Sunday, February 28, 2010

மேவின் சில்வா ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரச்சார மேடையில்.

களனிய பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார மேடையொன்றில் தோன்றிய ஆழும் கட்சியின் அமைச்சர் மேவின் சில்வா எதிர்கட்சி மற்றும் ஆழும் கட்சியினராகிய நாம் எவ்விதத்திலும் வன்முறைகளில் ஈடுபடாது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதே நேரம் நாம் இருவரும் சேர்ந்து அன்னப்பறவையினருக்கு எம்பிரதேசத்தில் இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். அன்னப்பறவை என அவர் ஜெனரல் பொன்சேகா , ஜேவிபி கூட்டை குறிப்பிட்டுள்ளார்.

Read more...

வேட்பாளர்களிடமிருந்து திகதியிடப்படாத இராஜனாமா கடிதங்கள் பெறப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து திகதியிடப்படாத இராஜனாமா கடிதங்கள் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினுள் நிலவும் உள்வீட்டு பிணக்குகள் காரணமாக பாராளுமன்றுக்கு தெரிவான பின்னர் கட்சி தாவக்கூடிய ஆபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

அணு ஆயுத பாதுகாப்பு கூட்டம் ஏப்ரல் 12-ந் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது

அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நாட்டு தலைவர்களின் கூட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூட்டி இருக்கிறார். இது ஏப்ரல் 12-ந் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. இதில் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அணு ஆயுத கடத்தலை தடுப்பது போன்றவை பற்றி விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். `அடுத்த 4 ஆண்டுகளுக்குள் அணு ஆயுத பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதன் மூலம் அணு ஆயுதங்கள், தீவிரவாதிகளின் கையில் சிக்காமல் தவிர்க்க முடியும்' என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் கிடையாது: அமெரிக்கா அறிவிப்பு
ஆயுதம் தயாரிப்பதற்கான அணு உலை வேறு, மின்சார உற்பத்திக்கான அணுசக்தி நிலையம் வேறு அணு என்று 2 ஆகப்பிரித்து மின்சக்திக்கான அணுஆலை அமைப்பதற்கு உதவி செய்வது என்று அமெரிக்கா முடிவு செய்து இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. மின்சார உற்பத்திக்கான அணுஉலைக் கூடங்களுக்கு தேவையான யுரேனியத்தை சப்ளை செய்வது போன்ற பல உதவிகளை அமெரிக்கா இந்தியாவுக்கு செய்ய இருக்கிறது. இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை தங்களுடன் செய்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரி வருகிறது. இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்து விட்டது. பாகிஸ்தான் தலைவர்களிடம் இதை அமெரிக்கா தெளிவுபடுத்தி விட்டது.


Read more...

இனப்பிரச்சினையின் தீர்வுக்கு கொள்கை எதுவும் இல்லாமலே கூட்டமைப்பு போட்டி

தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோரிய தலைவர்கள் இனப் பிரச்சினையை வைத்தே அரசியலில் வாழ்ந்தார்கள். இவர்களின் தவறான முடிவுகள் காரணமாக இனப்பிரச்சினை காலத்துக்குக் காலம் புதிய பரிமாணம் பெற்று வளர்ந்ததேயொழியத் தீர்வை நோக்கி நகரவில்லை.

பாராளுமன்றத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. கட்சிகளின் ‘பிரசார போர்’ இனி உச்ச கட்டத்தை அடையப்போகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எல்லா மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றது. சென்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தத் தடவை வேட்பாளர்களாக இல்லை. உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவை சேனாதிராசாவையும் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் தவிர மற்றவர்கள் புதுமுகங்கள். அ. விநாயகமூர்த்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்தான். ஆனால் சென்ற தேர்தலில் அவர் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவில்லை. வன்னியில் போட்டியிட்டுத் தோற்றவர்.

கூட்டமைப்புப் பட்டியலில் சேர்க்கப்படாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் பழிவாங்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென்ற முடிவைக் கட்சிக்குள் எதிர்த்தவர்களையும் பொன்சேகாவுக்காகப் பிரசாரம் செய்யாதவர்களையுமே கூட்டமைப்புத் தலைமை ஓரங்கட்டியிருப்பதாகப் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட்டமைப்புத் தலைவர்கள் வேறு காரணங்களைக் கூறியிருக்கின்றார்கள். பழைய தமிழரசுக் கட்சிக் காரருக்கே நியமனம் என்பதும் சென்ற தேர்தலில் புலிகளால் நிறுத்தப்பட்டவர்களை நியமிக்கவில்லை என்பதும் தமிழ்த் தேசியம் பற்றிப் போதுமான அளவு பேசாதவர்களை நியமிக்கவில்லை என்பதுமே அக் காரணங்கள்.

இக்காரணங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிரிக்கின்றார்கள். இக் காரணங்களை மக்கள் ஏற்கப்போவதில்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே தேசியம் பேசியவர்கள்தான். ஓரங்கட்டப்பட்ட எம். பிக்களில் சிலர் எல்லோரிலும் பார்க்கக் கூடுதலாகத் தேசியம் பேசியவர்கள்.

பழைய தமிழரசுக் கட்சிக்காரருக்கே இடம் என்றால் சுரேஷ் பிரேமச்சந்திரன் எந்தக் காலத்தில் தமிழரசுக்கட்சியில் இருந்தவர் என்ற கேள்வி எழலாம். ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிலும் பலர் தமிழரசுக் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்களே.

புலிகளால் நிறுத்தப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என்பது ‘பூச்சுற்றும்’ கதை. சென்ற பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வேட்பாளர்களாகப் போட்டியிட்ட எல்லோரும் புலிகளால் நிறுத்தப்பட்டவர்களே. முழு உலகத்துக்கும் இது தெரியும்.

பழையவர்களை நீக்கியதற்கான உண்மைக் காரணம் மூன்று பேருக்குத்தான் தெரியும் என்கிறார்கள் நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள். சம்பந்தனும் சேனாதிராசாவும் பிரேமச்சந்திரனும் தான் அந்த மூன்று பேருமாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகப்பட்ட புதுமுகங்களைக் களத்தில் இறக்கியிருக்கின்றது. கூட்டமைப்பின் மீது மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியைப் புதுமுகங்களின் மூலம் மறைப்பதற்கான முயற்சி என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

புதுமுகங்களை நியமிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் எந்தக் கொள்கையும் இல்லாமல் புதுமுகங்களை நிறுத்துவதால் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை. கூட்டமைப்புத் தலைவர்கள் தமிழ்த் தலைமைக்குப் பாரம்பரிய உரிமை கோரலாம். தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லாம் ஒரே பாரம்பரியத்தில் வந்தவையே. ஆனால் கொள்கையைப் பொறுத்தவரையில் பாரம்பரிய உரிமை கோர முடியாது. இனப்பிரச்சினை தொடர்பாகத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு எந்தக் காலத்திலும் கொள்கை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சி சமஷ்டியை முன்வைத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. பின்னர் மாவட்ட சபையை ஏற்றுச் செயற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டது. இப்போது எந்தக் கொள்கையும் இல்லாமல் நிற்கின்றது.

புலிகளின் ஆயுதப் போராட்டத்தோடு தனிநாட்டுக் கோரிக்கையும் தோல்வியடைந்துவிட்டது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் கூட்டமைப்புத் தலைவர்கள் இருக்கின்றார்கள். தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டதாக இன்று வரை அவர்களால் கூற முடியவில்லை. ஆனால், தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம் என்று பல மாதங்களாகச் சொல்கின்றார்கள். அத்திட்டம் இப்போதும் தயாரிப்பு நிலையிலேயே இருக்கின்றது. தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்க முடிந்தது. ஆனால் பல மாதங்களாகியும் தீர்வுத்திட்டத்தைத் தயாரிக்க முடியவில்லை. இனப் பிரச்சினையின் தீர்வுக்காக கொள்கை எதுவும் இல்லாமலே கூட்டமைப்பு வேட்பாளர்கள் களமிறங்குகின்றார்கள்.

தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்கும் அருகதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்று ஆனந்தசங்கரி அண்மையில் கூறினார். அவர் என்ன அடிப்படையில் அப்படிக் கூறினாரோ தெரியாது. ஆனால் கூட்டமைப்புக்கு அருகதை உண்டா என்ற கேள்வியைப் பலர் கேட்கின்றார்கள்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோருபவர்கள் யாராக இருந்தாலும், இனப் பிரச்சினைக்குத் தெளிவானதும் சாத்தியமானதுமான கொள்கைத் திட்டமொன்றை முன்வைக்காமல் மக்களின் வாக்குகளைக் கேட்கும் அருகதை இல்லை. கூட்டமைப்பு கொள்கை இல்லாமலே வாக்குக் கேட்கின்றது.

அடுத்ததாக, அறுபது வருட காலமாக எதையும் சாதிக்காதவர்கள் எப்படி வாக்கும் கேட்பது? கூட்டமைப்பும் அதன் முன்னோடிக் கட்சிகளும் இனப்பிரச்சினை தொடர்பாக இதுவரை சாதித்தது என்ன என்ற கேள்விக்கு எதுவும் இல்லை என்பதே பதில்.

இக் கட்சிகளின் தலைவர்கள் இனப் பிரச்சினையைத் தவிர வேறெதையும் பேசவில்லை. இப் பிரச்சினையை அரசியலில் வாழ்ந்தார்கள். இவர்களின் தவறான முடிவுகள் காரணமாக இனப் பிரச்சினை காலத்துக்குக் காலம் புதிய பரிமாணம் பெற்று வளர்ந்தது. இறுதியில் தமிழ் மக்களின் அழிவுக்கும் இவர்கள் புலிகளுடன் சேர்ந்து வழிவகுத்தார்கள்.

தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் இத் தலைவர்கள் மோசமாகத் தோல்வியடைந்து விட்டார்கள். இத் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு இவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்குவதன் மூலம், நடைமுறைச் சாத்தியமான வழியில் தீர்வை நோக்கிச் செல்வதற்கேற்ற புதிய தலைமைக்கு வழிவிட வேண்டும்.

கூட்டமைப்புத் தலைவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவது பற்றிச் சில வாரங்களுக்கு முன் பேசினார்கள். ரவூப் ஹக்கீமும் சம்பந்தனும் கூட்டாக ஊடகவியலாளர் மகாநாடும் நடத்தினார்கள். இனப் பிரச்சினையின் தீர்வுக்காக இணைந்து செயற்படப் போவதாக அப்போது இருவரும் கூறினார்கள். இனப் பிரச்சினையின் தீர்வுக்காக இரண்டு கட்சிகளிடமும் கொள்கை இல்லாத போது எப்படி இணைந்து தீர்வு காண்பார்கள் என்று இப்பத்தி கேள்வி எழுப்பியது.

கூட்டாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் கதை அவ்வளவுதான். முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் போய்விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாக நிற்கின்றது.

மர்ஹும் அஷ்ரஃப்பின் மரணத்துக்குப் பின் முஸ்லிம் காங்கிரஸில் ஆரம்பித்த சீரழிவு தொடர்கின்றது என்று முஸ்லிம் காங்கிரஸ் அனுதாபி ஒருவர் கூறுகின்றார். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் அது உண்மை என்பது புரியும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எப்போது முஸ்லிம் காங்கிரஸ் உறவு வைக்கத் தொடங்கியதோ அன்றே சீரழிவு தொடங்கிவிட்டது எனலாம். மரம் சின்னம் இப்போது மெல்லமெல்ல மறைந்து வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் போட்டியிடுவதற்கு இடம்தேடி அலையும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கின்றது. எங்கே போட்டியிட்டாலும் வெல்ல முடியும் என்று ஒரு காலத்தில் மார்தட்டியவர் இப்போது எங்கே போட்டியிட்டால் வெல்லலாம் என்று தேடும் நிலை வந்திருக்கின்றது.

திருகோணமலை, வன்னி, மட்டக்களப்பு என்று ஆராய்ந்து பார்த்துவிட்டுக் கொழும்பில் போட்டியிட முன்வந்தார். ரஜாப்தீன் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. மீண்டும் சொந்த இடமான கண்டியில் போட்டி. அங்கேயும் எதிர்ப்பு. காதர் ஹாஜியார் எதிர்க்கிறார். ஒறிஜினல் ஐக்கிய தேசியக் கட்சிக்காரருக்கே ஆதரவு என்று காதர் ஹாஜியார் பத்திரிகைகளுக்குக் கூறியிருப்பது ஐக்கிய தேசியக் கட்சிச் சின்னத்தில் வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ்காரருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்பதாகும்.

நன்றி தினகரன்


Read more...

Saturday, February 27, 2010

எல்லாருக்கும் எம்.பி. பதவி தானாம் வேணுமாம். கூறுகின்றார் தங்கேஸ்வரி.

தேசியத்தை உண்மையாகவே நேசிப்பவள் என்பதால் மஹிந்தவின் ஆள்' என எனக்கு நாமம் சாத்திவிட்டார்கள்'' தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டி

கேள்வி : இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கொள்கை என்ன?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - தமிழர் விடுதலைப் புலிகள் இரண்டும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு, தேசியம் என்ற இரண்டையுமே முன்வைத்து முதன்மைப்படுத்தி வந்துள்ளன. அது புலிகள் பலமாக இருந்தபோது வைத்த கொள்கை.

அதாவது எமக்குரிய சுயநிர்ணய உரிமை கிடைக்குமானால் அபிவிருத்தி என்பது பெரிய விடயமல்ல. ஓரிரு வருடத்தில் அபிவிருத்தி முடிந்துவிடும் என்று.

அது சரி. அந்த காலகட்டத்தில் இப்போ எமக்கென்று இருந்த பலம் போய் பலவீனமான கட்டத்தில் ஆட்சியில் இருப்பவர்களுடன் பேசித்தான் தீர்வு காண வேண்டும். அதேநேரம் மக்களுடைய தேவைகள் பல இருக்கின்றன.

30 வருடகாலமாக சீரழிக்கப்பட்டுக்கொண்டேபோய் இறுதிக்கட்ட சீரழிவும் ஏற்பட்ட பின்பு - இன்னும் மக்கள் மர நிழலில் வாழ முடியாது. அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - அப்போதுதான் காலவோட்டத்தில் ஏனையோருடன் சமமாக எதிர் நிற்க முடியும். அதை எமது தலைவர்கள் ஏன் உணர்கிறார்கள் இல்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.

கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் உரிமைகளுக்காகச் செயற்பட்டதா? உங்களை ஏன் ஒதுக்கினார்கள்?

தமிழ் மக்கள் சுயாட்சி கோரினர். அதற்குரிய பலமே போய்விட்ட நிலையில் பலனளிக்கக் கூடிய அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும். அதுவும் முன் வைத்ததாக இல்லை.

தீர்வுத் திட்டம் தயாரிக்கிறோம் தயாரிக்கிறோம் என கடந்த காலங்களை ஓட்டிவிட்டு, பின்னர் தயாரித்தோம் என ஓரிரு மாதங்களை கடத்திவிட்டது என்பதையும், தமிழர் பாரம்பரியம் பேணப்பட வேண்டும் என்பதையும் கூடவே என் எழுத்துத்துறை விடயங்களையும், படுவான்கரை - அதிலும் பெண் பிரதிநிதி என்ற பல விடயங்களையும் சுட்டிக்காட்டிவிட்டு உடன் ஊர் திரும்பிவிட்டேன்.

பின்பும் தொடர்ச்சியாக பரிசீலனைக் கூட்டம் நடைபெற்றதாம். அதாவது இறுதிவரை இழுத்தடித்துவிட்டு பின்னர் அறிவித்தால் என்னை மடக்கிவிடலாம் என நினைத்திருக்கலாம்.

என்னை முழுமையாக ஓரங்கட்டுவதும்தான் நோக்கம். ஆனால் கடைசிநாள் அதாவது 17ம் திகதி காலையில் கூட்டத்தில் அரியநேத்திரன் எம்.பி. நான் எஸ். எல். எப். பிக்கு போய் கையொப்பம் இட்டுவிட்டதாக கூறியதை அடுத்து எனது ஊர் அயல்வீட்டைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் புதிதாக போடப்பட்டுள்ளார். அவர் முழுக்க முழுக்க ஸ்ரீலங்கா கட்சியைச் சேர்ந்தவர். அதுமட்டுமல்ல சென்ற காலங்களில் ராஜன் செல்வநாயகத்தின் கையாள்.

எமக்கு தேர்தல் காலங்களில் கஷ்டங்கள் விளைவித்தவர். அவர் அதாவது என்னை முழுமையாக ஒதுக்க வேண்டும் என்று நன்றாக பிளான்பண்ணி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் அது தெய்வ அருளால் பிழைத்துவிட்டது.

கேள்வி : கூட்டமைப்பில் ஒரு சிலர் மாத்திரம் முடிவுகளை எடுப்பதாகச் சொல்கிறார்களே?

உண்மைதான்! எதற்கெடுத்தாலும் மாவை, சம்பந்தர், சுரேஷ் என்ற நிலைமையே இருந்தது. அண்மைக் காலமாக சம்பந்தர் எதற்கெடுத்தாலும் தம்பி சுரேஷிடம் கேளுங்கோ என அவரை முதன்மைப்படுத்து வதையும் காணக்கூடியதாக இருந்தது. இப்போது நடைபெற்ற வேட்பாளர் தெரிவிலும் கூட சுரேஷ் பிரேமச்சந்திரன்தான் தலைவராக நடந்துகொண்டதாக அக்கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர் கூறினார்.

ஒரு தமிழரசுக் கட்சி உறுப்பினரை வெளியே போகும்படி ஏசியதாகவும் ஈ. பி. ஆர். எல். எப். சுரேஷ் என்னை எப்படி ஏசுவார் எனக் கோபம் கொண்ட அவர் இன்னொரு அணியில் போட்டியிடுவதாகவும் அறிகிறேன்.

கேள்வி : சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் இருந்தீர்களா?


ஆம்! எதற்கெடுத்தாலும் யாருடனாவது அமைச்சர்களுடன் கதைத்தால் சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பார்கள். உண்மையில் எமது மக்களின் தேவைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்மாருடன் கதைத்துத்தானே செய்ய முடியும்? கதைத்தால் சந்தேகம் எழுப்புவர்.

எந்த ஒரு எம்.பியுடனோ சந்திப்பு இடம்பெற்றால் குறிப்பிட்ட மூவர் அல்லது நால்வர் தான் போவார்கள். அதுவும் ரகசியமாக. சரி போனபின்னராவது என்ன நடந்தது என்ற விடயத்தையாவது தெளிவுபடுத்துவதும் இல்லை.

இது ஒரு உதாரணம் மட்டுமே. கடந்த 2008 டிசம்பர் ஜெனீவாவில் பெண்கள் மகாநாடொன்று நடைபெற்றது. பாராளுமன்றில் பெண் உறுப்பினர் இருவர் பெயர் கேட்கப்பட்டதாம். இரு பெண் உறுப்பினர் பத்மினி சிதம்பரம் - நான். வடக்கு கிழக்கினையும் பிரதிநிதித்துவப்படுத்துவோர்.

ஆனால் மேற்படி மகாநாட்டுக்கு போன பெண் உறுப்பினர் சம்பந்தர் - கஜேந்திர குமார். பாராளுமன்றத்தின் ஏனைய கட்சி பெண் உறுப்பினர்கள் போய்வந்த பின்னர் எம்மிடம் வந்து ஏன் மாநாட்டுக்கு வரவில்லை என்று கேட்டார்கள்.

இப்படி விடயங்கள் ஏராளம். பாராளுமன்றம் முடிந்த கையோடு முப்பெரும் தலைவர்கள் இந்தியா போய்விடுவார்கள். Part Time Parlimentarians ஏதாகிலும் விடயம் தீர்மானிக்க வேண்டுமானால் காத்துக்கிடப்போம்.

வந்தவுடன் அங்க போனோம் இங்கே சந்தித்தோம் என்ற இவர்களது பல்லவிகளை நாம் நாள் முழுக்க இருந்து கேட்க வேண்டும். இப்படி எத்தனையோ அதிருப்திகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

கேள்வி : தலைவர்களின் செயற்பாடுகளை விமர்சிக்கின்aர்களே!


எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்? பொறுமைக்கும் அளவு இருக்கு தானே? மக்கள் பிரதிநிதிகள் என வருபவர்கள் மக்களின் தேவைகளை புரிந்துகொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்திற்கு வந்த நோக்கம் என்ன? போராட்டம் சுயநிர்ணயம் தேசியம் என்ற கொள்கைகள் எனக் கூறிக்கொண்டு மட்டும் இருந்தால் மற்ற தேவைகளுக்கு மக்கள் எங்கு போவார்கள்? கொள்கை கொள்கை என்பதைவிட கொள்கைகளை நிறைவேற்றும் வழிகளைத் தேடவேண்டாமா? ஓடவேண்டாமா? பத்திரிகை அறிக்கைகளும், பத்திரிகை மாநாடும் தேவைகளை தீர்த்து வைக்குமா? நோய்க்கு மருந்து போட வைத்தியரிடம் போய்த்தானே ஆகவேண்டும்! ஒரு தடவைக்கு பல தடவை தேடித்தானே போகவேண்டும்.

தீர்வு என்றாலும் ஈழம் என்றாலும் யாரும் கொண்டு வந்து கொட்டப் போகிறார்களா? காலத்திற்கு ஏற்றபடி மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வழிகளை தேட வேண்டும்.

பேசி என்ன தீர்க்கவா போகிறார் மஹிந்த என்று சொல்லிக்கொண்டிருந்தால் சரியா? ஆட்சியில் யாராக இருந்தாலும் பேசித்தானே தீர்க்கவேண்டும்! ஆட்சியில் இருக்கும் வினாதிபதிக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்காமல் கற்பனையில் இருக்கும் வேறு யாருக்குமா ஆதரவு கூறுவது?

கையில் இருக்கிற புறாவைப் பறக்கவிட்டு வேறு புறா தேடிப் பிடிப்பது போலத்தான் தமிழ் தேசிய கூட்டணியின் செயற்பாடுகள் இருக்கின்றன.

தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவர். ஐக்கிய நாடுகள் சபையில் முதன்முதல் தமிழில் உரையாற்றியவர். தமிழை படித்து பேசியும் வருகிறார்.

அவரிடம் ஒரு தடவைக்கு பல தடவை தமிழ் மக்கள் பிரச்சினை எடுத்துக்கூறி சில விடயங்களையாவது முன்னெடுப்போமே என்ற கோட்பாட்டை கூறியதற்கு இவ மஹிந்தவின் ஆள் என்ற கதைகட்டி நெற்றியிலும் நாமம் போட்டு விட்டார்கள் எமது முதுமையான தேசியத் தலைவர்கள்.

நான் தேசியத்தை நேசிக்கவில்லையாம். பகிடிதான். தேசியத்தை முழுமையாக நேசிப்பதாலே - அத்தேசியத்தின் மக்களின் தேவைகளை உணர்ந்துள்ளோர் அதனை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலே தான் பல புதியதாகத் தமிழ்த் தேசியத்தின் வரலாறுகளை ஆவணப்படுத்தி வருகிறேன்.

இது எமது முதுபெரும் தலைவர்கள் யாரும் செய்யாத வேலை இதற்கு கொடுத்த பட்டம் மஹிந்தவின் ஆள்.

கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் பழைய செல்வாக்கைப் பெற முடியுமா?

இது கேள்விக்குறிதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக பல சுயேச்சைக் குழுக்கள் முளைத்துள்ளன. பிரச்சினை என்பதைக் காட்டி இங்கு முகம் கொடுக்க முடியாமல் ஏதாகிலும் பொய்களைக் கூறி வெளிநாட்டுக்கு ஓடியவர் எல்லாம் அங்கு ஏசியில் வாழ்ந்துவிட்டு பணத்தையும் கட்டிக்கொண்டு வந்து இங்கு தேர்தலில் நிற்கிறார்கள்.

பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடியவர்கள் இன்று வந்து தேசியத்திற்கு அழுது வடிக்கிறார்களாம்.

எல்லாருக்கும் எம்.பி. பதவி தானாம் வேணுமாம். தமிழ் வாக்குகள் பிரிப்பது தானா தேசியப் பற்று? அதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போடுகின்ற வேட்பாளர்கள் பெரும்பாலோர் சென்ற தேர்தலில் தோல்வி கண்டவர்கள்.

இந்த நிலையில் எத்தனை ஆசனங்களை பெறும் என்பதனைப் பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

கேள்வி : இனப் பிரச்சினையின் தீர்வுக்கான சந்தர்ப்பங்களைக் கூட்டமைப்பு சரியான முறையில் பயன்படுத்தியதா?

இந்தியா நமது அயல்நாடு. அதன் அனுசரணையுடன் பல விடயங்களை சாதித்து இருக்கலாம். வரதராஜப் பெருமாள் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபையை ஏற்றதால் இந்தியாவின் உதவியுடன் சில விடயங்களையாவது நிறைவேற்றி இருக்கலாம்.

இப்போது கூட தமிழ் மக்களுக்கு என்ன சாதகமான நிலையா உள்ளது? இந்திய உறவை செம்மையாகப் பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்றால் வேறு என்ன செய்வது?

கேள்வி : அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்தது பற்றி ஏதாவது சொல்லுங்களேன்?

நாம் சந்தித்தபோது ஏதும் விசேடமாக இல்லை. அதாவது நான் புதிய கட்சியில் புகுந்தபோது சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள நேர்ந்தது. போராட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவற்றை விரைவில் தீர்க்கவேண்டும்.

இவற்றை மையப்படுத்தி பொதுவானதாகவும் எப்படி இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் என ஒரு நட்புறவுடன் கூடிய உரையாடலாக அமைந்தது.

இனி இந்த உறவை மேலும் நகர்த்தி காலத்திற்கு ஏற்ற வகையில் மக்கள் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகளைக் கையாளவேண்டும். இதற்கான பூரண ஒத்துழைப்பையும் எனது மக்கள் எனக்கு வழங்குவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

கேள்வி : உங்களை விலக்கியதற்கு என்ன காரணம் கூறினார்கள்?
காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவர்களாக அறிவிக்கமாட்டார்கள். இப்பவே மக்கள் நன்றாக அவர்களைப் புரிந்துகொண்டுவிட்டார்கள். முகமூடி கிழிந்து விட்டது. இந்த நிலையில் எம்மை விலக்கியதாக அறிவித்தால் எப்படி இருக்கும்? காரணம் இம்முறை தேர்தலில் நிற்க அனுமதி மறுக்கப்பட்டவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாக்கிற்கு மேல் எடுத்தவர்கள். மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள்.

இந்த தேர்தலில் எம்மை போட்டியிடாமல் செய்வதற்கான திட்டம் வெகு காலத்திற்கு முன்னரே தீட்டப்பட்டு விட்டது என்றுதான் கூறவேண்டும். காரணம் 09ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

அன்றிலிருந்து நாம் அனைவரும் தலைவர், செயலாளரின் அனுமதி வார்த்தைக்காக தவம் கிடந்தோம் என்று தான் கூறவேண்டும். என்னை பொறுத்த மட்டில் நான் 13ம் திகதி வரை காத்துக்கிடந்து அலுத்துத்தான் இறுதியில் தலைவரிடம் பின்னர் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவிடம் போய்க் கேட்டேன்.

அதுவரை தொலைபேசியில் கேட்ட போதெல்லாம் ஆனந்த சயனம் செய்தார்கள். இறுதியில் மாவை போட்டியிடப்போவதாக வேண்டுகோள் கடிதம் தரும்படியும், அது கட்சியின் முன்னாள் உறுப்பினர் பொன் செல்வராசா போன்றோரால் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

என்னைப் பரிசீலனை செய்யும் தகுதி இவருக்கு இல்லை. வேறு சில விடயங்களையும் நான் புட்டுக்காட்டி விட்டு வந்துவிட்டேன். எனது தந்தையார் தமிழரசுக் கட்சித் தூண் என போற்றப்பட்டவர்.

படுவான்கரையில் எந்தத் தமிழரசுக் கட்சிக் கூட்ட மானாலும் அவை அன்று எங்கள் வீட்டில் தான் நடைபெறும்.

அப்படிக் கட்சி வளர்த்த பாரம்பரியம் கொண்டவர்கள் நாம்.

Read more...

புலிகளின் உள்வீட்டு மோதல். சுவிஸ் தமிழர் பேரவைத் தலைவருக்கு தர்ம அடி.

பிளவுபட்டுள்ள புலிகளியக்கத்தின் உள்வீட்டு விவகாரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகிளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என உலகின் முன்னணி அரசசார்பற்ற அமைப்புக்களுக்கும், உலகில் உள்ள சில நாட்டு அரசாங்கங்ளுக்கும் எழுத்துமூலமாக வேண்டுகோள் விடுத்திருந்த சுவிஸ் தமிழர் பேரவை எனும் அமைப்பின் தலைவர் நமசிவாயத்திற்கு புலிகளின் ஒரு பகுதியினர் சில தினங்களுக்கு முன்னர் ஜெனிவாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தர்ம அடி வழங்கியதாக தெரியவருகின்றது.

இவர் தாக்கப்பட்டமை தொடர்பாக இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் நமசிவாயம் தன்னை புலிகளின் ஆதரவாளர் என மக்களுக்கு காட்டிக்கொண்டுள்ள இரட்டை ஏஜென்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து நாட்டில் புலிகளின் வன்முறைகளை எதிர்த்து ஜனநாயகத்தினை வலியுறுத்தி வந்த தனிநபர்களுக்கு புலிகளால் பல தடவைகள் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த நபர்களில் சிலர் தற்போது ஒரிரு வருடங்களின் பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. புலிகளிடையே உருவாகியுள்ள உள்மோதல்களின் விளைவாகவே இவ்விடயங்கள் கசிவதாக நம்பப்படுகின்றது. முன்னொருகாலத்தில் ஒன்றாக இருந்து அராஜக செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது மாறிமாறி காட்டிக்கொடுத்து வருகின்றனர்.

Read more...

ஆலய வழிபாட்டில் ஈடுபடும் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் வெல்லையா இராசையா தலைமையிலான குழுவினர் அம்பாறைக் கச்சேரியில் வெள்ளியன்று வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டுத் திரும்பிய போதும் மல்வத்தை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாட்டில் ஈடுபடுவதையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களையும் படங்களில் காண்கின்றீர்கள்.








படங்கள் ரி. சுகாதேவராஜா

Read more...

பொலிஸாரின் சமிக்கைக்கு கீழ்படியாத வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம். ஓருவர் பலி.

மாத்தளைப் பொலிஸ் சாவடியைச் சேர்ந்த பொலிஸார் வாகனத்தை நிறுத்துமாறு விடுத்த சமிக்கைக்கு கீழ்படியாது தப்பியோட முற்பட்ட வாகனம் ஒன்றின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு ரத்தோட்டைப் பிரதேசத்தில் வழிப்போக்கர் ஒருவரை வாகனத்தால் அடித்துவிட்டு குறிப்பிட்ட வாகனம் தப்பியோடியுள்ளது. அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவலை தெரிவித்து அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உஷாரடைய வைத்திருந்த நிலையில் குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகன விபத்தில் காயமடைந்த பாதசாரியும், துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் இருந்தவர்கள் மதுபாணம் அருந்தியிருந்தாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி சந்தர்ப்பத்தில் பொலிஸார் உயிர்ச்சேதம் ஏற்படும்படியாக துப்பாக்கி பிரயோகம் செய்யமுடியுமா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாகனத்தினை மடக்கி பிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கவேண்டும்.

Read more...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் விபரம்.

Mathlaparanam Abraham Sumanthiran
S. K. Sittampalam
Velupillai Sivayogam
R. M. Imam
David Naganathan
Nachchiar Selvanayakam
Senathirajah Sriskandarajah
Kandiah Sarveswaran
Kunam Angelo Ahilan
Periathamby Kanagasahapathy

Read more...

பிள்ளையானின் பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை : மாற்றப்பட்டுள்ளது.

கிழக்கு முதலமைச்சரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அவரது பாதுகாப்பு வாபஸ் பெறபடவில்லை எனவும் இராணுவத்தினரிடம் இருந்த பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். விசேட பயிற்சி பெற்ற 40 கொமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்திருந்தனர் எனவும் தற்போது அவ்விடத்திற்கு 6 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றது.

மேலும், எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சிலரை தவிர அனைவருக்கும் பொலிஸ் பாதுகாப்பே வழங்கப்படும் எனவும், இராணுவத்தினர் அரசியல் தொடர்புகளை கொள்வதை தடுக்கும் பொருட்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

Friday, February 26, 2010

அம்பாறையில் புதிய தேர்தல் சாதனை : 21 கட்சிகளும் , 45 சுயேட்சை குழுக்களும்.

7 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 660 வேட்பாளர்களை நிறுத்தி அம்பாறை மாவட்டம் புதிய தேர்தல் சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. 45 சுயேட்சைக்குழுக்களும் 21 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

20 பிரதேச செயலகங்கைளையும் 507 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டுள்ள அம்பாறை மாவட்டத்தில் 268,630 முஸ்லிம்களும், 228,938 சிங்களவர்களும், 111,948 தமிழர்களும் வாழ்கின்றனர். இவர்களில் 420,935 பேர் வாக்களிக்கத் தகுந்தவர்களாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பி. துயாரத்தின தலைமையில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தமிழர்கள் சார்பில் அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளர் இனிய பாரதிக்கும், முஸ்லிம்கள் தரப்பில் 5 பேருக்கும், சிங்களவர்கள் தரப்பிலிருந்து 4 பேருக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் போட்டியிடுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திரநேரு சந்திரகாந்தன் தலைமையில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

Read more...

இடைத்தங்கல் முகாம் மக்களை விடுவிக்க பொன்சேகா முட்டுக்கட்டையாக இருந்தாராம்.

இடம்பெயர்ந்த தமிழர்களை முகாம்களிலிருந்து விடுதலை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா முட்டுக்கட்டையாக இருந்தார் என இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முகாம்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோரை அரசு விடுதலை செய்த போதிலும், அவர்களை மீண்டும் முகாம்களில் தடுத்து வைக்குமாறு பொன்சேகா உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் "தெகல்கா" ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார் கோத்தபாய.

ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட ஏனைய உலக நாடுகள் இடம்பெயர் மக்களை விடுதலை செய்ய வேண்டுமென அழுத்தம் கொடுத்த போதிலும், பாதுகாப்பு குறித்து பொன்சேகா தர்க்கம் செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20000 தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் தப்பிச் சென்ற போது சரத் பொன்சேகா உரிய பாதுகாப்பை வழங்குவதனை விடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாதம் செய்து வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலையிட்டு இந்த விவகாரத்திற்கு தீர்வு வழங்கியதாகவும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனோமா பொன்சேகா தலமை தாங்குகின்றார்.

ஜெனரல் பொன்சேகாவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய கூட்டமைப்பிற்கான தேர்தல் பிரச்சராங்கள் இராணுவப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரது மனைவி அனோமா பொன்சேகா தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அக் கூட்டணியின் பொதுச் செயலாளரும், ஜேவிபி யின் பிரச்சாரச் செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்கள் எதிர்வரும் மார்ச் 1ம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் இலங்கையில் உள்ள பிரதான நகரங்கள் யாவற்றிலும் தமது பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெறும் எனவும் அவற்றில் பெரும்பாலான கூட்டங்களில் ஜெனரல் பொன்சேகா சார்பாக அவரது பாரியார் உரையாற்றுவார் எனவும் விஜித கேரத் மேலும் கூறியுள்ளார்.

Read more...

பிள்ளையானின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. விசேட கொமாண்டோ பயிற்சி பெற்ற 40 இராணுவ வீரர்கள் இவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்திருந்தனர். இப்பாதுகாப்பு எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமால் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ரிஎம்விபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு புலிகளினால் அச்சுறுத்தல் இல்லை என்ற நிலையிலேயே பாதுகாப்பு நீக்கப்படுவதாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கிலங்கையில் புலிகளின் செயற்பாடு முற்றாக ஓழிக்கப்பட்டுள்ளது என பிள்ளையான் பல தடவைகளில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியலை பாரமளித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவரது பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.

வேட்பாளர்கள் விபரம்.

1 அருணாசலம் செல்வேந்திரன் (தலைமை வேட்பாளர்)
2 தம்பராசா பேரின்பராசா.
3 திருமதி தயாழினி திரவியம்.
4 இரத்தினசிங்கம் மகேந்திரன்.
5 அழகரெத்தினம் பாலகிருஸ்ணன்.
6 தம்பிராஜா ஈஸ்வரராஜா.
7 கணபதிப்பிள்ளை மோகன்.
8 அ. ராஜவரோதய மணிவண்ணன்.

Read more...

கட்சிகளின் தேசியப்பட்டியல் பா.உ பெயர்ப்- பட்டியல் வெளியாகின. கருணாவிற்கு உறுதி.

எதிர்வரும் பாராளுமன்றுக்கு தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற செல்லவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயர்ப்பட்டியலில் கருணா உட்பட பல தமிழர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை தெரியவருகின்றது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியிலிலும் குறிப்பிடத்தக்களவு தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் காணப்படுகின்றனர்.

பிரதானமான கட்சிகள் தேசியப்பட்டியலுக்கான பெயர்விபரங்களை வெளியிட்டுள்ளபோதும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு செய்யவில்லை. இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தேசிப்பட்டியில் கிடைக்காது என்ற நம்பிக்கையில் அவ்வாறு வெளிவிடவில்லையா அல்லது, தமது கள்ளக்கோழி பிடிக்கும் தொடர்வித்தையா என பலரும் பேசுவதை அவதானிக்க முடிகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (UPFA)
Ratnasiri Wickramanayake
D. M. Jayaratne
Dulles Alahapperuma
G. L. Peiris Dew Gunasekara
Vishva Warnapala
Tissa Witharana
Geethanjana Gunawardena
Ellawala Medanada Thero
Muththu Sivalingam
Shanmugan Jegatheeswaran
Achala Jagoda
Mohomad Musammil
W. J. M. Lokubandara
Karuna Amman
Anurudhdha Ratwatte
J. R. P. Sooriyapperuma
Omalpe Sobitha Thero
Janaka Priyantha Bandara
Rajeewa Wijesinghe
Lesley Devendra
Chandrasekaran Shanmuganadan
A. H. M. Azwer
Malini Fonseka
Harischandra Wijetunga
Sarath Kongahage
U. L. Shaul Hameed
Kamala Ranatunga


ஐக்கிய தேசிய முன்னணியின் பட்டியல். (UNF)
Tissa Attanayaka
Iran Wickremaratna
Joseph Michael Perera
K.N. Choksy
Rukman Senanayaka
Tilak Marapana
Harsha de Silva
D.M.Swaminathan
R.Yogarajan
Ahamed Hassan Mohammed Alavi
Mohammed Thambi Hassan Ali
Mohammed Nizam Kariyappar
S.L.Manoharan
Swarana Obeysekara
Ruwan F. Guruge
Mailvaganam Thilakaraj
Prof. Wimal Gunawardena
Anoma Gamage
Aruna Soysa
Mashoor Sinnalebbe
Manikkagam Logasinham
Mangaleshwari Jeyaratnam
Ameer Mohammed Faiz
M.S.Sellasamy
Mohammed Azmin Marikkara
Cyril Dharmawardena
P.Ganeshan
P.V.Gunaratna
S.Manoharan

ஐனநாயக தேசியக் கூட்டணி (DNA)
Anura Kumara Dissanayake
Tiran Alles
Sanjeewa Ranatunga
Samansiri Hapuarachchi
Ariyawansa Dissanayake
S. B. Hettiarachchi
Chandana Perera
Athula Thenuwara
Jinasena Hewage
Karunaratne Herath
Chandima Peiris
Suwineetha Weerasinge
Chandrasoma De Silva
Kingsely Loas
Mahinda Tennakoon
Suriya Gunasekara
S. Dissanayake
D. M. G. Ekanayake
Asuntha Perera
Jayanthi Renkua
Duminda Nagamuwa
Shanthilal Fernando
Wasantha Malini


Read more...

விமலின் கரு கத்தாநாயகதுமணி வெளிவந்தது.

ஜேவிபியிலிருந்து பிரிந்து சென்று தேசிய சுதந்திர முன்னணி எனும் கட்சியை நிறுவியுள்ள முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கரு கத்தாநாயகதுமணி (கனம் சபாநாயகர் அவர்களே) எனும் புத்தகம் வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தில் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் பேசிய அனைத்துப் பேச்சுக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தின் முதலாவது பிரதி நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது. அலறி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்நிகழ்வில் அவரது கட்சிக்கான உத்தியோக பூர்வ இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Read more...

ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து மேலும் ஒரு தேரர் ராஜனாமா.

ஹம்பகா மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அலவ்வ சந்டாலோக தேரர் ஜாதிக் ஹெல உறுமயவில் இருந்து ராஜனாமா செய்து கொண்டுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவில் போட்டியிடுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததாலேயே அவர் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு சில தினங்களுக்கு முன்னர் உடவத்த நந்தன தேரர் அவர்களும் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

Read more...

மெக்சிகோ நாட்டில் 13 பேர் சுட்டுக்கொலை மர்ம மனிதன் “திடீர்” தாக்குதல்

மெக்சிகோ நாட்டில் மர்ம மனிதன் 13 பேரை சுட்டுக்கொன்றான். மெக்சிகோ நாட்டில் உள்ள ஏசாகா என்ற இடத் தில் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் காரில் வந்தான்.அவன் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ஆண் மற்றும் அவருடைய 3 குழந்தைகளை சுட்டுக் கொன்றான்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களையும் நோக்கி அவன் சரமாரியாக சுட்டான். அவர்களில் 4 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் காரில் ஏறி தப்பி ஓடினான். போலீசாரும் காரில் அவனை விரட்டி சென்றனர். அப்போது போலீசாரை நோக்கியும் சரமாரியாக சுட்டான். இதில் 5 போலீசார் உயிர் இழந்தனர்.

13 பேரையும் கொன்று விட்டு மர்ம மனிதன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அவன் யார் என்ற விவரம் தெரியவில்லை.

மெக்சிகோ நாட்டில் இது போன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. 3 நாட்களுக்கு முன்பு அங்குள்ள தாமுலி பாஸ் என்ற இடத்தில் போலீசார் போதை மருந்து கும்பல் இடையே நடந்த சண்டையில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

Read more...

சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு.

இராணுவ பதவிகளின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதாலேயே பொன்சேகா கைது : பாதுகாப்பு செயலர்.
ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக எதிர்வரும் இரு வாரங்களில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும். சட்ட மா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் கூறியதாவது :- குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் வெளிநாட்டு நாணய நிதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

ஹைக்கொப் நிறுவனத்தினூடாக இராணுவத்திற்கு ஆயுதக் கொள்வனவு செய்யப்பட்டது தொடர்பில் மோசடி செய்தல், மோசடி செய்ய உதவி ஒத்தாசை அளித்தல், மோசடி செய்ய சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது தவிர இராணுவத்திற்குள் பிளவு ஏற்படுத்த முயன்றது தொடர்பாகவும் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவ ர்களை பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட்டமை தொடர்பாகவும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தனியார் வங்கியில் 75 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை மறைத்து வைத்திருந்தது தொடர்பாக வெளிநாட்டு நாணய நிதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும். உள்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதோடு இராணுவ நீதிமன்றத்தினால் தனியாக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இராணுவச் சட்டத்தின் கீழ் சரத் பொன் சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சரியானதே என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கையின் நீதித்துறை தொடர்பில் எதிர்க் கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்னெடுத்த தவறான பிரசாரங்களுக்கு இந்தத் தீர்ப்பின் மூலம் தக்க பதில் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறுகோரி இதற்கு முன்னரும் பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உண்மையில், சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆனால், இராணுவ சட்ட திட்டங்களுக்கு அமைவாக சரத் பொன்சேகா கைதாகியுள்ளதால் அவரை விடுதலை செய்யும் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

சிவில் சட்டத்தின் கீழ் பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வழக்கு விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும் எனவும் சில நாடுகள் கோரியுள்ளன.

இந்தக் கோரிக்கைகளும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உரிய பதில் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் போக்குமாறியுள்ளது எனவும், எனவே இலங்கையுடன் சர்வதேச நாடுகள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட வேண்டும் எனவும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் டெரசிடா செபர் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கடந்த காலத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சில தீர்ப்புகளை அரசாங்கம் நிராகரித்தது குறித்து ஊடகவியலாளர்கள் ஒருவர் எழுப்பி கேள்விக்குப் பதிலளித்த அவர்,

ஒவ்வொரு நிறுவனமும் தமக்குரிய பணிகளையே செய்ய வேண்டும். அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட்டால் குழப்பமே ஏற்படும். நீதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உரியதாக இருக்கையில் பெற்றோல் விலையை குறைக்குமாறு நீதிமன்றம் எவ்வாறு உத்தரவிட முடியும். பெற்றோல் விலைகளை நிர்ணயிப்பதும் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதும் நீதிமன்றத்தின் பணியல்ல.

இராணுவ பதவிகளின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதாலேயே பொன்சேகா கைது
அரசியலில் நுழையும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஆகிய அதிகார பூர்வ பதவிகளின் அந்தஸ்தை பயன்படுத்தியமை காரணமாகவே ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஐ.ரீ.என். தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசியலில் தலையிடாமை மற்றும் பங்கேற்காமை காரணமாக இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு ஆசியாவில் பொறுப்புள்ள படையினர் என்ற நல்ல மதிப்பு உள்ளது.

எனினும் பொன்சேகா அவரது சேவைக்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் பிரதானி ஆகிய பதவி அந்தஸ்தை சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளிடம் செல்வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளதுடன் ஒரு சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இராணுவ தளபதியின் அதிகார பூர்வ வாசஸ்தலத்தையும் பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறான அவரது தவறான நடத்தை மற்றும் இராணுவ ஒழுங்கினை மீறியமை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் சேவையில் இருக்கும் போது எவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற கருத்தை இளம் இராணுவ வீரர்களிடமும் ஏனைய நிலைகளில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடக்கூடும் இதனால் தான் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.

சரத் பொன்சேகா அவரது அதிகார பூர்வ இராணுவ பதவிகளின் அந்தஸ்தையும் இராணுவ வளங்களையும் அவரது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியமைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.




Read more...

Thursday, February 25, 2010

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சந்தேக நபரை அடையாளம் காண்பித்துள்ளார்

இலங்கையின் - கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 8 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்டப்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சந்தேக நபர்களிலொருவரை பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுள்ளார்.

கடந்த 12 ம் திகதி குறிப்பிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது வழியில் நீராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரால் வழிமறித்து கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக திகிலிவெட்டை இராணுவ முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய்கள் 6 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைதாகி நீதிமன்ற விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர்.

அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது அன்றைய தினம் குறித்த முகாமில் கடமையிலிருந்த 49 இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் கூறுகின்றார்

4 சுற்றுக்களில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் இறுதிச் சுற்றிலேயே சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறும் அவர், குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் தொடர்ந்தும் எதிர்வரும் 3 ம் திகதி வரை நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

நன்றி பிபிசி

Read more...

சுவர்ணமாலி கம்பஹாவிலும் அருஜூணா களுத்துறையிலும் களமிறங்குகின்றனர்.

பிரபல தொலைக்காட்சி நாடாக நடிகை உபெக்ஷா சுவர்ணமாலி ஐக்கிய தேசியக் கட்சியில் கம்பஹா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றார். அதேநேரம் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அருஜூணா ரணத்துங்க ஜனநாயக தேசிய முன்னணி எனும் ஜெனரல் பொன்சேகா தலைமையிலான கூட்டணியில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

குறிப்பிட்ட கூட்டு முன்னணினி நாட்டின் 22 மாவட்டங்களில் தேர்தலில் பங்கு கொள்கின்றது.

Read more...

ஒடுக்கப்படும் மக்களிற்காக குரல் கொடுப்போம்!

தாம் வாழும் மண்ணிலிருந்து வெளியேற்றப்படும் உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்படும் மக்களிற்காக குரல் கொடுப்போம்!
POSCO பிரதிரோத் சங்கரம் சமிதியினரால் (PPSS) Asian Human Rights Commission (AHRC) அமைப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கையில், தென்கொரிய மிகப்பெரிய இரும்பு உருக்கு ஆலையின் (POSCO) இரும்பு உருக்கு ஆலையோன்று ஒரிசாவின் வட-கிழக்கு பகுதியான ஜகத்சின்க்புற என்ற இடத்தில் ஆரம்பிக்கப்படுவதையோட்டி அங்கு வாழும் 30 கிராமங்களை மக்கள் வெளியேற்றப்படும் அபாய சூழ்நிலையுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த இரு வருடங்களாக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவரும் நிலையில், தங்களிற்கு ஆதரவாக ஒடுக்கப்படும் மக்களிற்காக குரல் கொடுக்கும் அனைவரையும் ஒன்று திரண்டு ஒரிசா முதல்வர், வனம் சுற்று சூழ்நிலைக்கான பிரதம செயலாளர் ஆகியோருக்கு தங்கள் கண்டனங்களையும், அம்மக்களிர்க்கான ஆதரவையும் தருமாறு வேண்டிக்கொள்கிறார்கள்.

Statement from POSCO Pratirodh Sangram Samiti (PPSS) forwarded by the Asian Human Rights Commission
INDIA/SOUTH KOREA: Korean steel giant's project will make thousands homeless in India

Dear Friends,

Anti POSCO struggle in the Indian state of Orissa urgently require your help!


Pohang Iron and Steel Company (POSCO), the South Korea based steel giant is moving forward with its plans to build a steel mill in Jagatsingpura in the north-eastern part of Orissa, India. The mill, also involves mining at Keonjhar and a new port just north of Paradip. In all, over 30 villages are targets for forced displacement. The villagers are continuously protesting in one form or the other for the last two years under the leadership of the POSCO Pratirodh Sangram Samiti (PPSS).

Please call the Chief Minister of Orissa, Mr. Naveen Panaik and the state's Chief Secretary of Environment and Forests Mr. U. N. Behara, today. You can also send your request through fax in the numbers provided below.

கீழ் வரும் தொடர்பிலக்கங்கள் மூலம் தொலைபேசியிலோ, தொலைனகளிலோ, அஞ்சல் முகவரிக்கோ தங்கள் ஆதங்கத்தை, அம்மக்களிர்க்கான ஆதரவை, இவ் இரும்பு ஆலையினால் சுற்று சூழலிற்கு ஏற்ப்படும் பாதிப்பை தெளிவுபடுத்துங்கள், விளக்குங்கள்.

Please call as soon as possible.


ஈழத்து, இந்திய, அனைத்து தமிழ் பேசும் மக்களே!.. ..
குரல் கொடுப்போம்! ஆதரவுக் கரம் கொடுப்போம்!


1. Mr. Naveen Patnaik
Chief Minister and Minister for Forests and Environment
Government of Orissa
Bhubaneswar, Orissa
INDIA
Tel: + 91 674 2531100 ; 2535100; 2531500
Fax: + 91 674 2392115


2. Mr. U. N. Behara
Principal Secretary
Department of Environment and Forests
Government of Orissa
Bhubaneswar, Orissa
INDIA
Tel: +91 674 2595503 ; 2536822
Fax: +91 674 2395820


மேடைப்பேய்ச்சிலோ, வாய்ப்பெச்சிலோ, எழுத்திலோ ஒன்றுமில்லை! செயலில் இருக்க வேண்டும்!

தோழமையுடன்,
அலெக்ஸ் இரவி.

மேலும் விரிவாக அறிய:

Read more...

யாழ். மாவட்ட தேர்தல் வெற்றிக்கிண்ண சின்னத்தில் ஜே.வி.பி களமிறங்கியுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் போட்டியிடவென மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேட்பு மனுத் தாக்கல் செய்தது. வேட்பாளர்கள் குழுவின் தலைவர் வீரராஜ் லலித்குமார் தலைமையில் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதனிடம் மனுக்கள் கையளிக்கப்பட்டன என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் தெரிவித்ததுள்ளது.

Read more...

சச்சின் காலைத் தொட்டுக் கும்பிடத் தோன்றுகிறது- கவாஸ்கர்.

டெல்லி: சச்சின் நிகழ்த்தியுள்ள உலக சாதனையைப் பார்த்ததும் அவரது காலைத் தொட்டு கும்பிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது என்று ரொம்பவே உணர்ச்சிசப்பட்டுள்ளார் சுனில் கவாஸ்கர். நேற்று குவாலியரில் நடந்த ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 200 ரன்களை அடித்து புதிய உலக சாதனை படைத்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர் அதி பயங்கரமாக உணர்ச்சிவசப்பட்டுள்ளார். சச்சின் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று நெகிழ்ந்து போய்க் கூறினார்.

கவாஸ்கர் கூறுகையில், உலகில் வேறு எந்த வீரர் 93 சர்வதேச சதங்களை அடித்துள்ளார்?. யார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒரு நாள் ரன்களை அடித்துள்ளனர்?. யார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார்?. உண்மையில் சச்சினின் சாதனைகள் என்னை பிரமிக்க வைக்கின்றன.

தலை வணங்கி, காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த சாதனையைச் செய்தது யாராக இருந்தாலும் நிச்சயம் நான் காலைத் தொட்டு வணங்குவேன்.
சச்சின் செய்த சாதனை என்னை வியக்க வைத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக சச்சின் சாதனை செய்ததை என்னால் நேரில் பார்க்க முடியவில்லை. சச்சின் இன்னும் நிறைய சாதிப்பார். அவர் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது.

அவருக்குள் அந்த குட்டிப் பையன் இன்னும் இருக்கிறான். அந்தப் பையன்தான் விளையாடு, விளையாடு, விளையாடு என்று அவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறான். அந்த உணர்வுதான் அவரை தொடர்ந்து ஆட வைத்துக் கொண்டிருக்கிறது. நாட்டுக்காக விளையாடுவதும் அவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

சச்சினின் சிறப்பம்சம் என்னவென்றால், நிகழ்காலத்தை பற்றி மட்டுமே அவர் நினைப்பார். கடந்த காலத்தை அவர் நினைக்கவே மாட்டார் என்றார் கவாஸ்கர்.

ஒரு இந்தியர்தான் எனது சாதனையை உடைக்க வேண்டும்- சச்சின்


இதற்கிடையே தனது சாதனை குறித்து சச்சின் கூறுகையில், சாதனைகள் என்றால் யாராவது ஒருவர் வந்து நிச்சயம் அதைக் தகர்ப்பார். இருப்பினும் எனது சாதனையை ஒரு இந்திய வீரர் உடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

எந்த சாதனையும் தகர்க்க முடியாததில்லை. நிச்சயம் ஒவ்வொன்றும் தகர்க்கப்படும். எனது சாதனையை இந்தியர் ஒருவர் தகர்த்தால் பெரும் சந்தோஷப்படுவேன்.

எனது சாதனையை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சாதனைகளுக்காக நான் விளையாடுவதில்லை. உண்மையில் 175 ரன்களைக் கடந்த பின்னர்தான் 200 ரன்கள் எடுக்கலாமே என்று நான் நினைத்தேன்.

அனுபவித்து ஆடுகிறேன். லட்சியத்துடன் ஆடுகிறேன். சாதனைகளை படைக்க வேண்டும்,உடைக்க வேண்டும் என்று நினைத்து ஆடுவதில்லை. எப்போதாவது அது அமைந்து விடுகிறது. அது நிச்சயம் மகிழ்ச்சியான விஷயம்தான்.

எனக்கு வந்த பந்துகள் எல்லாமே நல்ல பந்துகள். எனவேதான் வந்த பந்தையெல்லாம் அடிக்க முடிந்தது. 200 ரன்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் வந்தது.

பல சவால்களை நான் சந்தித்துள்ளேன். 2007ம் ஆண்டு முதல் நல்ல கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறேன். கேரி கிரிஸ்டனுக்கே இந்தப் பெருமையெல்லாம் போக வேண்டும். அணியை அருமையாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார். அணி வீரர்களை ஒருங்கிணைத்து ஆட வைத்துக் கொண்டிருக்கிறார். அது பெரிய விஷயம் பயிற்சியின்போது கூட யாருக்கும் அவர் பாரபட்சம் காட்டுவதில்லை என்றார் சச்சின்.

கவாஸ்கரின் 'சாதனை'..!

பல சாதனைகளைப் படைத்தவரான கவாஸ்கர் ஒரு வித்தியாசமான சாதனையையும் படைத்தவர். 1975ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது (அப்போது 60 ஓவர்கள்), ஆட்டமே இழக்காமல் 36 ரன்களை மட்டுமே எடுத்தார் கவாஸ்கர். இதற்காக அவர் சந்தித்த பந்துகள் 174. ஒரே ஒரு ஃபோர் மட்டுமே அடித்தார்.

அந்தப் போட்டியில் 60 ஓவர்களையும் ஆடிய இந்தியா 3 விக்கெட்களை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது.

எஸ்.வெங்கட்ராகவனை கேப்டனாக்கியது பிடிக்காததால்தான், வேண்டுமென்றே இப்படிக் கட்டையைப் போட்டார் கவாஸ்கர் என்று அப்போது கடும் புகார்கள் கூட எழுந்தன. ஆனால் தனக்கு ஆட்டத்தின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாததால், அவ்வாறு நிதானமாக ஆடியதாக விளக்கம் அளித்தார் கவாஸ்கர்.

Read more...

சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் தொடர்பாக ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதிநிதி் பேச்சு.

இலங்கை வந்த ஆஸ்ட்ரேலியாவின் சிறப்பு பிரதிநிதியான ஜோன் மெக்ராத், அதிபர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார். இலங்கை நாட்டவர்கள் சட்ட விரோதமாக ஆஸ்ட்ரேலியாவுக்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இருவரும் முக்கியமாக விவாதித்ததாக அதிபர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது இலங்கைக்கான ஆஸ்ட்ரேலிய தூதரக அதிகாரி கதே கே குளுக்மென், துணை தூதுவர் சோபியா மெசின்ரிர் மற்றும் அயலுறவ்யுத் துறை அமைச்சக செயலாளர் ரமேஷ் ஜெயசிங்க உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ஆஸ்ட்ரேலிய பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜோன் மெக்ராத், அரசு உயர் அதிகாரிகள் பலரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Read more...

ஏப்பரல் 8ம் திகதியின் பின்னரும் பொன்சேகாவை அடைத்து வைக்க அரசு திட்டம்.

(By K. Ratnayake) இலங்கை உயர் நீதிமன்றம், பெப்பிரவரி 8ல் இராணுவ பொலிசாரால் கைது செய்யப்பட்ட, தோல்விகண்ட எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு விடுத்த வேண்டுகோளை நேற்று நிராகரித்தது. இந்தக் கைதின் சட்டபூர்வ நிலையை சவால் செய்து பொன்சேகாவின் மனைவி அனோமா தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனு சம்பந்தமாகவே இந்த விசாரணை நடந்தது.

இந்த நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடத்தக்க அரசியல் அழுத்தம் உள்ளது. ஜனவரி 26 நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவிடம் தோல்வியடைந்த பொன்சேகா, ஏப்பிரல் 8 நடக்கவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடத் தயாராகின்றார். இந்த மனு மீதான அடுத்த விசாரணை ஏப்பிரல் 26ம் திகதிக்கு குறிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சார காலத்தில் விளைபயனுள்ள வகையில் அவரது வாய் அடைக்கப்பட்டுள்ளது.

பெப்பிரவரி 12 நடந்த ஆரம்ப விசாரணையில், மனு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. இலங்கையின் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் குழு, சட்ட மா அதிபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை நிராகரித்தார். நேற்றைய விசாரணை, ஞாயிற்றுக் கிழமையே பதில் பிரதம நீதியரசராக பதவியேற்ற ஷிரானி பண்டாரநாயக்க தலைமையிலான வேறு மூன்று நீதிபதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகையின் படி, டி சில்வா வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையில் பதட்ட நிலைமை இருந்தது தெளிவு. சட்ட மா அதிபரிடம் இருந்து எதிர் மனுவின் பிரதி, வழக்குக்கு முதல் நாள்தான் தனக்கு கிடைத்ததாகவும் பதில் மனுவை தயார் செய்ய தனக்கு காலம் தேவை என்றும் பொன்சேகாவின் சட்டத் தரணி ஷிப்லி அஸீஸ் முறைப்பாடு செய்தார். சத்தியக் கடதாசிகளை வாசிக்க அவருக்கு 10 நிமிடங்கள் வழங்கப்பட்ட போதிலும், விசாரணைகள் இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் பதில் மனுக்களை பெற்றுக்கொள்ள என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

முதலாவது விசாரணையில், ஒப்பீட்டளவில் ஒரு கனிஷ்ட சட்டத்தரணியே சட்டமா அதிபருக்காக சமூகமளித்தார். ஆயினும், நேற்றைய விசாரணையின் போது, சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் முதலாவது பிரதிவாதியான இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின் சார்பில் சமூகமளித்திருந்தார். ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவும் பல உயர் மட்ட இராணுவத் தளபதிகளும் ஏனைய பிரதிவாதிகளாவர்.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியை இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என தெரிவித்து பொன்சேகா சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக அஸீஸ் வாதிட்டார். பொன்சேகா கைது செய்யப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார். பொன்சேகா நிபந்தனைகளுடன் அல்லது நிபந்தனைகள் இன்றி விடுவிக்கப்பட வேண்டும், அவரது பாதுகாப்பும் நலனும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், மற்றும் அவரது சட்டத்தரணிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அஸீஸ் இடைக்கால நிவாரணத்துக்கான அவரது வேண்டுகோளை வலியுறுத்தினார்.

கடைசி தீர்ப்புக்கு முன்னதாக விடுதலை செய்வதை சட்ட மா அதிபர் எதிர்த்தார். குற்றச் சாட்டுக்கள் தொடர்பான பிரச்சினையை தட்டிக் கழித்த அவர், "ஆதாரங்களின் தொகுப்பு" பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் மூன்று வாரங்களுக்குள் அது முழுமைபடுத்தப்படும் என தெரிவித்தார். அதன் பின்னரே அந்தக் குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணையை முன்னெடுப்பதா அல்லது இராணுவ நீதிமன்றத்தில் தண்டனை கொடுப்பதா என இராணுவத் தளபதி தீர்மானிப்பார்.

கைது செய்யப்பட்டு குறைந்த பட்சம் ஒரு மாதமாகியும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத போதிலும், சட்ட மா அதிபரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதே சமயம், அரசாங்கத்தை தூக்கி வீசவும் இராஜபக்ஷ சகோதரர்களை படுகொலை செய்யவும் சதி செய்ததாக பொன்சேகா மீது குற்றஞ்சட்டி அவரது பெயருக்கு கரி பூசுவதில் அரசாங்கம் பேச்சாளரும் அரசுக்குச் சொந்தமான ஊடகங்களும் தொடர்ந்தும் ஈடுபடுகின்றன. தன் கட்சிக்காரர் இராணுவ சட்ட நடவடிக்கைகளில் ஒத்துழைக்க மறுத்துள்ளதாகவும் அதை ஒரு கேலிக் கூத்தான விசாரணை என கருதுவதாகவும் அஸீஸ் சுட்டிக் காட்டினார்.

சட்ட மா அதிபர் பீரிஸ் சில சிறு சலுகைகளை வழங்கினார். பொன்சேகாவின் வைத்தியர், அவரது சட்டத் தரணிகள் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் அவரை சந்திக்க முடியும் என நீதிமன்றில் உறுதிமொழி அளித்தார். சட்டத்தரணிகளைப் பொறுத்தளவில், அவர்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட வேண்டும். ஏப்பிரல் 8 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பட்டியலில் பொன்சேகாவிடம் கைச்சாத்துப் பெற அவரது சட்டத்தரணிகளை பீரிஸ் அனுமதித்தார். பொன்சேகா ஜனநாயக தேசிய கூட்டணி என அழைக்கப்டும் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணியில் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இந்த வழக்கின் அரசியல் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டும் வகையில், ஜூரிகளின் சர்வதேச ஆணைக்குழுவில் (ஐ.சி.ஜே.) இருந்து ஒரு பிரதிநிதியான, ஆஸ்திரேலிய வழக்குரைஞர் பில்லி புர்வெஸ், நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க வந்திருந்தார். "இந்த விவகாரத்தில் ஐ.சி.ஜே. அக்கறை காட்டுவதோடு நீதிமன்ற நடவடிக்கைகள் நீதியானதும் நேர்மையானதுமாக நடக்கின்றனவா என்பதை கண்காணிக்க விரும்புகிறது," என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பொன்சேகாவின் கைதை இராஜபக்ஷ அரசாங்கம் கையாளும் முறை தொடர்பாக வாஷிங்டன் திருப்தியடையவில்லை என, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபட் பிளேக் பி.பி.சி. க்கு இந்த வாரம் தெரிவித்தார். "நாங்கள் எதிர்பார்த்திருக்கக் கூடியதை விட குறைவானதாகவே இருப்பதாக நான் நினைக்கின்றேன். ஆனால், அவர் மீது உரிய காலத்தில் குற்றஞ் சுமத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு நாம் இலங்கை அரசாங்கத்திடம் நிச்சயமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்."

அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையிலான உக்கிரமான உள் மோதல்கள், பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான பகைமை பிணைந்திருக்கும் முறையை பிளேக்கின் கருத்துக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தில், சீனாவை நோக்கி அதிகம் நகர்ந்துள்ளதாக ஒபாமா நிர்வாகம் கருதுகிறது. இலங்கைக்கு ஆயுதங்களை விற்று நிதி மற்றும் அரசியல் உதவியையும் செய்த பெய்ஜிங், பிரதியுபகாரமாக பொருளாதார மற்றும் மூலோபாய சலுகைகளையும் பெற்றுக்கொண்டது.

அமெரிக்கா, இந்த கைது தொடர்பான தனது அதிருப்தியை எச்சரிக்கையுடன் வெளிப்படுத்துவது, ஜனநாயக உரிமைகள் பற்றிய அக்கறையினால் அல்ல. மாறாக, இந்த விவகாரத்தை இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் சீனாவின் செல்வாக்கை கீழறுக்கவும் ஒரு வழிமுறையாக வாஷிங்டன் நோக்குகிறது. பொன்சேகா அமெரிக்க நலன்களுக்கு மிகவும் இணங்குபவராகவும் கூட அது நோக்கலாம். தேர்தல் பிரச்சாரத்தின் போது, இலங்கையில் "சர்வதேச சமூகத்தின்" நம்பிக்கையை இராஜபக்ஷ கீழறுத்து விட்டதாக ஜெனரல் விமர்சித்தார்.

கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் இடம்பெறும் உக்கிரமான குழு மோதல்கள், நீதித்துறை, இராணுவம் மற்றும் பொலிஸ் உட்பட அரச இயந்திரத்தை அரசியல்மயப்படுத்துகிறது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட பல பொன்சேகா ஆதரவாளர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அரசாங்கமும், இராணுவம் மற்றும் பொலிசில் உயர் மட்டத்தினரில் சிலரை களையெடுப்பதில் ஈடுபட்டது. ஜெனரலுக்கு விசுவாசமானவர்கள் என கருதப்பட்டவர்கள் ஒன்று இடம்மாற்றப்பட்டார்கள் அல்லது கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்கள்.

ஏப்பிரல் 8 பாராளுமன்ற தேர்தலின் பின்னர் வரையும் பொன்சேகாவை அடைத்து வைக்க இராஜபக்ஷ எடுத்துள்ள உறுதிப்பாடு, அதிகாரத்தின் மீதான அவரது பிடி எந்தளவு ஆட்டங்கண்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகும். அரசியலமைப்பை மாற்றக்கூடியவாறு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்ப்பதாக ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது. இராஜபக்ஷ ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு பரந்த அதிகாரங்கள் உள்ளன என்ற உண்மை ஒருபுறம் இருக்க, அவர் ஏற்கனவே எதேச்சதிகாரமான தனது ஆட்சியை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத வழிமுறைகளின் பிரதான இலக்கு, தொழிலாள வர்க்கமே அன்றி, அரசாங்கத்துடன் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிராத எதிர்க் கட்சிகள் அல்ல. கடந்த மே மாதம் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த யுத்தம், நாட்டை பெரும் கடனுக்குள் தள்ளியுள்ளது. நிதி நெருக்கடியை தவிர்த்துக்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருதந்து 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற இராஜபக்ஷ நெருக்கப்பட்டார்.

தேர்தலை அடுத்து, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் மற்றும் பொதுச் செலவையும் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மோசமாக வெட்டித்தள்ளவும் நெருக்கப்படும். இராஜபக்ஷ, தவிர்க்க முடியாமல் வெடிக்கவுள்ள வெகுஜன எதிர்ப்பின் மீது பாய்வதற்குத் தயாராகுவதன் பேரில், எதிர்க் கட்சியை பலவீனப்படுத்தவும் மற்றும் தனது சொந்த நிலைமையை பலப்படுத்திக்கொள்ளவும் ஆவலாக உள்ளார்.

Read more...

பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மேலும் தொகுதியினர் விடுதலை.

ஜனாதிபதி தேர்தல் முடிந்து சில தினங்களில் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிவிலியன்களில் மேலும் 8 பேரை இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்று விடுதலை செய்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருந்த அவர்களை இன்று நீதிமன்றில் சீஐடியின் ஆஜர் செய்தனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை சீஐடி யினர் மன்றிற்கு சமர்பிக்க தவறியதை அடுத்து நீதிவான் குற்றவாழிகளை விடுதலை செய்துள்ளார்.

Read more...

வேட்பாளர் பட்டியல் விபரம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் சில கீளே.

KALUTARA DISTRICT (UPFA)

Kumara Welgama
Rohitha Abeygunawardene
Mahinda Samarasinghe
Rajitha Senarathna
Nandana Gunathilaka
Nirmala Kotalawala
Jayantha Samaraweera
Vidura Wickremanayake
Reginauld Cooray
Tuder Dayarathna
Shantha Jayathilleke
Abdul Maulana
Keerthi Kariyawasam

KALUTAR DISTRICT -DEMOCRATIC NATIONAL ALLIANCE (DNA)- BACKED BY THE JVP

Arjuna Ranathunga
Nalinda Jayatissa
Anura Thalangamarachchi
M A Jagath Pushpakumara
Sanath Vas Gunawardene
Ananda Karunadhara
Nanda Wijeratne
Gayan Prasad Kumara Vithana
Mahammadu Faleel Mahammadu
Sajith Kudaligama
Atapattu Wickremasekera Mahesh
Kumarage Vijitha Karunarathna
Muthukudaarachchige Janak Chaminda Wijegunawardene

TRINCOMALEE DISTRICT (UPFA )
Abdul Majeed Mohamed Najeeb
M.K.A.D.S.Gunawardene
Susantha Punchi Nilame-Minister
Mrs. Ariyawathie Galapthy
K.M.Thowfeek
M.C.Sabarullah
M.N.M.Niyaz

TRINCOMALEE DISTRICT TNA (Ilankai Tamil Arasu Kadchi -ITAK)
R.Sampanthan
S.Mathialagan
K.A.Nadesapillai
K.Nageswaran
K.Thiruchelvam
K.Selvarajah
S.Neminathan


TRINCOMALEE DISTRICT (TMVP)
Judy Devadasan
K.Nalinakanthan
Dr.K.Vigneswaran
Mohamed Mihlar Mohamed Hanifa
Visvalingam Pahirentheran
Vairamuthu Ponnurasa
Paranjothy Disayakumar

ANURADHAPURA DISTRICT (UPFA) Tissa Karaliyadda
S. M. Chandrasena
Duminda Dissanayake
W. B. Ekanayake
Weerakumara Dissanayake
Gamage Weerasena
Asanka Shehan Semasinghe
S. C. Muthukumarana
Premasiri Hettiarachchi
Channa Sudath Jayasumana
Jayalath Bandara Seneviratne
Noordeen Mohamed Sahib

GAMPAHA DISTRICT
Basil Rajapaksa
Felix Perera
Chandrawarthi Pandukabhya
Dias Bandaranaike
Lasantha Alagiyawanne
Niel Rupasinghe
Sarana Gunawardena
Mervin Silva
Dulip Perera
Anjan Umma
Piyasiri Wijenayaka
Athuraliye Rathana Thero
Ruwan Ranatunga
Chandana Jayakodi
Sudarshani Fernandopulle
Upali Gunaratne
Harshani Gunawardena
Wasantha Parakrama
Gamini Wijesinghe
Sisira Jayakodi
Dushantha Widuraka

MATARA DISTRICT (UPFA)
Mahinda Yapa Abeywardene
Chandrasiri Gajadeera
Lakshman Yapa Abeywardene
Wijaya Dahanayake
Manoj Sirisena
Hema Priyasena
Justin Galappatti
Sanath Jayasuriya
Hemal Gunasekara
H. R. Sanjaya
S. Weerawansa

MATARA DISTRICT (UNF)
Mangala Samaraweera
Sagala Ratnayake
Nandasena Hewage
Edwin Silva
Nishantha Haputantrige
Kapila Wellapili
Indika Jatunge
H. R. Wimalasiri
Chandrasiri Rankirige
Buddhika Pathirana
Mohomed Iqbal

MATARA DISTRICT (DNA)
Premasiri Maanage
Jinasada Kithulagoda
N. K. Sisira Kumara
G. Ajantha
Lala Premanath
Padmasiri Samaratunge
Jayantha Kumarasiri
Udayashantha Dissanayake
Sena Ratnayake
Hewa Bandula
Ranjith Jayasinge

KURUNEGALA DISTRICT (UPFA)
S. B. Nawinna
Anura Priyadarshana Yapa
Johnston Fernando
T. B. Ekanayake
Palinda Dissanayake
Jayaratne Herath
Indika Bandaranayake
Munidasa Premachandra
Janet Jayawardena
R. D. Wimaladasa
Anuruddha Gunawardena
T. Basnayake
Abdul Safthar
K. W. Shantha Bandara
Niranjan Wickramasinghe
M. Jayaratne
Senaratne Silva
N. H. S. Ranjith Nawaratne

GALLE DISTRICT (UNF)

Vajira Abeywardena
Gayantha Karunatilleke
Wijeyapala Hettiarachchi
Manusha Nanayakkara
Jayantha Jayaweera
Krishantha Pushpakumara
Ashoka Dhanawansa
Arif Ismail
Maithree Gunaratne
Bandulal Bandaragoda
Sunil Senanayake

HAMBANTOTA DISTRICT (UPFA)

Chamal Rajapaksa
Mahinda Amaraweera
Nirupama Rajapaka
Namal Rajapaksa
Ajith Rajapakse
V. K. Indika
Siripala Jayaweera
D. M. Dharmadasa
Wijitha Punchihewa
M. Samarasuriya

HAMBANTOTA (DNA)

Nihal Galappaththi
Wijitha Ranaweera
Piyasena Ramanayake
Kumara Waahalatantri
Jayantha Wanniarachchi
Athula Welandagoda
C. LIyanarachchi
Kumudu Sujeewa
Jayantha Muthutantri
S. K. Shanthasiri

PUTTLAM DISTRICT (UPFA)

Milroy Fernando
Priyankara Jayaratne
Dayashritha Tissera
Neomal Perera
K.A.Baiz
Samansiri Herath
Arunditha Fernando
Victor Anthony
Nelson Perera
Sanath Nishantha
Indrani Dassanayake

PUTTLAM DISTRICT(UNP)
Palitha Range Bandara
Hemantha Sisira Kumara alies Shantha Abeysekare
Hector Appuhamy
Kingsley Lal Fernando
Nalin Chandana Abeyratne
Niroshan Eardly Perera
Ismail Mohommed Hajjiar
Indira Randeniya
P.N.Gunawardena
Nimal Maximus Fernando
Yehiya Abdeen


Read more...

ஹில்லாரி கிளின்டன் மீது வழக்கு

அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் மீது டெக்சாஸ் மாகாண காவல் துறை அதிகாரி குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில், ஹில்லாரி போட்டியிட்டார்.

இதற்கான பிரச்சாரத்திற்காக அவர் சென்றபோது, அவரது வாகனத்துடன் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகர காவல் துறை அதிகாரி விக்டர் லொஸாடா என்பவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, உயிரிழந்தார்.

இந்நிலையில் தமது கணவருக்கு டல்லாஸ் நகர காவல் துறை,முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக உரிய பயிற்சி அளிக்கவில்லை என்றும், அவர் அணிந்திருந்த ஹெல்மட் தரம் குறைந்ததாக இருந்ததும் அவர் உயிரிழக்க காரணமாக அமைந்துவிட்டதாகவும் குற்றம் சாற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதில் எதிராளிகளாக ஹில்லாரி கிளின்டன்,டல்லாஸ் நகர காவல் துறை, ஹெல்மட் தயாரிப்பு கம்பெனி உள்ளிட்டோரை சேர்த்துள்ளார்.

தமது கணவர் கொல்லப்பட்டதற்கு தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அதில் அவர் கூறியுள்ளார்.

Read more...

தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல்.

முன்னாள் எம்.பிக்கள் 9 பேருடன் பல புதுமுகங்கள் களத்தில்.
வடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று (24) தாக்கல் செய்தது. இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

இந்தத் தேர்தலில் முன்னாள் உறுப்பினர்கள் ஒன்பது பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். போட்டியிட்டுத் தெரிவான பதினொரு பேருக்குப் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வன்னி மாவட்டத்தில் முன்னாள் உறுப்பினரான செல்வம் அடைக்கல நாதன் முதன்மை வேட்பாளராகவும் மற்றும் நடேசு சிவசக்தி(ஆனந்தன்), சு. வினோ நோகரா தலிங்கம் ஆகியோரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக மாவை சேனாதி ராசாவும் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக தோமஸ் விலியம் போட்டியிட சந்திரநேரு சந்திரகாந்தனும் இடம் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டியலில் பா. அரியனேத்திரன் இடம் பெற்றுள்ளார்.

திருகோணமலையில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவளித்த என். ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட 11 பேருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை வழங்கியதாகக் கூறப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர் துரைரெட்ணசிங்கத்தின் பெயரும் உள்ளடக்கப்படவில்லை.

அதேபோன்று சிவநாதன் கிஷோர், க. தங்கேஸ்வரி, ச. கனகரட்னம் ஆகியோருக்குக் கூட்டமைப்பு சந்தர்ப்பம் வழங்காததால் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டி யிடுகின்றனர்.

சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வருவதுடன் இம்முறை புதிய இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

பத்மினி சிதம்பரநாதன், கஜன் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சொலமன் சிறில், இமாம், எஸ். ஜெயா னந்தமூர்த்தி, உள்ளிட்ட 11 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் உறுப்பினர் ரி. கனகசபை அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்டம்


இலங்கைத் தமிழரசுக்கட்சி சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச் சந்திரன் ஆகியோரே இடம்பெற்றுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, சிறில், கஜேந்திரன் ஆகியோர் போட்டியிட விண்ணப்பித்திருந்தும் அவர்கள் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.

புதிய முகங்களாக உதயன், சுடரொளி பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் ஈ. சரவணபவன், பேராசிரியர் இரா. சிவச் சந்திரன், சட்டத்தரணி ரெமீடியஸ், முன்னாள் டிறிபேர்க் கல்லூரி அதிபர் அருந்தவச் செல்வம், மாவை சேனாதி ராஜாவின் செயலாளர் குலநாயகம், ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

அகில இலங்கை தமிழ்க் காங் கிரஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய போதும் அதன் தலைவர் அ. விநாயகமூர்த்தியும் முன் னாள் யாழ். மாநகர சபை ஆணையாளர் சி. வி. கே. சிவஞானமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மற்றைய கட்சிகள் நாளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்.

மட்டு. மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியும் மேலும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் நேற்று காலை நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அரு மைநாயகத் திடம் இந்த நியமனப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பொ. செல்வராசா, பா. அரியநேத்திரன், இ. நித்தியானந்தம், கு. செளந்தரராசா, க. ஆறுமுகன், சீ. யோகேஸ்வரன், த. சிவநாதன், சு. சத்தியநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் பொ. செல்வராசா, பா. அரியநேத்திரன், கு. செளந்தரராசா ஆகிய மூவரும் முன்னாள் எம்.பிக்களாவர்.

வன்னி மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பட்டியலில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராகவும் ஏனைய வேட்பாளர்களாக நடேசு சிவசக்தி, சு. நோகராதலிங்கம், எஸ். சூசைதாசன், பெ. பழனியாண்டி, து. ஜெயகுலராசா, சி. செல்வராசா, எஸ். பீ. எஸ். பீ. சிராய்வா, கு. லோக செளந்தரலிங்கம் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

அம்பாறை மாவட்டம்

தோமஸ் விலியம் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட கே. மனோகரன், சந்திரநேரு சந்திரகாந்தன், செ. இராசையா, எச். வி. விஜேசேன, ரோமியோ குமாரி சிவலிங்கம், வே. தங்கதுரை, எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. வடிவேல், எஸ். பகீரதன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

Read more...

பிரிட்டிஷ் பிரதமர் மீது குற்றச்சாட்டு

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் புதிய நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். பிரதமர் அலுவலக ஊழியர்களை அவர் கொடுமைப்படுத்தியதாக புகார் கூறப்படும் வேளையில் மேலும் ஒரு சிக்கல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. சித்ரவதையை எதிர்க்கும் ஓர் அமைப்பு, பிரதமர் அலுவலக ஊழியர்கள் சிலர் அந்த அமைப்புடன் தொடர்பு கொண்டு பிரதமரைப் பற்றி குறை கூறியதாகத் தெரிவித்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில் பிரதமர் அலுவலக ஊழியர்கள் 3 அல்லது 4 பேர் தங்கள் அவசர அழைப்பு எண்ணுடன் தொடர்பு கொண்டதாக அந்த அமைப்பின் தலைமை நிர்வாகி கிறிஸ்டின் பிராட் கூறினார். பிரதமர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று பிரதமர் அலுவலகப் பேச்சாளர் கூறியுள்ளார். திரு பிரவுன் அவரது அலுவலக ஊழியர்களை கொடுமைப்படுத்துவதாக அரசியல் செய்தியாளர் ஆண்டுரு ரான்ஸ்லி அவரது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

Read more...

Wednesday, February 24, 2010

வன்னியில் புளொட், இரு சுயேச்சைகள் நேற்று வேட்பு மனுதாக்கல்.

வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவத ற்காக புளொட் நேற்று (24) வேட்பு மனுத் தாக்கல் செய்தது. புளொட் முதன்மை வேட்பாளராக கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் போட்டியிடுகிறார். புளொட் பட்டியலில் க. சிவனேசன், ரஞ்சித் ருஸ் வேல்ட், ஈ.பரஞ்சோதிலிங்கம், க. ஞானதாஸ், பு. பாலச்சந்திரன், சு. வரோனிகா, பு. திருச் செல்வன், து. சுந்தரராஜ் ஆகியோரும் அட ங்குவர். இது தவிரவும், இரண்டு சுயேச்சைக் குழுக்களும் நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கு. கனேஸ்வரன் தலைமையிலான சுயேச் சைக் குழுவில் சி. உதயராசா, வி. கலைச்செல்வன், த. நவநீதன், இ. சுப்பிரமணியம், க. பெரியண்ணன், க. சகுந்தலாதேவி, ஐ. ஏநோக், கு. அந்தோனி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மு. சகாப்தீன் தலைமையிலான குழுவில் இ. முத்து முகமது, மீ. அமீன், ர. ரவுசான், மு. அன்வர், மு. பிரதிவிராஜ் வாசன், எம். ஜவாத்கான், ஆர். ஆர். பெதிகே விஜித ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Read more...

ஒபாமா படித்த பள்ளிக்கூடத்தில் அவரது சிலை

இந்தோனீசியாவில் ஜகார்த்தா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த ஒபாமா வெண்கலச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு தற்போது அவர் படித்த பள்ளிக்கூடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. சிறுவனாக ஒபாமா இருந்தபோது படித்த பள்ளிக்கூடத்திற்கு அந்த சிலை மாற்றப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அப்பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கையில் வண்ணத்துப் பூச்சியை பறக்கவிட்டபடி சிறுவன் ஒபாமா நிற்பது போன்ற அந்த அழகிய சிலை, முன்பு ஜகார்த்தா பூங்காவில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தோனீசியர்கள் பலர் அங்கு அந்த சிலை வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சென்ற வாரம் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதாக அப்பள்ளி அதிகாரிகள் கூறினர்.

Read more...

மறைந்தும் மறையாத அமுதுப்புலவர் அடைக்கல- முத்து அமுதசாகரன் - கலாபூசணம் புன்னியாமீன் -

அமுதுப் புலவர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 இலண்டனில் தன் உலகவாழ்வைவிட்டு நீங்கிய செய்தி எம் இதயங்களைக் கனக்கச் செய்தது. அன்னாரின் மறைவையிட்டு இந்தக் கட்டுரை இடம்பெறுகின்றது.

வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய் இளவாலைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் ‘இளவாலை அமுது’ எனும் பெயரில் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும், புலம்பெயர்ந்த இலக்கியப் பரப்பிலும் நன்கு அறிமுகமான மூத்த எழுத்தாளரும், கவிஞருமாவார். அமுது, மறைமணி எனும் பெயர்களிலும் எழுதி வந்த ‘அமுதுப் புலவர்’ 1984ம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம்பெயர்ந்து தனது குடும்பத்துடன் லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்.

யாழ்ப்பாணம் இளவாலையில் தம்பிமுத்து, சேதுப்பிள்ளை தம்பதியினரின் புதல்வாரன இவர் யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் வித்தியாலயம், யாழ். சேன் பற்றிக்ஸ் கல்லூரி, கொலம்பகம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த் துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்துவான்’ பட்டமும் இலங்கை கல்வித்தணைக்களத்தில் ‘பண்டிதர்’ பட்டமும் பெற்ற இவர், ஓய்வுபெற்ற முதலாம்தர ஆசிரியருமாவார்.

சுமார் 7 தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்துறையில் முனைப்புடன் செயற்பட்டு வரும் அமுதுப் புலவரின் கன்னியாக்கம் 1938ம் ஆண்டு இலங்கையில் முதலாவது தமிழ்ப் பத்திரிகையெனக் கருதப்படும் ‘சத்தியவேத பாதுகாவலன்' எனும் பத்திரிகையில் ‘மாதா அஞ்சலி' எனும் தலைப்பில் பிரசுரமானது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் ‘தூதன்' என்ற சஞ்சிகையின் 100வது ஆண்டு மலருக்கு ஆசிரியராக நின்று பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி, புதினம், அஞ்சல், தொடுவானம், ஈழமுரசு போன்ற பல்வேறு சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பல வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.

இத்தகைய இவரது ஆக்கங்களில் சில இதுவரை 11 நூல்களாக வெளிவந்துள்ளன. 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘மாதா அஞ்சலி’ எனும் நூல் இவரின் முதலாவது நூலாகும். இதைத் தொடர்ந்து வெளிவந்த இவரின் நூல்கள் பின்வருமாறு:

நெஞ்சே நினை (வரலாறு)
இவ்வழி சென்ற இனிய மனிதன் (சிறுகதைத் தொகுதி)
காக்கும் கரங்கள்
அமுதுவின் கவிதைகள்
அன்பின் கங்கை அன்னை திரேசா
மருத மடு மாதா காவிய மல்லிகை
அமுதுவின் கவிதைகள் (திருத்திய இரண்டாம் பதிப்பு)
அன்னம்பாள் ஆலய வரலாறு
இந்த வேலிக்குக் கதியல் போட்டவர்கள்.
“இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்''


அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்'' என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக லண்டனில் அவரது 92வது வயதில் நடந்தேறியமையும் குறிப்பிடத்தக்கது.

இவரின் ‘அமுதுவின் கவிதைகள்' என்ற நூலின் முதற்பகுதி சில்லாலை வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற ‘தம்பி' தமிழ் அரங்கத்தினால் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் இவர் தெரிவித்திருந்த சில கருத்துக்கள் அனைவரினதும் மனங்களை நெருடக்கூடியவை. அதனை அவரின் வரிகளிலேயே தருவது பொருத்தமானதாக அமையும்.

“….வீட்டிலும், நாட்டிலும் இரத்தத்துளிகள். தமிழன் என்ற வேருக்கே கோடாரி வைக்கப்பட்டது. இடம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வரவேண்டியதாயிற்று. ஒரு ஒற்றைத் தாளைத் தானும் உடன் கொண்டு வந்தால், இடையே உள்ள இருபது தடைமுகாம்களிலும், ஆபத்தை விலைக்கு வேண்டுவதாய் முடியும். இந்த நிலையில் நான் நீண்ட காலமாகத் தேடித் திரட்டிய நூல்களையும், எனது கவிதைக் கோவைகளையும், என் இல்லத்தில் பக்குவமாய் வைத்து விட்டுப் பிறநாடு வந்து சேர்ந்தேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு என் இல்லத்துக்குச் சென்ற போது அங்கே சுடுகாட்டின் மௌனம் தோன்றியது. கடுகு மணியொன்றைக் கண்டெடுத்தாலும், காகிதத் துண்டு ஒன்றைக் காணமுடியவில்லை. திருடர்கள் திருவிழா நடத்தியிருக்க வேண்டும.; வாழ்ந்த சுவடுகள் கூடத் திருடப்பட்டு விட்டன…..''

இது அமுதுப் புலவரின் முகவுரை வரிகள். இந்த வரிகள் அமுதுப்புலவரின் சொந்த வரிகள் அல்ல. தாயகத்தை விட்டுப் புகலிடம் வந்த பலரின் ஆத்மாவின் குரல்கள் இளவாலை அமுதுவின் தொலைந்து போன கவிதைகள் கூட இன்று நூலுருவில் வெளியாக அவருக்கு ஒரு நண்பர் இருந்திருக்கிறார். சட்டத்தரணி இரா. ஜெயசிங்கம் அவர்கள் அமுதுவின் கவிதைகளை பத்திரிகைகளில் இருந்து தனது ஆர்வத்தின் காரணமாகத் தொகுத்து வைத்திருக்கின்றார். அந்தக் கவிதைகளும் சேர்ந்தே முதலாவது பதிப்பாக ‘அமுதுவின் கவிதைகள்' வெளிவந்தன.

இளவாலை அமுதுவின் சில நூல்கள் பற்றி பிரபல எழுத்தாளரும், நூலாசிரியருமான என். செல்வராஜா அவர்கள் தனது நூல் தேட்டம் பாகம் 1இல் 508, 874வது பதிவுகளாகவும், பாகம் 3 இல் 2098, 2867வது பதிவுகளாகவும் பாகம் 4இல் 3648 வது பதிவாகவும் பதிவாக்கியிருந்தார். அக்குறிப்புகளைப் பின்வருமாறு அவதானிக்கலாம்.

அன்பின் கங்கை, அன்னை திரேசா: இளவாலை அமுது (இயற்பெயர்- அமுதசாகரன் அடைக்கலமுத்து) லண்டன்: தமிழரங்கம், மே 1997. (லண்டன்: வாசன் அச்சகம்)(16),230 பக்கம், புகைப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 5.00. அளவு: 20X14.5 சமீ.

அன்னை திரேசா என்ற பெயர் பலருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் அந்தப் பெயருக்குள் இருக்கும் அன்னையின் பணிகளைத் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. அவர் வாழ்க்கை இனிய தமிழில் நூலுருவாகியுள்ளது. கத்தோலிக்கத் துறவியாக அழைப்புப்பெற்று ஆசிரியராக இந்து முஸ்லீம் மக்களிடையே கடமையாற்றிய வேளை வாழ்வின் விளிம்பில் நின்று தவிப்போருடன் தொடர்பு கொண்ட அன்னை திரேசாவின் கதையை இளவாலை அமுது நூலாகப் படைத்துள்ளார். இக்கதை ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறாக மட்டு மின்றி ஒரு தொண்டர் நிறுவனத்தின் வரலாறாகவும் அமைகின்றது.

நெஞ்சே நினை: சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்க்கை வரலாறு. ச.அடைக்கலமுத்து, (புனைபெயர்: இளவாலை அமுது). யாழ்ப்பாணம்: யாழ். மறைமாவட்ட இலக்கியக் கழகம், ஆயர் இல்லம், 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).(16), 210 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 21X14 சமீ.

மானிப்பாயில் பிறந்து, அச்சுவேலியில் வளர்ந்து நல்லூரிலிருந்து முழு உலகிற்கும் தொண்டாற்றி 1947 தைத்திங்கள் 22ம் நாள் மறைந்த பன்மொழிப்புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் வாழ்வும் பணியும் இங்கு இலக்கியச் சுவை சொட்டக் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள்: இளவாலை அமுது. லண்டன் SW17 7EZ: புதினம் 10ஆவது ஆண்டு நிறைவு வெளியீடு, 38, Moffat Road , 1வது பதிப்பு, மே 2006. (யாழ்ப்பாணம்; புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான வீதி). 213 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண் 5., அளவு: 21X14.5 சமீ.

புலவர்மணி கலாநிதி இளவாலை அமுது அவர்கள் லண்டன் புதினம் இருவாரப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்த வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. தமிழ் வளர்த்த சான்றோர்கள் மாத்திரமன்றி, சமகால ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் என்று 44 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை முதல் மறைந்த மனிதகுல மாணிக்கம் இரண்டாம் யோவான் பவுல் (பாப்பாண்டவர்) வரை விரிந்துள்ள இத்தொடரில், சமகால புகலிடக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

மருத மடுமாதா காவிய மல்லிகை. அமுதசாகரன் அடைக்கல முத்து (புனைபெயர்: அமுது). லண்டன்: தமிழ் அரங்கம், 87, Hazelmere Walk, Northolt, Middlesex, UB5 6UR. 1வது பதிப்பு, 1998 (கொழும்பு 13: லங்கா பப்ளிசிங் ஹவுஸ்) (32),162 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21ஒ13.5 சமீ.

இலங்கையில் மருதமடுத்திருப்பதியில் வீற்றிருக்கும் மடுமாதா பேரில் பாடப்பெற்றதும், மரபுக்கவிதைகளில் எழுதப்பெற்றதுமான காவிய நூல். அட்டையில் மடுமாதா காவியம் என்ற தலைப்புடன் வெளிவந்துள்ளது.

அமுதுவின் கவிதைகள். இளவாலை அமுது. இலண்டன்: Tamil Literary Society 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1991. (சென்னை 17: Manimekalai Prasuram, T. Nagar).
240 பக்கம், விலை: இந்திய ரூபா 100, அளவு: 21.5X14.5 சமீ.

வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற பண்டத்தரிப்பு தம்பி தமிழ் அரங்கத்தின் முதலாவது பதிப்பாக 1991இல் வெளியான அமுதுவின் கவிதைகளின் திருத்திய மறு பதிப்பு இதுவாகும். அமுதுப்புலவர், இளவாலை அமுது என்று நம்மிடையே அறிமுகமாகியுள்ள அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்களின் இத்தொகுதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசியபானம் என்ற தலைப்பில் 17 கவிதைகளையும், சிந்தனைச் சந்தனம் என்ற பிரிவில் 35 கவிதைகளையும், முல்லையில் கிள்ளிய மொட்டுக்கள் என்ற தலைப்பில் 20 கவிதைகளையும், நெஞ்சில் தோன்றிய நினைவுச் சுடர்கள் என்ற தலைப்பில் தமிழ்ப் பெரியார்கள் பற்றிய 27 கவிதைகளையும், கதிரொளியில் சில துளிகள் என்ற தலைப்பில் 11 கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளன.

தமிழ்மொழிக்கு இவர் ஆற்றியுள்ள பங்களிப்பு, தமிழர் பண்பாட்டுக்கு இவரின் பணி, சமயத்துக்காக இவரின் சேவைகள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு 2004ம் ஆண்டில் உரோமா புரியில் பரிசுத்த பாப்பாண்டவர் அவர்களினால் “செவாலியர்'' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தம் வாழ்வில் கிடைத்த மாபெரும் கௌரவமாக கருதி வரும் இளவாலை அமுது அவர்களுக்கு, ஸ்ரீ லங்கா அரசு 2005ம் ஆண்டில் ‘கலாபூஷணம்'' விருது வழங்கியும், யாழ் பல்கலைக்கழகம் ‘கலாநிதி' பட்டம் வழங்கியும் கௌரவித்துள்ளன. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது. அத்துடன் தாயகத்திலும் புகலிடத்திலும், பல்வேறு அமைப்புக்கள் கவிமாமணி, தமிழ் கங்கை, மதுரகவி, சொல்லின் செல்வர், புலவர் மணி, செந்தமிழ்ச் செல்வர் போன்ற பட்டங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

எத்தகைய பட்டங்களைப் பெற்றாலும், எதுவித கர்வமுமின்றி இனிதாகப் பழகும் சுபாவம் கொண்ட இம்முதுபெரும் ‘தமிழ் வித்தகர்'' ஆரம்ப காலங்களில் தான் இலக்கியத் துறையில் ஈடுபடுவதற்கும், அதே போல பல்வேறுபட்ட மனச்சோர்வுகளுடன் புலம்பெயர்ந்த பின்பு தனது எழுத்துத் துறை ஆர்வத்தைத் தூண்டி, எழுத மீண்டும் ஊக்கமளித்தவர்கள் என்ற அடிப்படையிலும், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, புலவர் இளமுருகனார், ஆயர் தியோகிப்பிள்ளை, கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் ஈ. கே. இராஜகோபால் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வந்தார்.

மரபுக் கவிதையே வழிவழி தொடர வேண்டும் என்ற அவாக் கொண்டிருந்த இவரின் அன்பு மனைவி ஆசிரியை திரேசா ஆவார். இத்தம்பதியினரின் அன்புச் செல்வங்கள் பேராசிரியர் ஏ.ஜே.வீ. சந்திர காந்தன், கலாநிதி ஏ.எல். வசந்த குமாரன், திருமதி இந்துமதி சாம்சம், ஆகியோராவார். எழுத்துத்துறையிலும், கவிதைத்துறையிலும் பல்வேறு பட்ட சாதனைப் புரிந்துள்ள, இளவாலை அமுது அவர்கள் சுமார் அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிகையாளராக ‘இளைஞர் போதினி' எனும் பத்திரிகையை (1940ம் ஆண்டில்) நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

Read more...

இனப்பிரச்சினையை தீர்க்க புதிய திட்டம்: இலங்கைக்கு பிரிட்டன் வலியுறுத்தல்

இலங்கையின் இன பிரச்னை தீர்வுக்கு புதிய திட்டம் ஒன்றை உடனடியாக அமலாக்க வேண்டும் என பிரிட்டன் அயலுறவுச் செயலாளர் டேவிட் மிலிபாண்ட், அதிபர் மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தியுள்ளார். கடந்த வருடம் மே மாதத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து, இலங்கையின் நிலவரம் குறித்து கண்காணிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரசாங்கத்துக்கு தனியாக இலங்கையின் இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான உயரிய வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரிட்டன் அயலுறவுத் துறை அமைச்சகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளை வரும் நாட்களில் லண்டனில் நடைபெறவுள்ள உலக தமிழர் மாநாட்டில், டேவிட் மிலிபாண்ட் கலந்து கொண்டு, இது தொடர்பாக வலுசேர்க்கவிருப்பதாக பிரிட்டன் அயலுறவுத்துறை அமைச்சக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே டேவிட் மிலிபாண்ட், உலக தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதன் மூலம், இலங்கை அரசாங்கத்துக்கும் அவருக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலடையலாம் என பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக தமிழர் மாநாடு, தமிழீழ கோட்பாட்டை வலியுறுத்தி நிகழ்த்தபடுவதன் காரணமாகவே இந்த கருத்து நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மிலிபாண்ட் இலங்கையின் சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளையும், பிரச்சினைக்கான தீர்வையும் பெறுவதற்கு சில சாதகமான கருத்துக்களையே வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கையில் மோசடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கருத்துக்களை தகர்க்கும் வகையில் துரிதமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com