எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக சோபித தேரர்!
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக கோட்டே ஸ்ரீ நாகவிஹாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித தேரரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுமாறு பலரும் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே தம்மை நாடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் இறுதித் தீhமானம் எதனையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகளின் கொள்கைகளின் அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது நிர்ணயிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமது பிரதான நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றிற்கு பதில் சொல்லக் கூடிய வகையிலான பிரதமர் ஆட்சி முறைமையே இலங்கைக்கு பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment