Wednesday, July 3, 2019

எனது கணவன் இஸ்லாத்திற்கு மாற மறுத்ததால் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் எனது சட்டையை பிய்த்து அடித்தனர்.

சிங்கள இளைஞன் ஒருவனை திருமணம் முடித்திருந்த அப்துல் ஹசாத் பாத்திமா ஹைபம் (38) என்ற பெண் தனது கணவன் இஸ்லாத்திற்கு மாற மறுத்ததால் தனது வீட்டினுள் புகுந்த பள்ளிவாயல் நிர்வாத்தினர் சட்டையை பிய்த்து அடித்து துன்புறுத்தினர் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் முன் தோன்றிய அவர்:

நான் எனது சுயவிருப்பின் பெயரில் பௌத்த மதத்தை சேர்ந்த ஒருவரை திருணம் செய்திருந்தேன். நான் எனது மதத்தையும் அவர் அவரது மதத்தையும் தழுவிவந்தோம்.

பள்ளிவாயல் நிர்வாகத்தினர் எனது கணவரை இஸ்லாத்திற்கு மாறுமாறு பலமுறை வற்புறுத்தினர். அதற்கு பிரதியுபகாரமாக வாகனங்களையும் வீடுகளையும் தருவதாக கூறினர்.

அவர் மாற விரும்பாத போது அவரை விட்டுவிட்டு வரும்படியும் என்னை மறுமணம் செய்ய நிறைய முஸ்லிம்கள் காத்திருப்பதாகவும் கூறினர். பிரபல்யலமான செல்வந்தர்களான காஜியார்மார்கூட என்னை நேரடியாக அணுகினர். என்னையும் எனது மகளையும் பாரமெடுப்பதாக கூறினர்.

இச்சமயத்தில் இருப்பது மரணிப்பதைவிட வேதனையானதாகவே நான் உணர்கின்றேன். நீங்கள் தான் இஸ்லாத்தை விட்டுவிட்டீர்கள் உங்களது 11 மகளை முஸ்லிம் ஒருவருக்கு திருமணம் செய்து கொள்ள அனுமதியுங்கள் என்றனர்.

எனது கணவனின் தாய் தந்தையரிடம் சென்று அவர்களையும் இஸ்லாத்திற்கு மாறுமாறு வேண்டினர்.

இவை யாவும் நிறைவேறாதபோது எங்கள் மீது வன்முறைகளை பிரயோகித்தனர். தெருவால் செல்லும் போது கல்லால் அடித்தனர். நான் துவிச்சக்கர வண்டி ஓடும்போது இஸ்லாத்தில் அதற்கு இடமில்லை என்றும் என்னை பார்த்து ஏனைய முஸ்லிம் பெண்களும் அதனை செய்ய முனைவர் என்று அச்சுறுத்தினர். இச்செயல்கள் அத்தனைக்கும் பின்னால் பள்ளிவாயல்களே உள்ளது.

ஒரு நாள் வீட்டை சுற்றிவளைத்தனர். கதவுகளை உடைத்தனர். வீட்டின் கதவுகளை பூட்டிக்கொண்டிருந்தபோது, கூரைமீதேறி ஓடுகளை கழட்டி நானும் பிள்ளைகளும் அழுதுகொண்டிருக்கும்போது வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து எமக்கு உளவியல் தாக்கத்தை தந்தனர்.

ஒருநாள் கதவை உடைத்துக்கொண்டுவந்து எம்மை தாக்கி இழுத்துச் சென்றனர். பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றபோது பொலிஸார் எங்களை கூட்டில் அடைத்தனர். நான் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தபோது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

பின்னர் நான் ஞானசார தேரரை அணுகினேன். அவர் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்தபோது வெறும் ஆறுபேரை பிடித்து நீதிமன்றில் நிறுத்தினர். நான் 14 பெயரின் பெயர்களை கொடுத்துள்ளேன் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளார் அந்த பெண். அவர் ஊடகங்கள் முன் தெரிவித்தவற்றை இங்கு கேட்கலாம்.



விடயங்களை பகிரங்கமாக இப்பெண் தெரிவித்ததை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்காக பொலிஸ் உத்தியோகித்தர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வீசேட பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

அது தொடர்பான பூரண விபரம் நாளை தரவேற்றம் செய்யப்படும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com