யாழில் மனநலம் பாதிக்கப்பட்டவரை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு சிறை !!
யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியவருக்கு ஒரு வருடகால சிறைத் தண்டனை விதித்து சாவகச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாழ். கொடிகாமம் பாலாவிப் பகுதியினைச் சேர்ந்த நபரொ ருவருக்கே சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் இன்று இந்தத் தீர்ப்பினை வழங்கினார். கடந்த 2013ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், அதேயிடத்தினைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை பாலாவி பகுதியிலுள்ள பற்றைக்குள் வைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சந்தேக நபரைக் கைது செய்த கொடிகாமம் பொலிஸார், அவருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்றும் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது சந்தேக நபர், தனது குற்றத்தினை ஒப்புக் கொண்டதையடுத்து நீதவான் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
0 comments :
Post a Comment