Monday, September 14, 2009

மஸ்கெலிய யுவதிகள் கொலைச் சந்தேக நபர்களுக்கு எதிராக இரு குற்றச்சாட்டுக்காளாம்.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீடொன்றில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த மஸ்கெலிய பிரதேசத்தைச் சேர்ந்த இரு யுவதிகளின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இருவருக்கும் எதிராக மேலும் இரு குற்சஞ்சாட்டுக்களைப் பதிவு செய்யப்போவதாக கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸார் கொழும்பு பிரதான மஜிஸ்றேட் நிசாந்த கப்புஆராச்சிக்கு தெரிவித்துள்ளனர்.

சிறு வயதினாரான யுவதிகளை வேலைக்கமர்த்தியமை மற்றும் அவர்களை வேலைக்கமர்த்திய பின்னர் பிரதேச பொலிஸாருக்கு அறிவிக்காமை என்பனவே அவர்கள் மீது சுமத்தப்படவிருக்கும் குற்றச்சாட்டுக்களாகும். அவசரகாலச் சட்டத்தின் கீழ் வீடுகளில் ஒருவரை வைத்திருக்கும் போது வீட்டு உரிமையாளர்கள் பிரதேச பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும் எனவும் அவர்கள் அவ்வாறு செய்யத்தவறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் பொலிஸார் இவ்விசாரணைகளை திசை திருப்புவது மிகவும் தெளிவாக அவதானிக்கப்படுகின்றது. மேற்படி குற்றச்சாட்டுக்களுக்காக குற்றவாளிகக்கு பெரும் தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. அத்துடன் சந்தேக நபர்கள் மீது கொலைக் குற்றஞ்சுமத்துவதற்கு பதிலாக சில குற்றங்களைச் சுமத்தி அவர்களை பொலிஸார் விடுவிக்க முயல்வது புலனாகின்றது. மேலும் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயற்படும் பொலிஸார் யுவதிகள் கொலைசெய்யப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அவ்வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக நீதிமன்றிற்கு தெரிவிக்க முனைவதை அவதானிக்கவும் முடிகின்றது.

Read more...

இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதான செய்திகள் முற்றிலும் பொய்யானவை. கடற்படை பேச்சாளர்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாக கடந்த சிலவாரங்களாக வெளிவந்தவண்ணமுள்ள செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி.கே.பி. தசநாயக்க, அச்செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என முற்றாக மறுத்துள்ளார். அத்துடன் இவ்வாறான செய்திகள் கடந்த காலங்களிலும் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு வந்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

அமெரிக்க மக்களுக்கு பின்லேடன் எச்சரிக்கை

அல்கொய்தா இயக்க தலைவன் பின்லேடன் பேசியதாக புதிய ஆடியோ டேப் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஈராக், ஆப்கன் போரை முடிவுக்கு கொண்டு வரும் திறமை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இல்லை என்றும், தலைவர்களின் செய்த தவறுகளுக்கு தக்க பின்விளைவுகளை சந்திக்க அமெரிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவன் கூறியுள்ளான். அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதி அரேபியாவுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் இந்த டேப் அல்-ஜசீரா டிவியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

மேலுமோர் மோசடிப் பேர்வழி கைது.

Sriyavi Homes Lands & Investments எனும் நிறுவனம் ஊடாக 430 மில்லியன் ரூபாய்களை மக்களிடம் பெற்று ஏமாற்றியுள்ளதாக கூறப்படும் நபர் ஒருவரை பாணந்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

மேற்படி நிறுவனத்திற்காக நாடுபூராகவும் முகவர்களை நியமித்து, குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித்தருவதாக பலரிடம் பணம் பெறப்பட்டுள்ளது. இதற்காக ஜா-எல பிரதேசத்தில் காணிகளும் வேலைத் திட்டங்களும் மக்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

பணம் கொடுத்த நபர்கள் தமது வீடு காணிகளுக்காக பல மாதங்கள் காத்திருந்தும் முன்னேற்றம் எதுவும் காணாத நிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து, 21 வயதான குறிப்பிட்ட நபர் சில காலங்கள் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். இவரது நடமாட்டம் பம்பலப்பிட்டியில் காணப்படுவதாக அறிந்து பொலிஸார் நேற்று முன்தினம் 12ம் திகதி இவரை கைது செய்துள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அறிந்த மக்கள் பலர் அங்கு விரைந்து தமது முறைப்பாடுகளை தெரிவித்துள்ளதுடன், குறிப்பிட்ட நபரை அடையாளம் காட்டியுள்ளதாக தெரியவருகின்றது. இவரது தகப்பனாரும் இம்மோசடிகளில் தொடர்பு பட்டிருந்தமைக்காக கைது செய்யப்பட்டு சில மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் மேலதிக விசாரணைகளுக்காக மிரிகானை விசேட பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையத்தளம்.


Read more...

17 லட்சம் மோசடி: சமுர்த்தி உத்தியோகித்தருக்கு விளக்க மறியல்.

கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த சமுர்த்தி உத்தியோகித்தர் ஒருவர் 17 லட்சம் ரூபாய்களை மோசடி செய்தமை வெளிவந்துள்ளதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Read more...

Sunday, September 13, 2009

புனர்நிர்மானம் செய்யப்பட்ட பெரியகல்லாறு வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது.

மாகாண சுகாதார பணிப்பாளர் டொக்டர் ஆ.தேவராஜா தலைமையில் பெரிய கல்லாறுமாவட்ட வைத்திய சாலை கட்டிடம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆ.டு.யு.ஆ ஹிஸ்புல்லா ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

ஐரிஸ் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் 120 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட இவ்வைத்திய சாலையில் வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பராமரிப்பு விடுதி மற்றும் வைத்தியர்களுக்கான விடுதி ஆகியன அடங்கியுள்ளது. இக்கட்டிட தொகுதியானது இன்று(01.08.2009) திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா, கல்லாறு மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்கடர் வாமதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read more...

வாகரை மகாவித்தியாலய மீள் நிர்மானத்திற்காக 30 கோடி நீதி ஒதுக்கீடு.

சுனாமி பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீள் நிர்மானம் செய்து வரும் அரசு வாகரை மகாவித்தியாலய மீள் நிர்மானப்பணிகளுக்காக 30 கோடி ரூபா ஒதிக்கியுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். முற்றிலும் சேதமடைந்த பாடசாலைகளில் வாகரை மகா வித்தியாலயமும் ஒன்று என குறிப்பிட்டுள்ள அமைச்சர், இப்பாடசாலை மாணவர்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வி பயின்று வருவதாகவும் அவற்றை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு அரசு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் உள்ள மிகவும் பிரபலமான பாடசாலைகளில் ஒன்றான இப்பாடசாலை திருத்தவேலைகள் முடிவில் அது பல நவீன வசதிகளைக் கொண்டிருக்கும் எனவும் அது தமிழ் சமூகத்தின் கல்வி வழர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும் அரசு பாடசாலையை புனருத்தாபனம் செய்து முடிக்கும் போது முன்னாள் புலிகளான இன்றைய அரசியல் வித்துவான்கள் என தம்மைக் கூறிக்கொள்வோர், கொழும்பில் இருந்து மாலைகளுடன் சென்று அங்குள்ள மக்களை கொண்டு அவற்றை தமது களுத்துக்களில் போட்டுக்கொண்டு 32 புகைப்படங்கள் பிடித்து தமது இணையத்தளங்களில் போட்டு அளகு பார்பர் என்பதும் இங்கு குறிப்பிடவேண்டியதாகும்.

Read more...

ஒக்டோபர் மாதக் கடைசியில் இடைத்தங்கல் முகாம்களில் 100000 பேர் எஞ்சுவர். -ரஜீவ-

இடைத்தங்கல் முகாம்களில் மக்களை நிரந்தரமாக வைத்திருக்கும் நோக்கம் அரசிற்கு இல்லை என அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் திரு. ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை இலங்கை அரசு நிரந்தரமாக வைத்திருக்க முயற்சி செய்கின்றது என பிரித்தானிய ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாம் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மிக விரைவில் அவர்களது சொந்த இருப்பிடங்களை நோக்கி நகர்த்துவதற்கே விரும்புகின்றோம். அதே நேரம் நாட்டின் தேசியப்பாதுகாப்புத் தொடர்பாகவும் மிகவும் சிந்திக்கவேண்டிய நிலை உள்ளது எனவும் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள 280000 மக்களில் பெரும்பாலனவர்கள் செப்படம்பர் மாத முடிவில் அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர், அத்துடன் ஒக்டோபர் மாத முடிவில் இடைத்தங்கல் முகாம்கள் சுமார் 100000 மக்களே எஞ்சுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

Saturday, September 12, 2009

கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு தனித்தனிக் கட்சிகளாக இணைந்து செயற்படுவதே பலனளிக்கும்


புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல் : நேர்கண்டவர் பி. வீரசிங்கம்

கேள்வி: தற்போதைய அரசியல் நிலைமைகள் எப்படியிருக்கின்றன?
பதில்: அரசியல் நிலைமை பற்றி கூறுவதானால் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இவை இரண்டும் முடியும் வரையிலும் அரசியல் ரீதியான எந்தவொரு முன்னெடுப்பையும் அரசாங்கம் நிச்சயமாக எடுக்கப்போவதில்லை என்றே நான் நம்புகின்றேன்.

அதனை முன்னெடுப்பதற்கான பலம் அரசிடம் இல்லை. பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் ஜே. வி. பி, ஹெல உறுமய, விமல் வீரவன்ச மூன்று பகுதியினரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

இவ்வாறு எடுக்கும்போது அரசியல் ரீதியான ஒரு தீர்வோ அல்லது பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான முயற்சியோ சாத்தியமில்லை. ஆகவே, அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அரசின் பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்களாக யார் வரப்போகின்றார்கள் கடும் போக்காளர்கள் மக்களால் ஒதுக்கப்படுவார்களா என்பவற்றைப் பொறுத்துத்தான் ஒரு அரசியல் தீர்வை நாம் பார்க்க முடியும்.

சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தாலும் இப்போது அவை படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மேற்குலக நாடுகள் கூட தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காட்டிலும் இப்போது மனித உரிமைகள் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கின்றன.

யுத்த காலத்தில் நடைபெற்ற விடயங்களில் அக்கறை காட்டுவதன் மூலம் இங்கு மீண்டும் இனங்களுக்கிடையே ஒற்றுமையற்ற நிலைமையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.

யுத்த காலத்தில் எமது உறுப்பினர்கள் பலர் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களை நாம் ஆதாரபூர்வமாக இலங்கை கண்காணிப்பு பணியகத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக் கூறிய போதும் அவர்கள் அதுபற்றி எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை. அன்று முதல் இன்றுவரை அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பக்கசார்பானதாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

முதலில் இனங்களுக்கிடையே சுமுகமான உறவுகளை ஏற்படுத்த வேண்டும். நீண்ட காலமாக யுத்தத்தினால் மூவினங்களுக்கிடையேயும் ஒரு அவநம்பிக்கை வளர்ந்திருப்பதும் அரசியல் தீர்வைக் கொண்டு வர முடியாமைக்கான ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே இனங்களுக்கிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முற்பட வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் கூட கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றை மறக்க முடியாவிட்டாலும் கூட ஒருவரையொருவர் மன்னித்து ஓன்றுபட்ட நிலையை உருவாக்கி சரியானதொரு தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.


கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்தது. இச் சந்திப்பு தமிழ் மக்களிடையே ஒரு நம்பிக்கையைத் தோற்றுவிக்குமா?
பதில்: எம்மைப் பொறுத்தவரையில் த. தே. கூட்டமைப்பு கடந்த காலத்தில் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். புலிகளாலேயே 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெல்லக்கூடியதாக இருந்தது. புலிகள் எதைக் கூறினார்களோ அதனையே த. தே. கூட்டமைப்பும் செய்து வந்திருக்கிறது.

இன்று புலிகள் இராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பினர் சுயமாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்கக்கூடிய நிலையில் இருக்கின்றனர். யார் விரும்புகிறார்களோ இல்லையோ மஹிந்த ராஜபக்ஷ தான் இந்நாட்டின் ஜனாதிபதி.

எமது பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் (நான் இங்கு அரசியல் தீர்வுப் பிரச்சினையைக் கூறவில்லை) மிக அதிகளவில் இருப்பதால், யுத்தத்தினால் அழிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட மக்கள் அகதி முகாம்களில் வாழும் இந்நிலைக்கு ஜனாதிபதியுடன் பேசாமல் ஒரு தீர்வு காண முடியாது.

ஆகவே இவர்கள் கடந்த காலங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதெல்லாம் ஜனாதிபதியைச் சந்திக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். அவ்வாறு இறுமாப்போடு இருந்ததால் மக்களுக்குச் செய்யக்கூடிய பல அடிப்படையான விடயங்களைக்கூட செய்ய முடியாமல் போனது. அவ்வாறு தட்டிக்கழித்ததால் அது அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கிறது.

ஆகவே இன்று இவர்கள் இப்படியானதொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதை மக்களும் நிச்சயம் வரவேற்பார்கள். மக்களைக் பொறுத்தவரையில் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பது ஒருபுறமிருக்க ஒவ்வொரு தனிமனிதனும் தனது அன்றாடப் பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பர்.

அகதி முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் இருக்கும் இவ்வேளையில் அரசியல் பிரச்சினைகளை விட அவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே முக்கிய பிரச்சினையாகும்.

இதையே நாமும் இன்று முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்தது உண்மையில் வரவேற்கக்கூடிய விடயமாகும். இதுவொரு ஆரம்பமாக இருக்கலாம். இச்சந்திப்பினால் உடனடியாக எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படாது போனாலும் இது நல்லதொரு ஆரம்பம். த. தே. கூட்டமைப்பை பொறுத்தவரையில் சரியோ பிழையோ இன்று வடக்கு, கிழக்கில் மிகப்பெரிய பலம் பொருந்திய 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருக்கின்றது.

ஆகவே அவர்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. வெறுமனே நாங்கள் ஜனாதிபதியைச் சந்திக்க மாட்டோம், தமிழ் மக்களின் தன்மானத்தைக் காப்போம் எனக்கூறிக்கொண்டு மாத்திரம் இருக்காது அந்த மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். அதற்கானதொரு நல்ல ஆரம்பமாகவே நான் இதனைப் பார்க்கிறேன்.


கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்குமென நீங்கள் கருதுகிaர்கள்?
பதில்: அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் கடந்த 5 வருட காலமாக புலிகளே ஏக பிரதிநிதிகள் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். யுத்தம் நடைபெற்றபோது கூட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி உலகமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில், அவர்கள் மக்களைக் காப்பாற்றுவதை விட புலிகளைக் காப்பாற்றுவதில்தான் அதிக கவனம் செலுத்தினர்.

ஆயிரக்கணக்கான சிறுவர்களை புலிகள் தமது படையில் பலவந்தமாக சேர்த்தபோது உலகமே அதைப்பற்றி பேசியது. அப்போதும் த. தே. கூட்டமைப்பு அதனை நியாயப்படுத்திப் பேசியது. பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியிலும் அச்சிறுவர்கள் தாங்களாகவே சென்று சேர்ந்துகொள்வதாக கூறினர்.

ஒரு விடயத்தில் நாம் அனைவரும் தெளிவுடன் இருப்போமானால் அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். அதாவது மே 18 இற்கு முந்திய காலம், மே 18 இற்கு பிந்திய காலம் அல்லது பிரபாகரனுக்கு முன்பு, பிரபாகரனுக்கு பின்பு என தமிழ் மக்களின் பிரச்சினைகளை வகுக்க வேண்டும்.

மே 18 இற்கு முன் நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். மே 18 இற்குப் பின் நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும். நாம் அனைவருமே ஒரு கருத்தொருமையுடன் சிந்தித்து செயற்படுவோமேயானால் நிச்சயம் தமிழ் மக்களுக்கு ஏதோ எங்களால் முடிந்த சேவையை ஆற்ற முடியுமென்று நான் நம்புகிறேன்.


கேள்வி : தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறதே?
பதில்: தமிழ் மக்களின் நலன் விரும்பிகள் மத்தியில் இவ்வாறானதொரு எதிர்பார்ப்பும், எண்ணமும் இருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகளால் உருவாக்கப்பட்ட, தெற்கில் சந்தேகத்துடன் பார்க்கப்படும் ஒரு அமைப்பாகும்.

தமிழ்த் தேசியவாத சாயம் பூசப்பட்ட அமைப்பாகவே பெரும்பான்மை இன மத்தியில் பேசப்படுகிறது. ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஏனைய அமைப்புகள் சேரவேண்டும் என்பது முக்கியமல்ல. த. தே. கூட்டமைப்பு என்ற பெயரெல்லாம் கைவிடப்பட்டு அனைத்து கட்சிகளும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் கூடிப்பேசி ஒரு அமைப்பை கொண்டு வருவதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை தருவதாக அமையும். த. தே. கூட்டமைப்பில் ஏனைய கட்சிகள் சேர்வதால் தெற்கில் மேலும் சந்தேகமும் அவநம்பிக்கையும் வளர இடமுண்டு.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதனை மேலும் சிக்கலாக்கிக் குழப்பிவிட இது காரணமாக அமைந்துவிடும்.


கேள்வி: உங்களைப் போன்றோர் இவ்வாறான விடயங்களை முன்வந்து செய்ய முடியாதா?

பதில்: நாங்கள் அதனைச் செய்யத் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறோம். ஆனால் இதனை தனியொரு தரப்பினரால் முன்னெடுக்க முடியாது. தனிநபராகவோ அல்லது தனிக் குழுவின் செயற்பாடாகவோ இருக்கக் கூடாது. ஏகப் பிரதிநிதித்துவக் கதைகளை விட்டுவிட்டு தமிழ்த் தரப்புக்களிடையே கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதே இப்போதைய தேவையாக இருக்கிறது. தமிழ் மக்களை மேலும் கூறு போடாது இருப்பதன் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும்.


கேள்வி: 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை, நடைமுறைப்படுத்துவது பற்றிய உங்கள் கருத்தென்ன?
பதில்: நிச்சயமாக இது தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. ஜே. ஆர். ஜயவர்த்தன ஆட்சிக் காலத்தில் ஒரு இலட்சத்திற்கு மேலான இந்திய அமைதிப் படையின் வருகை, இந்தியாவின் அழுத்தம் என்பன இருந்தும் கூட எம்மால் 13ஆவது திருத்தத்தையும் அதன் மூலம் கிடைத்த மாகாண சபையையுமே எம்மால் பெற முடிந்தது.

இன்று தமிழ் மக்களின் அரசியல் நிலமை மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது.

விடுதலைப் புலிகள் ஏனைய அனைவரையும் பலவீனப்படுத்திய பின் அவர்களே தம்மை ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறிச்செயற்பட்டனர். இன்று அவர்களும் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இத்தருணத்தில் 13ஆவது திருத்தத்திற்குக் கூடுதலாக எதையும் நாம் பெற்றுவிட முடியாது.

அது மாத்திரமல்ல. இந்திய அரசாங்கம் கூட அன்று 13ஆவது திருத்தத்தை விடக் கூடுதலாக அதிகாரங்கள் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போதிலும் இன்று 13 + என்ற எல்லையில் நின்று கொண்டிருக்கின்றனர். ஆகவே 13ஆம் திருத்தத்திற்கு இன்னும் சில முக்கிய அம்சங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் சுயமாக எதையும் செய்ய முடியவில்லையென அதன் முதலமைச்சர் கூறுகிறார். 13ஆவது திருத்தத்தை ஒரு நல்ல ஆரம்பமாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து படிப்படியாக தேவையான அம்சங்களை அதிகாரங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். 13ஆவது திருத்தம் ஒரு முடிவாக அல்லாமல் ஆரம்பமாகவே அமைய வேண்டும்.


கேள்வி: வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். அது இணைந்ததாகவே இருக்கவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.


கேள்வி: இனப்பிரச்சினைக்கான தீர்வில் இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எப்படியிருக்கின்றது?
பதில்: ஜே. வி. பியை இடதுசாரிக் கட்சியெனக் கூற முடியாது. ஏனெனில் அவர்கள் அடிப்படையில் இனவாதக் கருத்துக்களையே முதன்மைப்படுத்துகின்றனர். ஏனைய இடதுசாரிக் கட்சிகள் இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துகளைக் கொண்டுள்ளன.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களின் பலம் போதுமானதாக இல்லை. இடதுசாரிக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகள் இன்னும் இருக்கின்றன.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டோம். எதிர்வரும் காலங்களிலும் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்தே செயற்படுவோம்.


கேள்வி: இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆராயும் சர்வகட்சி மாநாடு தொடர்பில் உங்களது கருத்தென்ன?
பதில்: பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்விடயத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்ட போதிலும் அதில் ஐ. தே. க., த. தே. கூட்டமைப்பு ஆகிய பிரதான கட்சிகள் பங்குபற்றவில்லை.

இதனால் ஒரு தீர்வைக்காண முடியுமா என்பது சந்தேகம்தான். உண்மையாக ஒரு தீர்வைக்காண வேண்டுமானால் எதிர்க்கட்சியான ஐ. தே. க. மற்றும் த. தே. கூட்டமைப்பு ஆகியன இதில் பங்குபற்றியே ஆகவேண்டும்.


கேள்வி: கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க திட்டமிட்டுள்Zர்கள்?

பதில்: எதிர்கால நடவடிக்கைகள் பற்றி எதிர்வுகூற முடியாவிட்டாலும் கூட இன்று இடம்பெயர்ந்து மிகவும் இக்கட்டானதும் துரதிஷ்டமானதுமான நிலையில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்குத் தொடர்ந்தும் பிச்சை கொடுத்துக் கொண்டிராமல் அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

சொந்த இடத்தில் சுதந்திரமானதும், நிம்மதியானதுமான வாழ்க்கையினை அவர்கள் பெறுவதற்கு வெறுமனே அரசாங்கத்தை குறைகூறாமல், புலம்பெயர் மக்கள், சக்திகள் உட்பட சகல வளங்களையும் பயன்படுத்தி எமது மக்களை மிக விரைவில் நல்வாழ்வுக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

Read more...

இந்திய கரையோர காவல் பொலிஸார் உசார் நிலையில்.

புலிச் செயற்பாட்டாளர்களின் ஊடுருவல் சாத்தியங்கள் தொடர்பாக கரையோரக் காவல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு அறிவுத்தல்களை அடுத்து இந்திய கரையோரப் பிரதேசங்களில் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தமிழ் பேசும் பலரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இவ்விடயம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், கரையோரப் பிரதேசங்களில் உள்ள தங்குமிட விடுதிகளையும் விழிப்படையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Read more...

பாடசாலைகளில் புலிகளின் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் அகற்றப்படவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படக்கூடிய புலிகளின் நினைவுச் சின்னங்கள் யாவற்றையும் உடனடியாக நீக்கி விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலர் உபுல் வீரவர்த்தன, திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் காணப்படும் பாடசாலைகளில் இறந்த புலித் தளபதிகள், பொறுப்பாளர்கள், முக்கியஸ்தர்களின் உருவச்சிலைகள் மற்றும் ஞாபகச்சின்னங்கள் காணப்படுகின்றன. அத்துடன் சில பாடசாலைகளின் பெயர்கள் இறந்த புலித் தலைவர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அவ்வாறு பெயர் மாற்றம் பெற்றுள்ள பாடசாலைகளின் பெயர்கள் அவ்வப்பாடசாலைகளின் இயற்பெயருக்கு உடனடியாக மாற்றப்படவேண்டும் எனவும், அங்கு காணப்படக்கூடிய புலிகளின் சிலைகள் மற்றும் ஞாபகச்சின்னங்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Read more...

Friday, September 11, 2009

மாஸ்ரர்களான ஜோர்ஜ், மனோ ஆகியோர் மனிதாபினான அடிப்படையில் விடுதலை.

புலிகளியக்கத்தின் மொழிபெயர்ப்பாளரும், அவ்வியக்கத்தின் நீண்டநாள் செயற்பாட்டாளருமான ஜோர்ஜ் மாஸ்ரர் மற்றும் புலிகளின் ஊடக ஒருக்கிணைப்பாளராக செயற்பட்டுவந்த தயா மாஸ்ரர் ஆகியோர் நீதிமன்றினால் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வன்னியல் போர் முடிவடைவதற்கு சுமார் ஒரு மாதங்களுக்கு முன்னர் படையினரிடம் சரணடைந்திருந்த இவர்கள் இதுவரை காலமும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்கள் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகள் பலவற்றிற்கு பக்கபலமாக அல்லது துணையாக இருந்திருக்கின்றபோதிலும் அவர்களது மனமாற்றம், குடும்ப நிலைமைகள், உடல் ஆரோக்கியம், வயது என்பவற்றை கருத்தில் கொண்டு மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

Read more...

Thursday, September 10, 2009

ஸ்பெயினில் தொழில் பெற்றுத்தருவதாக இடம்பெறும் மோசடி தொடர்பாக எச்சரிக்கை.

ஸ்பெயின் நாட்டில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களிடம் தொழில்வாய்ப்பு பெற்றுதருவதாக அங்கு மோசடி கும்பல் ஒன்று செயற்பட்டுவருவதாக மட்றிட் இல் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறன மோசடியில் ஈடுபட்டுவரும் நிரந்தர வீசா விடயங்களை துரிதப்படுத்தி தருவதாகவும் பணம்பெற்று வருகின்றனர். இச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கையடக்க தொலைபேசி மூலமாக இவற்றை செய்துவருவதால் இவர்களை கைது செய்வது கடினமாக உள்ளதாக ஸ்பெயின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

Wednesday, September 9, 2009

கடந்த 4 வருடங்களில் பொலிஸ் தடுப்புக்காலில் இருந்த 91 உயிரிழந்துள்ளனர்.

கடந்த 4 வருடங்களில் பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த போது 91 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் டினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அவ்வாறு 2005 முதல் 2009 வரை உயிரிழந்தவர்களில் 32 பேர் இவ்வருடம் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

கன்னிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்கா பயிற்சியும் உபகரணங்களும் வழங்குகின்றது.

புலிகளின் வன்பிடியில் இருந்து மீட்கப்பட்ட பிரசேதங்களில் மக்களை மீள் குடியேற்றம் செய்யும் பொருட்டு படையினர் மேற்கொண்டுவரும் கன்னிவெடிகள் அகற்றும் செயற்பாடுகளுக்கு அமெரிக்க மேலும் உதவ முன்வந்துள்ளது.

இதன் பொருட்டு, எம்பிலிப்பிட்டியவில் உள்ள பொறியியல் படையணியின் பயிற்சிக்கல்லூரியில் விசேட பயிற்சிகளை அமெரிக்கப்படையினர் வழங்கி வருகின்றனர். அதுடன் அமெரிக்காவின் ஆசிய கட்டளை மையம் கன்னிவெடி அகற்றுதலுக்கு தேவையான ஒரு லட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தற்காப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது.

மேலும் கன்னிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்காக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா ஏற்கனவே வழங்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com