Monday, March 10, 2014

மரண தண்டனைக் கைதி “பொட்ட” நௌபர் ஸ்கைப்பின் மூலம் வாக்காளர்களுடன்…

முன்னாள் மேல்நீதிமன்ற நீதவான் சரத் அம்பேப்பிட்டிய கொலையுடன் தொடர்புடைய, குற்றவாளியாக மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையிலுள்ள, பாதாள உலகத் தலைவரான பொட்ட நௌபர் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் மூலம் (மத்திய) கொழும்பு வாக்காளர்களுடன் உரையாடியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இம்முறை மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரபல அபேட்சகர் ஒருவருக்கு வாக்களிக்குமாறே பொட்ட நௌபர் கொழும்பு முஸ்லிம் வாக்காளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

படுகொலைகள் பலவற்றுடன் தொடர்புடைய, சட்ட ரீதியற்ற வியாபாரங்கள் பலவற்றுடன் தொடர்புடைய, மத்திய கொழும்பை கேந்திரஸ்தானமாகக் கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பொட்ட நௌபர் சிறைச்சாலையில் அனைத்து சுகபோகங்களுடன் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போகம்பர சிறைச்சாலை சென்ற வாரம் மூடப்படுவது தொடர்பில் நடாத்தப்பட்ட பௌத்த மதக்கிரியைகளின் போது, பொட்ட நௌபர் அங்குமிங்கும் உலாவித் திரிவது புகைப்படங்களில் தெளிவாக இருப்பதுடன், சிறைச்சாலைத் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் அது உண்மை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com