Monday, February 10, 2020

சிறிதரனின் சகாவின் அராஜகத்திற்கு எதிராக கோட்டாவிடம் நீதிகோரி ஓட்டமும் நடையுமாக செல்லும் தமிழன்..

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரான சிறிதரனின் சகா வேழமாலிகிதனின் ஆராஜகத்திற்கு நீதிகோரி கிளிநொச்சியிலிருந்து தமிழன் ஒருவர் கோத்தபாயவிடம் செல்கின்றார்.

இன்று கரைச்சி பிரதேச சபை முன்றலிலிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி துவிச்சக்கர வண்டியில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ள குறித்த நபர் இது தொடர்பில் கூறுகையில் :

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரின் சட்டமீறலாலும், அட்டடூழியத்தாலும், அராஜகத்தாலும் துவண்டு போன அருநாதன் ஆகிய நான் உண்மையான நேர்மையான நீதியை பெறுவதற்காக அதி உத்தமரான ஜனாதிபதியிடம் ஓட்டமும் நடையுமாக செல்கிறேன்.

இவ்விடயம் தொடர்பில் இன்று வடக்கு மாகாண ஆளுனரை சந்தித்து எனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பில் தெரியப்படுத்தியபின்னரே எனது பயணத்தை தொடங்குகின்றேன்.

என்னிடம் விடுதி உள்ளது. தேவையான அனுமதிகளை பொய்யான காரணங்களைக் கூறி தர மறுகிறார். நான் எனது விடுதிக்கு லங்காதீப என்ற சிங்களப் பெயர் வைத்ததாலும் நான் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் என்பதாலும் எனக்கு அனுமதி தர மறுக்கிறார். எனது விடுதிக்கு எந்த பெயரை வைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இதனால் இவரின் காட்டாட்சிக்கு எதிராக நீதி தேடி அலைகிறேன் என தெரிவித்தார்.

குறித்த நபர் தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீடியோ பதிவு :








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com