மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை!! - முல்லைத்தீவில் சம்பவம்!
குடும்ப தகறாறு காரணமாக படுக்கையிலிருந்த மனைவியை, கத்தியால் வெட்டிக் கொலை செய்த கணவன் தானும் தற்கொலை செய்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, வள்ளிபுனம், கரித்தாஸ் கியுடெக் வீட்டத்திட்டப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அருமைநாயகம் அருள்ராஜ் (வயது 30) என்பவரும், அவரது மனைவியான அருள்ராஜ் செல்வகுமாரி (வயது 28) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக. படுக்கையிலிருந்த மனைவியை, கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்ற கணவன், வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் இருப்பதுடன், இவ்விடயம் தொடர்பாக அவர்களின் 3 வயதுப் பிள்ளை அயலவர்களுக்குத் தெரிவித்ததினையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு சடலங்களையும் நீதவானின் உத்தரவிற்கமைய மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment