இலங்கையில் நல்லிணக்க செயற்பாடு தொடர்பில் ஐ.நா.நிரந்தர பிரதிநிதிகளுக்கு ஜெனீவாவில் விளக்கம்!
இலங்கையில் நல்லிணக்க செயற்பாடு தொடர்பில் ஐ.நா. நிரந்தர பிரதிநிதிகளுக்கு ஜெனீவாவில் விளக்கமளிக்கப் பட்டுள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதிகளுக்கு ஜெனீவாவில் "பலெஸ் தெஸ நேஷன்ஸ்" (Palais des Nations) இல் செவ்வாயன்று (2014 ஜனவரி 21ந் திகதி) இலங்கையில் நல்லிணக்க செயற்பாட்டின் முன்னேற்றம் சம்பந்தமாக விளக்கமளித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஐ.நா.நிரந்தர பிரதிநிதிகளுக்கு ஜெனீ வாவில் விளக்கமளிக்கையில், முப்பது ஆண்டுகால எல்.ரீ.ரீ.ஈ யின் பயங்கரவாத யுத்தம் 2009 மேயில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களிற்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
அத்துடன் சர்வதேச மனிதநேய சட்ட பிரச்சனைகள், மனித உரிமைகள், காணி களை மீள ஒப்படைத்தல், மீள்குடியேற்றம், நஷ்டஈடு மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமாக டுடுசுஊ யின் சிபாரிசுகளை கடந்த பதினெட்டு மாதங்களாக மேற் கொண்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக விளக்கமளித்ததுடன் வட மாகாணசபை தேர்தல் உட்பட முதலமைச்சருடனான அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றியும் அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற முதல் பொதுமக்கள் அமர்வு பற்றியும் விளக்கமளித்தார்.
இதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினது ஒத்துழைப்பும், காயமடைந்த, இறந்த பொதுமக்களின் கணக்கெடுப்பும் சொத்துக்கள் இழப்பு மற்றும் பாதிப்பு சம்பந்த மாகவும் மதிப்பீடு நடாத்தி அதன் பெறுபேற்று அறிக்கை இன்னும் வரவிருப் பதாகவும் கூறினார். மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் காரியாலயத் துடன் இலங்கை வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு பற்றியும் அவர் விளக்கமளித்தார்
இடம்பெயர்ந்தோர் சம்பந்தமாக விசாரணை நடாத்த விசேட பிரதிநிதி ஒருவர் 2013 டிசம்பரில் இலங்கைக்கு வந்ததாகவும் 2014 மே மாதம் குடியேறியவர்களின் மனித உரிமைகள் சம்பந்தமாக விசாரணை நடாத்த விசேட பிரதிநிதி ஒருவரும் வருவதாக கூறினார்.
கல்வி கற்பதற்கான உரிமை சம்பந்தமாக விசேட பிரதிநிதி ஒருவருக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் அவர் இந்த வருடம் வரமுடியாதென மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். வேறு விசேட பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
வினாக்களுக்கு விடையளிக்கும் போது அதில் பங்கேற்ற அதிகளவிலான நாடுகள் LLRC சிபாரிசுகளை நடைமுறைப் படுத்துவதில் இலங்கையின் செயற்பாடுகள் சம்பந்தமாக பாராட்டியதுடன் சிலர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேகம் குறித்தும் வினவினர். மனித உரிமைகள் பிரச்சனை சம்பந்தமாக சர்வதேச சமூகம் இலங்கையுடன் ஆக்க பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடாத்தவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.
தமது நாடுகளில் தமது கசப்பான அனுபவங்களை சில நாடுகள் விளக்கியதுடன், சப்பாத்தை அணிந்திருப்பவருக்கு தான் அது எங்கு கடிக்கிறதென்பது தெரியும் எனவும் ஒரு நாடு கூறியது. LLRC யினது தேசிய செயற் திட்டத்தை நடைமுறைப் படுத்த சர்வதேச சமூகம் வழங்கிய ஒத்துழைப்புக்கு வீரதுங்க நன்றி தெரிவித்தார்.
சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த வீரதுங்க, சபையில் ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைப்பதாகவும் கூறினார். நல்லிணக்கத்திற்கான தீர்வுகளை ஓர் இரவில் கண்டுவிட முடியாதெனவும் நிரந்தரமான தீர்வுக்கு பென்னினால் போடப்படும் கோடு பாதிப்பையே ஏற்படுத்தும் எனவும் கூறினார்.
மொழிப் பிரச்சனை சம்பந்தமாகவும் சிரேஷ்ட தமிழ் நிர்வாகிகள் இல்லாமையும் 1980ல் இருந்து எல்.ரீ.ரீ.ஈ நியமனங்களை தடுத்துவந்ததும் இதனை மேலும் பாதிப்புறச் செய்ததென கூறினார். காணி சம்பந்தமான உறுதிகளையும் பெறுமதி வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் எல்.ரீ.ரீ.ஈ யினர் அழித்து விட்டதால் காணிகளை மீளப்பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கு வதாகவும் சபையில் மக்களின் பாரதூரமான பிரச்சனைகளை கருத்தில் கொள்ள விருப்பதாகவும் கூறினார்.
இலங்கையில் மக்களின் ஆதரவு பெற்ற பலம்பொருந்திய அரசாங்கம் இருப்பது அதிர்ஷ்டவசமானதாகும் ஏனெனனில் சில பிரச்சனைகளுக்கு மக்களின் ஆதரவுடன் தான் தீர்வு காண முடியும் எனவும் சில சிபாரிசுகளுக்கு இன சமய பிராந்திய அரசியல் இணக்கப்பாடுகளை எட்டி நிரந்தர தீர்வை காண்பது அவசியமாகும் எனவும் கூறினார்.
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்து வருவது பற்றியும் இங்கு எடுத்துரைத்தார். சர்வதேச முக்கியஸ்தர்களும் சில குறுகிய அரசியல் நோக்குடையர்களினால் திசை திருப்பபடுவதை வீரதுங்க வருத்தத்துடன் தெரிவித்ததுடன் அண்மைக்காலமாக நடந்த சில சம்பவங்களையும் நினைவுபடுத்தினார்.
ஐக்கிய நாடுகளுடனும் சர்வதேச பங்குதாரர்களுடனான இலங்கையின் ஒத்துழைப்பு சம்பந்தமாக விடுக்கப்பட்ட பாராட்டுக்களுக்கு பதிலளிக்கு முகமாக ஜெனீவாவில் ஐந்கிய நாடுகளில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கூறுகையில், இலங்கையைப் போல் ஐக்கியநாடுகளின் உயர் ஸ்தானிகர் காரியாலயத்துடன் மனித உரிமை சபையுடன் ஒரு சில நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் கடந்த காலங்களில் தமது ஒத்துழைப்பை வழங்கியிருக்க மாட்டாதெனவும் குறிப்பிட்டார்.
2013- 2017 வரையான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி உதவி வரையறைக்குள் முக்கியமான வேலைப்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறியதுடன் சமமான பொருளாதார வளர்ச்சி, நிலையான வாழ்க்கை, சமமின்மை குறைப்பு, சமமான தரமான சமூக சேவைகள், நல்லாட்சி, மனித உரிமைகள், ஆண் பெண் சமத்துவம், சமூக உள்ளடங்கல் மற்றும் பாதுகாப்பு மற்றும் நிலையான சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் இடர் அபாய குறைப்பு ஆகியனவும் இதில் அடங்கும்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க எடுத்திருக்கும் நடவடிக் கைகள் சம்பந்தமாக தூதவர் ஆரியசிங்க விளக்கமளிக்கையில் இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்ட போதும் மேற்கத்தைய நாடுகளில் எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களும் எல்.ரீ.ரீ.ஈ முன்னைய உறுப்பினர்களும் மறைமுகமாக செயற்பட்டு வருவதை சுட்டிகாட்டினார்.
ஆகவே இது குறித்து இலங்கை எந்நேரமும் விழிப்பாகவே இருக்கிறதெனவும் கூறினார். அவர் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு ஆதரவு வழங்கும் நாடுகளிடம் இலங்கையில் இணக்கப்பாடு ஒன்று எட்டுவதற்கான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார்.
அங்கத்துவ நாடுகளுக்கு விளக்கமளிக்க முன்பு தவீரதுங்க ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையையும் சந்தித்து அவர் இலங்கைக்கு 2013 ஆகஸ்டில் வந்தததின் பின்பு ஏற்பட்ட அபிவிருத்திகள் சம்பந்தமாகவும் அவருக்கு விளக்கமளித்தார். அவர் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் அன்ரொனியோ குற்றெறசையும் சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைவர் பீற்றர் மோரரையும் சந்தித்து இலங்கை அவர்களது பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுவது பற்றியும் விளக்கமளித்தார்.
0 comments :
Post a Comment