Wednesday, February 5, 2014

2019 முதல் க.பொ.த. சாதாரண தரத்தில் இரண்டாம் மொழிச் சித்தியடைந்தாலே அரச சேவை நியமனம்

2019ம் ஆண்டு முதல் அரச சேவைக்கு நியமனம் பெறும் அனை­வரும் க.பொ.த.(சாதா­ரணம்) தரப் பரீட்­சையில் இரண்டாம் மொழியில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­பது கட்­டா­ய­மா­கு­ம் என பொது­நிர்­வாக உள்நாட்­ட­லு­வல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அர­ச­க­ரும மொழிக் கொள்­கையை முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில் இந்த முறைமை கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் க.பொ.த.சாதா­ர­ண­தரப் பரீட்­சையில் இரண்டாம் மொழி சித்தியடையா­த­வர்கள் அரச சேவைக்குத் தகை­மை­யில்­லா­த­வர்­க­ளாகக் கணிக்­கப்­ப­டுவர் எனவும் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­ணங்க தமிழ்­மொழி மூலம் க.பொ.த. பரீட்­சைக்குத் தோற்­று­ப­வர்கள் இரண்டாம் மொழியான சிங்­கள மொழி­யிலும், சிங்­கள மொழி மூலம் பரீட்­சைக்குத் தோற்­றுவோர் தமிழ் மொழியிலும் சித்தி பெறுவது முக்கியமெனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com