Friday, February 7, 2014

உலகின் மிக இளவயது வாள் விழுங்கும் பெண்!

சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் ஆடைகள், அலங்காரப் பொருட்கள், தொலைபேசிகள் போன்றவற்றை தான் கேட்பார்கள் ஆனால் ஜோர்ஜியா நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தையிடம் 'வாள்' கேட்டுவாங்கி சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

15 வயதான ஹேலி ஹோல் என்ற சிறுமி தனது தந்தையின் 17 அங்குலம் நீளமான வாளை விழுங்கி உலகின் 'மிக இளவயது வாள் விழுங்கும் பெண்' என்ற பெருமையை ஏற்படுத்தியுள்ளார்.

இதே வேளை சர்வதேச வாள் விழுங்குபவர்கள் அமைப்பானது ஹேலி ஹோலின் சாதனையை அங்கீகரித்துள்ளது. இவ்வமைப்பினால் இளவயதில் வாள் விழுங்கிய பெண்ணாக இதுவரையில் 21 வயது மங்கையே அங்கீகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த சிறுமி'சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் நான் அதிர்ஷ்டசாலி எனது இந்த சாதனைக்கு எனது பெற்றோர் பெரும் உதவியாக இருந்தார்கள் என்பதுடன் ஆரம்பத்தில் எனது தாய் என்னை நினைத்து பயந்தார் ஆனாலும் நான் கவனமாக இருப்பதை உணர்ந்துகொண்டு என தனது சாதனைக்கு உறுதுணையாக இருந்தார்.

இது மட்டுமல்லாது இவர் கராத்தே தற்காப்பு கலையில் கறுப்பு பட்டியை வென்றுள்ளதுடன் துப்பாக்கி சுடுதல், மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் என பல சாகஸ விளையாட்டுகளில் ஆர்வமிக்கவர்.

ஜோர்ஜியாவில் பெரி கல்லூரியில் கடந்த வாரம் தனது முதலாவது பொது நிகழ்ச்சியினை மேற்கொண்டார் ஹேலி. 

அத்துடன் ஹேலியின் சாதனையை உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்யும் முயற்சியில் ஹேலியின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com