Monday, September 7, 2009

முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய 4 பெயர்களில் நடமாடிய புலி உறுப்பினர் நேற்று முன்தினம் கைது.

முக்கியஸ்தர்களை இலக்கு வைத்து அவர்களை கொலை செய்வதற்காக நான்கு பெயர்களில் நடமாடிய புலி இயக்க முக்கிய உறுப்பினர் ஒருவரை புலிகளின் அடையாள இலக்க விபரங்களுடன் நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி கெட்டம்புலா தோட்ட பிரதேசத்தில் விறகு மடுவமொன்றுக்குள் ஒழிந்திருந்த வேளையிலேயே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். மன்னார் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கொழும்பு, நீர்கொழும்பு மட்டக்குழி போன்ற இடங்களில் தற்காலிகமாக வசித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

பெனடி சுஜான், கொலம்பஸ், டரிகுமார் மற்றும் கே. வை. என நான்கு பெயர்களில் இவர் நடமாடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

அக்கரைப்பற்றில் TMVP காரியாலயத்தை அகற்றக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் .

அக்கரைப்பற்றில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயத்தை அகற்றக்கோரி அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பெரும் ஆர்பாட்டம் ஒன்றை நேற்று நண்பகல் நடாத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பெரியநீலைவணை தொட்டு பொத்துவில் வரை பரந்து வாழும் தமிழ் மக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயம் அக்கரைப்பற்றில் அமைக்கப்பட்டதை தொடர்ந்து அம்பாறைத் தமிழ் மக்கள், தொடர்சியாக தமது எதிர்ப்பைக் காட்டிவந்த நிலையில் நேற்று இடம்பெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் பிள்ளையானுக்கு எதிராக பல கோஷங்களை கிளப்பியதுடன் பிள்ளையானது கொடும்பாவியினையும் எரித்து தமது பூரண எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

ஆர்பாட்டத்தில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டதுடன் அவர்கள் „அம்பாறை மாவட்டத்தில் வர்ஷாக்கள் இல்லை' பச்சிளம் பாலகியை கொன்ற கொலைஞர்களே வெளியேறுங்கள் என்றும் கோஷசம் எழுப்பியதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் தமது பாதணிகளை களற்றி பிள்ளiயானது காரியாலயத்தினுள் வீசினர்.

நிலைமைகள் கட்டுக்கடங்காமல் போவதை அறிந்த பிரதேச பொலிஸ் அத்தியட்சர் ஸ்தலத்திற்கு விரைந்து நாளை குறிப்பிட்ட இடத்தில் உள்ள காரியாலயத்தை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக உறுதியளித்ததையடுத்து ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Read more...

ஐ.நா அதிகாரியின் வீசா ரத்து : புலிகளுக்கு ஆதரவாக பேசினாராம்.

ஐ.நா வின் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைகான பேச்சாளர் ஜேம்ஸ் எல்டெர் இனது இலங்கைக்கான வீசா ரத்துச் செய்யப்பட்டுள்ளமையை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி அபயக்கோண் உறுதி செய்துள்ளார். திரு. எல்டெர் புலிகளியக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தமையினால் அவரது வீசா இன்றுடன் (07ம் திகதி செப்டம்பர்) ரத்துச் செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் ஐ.நா கால அவகாசம் கேட்டிருந்ததற்கு இணங்க வீசா 21ம் திகதி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்ட்டுள்ளாக தெரிவித்துள்ளார்.

திரு. எல்டெர் உண்மைக்குப் புறப்பானதும் புலிகளுக்கு ஆதரவானதுமான கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கி வந்ததாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலர் பாலித்த ஹோகன்ன லண்டன் பிபிசி க்கு தெரிவித்துள்ளார்.

அதேநேரம் யுனிசெப் இன் பிராந்தியத் தலைவர் சாறா குறோவ் அவர்கள் பிபிசி க்கு கருத்து தெரிவிக்கையில், திரு எல்டெர் அவர்கள் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், பெணக்களுக்காக குரல் கொடுத்து வந்ததாகவும் அவரது சேவை அம்மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கப்பெற வழிகிடைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

சனல் 4 விற்கு எதிராக சட்டநடவடிக்கை. விசாரணைப் பிரதிகள் பான் கீ மூன் க்கு அனுப்பிவைப்பு.

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியினால் ஒலிபரப்பட்ட சர்சைக்குரிய வீடியோ காட்சி தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நாடாத்தியுள்ளது. குறிப்பிட்ட வீடியோவை தகவல் தொழில் நுட்பத்துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றவரும் உலகில் உள்ள பல பிரசித்திபெற்ற தொலைத் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளில் இயக்குனராவும் கடமையாற்றியிருக்கின்ற சிறி கேவாவித்தாரண அவர்கள் பரீட்சித்ததில், குறிப்பிட்ட வீடியோ முற்றிலும் பொய்யானது என தொழிநுட்ப ரீதியாக மிகவும் தெளிவாக விழக்கியிருக்கின்றார்.

அத்துடன் குறிப்பிட்ட வீடியோ தொடர்பாக கலாநிதி சத்துர ரஞ்சன் சில்வா, பிரிகேடியர் பிரசாட் சமரசிங்க, மேஜர் பண்டார ஆகியோர் வௌ;வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு அது பொய்யானது என தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

அறிக்கைகளின் பிரதிகள் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி சேவை என்பவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இலங்கையின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் பிரித்தானிய சனல் 4 ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் குறிபிட்ட வீடியோக்காட்சியை ஒளிபரப்பியுள்ளதாக இலங்கை அரசு குற்றஞ்சுமத்தி வருன்றது. மேலும் இவ்வாறு பொறுப்புணர்வு அற்ற முறையில் குறித்த ஒளிபரப்புக்கூட்டுத்தாபம் செயற்பட்டமைக்காக அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்து வருவதாகவும் தெரியவருகின்றது.

Read more...

Sunday, September 6, 2009

இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவல்

காஷ்மீரில் லடாக் பிராந்தியத்தில் 22 ஆயிரத்து 420 அடி உயர மவுண்ட் கயா என்ற குன்று உள்ளது. அது, காஷ்மீரின் லடாக்கும், இமாசலபிரதேசத்தின் ஸ்பிடியும், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லை, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் வரையறுக்கப்பட்டது. இதையே சர்வதேச எல்லையாக இந்தியாவும், சீனாவும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், மவுண்ட் கயா அருகே இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் 1 1/2 கி.மீ. தூரம் உள்ளே நுழைந்தனர். அங்குள்ள பாறைகளில் சிவப்பு நிற பெயிண்டால் `சீனா' என்று திரும்பும் திசையெங்கும் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளனர்.

Read more...

கல்விக்கண் திறக்க கடைக்கண் திறந்தவன், நெற்றிக்கண் திறந்தவனுக்கு நிகராவான்

அன்பான தமிழ் உறவுகளே,
எத்தனையோ துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் ஏதோ ஒரு நம்பிக்கையோடு புலம்பெயர்ந்து வாழும் உங்கள் அனைவரது கவனத்துக்கும் ஒரு அவசர மடல்:


பல ஆண்டுகளாக எமது தாய்த்தேசத்தில் துப்பாக்கி மோதல்களால் ஏற்பட்ட துர்ப்பாக்கியமான நிகழ்வுகளால் அழிந்துபோன எம் சொந்தங்களை அழிக்கப்பட்ட அவர்தம் சொத்துக்களை எண்ணிப் பார்க்கும்போது, எம் கண்ணில் நீர்முட்டுகிறது. யாரை நாம் நோவது? யாரிடம் போய்
முறையிடுவது? சொத்துக்களை இழந்து,


கடிதங்களின் மேல் அழுத்துங்கள் Pleae click on letter


Read more...

அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஜேவிபி மீள் பரிசீலினை.

இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்திற்கு பாராளுமன்றில் ஆதரவு வழங்குவது தொடர்பாக கட்சி மீள் பரிசீலினை செய்யவுள்ளதாக ஜேவிபி யின் பாராளுன்ற உறுப்பினர்கள் குழுத்தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிவரும் வியாழக்கிழமை பாராளுமன்று கூடுவதற்கு முன்னர் தமது கட்சி இது தொடர்பான புதிய முடிவொன்றை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புலிகள் இயக்கம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்பது எதிர்கட்சிகளின் எதிர்பார்பாக இருந்து வந்தபோதிலும் ஜேவிபி அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாகவே வாக்களித்து வந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் ஜேவிபி சார்பு பத்திரிகையான லங்கா நியூஸ் பேப்பர் எனும் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை அடுத்தே அக்கட்சி தமது முடிவை மீள்பரிசீலினை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

Read more...

TNA ஜனதிபதியுடன் IDP s சம்பந்தமாக பேசப்போகின்றார்களாம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நாளை பிற்பகல் 4.30 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெற உள்ள கலந்துரையாடலில் இடைத்தங்கல் முகாம் மக்கள் தொடர்பாக தாம் பேச உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

புலிகள் இயக்கம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் தாமாவே ஜனாதிபதியிடம் நேரம் ஒன்றை பெற்றுக்கொண்டு கலந்துரையாடல்களுக்குச் செல்லும் கூட்டமைப்பினர், இச்சந்திப்பினை தமது அரசியல் எதிர்காலத்தினை மாற்றி அமைப்பதற்காக ஏற்படுத்தியுள்ளதாக பலராலும் சந்தேகிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு தாம் நிபந்தனைகளை வைத்திருப்பதாக கூறிவந்திருந்தனர். ஆனால் நாளை இடம்பெறப்போகும் சந்திப்பில் எந்த நிபந்தனையுடன் ஜனாதிபதியைச் சந்திக்கின்றனர் என்பதை இதுவரை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இதுவரை காலமும் புலிகளுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நாடத்தியா வரலாற்றுப்பதிவுகளுடன் மேலும் அத்தியாங்களை சேர்த்துக்கொள்ளாமல் தமிழ் மக்களின் நலனில் நின்று செயற்படவேண்டும் என அனைவரும் எதிர்பார்கின்றனர்.

Read more...

பிரதமர் ரத்தனசிறி விக்கரமாநாயக்கவின் கைவிரல் அடையாளம் பெறப்பட்டது.

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்ற இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அவருடைய கைவிரல் அடையாளம் பெறப்பட்டுள்ளது. சாதாரணமாக ராஜதந்திர விஜயம் ஒன்றை மேற்கொண்டு மிக விசேட அதிதிகளுக்கான (VIP lounge) பாதையில் இல் செல்லும் நாட்டின் தலைவர்கள் இவ்வாறு சாதாரண பயணிகள்போல் நாடத்தப்படுவதில்லை.

இவ்விடயம் தொடர்பாக ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஜப்பான் அரச உயர் மட்டத்தினரிடம் முறையிட உள்ளதாக தெரியவருகின்றது. எது எவ்வாறாயினும் அவருடைய கைவிரல் அடையாளம் எடுக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.

Read more...

இரு பாக்கிஸ்தானியர்களுடன் நான்கு இலங்கையர்கள் கைது

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு பாக்கிஸ்தானியர்களுடன் நான்கு இலங்கையர்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானிய பிரஜைகளான, மொகமட் றாபிக் மொகமட் அகமட் என்வர் 97 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும், மொகமட் அப்துள் கரீம் 91 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முறையே 11, 6 தடவைகள் இலங்கை வந்து சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் கொம்பனித்தெரு பிதேசத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.

Read more...

Saturday, September 5, 2009

ஆந்திர முதல்வர் ரெட்டியின் உடலுக்கு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா உட்பட தலைவர்கள் அஞ்சலி.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடலுக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ஏராளமான கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி
செலுத்தினர்.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சித்தூருக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அவரது ஹெலிகாப்டர் மாயமாய் மறைந்தது. அந்த ஹெலிகாப்டருடனான ரேடியோ தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், பொதுமக்கள், விமானப் படை வீரர்கள் அனைவரும் ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரை விடிய விடிய தேடினார்கள். ஆனால் மறுநாள் தான் அதாவது 24 மணி நேரத்திற்கு பிறகு அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. நல்லமல்லா மலைப் பகுதியில் அந்த ஹெலிகாப்டர் மோதி தீப்பிடித்து நொறுங்கி விழுந்ததில் முதல்வர் ரெட்டியும், அவருடன் சென்ற மேலும் 4 பேரும் உடல் கருகி பலியானது 24 மணி நேரத்திற்கு பிறகு தான் தெரியவந்தது.

பின்னர் ஒருவழியாக இவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. முதல்வர் ரெட்டியின் உடல் ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு கொண்டு வரப்பட்டது. ரெட்டியின் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்த பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் மற்றும் திரளான கட்சி தலைவர்களும் ரெட்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பிறகு பேகம்பேட்டில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் இரங்கல் செய்திகளையும் அவர்கள் எழுதி வைத்தனர். பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா அஞ்சலி செலுத்திய பிறகு மத்திய மந்திரிகள் ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, வீரப்ப மொய்லி, பிரதிவிராஜ் சவுகான் மற்றும் முதல்வர்கள் ஷீலாதீட்சித், அசோக் ஜெல்லட் ஆகியோரும் ரெட்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ரெட்டியின் குடும்பத்தாருக்கு அவர்கள் தங்களுடைய ஆறுதலை தெரிவித்துக் கொண்டனர்.

பிறகு ரெட்டியின் உடல் மூவர்ண கொடியால் போர்த்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வெளி ராணுவ வாகனத்தில் வைக்கப்பட்டது. பின்னர் இறுதி ஊர்வலம் புறப்பட்டு சென்றது. வழி நெடுக லட்சக்கணக்கான மக்கள் முதல்வரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ரெட்டியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இதையொட்டி நேற்று ஆஇந்திர மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் எதுவும் செயல்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்த ஆந்திராவே சோகத்தில் மூழ்கியிருந்தது.

Read more...

கூட்டமைப்பின் மனமாற்றம் நிரந்தரமானதாக இருப்பதே தமிழ் மக்களுக்கு விமோசனம்

தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்காக ஜனாதிபதியுடன் ஒத்துழைத்துச் செயற்படப் போவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் கூறிய செய்தி பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. இச்செய்தியைத் தொடர்ந்து, செப்ரெம்பர் 7ந் திகதி (நாளை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவிருக்கின்றது என்ற செய்தியும் வெளியாகியது.

இனப் பிரச்சினை தொடர்பாகத் தமிழ்த் தலைவர்கள் இந்த அணுகுமுறையையே பின்பற்ற வேண்டும் என்று பிரச்சினையின் தீர்வில் அக்கறையுள்ள சக்திகள் பல வருடங்களாக வலியுறுத்தி வந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்போதெல்லாம் வேறு பாதையில் பயணித்துக்கொண்டிருந்தது. அது தமிழ் மக்களை அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதை என்று சுட்டிக்காட்டிய போதிலும் கூட்டமைப்புத் தலைவர்கள் அப்போது அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இது ஒரு நல்ல திருப்பம்.

புலிகளின் தனிநாட்டுப் போராட்டம் தமிழ் மக்களுக்கு விடிவைக் கொண்டு வரும் என்ற மாயைக்குள் மயங்கிப் போயிருந்த பலர் இன்று அதிலிருந்து விடுபட்டுத் தெளிவு பெறுகின்றார்கள். புலிகளின் மோசமான தோல்வியும் அவர்களால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் இந்தத் தெளிவுக்குக் காரணம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது யதார்த்தத்தைப் புரிந்துகொண்டிருப்பதாலேயே ஆக்கபூர்வமான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றதென நம்புகின்றோம். புலிகளின் தோல்விக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

ஜனாதிபதி கூட்டிய அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கக் கூட்டத்தில் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சிaகாந்தா பங்கு பற்றினார். இப்போது சம்பந்தனின் கருத்து வந்திருக்கின்றது. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் சொல்கின்றார்கள்.

இந்த மனமாற்றம் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற தந்திரோபாயமா அல்லது நிரந்தரமான மாற்றமாக இருக்குமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுவதைத் தவிர்க்க முடியாது. புலிகளுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்புத் தலைவர்கள் நடந்துகொண்ட முறை மாத்திரமன்றி அவர்களின் கடந்த கால செயற்பாடுகளும் இச் சந்தேகத்துக்குக் காரணம்.

சமஷ்டிக் கோரிக்கையைத் தமிழரசுக் கட்சி முன்வைத்தது. அது தமிழர் விடுதலைப் கூட்டணியாக உருமாற்றம் பெற்றதும் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் தனிநாட்டுத் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு மாவட்ட சபைகளை ஏற்றுக்கொண்டது.

இப்படியாக நேரமொரு கொள்கையும் நிமிடமொரு பேச்சுமாக இந்தத் தமிழ்த் தலைவர்கள் செயற்பட்ட போதிலும் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்துக்கு இத் தலைவர்கள் காட்டிய எதிர்ப்பு தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இடம்பெற்ற மரணங்களும் அகதி வாழ்க்கையும் இந்த எதிர்ப்பின் தவிர்க்க முடியாத விளைவுகள். இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி குறைந்தது இருபத்தைந்து வருடங்கள் பின்தள்ளப்பட்டிருப்பதும் அடங்கிக் கிடந்த பேரினவாதக் குரல் ஓங்கி ஒலிக்கும் நிலை ஏற்பட்டதும் இந்த எதிர்ப்பின் விளைவுகளே.

பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்துக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி ‘கடைசி நிமிடம்’ வரை ஆதரவு தெரிவித்து வந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தூதுக் குழுவொன்று ஒரு கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவைச் சந்தித்துப் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது. தீர்வுத் திட்டத்துக்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் வாக்களிக்கப் போவதாகத் தீர்வுத் திட்டத் தயாரிப்பில் பங்களிப்புச் செய்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு சம்பந்தன் கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் தீர்வுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. எதிர்ப்பதோடு நிற்காமல் புலிகளுடன் இணைந்து தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படத் தொடங்கின. இதன் விளைவாகத் தமிழ் மக்கள் முகங்கொடுத்த இறப்புகளுக்கும் இழப்புகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான பொறுப்பாளி. சுருக்கமாகக் கூறுவதானால், அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலம் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்துச் சீரழிந்துவிட்டனர்.

கூட்டமைப்பின் இன்றைய செயற்பாடுகளும் கருத்து வெளிப்பாடுகளும் எவ்வளவுக்கு நம்பகரமானவை என்ற சந்தேகத்தை இக் கசப்பான அனுபவவங்களே மக்களிடம் தோற்றுவிக்கின்றன.

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் ஜனாதிபதியுடன் ஒத்துழைப்போம் எனக் கூறுவதும் மாத்திரம் போதாது. பேச்சுவார்த்தையும் ஒத்துழைப்பும் சமகால யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு அதற்கு அமைவான செயற்பாடாக இருக்க வேண்டியது அவசியம். யதார்த்தத்துக்கு ஒவ்வாத கோரிக்கைகளை வலியுறுத்துவது மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் கதையாகிவிடும்.

அழிவுகரமான தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்ததால் அரசியல் தீர்வு முயற்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிராந்திய சுயாட்சி என்ற நிலையை நெருங்கி வந்த தீர்வு முயற்சி இன்று பதின்மூன்றாவது திருத்தத்துக்கு முற்பட்ட காலத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்கான நாடளாவிய பிரசாரத்துக்கு மத்தியில் அடங்கிப் போயிருந்த பேரினவாத சக்திகள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இனப் பிரச்சினையை அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதேயொழியப் பிரச்சினையின் தீர்வில் எந்தக் காலத்திலும் அக்கறை செலுத்தியதில்லை. அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. இந்த நிலையில் உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருப்பது பதின்மூன்றாவது திருத்தம். இத்திருத்தம் இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வல்ல. எனினும் உடனடியாக இத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

இன்று பெரும்பாலான தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறி அகதி முகாம்களிலும் வேறு இடங்களிலும் வாழ்கின்றார்கள். இவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். தங்கள் வழமையான தொழில்களை ஆரம்பிக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை செயற்படுவதால் அங்குள்ள மக்கள் தங்கள் பெரும்பாலான கருமங்களை மாகாண மட்டத்தில் நிறைவேற்றி வருகின்றார்கள். இந்த வாய்ப்பு வட மாகாண மக்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்படலாகாது. பதின்மூன்றாவது திருத்தம் நடைமுறைக்கு வருவது மக்களின் இந்த உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும். இதுதான் இன்றைய யதார்த்தம்.

பதின்மூன்றாவது திருத்தம் பற்றாக்குறைத் தீர்வு என்றும் அதை ஏற்க முடியாது என்றும் மிக அண்மைக் காலம் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறி வந்திருக்கின்றார்கள். இன்னும் சிலர் அப்படிக் கூறுகின்றார்கள். பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தக் காலத்திலும் நாம் கூறவில்லை. இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள எவரும் பதின்மூன்றாவது திருத்தம் முழுமையான அரசியல் தீர்வு என்று கூறவில்லை. பதின்மூன்றாவது திருத்தத்தை இப்போது ஏற்றுக்கொண்டு முழுமையான தீர்வுக்காகத் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதையே யதார்த்த பூர்வமான அணுகுமுறையில் நம்பிக்கை உள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். கிடைக்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு எஞ்சிய உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும் என்ற கோட்பாடு தமிழ்த் தலைவர்களுக்குப் புதியதல்ல. பண்டா- செல்வா ஒப்பந்த காலத்திலும் டட்லி- செல்வா ஒப்பந்த காலத்திலும் இக் கோட்பாட்டைத் தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.

அழிவுகரமான தனிநாட்டுப் பாதையைக் கூட்டமைப்புத் தலைவர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்று மக்கள் நம்பும் நிலை தோன்ற வேண்டும். அந்தப் பாதையில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் இன்றும் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். எனவே கூட்டமைப்புத் தலைமை துணிச்சலாக நல்ல முடிவுக்கு வரவேண்டும். தமிழ் மக்களுக்கு உடனடியாக நிம்மதியான வாழ்வு கிடைப்பதற்கும் படிப்படியாக முழுமையான அரசியல் தீர்வை அடைவதற்கும் ஏற்ற முடிவு எதுவோ அதுவே நல்ல முடிவு.

பதின்மூன்றாவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்போவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறினார். தமிழ்த் தலைவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தத் தவறினால் இதுவும் இழந்த சந்தர்ப்பங்கள் பட்டியலில் சேர்ந்துவிடும்.

நன்றி தினகரன்

Read more...

மேலும் 3500 பொலிஸார்.

பொலிஸ் திணைக்களத்தில் மேலும் 3500 பொலிஸாரை இணைத்துக்கொள்ளும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மேற்படி வெற்றிடங்களுக்காக 15000 விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளதுடன் இவர்களில் 230 உதவிப் பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குவதாக தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது நபர்களின் பின்புலம் மற்றும் அவர்களது வரலாற்றுப் பதிவுகள் தொடர்பாக மிகவும் அவதானம் செலுத்துமாறு ஆட்சேர்பு திணைக்களத்தினைரை பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவ்வாறு தகுதியற்றவர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொண்டு பல்வேறு அவப்பெயர்களை திணைக்களத்திற்கு பெற்றுத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மிதிவெடிகள் அகற்றும் இயந்திரங்கள் இறக்குமதி.

வன்னிமக்களை மீள்குடியேற்றும் செயற்திட்டங்களை துரிதப்படுத்தும் பொருட்டு மிதிவெடி மற்றும் கன்னிவெடிகளை அகற்றும் வேகத்தை அதிகரிப்பதற்காக செக்கோசிலோவாக்கியா நாட்டில் இருந்து கன்னிவெடி அகற்றும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

மக்கள் இல்லாமல் தனி சூனியப்பிரதேசங்களாக, மயானங்களாக காட்சிதரும் வன்னிப்பிரதேத்தில் விதைக்கப்பட்டுள்ள மிதிவெடி மற்றும் கன்னிவெடிகளை அகற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினருடன் மேலும் 8 அமைப்புக்கள் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள கன்னிவெடி அகற்றும் செயற்பாட்டின் இணைப்பாளர் மேஜர் ஜெனரல் டி.எம்.டி அல்விஸ் இக்குழுவினரால் நாளொன்றுக்கு 10 சதுரமீற்றர் (100 சதுர அடி) நிலப்பரப்யையே சுத்தம் செய்ய முடிவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட இயந்திரங்கள் ஊடாக நாளொன்றிற்கு 5000 சதுர அடி நிலப்பரப்பை சுத்தம் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

MineWolf, எனப்படும் குறிப்பிட்ட இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கு கனடா அரசு நிதி உதவி புரிவதாக தெரியவருகின்றது.

குறிப்பிட்ட இயந்திரம் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் கீழ் காணப்படும் இணைப்பிற்குச் சென்று பார்வையிடலாம். ஒரு மிதிவெடி ஒன்றின் பெறுமதி 3 தொடக்கம் 30 அமெரிக்க டொலர்கள் எனவும் அவற்றில் ஒன்றை களற்றுவதற்கான செலவு 1000 அமெரிக்க டொலர்கள் எனவும் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.minewolf.com/minewolf-demining-machine.html


Read more...

ஏறாவூர்ப் பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு.

கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கறடியனாறு காட்டுப்பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டிஐஜி நிமால் மெடிவக்க தெரிவித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com