Saturday, July 6, 2019

பிரபாகரனை நிரகாரிக்கின்றோம், 13 ஏற்கின்றோம்! அமெரிக்காவிடம் முன்னாள் புலிகள்.

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் இணைந்து ஜனநாயகப் போராளிகள் என்ற பெயரில் இயங்கி வருகின்றனர். இவர்கள் நேற்று யாழ்பாணத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பின்போது பிரபாகரனால் நிராகரிக்கப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு 13 ஓர் ஆரம்ப புள்ளியாக அமையும் என தாம் நம்புவதாகவும் அவர்கள் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

தாம் முன்னர் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் தற்போது ஜனநாயக வழியை விரும்புவதாகவும் தெரிவிக்கும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தொடர்ந்து அங்கீகாரம் கேட்டு வந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களை தனித்தரப்பாக கூட்டமைப்பில் உள்வாங்க தயக்கம் காட்டி வருவதுடன் தனிநபர்களாக சிலரை இணைத்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இவர்களை மேற்குலகின் ராஜதந்திரிகள் சிலர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மேற்குலகு தமது நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப முன்னாள் புலிகளை இயங்க வைப்பதற்கான உத்தியாகவே இச்சந்திப்புக்கள் அமைவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் புலிகள் மேற்குலகில் தஞ்சம் கோருகின்றபோது, பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் என காரணம்காட்டி அவர்களுக்கான அரசியல் தஞ்சக்கோரிக்கையை நிராகரிக்கும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் இலங்கையில் இரட்டைவேடம் போடுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com