விமலார் அரசாங்கத்தை விட்டுச் செல்வாரா? கயான் இப்படிச் சொல்கிறார்!
அமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும், மீண்டும் இரண்டு மூன்று வருடங்களில் மீண்டும் அரசாங்கத்துடன் சேர்ந்துகொள்வார் என கலைஞர் கயான் விக்கிரமதிலக்க சிங்கள வாரப் பத்திரிகையொன்றுக்கு கருத்துரைத்துள்ளார்.
“அமைச்சர்கள் தங்களது அரசியல் இலாபங்களுக்காக அடிக்கடி பல்வேறு எண்ணப்பாடுகளுடன் இருப்பவர்கள்… போவார்கள்… வருவார்கள்… அதனை அவர்கள் முழுமையாக தங்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களுக்காவே செய்கிறார்கள். அவர் ஆளும் கட்சியிலிருந்து விலகிச் சென்றார் என்பதற்காக கட்சி உடைந்து வீழ்வதில்லை. சென்றாலும் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மிகச் சிறப்பாகவே வந்து சேர்ந்துவிடுவார். நான் அதுபற்றிச் சிந்திப்பதே இல்லை. சிந்தித்து எனக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை. அதனால் எது என்னவானாலும் எனக்குப் பிரச்சினையும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment