அலவத்துகொடையிவ் 80 வயது மூதாட்டியை துஷ்பிரயோகம் செய்து நிர்வாணப்படுத்தி படுகொலை!
80 வயது மூதாட்டியை துஷ்பிரயோகம் செய்து நிர்வாணப்படுத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அலவத்துகொடை, ரம்புக்எல்ல பிரதேச வீடொன்றில் தனிமையில் வாழ்ந்த 80 வயது மூதாட்டியே அவ்வாறு நிர்வாணப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருமணம் முடிக்காத நிலையில் தனிமையில் வாழ்ந்துள்ள இந்த மூதாட்டி நிர்வாணப்படுத்தப்பட்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், அவரின் தலையில் பொல்லு ஒன்றினால் பலமாகத் தாக்கியே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என மரண விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த மூதாட்டியின் சடலம், அவரது வீட்டு அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்த அலவத்துகொடை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக கூறினர்.
0 comments :
Post a Comment