உள்ளுரில் தயாரிக்கப்படுபவற்றை புத்தாக்க தொழிற்றுறையாக மேம்படுத்துவதற்கான காலம் வந்திட்டாம்!
கொரோனா வைரசு தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு உள்ளுரில் தயாரிக்கப்படுபவற்றை புத்தாக்க தொழிற்றுறையாக மேம்படுத்துவதற்கான காலம் ஏற்பட்டிருப்பதாக உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நேற்றைய தினம் விசேட ஊடக கலந்துரையாடலொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திருமதி. சித்திக்க சேனாரத்ன மற்றும் நிறுவனத்தின் பொறியியல் பிரிவு பணிப்பாளர் சுனந்த பெர்னாண்டோ ,அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேற்று முன்தினம் தொடக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ள நாட்டை வழமை நிலைக்கு முன்னெடுக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக இடம் பெற்றுவருவதாக தெரிவித்த அமைச்சர், வீடுகளிலிருந்து நகரங்களுக்கு வரும் பொதுமக்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதியின் விசேட செயலணி, சுகாதாரப் பிரிவு, பாதுகாப்பு பிரிவுகளினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கடைபிடித்து செயல்படுகினறனர் என்றும் கூறினார்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட சார்க் வலய நாடுகளுக்கு மத்தியில் கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் இலங்கை உயர்மட்டத்தில் காணப்படுவதாக சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று நாட்டில் இலவச சுகாதார சேவை இடம்பெறுவதினால் இந்த நிலையை அடைவதற்கு முடிந்துள்ளது. இலங்கையில் இன்னும் இறப்பு விகிதத்தை ஒற்றை இலக்கத்;துடன் முன்னெடுக்க முடிந்துள்ளது. இதற்காக அரசாங்க பிரிவு பாரிய அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளது என்பதையும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment