இலங்கைக்குள் ஜிஹாத் செயற்படவில்லை! புலனாய்வு துறையினரை மீறி எந்த ஒரு அமைப்பும் செயற்படமுடியாது!
இலங்கைக்குள் ஜிஹாத் அமைப்பு செயற்படுவதாக சிலர் தவறான செய்திகளையும் பரப்பி வருகின்றனர். ஆனால் இலங்கையில் ஜிஹாத் அமைப்பு செயற்படுவதில் எந்த வித உண்மைகளும் கிடையாது பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் ஜிஹாத் அமைப்பு செயற்படுவது தொடர்பில் பாதுகாப்பு படையினருக்கோ புலனாய்வு துறையினருக்கோ ஆதாரங்களுடன் இது வரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
எமது நாட்டின் புலனாய்வு துறையினர் சகல சந்தர்ப்பங்களிலும் விழிப்புடனே செயற்படுகின்றனர். இதுவரைக்கும் அவர்களுக்கு இது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை. புலனாய்வு துறையினரை மீறி எந்த ஒரு அமைப்பும் இவ்வாறு செயற்பட முடியாது எனவும் சிலர் தமது தேவைகளுக்காக இவ்வாறான பல கருத்துக்களை கூறிவருகின்றனர் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
0 comments :
Post a Comment