Friday, June 13, 2014

ஐ. நா. மனித உரிமைகள விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்க நான் தயார் - சரத் பொன்சேகா!

யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப் படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக் கப்பட்டுள்ள விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்க தாம் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

செய்தி இணையதளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் கூறியுள்ள அவர், 'இலங்கை மீதான விசாரணை தொடர்பில் அச்சம்கொள்ளத் தேவையில்லை. இலங்கைக்கு விஜயம் செய்தவுடன் முதலில் அக்குழு என்னிடமே விசாரணையை மேற்கொள்ள வேண்டும்' எனவும் கோரியுள்ளார்.

அன்று யுத்த காலத்தில் எனது தலைமையிலேயே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. இரரணுவத்தினர் எந்தவொரு போர்க்குற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். இது தொடர்பில் எந்தவொரு நீதிமன்றத்துக்கும் சென்று பதிலளிக்க நான் தயார். இராணுவத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அதனால், எந்தவொரு குழு இலங்கைக்கு வந்தாலும் பயப்படத் தேவையில்லை. அந்த குழுவுக்கு பதிலளிக்க நான் தயார். யுத்தம் தொடர்பான எந்தவொரு பொறுப்பையும் ஏற்க நான் தயார்' என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு இலங்கைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தை மேற்கொண்டார்கள் என்றே அர்த்தப்படுத்தப்பட்டுவிடும். அது யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினரின் பெயருக்கு ஏற்படுத்தப்பட்ட களங்கமாகும். அதனால், விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயங்கத் தேவையில்லை' என்றும் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com