Wednesday, March 6, 2013

வெனிசுலா அதிபர் மரணம்!

வெனிசுலா அதிபரான ஹியூகோ சாவேஸ் (வயது 58), புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் கியூபாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்த நிலையில் அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக புதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை முடிந்து வெனிசுலா அதிபர் சாவேஸ் கடந்த மாதம் 19-ம் தேதி நாடு திரும்பி வீட்டில் ஓய்வெடுத்து வந்த சாவேசுக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து ராணுவ ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ஏற்கனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹியூகோ சாவேசுக்கு நேற்று புதிய நோய் தொற்றும் ஏற்பட்டது இதனால் அவரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்த நிலையில் வெனிசுலா நாட்டின் நேரப்படி நேற்று மாலை 4.25 மணிக்கு மரணம் அடைந்ததாக துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com