Saturday, July 12, 2014

“அவர்கள் விடுகிறார்கள் இல்லை” என்று சதா ஒப்பாரி வைப்பது, ஆளுமைமிக்க தலைமையின் குணாதிசயம் அல்ல! EPRLF - சுகு

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 25 வது வீரமக்கள் தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.07.2014) சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்வையொட்ட ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் பத்மநாபா அணித் தலைவர் ஸ்ரீதரன் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாடியுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கடந்து 30 ஆண்டுகால போராட்டத்தில் மறைந்தவர்களை நினைவு கூர்வது மனச்சாட்சியும் ,தார்மீக உணர்வுமுள்ள ஒவ்வொரு மனிதனதும் கடமையாகும்.

இன்று போராளிகள் என்ற சொல் எமது சமுதாயத்தில் முகமிழந்து நிற்கிறது. இறந்தவர்கள் போக எஞ்சியவர்கள் அனைத்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும நடைப்பிணங்களாக முகவரியற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

போராடிய பெண்களும் ஆண்களும் சமூக நிலையில் அவலமானதும் பாதுகாப்பற்றதும் இடர்பாடு மிக்கதுமான வாழ்க்கையையே வாழ்கிறார்கள்.

பொதுவாக போராடப் புறப்பட்டவர்கள் எமது சமுதாயத்தில் வறுமைப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளே.

எமது போராட்டகாரர்கள் கௌரவப்படுத்தப்படா விட்டாலும் பரவாயில்லை. கண்ணியமாக வாழமுடியவல்லை. இன்று இலங்கையில் மாகாண சபைமுறையொன்று உருவாகியருக்கிறதென்றால் அல்லது இலங்கையில் சமூகங்களிடையே அதிகாரப்பகிர்வு நிகழ வேண்டும் என்று உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறதென்றால் அதற்கு அனைத்து இயக்கங்கள் போராளிகளதும் பொதுமக்களதும் தியாகமே காரணம்.

ஆனால் 30 ஆண்டு துனபங்களின் பின்னர் தமிழ் மக்களின் தலைவர்களாக உருவாகியிருப்பவர்கள் ஏகப்பெரும்பான்மையினர் துரதிஸ்டவசமாக போராட்ட பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் அல்ல.. ஒருசிலர் விதிவிலக்கு.

எமது போராட்டம் தொடர்பாக திறந்த மனத்துடனான விமர்சனமும்- ஜனநாய பூர்வமான ஐக்கியமின்மையும், கலந்துரையாடல், வெகுஜனங்களுக்கான கருத்து சுதந்திர இடைவெளி இன்மையும், எமது சமூகத்தினுள்ளேயே மறுக்கப்பட்டமையும், வெகுஜனங்களின் கருத்துக்கு இடமில்லாமையும் ,சக சமூகங்கள் சர்வதேசம் அண்டைநாடு தொடர்பாக புரிதல் இல்லாமையும் வெகுஜனநடவடிக்கைககள் ஊக்கப்படுத்தப்படாமையும் சிறந்த தலைவர்கள்போராளிகள் படுகொலை செய்யப்பட்டமையும் எம்மக்களை நரகப்படுகுழியைநோக்கி இழுத்து வந்திருக்கின்றன.

எந்த காழ்ப்புணர்வு குரோதத்திற்கு இடமளியாமல் இதனை மீள் பரிசீலனை செய்வதற்கு இன்றளவில் நாம் தயாராக இல்லை. போராளிகளிடம் சரிபிழைகள் இருந்திருக்கலாம். முரட்டுத்தனங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் யுத்தத்தில் அல்லாடிய மக்களுடன் நின்றிருந்தார்கள். உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருந்தார்கள். இவர்களுடைய நினைவுகள் என்றென்றும் பாதுகாக்கப்படவேண்டும்.

அதிகாரங்கள் இனசமூகங்களிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலுவடையச் செய்தவர்கள் உயிரை அர்ப்பணித்த போராளிகளே. எஞ்சிய அனைத்தியக்கப் போராளிகளில் பெரும்பான்மையினர் இன்று பெரும்பாலும் நடைப்பிணங்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள.

அவர்களுக்கு சமூக கௌரவம் கிடைக்கா விட்டாலும் அவர்கள் கண்ணியமாக செம்மையாக வாழ்வதற்கு வழிவகை செய்யப்படவேண்டும். குறிப்பாக பெண் போராளிகள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் சமூக ஒதுக்கல்கள். முற்போக்கு ஜனநாயக எண்ணம் கொண்ட போராளிகள் எழிலார்ந்த வாழ்க்கை கனவுகளுடன் உயிரைத்தியாகம் செய்து விட்டார்கள்.

ஆனால் இன்றைய இலங்கையின் நிலை கவலை அழிப்பது.
அதிகார மட்டத்தில் படை முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறது.
சிறுபான்மைச் சமூகங்கள் வாழ்வதற்கான இடைவெளி குறைவடைந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக முஸ்லீம்மக்களுக்கெதிரான வெறுப்புணர்வு விதைக்கபட்டு வருகிறது. கடந்து வந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு விசச் சுழல் போல் இலங்கையின் வெவ்வேறு சமூக மொழி பண்பாட்டுச் சமூகங்கள் மேல் இனவாதாக்குதல்கள் அதிகார சக்திகளால் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக கற்பனை எதிரிகள் தொடாந்து உருவாக்கபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சிறுபான்மைச் சமூகங்களின் சமூகபொருளாதார முன்னேற்றங்கள் இலக்குவைக்கப்படுகின்றன. அதற்காக இலங்கையின் பெரும்பான்மைச் சமூகத்தை சேர்ந்த சமானிய மனிதர்களுக்கு சிறப்பான வாழ்க்கை கிட்டியிருக்கிறதென்றில்லை. அவர்களின் சமூக பொருளாதாரப் பிரச்சிசனைகள் தொடர்பான அக்கறைகளிலிருந்து கவனம் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டிருக்கிறது. கடந்து வந்த 50 60 வருடங்களாக இலங்கையில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

பிரமாண்டமான வீதிகள், பாலங்கள், விமான நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், துறைமுகங்கள், ஹோட்டல்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் சாமானிய மக்களின் அன்றாடவாழ்வில் இவை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியருக்கின்றன என்பது முக்கியமான கேள்வியாகும்.

பிராந்தியங்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் காட்டப்படும் விடாப்பிடியா பிடிவாதம், இனவாதம், படைமேலாண்மையுடன் கையாள்வது சிறுபான்மைச் சமூகங்களை குறிப்பாக தமிழர்களை விரக்தியடையச் செய்துள்ளது. குறிப்பாக கிழக்கு வடக்கு மாகாண சபைகள் சிக்கலின்றி இயங்குவதற்கான இடைவெளிகள் ஏற்படுத்தப் படவேண்டும்.

நாம் பாதுகாப்பாக வாழ்கிறோம் என்ற நிலை சிறுபான்மைச் சமூகங்களுக்கு மாத்திரமல்ல அனைத்து சமூகங்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் தலைமைகள் தாம் மக்களுக்களித்த வாக்குறுதிகள் தொடர்பில் உண்மையாகவும்- செயற்திறனுடனும் நடந்து கொள்ள வேண்டும். “அவர்கள் விடுகிறார்கள் இல்லை” என்று சதா ஒப்பாரி வைப்பது ஆளுமைமிக்க தலைமையின் குணாதிசயம் அல்ல. இல்லையேல் வீதியில் இறங்கிச் சொல்ல வேண்டும்.

தண்ணீர் நஞ்சாவது தொட்பாக வீதிக்கு வந்து தெரிவித்த வெலவேரிய கிராமவாசிகள் தாக்கப்பட்டு உயிரழிப்பும் நிகழ்ந்தது பலருக்கும் ஞாபகம் இருக்கும். இத்தகைய மக்கள் பிரவினர் தான் இயற்கை சுற்றாடல் பற்றிய அக்கறைகளை ஏற்படுத்துகிறார்கள். இலங்கையின் இலவசக்கல்விமுறை -ஏழைமாணவர்களுக்கான மானியங்கள் -பல்கலைக்கழகங்களின் சுயாதீனம் தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறார்கள்.

முக்கியமான விடயம் இலங்கையின் அனைத்துதரப்பினரும் ஜனநாயக வழியல் போராட கருத்துகளை வெளியடுவதற்கான இடைவெளி பாதுகாக்கப்பட வேண்டியருக்கிறது. மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் காணப்படும் அதிகார மையவாதப் போக்கிற்கெதிராக முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அறவழிப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இலங்கையில் ஜனநாயக வழியல் போராடுவதற்கான இடைவெளியை உருவாக்குவதே முதல் முக்கியமான விடயமாகும்.

ஏனெனில் சமூக விழிப்புணர்ச்சியின் மூலக் கூறூக இருப்பதும் அதுதான். ஏனெனில் அந்த இடைவெளியில் இருந்துதான் சமூக பொருளாதார விடயங்கள் -மனித உரிமைகள் -இயற்கை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பிற்கான நிலைமைகள் உருவாக்கப்படுக்கின்றன.

உலகில் எந்த ஜனநாயக அரசியல் யாப்பும் மக்களின வெவ்வேறு சமூப் பகுதியினரின் உரிமைகளும் மக்களின் வீதிக்கிறங்கிய போராட்டங்களினூடாகவவே நிலை நிறுத்தப்பட்டன. எனவே இலங்கையில் சமூக பொருளாதார மறுமலர்ச்சி நிகழ வேண்டுமானால் ஆச்சரியங்கள் நிகழவேண்டு மானால் மக்களின் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பேரணிகள் நடத்துவதற்கும் வீதியலிறங்கி செய்றபடுவதற்குமான நிலைமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

உலகம் இன்றுவரை பெற்றுக் கொண்ட தார்மீக விழுமியங்கள், அறங்கள், வலுக்கள் இவ்விதமாகவே நிறுவப்பட்டன. அதற்கு அற வழியல் போராடியாக வேண்டும் .

போரடியவர்களை நினைவு கூரும் இத்தினத்தில் இதனை நாம் கரிசனைக்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கருதிகிறேன்.

தோழமையுடன்...
சுகு- ஸ்ரீதரன்
பத்மநாபா ஈபிஆர்எல்எப்

2 comments :

ROHAN THAMPAPILLAI July 12, 2014 at 12:20 PM  

A very fine statement by comrade Sritharan

Anonymous ,  July 12, 2014 at 4:55 PM  

இவர் இன்னும் அரசியலில் இருக்கின்றாரா ? கூட்டமைப்பின் காலில் விழுந்தும் அவங்கள் எட்டி உதைத்த உதையில் கண காலம் காணமல் போய் இருந்தவர் , இப்ப மறுபடியும் விழ கால் தேடி அலைகின்றாரோ ?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com