பொது அபேட்சகர் வருவார்.. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் மாற்றம் கொண்டு வருவார்...!
அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பொது அபேட்சகர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதன் மூலம் மட்டுமே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ரவி ஜயவர்த்தன குறிப்பிடுகிறார்.
அவ்வமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் செயற்பாட்டுக்கு அமைய, அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி ஏகோபித்த முடிவொன்றுக்கு வந்த பின்னர், பொது அபேட்சகரின் பெயரை வெளியிடுவதன் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
இனிவரும் நாட்களில் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக ரவி ஜயவர்த்தன மேலும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment