. சிவநாதன் கிசோர்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அமர்வில் பேசிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் செயலர் ஹிலாரி கிளின்ரன், பல்கன், பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் யுத்தத்தில் கற்பழிப்பு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹிலாரி கிளின்ரனின் இக்கருத்து தொடர்பாக வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, வன்னியில் யுத்தம் இடம்பெற்றபோது நான் எனது மாவட்டத்தில் தங்கியிருந்து என்னால் முடிந்த சேவையை மக்களுக்கு வழங்கியிருக்கின்றேன். அவர்களுடைய குறைநிறைகளை நன்கு கேட்டறிந்துள்ளேன். வன்னியிலிருந்து வந்துள்ள மக்கள், புலிகள் தம்மை தடுத்து வைத்திருந்தார்கள், படையினர் தாறுமாக செல்களை வீசினார்கள், உயிர்களை இழந்தோம், ஊனமுற்றோம், உடமைகளை இழந்தோம் என பல தரப்பட்ட குறைகளைக் கூறினார்கள் ஆனால் கற்பழிப்புத் தொடர்பாக நான் அவர்களிடம் இருந்து எதுவும் கேள்விப்படவில்லை என கூறினார்.

கொங்கோ நாட்டின் கிழக்கு பிரந்தியத்தில் மாதமொன்றிற்கு 1100 கற்பழிப்புக்கள் இடம்பெறுவதாக பதிவுகள் உள்ளதாக ஹிலாரி கிளின்ரன் தெரிவித்துள்ளார். ஆனால் இலங்கையில் போர்கால வரலாற்றை எடுத்து நோக்கும் போது வடகிழக்கில் சில கற்பழிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை மறுக்க முடியாது என்பதுடன் அவ்வாறன சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்ல அனுமதி கோரி எம்பி க்கள் நீதிமன்றில்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தது, இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைத்துள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட அனுமதிகோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொழும்பு உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

அவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிரதிவாதிகள் சார்பாக ஆஜராகியிருந்த அரச தரப்பு வக்கீல் இவ்விடயம் நிர்வாக மட்டத்தில் தீர்த்து வைக்கப்பட முடியுமா என நீதித் துறை அமைச்சர் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். வழக்கு எதிர்வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இடைத்தங்கல் முகாம்களுக்கு வெளிநாட்டவர்கள் சென்று தமது தொண்டினை ஆற்ற அனுமதிக்கப்பட்டுள்ளபோது, மக்களின் பிரதிநிதிகளான தாம் அங்கு செல்ல முடியாதுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more...

மன்மோகன் சிங்குக்கு ஒபாமா விருந்து

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, அதிபர் ஒபாமா, சிறப்பு விருந்து அளிக்க உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மதிப்புக்கு உரியவர் பிரதமர் மன்மோகன் சிங்.பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் குக்கு, முன்பு அதிபராக இருந்த புஷ்ஷும், தனது மாளிகைக்கு அழைத்து சிறப்பு விருந்து அளித்து பெருமைப்படுத்தியுள்ளார். இதே போல ஒபாமாவும், மன்மோகன் சிங் குக்கு வரும் 24ம் தேதி சிறப்பு விருந்து அளித்து கவுரவப்படுத்த உள்ளார்.

சமீபத்தில் இந்திய பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிப்பதற்காக அழைப்பு விடுத்தார். இதையடுத்து, வரும் 24ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவியுடன், அதிபர் ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கேற்க உள்ளார். வல்லரசு நாடான அமெரிக்கா, இந்திய பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் விருந்தளிப்பதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.


Read more...

பல்கன், பர்மா, இலங்கை போன்ற நாடுகளி்ல் கற்பழிப்பு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கிளின்ரன்.


முழுப்பேச்சை கேட்க
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நேற்று புதன்கிழமை பேசிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் கிலாரி கிளின்ரன் பல்கன், பர்மா, இலங்கை உட்பட சில நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்களின் போது கற்பழிப்பு ஆயதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளர்ர்.

நேற்றைய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் யுத்தங்கள் இடம்பெற்றுவரும் நாடுகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகளை தொடர்பான வரைவொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Read more...

Wednesday, September 30, 2009

ஐ.ம.சு முன்னியின் செயலாளர் ஒழுக்கம் தவறியவர் என்கின்றார் ஐ.ம.சு மு வேட்பாளர்.

தென்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களுள் மிகுந்த போட்டி நிலவி வருவதுடன் சகவேட்பாளர்கட்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் தென்மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக நிற்கும் நடிகை அனர்கலி அவர்கட்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக சக வேட்பாளர் நிசாந்த முத்துகெட்டிகம் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான நிசாந்த முத்துகெட்டிகம வெளியிட்ட சில சர்ச்சைக்குரிய கருத்துக்களால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் நீதிமன்றினால் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நீதிமன்றில் தோன்றிய அவர், தான் நீதிமன்றில் இருந்து வீடு செல்லும் போது வழிமறித்த காலித் துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன்னை மிரட்டியதாக அவர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறிய நிசாந்த முத்துகெட்டிகம, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சகவேட்பாளர்கள் ஒரு சிலரால் எனக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் எனக்கு தொந்தரவு செய்கின்றனர். இவ்விடயத்தை ஐனாதிபதி ஏற்றுக்கொள்கின்றார் இல்லை. ஏங்களுடன் போட்டியிடுகின்ற சக வேட்பாளரான அனர்கலிக்காக காலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எனக்கு துப்பாக்கியை நீட்டுகின்றார். ஆனால் எனக்கு ஜனாதிபதியின் பலம் அவசியம் இல்லை. நான் இங்கிருப்பது மக்களின் பலத்தில். எனக்கு காலி மக்களின் எதிர்பார்புக்களை நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்கின்றதே தவிர ஜனாதிபதியின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியதேவை இல்லை. நான் இங்கு மக்களின் தீர்ப்பையே எதிர்பார்த்திருக்கின்றேன். ஜனாதிபதியினால் வழங்கப்படும் அமைச்சுப் பதவிகள் எனக்கு அவசியமற்றவை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர், ஒழுக்கத்தை கடைப்பிடிக்குமாறு வேண்டுகின்றார். ஆனால் அவரிடம் ஒழுக்கம் இல்லாததையிட்டு நான் கவலையடைகின்றேன். நான் இங்கு மக்களுக்கா சேவை செய்கின்றேன். இதுவரை நான் 400 லட்சம் ரூபாக்களைச் செலவிட்டிருக்கின்றேன். அந்த பணத்தை நான் கடன் பட்டுள்ளேன். அது கட்சியின் பணம் அல்ல நான் கஸ்டப்பட்டு உழைத்த பணமும்கூட, இவ்விடயங்கள் கட்சியின் தலைவர்கட்கு தெரியாது. எனவே நான் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வது, மக்களுக்கு சேவை செய்யும் என்னுடய உரிமைக்கு இடையூறு செய்யவேண்டாம் என்பதாகும் என தெரிவித்திருந்தார்.

Read more...

கிழக்கு மாகாண விதவைகளுக்கு இந்திய சேவா நிறுவனம் உதவும்!

கிழக்கு மாகாணத்தில் சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 48,000 விதவைகளுக்கு நல்வாழ்வளிக்க இந்திய சேவா நிறுவனம் முன்வந்துள்ளதாக இலங்கையின் கிழக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் மேற்கொண்ட சந்திப்பினைத் தொடர்ந்து மூவர் கொண்ட குழுவினர் கிழக்கு மாகாணத்தில் இது குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா, சார்க் பெண்கள் அபிவிருத்தி நிதியம் மூலம் 100 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இந்தியாவுக்கு வெளியே இந்த நிதி செலவிடப்படும் நிலையில் கிழக்கு மாகாணமும் இதற்கான கணிசமான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் ஹிஸ்புல்லா கூறினார்.

Read more...

நிவாரணக்கிராமங்கள் உறவினர்களை பொறுப்பேற்க புதிய விண்ணப்பபடிவம்

நிவாரணக் கிராமங்களிலுள்ளவ ர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்பதற்கு ஏதுவாக வவுனியா மாவட்டத்திற்கென புதிய விண் ணப்பப்படிவமொன்று அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் மாதிரி விண்ணப்பப்படிவம்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யுமாறு வவுனியா அரச அதிபர் திருமதி பீ.எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

விண்ணப்பப்படிவங்களை பொறுப்பேற்பதற்கென வவுனியா அரச அதிபர் அலுவலகத்தின் திட்டப் பணிப்பாளரின் அலுவலகத்துக்கு முன்னால் விசேட கருமபீடம் திறக்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் வழிகாட்டலுடன் அரச அதிபர் அலுவலகம் இப்புதிய விண்ணப்பப்படிவத்தை அறிமுகம் செய்துள்ளது.

வெளி மாவட்டங்களிலுள்ளவர்கள் முன்பு போன்றே விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

கோண்டாவில் இரட்டைக் கொலை : 5 சந்தேக நபர்கள் கைது

கடந்த ஆகஸ்ட் 28 ம் திகதி கோண்டாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தமுடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஆலடி வீதி, கோண்டாவிலில் கடந்த ஆகஸ்ட் 28 கொலைசெய்யப்பட்ட வீரசிங்கம் சுரேஸ்குமார் (37), சுவதீபா சுரேஸ்குமார் ஆகியோரிடம் சந்தேக நபர்கள் கொள்ளையடித்திருந்த தங்க நகைகள் பலவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டிஐஜி மெடிவக்க தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரைணைகளை கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக குமார மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com