ஜனாதிபதியின் கட்டளையின் பேரில் தவறுகள் நிவர்த்தி செய்யப்படும்! - இராணுவத் தளபதி
தனிமைப்படுத்தலுக்கு உள்ளான அனைவரையும் விடுவிப்பதற்கு முன்னர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கட்டளையிட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் கவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கேற்ப, தற்போது அதனைச் செயற்படுத்துவதற்கு ஆவன செய்வதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட 1500 பேரில் முதல் பிரிவினர் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே, இராணுவத்தளபதியின் பிரயத்தனத்தினாலேயே நேற்று முன்தினம் புத்தளத்திலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 16 நோயாளர்கள் கண்டுபிடிக்ப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட 3500 பேருக்கு PCR பரிசோதனை நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment