விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்றுவரும் மற்றும் தேசிய விளையாட்டுக் குழாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் பாதுகாப்பு அமைச்சினால் இரத்து செய்யப்படுவதால் அனைத்து படைவீரர்களும் தத்தமது முகாம்களுக்கு திரும்ப வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.
இந்நிலையில் விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment