எக்காரணம் கொண்டும் முஸ்லிம் பள்ளிவாசல் வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட மாட்டாது! (படங்கள் இணைப்பு)
சென்ற வருடம் கொழும்பு கிரேண்ட்பாஸில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைக்கு சிறந்ததொரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க மத விடயங்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான விசேட பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும் மத்திய கொழும்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான பைஸர் முஸ்தபா இன்று சுவர்ணசைத்திய வீதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் அப்பிரதேச விகாரைகளின் தலைமை மதகுருமார்களுடன் கலந்துறவாடியுள்ளனர்.
அங்கு அமைச்சர் குறிப்பிடும்போது, மோலவத்த பள்ளிவாசலில் புனர்நிர்மாணப் பணிகள் வெகுவிரைவில் முடிவுறும் எனவும் அதனை கூடிய சீக்கிரம் நிர்மாணித்து முடிக்க பிரதேசவாசிகளினதும், பௌத்த விகாரைகளினதும் தலைமை மதகுருமார்கள் ஒத்தாசை புரிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அங்கு பொலிஸ் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கருத்துரைக்கும்போது, புனர்நிர்மாணம் செய்யப்படுகின்ற பள்ளிவாசல் எக்காரணம் கொண்டும் அவ்விடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட மாட்டாது எனவும், முஸ்லிம்கள் தங்களது மத அநுட்டானங்களைச் செய்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் புனர்நிர்மாணத்தின் மூலம் கிடைக்கப்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.br/>
அமைச்சர் மேலும் கருத்துரைக்கும்போது, இங்கு பொதுமக்கள் என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை குறைந்து போகும் வண்ணம் ஒருபோதும் தான் நடந்துகொள்ளப் போவதில்லை எனவும், இன மத வேறுபாடின்றி அனைவரும் ஒரு குடைக்குக் கீழ் ஒற்றுமையாக வாழ்வதற்காக தான் பங்களிப்பு நல்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment