Wednesday, September 19, 2018

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்! தாஹிர் நூருல் இஸ்ரா

மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை திருமதி தாகிர் நூருள் இஸ்ரா மேற்கொண்டு வருகின்றார். சுமார் ஒரு மணி நேரம்கொண்ட விழிப்புணர்வு காணொளி ஒன்று இங்கே தரவேற்றப்பட்டுள்ளது. எவ்வாறு புற்றுநோய் உருவாகின்றது, புற்றுநோயுடன் எவ்வாறு வாழ்வது, தடுப்பதற்கான வழிகள், சிகிச்சைகளை தொடர்பில் குறித்த காணொளியில் விரிவாக பேசப்பட்டுள்ளது.

இக்காணொளியை பார்வையிடுபவர்கள் அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.




*உங்கள் வீட்டு பெண்களில் கவனம் எடுங்கள்.* 50 வயதுகளில் ஒரு பெண். “என்ன வருத்தம்” “ நெஞ்சுல கட்டி”

அவரைப் பரிசோதித்து முடித்த போது, அவருக்கு மார்பில் கட்டி ஏற்பட்டு இன்றுடன் 9 மாதங்கள். இவர் வைத்தியசாலைக்கு வந்தது 4 நாட்களுக்கு முன்னால்தான். கேன்சர் அக்குளுக்குள்ளும் பரவி இருந்தது.

எனது பரிசோதகர் ஒரு பேராசிரியர். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு கடைசியாக ஒரு கேள்வி கேட்டார்.

“ இவருடைய எதிர்கால உடல் நிலை எவ்வாறு அமையும்”
“ ரோட்டிங்ஹாம் ஸ்கோர் படி ......”
“ நீ எந்த ஸ்கோர பாவிப்பியோ தெரியா, இந்த நிலமையில இருந்து இந்த பேஷன்டுக்கு பூரண சுகம் கிடைக்குமா? கிடைக்காதா?”
“ கிடைக்காது சேர்”

பயிற்சி வைத்தியராய் இருந்த நேரம் 45 வயது பெண். வாசலில் சறுக்கி விழுந்திருக்கிறார். X rayஇல் முதுகெலும்பு நொறுங்கி இருந்தது.

அன்று ரவுன்ட்சுக்கு வந்த orthopaedic surgeon இடம் X rayஐ காட்டினேன்.

“ இந்த வயசில இப்படி உடையாது. அப்பிடி உடையுது என்டா அது abnormal bone. உடம்புல ஏதாவது கட்டி இருக்கா என்டு பாரு”

“உங்கட உடம்புல எங்கயாவது கட்டி இருக்கா?”

“இல்லியே”

அவரை முழுமையாக பரிசோதித்த போது , இடது மார்பில் டெனிஸ் பந்து அளவில் ஒரு கட்டி இருந்தது.

“இந்தா கட்டி இருக்கே!”

“அது ஒரு 6 மாசமா இருக்கு”

“ ஏன் காட்ட இல்ல?”

“ மச்சான் வெளிநாட்ல, எனக்கும் வெட்கமா இருந்திச்சி”

இந்த மார்புக் கட்டிதான், அவருடைய முள்ளந்தண்டுக்கு பரவி இருந்தது. இவ்வாறு மார்புப் புற்று நோய், முள்ளந்தண்டுக்கு பரவினால், அவர்களின் சராசரி ஆயுட்காலம் 24 மாதங்கள். இந்நேரம் அவர் இறந்திருக்க கூடும்)

எனது சத்திரசிகிச்சை பயிற்சியில் முதல் வருடம். களுபோவில ஹொஸ்பிடலில் பல பேஷன்ட்களை கண்டிருக்கிறேன். 15-20 வருடங்களுக்கு முன்னால் மார்புப் புற்று நோய்க்கு சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வருடத்திற்கு ஒரு முறை கிளினிக் வந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அண்மையில் எனதூரைச் சேர்ந்த 38 வயதான ஒரு பெண். திடீரென சுவாசிக்க கஷ்டப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் இடது மார்பு முழுவதும் கல்லுக் கட்டியாய் இருந்தது.

விசாரித்ததில் கட்டி ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேல். ஏன் காட்டவில்லை எனக் கேட்டதற்கு அவருடைய பதிலும் “வெட்கம்”. இரண்டு மாதங்களில் அவருடைய உயிர் பிரிந்தது.

அதிக குழந்தைகள் பெறுவதும், குழந்தைகளுக்கு தாய்ப் பாலூட்டுவதும், மார்புப் புற்று நோயிலிருந்து பாதுகாப்பளிக்கும்.

உங்களது உயிர் உங்களது வெட்கத்தை விட மேலானது. அருகிலுள்ள ஒரு பெண் வைத்தியரிடமாவது, உங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை காட்டுங்கள்.

Dr. Ahamed Nihaj
🔸🔸🔸🔸
*மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு*
Video
https://www.youtube.com/watch?v=8Xce7PbibA8
Breast Cancer Awareness
Counselor Thahir Noorul Isra

Contact 0094776231276
to organize such events in your area.
Thahir Noorul Isra
BA, MSW(M&P), M. Phil (Psy.SW), Dip in counselling & HR.
Awareness on breast cancer among women

மார்பக புற்றுநோய் வேகமாக சமுதாயத்தின் மத்தியில் பரவிவருகிறது . எனவே நோய்க்கான அறிகுறிகளையும் சிகிச்சை முறைகளையும் அறிந்திருப்பது அவசியமாகும்.

இந்த வீடியோ மரபாக புற்று நோய் சம்பந்தமாக பொதுமக்களுக்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்..

எனவே இந்த வீடியோவை பெண்களுக்கு விசேடமாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் திரையில் காண்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தயவாய் கேட்டுக்கொள்கிறோம் .



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com