Tuesday, March 24, 2020

ஊரடங்குச் சட்டம் தளர்வு

கொழும்பு, கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் இன்று திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன், அது 27ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும்.

இந்த எட்டு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாட்டங்ளில் தற்போது நடைமுறையுள்ள ஊரடங்கு உத்தரவு 27ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

ஊரடங்கு அமுலில் இருக்கும் வேளையில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணங்கள் மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்படும்.
விவசாய மற்றும் வர்த்தக துறைக்கு பொறுப்பான அமைச்சர் இப்பணிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com