Thursday, March 21, 2019

காணி சுவீகரிப்பு நடவடிக்கை, தற்போது வடக்கில் கைவிடப்பட்டுள்ளது - தமிழ் தேசிய கூட்டமைப்பு

தற்போது வலிகாமம் வடக்கில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து, இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் தம்மிடம் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

வலிகாமம் - வடக்கு கடற்படை முகாமுக்காக சுமார் 252 ஏக்கர் காணியை சுவீகரிக்க தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்கான நில அளவீடுகள் நாளை முன்னெடுக்கப்படவிருந்தன.

இந்த காணிப்பரப்பில், பாரிய கடற்படை முகாமை அமைப்பதற்காக வலிகாமம் வடக்கை சுற்றியுள்ள சில பகுதிகளையும் சுவீகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக குறித்த பகுதிகள், அடுத்து வரும் நாட்களில் நில அளவீடு செய்யப்படும் என, நில அளவைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

எனினும் நாளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த சுவீகரிப்புப் பணிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

1 comments :

Anonymous ,  March 21, 2019 at 12:02 PM  

Hi there, constantly i used to check weblog posts
here in the early hours in the dawn, because i
enjoy to learn more and more.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com