Friday, July 25, 2014

யுத்தக்குற்றம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட வேண்டுமென்றால் அது இஸ்ரேலியப் பிரதமர் மட்டுமே! பலநாடுகள் தயங்குகின்றன!

இஸ்ரேலின் கண்மூடித் தனமான தாக்குதல் காரணமாக சிறுவர் சிறுமியர் உட்பட பலர் கொல்லப்படுகிறார்கள். யுத்தக்குற்றம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட வேண்டுமென் றால் அது இஸ்ரேலியப் பிரதமர் தான் எனவும் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஏகாதிபத்திய அமெரிக்காவின் அனுசரணையில் இன்று இஸ்ரேல் அடவாடித் தனத்தை செய்து வருகிறது. எனினும் இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் எமது நாடு அங்கீகரித்துள்ளது. எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீன் இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவரா கவும் நீண்டகாலம் இருந்து வந்துள்ளார்.

என்றாலும் இன்று காசா மீது தொடுக்கப்படும் தாக்குதலை நிறுத்துவதற்கு எந்தவொரு நாடும் முன்வரவில்லை. சிலர் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக் கைகள் எடுக்க பல நாடுகள் தயங்குகின்றன. சிலர் பாதுகாக்கின்றனர்.

யுத்தக்குற்றவாளியாக உலகில் தண்டிக்கப்படவேண்டியவர் என்றால் அது இஸ்ரேலியப் பிரதமராகத்தான் இருக்க வேண்டும் எனவும் முஸ்லிம்கள் மிகப் புனிதமாகக் கருதும் அல்அக்ஷ்மா மீதும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com